
2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய White Elephant நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார். அதன் பின்னர் மீண்டும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க 'இரண்டாம் உலகம்' என பெயர் மாற்றி செல்வராகவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. மீண்டும் செல்வா, ஆண்ட்ரியா பிணக்கினால் அது கைவிடப்பட; புதிய கதைக்களம், புதிய கூட்டணி என செல்வராகவன் தந்துள்ள திரைப்படம்தான் 'மயக்கம் என்ன'. ('இரண்டாம் உலகம்' ஆரியாவை வைத்து செல்வாவால் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது)
'மயக்கம் என்ன' - எதிர்பார்ப்பை செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான & குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.

தனக்கு பிடித்த ஒரு துறையிலே தன் எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் தனது துறையினை எந்தளவிற்கு நேசிக்கின்றான் என்பதை காதல், காமம், துரோகம், நட்பு, தாய்மை, விரக்தி, மகிழ்ச்சி, ஏக்கம், இயலாமை என பல உணர்வுகளின் துணை கொண்டு சிறப்பாக கையாண்டிருக்கும் செல்வராகவனுக்கு மீண்டும் Hats Of. 'மயக்கம் என்ன'வில் நிறைய இடங்களில் செல்வராகவன் பிரமிப்பூட்டுகின்றார்; வசனங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும், அளவாகவும்; அதே நரம் ஆபாசமில்லாமலும் சில இடங்களில் பிரமிக்கதக்க வகையிலும் அமைந்தது திரைப்படத்திற்கு மேலும் பலம்; காருக்குள் தனுஸின் மனைவியும், தனுஸின் நண்பனும் பேசும் காட்சியும் வசனங்களும் பிரமாதம், அதிலும் "உன்மேல தப்பில்லை ஏன்னா நீ ஆம்பிளை" எனும் இந்த வசனம் எத்தனை உண்மை! உங்கள் திறமையை இன்னொருவன் தன் திறமை என்று சொல்லி பெயர் எடுத்த சம்பவம் உங்கள் வாழ்வில் எப்போதாவது ஏற்ப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அந்த வலியை 'மயக்கம் என்ன'விலும் நீங்கள் உணர்வீர்கள்.
தனுஷ் - படத்தில் கார்த்திக் + Genius கேரக்டரில் அதகளப்படுத்தியுள்ளார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தனுஸ் மாறிவருவது நன்றாக தெரிகின்றது. ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் நடிப்பால் மிரட்டுகிறார்; உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்; தனுஸ் தவிர்த்து யாராலும் செய்ய முடியாத கேரக்டர் இது. அதென்னமோ தெரியல செல்வராகவன் படங்கள் என்றால் தனுஸ் வழமையைவிட பலமடங்கு அதிகமான output கொடுக்கிறார். தனுசிற்கு ஒரு பணிவான வேண்டுகோள்; தயவு செய்து வேங்கை, மாப்பிள்ளை போன்ற மொக்கை மசாலாப் படங்கள் வேண்டாமே!!!

றிச்சா- யாமினி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் படத்தில் றிச்சாவிர்க்கு நடிக்க வாய்ப்பில்லை என்றால்த்தான் ஆச்சரியம்; அற்ப்புதமாக நடித்துள்ளார், சமீப காலங்களில் நடிகை ஒருவருக்கு இந்தளவு ஸ்கோப் உள்ள கேரக்டர் அமைத்ததில்லை; கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். காதல், காமம், தாய்மை, பொறுப்பு, தைரியம், புரிதல் என பல பரிமாணங்களிலும் தேவைக்கேற்ப அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா + சோனியா அகர்வால் + பிரியங்கா சோப்ரா போலுள்ளார், தென்னிந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு. இவர்கள் இருவர் தவிர்த்து தனுஸின் நண்பர்கள், National Geographic Photographer ஆக வருபவர், நண்பர்களில் ஒருவரின் தந்தை என மிகக்குறைந்த கேரக்டர்களே 'மயக்கம் என்ன'வில் நடித்திருந்தாலும் தனுஷ், றிச்சா இருவரும்தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.
தனுஷ் தவிர்த்து 'மயக்கம் என்ன'விர்க்கு இரண்டு கதாநாயகர்கள்; ஒருவர் ராம்ஜி - ஒளிப்பதிவாளர்; மற்றையவர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர். இயக்குனர் அமீரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராம்ஜி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனுடன் முதல் முதலில் இணைந்தார், இப்போது மீண்டும் 'மயக்கம் என்ன' வில் இணைந்து விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இல்லாத வெற்றிடம் செல்வராகவன் திரைப்படத்தில் இல்லவே இல்லை!! ஒரு Photography சம்பந்தமான ஒரு திரைப்படத்தை எவ்வளவு அழகாக படாமாக்க வேண்டுமோ அதைவிட பலமடங்கு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். லைட்டிங், ஆங்கிள், கமெரா மூவ் என ராம்ஜி சாம்ராட்சியம்தான் 'மயக்கம் என்ன'.

சுட்டுக்குடுத்தாரோ, சுடாமல் குடுத்தாரோ ! அண்மைக்காலங்களில் பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றியதில்லை. மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் திரைப்படங்களுக்கு பின்னர் மீண்டும் பாடல்கள் அனைத்துமே அற்ப்புதமாக அமைந்துள்ளன. "நான் சொன்னதும் மழை வந்திச்சா", "ஓட ஓட" இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டதும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்; பல இடங்களின் மௌனத்தை ஜி.வியின் பின்னணி இசை சிறப்பாக ஈடுகட்டி இருக்கிறது, அதேநேரம் தேவையான இடங்களில் மௌனத்தையும் ஒலித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சினிமாவின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சக்தி.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, தனுஸின் நண்பனாக வரும் றிச்சாவின் Boy Friend கேரக்டர்; தனுஸ், றிச்சாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குவது திரைக்கதைக்கு தேவை என்னினும் செயற்கையாக உள்ளது. ஒருவரை பார்த்தவுடன் or ஒருவர் கேரக்டரை புரிந்தவுடன் வரும் காதலுக்கு எதற்க்காக அந்த நண்பனை கொண்டு இருவரையும் தனிமைப்படுத்தியும், தொடுகைக்குட்படுத்தியும் செல்வா காட்சி அமைத்தார் என்று புரியவில்லை!! அந்த இடங்கள் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளதை மறுபதற்கில்லை. இதுதவிர ஒருசில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகப்படுத்தப்பட வேண்டிய பாரிய தவறுகளோ லாஜிக் மீறல்களோ அல்ல.

மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்; உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்! தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.......
மயக்கம் என்ன - உணர்ச்சிக் குவியல்...
21 வாசகர் எண்ணங்கள்:
http://www.youtube.com/watch?v=gMwADXEK0pQ
இந்த பாட்டிலேருந்து சுட்டது மயக்கம் என்ன பாடல்
பலர் நன்றாக இல்லை எனும் போது நீங்கள் நன்றாக உள்ளது என்று கூறி உள்ளீர்கள்..இந்த வாரம் செல்கிறேன். பார்த்து விட்டு கூறுகிறேன். முழு விமர்சனமும் படிக்கவில்லை கொஞ்சம் தான் படித்தேன் :-)
//வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)//
ஹி ஹி ஹி சூப்பர்.
என்னது? படம் நல்லாருக்கா? அவ்வ்வ்வ்வ்
என்ன வேண்ணா சொல்லுங்க.....
செல்வா கிட்ட எப்போவுமே ஒரு சைக்கோ முழிச்சிக்கிட்டு இருப்பான்..
ஒரு சாதாரண கதையை கூட ரொம்ப குழப்பி சொல்றதுல செல்வாவை மிஞ்ச ஆள் கிடையாது.....
ஏனோ படம் என்னை கவர வில்லை..
ஹிஹி இன்னமும் படம் பார்க்கவில்லை...ஆனால் நான் வாசித்த படம் நல்லா இருக்கின்ற முதல் விமர்சனம் இது..நல்லா இருந்தா நானும் போய் பார்க்கலாம்னு இருக்கேன்
நீங்கள் சொல்வது போல் சத்தம் இல்லாமல் இருந்திருந்தால் தியேட்டரில் படத்தை மேலும் கூர்ந்து கவனித்திருக்கலாம். ஆனால் க்ளைமாக்ஸ் பெரிதாக இல்லை. புதிதாயும் இல்லை என்பது குறைதான்.
விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
செல்வாவை போல் நீங்களும் மனநலம் குன்றியவர் என்று நினைக்கிறேன். அதனால்தான் திரைப்படம் தங்களுக்கு பிடித்திருக்கிறது.மக்களாகிய எங்களுக்கு பிடிக்கவில்லை.
செல்வராகவனை போல் நீங்களும் மனநலம் பாதிக்கபட்டவர் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஒரு அருவருப்பான திரைப்படத்தை பாராட்டி எழுதி இருக்கிறீர்கள்.
@ வரிசை கி. இராமச்சந்திரன்
செல்வராகவன் வீட்டில அவரோட மெடிக்கல் ரிப்போட்டை காணலயின்னு தேடுறாங்க, அதை எதுக்கு நீங்க எடுத்து வச்சிருக்கிறீங்க??
உங்களுக்கு பிடிக்கவில்லை, ஓகே; அதென்ன மக்களாகிய எங்களுக்கு???????
உங்க Profile ல Occupation: Film Director எண்டு இருந்திச்சு; தப்பா நினைக்காதீங்க; உங்க கமண்டையும் இதையும் சேர்த்து பாக்கிரச்சே சிரிப்பு வருவதை அடக்க முடியவில்லை :p
நன்றி ஜீவதர்ஷன் படம் பார்த்து விட்டு சொல்கிறேன்
தல உங்க விமர்சனம் பாத்தப்புறம் தான் படத்துக்கு போனேன் , உண்மைலேயே நல்லா தான் இருக்கு , ஆனா இப்படிதான் இருக்கும் நு நெனச்சு கிட்டு போகாம போனா ஒரு நல்லா திரைப்படத்த பாத்த திருப்தி கெடைக்கும் .அப்புறம் கண்ட கண்ட காமெடி பீசுக்கெல்லாம் ரிப்ளே பண்ணாதிங்க bro .u knw who am talkin abt rite :p
@ அப்பாவி தமிழன்
Yes; Now I Understand, Thanks Bro:p
கிரி, சி.பி.செந்தில்குமார் , ராஜ் - நானும் இவங்களைப் போலத்தான் நினைக்கிறேன்!!
hats "off"
நானும் பார்த்தேன் ,உங்கள் விமர்சனம்
உண்மையே சொல்லிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் ரொம்பவே ரசித்த படம் இது என்றால் மிகையில்லை .
நன்றி நன்றி .
nice film... i love it...
http://feelthesmile.blogspot.com/2011/11/blog-post.html
உங்கள் பதிவை முதலில் மேலாக படித்தாலும் இப்பதான் வடிவா வாசிச்சன். எனது பதிவிலும் மயக்கம்என்ன - உணர்ச்சிப்பெருக்கு என்று போட்டிருந்தேன். நீங்க முதலே உணர்ச்சிக்குவியல் எண்டு போட்டிருக்கிறத இப்பதான் உணர்ந்து பாக்கிறன்.
எனக்கு படம்பிடிச்சிருந்திச்சு! ஆன இன்னும் படத்தை வேகமாக்கியிருக்கலாமோ எண்ணு தோணுது!
மற்றது ஆயிரத்தில் ஒருவன் பலருக்கு குழப்பமாக இருந்தாலும், செல்வா ஒரு இடத்தில் அதன் கோர்ப்பில் பிழைவிடவில்லை. செல்வாவின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ”ஆயிரத்தில் ஒருவன்”
படம் நன்றாகவே இருக்கிறது. அருமையான விமர்சனம் சிலர் ஒவ்வொரு படத்தையும் விமர்சிப்பதால்தான் தாங்கள் புலமை உள்ளவர்கள் என்று காட்டமுனைகிறார்கள் போலும்.
செல்வா ராகவன் ஒரு மெண்டல், நீ அவன் படத்தை போய், சூப்பர் சொல்லிருக்கே... டே, நீ லூச?. ஜெயம் நன்னிலம் தமிழ் நாடு
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)