Monday, April 4, 2016

பென் ஸ்ரோக்ஸ்ம் யோக்கரும்!



யோக்கர்....



குட் லென்த், சோர்ட், ஃபுல்  போல்கள் போல யோக்கருக்கு பந்தை பிட்ச் செய்யும் இடத்தை இதுதான் என  வரையறைப்படுத்த முடியாது!   போலரால் உண்மையில் யோக்கர் என்று ஒன்றை வீச முடியாது, பட்ஸ்மனை வேண்டுமானால் அந்தப்பந்தை யோக்கராக்கிக் கொள்ளும்படி செய்யமுடியும். பட்ஸ்மனின் ஸ்ரான்ஸ், மூவ்மண்ட் போன்றவற்றை வைத்து இந்தப்பந்தை பட்ஸ்மன் ஜோக்ட் ஆக்குவான் என்று எதிர்பார்த்து வீசுவதுதான் யோக்கரின் சிறப்பு!

 துடுப்பாட்ட  வீரரால் மேற்கொள்ளப்படும்  அசைவுகளாலும், வீசப்படும் பந்து சிறிது விலகினாலும் யோக்கர்கள் பரிதாபமாக்கப்பட்டுவிடும்! டெஸ்ட் மச்  யோக்கர்கள் லிமிட்டர் ஓவேர்சிலும் சிறப்பானவை, எதிர்பார்க்காத நேரத்தில் வீசப்படும் யோக்கர்கள் கொடுக்கும் விக்கட்டுகள் அலாதியானவை. லிமிட்டட் ஓவர்சை பொறுத்தவரை டெத் ஓவர்களிலேயே அதிகமான யோக்கர்கள் வீசப்படும். சில சமயங்களில் யோக்கர்தான் வீசப்படும் என்று எதிர்பார்த்து நின்றாலும் பட்ஸ்மனால் யோக்கர்களை ஓட்டங்களாக மாற்ற முடியாத அளவுக்கு போலேர்சின் துல்லியம் இருக்கும்.

எங்கள் காலங்களில்  வசீம், வக்கார், அக்தர் என பாகிஸ்தான் வேகங்கள் ரிவேஸ் ஸ்விங் யோக்கர்களில்  மிரட்டிய நாட்கள் மறக்க முடியாதவை, அதிலும் ட்டெயில் என்டேர்சுக்கு வசீம்  அடிக்கும் சொலிட் யோக்கர்கள் சான்சே இல்லை!  புதிய பந்தில் யோக்கரில் கலக்கியவர் இங்கிலாந்தின் டரன் கஃப்!, எனக்கு தெரிந்து  கஃப் போன்று புதிய பந்தில் யோக்கரில் மிரட்டியவர்கள் யாருமில்லை, குறிப்பாக லெப்ட் ஹான்ட் பட்ஸ்மனுக்கு கஃப் சிம்மசொப்பனம்.

இவங்களுக்கெல்லாம் அப்புறம்தான் வந்தான் மலிங்க! யோக்கர்களின் அத்தனை பரிமாணங்களையும் அலாதியாக கையாள்வதில் எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு  நிகர் வேறு யாரும் இல்லையென்பேன். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவேஸ்  ஸ்விங் , (F)ப்லைட்டட்  ஸ்லொவ், (F)ப்ளற் ஸ்லொவ் என யோக்கர்களை ஓப் ஸ்ரம், லெக் ஸ்ரம், மிடில் ஸ்ரம், 'அவுட் சைட் தி ஓப் ஸ்ரம்' என  தான்  நினைக்கும் ஏரியாவில் பந்தை வீசி  பட்ஸ்மனை  யோக்கராக்க வைக்க  மலிங்கபோல் வேறெவராலும் முடியாது!

மலிங்க - கோட் ஒஃப் யோக்கர்  !!


இப்பேர்ப்பட்ட  யோக்கர் ஸ்பெஷலிஸ்டான மலிங்கவையே யோக்கரை மறக்கும் அளவுக்கு அடித்து துவைத்த சாமுவேல்ஸின் இனிங்க்சை இலங்கை ரசிகர்கள் எவரும் இலகுவில்  மறந்துவிட முடியாது!  மலிங்க யோக்கர் எறியப்போகிறார் என்பதை  எதிர்பார்த்து, சொட்டை அஜெஸ்ட் பண்ணியும், இம்ப்ரவைஸ் செய்தும் பெரும்பாலான பட்ஸ்மன்ஸ் தோல்வியையே கண்டிருந்த நிலையில்; சாமுவேல்ஸ் மட்டும் மலிங்காவின் யோக்கர்களை ஃபுல்  லெந்தாக்கி வெட்டிய வெட்டுக்கள் அபாரம். சாமுவேல்ஸின் அந்த அஜஸ்மண்டுகள்தான் கிரிக்கட்டின் நுணுக்கங்கள்!

யோக்கர்கள் பட்ஸ்மனால் சரியான முறையில் அஜெஸ்ட் செய்யப்பட்டால் ஃபுல் லெந்தாகவும், லோ ஃபுல்டோசாகவும் ஆக்கமுடியும்; ஆம் யோக்கர்கள் பட்ஸ்மன் நினைத்தால்  இல்லாமல் செய்யப்படக் கூடியவையே! பல சமயங்களில் யோக்கர்கள் மிஸ் யோக்கர்கள் ஆகி ஃபுல்டோஸ் ஆகிவிடும்; சேட்டன் ஷர்மா யோக்கர் வீசப்போய் அது மிஸ்டாகி  அடிக்கப்பட்ட மியாண்டாட்டின் சிக்ஸர் சரித்திரம்.  யோக்கர்கள் இறுதி ஓவர்களுக்கு தேவையானவைதான், ஆனால் அது வீசப்படும் சூழ்நிலை, வீசப்படும் வீரர், எதிர்கொள்ளும் வீரர், அப்போதைய காலநிலை என பல விடயங்கள் சார்ந்துதான் சாதக/பாதக முடிவை கொடுக்கும்.


பென் ஸ்ரோக்ஸ் - : பைனல் ஓவர், இங்கிலாந்து யோக்கருக்கு திட்டமிட்டே தயாரானது, 19 ஓட்டங்களைக் கட்டுப்படுத்த யோக்கர் சிறந்த தெரிவுதான், ஆனால் காலநிலை பந்தை வழுக்கும் நிலையில் வைத்திருந்தது, முதல் பந்து மிஸ்ட்  யோக்கராகி லெக் சைட்டில் பட் ரேஞ்சில் விழுந்தது, அதை அடிக்க பரத்வைட் தான் தேவை இல்லை, ஸ்லொக் பண்ண தெரிந்த யாருக்குமே அது ஆறுதான்!  முதல் பந்து சிக்ஸ் ஆகியவுடன் நிச்சயம் லெந்தை மாற்ற யோசித்திருக்க வேண்டும், மாற்றவில்லை, இந்த தடவை யோக்கர் சரியாக விழுந்தது; ஆனால் அதை ஃபுல் லெந்தாக்கி பரத்வைட் வெளியே அனுப்பினார், இப்போது கூட ஸ்ரோக்கும் இங்கிலாந்தும் திட்டத்தை மாற்றவில்லை, மீண்டும் ஒரு யோக்கர், மீண்டும் பரத்வைட் அதை ஃபுல் லெந்தாக்கி  வெளியே அனுப்பினார்!

முதல் சிக்ஸ் உடன் நிச்சயம் லென்த் மாற்றம் அல்லது வேரியேஷன் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம் ஓஃப் ஸ்டம் யோக்கராவது ட்ரை பண்ணி இருக்கலாம், எல்லாம் முடிந்துவிட்டது!  பரத்வைட் ஹீரோவாகிவிட்டார், இனிமேல் அவர் T/20 தனியார் சந்தைகளில் நல்ல விலை போவார். ஸ்ரோக்ஸ் கூட மனக் காயத்தில் இருந்து  இலகுவில்  மீண்டு வருவார்! அதேநேரம்   மேற்கிந்திய தீவுகளின் இரு T/20 உலக கிண்ணமும் யோக்கர்களை சிதறடித்து பெறப்பட்டு வரலாறாகிவிட்டது :-)