
கஸ்தூரிராஜா தனுஷ் கூட்டுத் தயாரிப்பில்; தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுபிரகாஷ், பானுபிரியா, ரோஹினி, சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில்; அனிருத்தின் இசையில் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவில்; ஐஸ்வர்யா.R.தனுஷ் இயக்கிய திரைப்படம்தான் '3'. கொலைவெறி பாடல் மூலம் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்த '3' திரைப்படம் அதன் எதிர்பார்ப்பை வர்த்தக ரீதியாக பூர்த்தி செய்யுமோ இல்லையோ ஒரு அழகிய திரைப்படமாக பூர்த்தி செய்துள்ளது.
திரைப்படம் ஆரம்பிக்கும்போதே அமங்கலமாக ஆரம்பிக்கின்றது; சுருதி, சுந்தர் Point Of View வில் கதை பிளாஷ்பாக் மூலம் சொல்லப்படுகின்றது, குழப்பமான கதைக்கு குழப்பமில்லாத தெளிவான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர்; இரண்டாம் பாதியை மிகவும் மெதுவாகவே நகர்த்தி இருக்கின்றார். முதல் பாதி இளமை, காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என்று விறுவிறுப்பாக நகர்கின்றது; இரண்டாம் பாதியில் காட்சிகள் அனைத்தும் இறுக்கமாகவும் மெதுவாகவும் நகர்கின்றது. படம் ஆரம்பிக்கும்போதே இதுதான் கிளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தாலும் திடீரென படம் நிறைவடைகின்றது. படம் பார்த்து முடித்ததும் மனதில் ஏற்ப்பட்ட ஒரு கனம் இந்தக்கணம்வரை விலகவில்லை....
தனுஷ் - இந்த மாதிரி படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு தனுஷை ஹீரோவாக தெரிவு செய்யலாம், வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர். கெட்டப் போட்டால்த்தான் நடிப்பில் சிறப்பான வெளிப்பாட்டை காட்ட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தனுஷ் தவறென நிரூபித்திருக்கின்றார். இந்த மாதிரியான திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக நன்றாக போகவில்லை என்று தனுஸ் கவலைப்படத் தேவையில்லை; பதினைந்து, இருபது வருடம் கழித்து தனது கேரியரை திரும்பி பார்க்கும்போது இவைதான் தனுசின் கேரியரை பூரணப்படுத்தும்!!! பள்ளி மாணவனாகவும், இளைஞனாகவும், அசாதாரண நிலையிலும் தனுஷ் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்களில் காட்டும் வேறுபாட்டுக்கு ஒரு சபாஸ் போடலாம். அசாதாரண நிலைகளில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன தனுஷை நினவு படுத்துவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்; ஆனாலும் அந்த கிளைமாக்ஸில் - Hats Off To U Danush

ஸ்ருதி - சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் "பெரிசா ஒண்ணுமே இல்லையேடா" என்று ஒரு வசனம் சொல்லுவார்; அது உண்மைதான்; ஆனால் அவரது பெர்போமான்ஸ் எதிர்பார்க்காத ஒன்று. 7 ஆம் அறிவில் அலுப்படித்த ஸ்ருதியா இதென்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். ஒரு திரைப்படத்திற்குள் இத்தனை முதிர்ச்சியான நடிப்பு எதிர்பார்க்காத ஒன்று!! புலிக்கு பிறந்தது புலிக்குட்டிதான்!! காதல், பாசம், பிரிவு என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கின்றார். பேரழிகியெல்லாம் இல்லை என்றாலும் அழகாகத்தான் இருக்கின்றார்!!!
பிரபு, பனுபிரகாஷ், பானுப்பிரியா, ரோஹினி போன்றவர்கள் தமக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்திருக்கின்றார்கள். சிவகார்த்திகேயன் முதல் பாதியை கலகலப்பாக்கினாலும் சிவகார்த்திகேயனிடமிருந்து ரசிகர்கள் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதை டைட்டிலில் அவர் பெயர் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் உணர்த்தியது!!! சுந்தர் 'மயக்கம் என்ன'வில் டம்மி அக்கப்பட்டவர், இங்கு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தனுஷ், சுருதிக்கு அடுத்து அதிக காட்சிகள் இவருக்குத்தான்; ஆகா ஓகோன்னு இல்லாவிட்டாலும் தன்னால் குடுக்ககூடிய அதிகபட்ச்சத்தை நிறைவாக கொடுத்திருக்கின்றார்.(சுந்தருக்கு முன்னாடி தனுஷ் ஹீரோயினை கட்டிப்பிடிக்கிற சீன் தொடர்ந்துகிட்டே இருக்கு :p)
அனிருத்தின் இசையில் மிகப்பெரும் ஹிட்டான கொலைவெறி பாடலை தவிர ஏனைய பாடல்களுக்கு கதையை ஒட்டியே காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது; கொலைவெறி பாடல் எதிர்பார்க்கப்பட்டது போலவே திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் அதிகமான இடங்களில் நிசப்தத்தை பயன்படுத்தி இருக்கும் அனிருத் சில இடங்களில் சிறப்பான பின்னணியை வழங்கியிருக்கின்றார்; சில இடங்கள் சப்பென்றும் இருக்கின்றது. பொல்லாதவன், ஆடுகளம் புகழ் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்; கதையின் தேவைக்கு, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இவர் கொடுத்த லைட்டிங் பிரமாதம். கோலா பாஸ்கரின் எடிடிங் Point Of View வில் சொல்லப்படும் கதை என்பதால் ஒரு சில இடங்களில் லாஜிக்கை உறுத்தினாலும், குழப்பமில்லாத, தெளிவான திரைக்கதைக்கு உதவியிருக்கின்றது.

கொலைவெறி பாடல் என்னதான் பட்டையை கிளப்பி எதிர்பார்ப்பை உயர்த்தினாலும், ஐஸ்வர்யாவால் ஒரு படத்தை சிறப்பாக கொடுக்க முடியுமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்தது. முதலில் வந்த ட்ரெயிலர்களும் அதை நிரூபிப்பதுபோலத்தான் இருந்தது. படம் சிறுபிள்ளை வேளாண்மை போலத்தான் இருக்கும் என்கின்ற நினைப்பை தகர்த்திருக்கின்றார் செல்வராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் ஐஸ்வர்யா; படம் முழுவதும் ஆங்காங்கே செல்வராகவன் டச்!! ஆனாலும் பல இடங்களில் ஐஸ்வர்யா 'அட' போட வைத்திருக்கின்றார். பல காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. ஒரு இயக்குனராக ஐஸ்வர்யா ஜெயித்திருக்கின்றார்!!! கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாதியில் அதிகமான நேரம் நாயகனும், நாயகியும் அழுவது போன்ற காட்சிகள் சலிப்பையும், திரைக்கதையில் தொய்வையும் ஏற்ப்படுத்தியத்தையும் மறுப்பதற்கில்லை!!!
'3' பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை; இவர்கள் திரையரங்கு சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனையவர்கள் '3' திரைப்படத்தை நிச்சயமாக ரசிக்கலாம்!!
'3' - 3 Out Of 5
14 வாசகர் எண்ணங்கள்:
இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு ஏன் கருத்தையும் பதிவு செய்ய விரும்புகின்றேன். நல்லதோர் பதிவு.
சுருதி பாப்பாவுக்காக கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு காவியம். :D
ஃஃஃஃஇந்த மாதிரி படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு தனுஷை ஹீரோவாக தெரிவு செய்யலாம்,ஃஃஃ
இந்த ஒரு வரி தான் இன்னும் எதர்பார்ப்பைக் கூட்டியுள்ளது...
சுள்ளான் தனுசை தவிர மற்ற எல்லாத் தனுசும் என்னை அதிகம் ரசிக்க வைத்தவர்களே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...
முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்
வெல்கம் பேக் தலைவரே. உங்கள் பதிவை நான் படம் பார்த்து விட்டு வந்து படிக்கிறேன்.
இன்னும் படம் பார்க்கலைங்க.. பார்த்துட்டு சொல்றேன்.. மற்றபடி விமர்சனம் சூப்பர்
நட்புடன்
கவிதை காதலன்
// படம் பார்த்து முடித்ததும் மனதில் ஏற்ப்பட்ட ஒரு கனம் இந்தக்கணம்வரை விலகவில்லை.... //
செம... எனக்கும் அதே ஃபீலிங் தான்...
தல நெட்ல நான் படிச்ச முதல் பாசிட்டிவ் விமர்சனம் இது, படம் பார்த்துட்டு சொல்லறேன், அப்புறம் உங்க வடை, வாழைப்பழம் கமெண்ட நானும் யூஸ் பண்ணிக்கட்ட்டா ???
இந்தப்படத்திலேயும் எங்கள் 3பேருக்கும் ஒரே ரசனைதான். ஆனா இந்தப்படத்தையும் கனக்கபேர் லுசுப்படம் மொக்கை படம் எண்டு சொல்வதால் இந்தக்கால ரசிகர்களுக்கு என்ன படம் குடுத்தாலும் பிடிக்க வைக்கிறது மகா கஸ்டம் எண்டுதான் விளங்குது. சும்மா காதல் Entertainment படம் எடுத்ததாதான் தப்பிக்கலாம் போல....
@Philosophy Prabhakaran
என்ன சம்பந்தமில்லாம அடிக்கிறீங்க சார். உங்க பதிவில விமர்சனத்தில இந்த படத்தை பற்றி சரியில்லாம எழுதிட்டு இங்க ”செம... எனக்கும் அதே ஃபீலிங் தான்...” எண்டு சொல்லுறீங்க. எனக்கு தலையே சுத்துது
@ கார்த்தி
அப்படியில்லை தல... தர்ஷனுடைய அந்த வரிகள் ரெண்டு விதமான உணர்வுகளுக்கும் பொருந்தும்... உண்மையில் படம் முடிந்தவுடன் என் மனதில் ஏற்பட்ட கனம் இன்னும் அகலவில்லை... ஒரே ஃபீலிங் ஆனா வேற மீனிங்...
@ தர்ஷன்
உங்க ஃபேஸ்புக் கமென்ட் விட்ஜெட் தவறாக install செய்யப்பட்டுள்ளது... சரி செய்யவும்...
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)// suppar annachi
பாஸ்... என்னுடைய மற்ற பின்னூட்டங்கள் எங்கே...??? ஏன் இந்த பொழப்பு...
@ Philosophy Prabhakaran
வார்த்தையை கொஞ்சம் நிதானமாக உபயோகியுங்கள்; எனக்கு Awaiting moderation இல் உங்கள் கமெண்ட் எதுவும் காணப்படவில்லை; தங்களது இறுதி கமன்ட் பார்த்த பின்னர் சந்தேகத்தில் Spam box ஐ பார்த்தபோதுதான் அதில் தாங்கள் இட்ட மேலுள்ள பின்னூட்டமும், இரவு வானம் அவரளின் பின்னூட்டமும் இருந்தது, அதை not spam செய்துள்ளேன், இவை எனக்கே தெரியாமல் நடந்த தொழில்நுட்ப தவறுகள். உங்களது பின்னூட்டம் காணவில்லை என்றால் அதை சாதரணமாகவே கேட்க்கலாம், எதுக்கிந்த "ஏன் இந்த பொழப்பு... "போன்ற வார்த்தைகள்??? என்னை படு கேவலமாக திட்டிய கமண்டுகளையே நான் இங்கு பலமுறை பிரசுரித்திருக்கிறேன், இனிமேலாவது வார்த்தையை விடும்போது அவதானமாக இருங்கள்.....
@ இரவு வானம்
தாராளமா use பண்ணிக்கோங்க; எனக்கு அதுதான் மிக்க மகிழ்ச்சி....
நிலையிலும் தனுஷ் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்களில் காட்டும் வேறுபாட்டுக்கு ஒரு சபாஸ் போடலாம். அசாதாரண நிலைகளில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன தனுஷை நினவு படுத்துவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்///
.
..
ஆமாமா குறிப்பா தனுசை க்ளோசப்பில் காட்டும்போது கிழவன் மாதிர் மூஞ்சி ஒட்டி போய் இருப்பது ஒலக சினிமாவுக்கே புதுசு!தவிர அந்த முக சாரி எலும்பு வேறுபாடுகள் டி நிறோவே செய்ய முடியாதது!புதுபேட்டை ஓபனிங் சீனில் சுவத்தை பாத்து டேய் ய்ய்யி நான்தான் நான்தான் நான்தான் நான்தான் என கத்துற சீன் வந்த போது ஐயோ நா இல்லீங்கோ ன்னு சொல்லி படத்தை குப்பையில் போட்டுட்டேன்!
ஆமா தனுசு வூட்டுல சோறே போட மாற்றாங்கலாமே?
****************************************
தவிர புலிய பாத்து பூனை சூடு போட்டுகிச்சாம் கதையா வாரணம் ஆயிரம் படத்டிஹ்ல் பள்ளி மாணவனாக நடித்த(உண்மையில் பள்ளி மாணவன் போலவே இருந்தது)சூர்யாவை பாத்து தனுசும் 20 kilo உடம்பை 10kilo வாக குறைத்தது சிறிது பிரசனாளிட்டி குறையாக தெரிந்தது!மொத்தத்தில் செம ஸ்மார்ட்!அந்த முக எலும்புகள் கூட நடிக்குது!அப்பா என்னா ஆக்டிங்?ஆஸ்கர் கண்டிப்பா கிடைக்கும் !மாறன பிரதர்ஸ் தயாரிச்சிருந்தா ஆடுகளம் போல தேசிய விருதை "வாங்கியது" மட்டுமல்லாமல் தனுசுக்கு பாரத ரத்னா கூட வாங்கி தந்திருபபரு மாறன பிரதர்ஸ்!சே ஜாஸ்த மிஸ்!
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)