Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - எனது பார்வையில்





சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, ஸ்ரீ ராஜகாளி அம்மன் மீடியாஸ் மோகன் நடராஜன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணியாற்றியுள்ளனர். விக்ரம் தவிர பேபி சாரா, அனுஷ்கா, அம்லா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

'படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கும் விக்ரம்' என்று சொல்வது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை ஒத்தது என்பதை விக்ரம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி விக்ரமின் நடிப்பை சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை; தெய்வதிருமகளில் விக்ரமின் நடிப்பு விருதுகளுக்கு அப்பாற்ப்பட்டது. என்னைக் கேட்டால் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த பெர்போமன்ஸ் என்று தெய்வத்திருமகன் 'கிருஷ்ணா'வைத்தான் சொல்வேன்.

ஆம் தெய்வத்திருமகளில் கிருஷ்ணா கேரக்டரில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார், வார்த்தைகளால் சொல்லி விக்ரமின் நடிப்பினை விபரிப்பது சாத்தியமில்லை. என்னால் 'கிருஷ்ணா' பாத்திரத்திற்கு விக்ரம் தவிர்த்து வேறு எந்த நடிகரையும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. விக்ரமால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்த இயக்குனர் விஜய் உண்மையிலே புத்திசாலிதான். படம் முழுவதும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் முத்திரையை பதித்துள்ள விக்ரம். நீதி மன்றில் கால் தடக்கி கீழே விழுந்த நிலையில் முகத்தில் கொடுக்கும் உணர்ச்சி சொல்லி புரியவைக்க முடியாது; அதுபோன்றே மன்றத்தின் உள்ளே இறுதிக் காட்சியிலும், திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியிலும் விக்ரமின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.



'நிலா'வாக பேபி சாரா; விக்ரமிற்கு அடுத்து தெய்வத்திருமகளின் முக்கிய பாத்திரம் பேபி சாராதான். எப்படித்தான் இந்த சின்ன குழந்தைகள் இவ்வளவு திறமைகளை கொட்டி நடிக்கிறார்களோ என்று மீண்டும் ஒருதடவை எண்ண வைத்துள்ளார் பேபி சாரா. 'நிலா' வரும் ஒவ்வொரு காட்சிகளும் அழகியல்; விக்ரமுடன் போட்டிபோட்டு நடித்த அந்த சிறுமிக்கு எந்தப்பாராட்டும் தகும். பாசம், பரிவு, செல்லக் கோபம், தவிப்பு, ஏக்கம், அழுகை, சிரிப்பு என எல்லா இடங்களிலும் மிகச்சிறப்பாக ஜொலிக்கின்றார் பேபி சாரா.

படத்தின் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அம்லாபால் நடித்திருந்தாலும் அதிகமான காட்சிகளில் நடித்திருப்பதென்னவோ அனுஷ்காதான். ஆகா ஓகோன்னு இல்லையின்னாலும் தனக்கு கொடுத்ததை அனுஷ்கா சிறப்பாக செய்த்துள்ளார். வக்கீல் ட்ரெஸ்ஸும் அம்மணிக்கு நல்லாத்தான் இருக்கு :-) அம்லாபாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம் இல்லை, அழகாக இருக்கிறார், அவளவுதான். படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்லும் பொறுப்பை சரியாக செய்த்திருக்கிறார் சந்தானம்; மனிதர் வரும் இடங்கள் ஒவ்வொன்றும் கலகலப்பாக இருக்கின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் நகைச்சுவை கல்லாச்சாவி சந்தானத்தின் கைகளில்த்தான்.



நாசர் அப்பாட்டக்கர் வக்கீலாக வந்தாலும் ஏற்க்கனவே பல திரைப்படங்களில் பார்த்துப் பழகிய வக்கீல் கேரக்டர்தான். நாசர் தவிர வை.ஜி.மகேந்திரம், எம்.எஸ்.பாஸ்கர், 'கனாக்காணும் காலங்கள்' பாண்டி போன்றோரும் படத்தில் அப்பப்போ வந்து போனாலும் மனதில் ஒட்டவில்லை. அனுஷ்காவின் அசிஷ்டண்டாக வரும் பெண்ணும் அவரை ஜொள்ளுவிடும் நாசரின் அசிஷ்டண்டும் திரைக்கதையின் தேவைக்காக இயக்குனர் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது பாத்திரங்கள் திரைக்கதைக்கு பெரிதாக ஒட்டவில்லை. அதேபோல அம்லா பாலின் தந்தை, சொக்கலேட் கம்பனி ஓனர், எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி பாத்திரங்கள் டெம்ளேட் பாத்திரங்கள்.

நீரவ்ஷாவின் கமெரா இதுவரை ஒருபோதும் ஏமாற்றியதில்லை, அது தெய்வத்திருமகளிலும் தொடர்ந்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு. அதேபோல ஆண்டனியும் காட்சிகளை அழகாக கோர்த்திருக்கிறார், புதுமைகள் எதுவும் இல்லையெனினும் தேவைக்கு போதுமான படத்தொகுப்பு. பாடல்கள் அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கும் ஜீ.வி.பிரகாஷ் பின்னணி இசையிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு எது வேண்டுமோ அதை அளவாக கொடுத்திருக்கிறார் ஜீ.வி.

அடுத்து திரைப்படத்தின் முக்கிய கர்த்தா இயக்குனர் விஜய்; நிச்சயம் இது 'மதராசப்பட்டினம்' போன்று விஜயின் முத்திரை குத்திய திரைப்படம் அன்று. விக்ரமின் கேரக்டரையும், கிருஷ்ணாவுக்கும் நிலாவுக்குமான உறவினையும் அடிப்படியாக கொண்டே திரைக்கதையை பின்னியிருப்பதால் இயக்குனர் சில இடங்களில் கம்பிரமயிஸ் ஆகவேண்டியிருப்பது தெரிகிறது. சில பாத்திரங்களும், காட்சிகளும் முன்னமே பார்த்தவை போன்று இருந்தாலும் கதையை பின்னுவதற்கு இயக்குனருக்கு வேறு வழி இல்லை என்பதால் அதை குறையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.



அதிகமான இடங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும் எவையும் அலுப்படிக்கவில்லை, இறுதிக்காட்சி இயக்குனரின் தனக்கே உரிய முத்திரை. மனதை கனமாக்கி திரையரங்கை விட்டு ரசிகர்களை வெளியேற்றும் உக்தி தெரிந்த இயக்குனர்களில் விஜையும் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரைக்கதையின் தொய்வை காமடியால் நிவர்த்திசெய்ய எத்தனித்த விஜய் அதில் வெற்றிகண்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆங்காங்கே சில காம்பிரமைஸ் செய்திருந்தாலும் (விழிகளில் ஒரு வானவில் பாடல் எதுக்கு விஜய் சார் ? )தெய்வத்திருமகளில் 'இயக்குனர்' விஜய் மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நிச்சயமாக தெய்வத்திருமகள் ஒரு பக்கா கமர்சியல் படமல்ல, அதேநேரம் ஒரு ஆர்ட் திரைப்படமும் அல்ல, முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்க்ககூடிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று சொல்லலாம். விக்ரமிற்காகவும், அந்த குழந்தைக்காகவும் (பேபி சாரா) நிச்சயம் அனைவரும் திரையில் பார்க்க வேண்டிய திரைப்படம் தெய்வத்திருமகள்.

தெய்வத்திருமகள் - ஜனரஞ்சகம்

14 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

இன்று மாலை படம் பார்க்க போகிறேன். ஆகவே உங்கள் பதிவை படிக்க போவதில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய விமர்சனம்..

Riyas said...

விமர்சனம் நல்லாயிருக்குது பார்த்துடவேண்டியதுதான்.. விஜய்,விக்ரம் திறமையானவர்கள்தான்

குறுக்காலபோவான் said...

படம் முடிந்து வெளியில் வரும்போது எனக்கு தோன்றிய ஒரே வார்த்தை....?
ஜனரஞ்சகம்

aarshad said...

நல்ல விமர்சனம்!!!
படத்த பாக்கணும் போல இருக்கு

Citizen said...

Arumai
Arumai

...αηαη∂.... said...

i am sam படத்தோட காபின்னு சொல்றாங்களே அத பத்தி உங்க கருத்து...

Unknown said...

ம்ம் நல்ல விமர்சனம்..எல்லாரும் நல்ல மாதிரியே போடுறாங்க..அப்போ நல்லா தான் இருக்குமோ??ஹிஹி பாத்திருவ்வோம்!

வியாசன் said...

today i saw this movies.superb movie. i never seen before this kind of movies in tamil cinema

நிரூபன் said...

தெய்வத் திருமகள் பற்றிய காத்திரமான அலசலினைப் பகிர்ந்திருக்கிறீங்க. விமர்சனம் கலக்கல் பாஸ்,. படம் பார்க்க வேண்டும் எனும் ஆவலை, விக்ரமின் நடிப்பினை ரசிக்க வேண்டும் எனும் ஆவலை உங்களின் விமர்சனம் ஏற்படுத்துகிறது.

கார்த்தி said...

நானும் பார்த்தேன் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது!
// அம்லாபாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம் இல்லை, அழகாக இருக்கிறார், அவளவுதான்
அமலாபால் வடிவா சார்??
நீங்கள் சொன்ன கலவற்றுடன் ஒத்து போகிறேன் இப்பதான் நானும் திரைப்பார்வை போட்டிட்டு வந்திருக்கன்!
ஆனால் இந்த படம் I am Sam என்ற படத்தின் தழுவலாமே??

P.K.வேணுகோபாலன் said...

விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ்கார் கூட தகுதியானது அல்ல. படம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று
அவார்டுகளை அள்ளபோவது நிச்சயம்.

தவிர......படத்தை பார்த்துவிட்டு ஒருவர் கண்ணில் நீர் வரவில்லையென்றால் அவன் கண்ணீர் சுரப்பியில் கோளாறு என்று பொருள்....

மானுட பிறவியில் நல்ல படத்தை விரும்வும் ஒவ்வொரு ரசிகனும் பார்த்தே தீர வேண்டிய படம்...

HATS OFF TO...... விஜய்,விக்ரம் & சாரா........

Arun Kumar Veerappan said...

Such movies are very important in INDIA, since there are so many Differently abled kids. The parents should be strong enough to grow the kids to greater heights.

கிரி said...

படம் பார்த்த பிறகே உங்கள் பதிவை படிக்க வேண்டும் என்று படிக்கவில்லை :-) தற்போது தான் படித்தேன்.

இன்னொரு முறை செல்லலாம் என்று இருக்கிறேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)