Saturday, November 19, 2011

சிவகார்த்திகேயனும் மெரினாவும்.....

சிவகாத்திகேயன்; இந்த பெயரை தெரியாத சின்னத்திரை பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைய விஜய் TV யின் One Man Army இவர்தான்; ஒரு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய சிவகாத்திகேயனின் stage presence போதும் என்பதை அறிந்துள்ளதாலோ என்னமோ விஜய் TV யின் நிர்வாக இயக்குனர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகார்த்திகேயனை களமிறக்கு கின்றார்கள். சாதாரண மிமிக்கிரி போட்டியாளராக 2008 இல் விஜய் Tv யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிவகார்த்திகேயன் அந்தப்போட்டியின் இறுதியில் முதல்ப்பரிசை வென்று விஜய் Tv பார்வையாளர்களுக்கு நக்கு பரிச்சியமானார்.

அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியில் விஜய் Tv யின் 'லொள்ளுசபா' புகழ் ஜீவாவிற்கும் இயக்குனர்/நடிகர் S.J சூரியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டினால் போட்டியின் இடையிலேயே விலகிய ஜீவாவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அதில் விஜய் TV யின் மற்றொமொரு தொகுப்பாளரான ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்து 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் பின்னர் சிறப்பாக ஆடக் கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் Tv யின் 'ஜோடி நம்பர் வண்'னிற்கு பதிலாக இரண்டு சீசன் நடாத்தப்பட்ட Boys VS Girls நிகழ்ச்சிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் நன்றாக ஆடினாரோ இல்லையோ பாலாஜியுடன் சேர்ந்து இவர் பண்ணிய ரணகளத்தை அந்த சீசனை பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதன் பின்னர் விஜய் Tv சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி இன்றுவரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களுமே சுவாரசியமானவை; அதிலும் சிவகார்த்திகேயனால் மூன்றாவது சுற்றில் கேட்க்கப்படும் 'மாற்றி யோசி' மிகவும் சுவாரசியமாக இருக்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் Tv இனுள் தனக்கென ஒரு இடத்தை ஏற்ப்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் 'விஜய் அவாட்'சினை கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் tv யின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறினார். அதன் பின்னர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தொகுப்பாளராக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிநார்; ஒரு நடன நிகழ்ச்சியை நகைச்சுவை நிகழ்ச்சியோ என்று சொல்லுமளவிற்கு உடல் மொழியாலும், டைமிங் காமடியாலும் கிச்சு கிச்சு மூட்டினார்.

இறுதியாக நடந்த 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை விட அதிகளவில் ரீச் ஆனதென்னமோ அதன் 'ப்ளு பேஸ்' தொகுப்புத்தான்; நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை இடம்பெற்ற இதுவரை ஒளிபரப்பப்படாத சுவாரசியமான நிகழ்வுகளில் தொகுப்பே இது. ஒரு தொலைக்காட்சியில் சாதாரண போட்டியாளராக நுழைந்து 4 ஆண்டுகளில் அந்த தொலைக்காட்சியின் முதல்த்தர தொகுப்பாளராக மாறியிருக்கின்றார் என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது! நகைச்சுவை உணர்வு (sense of humor), உடல் மொழி (Body Language), Timing sense, Voice Modulation போன்றவைதான் சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியின் இரகயியம். சின்னத்திரையில் தொகுப்பாளராக எத்தனையோ பேர் வந்திருந்தாலும் ஒரு சிலரர்தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 'பெப்சி' உமா, 'காமடி டைம்' அர்ச்சனா & சிட்டி பாபு, ஆனந்த கண்ணன், விஜயசாரதி, விஜய் ஆதிராஜ், 'நீயா நானா' கோபிநாத்,திவ்யதர்சினி, தேவதர்சினி என ஒரு சிலரே மக்களை அதிகம் ஈர்த்தவர்கள்; அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும்........ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்திரை மட்டுமல்ல; இப்போது வெள்ளித்திரையும் செங்கம்பளம் விரித்துள்ளது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கம் 'மெரீனா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பசங்க, வம்சம் திரைப்படங்களின் வரவேற்ப்பிற்க்கு பின்னர் பாண்டியராஜ்சும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் உள்ளதால் மெரினாவிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'களவாணி' படத்தில் நடித்த ஓவியா நடிக்கிறார்; 1988 இல் மிரா நயிர் (Mira Nair) இயக்கிய 'சலாம் மும்பை' ஹிந்தி திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மெரீனா என்று சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படமும் பசங்க திரைப்படத்தை போன்றே குழந்தைகள் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான், மேரினாவில் சிறுவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சரியான முறையில் விளம்பரம் செய்யப்படும் பட்சத்தில் மெரீனா மிகப்பெரும் ஓப்பினிங்கை பெறும் சந்தர்ப்பம் உண்டு; மயக்கம் என்னவிர்க்கு அடுத்து நான் அதிகம் எதிர்பார்ப்பது மெரினாவைத்தான்...

மெரீனா தவிர்த்து R. ஐஸ்வர்யா தனுஸ் இயக்கத்தில் தனுஸ், சுருதிஹாசன் நடிக்கும் '3' திரைப்படத்தின் போஸ்டரிலும் தனுஷுடன் சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். தனுஷுடன் குணச்சித்திர நடிகராக (Character artist) இல்லாமல் நகைச்சுவை நடிகராக (Comedy artist ) நடித்தால் சிறப்பாக இருக்கும்; இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து எழில் இயக்கம் திரைப்படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஹீரோவாக வெற்றிபெற்றால் மகிழ்ச்சி, ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் இருக்கவே இருக்கு நகைச்சுவை; அது சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும். சின்னத்திரையில் சாதிச்ச சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......

10 வாசகர் எண்ணங்கள்:

Jayadev Das said...

வாவ்வ்.... சிவா கார்த்திகேயன் இந்த அளவுக்கு முன்னேறிவிட்டாரா.... சூப்பர். இவருடைய நகைச்சுவை உணர்வு, மிமிக்கிரி, பாடி லாங்குவேஜ் எல்லாம் எனக்கும் மிகவும் பிடித்தவை.

\\ஆனந்த கண்ணன்\\ சன் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் எல்லோரையும் பார்க்கும் போது ஒன்று எனக்குத் தோன்றும், "எங்கேயிருந்துடா இத புடிச்சிகிட்டு வந்தாங்க" என்பதே அது. ஏ.ஆர். ரஹ்மானை பேட்டி எடுத்த இசைஞானி, ரஜினியை பேட்டி எடுத்த சினிமா மேதை.... எவ்வளவோ பணத்தை அல்லும் சன் தொல்லைக் காட்சிக் கார KD சகோதரர்களுக்கு கொஞ்சம் நல்ல மூஞ்சியாக கிடைக்கவே கிடைக்காதா.... கொடுமைடா சாமி.....

Unknown said...

சின்னத்திரையில் அவரது ரசிகர் நான்..சினிமாவில் சாதிப்பாரா என்று பார்ப்போம் !!

Vasanth said...

சிறு திருத்தங்கள்
//கலைவாணி// அல்ல களவாணி
பசங்க படத்துக்கு அப்புறம் வம்சம் எடுத்தாரே.. இல்லையா? சரியாக நினைவில்லை..
//ஆனந்த கண்ணன்// ????? :|

உங்கள் பதிவை ரசித்தேன் :)

எப்பூடி.. said...

@ Vasanth

திருத்தத்திற்கு நன்றி, ஆனந்த கண்ணன் நடிகர்களின் நேர்காணலை சண்Tv க்காக சிறப்பாக செய்தவர், அதிகமானவர்களுக்கு பரிச்சியமானவர்; நான் தவறவிட்ட இரு முக்கிய நபர்கள் விஜயசாரதி மற்றும் விஜய் ஆதிராஜ். அவர்கள் பெயரையும் சேர்த்துவிடுகின்றேன்,கால்மேல கால் போட்டு Top 10 சொல்பவர் பெயர் தெரியவில்லை:p

நன்றி.....

ம.தி.சுதா said...

ஜீவ் இவர் தெரிந்த முகம் தான் என்றாலும் தற்போது முழு நிகழ்ச்சியையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை...

அதனால் பதிவிற்கு விமர்சனம் எழுத முடியவில்லை...

KANA VARO said...

தமிழ்த் தொலைக்காட்சி வரைமுறைகளை தகர்த்தெறிந்த சிவகார்த்திகேயன்!

http://shayan2613.blogspot.com/2011/09/blog-post_25.html

he he same blood..

karthik said...

//கால்மேல கால் போட்டு Top 10 சொல்பவர் பெயர் தெரியவில்லை//
அவர் பெயர் சுரேஷ்குமார்

எப்பூடி.. said...

@ KANA VARO

உங்க பதிவை படித்ததும் இன்னுமொரு விடயத்தையும் என் பதிவில் சேர்த்துக் கொள்கிறேன், பிரபலமான தொகுப்பாளர்களில் , திவ்யதர்சினியை தவற விட்டுள்ளேன், அவருடன் அவரது அக்காவின் பெயரையும் சேர்த்துக் கொள்கின்றேன்.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல திறமைசாலியான சிவ கார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் நிச்சயம் சாதிப்பார்! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் சந்தானத்திற்கு டப் பைட் குடுப்பார் என்றே நினைக்கிறேன்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)