
மாலை 6 மணிக்கு கிரிக்கெட் விளையாடி முடிந்த பின்னர் நண்பனுடன் ஒரு வேலையாக Town போகவேண்டி இருந்ததால் அப்படியே ராஜா திரையரங்கில் வேட்டை 14 ஆம் திகதியா இல்லை 15 ஆம் திகதியா ரிலீஸ் என்று கேட்பதற்கு சென்றோம்(15 என்றுதான் முதல் எழுதி வச்சிருந்தாங்க). அங்கு சென்றபோதுதான் 15 நிமிடத்தில் 'வேட்டை' திரையிடப் படப்போவதாக கூறினார்கள். கைகால் கூட கழுவவில்லை; ஓகே, பரவாயில்லை பார்த்துவிடுவோம் என்று உள்ளே சென்றுவிட்டோம்.
UTV க்ரூப்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதேஸ் இணைந்து தயாரிக்க; ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால், தம்பி ராமையா நடிப்பில்; யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, ராஜீவனின் கலையில், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில், பிருந்தா சாரதி வசனமெழுத, என்.லிங்குசாமி இயக்கிய திரைப்படம்தான் வேட்டை.
முன்னமே பார்த்த பல திரைப்படங்களில் வந்த கட்சிகளின் சாயல், ஓரளவிற்கு ஊகிக்க கூடிய அடுத்துவரும் கட்சிகள், 'ஹீரோகுடும்பத்தை' வில்லன் கிளைமாக்ஸ்வரை கண்டுகொள்ளாமல் வழமைபோல கிளைமாச்சில் கொலைசெய்ய வருவது, அதேபோல ஹீரோவை கிளைமாச்சில் மட்டும்தான் கொல்லவேண்டும் என்பதுபோல திரைப்படத்தின் இடையில் சந்தர்ப்பம் கிடைத்தும் கொல்லாமல் அடித்துவிட்டு மட்டும் போவது, வில்லனால் பாதிக்கப்பட்ட கேரக்டரை வைத்தே வில்லனை கொல்வது; இப்படி இதற்கு முன்னர் வந்த வழமையான கமர்சியல் சினிமாக்களின் வரிசையில்த்தான் 'வேட்டை'யும்...
ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து லிங்குசாமியின் விறுவிறு வேகமான திரைக்கதை 2.30 மணித்தியாலங்களுக்கு திரையரங்கில் கட்டிப்போடுமளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. கதை எல்லோருக்கும் ட்ரெயிலரிலேயே தெரிந்திருக்கும்; சாதாரண கதைதான், அதற்க்கு வேகமான விறுவிறுப்பான திரைக்கதையினை லிங்குசாமி தனது வழமையான ஸ்டையிலில் கலக்கலாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், காமடி கலவையாக நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே காதல், கல்யாணம், சென்டிமென்ட் தூவப்பட்டுள்ளது. ஒரு மசாலாப்படத்திற்கு திரைக்கதை அமைப்பதில் இயக்குனராக லிங்குசாமி வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்யா - துரு துரு கேரக்டருக்கு சரியான தேர்வு; இயற்கையிலேயே அமைந்த குரல்தான் என்றாலும் ஆர்யாவின் வசன உச்சரிப்புக்கு அவரது குரல் மிகப்பெரும் பலம்; ஆக்ஷனுக்கும் நகைச்சுவைக்கும் ஆர்யா குரலால் கொடுக்கும் வேறுபாடு சிறப்பு. படம் முழுவதும் ஆர்யாவின் டைமிங் காமடி களை கட்டுகிறது; ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறார். அடுத்த தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் ஆர்யாவால் நிச்சயம் சிறந்த போட்டியை கொடுக்க முடியும்!!!
மாதவன் - முதலில் மாதவனுக்கு Hats Off; மாதவனுக்கு ஆர்யாவைவிட குறைவான வேடம்தான்; ஆனாலும் தன்னைவிட யூனியர் நடிகர் ஆர்யா என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கொடுத்த வேடத்திற்கு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்த மாதவனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களிலும் இமேஜ் பார்க்காமல் இணைந்து நடிக்கும் கலாச்சாரம் இப்போது உருவாகி இருப்பது மகிழ்ச்சியே! மாதவனின் முகம் காட்டும் உணர்ச்சிகள் குறையவில்லை, ஆனால் அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை; இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அவரது கேரக்டர் ரீதியாக ஓகே, ஆனாலும் மாதவன் உடம்பை குறைப்பது அவசியம்!!!
அமலாபால் & சமீராரெட்டி - வழமையான கமர்சியல் பட நாயகிகள்தான்; அமலாபாலுக்கு பாடல்கள் அதிகம் என்பதாலோ என்னமோ சமீராரெட்டிக்கு அமலாபாலை விட சற்று அதிகமான காட்சிகள்; சமீரா உடல் எடையையும் நன்றாக குறைத்திருக்கின்றார், நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்; ஆனாலும் பார்க்கும்போது நோ பீலிங்க்ஸ்; அதேநேரம் அமலாபாலுக்கு பாடல் தவிர்ந்த காட்சிகள் குறைவென்றாலும் பார்ப்பவர்களுக்கு செம பீலிங்க்ஸ்:-)

தம்பி ராமையா கேரக்டர் படத்திற்கு பக்கபலம்; நாம் தமிழ் சினிமாவில் பார்த்த போலிஸ் கேரக்டர்தான் என்றாலும் தம்பி ராமையாவின் நடிப்பு வெளிப்பாடு சிறப்பு; ஒரு காட்சியில் மாதவன் சந்தேகப்படும்போது தம்பி ராமையா கொடுக்கும் அப்பாவித்தனமான பதில் சென்டிமென்ட் & மாஸ். நாசர் போலிஸ் மேலதிகாரியாக மூன்று காட்சிகளில் வந்தாலும் டைமிங் காமடியிலும் முகபாவத்திலும் அசத்துகிறார். வில்லன்கள் 2 பேர் வாறாங்க; அதில் ஒருவர் பக்கா டம்மி; மற்றவரும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனாலும் அவர் ஹீரோக்கு நாலு அடி அடிக்க பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்; நம்ம கேப்டனுக்கு வில்லன் பொன்னம்பலம் முதல்ல நாலு குடுக்கிற மாதிரி!
யுவன்ஷங்கர்ராஜா இசையில் 'பப்பரப்பா' பாடல் தவிர்த்து ஏனையவை பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை; ஆயினும் நீரவ்ஷாவின் கேமராவில் அத்தனை பாடல்களும் கண்ணுக்கு குளிர்ச்சி. 'பப்பரப்பா' பாடலில் இசையும், ஒளிப்பதிவும், நடனமும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. பாடல்களில் வைத்த குறையை யுவன் பின்னணி இசையில் வைக்கவில்லை; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான பின்னணி இசையை யுவன் பக்காவாக கொடுத்திருக்கிறார். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இல்லை என்றால்த்தான் ஆச்சரியம்!! நீரவ்ஷாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவனின் கலை, பிருந்தா மற்றும் ராஜ சுந்தரத்தின் நடனம், சண்டைப்பயிற்சி என்பன ஒரு கமர்சியல் திரைப்படத்தின் தேவையை திருப்திகரமாக பூர்த்தி செய்திருக்கின்றன. மிகப்பெரும் ஏமாற்றம் நா.முத்துக்குமார்!!!! கமர்சியல் படம்தான் என்றாலும் பாடல்வரிகளில் நா.முத்துக்குமாரிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்!!! அதிலும் 'உன்னோட பாப்பாவை பெத்துக்கிறேன்' போன்ற மூன்றாம்தர வரிகள் நா.முத்துக்குமாருக்கு அழகல்ல!!! அடுத்து வேட்டையின் இன்னுமொரு பலம் பிருந்தா சாரதி; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான வசனங்களை அப்பப்போ ஆங்காங்கே திறம்பட எழுதி கிளாப்ஸ் வாங்குகிறார்; அதிலும் மாதவன் சொல்லும் "எனக்கே ஷட்டாரா" வசனத்திற்கு செம கிளாப்ஸ் & விசில்.
உங்களுக்கு பொழுதுபோக்கிற்கு திரைப்படம் வேண்டுமா? நீங்கள் தாராளமாக 'வேட்டை'க்கு செல்லலாம்; 21/2 மணிநேரம் எப்படி முடிந்தது என்பதே தெரியாதளவிற்கு உங்கள் பொழுதுபோக்கிற்கு 'வேட்டை' உத்தரவாதம்!!!!
வேட்டை - செமையா ஆடியிருக்காங்கலே.....
8 வாசகர் எண்ணங்கள்:
முதல் விமர்சனம் ... முதல் பின்னூட்டம்.
ஹி ..ஹி வேட்டைனு ஒரு படம் வந்திருக்குனு நியாபகப்படுத்தியதற்கு நன்றி! அமலாப்பால் இப்போ தான் வந்திச்சு அதுக்குள்ள ஏகப்பட்ட அடிவாங்கின சொம்பாட்டம் ஆகிடிச்சு ,வேட்டை ஸ்டில்ஸ் பார்த்தேன் , அத வச்சு சொல்றேன்!
முத்துக்குமாரை பேசி என்ன பயன்..அவரிடம் என்ன கேட்கிறார்களோ அதை தானே அவரும் வழங்குவார்!
அமலா பால்...இவிங்க ஒரு ஹீரோயினா சார்?இத விட பக்கத்திவீட்டு பொண்ணு அருக்காணி அழகா இருப்பாங்க!
அப்புறம் நானூறு போலோவேர்ஸ் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்~~~!!
எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
\\21/2 மணிநேரம் எப்படி முடிந்தது என்பதே தெரியாதளவிற்கு உங்கள் பொழுதுபோக்கிற்கு 'வேட்டை' உத்தரவாதம்!\\ Padam Paarkkalaam yenru irukkiren. Thanks.
exact view of mine as well!!! recommended entertainer!!
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)