Tuesday, January 17, 2012

நண்பன் - எனது பார்வையில்





பலபேரும் விமர்சனம் (?), தங்கள் பார்வை எல்லாம் எழுதி முடித்து விட்டார்கள்; இந்நிலையில் எனது பார்வையில் நண்பனை எழுதணுமான்னு யோசித்தேன்!! கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னமே எந்தப்படத்துக்குமே நெகட்டிவ் ரிவியூ எழுதிறதில்லை என்கிற முடிவை எடுத்திருப்பதால் இதுவரை எந்த விஜய் படத்திற்கும் எனது பார்வையை எழுதவில்லை :p (காவலன் திரையங்கில் பார்க்கவில்லை) இந்தத்தடவை எழுதாவிட்டால் மீண்டும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென்று சொல்ல முடியாது!! :p எனவே இந்த தடவை எழுதலாமென்று எழுதுகிறேன்; முடிந்தவரை பக்கச்சார்பில்லாமல்!!!

3 இடியட்ஸ் - எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிடித்த திரைப்படம் என்பதில் யாருக்கும் எதிர்க்கருத்து இருக்காது என்று நம்புகின்றேன்!!!! 3 இடியட்ஸ்சில் ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அடையாளங்களான பஞ்சு டயலாக்குகள், சண்டைக்காட்சிகள், ஓவர் பில்டப்புகள் எதுவுமே இல்லை; ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே அமீர்கான் கேரக்டருக்குள் ஒருவித 'மாஸ்' இருக்கும் (Taare Zameen Par இல் கூடத்தான்); அது மட்டுமல்லாமல் ஒருவித துரு துருப்பான, அப்பாவித்தனமான செய்கையும் உள்வாங்கப்பட்டிருக்கும்!!! அமீர்க்கான் தவிர்த்து வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர் அது; இன்னும் சொல்லப்போனால் அமீர்க்கானுக்காகவே உருவாக்கப்பட்ட கேரக்டர் அது!!!! அந்த கேரக்டரை தமிழில் சுமப்பதற்கு........

விஜய் - ஆமாங்க; விஜய் தவிர்த்து 'பாரி' கேரக்டருக்கு சத்தியமா எனக்கு வேற சொய்ஸ் தெரியலைங்க; சூர்யா நடிக்கப் போறதா முதல்ல பேசிக்கிட்டாங்க; என்னை பொறுத்தவரைக்கும் சூர்யா இல்லை பாரி கேரக்டருக்கு தெற்க்கில யார் நடித்திருந்தாலும் விஜய் கொடுத்த வெளிப்பாட்டில் பாதிகூட தேறியிருக்குமா என்கிறது சந்தேகம்தான்!!! அதற்காக விஜய் அமீர்க்கானை ஓவர் டேக் செய்துவிட்டதாகவோ ஈடுகொடுத்து நடித்ததாகவோ அர்த்தமல்ல; தன்னாலான அதிகபட்ச்சத்தை நிறைவாக ஓவர் ஆக்ட் செய்யாமல் கொடுத்திருக்கிறார்; மற்றும் விஜய் தன்னை அமீர்க்கானோடு ஒப்பிட வேண்டாம் என்று சொன்ன பிற்ப்பாடு ஒப்பிடுவதும் அழகல்ல; அதற்க்கான தேவையும் இல்லை!!!!! சந்தேகமே இல்லாமல் நண்பனின் முதல்வன் விஜய்தான்.



ஜீவா - தனுஷ், சிம்பு கூட எந்த விதத்திலும் சளைக்காமல் போட்டிபோடக்கூடிய இளம் நடிகர்களில் ஜீவா முக்கியமானவர்; ஆகா ஓகோன்னு சொல்றமாதி இல்லையின்னாலும் குடுத்ததை திருப்தியாக ஓவர் ஆக்ட் செய்யாமல் நடித்திருக்கிறார். ஜீவாவிற்கு பலமான அவரது வசன உச்சரிப்பும், முகபாவமும் நண்பனுக்கும் ஜீவாவுக்கும் பலம்!!!

ஸ்ரீகாந்த் - சப்பிறைஸ் பக்கேஜ்; மாதவன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட ஈடாக மாட்டார் என்கின்ற எனதெண்ணத்தை தவிடுபொடியாகியவர்!!! எனக்கு மாதவன் கேரக்டருக்கும் ஸ்ரீகாந்த் கேரக்டருக்கும் பெரிதாக வேறுபாடு தெரியல!!!! பார்ப்பதற்கு மாதவனைவிட பிரெஷாக வேறு இருக்கிறார்!!!! முகபாவங்களில் இயல்பாகவும், விஜய்க்கும் ஜீவாவுக்கும் ஈடுகொடுத்தும் சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இனிமேலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இதுபோன்ற நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்தால் அவருக்கும், தமிழ் சினிமாவிற்கும் நல்லது!!!!


இலியானா - இடுப்புக்காக மட்டுமே ஹீரோயினை தேர்ந்தெடுத்த மாதிரி இருக்கு!!! தமிழ் ரசிகர்களுக்கு எப்பவுமே கொஞ்சம் சதை போட்டாத்தான் பிடிக்கும் என்கிறது உண்மைதான்; அதே நேரம் 'சிலிம்மான' சிம்ரனையும் கொண்டாடியவங்க நம்மாளுகதான்:p இலியானாவை சிலிம் என்று கூட சொல்ல முடியாது; அநியாயத்திற்கு எழும்பும் தோலுமாக இருக்கின்றார்!!! எலும்பெல்லாம் திரையை விட்டு வெளிய வருற மாதிரியே இருக்கு; தெலுங்கு ரசிகர்களை புரிஞ்சிக்கவே முடியலைப்பா!!!! அப்புறம் இலியானா நடிப்பு? நண்பனுக்கும் 3 இடியட்சுக்குமான மிகப்பெரும் இடைவெளி!!! அழகான முகம் இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சூண்டாவது எக்ஸ்பிரஷன்!!! ம்ம்ம்ஹீம்....



சத்யன் & சத்யராஜ்; சத்யன் - கேரக்டரை எல்லோரும் புகழ்ந்து தள்ளீட்டாங்க; நிச்சயம் சத்யனுக்கு இது ஒரு திருப்புமுனைதான்; அருமையான தெரிவு!!! காமடி காட்சிகளில் மட்டுமல்ல கோபப்படும்போதும் சத்யன் ஆச்சரியப்பட வைத்தார்!!!! சத்யராஜ் - எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை; அக்மார்க் ஓவர் ஆக்டிங்!!! 'வைரஸ்' கேரக்டில் பூமி இராணியுடன் மிகப்பெரும் முரண்!!! பல இடங்களில் 'வைரஸ்' கேரக்டரில் இருந்து அமைதிப்படை சத்யராஜ் கிளம்புகிறார். ஆனாலும் 3 இடியட்ஸ் பார்க்காதவர்களை சத்யராஜ் கவருவார் என்று நம்பலாம்!!!

ஹாரிஸ் ஜெயராஜ் - பாடல்கள் அளவிற்கு பின்னணி இசை கவரவில்லை; உயிர்ப்பான, சென்டிமென்ட், விறுவிறு காட்சிகளுக்கு ஹாரிஸின் பின்னணியில் உயிர் இல்லை, ஷங்கர் கூடவா கவனிக்கவில்லை!!! ஆனாலும் பாடல்களில் ஹாரிஸ் கலக்கியிருப்பதை பாராட்டியே தீரவேண்டும்!! ஆட்டைய போட்டாலும், ரசிகர்களின் பல்ஸை புரிந்து வைத்திருக்கும் இசையமைப்பாளர்களில் ஹாரிஸ் நம்பர் 1 தான்.

மனோஜ் பரமஹம்சா - "என்னையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்? கொஞ்சம் கூட தெளிவில்லை"; நான் பார்த்த திரையரங்கின் திரையை வைத்து சொல்வதானால் இப்படித்தான் சொல்லவேண்டும் :-) மூணு மாசம் தோய்க்காத வேட்டியை கட்டிவிட்ட மாதிரியே இருந்திச்சு!!! வாங்கிற காசுக்கு கொஞ்சமாவது நல்ல திரையில போடலாமே!!!! ஒரிஜினல் DVD யில்த்தான் முழுமையான ஒளிப்பதிவை ரசிக்கமுடியும்; இருப்பினும் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

ஆண்டனி - இந்த திரைப்படத்தில் குறைவான வேலை இவருக்குத்தான்; எதை எங்க கட் பண்ணி எப்படி சொருகணும் என்கின்ற ஒரு டென்ஷனும் இல்லை; இருக்கிற படத்தில 2 பாடல்களை சேர்த்தது தவிர ஆங்காங்கே சிறு சிறு கிராபிஸ்க் வேலைகள்தான்; ஷங்கர் படத்தில் இவளவு சுலபமாக இதற்கு முன்னர் ஆண்டனி வேலை செய்திருக்க மாட்டார் !!


மதன் கார்க்கி -
வசனங்கள் பளிச் பளிச் என்று இருக்கின்றன; 3 இடியட்சில இருந்து எனக்கு புதுசா தெரிஞ்ச ஒரே விடயம் வசனங்கள்தான் (ஏன்னா அங்கதான் வசனம் புரியாதே!!); கார்க்கி பல இடங்கள்ள முத்திரை பதித்திருக்கின்றார். விண்வெளியில் பென்சில் பாவிக்கமுடியாத காரணத்தை சொன்ன விதம், அதிகமானவர்கள் குறிப்பிட்ட ஆம்பிலன்ஸ் & பீசா வசனம் என்பன சிறப்பான சில உதாரணங்கள்; குறிப்பாக "அவனா நீ" பக்கா :-) பாடல்கள் தவிர்த்து திரைக்கதை, வசனம் என தனது ஆளுமையை கார்க்கி வளர்த்துக்கொள்ள ஷங்கர் பக்கபலமாக இருப்பது வைரமுத்துவுக்ககத்தான் என்றாலும் கார்க்கி அவற்றிற்கு தகுதியானவர்தான்!!!



ஷங்கர் - ரசிகர்களின் பல்ஸ் அறிந்த ஒரே (ஆமாங்க ஒரே தான்) இயக்குனர். ஆனால் ஷங்கர் நண்பனில் காணாமல் போயிருந்தார் என்பதுதான் உண்மை!! படத்தை அச்சாரம் மாறாமல் மாற்றி அமைத்ததற்காக சொல்லவில்லை; எந்த புதுமையையும் இந்த கதையில் புகுத்த முடியாது, அப்படி புகுத்தியிருந்தால் படம் வேறுமாதிரி ஆகியிருக்கு அபாயம் உண்டு; அந்த வகையில் ஷங்கரை பாராட்டாலாம்!!! அதேநேரம் 60 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் பிரம்மாண்டத்தை நண்பனில் எங்கும் காணவில்லை!!! டிப்பிக்கல் ஷங்கர் பட பாடல்கள் விஷுவலில் மிஸ்ஸிங் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்!!!! அதிலும் நான் பெரிதும் எதிர்பார்த்த 'அஸ்கு லஸ்கா' பாடல் விஷுவலாக ஏமாற்றம்!!!

ஜெமினி - 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் உரிமையை வாங்கி நண்பனாக வெளியிட்டமைக்கு Hats Off. அந்த சின்னப்பசங்களுக்கு ஜட்டியை மறைக்க டிரஸ் வாங்கி குடுக்க சொல்லி நம்ம நண்பர்கள் சிலர் சிபாரிசு செய்தாங்க :-) வேண்டவே வேண்டாம் அவங்களுக்கு அந்த ஜட்டிதான் அழகு :-)))

நண்பன் - தமிழ் ரசிகர்கள் கண்டிப்பா பாக்கணும்! (3 இடியட்ஸ் பாத்தவங்களும் பார்க்கலாம், புது அனுபவம் கிடைக்கும்)

குறிப்பு - நண்பனில் மட்டுமல்ல தற்பொழுது இளைஞர்கள் வட்டத்தில் பொதுவாக சொல்லப்படுகின்ற ஒரு மெசேஜ் - "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ"; எனக்கு இந்த மெசேஜில் சில சந்தேகங்கள் மற்றும் மாற்றுக் கருத்து உண்டு; அவற்றை நாளை பதிவிடுகிறேன்.

10 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

ம்ம் வித்தியாசமான விமர்சனம்.
ஸ்ரீகாந்த் சில நடன காட்சிகளில் கஷ்டப்பட்டது அப்பட்டமாக தெரிந்தது.
அதையே ஜீவா அழகாக பண்ணி இருந்தார்.
அஸ்கு லஸ்கா பாடல் விசுவல் பலருக்கு பிடிக்கவில்லை.எனக்கும் தான்.
அழகான டுயேட்டை நாசம் செய்துவிட்டார் ஷங்கர் விளையாட்டுதனமாக.

Unknown said...

கார்க்கி எதோ இருக்கிற திறமையை வடிவாக பயன்படுத்துகிறார்.
செல்வாக்கு இருப்பதால்.இதைவிட திறமையானவர்கள் செல்வாக்கில்லாமல் இருக்கிறார்கள்.
சத்தியராஜ் நடித்திருக்கிறார்.ஆனால் இந்தியுடன் ஒப்பிடும் போது பார் பிலோ!!
எனக்கு படத்தில் முதல் பிடித்தது இந்தி கதையை வாங்கியதும் ஷங்கர் பெருந்தன்மையோடு பெருமையை கதையாசிரியர்க்கு வழங்கியதும்.
இது நடக்காததால் தான் தெய்வதிருமகள் இன்னமும் எனது பிளக் லிஸ்ட்டில்!!

Jayadev Das said...

"இந்தா உன் வாட்ச், போட்டு விடறதுக்கு வேற கையைப் பாரு"- இப்படி யாரு பாஸ் தமிழில் சொல்வாங்க? இதை 3 Idiots படத்தில அந்த பொண்ணு ஆங்கிலத்துல சொல்லும், அதை அப்படியே தமிழில் 'முழி'பெயர்ப்பு பண்ணியிருக்காங்க. அது என்னமோ எண்ணெயும் தண்ணியும் மாதிரி ஒட்ட மாட்டேன்கிறது. மேலும் ஒரிஜினல் படத்தில் எல்லாமே இன்னமும் அழுத்தமா, நேச்சுரலா தெரிஞ்சது, இங்க ஏதோ ஈயடிச்சான் காபி மாதிரி ஒரு வித போலியாக செயற்கையாக எடுத்திருக்கிற மாதிரி ஒரு பீலிங். விஜய்.... காலேஜ் பையன்...... ஐயோ...ஐயோ....

\\எனக்கு இந்த மெசேஜில் சில சந்தேகங்கள் மற்றும் மாற்றுக் கருத்து உண்டு; அவற்றை நாளை பதிவிடுகிறேன். \\ Eagerly expecting!!

Anonymous said...

த்ரீ இடியட்ஸ் பார்த்தவர்களையும் நண்பன் கவர்கிறான்.

முத்தரசு said...

நல்லாத்தான் யோசிக்கிறிங்க தலைப்பு வைக்கிறிங்க - இருக்கட்டும்

esaidev said...

சரியான நடுநிலையான விமர்சனம்

வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

படம் பார்த்துட்டேன் ஜீவதர்ஷன் படம் பிடித்திருந்தது

ஸ்ரீனி said...

நண்பன் சரியான ஈயடிச்சான் காப்பி. ஈயடிச்சான் காப்பி என்பதற்கு இனி டிக்‌ஷனரி மீனிங் என்பதற்கு 3-இடியட்ஸ் => நண்பன் அப்டின்னு சொல்லலாம். இதற்கு சங்கர் எதற்கு ? எந்த சும்பனாலும் செய்திருக்க முடியும். விஜய் மீண்டும் மொட்டையான ஈயடித்தான் காப்பி. நடை, பவனை, பாடி லாங்குவேஜ் எல்லாவற்றிலும் அமீர்கானை மொத்தமாக சுத்தமாகக் காப்பியடித்திருக்கிறார்.. இப்படிக் கேவலமாக காப்பியடிப்பதை விட, பேசாம 3-இடியட்ஸை டப் செய்து வெளியிட்டிருக்கலாம். இதுவே நடிகர்களைத் தவிர அப்படித்தான் இருக்கின்றது.. இதில் புகழும்படியோ, விமர்சிக்கவோ எதுவுமே இல்லை.. இதில் விமர்சனம் செய்தால் அது 3-இடியட்ஸ் விமர்சனமாகத்தான் அமையும்..

கார்த்தி said...

நல்லாருக்கு விமர்சனம்! இப்பதான் முழுமையா வாசிச்சு முடிச்சன்

valan antly said...

A great movie with full of entertainment and comedy Nanban rocking.............. THALAPATHY THE MASS HERO.....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)