Saturday, February 13, 2010

கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க!!!!



காதலர்தினத்துக்கு ஏதாவது பதிவப் போடுவம்னு பார்த்தா நமக்கு இதில முன்னனுபவம் பின்னனுபவம் சைடனுபவம்னு எதுவுமே இல்லையே.சரி நாமெல்லாம் எதுக்கு சொந்தமா யோசிச்சு மத்தவங்கள இந்த சந்தோஷமான நேரத்தில துக்கத்தில ஆழ்த்தனுமேன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.சும்மா திரைப்படங்களிலும் பாடல்களிலும் எனக்குப் பிடித்த சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.எந்தெந்த படம்,பாட்டு என்பது நீங்களே கண்டு பிடிக்க வேண்டியது.கண்டுபிடிச்சா பின்னூட்டத்தில சொல்லுங்க.ரெடி

அதுக்கு முன்னாடி ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என ஒருகுட்டி பிலாஷ்பக்:
 வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். யாரும் காதலிக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என ரோமாபுரி சக்கரவர்த்தி கிளாடி2 விதித்த சட்டத்தை மீறி காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததற்காக வலண்டைனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது .

இப்போ என்னை கவர்ந்த சில வசனங்கள் :

" காதல் ஒன்னும் மரத்தில காய்க்கிற விஷயம் இல்ல தட்டி பறிக்கிறதுக்கு அது மனதில பூக்கிற விஷயம் அமைதியா இருந்தா தானா நடக்கும்"

"காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்கள மறந்திர்ரீங்க,காதலிக்கும் போது உங்களையே மறந்திர்ரீங்க கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க."

"நான்கூட நெனப்பன் ஏண்டா இந்த லவ்வையும் பண்ணிட்டு தற்கொல பண்ணிக்குராங்கன்னு,இப்போ தானே புரியுது உங்ககிட்ட மாட்டிகிட்டு அணுஅணுவா சாகிறதுக்கு அது எவ்வளவோ மேலுன்னு."


"காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பது அறியாது ,உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது"

"வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது"


"செவ்வாயில் ஜீவராசி உண்டாவென்று தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது புரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்"

"பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறதே உன்முகம்தான்"

"பாறையில் செய்தது எந்தன் மனமென்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,பாறையின் இடுக்கில் வேர் விட்ட செடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்"

"உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா !! "

"இருகண்கள் பேசும் வார்த்தைகளை இருநூறு மொழிகள் சொல்வதில்லை"

"காதல் என்னும் ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் ஒரு உருவம் இல்லை"

"கண்ணோடு கண் சேரும்போது வார்த்தைகள் எங்கே போகும்,கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்"

"என்னைக் கேட்டு காதல்அது வரவில்லையே,நான் சொல்லி அது போகக் கூடுமோ ?"

"பூஞ்சோலை அமர்ந்து சென்றாள் கொஞ்ச நேரமே,சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே"

"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம், எப்போதோ உன்னோடு நான் வாழ்ந்த ஞாபகம்"

"யாரிடத்தில் யாருக்கிந்த காதல் வருமோ, என்ன அந்த காதல் அது சொல்லி வருமோ"


இறுதியாக

"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று "



 எது எப்படியோ ...... "எப்பூடியின் இனிய  காதலர் தின வாழ்த்துக்கள் "


15 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று " ///

நமக்கு இதுதான் மிஞ்சும் போல!!

chosenone said...

இன்னா அண்ணாத்த !!!
படா படா மேட்டர் பத்தி படா படா பதிவெல்லாம் போடுற இன்னும் தனிக்கட்டையா தான் ஈகிரியா ....!?!?
உன்ன நெனச்சா பாவமா ஈகுது !
கடேசியா 2012ல உலகம் புட்டுக்குரதுகு முட்ல்லயாவது அண்ணிய கண்டுபுடிக்க உங்கள நான் தாறுமாறா வாழ்த்துறேன் அண்ணே வாழ்த்துறேன் !!!!!!! ம்ம்மஹாவ்வ்வ்வவ்வ்வ் ....
..

chosenone said...

தமிழ் சினிமாவில் காதல பத்தின வந்த அத்துண (மொக்க ) dialogue களும் தேடி புடிச்சி தந்ததுக்கு உங்களுக்கு என் ( வைத்தேரிச்ச்சல் கலந்த ) வாழ்த்துக்கள் !!!
இவளவு செய்த நீங்கள் இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்த best dialogue ஐ மிஸ் பண்ணிடின்களே ....
அதாங்க "ஆயுத எழுத்து "ல சூர்யா இஷா டியோல் க்கு சொல்லுறது....

வேலூர் ராஜா said...

கலக்குற தல,காதலர் தினத்தையும் வுடல போல

அ.ஜீவதர்ஷன் said...

ஞானப்பழம்

//நமக்கு இதுதான் மிஞ்சும் போல!!//

இதாவது மிஞ்சினால் சரி :-)

........................................

chosenone

இன்னா அண்ணாத்த !!!
படா படா மேட்டர் பத்தி படா படா பதிவெல்லாம் போடுற இன்னும் தனிக்கட்டையா தான் ஈகிரியா ....!?!?உன்ன நெனச்சா பாவமா ஈகுது !
கடேசியா 2012ல உலகம் புட்டுக்குரதுகு முட்ல்லயாவது அண்ணிய கண்டுபுடிக்க உங்கள நான் தாறுமாறா வாழ்த்துறேன் அண்ணே வாழ்த்துறேன் !!!!!!! ம்ம்மஹாவ்வ்வ்வவ்வ்வ் ....//


அ(க)ண்ணா பெத்தவங்களுக்காக நாம கஷ்டப்பட்டால் அதில ஒரு நியாயம் இருக்கு, ஆனா ஒரு கல்யாணத்தை பண்ணி பொண்டாட்டி, புள்ள, மாமன், மச்சான் என்ற உறவுகளில வேகிறதவிட ஒரு கட்ட விறகில வெந்திட்டு போயிடலாம்.


//தமிழ் சினிமாவில் காதல பத்தின வந்த அத்துண (மொக்க ) dialogue களும் தேடி புடிச்சி தந்ததுக்கு உங்களுக்கு என் ( வைத்தேரிச்ச்சல் கலந்த ) வாழ்த்துக்கள் !!!//

பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னப்பறவைபோல உங்கள் வயித்தெரிச்சலை விடுத்து வாழ்த்துக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் :-)


//இவளவு செய்த நீங்கள் இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்த best dialogue ஐ மிஸ் பண்ணிடின்களே ....அதாங்க "ஆயுத எழுத்து "ல சூர்யா இஷா டியோல் க்கு சொல்லுறது....//

நாலுவரி டயலாக்கை நாலு நிமிசமா சொன்னதை எழுதினா வாசிக்கிறவங்களுக்கு புரியனுமில்ல:-) அதில்லைங்க ஞாபகத்துக்கு வரல


.......................................

வேலூர் ராஜா

//கலக்குற தல,காதலர் தினத்தையும் வுடல போல//


நீங்கவேற என்னத்த இன்னிக்கு எழுதி தொலைக்கிறது என்று இருக்கும்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா விடமுடியுமா? அதுதான் நம்ம சொந்த சரக்கில்லாம, படங்களின் டயலாக்கும் பாடல்வரிகளும்.

r.v.saravanan said...

அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
விண்மீன்களும் நானும்

ஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன் எப்பூடி

r.v.saravanan said...

அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
விண்மீன்களும் நானும்


ஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன் எப்பூடி

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan

//அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
விண்மீன்களும் நானும்

ஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன் எப்பூடி//

கலக்கல்

r.v.saravanan said...

கல்யாணத்திற்கு அப்புறம் காதலை மறந்துடாதீங்க

காதலிப்பவங்களும் கண்டிப்பா கல்யாணம் பண்ண மறந்துடாதீங்க

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan

//காதலிப்பவங்களும் கண்டிப்பா கல்யாணம் பண்ண மறந்துடாதீங்க//

அப்ப ரெண்டு பொண்ணை காதலிப்பவர்கள் என்னங்க செய்யிறது? :-)

r.v.saravanan said...

அப்ப ரெண்டு பொண்ணை காதலிப்பவர்கள் என்னங்க செய்யிறது

அதன் பெயர் காதல் இல்லையே எப்பூடி

உடனுக்குடன் உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan

//அதன் பெயர் காதல் இல்லையே எப்பூடி//

எதுகமோனைய பேசினா எடுப்பா இருக்குமேன்னு சொன்னேன், இதபோயி சீடியஸா எடுத்துக்கிட்டு :-)

Anonymous said...

very nice i like very much.

KATHAL ENBATHU PAADAMALLA.
PADITHU KATRU KOLLVATHARKU,ATHU ORU INAM PURIYA ENNAVENTRU SOLLVATHU THERIA VILLAI EPPADI IRKHHU? RLY KANNDIPPA NEGGA PANNANUM

Unknown said...

kadaisiya ena than sola varinga love panalama venama

vs said...

poi vela vetiya para seela vati thanna kidaikkum

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)