Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி






உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் + அறிமுக நாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் ஹீரோ + காமடியன் + குணச்சித்திரம் என பல பரிமாணங்களிலும் நடிக்க; ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பாலசுப்ரமணியத்த்தின் ஒளிப்பதிவில், M.ராஜேஷ் இயக்கிய திரைப்படம்தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' (ஓகே ஓகே) இவர்களுடன் கௌரவ வேடத்தில் ஆர்யா, சினேகா, ஆண்ரியாவும் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளார். 2012 கோடை விடுமுறை + சித்திரை புது வருடத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வெளிவந்துள்ள அதிகபட்ட பொழுதுபோக்கு திரைப்படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்றால் அது மிகையில்லை.

ஹீரோவாக உதயநிதி - சாம் அண்டர்சன், பவர் ஸ்டார் ரேஞ்சிற்கு கலாய்க்கப்படுவார் என எதிர்பார்த்த அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது!!! எனக்கும்தான். மனிதர் அசத்தி இருக்கிறார், ஆகா ஓகோன்னு நடிப்பில் புரட்டி எல்லாம் போடவில்லை, ஆனால் இயக்குனர் கொடுக்க நினைத்ததை உள்வாங்கி சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். இவர் முதல் திரைப்படத்தில் நடிப்பது போன்ற எண்ணம் காதல் & பாடல் காட்சிகளில் மட்டும் அப்பப்போ தெரிகிறது, சிறிது தயக்கம் உள்ளதுபோன்ற உணர்வு, மற்ற இடங்களில் சிறப்பாக அசத்தி இருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவைகூட இந்த திரைப்படத்திற்கு போதுமான அளவில் நன்றாகவே உள்ளது. தனக்கேற்ற கதையை தெரிவு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவரும் தாக்குப்பிடிக்கலாம்!!!!!

ஹன்சிகா - நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை, ஒருவேளை சந்தானம் சொன்னதுபோல நைட்டியில் நல்லாயிருப்பாரோ என்னமோ :-)) ஆனாலும் அவருக்கான பாத்திரத்தை குறைவில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஹன்சிகாவிற்கு இப்ப 'உடை' குறைப்பைவிட 'எடை' குறைப்புத்தான் அவசியம் (இதில இவங்க 58 Kg ஆம்:p), இல்லையென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்!!!!!


சந்தானம் - சந்தானம் இல்லையென்றால் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இல்லவே இல்லை!!!! அசத்துகிறார், கலக்குகிறார், பின்னுகிறார், ஜமாய்க்கிறார், பிரிச்சு மேய்கிறார்...... இந்தமாதிரி வார்த்தைகள் எத்தனை இருக்கோ அத்தனையையும் சேர்த்துக்கோங்க. என்ன மனுசன்யா இந்தாளு!!!!! எனக்கு தெரிஞ்சு ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு அடுத்து முதல்க்காட்சி அரங்குநிறைந்த காட்சியாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நான் பார்த்த ஒரே திரைப்படம் இதுதான். புதுவருட விடுமுறை, கோடைவிடுமுறை என பல காரணிகள் இருந்தாலும் அதிகமானவர்களை திரையரங்கிற்கு வரவைத்தது சந்தானம்தான் என்பதில் சந்தேகமே இல்லை; இதை அவரும், அவர் பெயரும் திரையில் அறிமுகமானபோது பறந்த விசில், மற்றும் கரகோஷம் உணர்த்தியது.

என்ன ஒரு உடல் மொழி!!! எத்தனை விதமான வசன உச்சரிப்பு!!! எத்தனை விதமான ரியாக்சன்கள்!! அசத்தலான டைமிங், மொத்தத்தில் மிகச்சிறப்பான Screen present. சந்தானம் - One Of the Best Actor!!! ஒரு முழுத் திரைப்படத்தையே ஒரு காமடியனை நம்பி இயக்கி, அதில் மூன்று தடவைகள் ஒரு இயக்குனர் ஜெயித்திருக்கிறார் என்றால் அவரை காமடியன் என்பதைவிட 'ஹீரோ' என்று சொல்வதே சால பொருந்தும். இந்த்த திரைப்படத்தின் பின்னர் சந்தானத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் அதிகரிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சந்தானத்தின் கேரியரில் மற்றொரு முத்திரை.

சரண்யா பொன்வண்ணன் - வழமையான அம்மா பாத்திரம், இவங்களைவிட்டா அந்த கேரக்டருக்கு வேறு தேர்வே இல்லை, வழமைபோல கலக்கி இருக்கிறாங்க. ஆர்யா - வழமையாக ராஜேஷ் திரைப்படங்களை முடித்துவைக்க ஒரு ஹீரோ வருவார், 'சிவா மனசில சக்தி'க்கு அப்புறம் மீண்டும் ஆர்யா இரண்டாவது தடவையாக திரைப்படத்தை முடித்து வைக்கிறார். சினேகா - பிரசன்னா குடுத்து வச்சவன்யா!!! ம்ம்ம்... :p ஆண்ட்ரியா - வேஸ்டா சும்மா ஜாலிக்கு வந்திட்டு போனாங்க!!


ஹாரிஸ் ஜெயராச்சின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன, உதயநிதி சொதப்பாதது ஆச்சரியம்!!! சூப் சாங்கான "வேணாம் மச்சான் வேணாம்" படமாக்கியவிதம் மற்றும் அந்தப் பாடலில் சந்தானத்தின் காஸ்டியூம்ஸ் கலக்கல்! பின்னணி இசையை கவனிக்கவே முடியவில்லை (படம் முழுக்க விசில் & கைதட்டல் சத்தத்தில எப்டி ரீ ரெக்கோடிங் புரியும்!!!) தப்பிச்சீங்க ஹாரிஸ் :-)) பால்சுப்ரமணியத்தின் கமரா அழகியல்; தமிழ் சினிமாவின் கலர்புல் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பாலா ஒளிப்பதிவில் சொத்தப்பினல்த்தான் ஆச்சரியம், வழமைபோலவே கலக்கி இருக்கிறார், கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு!!!! விவேக் ஹர்சன் படத்தொகுப்பு விறுவிறு!!!

M.ராஜேஷ் - அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று!!! மூன்றும் ஒரே பார்முலா, ஆனாலும் ரச்கர்களுக்கு சலிக்கவே சலிக்காது, யாருக்குத்தான் காமடி சலிக்கும்!!! பேரரசு செய்யும் வேலைதான், ஆனால் இங்கே ராஜேஷ் கலர்புல்லா, செம ஜாலியா, சிறந்த டைம்பாஸா, சிறந்த பொழுதுபோக்கா 2.30 மணி நேரமும் நேரம் போனது தெரியாம ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்; அதுதான் இவரின் வெற்றி ரகசியம்!!! வேகமான, மிகச்சிறந்த டைமிங் காமடியுடனான திரைக்கதை, மிகச்சிறப்பான வசனங்கள், அதிலும் காமடி வசனங்கள் எல்லாமே அடி தூள் ரகம்!!!! இவைதான் ராஜேஷின் சுமாரான இயக்கத்தையும், லாஜிக் மீறல்களையும் மறைத்து நிற்கின்றன. ஒண்ணுமே இல்லாத கதைக்கு சிறப்பான திரைக்கதை + மிகச்சிறப்பான காமடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை படம் முழுவது விசில் + கைதட்டல் என அதிர வைத்த ராஜேசுக்கு ஒரு சலூட் போடலாம்!!


கலைப்படைப்புக்களை எடுக்கிறவங்க எடுக்கட்டும், அவங்க தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போகட்டும்!! அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம், இவர்கள் தமிழ் சினிமாவிற்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்தும் நேசிப்பதற்கு இவர்கள்தான் பூஸ்ட்!!! ஒட்டுமொத்த திரையரங்குமே ஜாலியாக கைதட்டி, விசிலடித்து, கரகோஷம் செய்து ஒரு படத்தை முழுமையாக ரசிக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு சபாஷ் போடுவதில் தப்பில்லை!!!

படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும்!!! படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு!!! இதயநோய், வயிற்றுவலி உள்ளவர்கள், சிரித்தால் நஷ்டம் ஏற்ப்படும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் இது ஒரு பக்கா விருந்து....

ஒரு கல் ஒரு கண்ணாடி - சூப்பர், செம, ஜாலி, கலக்கல்!!! Fact... Fact...Fact...Fact...Fact..

13 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

அடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்!!!!! super..

Unknown said...

அருமையான விமர்சனம்.
3 படச்சோகம் இன்னம் மனசில இருக்கு,இதைப் பார்த்தா OK OK ஆகிடும் போல....

Unknown said...

//ஹன்சிகா - நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை//

கஞ்சிக்கா எப்ப பாஸ் நல்லாருந்திச்சு? எனக்கென்னமோ பார்க்கும்போதெல்லாம் கவுண்டரின், 'அடி! அடே! அடடி!' ஞாபகம்தான் வரும்! :-)

Unknown said...

//M.ராஜேஷ் - அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று!!! //
அடிக்கணும் பாஸ்! இப்படியான படங்கள் கட்டாயம் தேவை! :-)

Unknown said...

இப்போ பீக் பீரியட் சந்தானம்!!
படம் ஓட முக்கிய காரணம் சந்தானமாக தான் இருக்கும்.
ஹாரிஸ் பாடல்களும் ஓகே ஓகே
லாஜிக் மீறல்கள் ரொம்ப...ஆனாலும் காமெடிக்கு முன்னால் பெரிதாக தெரியவில்லை!
பெரிதுபடுத்த விஜய் படமும் இல்லை :P

Jayadev Das said...

\\படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும்!!! \\ இது தான் டாப்பு!!

கிஷோகர் said...

//படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும்!!! படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு!!!//

யோவ் இந்த லைன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குய்யா !

கார்த்தி said...

இதே பார்வைதான் எனதும். அதோட சந்தனத்துக்கு நீங்க சொன்னத அப்பிடியே றிப்பீற் பண்ணுறன். சார் இதுக்கும் யாராவது நொட்டை பிடிக்கிறாங்களா? நான் இன்னும் பாக்கல..

Unknown said...

செம ஜாலியான படம் போல, ஹீரோ தேடறதுக்கு பதிலா பேசாம ராஜேஸ் சந்தானத்தையே ஹீரோவா வச்சி ஒரு குவாட்டரு கொஞ்சம் வாந்தின்னு அடுத்த படத்தயே எடுக்கலாம் :p நல்ல ரிவ்யூ தல

r.v.saravanan said...

அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம்,

எனக்கு பாஸ் என்கிற பாஸ்கரன் ரொம்ப பிடித்தமான படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை ஒரு கல் ஒரு கண்ணாடி இன்னும் பார்க்கவில்லை எனினும் படத்தின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது நீங்கள் எழுதியதை படித்த பிறகு இன்னும் எகிறி விட்டது பார்த்து விட்டு சொல்கிறேன் ஜீவதர்ஷன்

Unknown said...

நல்ல விமர்சணம்

முத்தரசு said...

ஒக்கே ஒக்கே

Thava said...

விமர்சனம் பார்க்கவே புது வடிவில் அழகாக இருக்கிறது..படிக்கவும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது..மிக்க நன்றிங்க.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)