Sunday, April 4, 2010

நெத்தியடி மஹேலா !





IPL இல் ரன்ஸ் அடிக்கிறது ஒன்றும் கடினமான விடயமில்லை , அன்றைக்கு நாள் நல்லாயிருந்தால் யார் வேணுமின்னாலும் விளாசலாம் , ஆனால் கிளாசாக கலக்குவதெனால் அது  ஒரு சிலர்தான் . அந்தவகையில் இந்தாண்டு ஏற்கனவே சச்சினும் கலிசும் கிளாசோட மாசையும் சேர்த்து கலக்கிவரும் நேரத்தில் மஹேலா கிளாசோட மாசையும் சேர்த்து அக்ஷன் ஹீரோ ரேஞ்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். முன்னைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காததால் முதல்ப் போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட மஹேலா இறுதி நேரத்தில் காயமடைந்த மார்ஷுக்காக இன்றைய போட்டியில் களமிறங்கி தன்னை அணியிலிருந்து நீக்கியதன் தவறை துடுப்பால் உணர்த்தயுள்ளார்.

இதுவரை IPL இல் பஞ்சாப் சார்பாக போப்பாரா, பிஸ்லா, சங்ககாரா, யுவராஜ், பதான், மார்ஸ் என துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஆரம்பவீரர்களாக முதல் எட்டுப்போட்டிகளிலும் களமிறங்கினாலும் இன்றைய போட்டிக்கு முன்னர் பஞ்சாப் வென்ற ஒரே போட்டியான சென்னையுடனான சுப்பர் ஓவரில் மட்டுமே மஹேலா ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறக்கபட்டார், அந்த ஓவரின் முதல்ப்பந்தில் முரளிக்கு அடித்த சிக்ஸ்தான் பஞ்சாப்பின் அந்தப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதன்பின்னர் மீண்டும் இன்றுதான் ஆரம்பவீரராக களமிறங்கினார் மஹேலா.


IPL போட்டிகளுக்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆரம்பதுடுப்பாடவீரராக களமிறங்கி நான்கு போட்டிகளில் அரைச்சதமடித்து தான்சார்ந்த வயம்பஅணி இறுதிப்போட்டியில் வெல்வதற்கு முக்கியகாரணமாக இருந்தவர் மஹேலா, இது தெரிந்ததும் முதல் எட்டுப்போட்டியிலும் ஆரம்பதுடுப்பாட்டவீரராக மகாலேவை சங்கா எதற்காக பயன்படுத்தவில்லை என்பதுதான் தெரியாதுள்ளது.


இதற்கு முன்னர் மஹேல ஒருநாள் போட்டியலில் இலங்கை சார்பாக ஆரம்பவீரராக களமிறங்கிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சதமடித்துள்ளார். அந்த போட்டிகளின் இறுதியில் சங்ககார " இரண்டு விக்கட்டுகள் விரைவாக வீழ்ந்ததும் அழுத்தங்கள் அதிகமாக இருப்பதால் நடுவரிசையில் ஆடும்போது மஹேலா தனது இயலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவதில்லை, ஆரம்பதுடுப்பாடவீரராக களமிறங்குவதால்  அழுத்தங்கள் இல்லாததால் சிறப்பாக ஆடினார் " என்று கூறியது நினைவிருக்கலாம். இருந்தும் இதுவரை சங்கா மகேலாவை ஆரம்பவீராக களமிறக்காமல் விட்டமை பஞ்சாப்பிற்கே இழப்பாகும்.

தன்னை விமசிக்கும் போதும்  அணியிலிருந்து நீக்கும் போதும்  மீண்டு வருவது மகேலாவிற்கு ஒன்றும் புதிதல்ல, 2003 உலககோப்பை போட்டிகளின் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்ட மஹேலா மீண்டும் அணியல் இடம்பிடிக்க இலங்கை வந்த நியூசிலாந்துடனான பயிற்சிப்போட்டியில் இலங்கை கட்டுப்பாட்டுசபை சார்பாக களமிறக்கப்பட்டார். NCC இல் இடம்பெற்ற அந்தப்போட்டியில் பொண்ட, விட்டோரி, ஓரம் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு மஹேல அடித்த சதம் மகேலாவை மீண்டும் அணிக்கு கொண்டுவந்தது, அந்தப்போட்டியில்தான் அணியிலிருந்து நீண்டகாலம் நீக்கப்பட்டிருந்த களுவிதாரணவும் அரைச்சதமடித்து மீண்டும் அணியில் இடம்பிடித்தார், அந்தப் போட்டியை நேரில்பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததை நினைவுகூர விரும்புகிறேன்.

இதேபோல தலைமை பதவியை ஏற்றவுடன் பங்களாதேஷுடனான ஒருநாள் போட்டி தோல்வி , இலங்கையில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள்தொடர் தோல்வி என்பவற்றால் கடும் விமர்சனங்களை சந்தித்த மஹேலா அடுத்த இங்கிலாந்து  தொடரில் ஒருநாள் போட்டிகளில் ஆசியஅணிகள் எதுவும் செய்யாத சாதனையை கிளீன் ஸ்வீப்பில் அதாவது 5 -0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு நாடு திரும்பி விமர்சகர்கள் வாயை அடைத்தார், இந்த தொடரில்  மஹேலா இரண்டு சத்தங்களை தன்பங்கிற்கு விளாசியிருந்தார். அதேபோல நியூசிலாந்துதொடரில் சோபிக்காத மகேலாவை விமர்சித்தவர்களுக்கு அடுத்து இடம்பெற்ற தென்னாபிரிக்காவுடனான தொடரில் முச்சதமடித்து நடைபெற்ற இருபோட்டிகளிலும் வெற்றிபெற்று இருபோட்டிகளிலும் ஆட்டநாயகனாக தெரிவாகி மீண்டும் தன்னை நிரூபித்தார்.


உலக கோப்பை போட்டிகளுக்கு முன்பதாக மோசமாக விமர்சிக்கப்பட்ட மகேலாவின் போம் உலக கோப்பையில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் பட்டியலில் மகேலாவை கொண்டுவந்ததுடன் இறுதிப்போட்டிவரை இலங்கையை கொண்டுசென்றது. இப்போது கூட இறுதியாக பங்களாதேசில் இடம்பெற்ற போட்டித்தொடரில் காயம் காரணமாக மஹேலா விளையாடாத நேரத்தில் சமரவீர சதமடித்தவுடன் மஹேலா கதை அவ்வளவுதான் என்று விமர்சனங்கள் எழுந்தன,அதே தொடரில் மீண்டும் இணைந்த மஹேலா முதல்ப்போட்டியில் பங்களாதேசுடன் சதமடித்து இறுதிப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை தனித்துநின்று போராடி கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்து விமர்சகர்கள் முகத்தல் கரியை பூசியது நினைவிருக்கலாம்.

எது எப்பிடியோ மஹேலா தன்னை மீண்டும் நிரூபித்துவிட்டார், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்தும் சாதிக்க வாழ்த்துக்கள். T/20 போட்டிகளில் class வீரர்களான மஹேலா, சச்சின், கலிஸ் , திராவிட் போன்றவர்களாலும் பிரகாசிக்க முடியும் என்றால்  "class is real mass".

Saturday, April 3, 2010

பையா - திரைவிமர்சனம்


ஓகே ரக படங்களுக்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் அந்தப்படங்களினை  தோல்வி அடையச்செய்வதால் பையா படத்திகு விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று ஒன்றுக்கு பலமுறை ஜோசித்த பின்னரே இந்த விமர்சனம் எழுதுகிறேன், இந்த விமர்சனத்தால்  பையாவின் தோல்வி எந்த வகையிலும்  பாதிக்கப்படாது என்கிற நம்பிக்கையில்.

'பிள்ளையாரே பெருச்சாளியில போறாரு  பூசாரிக்கு புல்லட்டு கேட்குதா?' என்கிற கதையா  ஆலாலப்பட்ட விஜையே இந்தமாதிரி படங்களை  ஓடவைக்க   திண்டாடும்போது கார்த்திக்கு இப்பிடி ஒரு படம் தேவையா? ஆரம்பகாலங்களில் கமர்சியல் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென தக்க வைத்திருந்த லிங்குசாமி சிறந்த technicians மட்டும்  இல்லாவிட்டால் பேரரசுவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல் உள்ளது, லாரி லாரியாக அள்ளக்கூடிய லாஜிக் மீறல்கள். சண்டைக்கோழி, ரன் போன்ற ஜனரஞ்சகமான படங்களை  எடுத்த லிங்குசாமி எங்கே ?


சரி படத்தில் என்னதான் கதை? அதைத்தான் Ka49 y 2133 இலக்க காரில் பெங்களூரில் இருந்து மும்பைவரை கார்த்தியும் தமன்னாவும் தேடுகிறார்கள், இறுதியில்   சோகமான முடிவு அதாவது அவர்களுக்கு கடைசிவரை கதை கிடைக்கவே இல்லை. கார்த்தி படத்தின் தேவைக்கேற்ப அழகாக அளவாக நடித்துள்ளார், இருந்த  போதும் அதிகமான இடங்களில்  வாரணம் ஆயிரம் சூரியாவின் பாதிப்பு தெரிகிறது. முப்பது நாற்பது  வில்லன்களை அடிப்பது, குறிப்பாக  இரும்பு கம்பியால் கிட்டத்தட்ட  இருபது அடி வாங்கிய பின்னரும் இரண்டு வில்லன் குரூப்பையும் அடித்து துவைப்பது போன்ற காட்சிகளில் கார்த்தியை ஓரளவேனும் மாஸ் ஹீரோவாக பார்க்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் அமீரும் பருத்திவீரனும்தான்.


தமன்னாவுக்கு  புதுப்படங்களில் வாய்ப்புக்களும் சம்பளமும் அதிகரித்துக் கொண்டு போனாலும்  ஒரே மாதிரி பாத்திரங்களில் நடித்து வெறுப்பைத்தான்  உண்டாக்குகிறார், வழமைபோல பாட்டுக்களிலும் தாராளம், மற்றயவர்கள் யாரும் குறிப்பட்டு சொள்ளையும் படியாக மனதில் பதியவில்லை. குறிப்பாக கார்த்தியின் நண்பர்கள் படு போர். அதலும் பிரியா என்னும் கேரக்டர் குளோசப்பில் பயமுறுத்துகிறார். அவர்களது காட்சியமைப்பு படத்துடன் ஒட்டவே இல்லை. அடுத்தடுத்த காட்சிகள் எப்படி இருக்க போகின்றன என்பதை அதிகமான இடங்களில் ஊகிக்க முடிகிறது.


மதியின் ஒளிப்பதிவுதான் படத்தை இறுதிவரை பார்க்க வைத்ததென்றே சொல்லலாம், வெய்யிலுக்கு பின்னர் மீண்டும் மதி தன்னை நிரூபித்திருக்கிறார்.அவரது ஒளிப்பதிவில் இரவும், நிலவும், நதியும், சொல்ல வார்த்தைகளே இல்லை. எதற்காக அன்ரனிக்கு  லிங்குசாமி கார் வாங்கிக் கொடுத்தார் என்பதை இறுதிவரை  ஊகிக்க முடியவில்லை. பிரிந்தாசாரதியின் வசனங்கள் பெரிதாக படத்திற்கு கை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. இறுதியாக யுவன் பற்றி சொல்லியே ஆக வேண்டும், மனிதர் பின்னணி இசையால் முடிந்தவரை படத்தின் தரத்தை உயர்த்தப் பாடுபட்டிருக்கிறார், பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் குறிப்பாக 'காதல் சொல்ல' யுவனின் வாய்சில் சூப்பர்.

லிங்குசாமியிடம் ஒரு கலைப்படைப்பயோ வித்தியாசமான படைப்புகளையோ யாரும்  எதிர்பார்க்கவில்லை, ரன், சண்டைக்கோழி போன்ற ஜனரஞ்சகமான ஒரு மசாலாப்படத்தையே  எதிர்பார்க்கின்றனர், அதை எதிர்பார்த்து திரையரங்கிற்கு  செல்பவர்களை லிங்குசாமி பையாவில் இல்லாவிட்டாலும் அடுத்த படத்திலாவது  திருப்திபடுத்துவார் என்று நம்புவோமாக.

ஐடியாமணி : ஹீரோவை அடிக்கவரும் வில்லன்களின் தொகையையும் , அவர்களின் தலை முடியையும், அவர்கள் ஹீரோவை துரத்தும் வாகனங்களின் எண்ணிக்கையையும் , சண்டைக் காட்சிகளின்  நேரத்தையும்  குறைத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

Thursday, April 1, 2010

தமன்னான்னா இப்ப உசிரு.


நன்றியும் மன்னிப்பும்




முதற்க்கண் நேற்றைய APRIL FOOL'S DAY பதிவில் முட்டாள்கள் ஆகியவர்களுக்கும், சுதாகரித்துக் கொண்டவகளுக்கும், எதைஎதையோ எதிர்பார்த்து கடுப்புடன் கிளம்பிய அனைவருக்கும் நன்றிகள். எந்த மேட்டர போட்டா நிறைய ஜனங்களை முட்டாளாக்கலாம் என்று மல்லாக்க படுத்திருந்து சிந்தித்தபோது கணப்பொழுதில் தோன்றியதுதான் இந்த சிம்பு திரிஷா மேட்டரு. பின்னர் பல விடயங்களை யோசித்தாலும் இந்த மேட்டருக்கு இணையாக வேறொன்றும் அகப்படவில்லை, இவ்விருவரும் புகைப்படம் , ஒளிநாடா என்பவற்றில் இணையத்தில் ஏற்கனவே பிரபலம் என்பதாலும் இவ்வாறான கிசுகிசுக்கள் இவர்களுக்கு புதிதல்ல என்பதாலும் அவர்களை கேட்காமலே அவர்களது பெயரை ஒரு நல்ல (?) காரியத்துக்கு பயன்படுத்தி விட்டேன். இருந்தாலும் தப்பு தப்புத்தான், இதற்காக இவ் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.



அண்ணன் அழகிரி வாழ்க



கலைஞரை தவிர யாரையும் தலைவராக ஏற்க்க மாட்டேன் என்று அண்ணன் அழகிரி கூறும்போதே அனைவருக்கும் கிளம்பிய சந்தேகம் இப்போ தலைமைப்பதவிக்கு போட்டிக்கு நிற்பேன் என்று அழகிரி கூறியதும் உறுதியாகிவிடது. அண்ணன் நானிருக்கும் போது தம்பி எப்படி தலைவராக முடியும்? வேணுமின்னா ஜனநாயகமா தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்து நான் கள்ளவோட்டு அடிச்சு எப்ப்பிடி வெல்கிறேன் என்பதை மட்டும் வேடிக்கை பாருங்க என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறார் எங்கள்  அண்ணன் அழகிரி.

ரஜினியிலிருந்து விஜய் வரை தனது செல்லப்புதல்வன் ஸ்டாலினுக்கெதிராக யாரும் அரசியல் களத்தில் இறங்கக்கூடாதென்பதில் அக்கறையாக இருந்தவர் , இருக்கிறவர் கலைஞர். அவரது ஆசைக்கு அவரது இன்னொரு மகனே மண்ணள்ளிப் போடப்போவதை அவர் எதிர்பார்த்திருந்தாலும் தனக்கு முன்னிலையிலேயே அது நடக்க கூடாதென்பதில் அக்கறையாக இருந்தவர், அதனால்தான் ஒருவருக்கு மத்திய அமைச்சர்பதவி, மற்றவருக்கு துணைத்தலைவர் பதவி என பார்த்து பார்த்து செய்தவர்.அழகிரியின் அண்மைக்கால  பேச்சுக்களால் நிலைமையை புரிந்த கலைஞர் இரு பிள்ளைகளும் மோதுவதை பார்க்க விரும்ப மாட்டாரென்பதால் தனது இறுதிக்காலம்வரை தானே தலைவராக இருப்பார் என்று தோன்றுகிறது . அதிகமாக கலைஞரின் காலத்தின் பின்னர் 29 மாநிலங்களை(தெலுங்கானா கணக்கில் இல்லை ) இந்தியாவில் காணலாமென்று தோன்றுகின்றது.


பாக்காம இருக்க முடியல



இதற்கிடையில் கலைஞர் தனது அன்றாட பணிகளை கைவிடவில்லை, அண்மைக்கால பாராட்டு விழாக்களின் நடிகைகளின் நடனங்கள் இல்லாததால் சென்றவாரம் சேப்பாக்கத்துக்கு சியர் லீடேசை பார்க்க சென்றவருக்கு தூரப்பார்வை ஒவ்வாமையால் நேற்று பிரசாந்த் - சினேகா நடிக்கும் 'பொன்னர் சங்கர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று ஒருமணி நேரம் பொழுதை கழித்துள்ளார், இந்தப்படத்திற்கு வசனமும் அவரே எழுதுவதால் எதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார் என்ற கேள்வி எழாது என்பது தலைவருக்கு தெரியாதா என்ன ? கலக்குங்க தலைவா! அப்பிடியே மானாடமயிலாட செட்பக்கம் போனா நமீதாவை நலம் விசாரிச்சதா சொல்லுங்க.



தமன்னான்னா இப்போ சன்னுக்கு உசிரு.



சன்டிவியின் இன்றைய தெரிவு தமன்னாதான். சுறா, தில்லாலங்கடி போன்ற தமன்னா நாயகியாக நடிக்கும் படங்களை தற்போது வாங்கியுள்ள சண் இதற்கு முன்னரும் கண்டேன் காதலை, அயன் ,படிக்காதவன் போன்ற படங்களை வாங்கியது நினைவிருக்கலாம். சண் தனக்கு பிடித்தமானவர்களை தூக்குவதும் பிடிக்காதவர்களை தாக்குவதும் புதிதல்ல. A.R.ரகுமானுடன் முன்னர் இருந்த பிரச்சனையால் 'அன்பே ஆருயிரே (அ .ஆ) ' படத்தின் பாடலுக்கு முன்பாக ஸ்ரீகாந்த் தேவாவின் 'சாணக்கியா' படப்பாடலை டாப் 10 பாடல்களின் தரவரிசையில் போட்டவர்கள்,அதேபோல வரலாறு படத்தின் பாடல்களுக்கும் முன்பாக தரவரிசையில் வட்டாரம் பட பாடல்களை போட்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்தவர்கள். இரண்டு மாங்காயில் ஒன்று ரகுமான் மற்றவர் அஜித்.

அதேபோல விஜயின் படத்துடன் குறிப்பிட்ட தினத்தில் போட்டிக்கு வரும் பெரிய நாயகனின் படத்திற்கும் தரவரிசையில் முதலிடத்தில்  இருக்கும் விஜயின் படத்திக் குமிடையில் (அது போட்டிக்கு வந்த படமாகவும் இருக்கலாம், அல்லது முன்னரே வெளியாக் ஓடிக்கொண்டிருந்த படமாகவும் இருக்கலாம் ) வேறொரு படம் இருக்கும். அதேபோல விமர்சனங்களிலும் பெரும் பாகுபாடு காட்டப்படுவது வழக்கம். சன்னின் பிடித்தவர்கள் லிஸ்டில் விஜய், சரத்குமார் (முன்னர்) இயக்குனர் பள்ளத்தாக்கு பேரரசு, பரத், ஜெயம் ரவி, தனுஷ்,விஷால், தமன்னா, விஜய் அன்டனி என்ற குறூப்பும் பிடிக்காதவர்கள் லிஸ்டில் அஜித், சிம்பு, ரகுமான்(முன்னர்), விஜயகாந்த் போன்றோரும் முக்கியமானவர்கள்.சிலகாலங்களுக்கு முன்னர் அதிகமான படங்களின் தலைவிதியை தீர்மானித்த 'சன்' இன்று தன் படங்களையே ஓடச்செய்ய முடியாமல் படாதபாடு படுவதை என்னவென்று சொல்வது?

சிம்புவுடன் திரிஷா நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படங்கள்.



மேல திகதிய கொஞ்சம் பாத்திட்டு அப்புறமா வாசியுங்க....

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ( இல்லாட்டி மட்டும் கேட்கவா    போறீங்க? )



விண்ணைத்தாண்டி வருவாயா படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது ஹோட்டல் ஒன்றில் சிம்புவும் திரிசாவும் மிகவும் நெருக்கமாக (அந்த மாதிரி )இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்களை யார் எடுத்தார்கள் என்பதுதான் அடுத்த மில்லியன் டொலர் கேள்வி. முன்னர் நயன்தாராவுடன் சிம்பு நெருக்கமாக இருந்த காட்சிகளை சிம்பு வெளியிட்டதாக கூறினாலும் இந்த தடவை அது சாத்தியமில்லை, ஏனெனின் இந்த புகைப்படங்களில் சிம்பு நயனுடன் இருந்த புகைப்படத்தில் இருந்ததைவிட  மிகவும் ஆபாசமாக உள்ளார்.

எது எப்பிடியோ பதிவர்கள் பாடு கொண்டாட்டம்தான், படங்களை டவுன் லோட் செய்ய முடியவில்லை, அமெரிக்காவின் தமிழ் இணையமான americcantamzhill.com (படங்களை பார்க்க இதை கிளிக் செய்யவும் ) இற்கு சென்று இந்த அரிய புகைப்படங்களை காணலாம்.