Friday, December 4, 2020

ரஜினி பயத்தில் திமுக, காரணம் என்ன?ரஜினி அரசியலுக்கு  வருவது உறுதி என்று சொன்ன 2017 மார்கழி 31 முதல் இந்தக்கணம்வரை, ஏன் இந்த தேர்தலின் கடைசி செக்கண்ட் வரை திமுகவின் கண்மூடித்தனமான ரஜினி எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பு பொய், புரளி எல்லாம் அவிழ்த்துவிட்டு எந்தளவு அடிமட்டம் வரை இறங்கி கேவலமான அரசியல் செய்ய முடியுமோ அந்தளவுக்கு திமுக இறங்கும். திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி சொன்ன ஊடகங்கள் பெருமளவில்  ரஜினியை அவதூறு செய்யக் களமிறங்கும்; திமுக ஆதரவாளர்கள் அல்லது திமுகவால் பணம் கொடுக்கப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என  களமிறக்கப்படுவார்கள் (இப்போதும் அதேதான் நடக்கிறது.)


தவிர பணத்துக்காக எந்த அடி மட்டம் வரைக்கும் போய் என்னவேண்டுமென்றாலும் பேசக்கூடிய  வலைப்பேச்சு பித்தலாட்ட அந்தணன் பிஸ்மி முதல், மளிகைசாமான் கவுதமன், வேல்முருகன் என பெரும் பட்டாளம் களமிறங்கும். சவுக்கு சங்கர் போன்ற அரசியல் புரோக்கர்கள் அவதூறுக்கு ஓவர் டைம் பார்ப்பார்கள்.  எக்ஸ் பிரபலங்கள், பஞ்சத்தில் இருக்கும் பிரபலங்கள் என பெரிய அணி இந்த தூற்றல் அரசியலுக்கு தயாராகும். சீமானும் அவர் தம்பிகளும்வேறு சம்பந்தமில்லாமல் குறுக்குமறுக்காக ஓடித்திரிவர். 


ஆனால் ரஜினி வந்தால் பாதிப்பு அதிமுகாவுக்குத்தானே? அப்படித்தான் சொல்லி மனதை தேற்றுகிறார்கள் திமுகவினர். அப்படிப்பார்த்தால் அதிமுகத்தானே ரஜினியை எதிர்க்கவேண்டும்? தமக்கு பாதிப்பு தரப்போகும் அதிமுக ரஜினியை எதிர்க்காமல்; தமக்கு சாதகமாக அதிமுக வாக்கை பிரிக்கப்போகும் ரஜினியை ஏன் திமுக கண்மூடித்தனமாக எதிர்க்கிறது? திமுகவுக்கு அதிமுக மேல் பாசமா? நகைச்சுவையாக இல்லை..! பின்னர் ஏன்? 


காரணமில்லாமல் குடுமி ஆடாது.  திமுகவைப் பொறுத்தவரை 'நிரந்தரமான' அதிகபட்சமாக  வாக்குவங்கி 20 - 25 சதவீதம் என்று வைத்துக்கொண்டால் (திமுக தோல்வியடைந்த தேர்தல்களினை வைத்து இதனை  கணிக்கலாம்) அதில் மிகப்பெரும்பான்மையாக 15 - 20 சதவிகிதம் வாக்குகள் மூன்று பிரிவினரிடம் தங்கியிருக்கிறது. 


1) சிறுபான்மை வாக்குகள்.

2) தலித் வாக்குகள் 

3) ஜாதி வாக்குகள். (தலித் தவிர்ந்த)


இந்த 15 - 20 சதவிகிதம் வாக்குவங்கி  ரஜினி அரசியலுக்கு வந்தால் சிதறிவிடும், அல்லது இல்லாமலே போய்விடும் என்கிற அச்சம் திமுகவுக்கு பெரும் குடைச்சலாக உள்ளது. இந்த வாக்குவங்கி கையைவிட்டுப்  போனால் திமுக எதிர்க்கட்சியாக கூட தகுதியில்லாமல் போய்விடும் என்பதுதான் உண்மை. 


ரஜினியால் இந்த மூன்று  பிரிவு வாக்குகளையும் உடைக்க முடியுமா? முடியும்..! அது திமுகவுக்கும் தெரியும். அதுதான் ரஜினி என்கிற கரிஷ்மா மீதான பயத்துக்கு காரணம். ரஜினி ரசிகர்கள் என்பது  இன, ஜாதி, மதம் கடந்த ஒரு அமைப்பு, அதில் உள்ளவர்களுக்கு ரஜினிதான் ஜாதி, மதம், இனம். திமுக நம்பும் மூன்று வாக்கு வங்கியிலும் ரஜினி ரசிகர்களும், ரஜினியை நம்புபவர்களும் ஏராளம். அந்த எண்ணிக்கை ரஜினிக்கு வாக்காக மாறினால் திமுகவை குழிதோண்டிப் புதைத்துவிடலாம் என்பதுதான் நிதர்சனம். அதுதான் திமுகவின் ரஜினி மீதான பயத்துக்கும், வன்மத்துக்கும் காரணம். 


இது திமுகவுக்கே தெரியும்போது, ரஜினிக்கு தெரியாதா? 


அதனால்தான் ரஜினியை பாஜக இயக்குகிறது என நிறுவ திமுக தரப்பு கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறது. தலித் வாக்கை திருமாவளவனுக்கு எலும்புத்துண்டை போட்டு பொறுக்கிக்கலாம், மற்ற  ஜாதி வாக்குகளை அந்தந்த ஜாதி வேட்பாளர்மூலம் பொறுக்கிக்கலாம், ஆனால் சிறுபான்மை வாக்கு போனால்? 13 சதவிகிதத்தில் 10 சதவிகிதமேனும் கிடைக்கும் என்று நம்பும் வாக்கு போனால்? அதை தடுக்க என்ன வழி..!?


ரஜினி பாஜக என நிறுவுவது..! குஜராத் சம்பத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு பாஜக மீது ஏற்பட்ட இனரீதியான வெறுப்பை பயன்படுத்தி அவர்கள் வாக்கை தம்மிடம் தக்கவைத்திருக்கும்   திமுக; ரஜினியை பாஜக ஆள் என நிறுவினால் அந்த முஸ்லீம் வாக்குகளை தொடர்ந்து  வேட்டை ஆடலாம் என்கிற கணக்கு. எங்கே அந்த பெரும் விழுக்காடு வாக்குகளை ரஜினி சூறையாடிவிடுவாரோ என்கிற பயம்..! அதற்காகத்தான் அல்லும்பகலும் ஐ'பாக்கும் ஐடிவிங்கும் அலறுகிறது, ரஜினி பாஜக என கிடந்து உருள்கிறது. 


இதெல்லாம் ரஜினிக்கு தெரியாத என்ன? ரஜினி அரசியலுக்கு வயது 25+. அன்றைய 1996 பற்றி  அறியாத விடலைகளை  விடலாம், ஆனால் துரைமுருகன் போன்றவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் அது நன்றாகவே தெரியும்.  அதனால்தான் அன்றிலிருந்து சொல்கிறேன் ரஜினி பாஜக பக்கம் போகவே மாட்டார். ஒருபோதும் ரஜினி  தன்னை இந்து அடையாளங்களில் இருந்து மறைத்ததில்லை, அது அவர் பின்பற்றுவது. அதேநேரம் அவர் எந்த மதத்தையும் விமர்சித்ததோ, தீமை செய்ததோ இல்லை; சினிமாவில்கூட தீவிரவாதி என முஸ்லிமைக் காட்டாத மனிதர் அவர். அவர் இந்து, இந்துத்துவா இல்லை. அவர் ஆன்மீகவாதி, மதவாதியில்லை. இதை அடுத்துவரும் நாட்களில் ஒவ்வொரு சிறுபான்மை இன மக்களும்  உணருவார்கள், ரஜினி உணரவைப்பார், காவலர்கள் உணரவைப்பார்கள். 


டாக்டர் அர்ஜுனமூர்த்தி பாஜாகாவில் இருந்தவர் என்பதை பயன்படுத்தி இப்போதுகூட திமுகவினர் கதறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் 35 ஆண்டுகள் தொழிநுட்பத்துறையில் சாதித்ததை கூறுவதில்லை, ஏன் அவர் திமுகவின் முரசொலிமாறனின் அறிவுரையாளர் என்பதைக்கூட கூறுவதில்லை. பாஜக, அதிமுக கட்சிக்காரர்கள் திமுகவில்  இருக்கலாம், ஆனால் ரஜினி பக்கம்  வரக்கூடாது என்கிற அளவில் இவர்களது அரசியல் செத்துக்கொண்டிருக்கிறது. 


ரஜினி அரசியலுக்கு வரும் முதல்நாள், ஜனவரியிலேயே ரஜினி பாஜக எனும் கோசம் ஒழிந்துபோகும். சிறுபான்மை வாக்குகள் ரஜினியை நோக்கி 'பள்ளத்தை  தேடி வரும்  ஆறு போல' ஓடிவரும். ரஜினி கட்சியின் முக்கிய பதவிகளில், தேர்தல் வேட்பாளராக அதிரவைக்கும் சிறுபான்மை தெரிவுகள் இருக்கும். அதெல்லாம் திமுக நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வெறித்தனமாக இருக்கும்.  அதை உடைத்தால் ரஜினி வெற்றி உறுதியாகிவிடும்.  திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தும் இல்லாமல் போய்விடும். 


ரஜினிக்கா அரசியல் தெரியாது ? பொறுத்திருந்து  பாருங்கள், ரஜினியோட ஆட்டத்தை..! 

1 வாசகர் எண்ணங்கள்:

arul said...

Yes.. Rajini Velvaar

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)