Thursday, October 29, 2020

ரஜினி ஏமாற்றப் போகிறாரா?


கடந்த இரண்டு நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் சலனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ரஜினியின் உடல்நிலை தொடர்பாக, அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பெரும் நம்பிக்கையீனம் ரஜினி ரசிகர்கள் மத்தியிலேயே விதைக்கப்படுகிறது. ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் "இல்லை, தலைவர் எம்மை ஏமாற்றமாட்டார்" என்கின்ற அசுர  நம்பிக்கையில் இருந்தாலும்; கணிசமான அளவினர் மிகவும் குழப்பமான, கலக்கமான மனநிலையிலும் உள்ளனர்.

 

உடல்நிலை, கொரோனா என ரஜினி அரசியலுக்கு வரமுடியாத நியாயமான சூழ்நிலையே இருந்தாலும் ரஜினி அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்..! ரஜினி மக்களிடம் செல்ல முடியாதா சூழலாக  இருக்கலாம், ரஜினியின் திட்டங்களும் கொள்கைகளும்  மக்களை போய்ச்  சேராமல் இருக்கலாம், ஒருவேளை  படுதோல்விதான் வரும் எனும் நிலைதான் இருந்து; அது   ரஜினிக்கு தெரிந்தால்கூட  ரஜினி வந்தே ஆகவேண்டும்..!

 

நீ யாரு அதை சொல்ல, இத்தனைக்கும் உனக்கும் இந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என யாரும் வந்தால் அதற்கான பதிலை பிறிதொரு பதிவில் தருகிறேன்.

 

2017  ரசிகர்கள் சந்திப்பு தொடங்கும்வரை ரஜினியிடமிருந்த அரசியல் எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட ரசிகர்களுக்கு இல்லாமலே போயிருந்தது. ஆனால் அந்த ரசிகர்கள் சந்திப்பின் முத்தாய்ப்பாய் 2017 டிசம்பர் 31  "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்னும் வார்த்தை தூங்கிக்கொண்டிருந்த அத்தனை ரஜினி ரசிகர்களையும் துள்ளியெழ வைத்தது. அத்தனை பேரது இரத்தமும் சூடேறி, உடலும் மனமும் ரஜினியின் வெற்றி ஒன்றே எம் வெற்றி எனும் அளவுக்கு இந்த நிமிடம்வரை களத்திலும் வலைத்தளத்திலும் போராடிக்கொண்டிருக்கிறது

 

2018 முதல் RMM செய்த சேவைகள் எந்த மக்கள் இயக்கமும் குறுகிய காலத்தினுள் செய்யாதது..! புயல், மழை, தண்ணீர் பஞ்சம், கொரோனா என அத்தனை இடரிலும்  தம் சொந்தக் கைக்காசைப்  போட்டு, உடலை வருத்தி, நேரத்தை பொருட்டாக நினைக்காமல் RMM உறவுகள் செய்த அத்தனை பணிகளும் அவர்களுக்காகவா? அவர்கள் அரசியல் நலனுக்காகவா? பதவி இல்லை, சீட்டு இல்லை என்று சொன்ன பின்பும் இன்னும் ஆயிரம் மடங்கு உத்வேகத்துடன் களத்தில்  இறங்கி உயிரை துச்சமென மதித்து கொரோனா இடரிலும் வாடாமல் வேலை பார்த்தார்களே; எதற்க்காக? யாருக்காக? தலைவருக்காக, ரஜினிக்காக, தம் உயிர் போனாலும் தன்  உயிரினும் மேலான தலைவனும்தன்னை  வாழவைத்ததாக தலைவன் சொல்லும் மக்களும் ஜெயிக்கவேண்டும் என்பதற்க்காக..... அந்த மக்களுக்கு ஒரு விடிவு, எதிர்காலம், நம்பிக்கை கிடைக்கும் என்பதற்க்காக.

 

அந்த நம்பிக்கையை குழிதோண்டி புதைக்க ஒரு தலைவன், அதிலும் ரஜினி போன்ற ஒருவர் நினைப்பாரா? நினைக்கவே மாட்டார், அப்படி நினைத்தால்  அது ரஜினி இல்லை...!

 

"சினிமாவை ஓடவைக்க அரசியல் பேசுகிறார், இவர் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார், முட்டாள்களால்தான் இவரது அரசியல் வருகையை  நம்புவார்கள்" அது இதென்னபிற கட்சிக்காரர்கள் , மற்றய நடிகர்களின்  ரசிகர்கள் முதற்கொண்டு;  கூடப்பழகும் உறவுகள், நண்பர்கள் என எத்தனை பேர் சொல்லியிருப்பார்கள்..!? எத்தனை காலம் சொல்லியிருப்பார்கள்? அத்தனை காலமும் நிஜத்திலும், வலைத்தளத்திலும் "தலைவன் வருவான்" என்கின்ற நம்பிக்கையில்; தலைவன் குடுத்த வாக்கின்மேலிருந்த நம்பிக்கையில்; பதிலளித்து பதிலளித்து என்றோ ஒருநாள் தலைவர்  வரும்போது இவர்களுக்கு  முடிவுரை எழுதலாம் என்று காத்திருந்த லட்சக்கணக்க்கான ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுப்பதும்; அவர்களை துடிதுடிக்க  கொலை செய்வதும் ஒன்று என்பதை அறியாதவரா ரஜினி? அந்த  பஞ்சமா பாதகத்தை ரஜினி செய்வாரா?

 

ரங்கராஜ் பாண்டே மூலமே ரஜினி தனது எதிர்மறையான திட்டங்களை வெளிக்கொண்டு வருகிறார் என்கின்ற நம்பிக்கையை கடந்த  பங்குனி மாத சம்பவம் பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அன்று பாண்டே சொன்னதையே ரஜினி அடுத்த சில தினங்களில் சொன்னார்..! அதே பாண்டே இப்போதும் குட்டையில் கல்லெறிகிறார், ரசிகர்களுக்கு அந்தக் குட்டையிலிருந்து கொடிய விஷத்துக்கு நிகரான வார்த்தையாக ரஜினியின் அரசியலுக்கான முற்றுப்புள்ளி ரஜினியிடமிருந்து வந்துவிடுமோ என்கின்ற பயம் ஏற்பட்டுள்ளது!! இந்த அச்சத்தில் நியாயம் இல்லாமலுல் இல்லை.

 

தலைவர் மீது நம்பிக்கை இல்லையா என சில கண்மூடித்தனமான ரசிகர்கள் கேக்கலாம்! மனதில கை வச்சு சொல்லுங்க உங்களுக்கு  அந்த பயம் ஒரு புள்ளியில்கூட இல்லையா என்று? சரி உங்களுக்கு தலைவர்மேல் நம்பிக்கை கண்மூடித்தனமாக இருக்கலாம், ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் தலைவருக்கான கடந்த 3 ஆண்டுகளாக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் பெரும்பாலாலான ரசிகர்கள் மனதில் சலனமும்பயமும், "ஒருவேளை..." என்கின்ற நடுக்கமும் ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாதது.

 

தலைவரது அமைதியும், பொறுமையும் எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்துவது அவரது  அரசியல் யுக்தியாக இருக்கலாம்; ஆனால் அதற்குள் ரசிகர்களுக்கு ஏற்படும் அழுத்தம் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு அதிகம். மனமெல்லாம் உடைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இதற்கு தலைவர் நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்உதாரணத்திற்கு "எந்த வதந்திகளையும்  நம்பவேண்டாம், நல்லது நடந்தே  தீரும்" என ஒரு டுவீட்; அல்லது "நான் ஒருதடவை சொன்னா நூறு  தடவை சொன்னமாதிரி" என்கிற பாஷா பட கிளிப்பை டுவீட் பண்ணினால்  போதும்..! உயிரைக்குடுக்க லட்சக்கணக்கில் காவலர்கள் காத்திருக்கிறார்கள்..!

 

ரஜினி  கோழையில்லை, ரஜினி தோற்கவே மாட்டார் என நம்பும் அத்தனை ரசிகனும்; ரஜினி சண்டையே போடாமல் தோற்றுப்போக  தயாராக இருக்கிறார் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அது போன்ற ஒரு நிலை ஏற்படுமென்று  எந்த ரஜினி ரசிகனும் நினைத்துக்கூட பார்க்க முடியாததுஒருவேளை.. ஒருவேளை... ஒருவேளை ரஜினி வந்து தோற்றுப்போகலாம், ஆனால் வராமல் தோற்றால்? அது வரலாற்றில் எத்தனை கேவலமாக பதிவாகும்? தன்னை நம்பிய மக்களுக்கும், தன்னை உயிரினும் மேலாக நம்பிய ரசிகர்களுக்கும்  செய்த எவ்வளவு பெரிய துரோகமாகும்? அந்த குற்ற உணர்ச்சி ஒரு  வினாடியேனும்  நிம்மதியாக வாழவிடுமா? இதெல்லாம் தெரியாதவரா ரஜினி?

 

நான் முதல்வரல்ல, நான் கட்சியை பார்த்துக்கொள்கிறேன், நான் காட்டுபவன் முதல்வர் என ரஜினி சொன்னபோது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டவர்கள் ரசிகர்கள்; காரணம் தலைவனின்  தன்னலமற்ற  பொதுநலம் அவர்களுக்கு புரிந்தது. ஆனால்  ரஜினி அரசியலுக்கு முற்றுப்புள்ளி என்பதை 90 விழுக்காடு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது..! அது கொடுக்கும் ஏமாற்றம் ரஜினி சொல்லப்போகும் எந்தக்கரணத்தாலும் திருப்திப்படுத்த முடியாதது, சாகும்வரை அது ஒரு பெரிய வடுவாகவே இருக்கும். இதெல்லாம் அறியாதவரா ரஜினி

 

மக்களிடம் போக முடியாவிட்டாலும், ஒருவேளை வெல்வது சாத்தியமில்லாமல் போகலாம் என ரஜினியே நம்பினாலும் அவர் கட்சி தொடங்கியே ஆகவேண்டும், தேர்தலில் நின்றே ஆகவேண்டும். அது கொடுக்கும் தோல்வியைக்கூட  தங்கலாம், ஏனென்றால் அப்படி ஒரு தோல்வி வந்தால் அது ரஜினியின் தோல்வியல்ல, அது  மக்களின் தோல்வி, தேசத்தின் தோல்வி. ஆனால் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் அந்த  ஏமாற்றத்தை, எள்ளல்  பேச்சுக்களை சாகும்வரை  தாங்கவே முடியாது, அது இத்தனை வருடம் சிவாஜிராவாக இருந்து ரஜினிகாந்த்தாக் மாறி, சூப்பர் ஸ்டாராகி, தமிழகத்தின் அடையாளமாக நிற்கும் ரஜினி என்கிற மீபெரும்  விம்பத்தை சுக்குநூறாக்கிவிடும்..! காலத்திற்கும் அழியாத வடுவுவை கொடுத்துவிடும்... இதையெல்லாம் அறியாதவரா ரஜினி?

 

இப்போதும் நான் தலைவரை நம்புகிறேன், அவர் வருவார், வந்தே தீருவார்... மாசி மாதம் கூட வரட்டும், ஆனால் அதற்குள் எம்மனைவருக்கும்  மனதளவில் ஏற்பட்ட  சோர்வும், ஏக்கமும், பதட்டமும் நோயாக முன்னம் எங்களுக்கு ஒரே ஒரு டுவீட்...  நூறுசதவிகிதம் நம்பிக்கை வரக்கூடிய  ஒரேயொரு  டுவீட் / வீடியோ  போடுங்க தலைவா...  மாசி மாதம் வரையில்லை, கோட்டையிலே கோடி ஏத்திறவரைக்கும் 24*7 வேலைசெய்ய காத்திருக்கிறோம்..!

 

நன்றி தலைவா...!