Friday, July 24, 2020

ரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.


"நான் புதருக்குள் இல்லை" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்துகொண்டிருக்கிறார்கள்.

 

அண்மைய ரஜினியின் "கந்தனுக்கு அரோகரா" பெரும் சங்கடத்தை திமுக கூடாரத்தில் ஏற்படுத்திப் போயுள்ளது. பகுத்தறிவு, பெரியார் சிலை  சேதம், மின்சார கட்டண உயர்வு என தமது  எந்த ஆயுதமும் சரிவராத நிலையில்; இட ஒதுக்கீடு பற்றி ரஜினி பேசவில்லை, குரல் கொடுக்கவில்லை  என்று கதற ஆரம்பித்தார்கள். யாரென்று பார்த்தால் மக்களால் நாடாளுமன்றம் அனுப்பப்பட்ட எம்பிக்கள்..! எந்த லட்சணத்தில் இவர்களது அரசியல் ஏமாற்று இருக்கிறது என்று பாருங்கள்...!

 

ரஜினி மூச்சு விட்டாலே திமுக கூட்டணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார் (டாக்டராம், தகுதி இல்லாமல் ஏதாவதொரு  ஒதுக்கீட்டில் படித்த முட்டாளோ தெரியவில்லை.) ஜோதிமணி போன்றோர் தட்டை தூக்கிக்கொண்டு பிச்சைக்காரர்கள் போல தம் நிலை மறந்து ரஜினியிடம் பிச்சை கேட்க வந்துவிடுகிறார்கள். அப்பப்போ சாக்கடை அரசியலின் பிதாமகன் திருமாவளவனும், எப்போதும் அவர் அல்லக்கை ஆளூர் நவாசும், கம்யூனிஸ்ட் கோமாளிகள் அருணனும் மதிமாறனும் என ஸ்டாலின் சார்பாக இந்தக் கூட்டம் வரிசையாக  கதற ஆரம்பித்துவிடும்.

 

மறுகரையில் சுபவீ கதறல்கள் ஆரம்பமாகும், பின் அவரது சிஷயனாம் மட  சாம்பிராணி ஒருத்தன், பேர் கூட  ஏதோ 'டான்  அசோக்'கோ என்னவோ...; அத்தனை முட்டாள்தனமாக, இவனெல்லாம் பள்ளிகூடப் பக்கம் ஒதுங்கினானா என்கின்ற அளவில்  அவன் வாதங்கள் இருக்கும்.

 

இவர்கள் கூட வாங்கும் சம்பளத்துக்கு கூலிக்கு மாரடிக்கும் கூட்டம், கூட்டணி ஆட்சிக்கு நக்கி பிழைக்கும் கூட்டம், அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்கிற பெரும் பயம் கொண்டு கத்துகிறார்கள், கதறுகிறார்கள்..!

 

ஆனால் இந்த ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சவுக்கு ஷங்கர், ராதாகிருஷ்ணன்,  லக்ஸ்மி (ஆளுநரின் சர்ச்சை ஆன்டி), விக்ரமன் என இன்னும் பல  பல ஊடகவியலாளர்கள்  லேபல்களில் இருப்பவர்கள் கேவலம் பணத்துக்காக செய்யும் தொழிலையே கூட்டிக்கொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி சொன்ன "விபச்சாரக் கூட்டமாக"  படும் பாடு இருக்கிறதே..!

 

அதிலும் சவுக்கு ஷங்கர் என்பவன் (இந்த மரியாதையே அதிகம்) பார்க்கும் ஓவர் டைம் வேலையை பார்க்கும்போது "செருப்பா இருடான்னா, செருப்பில் ஒட்டி  இருக்கிற மலமாக இருக்கிறான்" என தோணும் அளவுக்கு இருக்கும். இவர்களை தாண்டி அப்பப்போ நடுநிலை சுமந்துராமன்கள் வேறு தம் நேர்மையை நடுநிலையை பொதுவெளியில் அம்மணமாக்கி நிற்பதுதான் ஆச்சரியம்..!

 

லஞ்சம், ஊழல், சொத்துக்குவிப்பு, அதிகார துஸ்பிரயோகம், ரௌடிசம், குடும்ப அரசியல், கொலை, கொள்ளை என மாற்றி மாற்றி இரண்டு கட்சிகளும் செய்த கேவலமாக ஆட்சிகளுக்கு ஒரு மாற்றாக; தனக்கு பதவி வேண்டாம், சரியான தகுதியானவர்கள் மற்றும் இளைஞர்கள் பதவிக்கு வரவேண்டும், ஆள்பவர்கள் கட்சி பற்றி ஜோசிக்காத ஆட்சி தரவேண்டும், அவர்கள் சரியாக இல்லாவிட்டால் தூக்கி எறியலாம் என்று சொல்லி ஒருவர் வருகிறார்..! ஆனால் அவரை எதிர்க்க இதுவரை சுரண்டி தின்று நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கும் ஆளும், எதிர் கட்சிகளின் எச்சில் எலும்புக்கு இத்தனை நாய்களா?  நாய் இனத்துக்கே கேவலம்..!

 

இப்பவும் சொல்கிறேன்; செந்தில்குமார், ஜோதிமணி, திருமாவளவன், ஆளூர் நவாஸ், மதிமாறன், அருணன், சுபவீ, டான் அசோக் போன்ற கூலிக்கு மாரடிக்கும், கூட்டணிக்கு நக்கி பிழைக்கும் கேவலங்களை விடுங்கள்...; ஆனால் ஊடகவியலாளர்கள் முகமூடிகள் போட்டவர்களும்,  நடுசென்டர் வேடமிட்ட சுமந்துராமர்களும் கைக்கூலிகளாக செயற்படுவதுதான் மாகா கேவலம்..!

 

ஒரு சிறு உதாரணம்; நேற்று... ரஜினி ஈ-பாஸ் 23 ஆம் திகதி வாங்கியிருக்கிறார்; 21 ஆம் திகதிக்கு வாங்கிவிட்டு 23 ஆம் திகதி போயிருக்கிறார் என அத்தனை நடுநிலைகளும், ஊடகவியலாளர் போர்வையில் இருக்கும் திமுக கைக்கூலிகளும் கதறுகிறார்கள்..! அதில் சவுக்கு சங்கர் எனும் செருப்பின் அடியில் ஒட்டியிருக்கும் நாயின் மலத்துக்கு ஒப்பானவனோ; இன்னோவா என காண்பித்து பி.எம்.டபிள்யூவில் சென்று விட்டார் என்று கதறுகிறான்.

 

1) 23 ஆம் திகதி எடுத்த ஈ-பாஸ் 23 ஆம் திகதி போவதற்கானது.  21 ஆம் திகதி எடுத்த ஈ- பாஸ் ஊடக வெளிச்சத்தில் வந்திருக்காது. ஏன் அத்தனை ஈ-பாஸ்களும் வெளிச்சத்தில் வருகிறதா? இதுவரை எத்தனை வந்திருக்கிறது?

 

2) விண்ணப்ப படிவத்தில் SUV/இனோவா என்கிற ஆப்சன் மட்டுமே உள்ளது; பீ.எம்.டபிள்யூ ஒப்ஷன்  இல்லை, மற்றும் ரஜினியின் பி.எம்.டபிள்யூ ஒரு SUV.

 

3) மருத்துவ தேவை என்றால் மருத்துவமனைதான் போகவேண்டும் என்கிற அளவுக்கு இந்த மலப்புழு சவுக்கு சங்கரின் அறிவு உள்ளதா? அட சுமந்துராமன் எனும் தன்னைத்தானே டாக்டர் என்பவருக்கு  அறிவில்லாதது ஆச்சரியம், பாவம் பேஷண்ட்கள். அந்த விண்ணப்ப படிவத்தில் பிசியோதெரபி ஆப்சன் இல்லை;  மருத்துவ தேவை என்கிற  ஆப்ஷன் தான் இருக்கிறது..!


4) 600 கிலோமீட்டர் வரை சென்றுவந்த உதயநிதியிடம் இவர்கள் எவரும் ஈ-  பாஸ்  கேட்கவில்லை...! இத்தனைக்கும் சென்னை பின்கோட்டில் வரும் கேளம்பாக்கத்திற்கு ஈ - பாஸ் தேவையில்லை என்கிறார்கள் நகர வாசிகள், ஆனால் அதற்கு அனுமதி பெற்றிருந்த ரஜினியை மேலும் மேலும் நோண்டுகிறார்கள்..!


இப்படித்தான் கந்துவட்டி என்று சில நாட்களின் முன்பு பெரும் அரசியலை இந்தக் குழு அரங்கேற்றியது. 18 சதவிகித வருட வட்டி என்பது; ஒரு வங்கி, நிதி நிறுவனம் முதலுடன் சேர்த்து அறவிடும் வட்டி விகிதத்துக்கு இணையானது. ரஜினி அந்தப் பணத்தை இலவசமாகவோ, கைமாத்தாகவோ கொடுக்கவில்லை; அவர்கள் தொழில் செய்வதற்கு கொடுத்திருக்கிறார், அதெப்படி தொழில் செய்து மற்றவர்கள் லாபம் பார்க்க இலவசமாக, அல்லது வட்டி இல்லாமல் கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்?


என்னை எடுத்துக்கொண்டாலே என் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் சில லட்சங்களை 3 சதவிகித மாதவட்டி, அதாவது இவர்கள் பாணியில் சொன்னால் 36 சதவிகித வட்டிக்கு வாங்கியுள்ளேன். அதன்மூலம் எனக்கு வருமானம் 20 சதவிகிதம் அதாவது வருடக்கணக்கில் சொல்வதானால்  240 சதவிகிதம் வருகிறது; எப்படி என்னால் வட்டி இல்லாமல் தொழிலுக்கு கடன் வாங்க முடியும்?  அதுவும் ரஜினி பணம் கொடுத்ததோ பைனான்சியருக்கு, அதுகூட மிக மிக குறைந்த மிக நியாயமான வட்டிக்கு, அதைக்கூட ரஜினி மறைக்கவில்லை. ஆனால் இந்த மாபியா கூட்டம் இதனை "கந்துவட்டி" என்றது.

 

இப்படித்தான் தெளிவாக விளக்கம் கிடைத்த பள்ளி வாடகை விடயம், கோச்சடையான் பைனான்ஸ் விடயம், வரி நீக்கம் செய்த விடயம் என ஒவ்வொரு விடயங்களையும் மூளையை கழட்டி பரணில் வைத்துவிட்டு ரஜினியை கேள்வி கேட்பார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள்.

 

ஏன் விஜய் வீட்டுக்கு வருமானத்துறை வந்ததற்கு ரஜினி காரணம் என எத்தனை பெரிய அபாண்டத்தை இந்தக் குழு நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசியது; காவலன் நேரம் பந்துபோல உதைத்து விளையாடிய விஜயை; இப்போது தமக்கு சார்பாக பயன்படுத்தி அவர் ராசிகளை தம் பக்கம்  இழுக்க என்னென்ன விதமான  உருட்டுக்களை இந்த கூட்டம் உருட்டியது என்பதை நடுநிலையாளர்கள் அறியாமலில்லை. இப்படித்தான் பேட்ட vs   விஸ்வாசம் நேரம் அஜித் ரசிகர்களாக களமாடியது  இந்தக் கூட்டம். இனியும் இப்படியான வேலைகளை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இந்தக் கும்பல் செய்யும்.

 

காரணம் இலகுவானதும் வெளிப்படையானதும்; உழைப்பு, திமுகாவிற்கான அவர்கள் போடும் பிச்சைக்கான உழைப்பு. நேரடியாக ரஜினியை எதிர்க்க இவர்களுக்கு எந்த சரியான காரணமும் இல்லை; ரஜினிக்கு பொதுவில் மக்களிடமிருக்கும் "நல்லவர்" என்கிற இமேஜ் இவர்களுக்கு பெரும் தலையிடி, அதை தகர்க்க கண்மூடித்தனமாக கிடைக்கும் சின்னச் சின்ன விடயங்களை எல்லாம் பூதாகாரமாக்கி, தவறான கண்ணோட்டத்தில் ரஜினிக்கு எதிராக பரப்புகிறார்கள் இந்த பிச்சைக்கார மாபியா..! ரஜினி இமேஜை உடைக்கிறார்களாம்...! கருங்கல்லை கரைக்க முடியாது குழந்தைகளா! இதைவிட காமடி இப்படி எல்லாம் செய்தால் ரஜினி அரசியலுக்கு வராமலே போய்விடலாம் என்கிற இவர்களது  நப்பாசைதான்,  இவர்களது தட்ஸ் தமிழ் தளமும் பேரவாவுடன் "ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்" என  பகிர்ந்து சுய ஆர்கஸம் அடையும்.

 

அடுத்து முக்கியமாக தமிழகத்தில் இருக்கும் பாஜக எதிர்ப்பு அலையை பயன்படுத்தி ரஜினியை வீழ்த்தும் திட்டம் இப்போதெல்லாம் சப்பென்று போய்க்கொண்டிருக்கிறது. ரஜினியின் எதிர்ப்பரசியல் இல்லாத மௌனமான  ஆன்மீக அரசியற் போக்கு இவர்களுக்கு இதை நிகழ்த்த உதவியாக இருந்தது. ஆனால் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு, எம்மதமும் சம்மதம் டுவிட்  என ரஜினி இதை இப்போது மெதுவாக உடைக்க ஆரம்பித்திருக்கிறார். தேர்தல் நேரம் இந்த விம்பம் சுக்குநூறாகி;  சிறுபான்மையினரை ஏமாற்றி வாங்கலாம் என்று நம்பியிருந்த 13 சதவிகித வாக்கும் நக்கீட்டு போகும் நேரத்தில் செய்வதறியாது திமுக கூடாரம் விமர்சிக்க ஏதுமற்று தவிக்கும்.

 

ரஜினி ரசிகர்களும், பல பொதுவானவர்களும் இந்தக் கூட்டத்தின் பொய்யுரைகளுக்கு விளக்கம் கொடுத்தாலும் இந்த மாபியா கண்டு கொள்ளப்போவதில்லை; ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் தங்கள் ஆடுவது அழுகுணி  ஆட்டம் என்று; தூங்குபவனை எழுப்பலாம், கொட்டக் கொட்ட முழித்திருப்பவனை?

 

இது இவர்களது திட்டமிட்ட மேலிடத்தின்  கட்டளையின் செயற்பாடு. இதன் பின்னால் பீகேயோ ஸ்டாலினோ நிச்சயம் இருப்பார்கள்..!  ஆனால் பாவம் இந்த முட்டாள்கள் கண்ணை மூடி பால் குடித்தால் உலகத்திற்கு தெரியாதென்று நம்பும் பூனையின் பெரிய அண்ணன்களாக இருக்கிறார்கள்.

 

காலம் மாறிவிட்டது, சமூக வலைத்தளம் உச்ச அளவில் பயன்படுகிறது, இது 1960 களோ, ஏன்  2010 களோ இல்லை, 2020..!  உச்ச அளவில் ஸ்மாட் போன்கள் அனைவரது கைகளிலும் உண்டு. மக்களை ஏமாற்ற முடியாது... சீப்பை எடுத்து ஒழித்து கல்யாணத்தை நிறுத்த முடியாது..!

 

மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள், 2021 சங்கு சத்தம் அறிவாலயத்தில் மட்டுமல்ல பீகே ஆபீஸிலும் ஒலிக்கும், அதுவரை இதுபோல நிறைய கதறவேண்டும் இந்த கொத்தடிமை நக்கிப்பிழைக்கும் எச்ச பிறவிகள்; அதுதான் உண்மையை மக்களிடம் இன்னும் வலுவாக கொண்டுபோய் சேர்க்கும். காரணம் இவர்களது ஒவ்வொரு திட்டமிட்ட அவதூறுக்கும் தகுந்த பதிலடியை காவலர்கள் அள்ளிக் கொட்டுகிறார்கள்; அது நடுநிலையானவர்களிடம் போய் சேருகிறது.

 

ஆனால் போய் சேரும் அளவு போதுமா என்று தெரியவில்லை; காரணம் ப்ளூ டிக் ஐடிகள் இல்லை; பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொரு காவலனும் ஒவ்வொரு  ரஜினி,  அவர்கள் பதிலடியை ஓங்கி அடித்துக்கொண்டே இருப்பார்கள்...!  சில்லறைகள் கதறலுக்கு அவர்கள் பதில்  போதுமானதாக இருக்கும், அதுவே நடுநிலை மக்களை ஓரளவு தெளியவைக்கும்...!  ஆதலால் அவர்கள் இன்னுமின்னும் எதிர்க்க வேண்டும், கதறவேண்டும்; ஆம் தலைவர் சொன்னதுபோல இந்த கண்மூடித்தனமான, நியாமில்லாத, தவறான; மக்களுக்கே "இவனுக்கலேன்னா லூசா" என்கிற அளவிலான எதிர்ப்புக்கள் இன்னுமின்னும் அதிகமாக இவர்களிடமிருந்து வேண்டும்.. இதற்கான பதில் எம்மிடமிருந்து வந்துகொண்டிடுக்கும்..!

 

ஒருநாள் எங்களுக்குப் பதிலாக  ரஜினியே  பதில் சொல்ல தொடங்குவார்...! உங்கள் கேள்விகளும் நீங்களும் அப்போது எந்த டைம் லைனிலும் இருக்க மாட்டீர்கள்; அடுத்த சில மாதங்களில்  தமிழகம் ஆன்மீக ஆட்சியில் இருக்கும்..!

 

கந்தனுக்கு அரோகரா...

உங்களை எல்லாம் சத்தியமா விடவே கூடாது..!

1 வாசகர் எண்ணங்கள்:

Carter said...

நண்பா... செம...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)