Wednesday, July 22, 2020

ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லையாம்..!கந்தர் சஷ்டி கவசம் மீதான அவதூறு வார்த்தைகள் கறுப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சனலால் பரப்பப்படுகிறது. தமிழ் இந்து சமூகம் கொதித்தெழுந்து. வழமைபோல திக, திமுக ஆட்கள் கறுப்பர் கூட்டத்திற்கு நேரடி மறைமுக ஆதரவு கொடுக்கிறார்கள். 


இந்த நிலையில் வழமைக்கு மாறாக தமிழ் இந்து சமூக எதிர்ப்பலை மிக உச்சம் பெறுகிறது. 13 சதவிகித சிறுபான்மை மத சமூகத்தை  மகிழ்விக்க, அவர்கள் வாக்கை பறிக்க பகுத்தறிவு எனும் பெயரில் இந்துக்களை மட்டும் தாக்கி அந்த சமூகங்களை ஏமாற்றி கேவலமான மதப் பிரிவினைவாத அரசியல் செய்து வந்த திராவிட அரசியல் 2020ல் கந்தர் சஷ்டி கவசத்திடம் நொருங்கி போனது. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இந்த மத அரசியல் சித்து விளையாட்டை எம்மதமும் சம்மதம் என வாழ்ந்த, திமுகவின் இந்த மத அரசியலை பெரிதாக கண்டு கொள்ளாத இந்துக்களை விழிப்படைய செய்தது. திமுகவின் மத அரசியல் புரிந்து கணிசமான இந்துக்கள் கொதிப்படைந்தது வெளிப்படையாக திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் என்கிற பேச்சு வலு பெற்றது.

கறுப்பர் கூட்டம் மீது மிகப் பெரியளவில் எதிர்ப்பு வருகிறது. செலிபரிட்டிஸ் முதற்கொண்டு பலரும் கொதித்தெழுந்து பேசுகின்றனர். திமுக  மற்றும் தோழமை சுடுதல்கள் மௌனமாகின்றன. ஆனால் எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது, கறுப்பர் கூட்டம் பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்த 380 கோடியை நக்கிட்டு போகப்போகிறது என திமுக கூடாரம் பதறுகிறது. ரஜினிக்கு பயந்ஙதால் முருகன் வேலால் ஆபத்து என உணர்கிறார்கள்.

வழமையான அதரப் பழசான ராமசாமி சிலை உடைப்பு நாடகம் அரங்கேறுகிறது. பச்சையாக இது கந்தர் சஷ்டி கவச விவகார திசை திருப்பல் என தெரிந்ததால் திமுக மற்றும் தோழமை சுடுதல்கள் தாண்டி யாரும் கண்டு கொள்ளவில்லை. 

இந்த நிலையில் தமக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி என்கிற ஊடகங்களில் உண்மை முகத்தை உரித்து காட்டிய திமுககாரர் வெளிப்படையாக இதை சொல்கிறார். இதையும்  பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

ஸ்டாலினே இரண்டு கைகளையும் தூக்கி சரண்டர் ஆகி 'திமுக இந்து விரோதி இல்லை, அப்படி கனவு கண்டேன்' என இந்துக்கள் காலில் விழுகிறார்.  13 சதவிகிதத்துக்கு ஆசைப்பட்டு பெரும்பான்மை வாக்குகளை இழக்க அவர் தயாரில்லை என்பதை அவர் திடீர் பல்டி காண்பித்தது; ஆனால் பழைய வீடியோக்கள் அவர் புதிய முகத்திரையை விலக்கி அவர் உண்மை முகத்தை காண்பித்தது.

மின் கட்டணம், இட ஒதுக்கீடு என தாண்டிரா ராமா ராண்டிரா ராமா என குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தார். கந்தர் சஷ்டி கவசம் விவகாரம் ஓய்ந்து ஸ்டாலின் டைம் லைன் வரும் நேரம் ரஜினி லம்போர்கினி புகைப்படம் வருகிறது, மறுநாள் கேளம்பாக்கம் பண்ணை வோக்கிங் சிறு வீடியோ வருகிறது.

காய்ந்து போயிருந்த தென் வட இந்திய மீடியாக்கள் இதை தலைப்பு செய்தி ஆக்கின்றன, ரஜினி டைம் லைனுக்கு வருகிறார். இன்று கந்தனுக்கு அரோகரா என கருப்பர் கூட்டத்துக்கு எதிரான டுவீட் போடுகிறார், கூடவே மத நல்லிணக்கம். 

திமுக கூடாரம் கதறுவது கடலில் விழுந்த பழை துளியாகி காணாமல் போக ரஜினி தேசிய அளவில் ட்ரென்ட் ஆகிறார். மீண்டும் கந்தர் சஷ்டி கவசம் டைம் சர்ச்சை  லைன் வருகிறது, திமுக இந்த எதிரி என்கிற எண்ணம் மீண்டும் வலுப்பெறுகிறது. 

ஆனால் பாருங்கள் இன்னும் பல குழந்தைகள் நினைக்கிறார் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என..! 

அரசியலுக்கு வருவது என்பது கட்சி பெயர், சின்னம் அறிவிப்பதல்ல. அது ஒருநாள் நிகழ்வு. "அம்பு எய்வது மட்டும் தான் பாக்கி" என ரஜினி சொன்னதன் அர்த்தம் இதுதான்.

ரஜினி அரசியல் இப்பதான் உச்ச வேகத்தில் ஓட ஆரம்பித்திருக்கிறது. பக்க சார்பு நியூஸ் சானல்கள் மீதான அடிகள் எல்லாம் இந்த குழந்தைகள் புரிய முன் ரஜினி கட்சி ஆட்சிக்கு வந்துவிடும். ஆனால் தலைமைக்கு அது நன்றாக தெரியும், அதனால்தான் ரஜினி புகைப்படத்திற்கே ஐடி விங் கதறுகிறது; கைக்கூலி ஊடகத்தினர், தோழமை சுடுதல்கள் பொருமுகின்றனர்.

இந்த அரசியல் ஆட்டம் இன்னும் வீரியமாக தொடரும், இருந்து பாருங்கள்...!

ரஜினி நேரடியாக அடிக்க ஆரம்பிக்கும் போது திமுக கூடாரம் காலியாகியிருக்கும்.

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)