தலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்து நம்பினேன்; அதுதான் சரியாக இருக்குமென்பதுதான் என் எண்ணமும்.
காரணம் மற்றவர்கள் அனைவரும் அந்த அலையில் காணாமல் போய் விடுவார்கள், எவரும் எடுபட மாட்டார்கள், ஏற்கனவே புளித்து சலித்துப்போன பிஜேபிடோவ் விமர்சனம் உட்பட எந்த விமர்சனமும் மக்களிடம் போய் சேராது, மீடியா முழுவதும் ரஜினி ரஜினி ரஜினி... என இருக்கும்.
ஆனால்... இந்த கொரோனா பெரும் தடங்கலாக வந்துள்ளது, இதன் தாக்கம் எப்படி எந்தளவில் இருக்குமென்று சொல்ல முடியாதுள்ளது, இதன் முடிவுகாலம் கணிக்க முடியாதது. தேர்தலுக்கு முன்னர் பெரியளவில் மாநாடு போட சமூக இடைவெளிப் பிரச்சனைகள் எப்படித் தாக்கம் செலுத்தும் என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளது.
தலைவர் வேறு தனது திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேருங்கள் "பிறகு பார்க்கலாம்" என சொன்னதை வைத்து; "ரஜினி நழுவுகிறார்" என குழப்ப தொடங்கிய எதிர் தரப்பு பாசறை இனி ரஜினி வரமாட்டார் என்கிற பிரச்சாரத்தை கண்மூடித்தனமாக எதிர்வரும் நாட்களில் தொடரும்.
இந்த பிரச்சாரம் இப்போதல்ல பல காலமாக நடப்பதுதான்; ஆனால் இப்போதுக்கும் அப்போதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அப்போது 99 சதவிகிதமான ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை, தலைவர் வருவார் என்பதை கண் மூடித்தனமாக நம்பினர். ஆனால் இன்றய கொரோனா சூழலில் இவர்களது இந்த பிரச்சாரம் எங்கே தலைவர் வந்துவிடாமல் போய்விடுவாரோ என்கிற பயத்தை, சலனத்தை எங்களுக்குள் ஏற்படுத்தலாம். அது காவலர்களை மனதளவில் சோர்வடைய செய்யலாம்.
இந்த வேளையில் தலைவர் நம்பிக்கை தரும் விதமாக, வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக தனது அரசியல் வரவை ஸ்திரமாக எந்த குழப்பம், சந்தேகம், சிலேடை இல்லாமல் சொல்லுவது நல்லதாக தோன்றுகிறது. கட்சி பெயர், கொடி ஒன்றும் இப்போது அறிவிக்க தேவையில்லை. உதாரணமாக "கட்சி பெயரை, சின்னத்தை பதிவு செய்யும் வேலைகள் நடக்கின்றன, விரைவில் மிகுதி விபரங்கள், காவலர்களே போருக்கு தயாராகுங்கள்" போன்ற ஒரு டுவிட் தலைவர் கையால் தட்டப்பட்டால்; அது அத்தனை காவலர்களுக்கும் அசுர பலத்தைக் கொடுக்கும்.
அது மட்டுமில்லாமல் 24*7 எதிரணி நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுத்து டைம் லைனிலேயே தலைவரை பத்திரமாக வைத்திருக்கும், காவலர்களும் தக்க பதிலடி கொடுத்துக்கொண்டிடுப்பார்கள்; ஒரு கட்டத்தில் இந்த நெகட்டிவ் பேச்சுக்கள் பொதுவானவர்கள் வாக்குக்களை தலைவருக்காக மாற்றிக்கொண்டிடுக்கும். அத்துடன் RMM உதவித்திட்டங்களும் அசுர வேகத்தில் ஆர்முடுகும்.
இப்படியே ஆரம்பித்து போனால் ஒருவேளை மாநாடு போட முடியாத சூழல் கொரோனாவால் ஏற்பட்டாலும் தலைவர் கட்சி ஆரம்பித்து தொலைக்காட்சி, இணையம் மூலமாக பேசினாலே தமிழகம் அடுத்த தேர்தலில் வெல்லும், தப்பிப் பிழைக்கும்.
0 வாசகர் எண்ணங்கள்:
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)