Tuesday, August 20, 2019

ரஜினி கட்சி தொடங்கும் வரை பிஜேபி தான்...!

ரஜினி அரசியல் வருகை உறுதியானதும்; ரஜினி மீதான  எதிர்ப்பு என்பது  எதிர்க்கட்சிகளுக்கு, முக்கியமாக இரண்டு சட்டமன்ற தேர்கள் கழிந்தும் இன்னும்  வனவாசமிருக்கும் திமுகவுக்கு பெரும் சவாலாக இருந்தது.

அதனால் அவர்கள் ஆரம்பத்தில்  கையில் எடுத்த ஆயுதங்களான  ரஜினி கன்னடர், வாடகை பாக்கி போன்ற எவையும் கை கொடுக்கவில்லை. மிஸ்டர் கிளீனான ரஜினியை எதிர்க்க வேறு  எந்த அஸ்திரமும் இவர்களுக்கு  கிடைக்கவில்லை. ரஜினி என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கு ஆயிரம் பேப்பர் கட்டிங்குகள் இருந்தாலும்; இப்போது RMM செய்யும் சேவைகள் பெரியளவில் ரீச் ஆகியிருக்கும் நிலையில் அந்த விமர்சனங்களும் உடைபட்டுவிடும் என்று அவர்களுக்கு நல்லாவே தெரியும்.

இந்த எக்ஸ்  பிரபலங்கள், போலி கம்யூனிஸ்டுகள், புரட்ச்சியாளர்கள் என்போர்  பேசும், எழுதும் எவையும் மக்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பதும் அவர்களுக்கு புரியாமல் இல்லை.

இந்த நிலையில் அவர்கள் இறுதியாக, உறுதியாக குருட்டுத்தனமாக, முரட்டுத்தனமா  நம்பும் ஆயுதம்; ரஜினி பிஜேபி எனும் முத்திரை. தமிழக பாஜக எதிர்ப்பு அலையை ரஜினி பக்கம் திருப்பிவிட்டு வெற்றி பெறலாம் என்கிற நப்பாசை.  இந்த டிசைனில் ரஜினி எதிர்ப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கும்..! ஏனென்றால் அவர்களுக்கு வேறு வழி இல்லை.

ஆனால் ரஜினி தான் பிஜேபி ஆதரவாளர் இல்லை என்பதையோ, பிஜேபி ஊதுகுழல் என்கிற விமர்சனத்தையோ இப்போதைக்கு  மறுக்கப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அடுத்த சில மாதங்களுக்கு, அதாவது கட்சி தொடங்கும் வரை இந்த மாதிரியான பேச்சுக்களுக்கு தீனி போடும் விதமாக ரஜினியின் வாய்ஸ் இன்னும்  அமையலாம்.

காரணம் இலகுவானது; ரஜினிக்கு இந்த பிஜேபி என்கிற சாயத்தை வெளுக்க ஒரு பிரஸ் மீட்  போதும், ஒரு மேடை போதும், ஒரு விமான நிலையத்தில் இருந்து வரும்போது கொடுக்கும் செவ்வி போதும். ஆனால் அதை ரஜினி இப்போது செய்யமாட்டார்;அதற்கான நேரம் எதுவென்று ரஜினிக்கு நல்லாவே தெரியும்.

ரஜினி பிஜேபி என்கின்ற ஒற்றைப்  புள்ளியில் எதிரணியினர்  தொங்கிக்கொண்டிருப்பது ரஜினிக்கு மிகப்பெரும் ஆறுதலையும், நின்மதியையும் கொடுக்கும். ஏனென்றால் அதனை உடைக்க மேலே சொன்னது போல ஒரு நிகழ்வு போதும். அனால் அதை இப்போதே நிகழ்த்திவிட்டால்?

1)  எதிரணியில் அடுத்த கட்டம் என்ன என்று ஜோசித்து எதாவது வில்லங்கமாக புதுப்புது ஐடியாக்களை கையில் எடுக்கலாம், அந்த விமர்சனங்களை உடைக்க புதுசாக ஜோசிக்க வேண்டி இருக்கும், திரும்பவும் விமர்சனத்திற்கு பதில் சொல்லுவதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி இருக்கும்.

2) கிட்டத்தட்ட பாசிச போக்குடைய பாஜக ரஜினிக்கு எதிராக எதை வேண்டுமானாலும் நிகழ்த்தலாம்.  அரசியலுக்கு முழுமையாக நுழையாத ரஜினிக்கு அது டபிள் பிரஷர். இப்போதோ பாஜக ரஜினியை தம்மோடு  சாய்க்கலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள், ரஜினியும் அப்பப்போ அவர்களுக்கு  மெல்ல மெல்ல தண்ணி  வைத்துக் கொண்டிடுக்கிறார்.

சட்ட மன்ற தேர்தலுக்கு போதிய காலம் இருக்கும் நிலையில், அடுத்த இரண்டு  படங்களையும் நின்மதியாக முடித்துவிட்டு பரபரப்பான சூழ்நிலையில் ரஜினி என்றி இருக்கும்..!  அந்த நேரத்தில் ரஜினி தான் பிஜேபி இல்லை என்பதை உடைத்தெறியும்போது திமுக போன்ற எதிரணிக்கு விமர்சிக்க ஏதுமின்றி "அந்த வாடகை பாக்கி" என தெய்வத் திருமகள் விக்ரம்  சொன்ன "நிலா" போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்..! அந்த நேரத்து பிஜேபி, முக்கியமாக தமிழக பாஜக கதறியே செத்துவிடும்.

இது நடக்குதா இல்லையான்னு மட்டும் பாருங்க..!

அடேய் குழந்தைகளா உங்க அரசியல் விமர்சனம், ட்ரோல், டிபேட், கதறல்  எல்லாத்துக்கும் ரஜினி அப்பன்டா...!

2021 வரை காத்திருப்போம்..!

1 comment:

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)