Thursday, May 31, 2018

ரஜினி......!

Rajinikanth - Most powerful Icon in Tamil Nadu என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் சுயலாப வன்முறையாளர்கள் கைகளால் நாசம் செய்த பிற்பாடு திமுக செயற் தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசியல் கட்சி தலைவர்கள் சீமான், கமல்ஹாசன் என பல அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்றனர். ஆனால் அவர்கள் சந்திப்பு சம்பந்தமான செய்திகள் எந்தவித பரபரப்பையும் விவாதத்தையும் எதிர்ப்புக்களையும், வரவேற்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.

அதே நேரம் ரஜினி தூத்துக்குடி நாளை போகப் போகிறார் என்கிற செய்தி வந்ததுமே ஊடகங்களும், நெட்டிஷன்களும் பரபரப்பாகிவிட்டார்கள். ரஜினி சார்பாகவும், எதிராகவும் கருத்துக்கள் காரசாரமாக முன்வைக்கப்பட்டது. ரஜினி மறுநாள் தூத்துக்குடி செல்ல ஆரம்பித்தது முதல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினி மட்டும்தான் பேசு பொருள்.

ரஜினி மிகுந்த வரவேற்புடன் மக்களால் வரவேற்கப்பட்டார். இந்த வரவேற்பு சமூகத்தள ரஜினி எதிர்ப்பாளர்கள் நினைத்திராதது. சமூக வலைதள உலகுக்கும் நிஜ உலகுக்கும் நிறையவே வேறுபாடு என்பது மீண்டும் நிரூபனமாகியது. தொலைக்காட்சிகள் முண்டியடித்து ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் செய்துகொண்டிருந்தனர். இடையில் அரசியல் விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களிடம் ரஜினி பயணம் பற்றிய கருத்துக்கள் காலத்தில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த ஆட்சிக் கனவில் உள்ள திமுக; மாதிரி சட்டமன்றம் என்று செட் போட்டு ஏதோ சீடியசாக காமடி பண்ணிக்கொண்டு இருந்தார்கள், ஆனால் எவரும் அதை கண்டு கொள்ளவேயில்லை. அத்தனை ஊடகங்களுக்கும், ரஜினியை விரும்பும், எதிர்க்கும் அத்தனை சமூகத்தளத்தினருக்கும் பேசுபொருள் ரஜினி மட்டுமே.! ரஜினி பேசு பொருளாகும் பட்சத்தில் தமிழகத்தை பொறுத்தவரை வேறு எவரும் பெட்டி செய்திக்குகூட முக்கியமில்லாமல் போய்விடுவார்கள், அது ஸ்டாலினோ, கமலோ, எவரோ. Yes Rajnikanth is the most powerful Icon in Tamil Nadu.

ரஜினியை அரசியல் ரீதியாக எதிர்க்கவேண்டிய தேவை அத்தனை தமிழக அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. நாம் முன்னம் பலதடவை சொன்னதுபோல ரஜினியால் கூட்டணி வைக்காமல், மற்றய கட்சிகளை விமர்சிக்காமல் தன் அரசியலை மக்களுக்கு சொல்லி வாக்கு கேட்க முடியும், இப்படி ஆரோக்கியமான மொடேர்ன் அரசியல் செய்ய வேறு எந்த அரசியல் கட்சிக்காவது திராணி இருக்கிறதா?

அத்தனை கட்சிகளுக்கும் ரஜினியை விமர்சிக்கவேண்டும், கீழ் இழுக்க வேண்டும். ஏன் எனில் ரஜினி உயரத்திற்கு தம்மால் கனவிலும் வரமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அதனால் தான் ரஜினியை தம்கூட கீழே இழுக்க முயற்சி செய்கிறார்கள். சூரியனை பார்த்து நாய் குரைத்தால், சூரியன் நாயிடம் இறங்கி வந்து பதிலுக்கு குரைக்குமா என்ன!!

ரஜினியை ஆளும் வர்க்கத்தின் அடியாளாக, பிஜேபி பினாமியாக காட்ட கடும் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் ரஜினி இவர்களுக்கு பயந்து தன்னிலையை மாற்றவில்லை, தவறு என்றால் அதை தைரியமாக சுட்டிக்காட்டும் தன் சுபாவத்தை ரஜினி எவருக்காகவும் மாற்றவில்லை. அதிமுக அமைச்சர் முன்னிலையில் சொடக்குப் போட்டு எதிர்த்து பேசியவர் ரஜினி, ஜெயலலிதா முன்னிலையில் சிவாஜி கணேசன் பெயரை வைக்காதது தவறு என சுட்டிக்காட்டியவர், அஜித் மிரட்றாங்க என சொன்னபோது கருணாநிதி அவர்கள் அருகினிலிருந்து எழுந்து தனி மனிதனாக கைதட்டியவர் ரஜினி.

Yes, போலிஸை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏழு கோடி மக்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பவர்களை சாதரண சமூக விரோதிகள் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதில் ரஜினி துளியளவும் மாறவில்லை, எவருக்காகவும், எந்த விமர்சனத்திற்காகவும் பயந்து அவர் உண்மையை ஜதார்த்தத்தை சரியானதை பேச தவறியதில்லை. இதுதான் ரஜினிகாந்த். அந்த கோபம், உண்மை, நேர்மை, சொல்ல நினைத்ததை பயப்படாமல் சொன்ன தைரியம்தான் ரஜினிகாந்த்.

ஆனால் இந்த ரஜினியை மக்களிடம் ஊடகங்கள் எவ்வாறு கொண்டு செல்கிறார்கள்? ஊடகங்கள் மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் கூட ரஜினிக்கு எதிராக பெருமளவில் எதிரான தோற்றப்பாட்டை வெளிக்காட்ட பெருமளவில் சதித்திட்டம் நிகழ்த்தப்படுகிறது. ரஜினி சொன்னதை திரித்து; முன்னால், பின்னால், நடுவில் கத்தரித்து தவறாக ரஜினியை மக்களிடம் கொண்டு செல்ல கடும் பிரயத்தனம் செய்கிறார்கள்.
ஊடகங்களை பொறுத்தவரை ரஜினி அவர்களுக்கு முரட்டு தீனி. ரஜினி அளவுக்கு டீஆர்பி, சேர்க்குளேஷன் வேறு எவருக்கும் இந்திய அளவில் கூட இல்லை, அதனால்தான் ரஜினி வீட்டு வாசலில் ஊடகங்கள் எந்நேரமும் காத்துக் கிடக்கின்றார்கள். ரஜினி இவர்களை மதித்து அவ்வப்போது கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை தவறாக அர்த்தப்படுத்தி மக்களிடம் சேர்த்து, அதற்கு விவாதம் செய்வதென ஊடக தர்மம் மீறப்படுகிறது.
உதாரணமாக சொல்வதானால் இணையத்தில் தட்ஸ் தமிழ், விகடன் (அச்சிலும்), தொலைக்காட்சிகளில் நியூஸ் 7, பத்திரிக்கையில் தினகரன் என திமுக சார்பான இந்த ஊடகங்களை சொல்லலாம், இப்படி பல பெய்ட் & சுயலாப ஊடகங்கள் ரஜினிக்கு எதிராக பெருமளவில் மும்முரமாக இயங்குகின்றன.

அதிமுக, திமுக போன்றன பெரும் ஊடக பலமுள்ள கட்சிகள், தங்கள் எதிரிகளை வெல்ல சொந்த /விலைபோன ஊடகங்களை பயன்படுத்தி பழக்கப்பட்டவை. Yes, விஜயகாந்த்தை கூட ஊடகத்தை வைத்தே இல்லாமல் செய்தார்கள். விஜயகாந்த் கோபத்தை தூண்டி அவரை தன்னிலை மறக்க செய்து காமடியாக்கினார்கள்.
நேற்று ரஜினியை கூட இந்த டெக்னிக்கில்தான் அணுகினார்கள். திரும்ப திரும்ப ஒரே கேள்வியை கேட்டு உளவியல் ரீதியாக ரஜினியை கோபப்படுத்த முயற்சி செய்தார்கள். Yes அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் ரஜினி அரசியல் என்பது நேற்றய ஒருநாள் பேட்டியல்ல, ரஜினியும் விஜயகாந்த் அல்ல, போகப்போக ரஜினி பற்றி தெரியும் ராஜாக்களா.!

அடுத்து சமூக வலைதள ரஜினி  எதிர்ப்பாளர்களை நோக்கினால், Blue tick டுவிட்டர் ஐடிகள், Trackers, நிறைய பலோவர்ஸ் இருப்பவர்கள் என பெருமளவில் ஒரு கூட்டம் பணத்திற்காக ரஜினிக்கு எதிராக கொம்பு சீவப்பட்டு களமிறக்கி விடப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ரஜினி பற்றிய செய்திகள், ரஜினியின் டுவீட், பேட்டி, பேச்சு போன்னறவற்றை மக்களிடம் தவறாக கொண்டு சேர்ப்பது; பொதுப் பிரச்சனைகளில் ரஜினியை கோர்த்து விடுவது என நுண்ணரசில் மூலம் ரஜினி எதிர்ப்பை திட்டமிட்டபடி அரங்கேற்றுகிறார்கள்.

சமூக வலைதளங்களில் அதிகளவு பலோவர்ஸ் உள்ளவர்களில் கணிசமானவர்கள் திமுக கட்டுப்பாட்டில் உள்ளதால் ட்ரென்டிங்கள், ரீட்டுவீட்கள் கூட அவர்கள் கட்டுப்பாட்டில்தான். இதன்மூலம் ஆட்சியை பிடிக்க முடியும் என்று கனவு காண்கிறார்களோ என்னவோ!! ரஜினிக்கு எதிரான ட்ரெண்டிங் என்றால் திமுக, அதிமுக, பாமக, விசி, கம்யூனிஸ்ட், சீமான், கமல், தினகரன் என அத்தனை அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒன்று கூடிவிடுவார்கள். பயம், ரஜினியை இல்லாமல் செய்யாவிட்டால் தாம் அனைவரும் இல்லாமல் போய்விடுவோம் என்கின்ற பயம்.

அதனால் தான் பல விடயங்களை மறைத்து தமக்கு சாதகமாக விடயங்களை மட்டும் ட்ரென்ட் பண்ணுகிறார்கள். 

ரஜினி தூத்துக்குடி மருத்துவமனை சென்றபோது பெரும் விழுக்காடு மக்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தார்கள், நீங்கள் முதல்வர் ஆகினால்தான் எங்களுக்கு விடிவு என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட்டுவிட்டு ஒருவன் திட்டமிட்டபடி "யார் நீங்கள்"என கேட்டதை ட்ரென்ட் செய்கிறார்கள். இப்படித்தான் தூத்துக்குடி வன்முறையாளர்கள் வீடியோக்கள் அதிகம் பகிரப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

சிந்தித்து பாருங்கள், ரஜினியை பெருமளவில் மங்கள் வரவேற்ற எந்த வீடியோவும் ட்ரென்ட் ஆகல, விகடன் உட்பட எந்த ஊடகமும் அதுபற்றி பேசவில்லை. ஆனால்  திட்டமிட்டு ஒருவரை செட்பண்ணி நீங்கள் யார் என கேட்டது உலக அளவில் ட்ரென்ட் செய்யப்பட்டது. (அந்த நபர் சீமானுக்கு நெருக்கமான, தேசியக்கொடியை எரித்தவன் நண்பன் எனறால் மிகுதியை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்)  பலதரப்பட்ட ரஜினி எதிர்ப்பாளர்கள் 5000 பேர் ஆளுக்கு 20 டுவிட் போட்டாலே லட்சம் ட்ரென்ட் ஆகிவிடும். இந்த ட்டென்டிங் எந்த  அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாது, ஆனாலும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் ரஜினியை கீழிறக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள்.

ரஜினிக்கு எதிராக எப்படி சமூக வலைதளங்களில் எதிர்ப்பரசியல் செய்ய பல கட்சிகள் கூட்டு எதிர்ப்பு உள்ளதோ; அதேயளவு  ஆதரவும் ரஜினிக்கு உண்டு, சமீப காலமாக ரஜினி ரசிகர்கள் பலர் ஆக்டிவாக இயங்க ஆரம்பித்துள்ளார்கள். திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களை தகுந்த ஆதாரங்களுடன், வலுவான தர்க்கங்களுடன், ஏன் இன்னும் சொல்லப்போனால் அவரவர்க்கு ஏற்ற தகுதியான பாஷையில் தடாலடியாக ரிப்ளே குடுத்து வருகிறார்கள்.
சரி இந்த ஊடகங்களும் சமூகத்தள எதிர்ப்பாளர்களும் ரஜினியை எப்படி திரித்து மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள் என்று பார்த்தால், நேற்றய சம்பவத்தில்......

*ரஜினி மக்கள் போராட்டம் மகத்தானது என்றார், மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் சீர்குலைத்து விட்டதாக சொன்னார். இவர்கள் போராடிய மக்களை ரஜினி சமூக விரோதிகள் என்கிறார் என வியாபாரம் செய்கிறார்கள்.

*ரஜினி எப்போதும் கன்டினியூட்டியாக பேசுபவர், அன்று போலிஸை தாக்கியதை கண்டித்தவர் இங்கும் அதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார். ரஜினி ஆளும் வர்க்கத்தின், பாஜகவின், குருமூர்த்தியின், அதிமுகவின் குரல் என்கிறார்கள்;  போலிஸின் செயற்பாட்டை மிருகத்தனமானது என ரஜினி வீடியோ பதிவு செய்து டுவிட் செய்துள்ளார், தமிழக அரசே இதற்கு முழுப் பொறுப்பு எனச் சொல்லி இருக்கிறார், ஆனால் இவர்கள் இதனை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.  அனைத்து தரப்பிலும் பிளையை சுட்டிக்காட்டிய ரஜினியை ஒரு பக்கம் மட்டும் வெளிக்காட்ட பார்க்கிறார்கள். காரணம் சிம்பிள், ரஜினியை பாஜக குரல் என நிறுவ வேண்டிய தேவை இவர்களுக்கு அவசியம், காரணம் அதை தவிர விமர்சிக்க ரஜினியிடம் வேறேதும் இவர்களுக்கு இல்லை.

அதே நேரம் ரஜினி அவர்களும் தான் பாஜக குரல் இல்லை என்பதை வலுவான நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு, இதனை அவசியம் செய்ய வேண்டியது அரசியல் ரீதியாக அவசியம்.

* அடுத்து போராட்டம் பற்றிய ரஜினியின் கூற்றையும் புரிந்து கொள்ளாமல் காந்தி போராடா விட்டால் சுதந்திரம் வந்திருக்குமா என்கிறார்கள்.  எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் போராட்டம் என்பதே வலுவிழந்து விடும், எவரும் முதலிட விரும்ப மாட்டார்கள், விவசாயம் இல்லாத நிலையில் தொழில் வாய்ப்பும் இல்லையென்றால் எதிர்கால இளைஞர்கள் வாழ்க்கை கஷ்டமாகிவிடும் என அவர் முற்போக்காக ஜதார்த்தம் பேசுகிறார். மூடிய ஆலையை திறக்க நீதிமன்றம் போனால் அவர்கள் மனிதர்களே இல்லை என்கிறார், இவர்களோ அவரை வலதுசாரி என்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு போராட்டம் பண்ணி பிரிவினை ஏற்படுத்த, போராட்டங்களில் சமூக விரோதிகளை நுழைத்து கலவரம் செய்து அதிகாரத்தால் அப்பாவிகள் உயிர் குடிக்கவென; பல தரப்பு தயாராக இருப்பது நேர்மையாக தமிழக அரசியலை அணுகுவோருக்கு புரியும், இதனை ஆரம்பத்தில் இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் தமிழகம் சுடுகாடாகும் என்பதில் ஏது சந்தேகம்? இதை சொன்னால் ரஜினி வலதுசாரி, பாஜக ஏஜன்ட் என்கிறார்கள்.

இது நேற்றைய சாம்பிள், இதுதான் தொடரப் போகிறது. ரஜினி இணைய காவலர்களும், நடுநிலை, ரஜினி சார்பு ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும், விலைபோகா அரசியல் விமர்சகர்களும் சேர்ந்தே இந்த சதியை முறியடிக்க வேண்டும்.

தமிழக அரசியலில் இனிமேல் திமுக, அதிமுக போட்டி இல்லை. ரஜினி vs நொன் ரஜினி அவ்ளோதான். ரஜினிக்கு எதிரான வாக்குகள் பல விடயங்களைகட்சிக்கும் பிரிந்து போகும், ரஜினி வழி இலகுவாகும். ரஜினி முதல்வர் ஆவதை கூட்டு களவாணிகளான எதிர்த்தரப்பே நிகழ்த்திக் காட்டப் போகிறார்கள்.

ரஜினி அரசியலில் நடிக்கவில்லை; உண்மையை, மனதில் பட்டதை, எவரும் பேச தயங்குவதை எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் பேசுகிறார், பேசுவார். ஏனென்றால் அவர் ரஜினிகாந்த். ஜேவையும் கருணாநிதியையும் கண்டு பயப்படாதவருக்கு மோடி ஒரு பொருட்டே அல்ல. முன்னர் சொன்னது போல ரஜினி மோடியை மட்டுமல்ல ராகுல்காந்தயை கூட இலகுவில் எதிர்க்க மாட்டார். காரணம் மத்திய அனுசரணை இன்றி நதிநீர் இணைப்பு தொடக்கம் முதலீடுகள் வரை மாநிலத்தில் சாத்தியமில்லை. ரஜினி எதிர்ப்பரசியல் செய்ய வரவில்லை, எதிர்கால தமிழகம் செழிப்புற, இளைஞர்கள் வளம்பெற வருகிறார், வெல்வார்.

Yes, ரஜினி முதல்வர் ஆவது நிச்சயம்.