இந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எழுதுகின்றேன்; பதிவு ரொம்ப நீளமாக இருக்கும்; பார்த்து உள்ளே காலை வையுங்க l :p
கடவுள் என்றால் யார்? அவர் இருக்கின்றாரா? இல்லையா? கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் யார்? அவர் எங்கு இருக்கின்றார்? அவர் தன்னை வழிபடச் சொன்னாரா? ஏன் இத்தனை மதங்கள்? மதங்களால் ஏன் இத்தனை சண்டைகள்? கடவுள் இருந்தால் ஏன் இயற்கை அழிவுகளில் கோரச்சாவுகள்? ஏன் உலகில் அநியாயங்கள், அக்கிரமங்கள்? கடவுளுக்கு உருவம் உண்டா? கடவுள் இல்லை என்றால் பிரபஞ்சத்தை படைத்தது யார்? கடவுள் இருந்தால் எதற்கு அவருக்காக பூமியில் முகவர்கள்? இப்படியாக எண்ணற்ற கேள்விகள் கடவுளை மையப்படுத்தி கேட்க்கப்பட்டு வந்தாலும், இவை எவற்றுக்கும் விடை என்கின்ற ஒன்று இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை!!
கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்கின்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் ஆண்டாண்டுகாலமாக விடைதேடி கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்கின்ற முடிவை எடுத்திருக்கின்றார்கள்!! காரணம் முட்டையின் கோதில் இருக்கும் ஒருவகை புரதம் கோழியில் இருந்துதானாம் முட்டைக்கு கிடைக்கமுடியும், புறத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பில்லையாம். பல ஆண்டுகளாக ஆராயந்துகண்டு பிடித்த முடிவுக்கு அடுத்த நொடியில் கேட்க்கப்படும் கேள்வி "அப்படிஎன்றால் கோழி எதிலிருந்து வந்தது?" என்பதுதான்!!! இது ஒரு சாதாரண எடுத்துக்காட்டு; விடை தெரியாத கேள்விகள் ஏராளம்? அதுமட்டுமல்ல இன்னும் பிறக்காத கேள்விகளே மில்லியன் கணக்கில் தோன்றாதிருக்கலாம்!!!
நம்பிக்கை உள்ளவன், நம்பிக்கை இல்லாதவன், சந்தேகத்தில் உள்ளவன் என மூன்று பிரிவுகளாக இந்தவிடயத்தில் மனிதர்கள் பிரிந்து நின்றாலும் இவர்களில் முதல் இருவரிடத்திலும் பெரும்பாலும் தங்கள் பக்கத்து கருத்துக்கள்தான் சரி என்கின்ற எண்ணமும், விவாதமும் காணப்படும்!!! யுகம் யுகமாக சண்டை பிடித்தாலும் தீர்வுக்கான முடியாத விடயத்தை; தங்கள் கருத்துக்கள் நியாயப்படுத்தும்/தீர்த்துவிடும் என்கின்ற நம்பிக்கை இவர்களுக்கு!!! அது நம்பிக்கையா அல்லது அவர்களே அவர்களை ஏமாற்றும் செயற்பாடா என்பது புரியவில்லை!!
நாம் வாழும் பூமி ஆனது சூரிய குடும்பத்தின் ஒரு கோள், சூரிய குடும்பம் என்பது அதனை ஒத்த பல இலட்சம் குடும்பங்களை கொண்ட அண்டத்தின்(பால் வெளி) ஒரு நடுத்தர குடும்பம்!!! பல லட்சம் அண்டங்களின் சேர்க்கைதான் பிரபஞ்சம்!!! பிரபஞ்சமானது நொடிக்கு நொடி ஆர்முடுகளோடு அதிகரித்துக்கொண்டே செல்லும் கற்பனைக்கு அடங்காத முடிவில்லாத ஒரு பயணம்!! பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்பது விஞ்ஞானத்தின் கணிப்பு!! பூமியில் மனிதனின் தோற்றம் 6000 தொடக்கி 4 மில்லியன் ஆண்டுகள் வரை என பல இடங்களில் முன்னோக்கி சொல்லப்பட்டாலும் சரியான அளவுகோள் இல்லை!!
கடவுளின் பெயராலும், டார்வினும் அனுமானத்தாலும் பலதரப்பட்ட பதில்கள் சொல்லப்பட்டாலும் உயிரினங்களின் தோற்றம், அதில் குறிப்பாக மனிதனின் தோற்றம் பற்றிய கேள்விகளுக்கான விடை இன்னமும் கேள்விகளாய்த்தான்!!! கேள்விகளும், சந்தேகங்களும்; அனுமானங்களாகவும், எடுகோள்களாகவும் எடுத்துக் கொளப்படுகின்றதே அன்றி எவற்றுக்கும் திருப்தியான
ஆதாரங்கள் இன்னமும் இல்லை; பூமியின் ஆதியையே அறிய முடியாமல் விஞ்ஞானம் திண்டாடுகின்றது!! பிரபஞ்சத்தின் ஒரு சிறு துரும்பையே(பூமி) முழுமையாய் அறிய முடியவில்லை!!!
பிரபஞ்சம் எப்படி தோற்றம் பெற்றது என்பதை விஞ்ஞானம்; பெருவெடிப்பு (Big Bang) என்னும் சம்வம் மூலம் நிகழ்ந்ததாக சொல்ல முனைகிறது!! அதாவது கற்பனை பண்ணமுடியாத அளவு அடர்த்தியுள்ள, சூரியனைவிட பல மில்லியன் மடங்கு வெப்பமுடைய, ஒரு சில மில்லி மீட்டர்கள் விட்டத்தை உடைய மிகச்சிறிய நெருப்பு குழம்பு ஒன்று திடீரென வெடித்ததாலே உருவாகியதுதான் பிரபஞ்சம்!!! அந்த வெடிப்பிற்கான காரணத்தை இன்னமும் அறிவியல் அனுமானிக்கவில்லை!!! அதே நேரம் பெருவெடிப்பின் பின்னர் பிரபஞ்சம் ஆர்முடுகலோடு கற்பனை பண்ண முடியாத வேகத்தில் வளர்ந்துகொண்டே செல்கினது என்றும் சொல்கின்றது!! அதே நேரம் பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமான அந்த சிறிய நெருப்பு குழம்பு எப்படி தோன்றியது என்பதற்கான எந்த அனுமானத்தையும் விஞ்ஞானம் இன்னமும் சொல்லவில்லை!!
எப்படி அது சாத்தியமாயிற்று? ஒருவேளை அறிவியல் அனுமானிப்பதுபோல மிகப்பெரும் சக்தியான நெருப்பு குழம்புதான் ஆதி என்றால், அந்த ஆதியை உருவாக்கியது யார்? கடவுளா? இல்லை வேறு ஏதாவதா? விடை காணமுடியாத கேள்வி இது!!! இன்று செவ்வாயில் ஜீவராசிகள் வாழ்ந்த தடம் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது, ஒருவேளை அங்கு உயிரினங்கள் வாழ்ந்த காலங்களில் பூமி யாருமற்ற ஒரு கோளாக கூட இருந்திருக்கலாம்!!! அறிவியல் ஓரளவிற்கேனும் தொட்டது சூரிய குடும்பத்து எல்லைகளைத்தான். இன்னும் எத்தனை எத்தனை சூரிய குடும்பங்கள்? அவற்றில் எத்தனை எத்தனை கோள்கள்? அவற்றுக்கு எத்தனை எத்தனை துணை கோள்கள்? கற்பனைக்கும் எட்டாத எண்ணிக்கை அவை!! அவற்றின் நிலை என்ன? அங்கு உயிரினங்க இருக்குமா? முன்னர் இருந்திருக்குமா? அப்படி இருந்தால்/இருந்திருந்தால் ஒருவேளை அவை 6 அறிவு மனிதனை விட உசத்தியானவையா? என கேள்விகளும் சந்தேகங்களும் விரிந்துகொண்டே போகின்றன!!!!
இவை எல்லாவற்றையும் அறிந்தவர் யார்? இவை எல்லாம் தானாக இயங்குவதாக எடுத்துக் கொண்டாலும்; அவை இயங்குவதற்கான பொறிமுறை எப்படி/யாரால்? உருவாக்கப்பட்டது!! (அதாவது இவற்றுக்கெல்லாம் ஆதி) இப்படி தெரியாத கோடிக்கணக்கான கேள்விகளும் சந்தேகங்களும்; கற்பனையில் அடங்காதா பிரபஞ்சம் என்கின்ற மீபெரும் அதிசயத்தில் இருக்கும்போது எப்படி முழுமையாக அறியாத ஒன்றை மறுக்க முடியும்? அதாவது எப்படி கடவுள் இல்லை என்று சொல்ல முடியும்? சிறு உதாரணம் சொல்வதானால்; ஒரு மிகப்பெரும் பாலைவனத்தின் மணற் சமுத்திரத்தில் ஒரு 'குண்டு மணி' இருக்கின்றதா? இல்லையா? எனக் கேட்டால்; இல்லை என்று பதில் சொல்வதை ஒத்தது கடவுள் மறுப்பு!!!! எலாவற்றையும் அறிந்தவானால் மட்டும்தான் ஒன்றை இல்லை என்றோ, இருக்கின்றது என்றோ சொல்ல முடியும், மற்றவர்கள் சொல்வதெல்லாம் அவர்களது எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி நிதர்சனமானவை அல்ல!!!!
அதேபோல் கடவுள் இருக்கின்றார் என்று அடித்து சொல்பவர்களும் இதே வகையில்தான் அடங்குவார்கள்!!! எப்படி காணாத ஒன்றை இல்லை என்று சொல்ல முடியாதோ; அதே போலவே அதனை உள்ளது என்றும் சொல்ல முடியாது!!! கடவுளை உணர்ந்ததால், நம்புவதால், மத சாட்சியங்களால் கடவுளை இருக்கின்றார் என முன்னிறுத்துபவர்களும் மேற்சொன்னது போல் அவர்களது தனிப்பட்ட எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி நிதர்சனமானவை அல்ல!! இப்படி கடவுளை இருக்கு என நம்புபவர்களை ஆத்திகர்கள் என்கின்றோம், நம்பாதவர்களை நாத்திகர்கள் என்கின்றோம்!!!
ஆனால் இதில் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் நாத்திகர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவாளர்கள் என்பதுதான்!!! இன்று தமக்கு தாமே அடைமொழி சூட்டும் நடிகர்களுக்கும் இந்த பகுத்தறிவாளர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை!!! உண்மையான பகுத்தறிவாதியால் கடவுளை உண்டென்றும் சொல்ல முடியாது, கடவுளை மறுக்கவும் முடியாது!!! கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. - தந்தை பெரியார். இவர் வேண்டுமென்றால் சில மூட நம்பிக்கைகள் விடயத்தில் பகுத்து அறிந்திருக்காம், கடவுள் விடயத்தில் என்னை பொறுத்தவரை இவர் ஒரு பகுத்து'அறியா'வாதி!!! இவரை பின்பற்றும் பலரும் இன்றைக்கு பகுத்தறிவு என்பதை கடவுள் மறுப்பு என நினைத்து தொடர்வது வேடிக்கை!!!
ஒப்பீட்டளவில் நாத்திகர்களைவிட ஆத்திகர்கள் உலகில் மிக மிக அதிகம்!!! அவர்கள் வணங்கும் கடவுள்களின் வடிவங்களும் அதிகம், அந்த வடிவங்களுக்கான கோவில்கள் மிக மிக மிக அதிகம். விடை கிடைக்காதா ஒன்றை உண்டென்று நம்புபவர்களும், அதனை ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்களும் அதிகமாக உளார்கள் என்றால் அதற்க்கு என்ன காரணம்? இவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களா? இவர்கள் ஏதுமறியா முட்டாள்களா? இல்லை!!! படிப்பில், விளையாட்டில், அரசியலில், கலையில் விஞ்ஞானத்தில் சிகரம் தொட்ட பலரும் கடவுளை நம்புகின்றனர்!!! அப்படியானால் அவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலிலும், நாத்திகம் பேசுபவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள் பட்டியலிலும் அடங்குவார்களா!!!
அப்படி என்றால் அறியப்படாத ஒன்றை (கடவுளை) அதிகமானவர்கள் ஏன் ஏற்றுக்கொண்டனர்? கடவுள் என்பவர் மனிதர்களுக்கு அவசியமா? என்னை கேட்டால் அவசியம் என்பதுதான் பதில்!!!! அது எந்த மதமாகட்டும், எந்த கடவுள் ஆகட்டும், கடவுள்/ஒருசக்தி நம்பிக்கை அவசியமானது!!! மதத்தின் பெயரை சொல்லி இன்று பல சண்டைகளும், குழப்பங்களும், படுகொலைகளும் நிகழாமல் இல்லை!!! அப்படி இருக்கையில் எதற்கு கடவுளுக்கு ஆதரவு என்கின்ற கேள்வி எழலாம்!! கடவுள் பெயரால் இல்லாவிட்டாலும் பூமியின் சமநிலையை பேணும் பொருட்டு அழிவுகள் வேறு வடிவங்களில் நிகழத்தான் போகின்றது, மதத்தின் பெயராலான அழிவுகளும் இவ்வாறான ஒரு சமநிலைக்கான காரணியே!!! அதற்காக மத கலவரங்கள், வன்முறைகள், கொலைகளை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம், இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுவதாயின் இப்படியான பார்வையிலும் பார்க்கலாம் என்பதற்காக சொன்னதுதான் இது!!
ஒருவேளை மதங்கள் இல்லாமல் மனிதன் வளர்ச்சி அடைந்திருந்தால் இன்றைய நாகரிக வளர்ச்சி எட்டமுடியாத ஒன்றாககூட இருந்திருக்கலாம்!!! ஒவ்வொரு நாகரிக வளர்ச்சியும் ஏதாவதொரு மதத்துடன் பின்னிப்பிணைந்து ஏற்பட்டதுதான்!!! மற்றும் மதங்கள் போதித்த போதனைகளில் அதிகமானவை ஆதி மனிதனை நல்வழிப்படுத்தின என்பதையும் மறுக்க இயலாது!!! சில போதனைகள் அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம், அதிகாரத்துக்கு வழி கோலியதையும் மறுப்பதற்கில்லை, சில நேரங்களில் மத நெறிப்படுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் இதைவிட அவலமான ஆடக்குமுறை/அடிமைப்படுத்தல் இருந்திருக்கலாம்!!! இன்றைக்கும் கடவுளுக்கு/மனசாட்சிக்கு பயந்துதான் பெரும்பான்மையினர் தீமைகளை, அநியாயங்களை செய்ய பின்னிற்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது!!!
மனசாட்சி என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சிலர் நினைக்கலாம், நீங்கள் கடவுளை மறுத்தாலும் உங்கள் குடும்பம், சமூகம் உங்களுக்கு பிறந்த நாள் முதல் இந்தக்கணம் வரை ஊட்டி வளர்த்த தாக்கம்தான் மனசாட்சி, அதனை சமூகத்தில் விதைத்தது சமூகம் சார்ந்த மதத்தின் அடிப்படை கோட்ப்பாடுகள்தான்!! இவை அடிப்படையில் மதங்கள் மனிதர்களில் செலுத்தும் நேர்மறையான தாக்கங்கள். இவை தவிர்த்து மதங்களும், கோவில்களும் மனிதர்களுக்கான் அவசியத்தை ஜாதார்த்த பார்வையில் உணரலாம். என்னதான் தன்னம்பிக்கை பற்றி பேசினாலும் வாழ்வின் பல சந்தர்ப்பக்கில் 99 % பேர் தன்னம்பிக்கையையும் தாண்டிய ஒரு சக்தியை துணைக்கு தேடுகின்றனர், அதுதான் கடவுள், அதற்க்கு அவரவர் சார்ந்த மதங்களினால் வடிவம் கொடுக்கப்படுகின்றது!!!
இதற்குமேல் தன்னாலும், யாராலும் எதுவும் செய்யமுடியாதென்கின்ற சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை கடவுள்!!! மனதின் வலிகளை, துன்பங்களை, இழப்புக்களை, வெறுப்புக்களை, இயலாமைகளை சொல்லி புலம்பவும்; மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்திக் கொள்ளவும்; மனதின் அமைதிக்கும் கடவுள்கள்/கோவில்கள் எவ்வளவு தூரம் மக்களுக்கு முக்கியம் என்பதை கணனியின் முன்னிருந்து பகுத்தறிவாதி முகமூடி போடுபவர்களுக்கு புரியாது!!! ஒரு கோவிலுக்கு 50 பேர் வருகிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள், தேவைகள், வேண்டுதல்கள் அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது!!! அல்லது நல்லது நடக்கவேண்டும், கெட்டது நடந்துவிடக்கூடாது என்கின்ற அவாதான் அன்றி வேறல்ல!!!
கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்கின்ற இரட்டை மனநிலையில் உள்ளவனும் கடவுளை ஜாசிக்கிறான் என்றால் அதற்க்கு காரணம்; ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால் என்கின்ற பயம் மற்றும் நேர்மறையான நம்பிக்கைதான்!!! அவனுக்கு கடவுளை தொழுவதால் இழப்பு எதுவும் இல்லை; அதே நேரம் அவனுக்கு கடவுளிடத்தில் தன் மனப்பாரங்களை ஒப்பித்த பின்னர் அவனுக்கு ஒரு திருப்தி, நின்மதி கிடைக்கின்றது என்றால் கடவுள் இருப்பதில் என்ன தவறு? பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துக்கம் என்பன எல்லோருக்கும் பொதுவானவை!!! மரணமும், துன்பமும் ஏற்ப்பட்டது என்பதற்காக அவர்கள் கடவுளை வணங்காமல் இருந்துவிடுவதில்லை!!! காரணம் இலகுவானது, அதாவது ஒருவருக்கு வாழ்ந்து முடிக்கு மட்டும் தங்களைவிட விஞ்சிய ஒரு சக்தியின் துணை தேவைப்படுகின்றது!!! இல்லை அப்படி ஒரு சக்தி எனக்கு தேவை இல்லை என நீங்கள் உணர்ந்தால் அது உங்களுக்கு இருக்கும் அபாரதிறன், அதை எலோருடத்திலும் எதிர்பார்க்க முடியாது!!!
இப்படியான பெரும்பான்மையை கடவுளை மறுப்பவர்கள் நம்பிக்கையீனம், இயலாமை உடையவர்கள் என எதிர்வாதம் செய்யாம்!!! ஆனால் யதார்த்தத்தில் சிந்தித்தால் இது ஒரு சாதாரண வெளிப்படை உண்மை!!! எல்லோருக்கும் சிந்தனைகள்,எண்ணங்கள் ஒரேமாதிரி இருப்பதில்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்!!! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கின்ற தலைப்பையே தொடாத மக்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல்!!! அதிலும் பூமியின் அதிகபட்ச குடிகளான படிப்பறிவு இலாத, சிந்திக்கும் திறன் குறைவான, வறுமையான, பாமர மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, ஆறுதல் கடவுள்தான்!! எதுக்கு அந்த நம்பிக்கையில் அரைகுறை பகுத்தறிவை விட்டு எறியவேண்டும்!!
"இருக்கின்ற கோவில்களை எல்லாம் படிக்கின்ற பள்ளிகள் செய்வோம்" என்று ஒரு புதுமை பாட்டு!!! பள்ளிகளை கட்டுவதற்கு எத்தனை ஏக்கர் வெற்று நிலங்கள் இருக்கின்றன? எதற்கு கோவில்களை இடிக்கவேண்டும்? மக்களை பைத்தியமாக்கி அலையவிடவா? அதையா பகுத்தறிவு விரும்புகின்றது!!! மதத்தின் மீது பைத்தியமாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையைவிட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை போலி முகங்களை கழற்றிவிட்டு ஜதார்த்தத்தோடு ஒன்றித்தால் புரிந்து கொள்ளலாம்!!! கோவில்கள்/திருவிழாக்கள் போன்றவை மூட நம்பிக்கை என்று பார்த்தால் அப்படித்தான் தோன்றும்; அதிலுள்ள மண அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை, சந்தோசம் கோடி கொட்டினாலும் கிடைக்காதவை!!!
கோவில்களின் செலவுகள், வீண் விரயங்கள் என சிலர் வாதிடலாம்!!! உண்மைதான்; அதேநேரம் பாலில்லாத குழந்தைக்கு பால்தான் நேரடியாக கொடுக்கவேண்டும் என்றில்லை, பீர் வாங்கும் காசிலும் பால்வாங்கி கொடுக்கலாம்!!! கோவிகளில் விரயமாவதை குற்றம் சொல்பவர்கள் சொந்த வாழ்வில் உணவு, உடை, தேவையான அளவிலான உறையுள்ளுக்கு அப்பால் மிகுதி அனைத்து பணங்களையும் ஏழைகளுக்கு கொடுக்கும் உள்ளங்களாக இருத்தல் அவசியம்!!! அதே நேரம் பல பொருட்கள்/பணம் கோவில்களில் வீணடிக்கப்படுவதாக சொல்வது மறுப்பதற்கில்லை; அதே நேரம் கோவில்கள் ஒரு ஊரின் அடையாளம் என்பதால் சில செலவுகளும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!!! எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் குறை சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம்!! கோவில்களின் குறைகளைவிட, அவற்றால் மக்கள் பெறும் மனநிறைவு, நின்மதி, அமைதிக்கு விலை அதிகம் என்பது என் எண்ணம்!!!
சாமியார்கள்/ஆன்மீக குருக்கள் - இது அதிகமாக இந்துமதம் சந்திக்கும் பிரச்சனைதான்!! இந்துக்கள்தான் அதிகமாக இவர்களின் பின்னால் செல்கின்றனர்!!! பிரேமானந்தா முதல் நித்யானந்தாவரை எத்தனையோ போலிகள் கண்டறியப்பட்டாலும் மக்கள் கூட்டம் மட்டும் இவர்கள் பின்னால் செல்வதை குறைத்தபாடில்லை!!! இவர்கள் தவிர அவதாரமாக சித்தரிக்கப்படும் சத்ய சாயிபாபா, அம்மா பகவான் போன்றோரும் மக்களால் அதிகம் பின்பற்றப்படுபவர்கள்!! "எத்தனை கடவுள் இருக்க எதற்கு இவர்கள் பைத்தியம்போல இவர்கள் பின்னால் செல்கின்றார்கள்; என முன்னரெல்லாம் நினைப்பதுண்டு!!! பலரும் சாமியார்கள் மக்களை ஏமாற்றும்போது "அவர்களை சொல்லி தப்பில்லை இவர்களை நம்பி போகும் இந்த சனங்களை உதைக்கணும்" என்று சொல்வதுண்டு; இதிலும் எனக்கு உடன்பாடில்லை!!!
மாற்றமே கிடைக்காமல் துன்பத்தோடு வாழ்வை நடத்துபவன், இன்னொருவன் பலன் கிடைத்தது என்று சொன்னதை நம்பி; தனக்கும் கிடைக்காதா! என நம்பி வந்தவன், சாமியாரை நம்பி சென்ற நேரம் நல்லது கிடைக்கப்பெற்றவன், எங்கு தேடியும் அமைதியை காண முடியாதவன், கடவுளாலும் ஏமாற்றமே மிஞ்சியதாக சோர்வடைந்தவன், திருமணமாகதவன், குழந்தை பேறில்லாதவன், தீராத நோயுடையவன் என எம்மை சுற்றி ஏகப்பட்ட இயலாமைகள் உள்ளனர்!!! அவர்களுக்கு தேவை தமக்கொரு தீர்வு!!! அது அங்கு கிடைக்காதா என்கின்ற சிறு நம்பிக்கைதான் அவர்களை அங்கு கொண்டு செல்கின்றது!!! அதனால்த்தான் பாமரன், படிக்காதவன், ஏழை தவிர்த்து படித்தவன், பணக்காரன், சாதனையாளன் என பலரும் இவர்களை நாடி செல்கின்றனர்!!!
உதாரணத்திற்கு ஒரு சம்பவம் - ஒரு பையன் யுத்த காப்பகுதியில் காணமல் போயுள்ளான்; அவனது தாய், தந்தைக்கு அவனது இருப்பு பற்றி எந்த தகவலும் இல்லை. துக்கத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருக்கும் அந்த பெற்றோருக்கு ஒரு செய்தி எட்டுகின்றது; அதாவது "ஒரு சாமியார் ஊருக்கு புதிதாக வந்திருக்கின்றார், அவர் சொல்வதெல்லாம் பலிக்குமாம், அவரிடம் போய் குறி கேட்கலாம்" என்பதுதான் அது. அந்த கணத்தில் பகுத்தறிவை சிந்திப்பார்களா? இல்லை பையன் பற்றிய சிறு துப்பாவது கிடைத்துவிடாதா! என்கின்ற நம்பிக்கையில் அந்த சாமியாரை போய் பார்ப்பார்களா? நெஞ்சில் ஈரமுள்ள எந்த பெற்றோராலும் இரண்டாவதைத்தான் செய்யமுடியும்!!! சாமியார் போலியா? சக்தி இருக்குமா? இது சாத்தியமா? என்றெல்லாம் பகுத்தறிய அவகாசமெல்லாம் அந்த கணத்தில் இல்லை!!! இதை மூட நம்பிக்கை என்பதும், இவர்களை முட்டாள்கள் என்பதும்தான் பகுத்தறிவு என்றால், வாழ்க பகுத்தறிவு!!!
மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்வரை எத்தனை சாமியார்கள் தோன்றினாலும் அவர்களுக்கு வசூல் அள்ளத்தான் செய்யும்!!! இதை வைத்து மக்களை முட்டாள்கள் என முத்திரை குத்துவதை விடுத்து ஆக்கபூர்வமாக ஏதாவது சிந்திக்காம்!!! போலியாக அறியப்படும் சாமிக்கு இன்னொருவன் தன்னை சாமியாக நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலே பாதி போலிகள் ஒளியும்!!! அரசாங்கங்கள் நினைத்தால் இவற்றை ஒழிப்பது கடினமான வேலையில்லை; ஆனாலென்ன பாவம் அரசியல்வாதிகளும் அரசியல் செய்ய இவர்களைத்தான் நம்புகின்றார்கள், இதுகூட போலிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகின்றது!!!
கடவுளுக்கு உருவம் கொடுத்தது போதாதென்று உயிர் கொடுக்க நினைப்பதுதான் சில இந்துக்களுக்கு இப்போதிருக்கும் பிரச்சனை; உருவத்திடம் கிடைக்காத பதிலை 'உயிர்' சீக்கிரமே கொடுக்கும் என்கின்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். இதை பேராசை என்று சொல்வதா!!! இயலாமை என்று சொலவத!!! இல்லை முயற்சி என்பதா!!! மூட நம்பிக்கை என்பதா!!!...... இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அவரவருக்கு உள்ள பிரச்சனைகள் அவரவர் பக்கம் நின்று பார்த்தால்த்தான் புரிந்துகொள்ள முடியும்!!! வெளியில் நின்று கருத்து சொவது சுலபம், சொன்னாம் புரிந்துகொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை!!! "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலி சாமியார்களுக்கும் பொருந்தும்!!!" பிரபஞ்ச இயக்கத்தில் இவையெல்லாம் கடவுள்/இயற்கையின் அங்கம் என மனதை தேற்றுவதை தவிர வேறு வழியில்லை!!
மேற்சொன்னவை ஒன்றும் இதுதான் சரியானவை என நான் ஆணித்தரமாக சொன்ன விடயங்கள் அல்ல, எனது எண்ணங்களின் பதிவுதான் இவை; மற்றவர்களுக்கு மேற்சொன்ன விடயங்களில் எண்ணங்கள் மாறுபடலாம்!! அதேநேரம் கடவுள் இருக்கின்றார் என்று அடித்து சொல்பவர்களை பற்றியும் எதுவும் இந்த பதிவில் சொலவில்லை, காரணம்; அவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று முகமூடி போட்டுக்கொள்வதில்லை!!! சொல்ல நினைத்த பல விடயங்களை ஆங்காங்கே சொல்லியிருப்பதால்; வரிசை கிராமமாக இருக்காது என்று நினைக்கிறேன், யாராவது வாசித்து முடித்தவர்கள் புரிந்திருந்தால் சொல்லுங்கள் :-) புரியாதவர்களுக்கு ஒரு வரியில் கமல்ஹாசன் பாணியில் சொல்வதானால்..
நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, அதேநேரம் கடவுள் இருக்கின்றார் என்றும் சொல்லவில்லை, கடவுள் இருந்திட்டு போகட்டுமேன்னுதான் சொல்கிறேன்!!!!!
*_________*
113 வாசகர் எண்ணங்கள்:
ஏன் இத்தனை மாதங்கள்? // mistake
Disclaimer: நான் ஒரு கடவுள் மறுப்பாளன். பகுத்தறிவாளனா என்று தெரியாது. கோயில்களை, அவற்றின் வரலாற்று, கலை மதுப்புகளுக்காக (மட்டுமே) மதிப்பவன்.
நீங்கள் விஞ்ஞானத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து பெருவெடிப்பு எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பதை கணித சூத்திரங்கள் சொல்கின்றன. quantum fluctuations எனும் இயற்கை விளைவில், வெறும் சூனிய வெளியில் துகள்கள் எவ்வாறு தாமே தோன்றியவண்ணமும் தாமாகவே அழிந்தவண்ணமும் இருக்கின்றன என இவை விளக்குகின்றன. அத்துடன், பெருவெடிப்பின் முன் இருந்தது 'நெருப்பு' அல்ல. அணுக்களே தோன்றாத நேரத்தில், ஒட்சிசனுடன் தாக்கம் புரிந்து உருவாகும் நெருப்பு எவ்வாறு தோன்ற முடியும்? எனவே, தெரியாத கடவுளைப்பற்றி சரியாகப் பேசமுடியாமல் போகலாம். ஆனால் தெரிந்துகொள்ளக்கூடிய விஞ்ஞானத்தைப் பற்றி ஓரளவாவது சரியாகப் பேசலாமே?
//பூமியின் ஆதியையே அறிய முடியாமல் விஞ்ஞானம் திண்டாடுகின்றது!!//
சார், விஞ்ஞானம் ஒன்றும் மரத்துக்கடியில் உட்கார்ந்து யோசித்து எழுத்தும் கட்டுக்கதைகளின் தொகுப்பு அல்ல. உலகின் மிகச் சிறந்த துப்பறியும் நிறுவனங்களால்கூட சில வேளைகளில், நான்கு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த கொலையையே துப்புத் துலக்க முடியாமல் போகின்றது. அப்படி இருக்கையில், நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த புவியின் தோற்றத்தையும், பதின்மூன்றரைக்கோடி ஆண்டுகள் முன் நிகழ்ந்த பெருவெடிப்பையும் துப்புத் துலக்குவது சாதாரணமா? உலகம் முழுக்க பல்லாயிரம் இடங்களில் சேற்றில் தோண்டி, உயிரின் தடயங்களை வைரங்களைக் கண்டெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்று சேர்த்து, பல நாட்கள் சோறு தண்ணீர் இல்லாமல் யோசித்து, இயற்கையை நடத்தும் சமன்பாடுகளைக் கண்டறிந்து, சமுத்திரந்தில் விழுந்த ஊசித் தேடும் வேலையாக, இரவு வானைச் சலித்து, cosmic background radiation ஐக் கண்டறிந்து கொள்கைகளை உருவாக்குவது சாதாரணமா? இருந்தும் கடந்த இருநூறு வருடங்களில் விஞ்ஞானத்தில் நினைத்தும் பார்க்க முடியாத உயரங்களைத் தொட்டிருக்கின்றோம்.
//ஒருவேளை மதங்கள் இல்லாமல் மனிதன் வளர்ச்சி அடைந்திருந்தால் இன்றைய நாகரிக வளர்ச்சி எட்டமுடியாத ஒன்றாககூட இருந்திருக்கலாம்!!!//
மதங்கள் இல்லாமல் இருந்திருந்தால், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால படுகொலைகள் நிகழாமல் இருந்திருந்தால் சாதி மூலமாக இந்தியர்களின் அறிவு முடக்கப்படாமல் இருந்திருந்தால், (பொறியியல் ரீதியாக யோசித்து தஞ்சைக் கோயில் உட்பட்ட நிர்மாணங்களை கட்டிய தச்சர்களை தீண்டாமல், வேதங்களை மனனம் செய்து ஒப்பித்தவர்களுக்கு தானம் வழங்கும் மனப்பாங்கை விட்டிருந்தால்) பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நாகரீகம் அடைந்திருப்போம்.
@ wesmob
நன்றி, திருத்திவிட்டேன் :-)
.......................................
@ Abarajithan Gnaneswaran
ஒரு சில மில்லிமீட்டர் அளவுள்ள உருண்டைதான் 'அறியப்படாத' ஏதோ ஒரு காரணத்தால் பெருவெடிப்புக்கு உள்ளானதாக விஞ்ஞானம் சொல்கிறது!!! அந்த வெடிப்புக்கான காரணம், வெடிப்பின் முன்னர் அந்த சிறிய உருண்டையின் தோற்றம் இன்னமும் விஞ்ஞானத்துக்கு எட்டாதது!!! அப்புறம் அந்த உருண்டையின் வெப்பநிலையை குறிக்கவே நெருப்பு குழம்பு என்னும் பதம் பாவித்தேன், அது நெருப்பு அல்ல, சூரியனைவிட பல மில்லியன் மடங்கு வெப்பம் அதிகமானது!!! தெரிந்த விஞ்ஞானம் பற்றி பேசுவதென்றால் விஞ்ஞானமும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும், அப்படி ஒருவர் பூமியில் இருப்பார் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை!!! விஞ்ஞானம்தான் எடுக்கும் முடிவு இறுதியானது என நினைப்பதும் வேடிக்கை; அப்பப்போ விஞ்ஞானம் தனது முடிவை மாற்றிக்கொண்டு இருக்கின்றது!!!
200 வருடங்களில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தது இருக்கட்டும், நான் சொல்லவந்தது; முழுமையாக அறியாத ஒன்றை பற்றி எப்படி இல்லை என்று மறுத்து பேசமுடியும் என்பதுதான்!!! விஞ்ஞானம் முழுமையாக அறிந்து சொல்லுமட்டும் ஒன்றை இல்லை என்று சொல்வது எப்படி சாத்தியம்? இது முட்டாள்தனமின்றி வேறில்லை !!! அடுத்து விஞ்ஞானம் பிரபஞ்சத்தை முழுமையாக அறியாததை குறையாக சொல்லவில்லை, அது சாத்தியாமா என்றும் தோனல!!! அதேநேரம் முழுமையாக் அறியாத விடயத்தில் ஒன்றை இல்லை என்பது எவ்வகை நியாயம்?(நான் விஞ்ஞானத்துக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை, ஏதோ நான் விஞ்ஞான எதிரிபோலவும், நீங்கள் விஞ்ஞான பிரச்சார பீரங்கி போலவும் பின்னூட்டி இருக்கின்றீர்கள் :-) )
நாகரீக் வளர்ச்சி பற்றிய உங்கள் கருத்து உங்களது நிலைப்பாடு, என் கருத்தை நான் சொன்னேன், உங்கள் கருத்தை நீங்கள் சொன்னீர்கள், அவாவுதான்!!! படிப்பவர்களுக்கு எதாவது ஒன்று சரியென படலாம்!!!!
சிந்திக்க வைக்கும் பதிவு !
இதே லிங்க் -ல் 'தெய்வம் இருப்பது எங்கே ?' என்று சமீபத்தில் தான் பதிவு செய்தேன். பார்க்கவும்.
///நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, அதேநேரம் கடவுள் இருக்கின்றார் என்றும் சொல்லவில்லை, கடவுள் இருந்திட்டு போகட்டுமேன்னுதான் சொல்கிறேன்!!!!!///
முடிவில் நீங்களும் கமல் மாதிரி (படம் : தசாவதாரம்) சொல்லி விட்டீர்களே !
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
//விஞ்ஞான பிரச்சார பீரங்கி// :-)
//நான் விஞ்ஞானத்துக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை//
பல விஞ்ஞானிகளின் உழைப்பை கேலி செய்வதை (//விஞ்ஞானம் திண்டாடுகின்றது!!//) நான் எதிர்க்கிறேன். அவ்வளவே..
//விஞ்ஞானம்தான் எடுக்கும் முடிவு இறுதியானது என நினைப்பதும் வேடிக்கை; அப்பப்போ விஞ்ஞானம் தனது முடிவை மாற்றிக்கொண்டு இருக்கின்றது!!!//
சார், விஞ்ஞானத்தின் சிறப்பே மாற்றம்தான். யாராவது விஞ்ஞானத்தின் முடிவுகளைவிட இறுதியான முடிவுகள் உள்ளன எனக் கூறினால் அதுதான் உண்மையான வேடிக்கை. மதப்புத்தகத்தின் குருட்டாம்போக்கான கருத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு நம்புவதில் எந்தத் தொல்லையும் இல்லை. மிகச்சிறுவயதில், நாங்களெல்லாம் எப்படி உருவாகின்றோம்? என்று நான் கேட்ட கேள்விக்கு "மனித உடலின் பாகங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு ஒரு ட்ரெயின் பெட்டியில் வந்துகொண்டிருக்கும். பிரம்மா அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அசெம்பிள் செய்து வெளியிடுவார்" எனக் கூறப்பட்டது. பலருக்கும் இதுமாதிரி ஏதாவது சொல்லப்பட்டிருக்கும். இதை அப்படியே நம்பிக் கொண்டிருந்தால் எமக்கு எந்தத் தொல்லையும் இல்லை. பதிலாக எமது அவதானிப்புக்களுக்கு இந்தக் கருத்து ஒத்து வராததால் புதிய கொள்கைகளை கேட்டறிந்தேன் நம்பினேன். இதைத்தான் விஞ்ஞானம் முழு நேர வேலையாகச் செய்கிறது. மிக எளிதான கொள்கைகள் முதலில் உருவாக்கப்படுகின்றன. ஏதாவது அவதானிப்பு ஒன்று இந்தக் கொள்கையை மறுதலிக்கும்போது, புதிதான, சிக்கலான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. இது தொடர்கிறது. அணுக் கொள்கையின் வளர்ச்சி, இதற்குச் சரியான உதாரணமாகும்.
இப்போது கடவுளை எடுத்துக்கொண்டால், இருப்பதில் மிக சிம்பிளான தியரி கடவுள் இல்லை என்பதே. இந்தத் தியரியில் ஏதாவது பிரச்சனை வந்தால் கடவுள் இருக்கிறார் எனும் லெவலுக்கு போகலாம். பிரபஞ்சத்தின் உருவாக்கம் முதல், பூமியில் உயிரின் தோற்றம் வரை பெரும்பாலான தோற்றப்பாடுகளை கடவுளின் துணை இன்றியே அறிவியல் விளக்குகின்றது. மிச்சம் இருப்பவை கூட மிக வேகமாக விளக்கப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான பல தியரிக்களை ஏன் இன்னும் நிரூபிக்க முடியவில்லை எனக் கேட்டால், இன்னும் தேவையான அளவுக்கு தடயங்கள் கிடைக்கவில்லை என்பதே அறிவியலின் பதிலாகும். (தடயங்கள் இல்லாமல் கதை கட்டுவதற்கு விஞ்ஞானம் மதப்புத்தகம் அல்லவே?! ) காலப்போக்கில் தொழில்நுட்பம் வளர வளர மேலும் தடயங்கள் கண்டுபிடிக்கப்படும்போது இன்னும் அதிகமான விடயங்களை விளக்க முடியும். தேவையான தடயங்கள் / தரவுகள் அனைத்தும் கிடைத்தும் ஒரு தொழிற்பாட்டை விளக்கும்வகையில் கொள்கைகளை உருவாக்க முடியாமல் போனால், அத்தொழிற்பாட்டின் ஒரே விளக்கமாக கடவுள் இருந்தால், கடவுள் எனும் ஒரு மந்திரவாதி இருப்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளும். அதுவரை கடவுள் இல்லாமல் போகட்டுமே. :)
@ Abarajithan Gnaneswaran
அப்படி ஒருநாள் விஞ்ஞானம் நிரூபிக்கும் என்கின்ற உங்களது நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் :-) அதுவரை கடவுளை தொலைத்துவிட்டு மக்கள் பைத்தியமாவதை நான் விரும்பவில்லை, எனவே கடவுள் இல்லை என விஞ்ஞானம் நிரூபிக்கும்வரை மக்களின் நின்மதி, ஆத்ம திருப்தி, நம்பிக்கை, சந்தோசத்திற்காக கடவுள் இருந்துவிட்டு போகட்டும்:p
வாழ்த்துக்கு நன்றி :))
இது வெறும் நம்பிக்கை இல்லை. ஒரு கோடி வருட மனித வரலாற்றில், பூமி உருண்டைன்னு நிரூபிக்க முடிஞ்சதே வெறும் ஆயிரம் வருஷம் முன்னாலதான். அதுக்கு முன்னாடி வரைக்கும் சிலபேர் "பூமி என்ன ஷேப்ல இருக்குன்னே உங்க விஞ்ஞானத்தால சொல்ல முடியலையே.. நீங்கெல்லாம் என்னத்தப் படிச்சு.. கிழிச்சு.."ன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம். ஆனா வெறும் ரெண்டாயிரம் வருஷத்துல பிதாகரஸ் தியரத்துல இருந்து quantum fluctuations, string theory, 11 dimensions வரைக்கும் வந்திருக்கோம். இதுக்கு மேலேயும் போக மாட்டோமா?
//கடவுளை தொலைத்துவிட்டு மக்கள் பைத்தியமாவதை நான் விரும்பவில்லை,//
பெரும்பாலான பொதுமக்களுக்கு தாங்களே தைரியமா எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாமல் எல்லாம் அவன் செயல்னு தூக்கி போட்டுட்டு போறதுக்கோ, அல்லது ஒரு பொறுப்போட சுமையை தற்காலிகமா மறக்கறத்துக்கோ ஒரு போதை மாதிரி கடவுள் தேவைப்படுது (கூலிக்காரனுக்கு சாராயம் மாதிரி). ஆனா தன்னோட கைக்குள்ள இருக்கற விஷயங்களை முடிஞ்சமட்டும் சிறப்பா நடத்திகிட்டு, மற்ற விஷயங்களோட யதார்த்தத்தை உணர்ந்து ஏத்துக்கறவங்களுக்கும் கடவுள் தேவையில்லை.
மக்களை முழுநேர போதைல வச்சிருக்கதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. காலைல டீ சாப்பிடறதும் போதைதான். ஆனா அந்தப் போதை சாராயம் மாதிரி உடம்பைக் கெடுக்காம பாத்துக்க வேண்டியது சமய நிறுவனங்களோட, சமயத் தலைவர்களோட பொறுப்பு. ஆனா, இங்க என்னடான்னா மதத்தின் பலத்தால் மக்களை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளைக் கூட வலுக்கட்டாயமாக மறுக்க வைக்கிறாங்க. மற்ற மதங்களுக்கு மேல அடிதடி தாக்குதல் நடத்த தூண்டுறாங்க. தீவிரவாதத்தையும் சிலர் இப்படி வளர்க்கறாங்க. இதெல்லாம் நடக்காம பார்த்துக்கொள்ள முடிஞ்சா, மன நிம்மதிக்கு கடவுளை நம்பிக்கொண்டு, விஞ்ஞானத்தையும் ஆதரிச்சு, அமைதியையும் சாந்தத்தையும் போதிக்க முடிஞ்சா போனாப் போகுதுன்னு கடவுள் இருந்துட்டுப் போகலாம்.
கைக்கு மீறிய செயல்கள் யாவும் கடவுளாகின்றன.
அதை பற்றி சிந்திக்கும் மனிதன் நாஸ்திகனாகிறான்!
@ Abarajithan Gnaneswaran
//பெரும்பாலான பொதுமக்களுக்கு தாங்களே தைரியமா எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாமல் எல்லாம் அவன் செயல்னு தூக்கி போட்டுட்டு போறதுக்கோ, அல்லது ஒரு பொறுப்போட சுமையை தற்காலிகமா மறக்கறத்துக்கோ ஒரு போதை மாதிரி கடவுள் தேவைப்படுது//
இப்படியான சிந்திக்கும் திறனற்ற மக்கள் தான் பெரும்பான்மை; அவர்களுக்காகத்தான் கடவுள் அவசியம் என்று சொல்கின்றேன் :p
என்ன நண்பா............ அப்பப்போ ஒரு பதிவு போடு........... இப்படி மாசக் கணக்கா காணாமப் போனா எப்படி!! கொஞ்சம் இரு பதிவை படிச்சிட்டு வாறன்!!
\\கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்கின்ற முடிவை எடுத்திருக்கின்றார்கள்!!\\ கோழிக்கு போடும் தீனியை ஜாஸ்தி பண்ணினா முட்டையும் பெரிசு பெரிசா போட்டுச்சாம், அப்போ முட்டை கோழியை depend ஆகி இருக்கு, அதனால் கோழியில் இருந்து தான் முட்டை வந்திருக்கும். அப்போ அந்த பெரிய முட்டையைப் போட்ட கோழி.......?? ஐயையோ நான் எஸ்கேப் ..........
\\கடவுளின் பெயராலும், டார்வினும் அனுமானத்தாலும் பலதரப்பட்ட பதில்கள் சொல்லப்பட்டாலும் உயிரினங்களின் தோற்றம், அதில் குறிப்பாக மனிதனின் தோற்றம் பற்றிய கேள்விகளுக்கான விடை இன்னமும் கேள்விகளாய்த்தான்!!! கேள்விகளும், சந்தேகங்களும்; அனுமானங்களாகவும், எடுகோள்களாகவும் எடுத்துக் கொளப்படுகின்றதே அன்றி எவற்றுக்கும் திருப்தியான ஆதாரங்கள் இன்னமும் இல்லை;\\டார்வின் கொள்கை நிரூபிக்கப் படாதது என்று நீங்கள் தெளிவாய் இருக்கிறீங்க நண்பா. டார்வின் தியரியை நிஜம்னு சொல்லிக்கிட்டு திரியற படித்த பன்னாடைகள் நிறையவே இருக்கு.
\\பிரபஞ்சம் எப்படி தோற்றம் பெற்றது என்பதை விஞ்ஞானம்; பெருவெடிப்பு (Big Bang) என்னும் சம்வம் மூலம் நிகழ்ந்ததாக சொல்ல முனைகிறது!! அதாவது கற்பனை பண்ணமுடியாத அளவு அடர்த்தியுள்ள, சூரியனைவிட பல மில்லியன் மடங்கு வெப்பமுடைய, ஒரு சில மில்லி மீட்டர்கள் விட்டத்தை உடைய மிகச்சிறிய நெருப்பு குழம்பு ஒன்று திடீரென வெடித்ததாலே உருவாகியதுதான் பிரபஞ்சம்!!!\\ சில மில்லி மீட்டர்கள் விட்டம் கூட இல்லை. புள்ளி என்று சொல்கிறார்கள். புள்ளி என்றால், ஒரு வட்டம் அதன் ஆரம் [radius] r=0. அது என்னன்னு எனக்கும் தெரியாது. அதாவது ஒன்னுமேயில்லை. இதில் இருந்துதான் நீங்கள் மேலே குறிப்பிட்ட இவ்வளவு பெரிய பேரண்டமும் வெடித்து வந்துச்சாம். "ஏன்யா ஒண்ணுமேயில்லைன்னு சொல்றீங்களே ஆனா வெடிக்கனும்னா எது வெடிச்சது? எதாச்சும் முட்டிகிச்சா, பட்டாசா, இல்லை வெடிகுண்டா?"-ன்னு எல்லாம் அறிவுப் பூர்வமா கேட்கப் படாது!! இன்னொன்னு, சாமியார் வாட்ச், மோதிரம் வெறும் காற்றிலிருந்தே கையசைத்து எடுத்தான் என்று நம்புகிறவன் முட்டாள், [அது நிஜம்தான்!!], அதே சமயம் இவங்க சொல்ற ஒன்னுமேயில்லாதளிருந்து இந்த பேரண்டமே வந்துச்சுன்னு பூம்.... பூம்.. மாடு மாதிரி தலையாட்டினா நீதான் இருப்பதிலேயே அறிவாளி.
\\அதே நேரம் பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமான அந்த சிறிய நெருப்பு குழம்பு எப்படி தோன்றியது என்பதற்கான எந்த அனுமானத்தையும் விஞ்ஞானம் இன்னமும் சொல்லவில்லை!!\\ அது நெருப்பு குழம்பு கூட இல்ல , ஜீரோ சைசுள்ள [ஐயையோ நான் இந்தி நடிகைங்க சொல்ற ஜீரோ சைசு சொல்லலீங்க!!] புள்ளியில இருந்து எல்லாமே வந்துச்சாம்.
//அவர்களுக்காகத்தான் கடவுள் அவசியம் என்று சொல்கின்றேன்//
இதுக்குப் பதில்தான் இங்கே சொல்லியிருக்கேன்: //ஆனா அந்தப் போதை சாராயம் மாதிரி உடம்பைக் கெடுக்காம பாத்துக்க வேண்டியது சமய நிறுவனங்களோட, சமயத் தலைவர்களோட பொறுப்பு. ஆனா, இங்க என்னடான்னா மதத்தின் பலத்தால் மக்களை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளைக் கூட வலுக்கட்டாயமாக மறுக்க வைக்கிறாங்க. மற்ற மதங்களுக்கு மேல அடிதடி தாக்குதல் நடத்த தூண்டுறாங்க. தீவிரவாதத்தையும் சிலர் இப்படி வளர்க்கறாங்க. இதெல்லாம் நடக்காம பார்த்துக்கொள்ள முடிஞ்சா, மன நிம்மதிக்கு கடவுளை நம்பிக்கொண்டு, விஞ்ஞானத்தையும் ஆதரிச்சு, அமைதியையும் சாந்தத்தையும் போதிக்க முடிஞ்சா போனாப் போகுதுன்னு கடவுள் இருந்துட்டுப் போகலாம்.//
\\எலாவற்றையும் அறிந்தவானால் மட்டும்தான் ஒன்றை இல்லை என்றோ, இருக்கின்றது என்றோ சொல்ல முடியும், மற்றவர்கள் சொல்வதெல்லாம் அவர்களது எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி நிதர்சனமானவை அல்ல!!!!\\ ஒரு கணினியைப் பார்த்தவுடன் சொல்லிவிடலாமே அதை நிச்சயம் ஒரு நிறுவனம் செய்திருக்கும் தானாக வந்திருக்காது என்று. ஜடப் பொருளுக்கு அறிவு கிடையாது. ஒரு மண் பானை கூட அதுவா உருவாகாது. ஒருத்தர் பக்குவமாகச் செய்தால் தான் உருவாகும். பறவைகள் விமானத்தின் தொழில் நுட்பத்தை தனது சிறகுகளை ஒளித்து வைத்திருக்கின்றன. நமது கண்கள் கேமராவைப் போல இயங்குகிறது. இதயத்தைப் போல பம்ப் எங்கே உள்ளது? ஆக இவற்றுக்குப் பின்னால் ஒரு மதி இல்லாமல் போகுமா? அது யார் என்பது இரண்டாம் பட்சம், இல்லாமல் போகுமா என்பதே கேள்வி. அப்படி இல்லை என்று சொல்பவர்கள், கல்லும் மண்ணும் அதுவாகவே அற்புதமாக மாறியதை பார்த்தகாக உதாரணம் காட்ட முடியுமா? ஒன்றுமே இல்லாததில் இருந்து ஏதாவது வந்ததாக காட்ட முடியுமா? அறிவியல் விதிகளே போதும் கடவுள் வேண்டாம் என்றால் அந்த விதிகள் உருவாகியது எப்படி என்று கூற முடியுமா?
@Jayadev Das,
//படித்த பன்னாடைகள் நிறையவே இருக்கு.//
இப்போதைக்கு அந்தத் தியரி சரின்னு (வேற நம்பகமான தியரி இல்லாததால) நம்பற பன்னாடைங்கள்ள நானும் ஒருத்தன்னு சொல்லிக்க பெருமைப்பட்டுக்கறேன். நீங்களே ஒரு தியரியை முன்வைத்து அதுக்கான திருப்தியான ஆதாரங்களைக் காட்டினால் (குறைந்தபட்சம் ஒரு கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து, கூட்டிக் கொண்டுபோய் காட்டினால்) உங்களைக் நிச்சயம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்.
\\ஆனால் இதில் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் நாத்திகர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவாளர்கள் என்பதுதான்!!! இன்று தமக்கு தாமே அடைமொழி சூட்டும் நடிகர்களுக்கும் இந்த பகுத்தறிவாளர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை!!!\\ தரையில் விழுந்து உருண்டு பொரண்டு சிரிச்சிகிட்டே இருக்கேன். ஹா...ஹா...ஹா...ஹா...
கோழி, முட்டை Paradox..
என்னோட (சொற்ப) உயிரியல் அறிவை வச்சு யோசிச்சா கோழி முட்டைதான் முதல்ல வந்திருக்கணும். பரிணாமத்தில ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் வர்றது மூதாதையரோட கருவில் தான் நடக்க முடியும். அப்படீன்னா, கோழியோட மூதாதையர் ஒண்ணோட முட்டைதான் கோழின்னு சொல்லக்கூடிய variation கொண்ட உயிரினம் ஒண்ணை கொண்டிருந்திருக்கும். அந்த முட்டைல இருந்துதான் முதல் 'கோழி' வகை உயிரினம் வந்திருக்கணும். இல்லையா?
நண்பரே,
’கடவுளை நம்புகிறவர்களை ஆத்திகர்கள் என்கிறோம். நம்பாதவர்களை நாத்திகர்கள் என்கிறோம்’என்று தாங்கள் குறிப்பிடும் இடம்வரை, நம்மைப் பிரமிக்க வைக்கிற இந்தப் பிரபஞ்சம், அதன் தோற்றம், இருப்பு பற்றியெல்லாம் தாங்கள் நிகழ்த்திய ஆய்வு உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்தது.
கொஞ்சமும் நடுநிலை பிறழாமல் தங்கள் கருத்துகளை முன் வைத்திருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.
அதற்கப்புறம், பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும்போது,”பகுத்தறியாவாதி” என்கிறீர்களே, அந்த இடத்தில் ‘தற்சார்பற்ற’ நெறியிலிருந்து தாங்கள் பிறழ்ந்துவிட்டதாகத் தங்களுக்குத் தோன்றவில்லையா?
கடவுள் இல்லை என்று அவர் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று எதார்த்தமாகச் சொல்வதை விடுத்து, ‘பகுத்தறியாவாதி’ என்று சொல்வது அவரைக் கிண்டல் செய்வது போல் இல்லையா?
யோசித்துப் பாருங்களேன். [நான் 100% சதவீதம் கட்சி சார்பற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்].
உலகில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதிகம். விஞ்ஞானிகள் முதலாகப் பலரும் கடவுளை நம்புகிறார்கள். அவர்கள் எல்லாம் முட்டாள்களா என்று கேட்கிறீர்கள்.
கடவுள், இயற்கை பற்றியெல்லாம் மிக ஆழமான ஆய்வை நிகழ்த்திவிட்டு, கொஞ்சமும் எதிர்பாராத வகையில் ஆத்திகத்துக்குச் சார்பாக கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்களே, இது சரிதானா என்பது குறித்தும் தங்களால் யோசிக்க முடியும்தானே?
முத்தாய்ப்பாக, கடவுள் உண்டோ இல்லையோ அவரை நம்புவதால், மன அமைதி கிட்டுகிறது என்பதாக ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.
கடவுள் நம்பிக்கை மன அமைதிக்கு உதவுமென்றால் அது வரவேற்கத் தக்கதுதான்.
அதே வேளையில், அந்த நம்பிக்கையின் விளைவாக, தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நேரிடும் தீங்குகள் அதிகமா நன்மைகளா என்பது குறித்தும் நேரம் வாய்க்கும் போது, தாங்கள் விரும்பினால் ஆராய்ந்து எழுதலாமே?
இது என் மனப்பூர்வமான உண்மையான வேண்டுகோள்.
மற்ற விவாதங்களைப் போல, கடவுள் பற்றிய விவாதமும் மக்களுக்குப் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது.
படிப்போரை நல்ல முறையில் சிந்திக்கத் தூண்டும் நல்ல பதிவு இது என்று மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
தங்கள் மனதில் ‘உறுத்தல்’ ஏற்படுத்தும் வகையில் ஏதும் சொல்லவில்லை என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி.
பெரியார்....!! நண்பா எதுக்கும் இந்த மூணு வீடியோக்களை கண்டிப்பா பாரு. [முடிஞ்சா மிச்ச எல்லாத்தையும் பாரு!!] http://www.youtube.com/watch?v=iHJVX679w2k&feature=relmfu
http://www.youtube.com/watch?v=Y5cYO4H2GOk&feature=relmfu
http://www.youtube.com/watch?v=VBmzX252gSM&feature=relmfu
\\அவர்கள் வணங்கும் கடவுள்களின் வடிவங்களும் அதிகம்\\ இறைவனுக்கு உருவம் கொடுத்திருப்பது இந்தியாவில் மட்டுமே, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் பரலோகத்தில் பரம பிதா இருப்பதாகச் சொன்னாலும் அவர் எப்படி இருப்பார் என்பதைப் பற்றி மூச்.... விட மாட்டேன்கிறார்கள்.
\\படிப்பில், விளையாட்டில், அரசியலில், கலையில் விஞ்ஞானத்தில் சிகரம் தொட்ட பலரும் கடவுளை நம்புகின்றனர்!!!\\ அறிவியல் வரலாற்றிலேயே ஈடு இணையற்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஐன்ஸ்டின் ஒரு கடவுள் நம்பிக்கையாளர், அவர் எதை வைத்து நம்பினார்?
\\அப்படி என்றால் அறியப்படாத ஒன்றை (கடவுளை) அதிகமானவர்கள் ஏன் ஏற்றுக்கொண்டனர்?\\ அழகான ஓவியத்தைக் காண்பித்தால் அதை நிச்சயம் ஒரு ஓவியர் வரைந்திருப்பார் என்று பார்த்த வுடனே சொல்லிவிட முடியும். அந்த ஓவியர் யார் என்று எனக்கு தெரியாமல் போகலாம், அவர் வரைந்ததை நான் பார்க்காமல் இருந்திருக்கலாம், ஆனாலும் என் முடிவை அது மாற்றப் போவதில்லை.
\\மதத்தின் பெயரை சொல்லி இன்று பல சண்டைகளும், குழப்பங்களும், படுகொலைகளும் நிகழாமல் இல்லை!!!\\ இவை மதத்தின் பெயரால் நடப்பதை விட மற்றவற்றால் நடப்பது அதிகம். அமேரிக்கா காரன் ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டதற்கு மதமா காரணம்? சொல்லப் போனால் சொத்துக்காக அண்ணன் தம்பிகளே அடித்துக் கொண்டு செத்த கதைகளும் உண்டு. பிரச்சினை எல்லா இடங்களிலும் உண்டு அது இறை நம்பிக்கையிலும் உள்ளது.
\\ஒருவேளை மதங்கள் இல்லாமல் மனிதன் வளர்ச்சி அடைந்திருந்தால் இன்றைய நாகரிக வளர்ச்சி எட்டமுடியாத ஒன்றாககூட இருந்திருக்கலாம்!!!\\ ஐரோப்பா , அமேரிக்கா நாடுகள் தான் விஞ்ஞானம், நாகரீகத்தின் ரேன்க் ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட அங்கும் இறை நம்பிக்கை எழுபது சதத்துக்கும் மேலானவர்களுக்கு இருக்கத் தானே செய்தது? அது தடை என்றால் அவர்கள் எப்படி அறிவியலில் முதலில் நின்றார்கள்?
\\ஒரு கோவிலுக்கு 50 பேர் வருகிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள், தேவைகள், வேண்டுதல்கள் அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது!!!\\ பலருக்கு வாழ்வில் அத்தனையும் இருந்தும் மன நிம்மதி இன்றி தவிக்கிறார்கள். ஏதோ ஒன்று மிஸ் ஆவதை உணர்கிறார்கள். அது இறைவன் மேல் அன்பு கொள்வது. அது நடக்காத வரை எது இருந்தாலும் மன நிறைவு, நிம்மதி, உண்மையான மகிழ்ச்சி வரவே வராது.
\\அதனால்த்தான் பாமரன், படிக்காதவன், ஏழை தவிர்த்து படித்தவன், பணக்காரன், சாதனையாளன் என பலரும் இவர்களை நாடி செல்கின்றனர்!!!\\ ஐயையோ......... சாமியார் கிட்ட போவது அவ்வளவு சுளுவு இல்லீங்கோவ்......... பாதம் கழுவ ஒரு ரூபாய் லட்சமாம்......... நம்மால ஆகாதுங்க சாமியோவ்...........
\\மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்வரை எத்தனை சாமியார்கள் தோன்றினாலும் அவர்களுக்கு வசூல் அள்ளத்தான் செய்யும்!!!\\ இதில் தமாஷ் என்னவென்றால், மக்களுக்கு நோய்களைத் தீர்க்கும் பாபா ஏதாவது உடல்நலக் கோளாருன்னா அப்போல்லோவுக்குத்தான் போறார். இப்போ ஒரு சாமியார் யார் யார் பிரச்சினைகலியோ தீர்க்கிறவர், பெண்கள், போலீஸ், மற்ற சாமியார்கள், அரசாங்கம் என்று நாலாபக்கமும் போட்டு தாளிக்கிரார்கள். அவரும் வலிக்காத மாதிரி நடிசுகிட்டு சிரிச்சுகிட்டேன் போலீஸ் வேன்ல ஏரி ஜெயிலுக்கு போறார், பெயிலில் சிரிச்சுகிட்டே வரார்!!
\\ புரியாதவர்களுக்கு ஒரு வரியில் கமல்ஹாசன் பாணியில் சொல்வதானால்....\\ கையில வெண்ணெயை வச்சுகிட்டு நெய்க்கு அலையுரீரே ஐயா!! உன் தலைவர் மேல உசிர வச்சிருக்கும் நீர் இந்த மேட்டருக்கு எதுக்கு ஒரு விளங்காமட்டையை பின்பற்ற வேண்டும்? கடவுள் இருக்காரா இல்லையா என்ற கேள்விக்கு உங்க தலைவர் சொன்னது, " படைப்பு என்ற ஒன்று இருந்தால் படைத்தவன் ஒருத்தன் நிச்சயம் இருப்பான்". இதுக்கு மேல எவனும் ஆணித் தரமா சொல்ல முடியாது. இதை நீங்களும் ஏத்துகிட்டா என்ன தப்பு?
இந்த வீடியோவைப் பாருங்க, அதுக்கப்புறம் கடவுள் இருக்காற இல்லியான்னு சந்தேகம் திரும்ப வரவே வராது!!
http://www.youtube.com/watch?v=Br5YTsmGMWY&feature=related
\\மதப்புத்தகத்தின் குருட்டாம்போக்கான கருத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு நம்புவதில் எந்தத் தொல்லையும் இல்லை. மிகச்சிறுவயதில், நாங்களெல்லாம் எப்படி உருவாகின்றோம்? என்று நான் கேட்ட கேள்விக்கு "மனித உடலின் பாகங்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு ஒரு ட்ரெயின் பெட்டியில் வந்துகொண்டிருக்கும். பிரம்மா அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அசெம்பிள் செய்து வெளியிடுவார்" எனக் கூறப்பட்டது.\\ அறிவியலில் இதை விட பெரிய புருடாக்கள் உண்டு. மேலும் தினமும் ஒரு கதை விடும் இவர்கள் என்றைக்கும் இதற்க்கு மேல் மாற்றம் வராது என்று அறுதியிட்டு கூறப் போவதில்லை. இன்றைய செய்தி நாளைய வரலாறு- இது பழ மொழி. இன்றைய அறிவியல் தியரி நாளைய புருடா- இது நிஜ மொழி.
@ Abarajithan Gnaneswaran
அனுமானிக்கப்பட்ட கூர்ப்பை நம்பும் தங்களின் ஜீனோம் பற்றிய கருத்து என்ன? முட்டையில் இருந்து கோழி தோன்றவில்லை என்றும் கோழியில் இருந்துதான் முட்டை தோன்றியதாகவும் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டு பிடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்தன!!! அதற்க்கு அவர்கள் கூறிய விளக்கம்தான் மேற்சொன்ன முட்டை கோதிலுள்ள புரதம் புறத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பில்லை என்னும் வாதம்!!! கூர்ப்பு என்று பார்த்தாலும் முட்டையில் இருந்து கோழி தோன்றியிருக்க வேண்டுமென்றிலை; மாறாக வேறொரு உயிரினத்தில் இருந்தும் தோன்றி இருக்காலம்; மனிதன், குரங்கு இரண்டும் தாய்வழியில் வேறொன்றிலிருந்து தோன்றியதுபோல!!! கூர்ப்பு என்பது அன்றைய காலத்தில் மனிதனதும் குரங்கினது உடல் அமைப்பு ஒத்ததாக இருந்ததை வைத்து அனுமானிக்கப்பட்டது!!! ஜீனோமின் கூற்றுப்படி மனிதனுக்கு நெருங்கிய விலங்கு என்று பார்த்தால் பன்றி!!! அதன் இரத்தமே மனித இரத்தத்துடன் ஓரளவு ஒத்துப் போகின்றது!!!
அதற்காக நான் ஜீனோம் சொல்லும் ஒருதாய் வழி வந்த சமூகம்தான் உண்மை என்று சொல்ல வரவில்லை; இரண்டுமே தவறு என சில காலங்களில் சொல்லப்படலாம், அதுவரை ஒன்றை உண்டென்றோ, இல்லை என்றோ சொல்ல முடியாது என்பதுதான் என் வாதம்!!!
..........................
@ முனைவர் பரமசிவம்
ஐயா பெரியாரை அவமதிக்கணும் என்கின்றது அல்ல என் நோக்கம்; அவர் ஒரு பகுத்தறிவாளராக இருந்தால் எப்படி அறியப்படாத ஒன்றை இல்லை என முடிவெடுத்து அதை இருக்கு என்பவனை முட்டாள் என்று சொல்லலாம்? அதைத்தான் அவரை கடவுள் விடயத்தில் பகுத்தறியாதவர் என்று குறிப்பிட்டேன்!!!
அடுத்து நான் ஆத்திகத்தை அதிகம் குறை சொல்லாததற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என்னும் முத்திரை குத்திக்கொள்வதில்லை!!! அதே நேரம் நான் நாத்திகர்களையும் குறை சொல்லவில்லை; இருக்கு என்பதும், இல்லை என்பதும் அவரவர் நம்பிக்கை!!! நான் சொல்வதெலாம்; முடிவு அறியப்படாத ஒன்றை இல்லை என்பவன் தன்னை பகுத்தறிவாதியாகவும், இருக்கு என்பவனை முட்டாள் என்றும் சொல்லும் வார்த்தைகளைத்தான்!!!
உங்களது பார்வையில் குறைநிறைகளை சுட்டிக்காட்டிய பின்னூட்டல்களுக்கு நன்றி....
.........................................
@Jayadev Das
நான் ஏத்துக்கிறது என் ஒருவனது நிலைப்பாடு, பொதுவில் ஜதார்த்தத்தில் சிந்தித்து எழுதிய பதிவு இது என்பதால்த்தான் பொதுவான நிலைப்பாட்டை சொன்னேன்!!! நான் கடவுள் இல்லை/இருக்கிறார் என்று சொல்லவில்லை; அதை நிரூபிப்பவர்களும், சண்டை பிடிப்பவர்களும் விவாதிக்கட்டும்; கடவுளை நம்பும் அதிக பட்சமான சாதாரண மக்களுக்காக கடவுள் இருந்தாலும்/ இல்லை என்றாலும் இருந்துவிட்டு போகட்டுமே என்றுத்தான் சொன்னேன்!!! தங்களது எண்ணங்களுக்கும், பின்னூட்டல்களுக்கும் நன்றி :-)
\\பிரபஞ்சத்தின் உருவாக்கம் முதல், பூமியில் உயிரின் தோற்றம் வரை பெரும்பாலான தோற்றப்பாடுகளை கடவுளின் துணை இன்றியே அறிவியல் விளக்குகின்றது. \\ இது படித்தவர்கள் செய்யும் பித்தலாட்டம். உயிர் எப்படித் தோன்றியது என்று யாரும் இது வரை விளக்க வில்லை. அடுத்து, அறிவியல் விதிகள் எப்படி உருவாயின என்று யாரும் காரணம் காண்பிக்க வில்லை. ஆப்பிள் விழுவது பொருளீர்ப்பு விசையால் என்று தான் நியூட்டன் சொன்னாரே தவிர அது ஏன் தூரத்தின் இருமடிக்கு தலைகீழ் விகிதத்தில் குறைந்து போக வேண்டும் என்பதற்கு காரணம் சொல்லவில்லை. இது எல்லா அறிவியல் விதிகளுக்கும் பொருந்தும். இருக்கிறது, அது ஏன் அவ்வாறு இருக்கிறது? பதில் எவரும் கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியாது. அங்கே நிற்கிறான் கடவுள்.
\\மிச்சம் இருப்பவை கூட மிக வேகமாக விளக்கப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பான பல தியரிக்களை ஏன் இன்னும் நிரூபிக்க முடியவில்லை எனக் கேட்டால், இன்னும் தேவையான அளவுக்கு தடயங்கள் கிடைக்கவில்லை என்பதே அறிவியலின் பதிலாகும். (தடயங்கள் இல்லாமல் கதை கட்டுவதற்கு விஞ்ஞானம் மதப்புத்தகம் அல்லவே?! ) காலப்போக்கில் தொழில்நுட்பம் வளர வளர மேலும் தடயங்கள் கண்டுபிடிக்கப்படும்போது இன்னும் அதிகமான விடயங்களை விளக்க முடியும். \\ வெங்காயத்தை உரித்தால் ஒரு கட்டத்தில் ஒன்றுமில்லாத கடைசி கட்டத்திற்கு போகலாம், இயற்க்கை விதிகள் எவ்வளவு உரித்தாலும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் வெங்காயம், இதை எவனும் உரித்து முடிக்க முடியாது. எதாவது ஒரு நிகழ்வுக்கு விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்திற்கு காரணம் என்ன என்று தான் போகும், ஒரு போதும் முடியாது. மேலும், Theoretical Physics இன்றைக்கு பரிதாப நிலையில் எந்த break through வும் நடக்காமல் breakdown ஆகிக் கிடக்கிறது என்பது தான் நிதர்சனம்.
\\அதுவரை கடவுள் இல்லாமல் போகட்டுமே. :)\\ இப்படி ஒரு நப்பாசை ஏன் நாத்தீகர்களுக்கு வருகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. கடவுள் இல்லை என்று இது வரை நிரூபிக்கப் படவில்லை என்றால், அதற்க்கு முடிவு வரும் வரை காத்திருப்பேன் என்பது நியாயம், அந்த இடைப் பட்ட காலத்திற்கான தீர்ப்பை இப்போது நானே எழுதுகிறேன் என்ற முந்திரிகொட்டை வேலை எதற்கு? கடவுள் இருந்தால் உங்களுக்கென்ன நஷ்டம், இல்லாமல் போனால் என்ன லாபம்?
\\ஆனா தன்னோட கைக்குள்ள இருக்கற விஷயங்களை முடிஞ்சமட்டும் சிறப்பா நடத்திகிட்டு, மற்ற விஷயங்களோட யதார்த்தத்தை உணர்ந்து ஏத்துக்கறவங்களுக்கும் கடவுள் தேவையில்லை.\\ இது தனி நபர் விருப்பம். மத்தவங்களும் கடவுள் இல்லையென்றால் தான் சுகமாக இருப்பார்கள் என்று ஒருத்தர் நினைப்பது எப்படி சரி என்று தெரியவில்லை. உங்களுக்கு டீ பிடிக்கும் என்றால் இன்னொருத்தருக்கு காபி பிடிக்கலாம், எல்லோரும் டீ குடிப்பதே சிறந்தது என்று எப்படி தனி நபர் நாட்டாமை செய்ய முடியும்?
\\இங்க என்னடான்னா மதத்தின் பலத்தால் மக்களை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளைக் கூட வலுக்கட்டாயமாக மறுக்க வைக்கிறாங்க.\\ இது தவறாக இருக்கலாம். ஆனாலும், அறிவியலில் "நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானக் கொள்கை" என்ற ஒன்று இல்லவே இல்லை. இன்றைய தேதிக்கு அது தவறான கொள்கை என்று நிரூபிக்கப் படாத கொள்கை, எந்த நேரமும் தூக்கிய எறியப் படக் கூடிய கொள்கை- என்று தான் உள்ளன. இதுவும் படித்தவர்கள் செய்யும் ஒரு பொய்ப் பிரச்சாரம். சொல்லப் போனால், அறிவியல் முறைப் படி கடவுள் இருக்கிறார் என்று இறுதியாக நிரூபிக்கவே முடியாது. ஏனெனில் எந்த நிமிடமும் இன்னொருத்தன் வந்து இல்லை என்று நிரூபிக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள் இருக்கிறான் என்றாலும் இல்லை என்றாலும் இரண்டுமே தர்க்காலிக தீர்ப்பு தான். ஆக இந்த கேள்விக்கு அறிவியலை நம்பிகிரவன் கதி அதோ கதி தான்.
\\தீவிரவாதத்தையும் சிலர் இப்படி வளர்க்கறாங்க. இதெல்லாம் நடக்காம பார்த்துக்கொள்ள முடிஞ்சா, மன நிம்மதிக்கு கடவுளை நம்பிக்கொண்டு, விஞ்ஞானத்தையும் ஆதரிச்சு, அமைதியையும் சாந்தத்தையும் போதிக்க முடிஞ்சா போனாப் போகுதுன்னு கடவுள் இருந்துட்டுப் போகலாம்.\\ அமைதியையும் சாந்தத்தையும் விஞ்ஞானம் வளர்க்குமான்னும் தெரியலை. ஜப்பானில் போட்ட அணு குண்டை மதவாதி செய்யவில்லை, விஞ்ஞானிதான் செய்தான். நம்ம ஜீவதர்ஷன் சுற்றுப்புறச் சூழலை காப்பதுங்கன்னு சொல்லி புலம்பரமாதிரி விட்டவன் மதவாதி இல்லை, அறிவியலும் அதன் கண்டுபிடிப்புகளுமே.
\\இப்போதைக்கு அந்தத் தியரி சரின்னு (வேற நம்பகமான தியரி இல்லாததால) நம்பற பன்னாடைங்கள்ள நானும் ஒருத்தன்னு சொல்லிக்க பெருமைப்பட்டுக்கறேன். நீங்களே ஒரு தியரியை முன்வைத்து அதுக்கான திருப்தியான ஆதாரங்களைக் காட்டினால் (குறைந்தபட்சம் ஒரு கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து, கூட்டிக் கொண்டுபோய் காட்டினால்) உங்களைக் நிச்சயம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்.\\ நீங்க சொல்வதற்கும், அந்த சாமியார் மாதிரி வேற நல்லவன் தெரியாததால் நான் அவன்கிட்ட போறேன் என்று ஒரு மதவாதி சொல்வதற்கும் வேறுபாடு துளி கூட இல்லை. டார்வின் தியரி, வெறும் தியரி, அது எந்த வகையிலும் அறிவியல் முறைப் படி நிரூபிக்கப் படவில்லை. அதை ஏற்றுக் கொள்வது உமது குருட்டு நம்பிக்கை, அறிவியல் இல்லை.
\\என்னோட (சொற்ப) உயிரியல் அறிவை வச்சு யோசிச்சா கோழி முட்டைதான் முதல்ல வந்திருக்கணும். பரிணாமத்தில ஒரு உயிரினத்திலிருந்து இன்னொரு உயிரினம் வர்றது மூதாதையரோட கருவில் தான் நடக்க முடியும். அப்படீன்னா, கோழியோட மூதாதையர் ஒண்ணோட முட்டைதான் கோழின்னு சொல்லக்கூடிய variation கொண்ட உயிரினம் ஒண்ணை கொண்டிருந்திருக்கும். அந்த முட்டைல இருந்துதான் முதல் 'கோழி' வகை உயிரினம் வந்திருக்கணும். இல்லையா?\\ இதென்னது? அறிவியலா, இல்லை ஜோசியம் கேட்கிறீரா? காமடி பண்ணாதீங்க பாஸ்!!
@Jayadev Das,
உங்களது கேள்வி(?!)களுக்கு எனது பதில்களை முன்னமே ஒரு விவாதத்தில் அளித்திருந்தேன். அதை திரும்பவும் இங்கே எழுத எனக்கு நேரமில்லை. அதிலிருந்தும் புதிதாகவும் ஒரு சில பாயிண்ட்ஸ்..
* ஒரு கொலையோ, கொள்ளையோ (நேர்மையாக) துப்புத் துலக்கப்படும்போது 'கிடைத்த' சந்தர்ப்ப சாட்சியங்களை அனைத்தையும் சரியாக விளக்கக் கூடிய ஒரு தியரியை உருவாக்கி, அந்தி தியரி சுட்டிக் காட்டும் மனிதனை குற்றவாளி ஆக்குவார்கள். அவன் சிறைக்குச் சென்ற பிறகு, அந்தத் தியரியினால் விளக்கப்படமுடியாத, அவனை குற்றமற்றவன் எனச் சொல்லும் அவதானிப்புக்கள் கிடைத்தால் அவனை விடுதலை செய்து தியரியை மாற்றுவார்கள். இந்த முறை சர்ச்சைக்குரியதுதான். இருந்தாலும் இதற்கு மாற்றான வேறு முறைகள் (1. யார் குற்றம் செய்தால் எனக்கென்ன என்றுவிட்டு சும்மா இருப்பது. 2. நல்ல மாந்திரீகரிடம் மைவைத்துக் கண்டுபிடிப்பது. 3. குத்து மதிப்பாக ரோட்டில் போகும் ஒருவனைப் பிடித்து லாடம் கட்டுவது) எதுவுமே sensible அல்ல. அதனாலேயே இன்றும் இந்த முறையைப் பயன்படுத்துகின்றோம். விஞ்ஞானமும் இப்படியே.
* ஏன் ஒன்று இப்படி இருக்கின்றது என்பதை பிரபஞ்சத்தின் initial conditions தீர்மானித்திருக்கலாம். அந்த initial conditions எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கலாம் என்பதற்கு நிகழ்தகவுகள் இருக்கலாம். அதாவது பிரபஞ்சம் அப்படித் தொடங்கியதால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோம். வேறு மாதிரி தொடங்கியிருந்தால் வேறு மாதிரி இருந்து "நாங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும்" என்ற அரதப்பழசான கேள்வியைக் கேட்டிருப்போம்.
* அறிவியலின் தேக்க நிலைகளுக்கு தரவுகள் இல்லாமையே காரணம் என்று விளக்கியிருக்கிறேன்.
* //எல்லோரும் டீ குடிப்பதே சிறந்தது// அப்படி நான் சொல்லவில்லை.
* //ஆக இந்த கேள்விக்கு அறிவியலை நம்பிகிரவன்// வேறு எதை அறிவியலை விட நம்பகமாக நம்பலாம் என்று சொல்லுங்கள்?
* அறிவியல் வளர்வது வெறும் curiosity யில் மட்டுமே. அதை டிங்கரிங் செய்து தொழில்நுட்பம் செய்யும் வேலைகளுக்கு அறிவியல் பாராட்டும் அடியும் வாங்குகிறது.
* //அந்த சாமியார் மாதிரி வேற நல்லவன் தெரியாததால் நான் அவன்கிட்ட போறேன்// உயிரின் ரகசியத்தை கண்டுபிடிச்சுத்தான் ஆகணும். கட்டாயம் ஒரு சாமியார்கிட்டே போய்த்தான் ஆகணுமா?
* //இதென்னது? அறிவியலா, இல்லை ஜோசியம் கேட்கிறீரா?// இது சரியான அறிவியல் அல்ல. வெறும் பள்ளி உயிரியலை மட்டும் வைத்து யோசித்தது. இதை எங்கும் நான் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி அனுப்பப்போவதில்லை. நான் 'கலாம்", 'வேண்டும்' எனும் பதங்களைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்.
\\உங்களது கேள்வி(?!)களுக்கு எனது பதில்களை முன்னமே ஒரு விவாதத்தில் அளித்திருந்தேன். \\ தங்களது அறிவுப் பூர்வமான(?!) பதில்களுக்கு மிக்க நன்றி நண்பரே. இங்கே பலர் பின்னூட்டமிட்டிருந்தாலும் தங்களுக்கு மட்டும் பதில் எழுதியிருந்தேன், காரணம் நீங்கள் மட்டும் தான் என்னுடைய பின்னூட்டத்தின் மேல் "Interest" காண்பித்திருந்தீர்கள். இந்தப் பதிவு, அதற்க்கு உங்கள் பின்னூட்டம், அதைப் பற்றி என் மனதில் இக்கணம் என்ன சொல்லத் தோன்றுகிறது - அதைப் பதிவு செய்தேன். அவ்வளவுதான். இதை எங்கோ எப்போது தாங்கள் கொடுத்த அறிவான (?!) பதில்களுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். தங்களிடம் நான் கேள்வி எழுப்பி தெரிந்து கொள்ளும் அளவுக்கு புதிய விஷயம் எதுவும் இல்லை. காரணம் எல்லா நாத்தீகர்களும் என்ன சொல்வார்களோ அதையேதான் நீங்களும் சொல்லப் போகிறீர்கள். இங்கே நான் வினாக்களை எழுப்பியது நீங்கள் அவற்றுக்குப் பதில் கொடுத்து படிப்பவர்கள் அறிவுக் கண்களைத் திறந்துவிடுவீர்கள் என்றல்ல. நடுவு நிலை மனதுடன் படிப்பவர்கள் அந்த கேள்விகளைப் படிக்கும் போது தாங்கள் எந்த அளவுக்கு நவீன விஞ்ஞானத்திற்கு பல்லக்கு தூக்குபவர்களால் ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்து கொள்ள மட்டுமே. மேலும், இங்கே நீங்கள் அறிவியல் நிரூபித்தது பற்றியும், அறிவியல் பற்றியும் பல தவறான கருத்துகளைக் கூறியுள்ளீர்கள், அவை முற்றிலும் தவறு. அதைத் தவிர்க்க, நீங்கள் அது குறித்து விவாதிக்காமல் செல்லலாம், அதை விடுத்து இப்படி நீங்கள் சொல்லத் தேவையில்லை.
\\* ஒரு கொலையோ, கொள்ளையோ (நேர்மையாக) துப்புத் துலக்கப்படும்போது 'கிடைத்த' சந்தர்ப்ப சாட்சியங்களை அனைத்தையும் சரியாக விளக்கக் கூடிய ஒரு தியரியை உருவாக்கி, அந்தி தியரி சுட்டிக் காட்டும் மனிதனை குற்றவாளி ஆக்குவார்கள். அவன் சிறைக்குச் சென்ற பிறகு, அந்தத் தியரியினால் விளக்கப்படமுடியாத, அவனை குற்றமற்றவன் எனச் சொல்லும் அவதானிப்புக்கள் கிடைத்தால் அவனை விடுதலை செய்து தியரியை மாற்றுவார்கள். இந்த முறை சர்ச்சைக்குரியதுதான். இருந்தாலும் இதற்கு மாற்றான வேறு முறைகள் (1. யார் குற்றம் செய்தால் எனக்கென்ன என்றுவிட்டு சும்மா இருப்பது. 2. நல்ல மாந்திரீகரிடம் மைவைத்துக் கண்டுபிடிப்பது. 3. குத்து மதிப்பாக ரோட்டில் போகும் ஒருவனைப் பிடித்து லாடம் கட்டுவது) எதுவுமே sensible அல்ல. அதனாலேயே இன்றும் இந்த முறையைப் பயன்படுத்துகின்றோம். விஞ்ஞானமும் இப்படியே.\\ நீங்கள் எதற்காக தேவையில்லாமல் விஞ்ஞான பிரச்சார பீரங்கி [நன்றி: ஜீவ தர்ஷன்] போல செயல் படுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் மேலே சொல்லியுள்ளதை நானும் மறுக்கப் போவதில்லை. இந்தப் பதிவு எதைப் பற்றியது என்று உங்களுக்கு இன்னொருத்தர் எடுத்துச் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. இங்கே விவாதிப்பது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவியலைக் கொண்டு முடிவு செய்ய முடியுமா என்பது. முடியாது என்பதே என் வாதம். அறிவியல் இயங்கும் விதமே தவறு என்று நான் சொல்லியிருந்தால் மட்டுமே நீங்கள் இந்த மாதிரி வாதங்களைப் பிளக்க முடியும்.
\\ஏன் ஒன்று இப்படி இருக்கின்றது என்பதை பிரபஞ்சத்தின் initial conditions தீர்மானித்திருக்கலாம். அந்த initial conditions எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கலாம் என்பதற்கு நிகழ்தகவுகள் இருக்கலாம். \\ நிகழ் தகவுப் படி தான் இந்தப் பேரண்டம் இயங்க வேண்டும் என்று தீர்மானம் செய்தது யாரோ?
\\அதாவது பிரபஞ்சம் அப்படித் தொடங்கியதால் தான் நாங்கள் இப்படி இருக்கிறோம். வேறு மாதிரி தொடங்கியிருந்தால் வேறு மாதிரி இருந்து "நாங்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும்" என்ற அரதப்பழசான கேள்வியைக் கேட்டிருப்போம்.\\ உங்களிடம் பதில் இல்லை என்றால் கேள்வி இப்படித்தான் சமாளிக்க வேண்டும். வேறென்ன பண்ணுவது?
\\* அறிவியலின் தேக்க நிலைகளுக்கு தரவுகள் இல்லாமையே காரணம் என்று விளக்கியிருக்கிறேன்.\\ அதென்னது தரவு? யாராச்சும் இதற்க்கு அர்த்தம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. எனக்கு புரியலை.
\\* //ஆக இந்த கேள்விக்கு அறிவியலை நம்பிகிரவன்// வேறு எதை அறிவியலை விட நம்பகமாக நம்பலாம் என்று சொல்லுங்கள்?\\ சம்பந்தா சம்பதம் இல்லாமல் சிவனே என்று கிடக்கும் அறிவியலை இங்கே இழுத்து வந்து என் அன்பரே இந்த பாடு படுத்துகிறீர்கள்? கடவுளை இருக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடித்து தருகிறேன் என்று அறிவியலா சொன்னது? அறிவியலின் நோக்கம் என்ன, வரம்பு என்ன என்பது குறித்து தவறான கருத்துகளை நீங்களாகவே கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தால் அதற்க்கு அறிவியல் பொறுப்பாகாது. அறிவியல் என்பது ஜடப் பொருட்களை எவ்வாறு மனிதனின் பயன்பாட்டுக்கு உகந்தாதாக ஆக்கி கொள்ளலாம் என்று ஆராயும் ஒரு முறை. அவ்வளவு தான். கடவுள் உலகத்தைப் படைத்தாரா இல்லையா, உயிர் என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு அறிவியலால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது.
\\* அறிவியல் வளர்வது வெறும் curiosity யில் மட்டுமே. அதை டிங்கரிங் செய்து தொழில்நுட்பம் செய்யும் வேலைகளுக்கு அறிவியல் பாராட்டும் அடியும் வாங்குகிறது.\\ தேவையில்லாத தகவல்.
\\* //அந்த சாமியார் மாதிரி வேற நல்லவன் தெரியாததால் நான் அவன்கிட்ட போறேன்// உயிரின் ரகசியத்தை கண்டுபிடிச்சுத்தான் ஆகணும். கட்டாயம் ஒரு சாமியார்கிட்டே போய்த்தான் ஆகணுமா?\\ சொன்னது ஒரு உதாரணம், சாமியாரை எப்படி அடிப்படை இல்லாமல் நம்புகிறார்களோ அதே போல நீங்களும் அறிவியல் முறைப் படி நிறுவப் படாத டார்வின் கொள்கையை எந்த அடிப்படையும் இல்லாமல் நம்புகிறீர் என்று சொல்ல இவ்வாறு சொன்னேன். அதை அதிகம் பிடிச்சு தொங்க வேண்டியதில்லை.
\\* //இதென்னது? அறிவியலா, இல்லை ஜோசியம் கேட்கிறீரா?// இது சரியான அறிவியல் அல்ல. வெறும் பள்ளி உயிரியலை மட்டும் வைத்து யோசித்தது. இதை எங்கும் நான் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி அனுப்பப்போவதில்லை. நான் 'கலாம்", 'வேண்டும்' எனும் பதங்களைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம். \\ நீங்கள் எங்கேயும் அனுப்பப் போவதில்லை என்பதற்காக நீங்கள் விடும் கப்சா, புருடக்களுக்கு மறுப்பு சொல்லாமல் தலையாட்ட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
// இந்தப் பதிவு எதைப் பற்றியது என்று உங்களுக்கு இன்னொருத்தர் எடுத்துச் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை. //
இது வெறும் கடவுள் நம்பிக்கைப் பதிவாக மட்டும் இருந்திருந்தால் நான் கருத்துச் சொல்ல மெனக்கிட்டிருக்கவோ, நேரத்தை உங்களுடன் வீண் விரயம் செய்யவோ சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்திருக்காது. 'விஞ்ஞானம் திண்டாடுகின்றது' எனும் சொல்லாடல்தான் என்னை கருத்து சொல்ல வைத்தது. அத்துடன் கடவுள் பற்றிய இந்தப் பதிவில் டார்வின் தியரி, அணுகுண்டு, ஐன்ஸ்டீன், பெருவெடிப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது நீங்கள் தான் என்று நினைக்கின்றேன்... இப்போது நான் எழுதும் கருத்துக்கள் பதிவைப்பற்றியோ பதிவு ஆசிரியரைக் குறித்தோ எழுதப்படவில்லை. நீங்களும் எனது கருத்துக்களுக்கு பொது வெளியில் தனிப்பட்ட முறையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் விரும்பினால் இந்த விவாதத்தை மெயிலில் தொடரலாம். (abarajithan11[at]yahoo[dot]com)
// அறிவியல் இயங்கும் விதமே தவறு என்று நான் சொல்லியிருந்தால் மட்டுமே நீங்கள் இந்த மாதிரி வாதங்களைப் பிளக்க முடியும்.//
பரிணாமக் கொள்கை முன்வைக்கப்படும் விதம்: அதாவது நூறுவீத உறுதியும் மறுதலிக்க முடியாத ஆதாரங்களும் இல்லாமல், இதுவரை கிடைத்த அவதானிப்புக்களையும் பரிசோதனை முடிவுகளையும் வேறு எந்தக் கொள்கையையும் விட சரியாக விளக்குகின்றது எனும் காரணம், ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனும் உங்கள் கருத்துக்கான எனது பதில்தான் அது.
//நிகழ் தகவுப் படி தான் இந்தப் பேரண்டம் இயங்க வேண்டும் என்று தீர்மானம் செய்தது யாரோ?// //உங்களிடம் பதில் இல்லை என்றால் கேள்வி இப்படித்தான் சமாளிக்க வேண்டும். வேறென்ன பண்ணுவது?//
இந்தப் பதிலில் தவறொன்றும் இருப்பதாக எனக்குப்படவில்லை. நான் ஆணாகப் பிறந்துவிட்டேன். ஏன் பெண்ணாகப் பிறக்கவில்லை? ஏன் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது? எனும் கேள்வி போன்றதுதான் உங்களது கருத்தும். ஆண் அல்லது பெண் ஆக குழந்தை பிறப்பதில் கிட்டத்தட்ட சரிவிகித வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நான் பெண்ணாகப் பிறந்திருந்தாலும் "நான் ஏன் ஆணாகப் பிறக்கவில்லை?" எனும் கேள்வியை கேட்டிருக்கலாம். இதற்கும் இதே பதில்தான் விடையாகும்.
//அதென்னது தரவு? யாராச்சும் இதற்க்கு அர்த்தம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.//
சிம்பிள்.. தரவு = data (Facts and statistics collected together for reference or analysis.) பெருவெடிப்பின்போது அருகே கேமிராவும் தெர்மாமீட்டரும் ஸ்டாப்வாட்சும் மீட்டர் கோலும் வைக்கும் வாய்ப்பு துரதிஷ்டவசமாக நமக்கு கிட்டாத / கிட்டமுடியாத காரணத்தால், பிரபஞ்சத்தின் initial conditionsஐ அவ்வளவு எளிதாக நூறுவீதம் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. மன்னிக்கவும்.
//அறிவியல் என்பது ஜடப் பொருட்களை எவ்வாறு மனிதனின் பயன்பாட்டுக்கு உகந்தாதாக ஆக்கி கொள்ளலாம் என்று ஆராயும் ஒரு முறை. அவ்வளவு தான்.//
அப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் கடவுள் இருந்தே தீர வேண்டியதற்கான தத்துவ / விஞ்ஞான நிரூபணத்தை சொல்ல முடியுமா?
//\\* அறிவியல் வளர்வது வெறும் curiosity யில் மட்டுமே. அதை டிங்கரிங் செய்து தொழில்நுட்பம் செய்யும் வேலைகளுக்கு அறிவியல் பாராட்டும் அடியும் வாங்குகிறது.\\ தேவையில்லாத தகவல்.//
அது இதற்கான பதில்: //ஜப்பானில் போட்ட அணு குண்டை மதவாதி செய்யவில்லை, விஞ்ஞானிதான் செய்தான். நம்ம ஜீவதர்ஷன் சுற்றுப்புறச் சூழலை காப்பதுங்கன்னு சொல்லி புலம்பரமாதிரி விட்டவன் மதவாதி இல்லை, அறிவியலும் அதன் கண்டுபிடிப்புகளுமே.// (நீங்கள் ஐதிய கருத்துக்களே உங்களுக்கு நினைவு இல்லாவிட்டால்.. ப்ச்..
//சொன்னது ஒரு உதாரணம், சாமியாரை எப்படி அடிப்படை இல்லாமல் நம்புகிறார்களோ அதே போல நீங்களும் அறிவியல் முறைப் படி நிறுவப் படாத டார்வின் கொள்கையை எந்த அடிப்படையும் இல்லாமல் நம்புகிறீர் என்று சொல்ல இவ்வாறு சொன்னேன். //
நீங்கள் பயன்படுத்தும் 'அறிவியல் முறை' எனும் பதத்தை கொஞ்சம் விளக்க முடியுமா? பரிணாமக் கொள்கையை (டார்வின் கொள்கை அல்ல) (தற்போதைக்கு)ஏற்றுக் கொள்வதற்கு (நம்புதல் அல்ல) உயிரின் தோற்றம் பற்றிய ரகசியத்தை கண்டுபிடிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்குஇதுவரை கிடைத்த அவதானிப்புக்கள் அடிப்படையாக இருக்கின்றன. சாமியாரை நம்புவதற்கான தேவை நமக்கு இல்லை.
//நீங்கள் எங்கேயும் அனுப்பப் போவதில்லை என்பதற்காக நீங்கள் விடும் கப்சா, புருடக்களுக்கு மறுப்பு சொல்லாமல் தலையாட்ட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.//
கருத்துக்கள் தீர்மானமாகச் சொல்லப்படும் வேளை தவிர மற்ற வேளைகளில் அவை அனுமானமாகக் கூட இருக்கலாம். அவற்றை நம்புவதற்கோ, எதிர்ப்பதற்கோ அவசியம் இல்லை.
\\இது வெறும் கடவுள் நம்பிக்கைப் பதிவாக மட்டும் இருந்திருந்தால் நான் கருத்துச் சொல்ல மெனக்கிட்டிருக்கவோ, நேரத்தை உங்களுடன் வீண் விரயம் செய்யவோ சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்திருக்காது. 'விஞ்ஞானம் திண்டாடுகின்றது' எனும் சொல்லாடல்தான் என்னை கருத்து சொல்ல வைத்தது. அத்துடன் கடவுள் பற்றிய இந்தப் பதிவில் டார்வின் தியரி, அணுகுண்டு, ஐன்ஸ்டீன், பெருவெடிப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது நீங்கள் தான் என்று நினைக்கின்றேன்...\\ பெரும்பாலானவர்களுக்கு அறிவியலைப் பற்றியோ, பேரண்டம் உருவானது, உயிர்கள் தோன்றியது குறிந்து அறிவியல் சொல்வது குறித்தோ தெளிவாகத் தெரியாது. அங்கே உங்கள் இஷ்டத்துக்கு கதை கட்டலாம். இங்கே இந்த பதிவில் கண் முன்னே பதியப் பட்டுள்ள கருத்துகள் குறித்தும் இதே வேலையைச் செய்யலாமா? கொஞ்சம் நேர்மையையும் வளர்த்துக் கொள்ளுங்க அன்பரே. அதென்னது நினைக்கிறேன் என்று சொல்கிறீர்கள், சந்தேகமிருந்தால் மேலே படித்து விட்டு உறுதியாகவே சொல்லலாமே? இப்போது குறித்துக் கொள்ளுங்கள், டார்வின் தியரி, பெருவெடிப்பு குறித்து பதிவில் ஆசிரியர் ஜீவதர்ஷன் தான் முதலில் குறிப்பிட்டிருக்கிறார், நீங்கள் கனவு காண்பது போல நான் அல்ல. சந்தேகமிருந்தால் இன்னொரு முறை படிக்கவும். அடுத்து, அணுகுண்டு, ஐன்ஸ்டீன் இரண்டுமே ஜீவதர்ஷன் அவர்கள் சொன்ன கருத்துக்கு என்னுடைய கருத்து, என்னைப் பொறுத்தவரை இது அவர் கருத்துக்கு சம்பந்தப் பட்டதாகவே நான் கருதுகிறேன். சம்பந்தமில்லை என நீங்கள் நினைப்பது உங்கள் சுதந்திரம்.
\\ இப்போது நான் எழுதும் கருத்துக்கள் பதிவைப்பற்றியோ பதிவு ஆசிரியரைக் குறித்தோ எழுதப்படவில்லை. நீங்களும் எனது கருத்துக்களுக்கு பொது வெளியில் தனிப்பட்ட முறையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் விரும்பினால் இந்த விவாதத்தை மெயிலில் தொடரலாம்.\\ தங்களது அழைப்புக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரையில் இந்த பிளாக்கில் நான் கொடுத்த பதில்கள் அத்தனையுமே இந்த பதிவுக்குத் தொடர்புடையதாகவே கருதுகிறேன், தொடர்பில்லாததாக எதுவும் எனக்குத் தோன்றவில்லை. நான் அறிவியல் செயல் படும் விதமே தவறு என்று சொன்னதாக நீங்கள் சொன்னதை மட்டும் மறுக்கிறேன்.
\\பரிணாமக் கொள்கை முன்வைக்கப்படும் விதம்: அதாவது நூறுவீத உறுதியும் மறுதலிக்க முடியாத ஆதாரங்களும் இல்லாமல், இதுவரை கிடைத்த அவதானிப்புக்களையும் பரிசோதனை முடிவுகளையும் வேறு எந்தக் கொள்கையையும் விட சரியாக விளக்குகின்றது எனும் காரணம், ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனும் உங்கள் கருத்துக்கான எனது பதில்தான் அது.\\ நீங்கள் பின்பற்றுவது அறிவியல் தான் நீங்கள் தலையில் அடித்து சத்தியம் செய்து கொண்டிருந்தாலும் எனக்கு அவை அறிவியலாகத் தோன்றவில்லை. காரணம் கால், அறை, முக்கால் பங்கு நிரூபிக்கப் பட்டாலே போதும் அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளளாம் என்று இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஏற்றுக் கொள்வது உங்கள் தனி நபர் விருப்பம், ஆனால் அதுவும் அறிவியல் தான் என்ற தவறான கருத்தை பரப்புகிறீர்கள், அதை ஏற்றுக் கொள்ள இயலாது. இன்றைய தேதிக்கு டார்வின் கொள்கையை நிறுவப் பட்ட கொள்கையாக, ஏற்றுக் கொள்ளத் தக்க கொள்கையாக அறிவியல் அங்கீகரிக்க வில்லை, அதனால் நானும் அதை ஏற்கப் போவதில்லை.
\\இந்தப் பதிலில் தவறொன்றும் இருப்பதாக எனக்குப்படவில்லை. நான் ஆணாகப் பிறந்துவிட்டேன். ஏன் பெண்ணாகப் பிறக்கவில்லை? ஏன் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது? எனும் கேள்வி போன்றதுதான் உங்களது கருத்தும். ஆண் அல்லது பெண் ஆக குழந்தை பிறப்பதில் கிட்டத்தட்ட சரிவிகித வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நான் பெண்ணாகப் பிறந்திருந்தாலும் "நான் ஏன் ஆணாகப் பிறக்கவில்லை?" எனும் கேள்வியை கேட்டிருக்கலாம். இதற்கும் இதே பதில்தான் விடையாகும்.\\ சரிவிகித வாய்ப்புப் படி தான் இந்த பிரபஞ்சம் இயங்கவேண்டும் என்ற சட்டத்தைப் போட்டது யார் என்று தான் முன்னரே கேட்டிருந்தேன், நீங்கள் அதற்க்கு இன்னமும் பதில் சொல்லாமல், பழைய பாட்டைய புது டியூன் போட்டு பாடிக் கொண்டிருக்கிறீர்கள், அப்புறம் இன்னொரு நாள் வேறொரு பதிவில், உனக்கு நான் முன்னரே பதில் சொல்லி விட்டேனே, உன் மண்டையில் ஏறவில்லையா என்று அறிவுப் பூர்வமான (?!) பதிலைத் தந்து திணறடிப்பீர்கள். ஐயா ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், அறிவியல் மூலம் எல்லாத்தையும் விளக்கப் போகிறேன் என்கிறீர்கள், அது முடியவே முடியாது. ஒரு மைனஸ் ஜார்ஜும் இன்னொரு மைனஸ் ஜார்ஜும் விளக்கும். பிளஸ் ஜார்ஜை ஈர்க்கும்.[Like charges repel, unlike charges attract each other] இதை வைத்து எப்படி மின்சாரம் தயாரிக்கலாம், விளக்கு ஏறிய விடலாம் என்பதோடு அறிவியல் வேலை முடிகிறது, அது ஏன் ஈர்க்கிறது, விளக்குகிறது என்று அறிவியலைக் கேட்டால் அது ஞே.......... என்று தான் முழிக்கும், பதில் தராது. இதைத்தான் நான் வெவ்வேறு வழிகளில் சொல்ல வருகிறேன். ஏற்றுக் கொள்வதும், விடுவதும் உமது விருப்பம்.
\\சிம்பிள்.. தரவு = data (Facts and statistics collected together for reference or analysis.) பெருவெடிப்பின்போது அருகே கேமிராவும் தெர்மாமீட்டரும் ஸ்டாப்வாட்சும் மீட்டர் கோலும் வைக்கும் வாய்ப்பு துரதிஷ்டவசமாக நமக்கு கிட்டாத / கிட்டமுடியாத காரணத்தால், பிரபஞ்சத்தின் initial conditionsஐ அவ்வளவு எளிதாக நூறுவீதம் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. மன்னிக்கவும்.\\ ஆற்றல் ஆக்கவோ அழிக்கவோ முடியாதுன்ன, அந்தப் புள்ளிக்குள்ள இந்த பிரபஞ்சமே எப்படி இருந்தது? இந்த ஆற்றலில் மூலம் என்ன? ஏன் ஒரு புள்ளி மட்டும் இருந்தது, ஏன் பத்து புள்ளிகள் இல்லை? புள்ளி இருந்தால், புள்ளியைச் சுற்றி என்ன இருந்தது? பெருவெடிப்பு நடந்த குறிப்பிட்ட காலம் [நேனோ செகண்டுகளில்] ஆன பின்னர்தான் அறிவியல் விதிகள் செயல் பாட்டுக்கே வந்தன என்கிறார்கள். அந்த மாதிரி விதிகளை தூங்க வச்சு எழுப்பி விடாது யாரு, எது, எப்படி? பெருவெடிப்புக்கு முன்னர் காலமும் இல்லை, இடமும் இல்லை. அப்படி சுருக்கி வச்சது யாரு........ initial conditionsஐ செட் பண்ணியது யாருன்னா, நிகழ் தகவு என்பீர், நிகழ் தகவு படிதான் இது நடக்கனும்னு சட்டம் போட்டது யாரு? ஞே......... தான். இதையெல்லாம் கேட்டால் பதில் சொல்லாம [தெரியாம], "அரத பழசான கேள்விகள்னு" ஒரே அடியா சொல்லி, கேட்டவன் கேனையன் என்று சொல்லிட்டு போவீங்க, நீங்க விஞ்ஞானிங்க, நாங்க கேனப் பசங்க........... குஷ்டமப்பா....... சீ.....கஷ்டமப்பா...........
\\அப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் கடவுள் இருந்தே தீர வேண்டியதற்கான தத்துவ / விஞ்ஞான நிரூபணத்தை சொல்ல முடியுமா?\\ விஞ்ஞானம் எல்லாவற்றையும் நிரூபிக்கிறது என்று நீர் நம்பும் பொய்யை என்னையும் ஏன் நம்பச் சொல்கிறீர் நண்பரே? உண்மையில் விஞ்ஞானம் எல்லாவற்றையும் நிரூபிக்கிறதா? ஒளியின் வேகம் மாறிலி என்று நிரூபித்து விட்டுத்தான் சார்பியல் கொள்கையை ஐன்ஸ்டீன் உருவாக்கினாரா? ஒளியின் வேகத்தை எதுவும் மிஞ்ச முடியாது என்று சார்பியல் கொள்கை கூறுகிறதே, அதென்ன முறிக்க முடியாத நாட்டமை தீர்ப்பா? "இல்லை" என்பதே இவற்றுக்கெல்லாம் பதில் என்றால், அறிவியல் எல்லாவற்றையும் நிரூபித்து வருகிறது என்று நீர் கதை கட்டிக் கொண்டிருக்கிறீரே, அது சரியா? இத்தனை ஓட்டைகள் அறிவியலில் இருக்கும்போது, எதற்காக ஐயா அறிவியல் முறைப்படி நிரூபணம் கேட்கிறீர்?
சரி நான் ஏன் கடவுள் இருப்பதாக நம்புகிறேன்? அதை நான் நியாயப் படுத்த வேண்டுமல்லவா? இந்த பிரபஞ்சத்தில் ஜடப் பொருள் இருக்கிறது. அதற்க்கு எந்த அறிவும் கிடையாது. ஒரு இடத்தில் கிடந்தால் இன்னொரு இடத்திற்கு ஆயிரம் வருஷம் ஆனாலும் கூட தானாக போகாது. அதே சமயம் உயிர் இருக்கிறது. அமீபாவில் இருந்து, மனிதன், யானை, நீலத் திமிங்களும் வரை, அசையும், அசையா உயிர்கள் உள்ளன. இவற்றுக்கு புத்திசாலித் தனம் உள்ளது. ஒரு உயிர் இருந்தால் அது ஜடத்தை வெவ்வேறு அற்புதமா அமைப்புகளாக மாற்றும், அது தாவரங்கள் உருவாக்கும் அழகிய மலர்கள், பழங்களாக இருக்கலாம், குருவிகள் கட்டும் கூடுகளாக இருக்கலாம் அல்லது மனிதன் உருவாக்கும் நியூயார்க் போன்ற பெரிய நகரமாகக் கூட இருக்கலாம். ஜடம் தானாக அற்புதத்தை உருவாக்காது, அவ்வாறு ஒரு அற்புதம் ஜடத்தில் நிகழ்ந்தால் அது ஒரு உயிரால் மட்டுமே முடியும். இது நான் கண் கூடாகப் பார்ப்பது. அப்படியானால், உலகில் உயிர்களின் உடலமைப்புகளே ஒரு அற்புதம் தானே, [மனித உடலையே எடுத்துக் கொண்டால் கூட அற்ப்புதம் தானே? இந்த சூரிய குடும்ப அமைப்பே அற்ப்புதம் தானே, இந்த பேரண்டமே அற்ப்புதம் தானே?] அந்த அமைப்பு ஏற்ப்பட வேண்டுமானால் அதற்குப் பின்னாலும் ஒரு புத்திசாலித் தனம் இருந்தால் மட்டுமே முடியும். எனக்குத் தெரிந்த வரையில் ஜடத்தில் புத்திசாலித் தனம் இல்லை. உயிரில் இருக்கிறது. ஆக இந்த உலகில் உள்ள அற்புதமான அமைப்புக்குப் பின்னால் உள்ள புத்திசாலித் தனத்துக்கும் காரணகர்த்தாவாக ஒரு உயிர் இருந்தேயாக வேண்டும். அது யார் என்று கேட்டால் எனக்குத் தெரியாது, ஆனால் நிச்ச்சயம் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஓவியத்தைப் பார்த்தவுடன் ஓவியன் இருந்தே தீருவான் என்று சொல்வது போல. இதை நீங்கள் நக்கல் செய்யலாம், நையாண்டி செய்யலாம், எனக்கு அது குறித்து கவலை இல்லை.
\\(நீங்கள் ஐதிய கருத்துக்களே உங்களுக்கு நினைவு இல்லாவிட்டால்.. ப்ச்..\\ நீங்கள் Bullet போட்டு பாயின்ட் பாயிண்டா அடிச்சு தள்றீங்க, ஏன்னா உங்களுக்கு நேரமே இருக்காது. நான் வேலையற்றவன், அதையெல்லாம் கனெக்ட் பண்ணி பார்க்கணும், என்னமோ கனெக்ட் பண்ண முடியல, உங்க லெவலுக்கு என்னாலபுரிஞ்சுக்க முடியாதுங்களே. என்ன செய்ய?
\\சாமியாரை நம்புவதற்கான தேவை நமக்கு இல்லை.\\ நான் ஏதோ சாமியார்கிட்ட போங்கன்னு ரெக்கமண்டு செஞ்சா மாதிரியே சொல்றீங்களே இது நியாயமா அன்பரே?
\\கருத்துக்கள் தீர்மானமாகச் சொல்லப்படும் வேளை தவிர மற்ற வேளைகளில் அவை அனுமானமாகக் கூட இருக்கலாம். அவற்றை நம்புவதற்கோ, எதிர்ப்பதற்கோ அவசியம் இல்லை.\\ நிரூபிக்கப் படும் வரை அது வெறும் கொள்கை தான். எந்த மதிப்பும் இல்லை. எதிர்க்க வேண்டாம் என்பது போல, ஆதற்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. நாத்திக வாதிகள் அதை உண்மை என்றே தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு அதையே மக்களிடமும் பொய்ப் பிரச்சாராம் செய்து வருகிறார்கள்.
கீழ்க்கண்ட எனது கருத்துக்களுக்கு பதில் சொல்லும் முன்பு, ஒருசில கேள்விகளுக்கு பதிலளித்துவிடுங்கள்.
நீங்கள் பதிலளிக்காமல் விட்டுவிட்ட எனது அடிப்படைக் கேள்விகள் சில:
* வேறு எதை அறிவியலை விட நம்பகமாக நம்பலாம் என்று சொல்லுங்கள்?
* நீங்கள் பயன்படுத்தும் 'அறிவியல் முறை' எனும் பதத்தை கொஞ்சம் விளக்க முடியுமா? (அ) அறிவியல் முறை என்றால் என்ன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
புதிய கேள்விகள்.
* கடவுள் என்பதற்கு நீங்கள் வழங்கக்கூடிய முழு விளக்கம் என்ன? (பலர் பல மாதிரி கூறுவார்கள்: creator, judge, manipulator..etc )
* நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு, உங்கள் நம்பிக்கையைத் தவிர, வேறு எந்த விளக்க முறையை (தத்துவம், மதக்கட்டுக்கதைகள்) கொண்டு விளக்கம் அளிப்பீர்கள்?
* நீங்கள் நம்பும் அந்த ஆதி உயிரின் தன்மை, சக்தியின் மட்டுப்படுத்தல்கள், தோற்றம் அல்லது இருப்பின் தன்மை ஆகியவற்றை விளக்கவும்.
* பிரபஞ்சமும் உயிரும் அந்த ஆதி உயிரால் எப்படி உருவாக்கப்பட்டன? மற்றும் ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டன?
* உயிர்கள் அனைத்தும் ஒரே காலத்தில் உருவாகியவையா?
// நான் அறிவியல் செயல் படும் விதமே தவறு என்று சொன்னதாக நீங்கள் சொன்னதை மட்டும் மறுக்கிறேன்.////டார்வின் கொள்கையை நிறுவப் பட்ட கொள்கையாக, ஏற்றுக் கொள்ளத் தக்க கொள்கையாக அறிவியல் அங்கீகரிக்க வில்லை,//
இதற்கு பதில் சொல்வதற்கு ---------- எனும் கேள்விக்கான உங்கள் பதில் எனக்கு தேவைப்படுகின்றது.
//சரிவிகித வாய்ப்புப் படி தான் இந்த பிரபஞ்சம் இயங்கவேண்டும் என்ற சட்டத்தைப் போட்டது யார் என்று தான் முன்னரே கேட்டிருந்தேன்//
அது சரிவிகிதம் என்றும் நான் சொல்லவில்லை. தேவையான தரவுகள் இன்னும் கிடைக்காமையால் அந்தக் குறிப்பிட்ட விகிதங்களை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது.
//நீங்க விஞ்ஞானிங்க, நாங்க கேனப் பசங்க...........//
உண்மையில் எனது கல்வித் தகைமை உங்களைவிட நிச்சயம் பல படிகள் குறைந்தது. எனக்கு இணையத்தினூடாக நெருக்கமானவர்களுக்கு இவ்விபரம் நன்றாகத் தெரியும். எனக்கு அறிவியலில் Popular science தவிர அநேகமாக வேறேதும் (சமன்பாடுகள்...) தெரியாது. நிஜ அறிவியலை இப்போதுதான் படிப்படியாக கற்க ஆரம்பித்திருக்கின்றேன். அறிவியலின் ஆழமும், ஆச்சரியமும், தன்னம்பிக்கையும் என்னை இன்னும் அறிவியலை காதலிக்க வைக்கின்றன.
// விஞ்ஞானம் எல்லாவற்றையும் நிரூபிக்கிறது என்று நீர் நம்பும் பொய்யை //
தகுந்த தரவுகள் கிடைக்கும்போது (மட்டும்) விஞ்ஞானம் எல்லாவற்றையும் நிரூபிக்கக் கூடியது, மற்றும் முக்கியமாக வேறு எந்த விளக்க முறைகளையும்விட பலமடங்கு நம்பகமானது என்பதே எனது கருத்து.
//அதென்ன முறிக்க முடியாத நாட்டமை தீர்ப்பா?//
இதற்கு சமுத்ரா சார் Popular science -லேயே எளிமையாக விளக்கம் தருகின்றார்.
//இத்தனை ஓட்டைகள் அறிவியலில் இருக்கும்போது, எதற்காக ஐயா அறிவியல் முறைப்படி நிரூபணம் கேட்கிறீர்?//
எத்தனை ஓட்டைகள் (தற்போதைக்கு) இருந்தாலும், மற்ற எந்த விளக்க முறையையும் விட ஓட்டைகள் குறைவாகவும் சிறியதாகவும் அறிவியலில் மட்டுமே இருக்கின்றது, இருக்கமுடியும்.
//நீங்கள் Bullet போட்டு பாயின்ட் பாயிண்டா அடிச்சு தள்றீங்க, ஏன்னா உங்களுக்கு நேரமே இருக்காது. நான் வேலையற்றவன், அதையெல்லாம் கனெக்ட் பண்ணி பார்க்கணும், என்னமோ கனெக்ட் பண்ண முடியல, //
இது ஒரு வகைல உண்மையிலேயே உண்மைதான்...
நீங்கள் பதிலைக்காமல் விட்டுவிட்ட எனது அடிப்படைக் கேள்விகள் சில:
* வேறு எதை அறிவியலை விட நம்பகமாக நம்பலாம் என்று சொல்லுங்கள்?
* நீங்கள் பயன்படுத்தும் 'அறிவியல் முறை' எனும் பதத்தை கொஞ்சம் விளக்க முடியுமா? (அ) அறிவியல் முறை என்றால் என்ன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?
சரி, இவ்வளவு நேரமாக, நாளாக எனது கருத்துக்களின் மேலேயே இருவரும் விவாதித்தோம். இனி கொஞ்சம் உங்களுடைய சித்தாந்தத்தின் யதார்த்தங்களை ஆராயலாம்.
//இந்த பிரபஞ்சத்தில் ஜடப் பொருள் இருக்கிறது. அதற்க்கு எந்த அறிவும் கிடையாது. ஒரு இடத்தில் கிடந்தால் இன்னொரு இடத்திற்கு ஆயிரம் வருஷம் ஆனாலும் கூட தானாக போகாது.//
Radioactive elements கூட ஜடப் பொருட்கள்தான். ஆனால் அவை புறத் தூண்டல்கள் எதுவுமில்லாமல் சிதைவது எப்படி? Also, what about quantum fluctuations?
//இவற்றுக்கு புத்திசாலித் தனம் உள்ளது.//
not exactly. அடிப்படை உயிர்கள் ஒருவைகையில் ரோபாட்கள்தான். உயிர்வாழ்வது மட்டுமே தெரிந்த ரோபாட்கள். மனிதர்கள் கூட என்னைப் பொறுத்தவரை மேம்பட்ட ரோபாட்கள். அவ்வளவே.
// இந்த பேரண்டமே அற்ப்புதம் தானே?//
ஒரு பிடி மண்ணை அள்ளி வெறுந்தரையில் கொட்டினால் அதில் தோன்றும் வடிவம்கூட ஒரு அற்புதமே. எனவே, தற்செயல் விளைவுகள்கூட பல அற்புதங்களை உருவாக்கலாம்.
//ஓவியத்தைப் பார்த்தவுடன் ஓவியன் இருந்தே தீருவான்//
Radioactive material ஒன்றை போட்டோ காகிதத்தில் சுற்றி வைத்தால், எந்தப் புறத் தாக்கங்களும், புத்தியின் தாக்கமும் இல்லாமல் உருவாகும் வடிவம், புள்ளிகள் கூட ஒருவகையில் அழகும் அற்புதமும் கொண்டதே...
//உலகில் உயிர்களின் உடலமைப்புகளே ஒரு அற்புதம் தானே//
உண்மை. முன்னூறு கோடி வருட பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு, ஏன் அவை அற்புதமாக இருக்கின்றன என விளக்குகின்றது.
//உள்ள புத்திசாலித் தனத்துக்கும் காரணகர்த்தாவாக ஒரு உயிர் இருந்தேயாக வேண்டும். அது யார்//
இதற்கு எதிராக நான் ஒரு அரதப்பழசான நாத்திகக் கேள்வியை கேட்கலாம். அந்த ஆதார உயிறை உருவாக்கியது யார்? இதற்கு அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ நீங்கள் விளக்கம் கொடுக்க முனையலாம்.
@ Abarajithan Gnaneswaran & Jayadev Das
கடவுள் இருக்கிறர் என்பதற்கு ஆண்மிகத்திடமும்; கடவுள் இல்லை என்பதற்கு அறிவியலிடமும் போதுமான ஆதாரம் இல்லை; கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை; அப்படி கிடைத்தால் கிடைக்கும்போது பார்த்துக்கலாம்; அதுவரை கடவுள் இருக்கு என்பவன் இருக்கு என்று சொல்லிவிட்டு போகட்டும், இல்லை என்பவன் இல்லை என்று சொல்லிவிட்டு போகட்டும்; இரண்டுமே நம்பிக்கை சார்ந்தது!!!! ; நான் சொல்வது இல்லை என்பவர்களில் 'பலர்' தங்களை பகுத்தறிவாதியாகவும், இருக்கின்றது என்பவனை முட்டாள் என குறிப்பிடுவதையும்தான் தவறு என்கின்றேன்!!!
அத்துடன் அதிகளவிலானவர்களின் மனதுக்கு அமைதி, நின்மதி, சாந்தம் போன்றவற்றை கடவுள் என்னும் நிரூபிக்கப்படாத நம்பிக்கை கொடுக்கின்றதென்றால் கொடுத்துவிட்டு போகட்டுமே!! என்பதுதான் என் வாதம்!!!
\\வேறு எதை அறிவியலை விட நம்பகமாக நம்பலாம் என்று சொல்லுங்கள்?\\
சில சமயம் தமிழ் சினிமாக்களில் இது நடக்கும். காமடியன், கூட இருக்கும் கதாநாயகனைப் பற்றி இஷ்டத்துக்கும் அள்ளி விடுவார், கதாநாயகனே ஷாக் ஆகிப் போயிடுவாறு. இதுக்கு இன்னொரு பேரு குடுத்த காசுக்கும் மேலேயே கூவுரான்டா என்பார்கள். நீங்கள் இப்போது அந்த வேலையைத் தான் அறிவியலுக்குச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அறிவியலை எதற்கு நம்ப வேண்டுமோ அதற்க்கு நம்பலாம், எவ்வளவு நம்பலாமோ அவ்வளவு நம்பலாம், அதற்கும் மேல் முன் சொன்ன தமிழ் சினிமா காமடியன் போல போகக் கூடாது. இங்குள்ள ஜடப் பொருளை மனிதப் பயன்பாட்டுக்கு exploit செய்யும் ஒரு குருட்டம்போக்கான முறை அறிவியல். Mind, Intelligence, Life, Whether some controller is there behind this creation போன்ற கேள்விகளுக்கு இந்த அறிவுக் குருட்டு முறையால் விடை காண முடியாது. அதை விட சிறந்த வழி உண்டா என்று நீங்கள் அராய்ச்சி செய்து கண்டுபிடிக்கலாம்.
To suppose that the eye with all its inimitable contrivances for adjusting the focus to different distances, for admitting different amounts of light, and for the correction of Spherical and chromatic aberration, could have been formed by natural selection, seems, I freely confess, absurd in the highest degree.
-Charles Darwin
No amount of experimentation can ever prove me right; a single experiment can prove me wrong.
-Albert Einstein
Although some theories do have a lot of experimental success to back them up and others are hardly more than a glimmer in a theorist's eyes- brilliantly designed boats that have never been tried on the water - it's a mistake to assume that any of them is absolute scientific "truth".
-From Quest for a theory of everything By Stephen Hawking Page 17-18.
\\* நீங்கள் பயன்படுத்தும் 'அறிவியல் முறை' எனும் பதத்தை கொஞ்சம் விளக்க முடியுமா? (அ) அறிவியல் முறை என்றால் என்ன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?\\ இதை நீங்களே விளக்கலாம் அன்பரே.
\\* கடவுள் என்பதற்கு நீங்கள் வழங்கக்கூடிய முழு விளக்கம் என்ன? (பலர் பல மாதிரி கூறுவார்கள்: creator, judge, manipulator..etc )\\ கடவுள் என்னும் பதத்தை இன்னமும் நான் உபயோகிக்க விரும்பவில்லை. ஜடம் தானாக அற்புதமான வடிவத்தைப் பெறாது, அவ்வாறு பெரும் பட்சத்தில் ஒரு Conscious being அதை இயக்க வேண்டும், ஆகையால் இந்த ஜடமான் பிரபஞ்சத்தின் அற்புத வடிவத்திற்குப் பின்னால் அதற்க்கு காரணகர்த்தாவாக ஒரு Conscious being இருந்தேயாக வேண்டும். அந்த Conscious being பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இருக்கவேண்டும் என்பது மட்டும் உறுதி. நீங்கள் இல்லை என்று சொன்னால், ஒரு கம்பியூட்டர், கேமரா அல்லது செல்போன் போன்ற ஏதாவது ஒன்று தானாக உருவானதாக காண்பித்தால் போதும். அவ்வளவு கூட வேண்டாம் ஒரு சப்பாத்தியாவது தானாக உருவானது என்று காண்பித்தால் கூட போதும்.
\\நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு, உங்கள் நம்பிக்கையைத் தவிர, வேறு எந்த விளக்க முறையை (தத்துவம், மதக்கட்டுக்கதைகள்) கொண்டு விளக்கம் அளிப்பீர்கள்?\\ நான் பார்த்த வரைக்கும் தானா எதுவும் வந்ததா தெரியலை. திடீர்னு ஒரு கிலோ தங்கம் என் டேபிள் மேல் தோன்றி நான் பார்த்ததில்லை. அவ்வளவு கூட வேண்டாம், ஒரு எலிப்புழுக்கை கூட வெற்றிடத்தில் இருந்து தோன்றியதாகத் தெரியவில்லை. அறிவியல் சொல்லுது ஒரு தூசி கூட ஒன்றுமில்லாததில் இருந்து வராது, அது ஒரு இடத்தில் இருந்தா அது வேறெங்கோ இருந்து வந்திருக்கும்னு. அதே அறிவியல் ஒரு புள்ளியில் [ஜீரோ சைஸ்!!] இருந்து இந்த பேரண்டமே வந்துச்சுன்னு. அது எப்படி நடந்திருக்க முடியும்? அப்படியென்றால் அறிவியலுக்கு கட்டுப் படாத ஏதோ ஒருத்தர்/பலர் பின்னால் இருந்து வேலை செய்கிறார்[கள்]. நீங்க எவ்வளவு பெரிய மேசீனைக் கண்டுபிடித்தாலும் சுவிட்ச் போட ஒரு ஆள் இருந்தா தான் அது ஓடும். இந்த பேரண்டம் ஓடுவது யாரால், அந்த சுவிட்ச் போடும் ஒருத்தர் இருக்க வேண்டும். இது தான் என் நம்பிக்கை. இல்லை என்றால் நீர் எதை வைத்து யாரும் இல்லை என்று நம்புகிறீர் என்று சொல்லலாம்.
\\* நீங்கள் நம்பும் அந்த ஆதி உயிரின் தன்மை, சக்தியின் மட்டுப்படுத்தல்கள், தோற்றம் அல்லது இருப்பின் தன்மை ஆகியவற்றை விளக்கவும்.
* பிரபஞ்சமும் உயிரும் அந்த ஆதி உயிரால் எப்படி உருவாக்கப்பட்டன? மற்றும் ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டன?\\ நீங்கள் நேரில் பார்த்து கேளுங்கள் அன்பரே, நான் இதுவரை பார்த்ததில்லை.
\\ உயிர்கள் அனைத்தும் ஒரே காலத்தில் உருவாகியவையா?\\ நான் என்ன விஞ்ஞானியா கப்சா விடுவதற்கு?
\\அது சரிவிகிதம் என்றும் நான் சொல்லவில்லை. தேவையான தரவுகள் இன்னும் கிடைக்காமையால் அந்தக் குறிப்பிட்ட விகிதங்களை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது.\\ விகிதம் மாறுச்சுன்னா அதற்க்கு காரணம் என்னனு சொல்லுங்க அன்பரே.
\\அறிவியலின் ஆழமும், ஆச்சரியமும், தன்னம்பிக்கையும் என்னை இன்னும் அறிவியலை காதலிக்க வைக்கின்றன.\\ இந்த கவிஞர்களை எல்லாம் பார்த்தா தான் காதலிக்கும் பெண்ணைப் பற்றி காதல் போதையில ஆஹா... ஓஹோ......... என்று அளவுக்கு மீறி புகழ்ந்து தள்ளுவானுங்க. அவள் முகத்தைப் பார்த்து நிலாவே அமாவாசை என்னைக்கு உதிக்க மறந்து போச்சும்பானுங்க. நீங்களும் அந்த மாதிரி ஆகிகிட்டே வரீங்க. பார்த்து கவனமா இருப்பது நல்லது.
\\தகுந்த தரவுகள் கிடைக்கும்போது (மட்டும்) விஞ்ஞானம் எல்லாவற்றையும் நிரூபிக்கக் கூடியது, மற்றும் முக்கியமாக வேறு எந்த விளக்க முறைகளையும்விட பலமடங்கு நம்பகமானது என்பதே எனது கருத்து.\\ அடிப்படை Postulates -களை நிரூபிக்காமல், பின்னால் வரும் சோதனை முடிவுகள் சரியாக வந்தால் போதும் என்ற முறை குருட்டாம் போக்கான முறை.
\\எத்தனை ஓட்டைகள் (தற்போதைக்கு) இருந்தாலும், மற்ற எந்த விளக்க முறையையும் விட ஓட்டைகள் குறைவாகவும் சிறியதாகவும் அறிவியலில் மட்டுமே இருக்கின்றது, இருக்கமுடியும்.\\ அதை நீங்க நம்பலாம், அதற்காக எல்லோரும், எதற்க்கெடுத்தாலும் அறிவியலை நம்புவது மட்டுமே சிறந்தது என்று நீங்கள் சொல்ல முடியாது.
\\Radioactive elements கூட ஜடப் பொருட்கள்தான். ஆனால் அவை புறத் தூண்டல்கள் எதுவுமில்லாமல் சிதைவது எப்படி? Also, what about quantum fluctuations?\\ இதை வச்சு கடவுள் இல்லைன்னு நிரூபிங்க பார்ப்போம்.
\\not exactly. அடிப்படை உயிர்கள் ஒருவைகையில் ரோபாட்கள்தான். உயிர்வாழ்வது மட்டுமே தெரிந்த ரோபாட்கள். மனிதர்கள் கூட என்னைப் பொறுத்தவரை மேம்பட்ட ரோபாட்கள். அவ்வளவே.\\ இது வடிகட்டின அயோக்கியத் தனம். ரோபோட்டின் புரோகிராமிங்கைப் பொறுத்து ஒரே மாதிரியான லட்சம் றோபோட்டுக்கள் செய்தாலும் அவை அத்தனையும் சுவிச் போட்டவுடன் ஒரே மாதிரிதான் இயங்கம், மாற்றமே இருக்காது. மனிதன் ஆயிரம் பேர் இருந்தா, அவன் ஆயிரம் விதமாக சிந்திப்பான், செயல்படுவான்.
\\ஒரு பிடி மண்ணை அள்ளி வெறுந்தரையில் கொட்டினால் அதில் தோன்றும் வடிவம்கூட ஒரு அற்புதமே. எனவே, தற்செயல் விளைவுகள்கூட பல அற்புதங்களை உருவாக்கலாம்.\\ அந்த அற்ப்புதமும், மனிதனின் உடலமைப்பு, இயற்கையின் தாவரங்கள், கடலில் உள்ள உயிரினகள் அற்புதமும் ஒன்றா? சும்மா வாதத்தில் ஜெயிக்க இப்படியா புளுகுவது?
\\உண்மை. முன்னூறு கோடி வருட பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு, ஏன் அவை அற்புதமாக இருக்கின்றன என விளக்குகின்றது.\\ அப்படி ஒரு தேர்வு செவ்வாய் கிரகத்திலோ Pluto-விலோ நடந்திருக்கலாமே. முழு உயிர் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு ஒழுங்கான அமைவு நடந்திருக்கலாமே, அங்கேயெல்லாம் வெறும் மேடு பள்ளம் மட்டும் தானே இருக்கிறது?
\\இதற்கு எதிராக நான் ஒரு அரதப்பழசான நாத்திகக் கேள்வியை கேட்கலாம். அந்த ஆதார உயிறை உருவாக்கியது யார்? இதற்கு அறிவியல் ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ நீங்கள் விளக்கம் கொடுக்க முனையலாம்.\\ அப்படி ஒரு ஆதார உயிர் தேவையில்லை என்பதை நீங்கள் நிறுவ முடியுமா? நிறுவி விட்டால் இந்தக் கேள்வியே எழாதே!!
* வெறும் புள்ளியில் இந்த பேரண்டம் அடக்கி வைக்கப் பட்டிருந்தது என்று சொல்வீங்க. அந்த ஆற்றலின் மூலம் என்னன்னு உங்களால் சொல்ல முடியாது.
* இயற்கையில் உள்ள விசைகள் எதுக்கும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது. வேற மாதிரி இருந்தாலும் இதே கேள்வியைத்தான் கேட்பீர்கள் அல்லது சரிவிகித நிகழ்தகவு, Quantum Fluctuations என்று சொல்லிட்டுப் போயிடுவீங்க.
* எத்தனை எலக்ட்ரான்கள் [புரோட்டங்கள், நியூட்ரான்கள், இன்னபிற அடிப்படைத் துகள்கள்] இந்த பேரண்டத்தில் இருந்தாலும் அவை அத்தனையும் ஒரே மாதிரி இருப்பது எப்படின்னு உங்களால் சொல்ல முடியாது. சரிவிகித நிகழ்தகவு என்றால் ஒன்னொன்னும் ஒரு சைசில் இருக்கலாமே அவ்வாழ்வு இல்லையே, ஏன்? உங்களால் சொல்ல முடியாது.
* இயற்க்கை விதிகள் எதற்கும் உங்களால் காரணம் சொல்ல முடியாது.
* Consciousness என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியாது.
* ஒரு குடும்பத்தை சமாளிக்கவே உசிரு போகுதே, இயற்கையில் எல்லோருக்கும் உணவு, காற்று, வெளிச்சம் நீர் எல்லாமும் உள்ளதே இது உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா என்று கேட்டால் உங்களிடம் பதில் இருக்காது.
* Entropy எப்போதும் அதிகரிக்கும், பேரண்டம் ஒழுங்கில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்குச் செல்கிறது என்றால், முதலில் ஒழுங்காக அதை வைத்தது யார் என்றால் உங்களிடம் பதில் இருக்காது.
இதில்லாம் அது அப்படித்தான் என்று சொல்லும் நீங்கள், கடவுள் பற்றி மதவாதிகள் அது அப்படித்தான் என்று சொல்வதை மட்டும் கேள்விகள் கேட்பீர்கள். உங்களுக்கு வந்தால் இரத்தம், அவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி. நல்ல நியாயம்.
\\ கடவுள் இருக்கிறர் என்பதற்கு ஆண்மிகத்திடமும்; கடவுள் இல்லை என்பதற்கு அறிவியலிடமும் போதுமான ஆதாரம் இல்லை; கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை; அப்படி கிடைத்தால் கிடைக்கும்போது பார்த்துக்கலாம்; \\ இவ்வாறு இறைவன் என்று ஒருத்தர் இருப்பதாகவோ இல்லையென்றோ இவர்கள் நம்பிக் கொண்டு போகட்டும், அது குறித்து கவலை இல்லை. ஆனால் விஞ்ஞானம் இவ்வாறு சொல்கிறது என்று மக்களை ஏய்ப்பவர்களைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறிவியல் நாத்தீகர்களின் சொத்து, அதில் என்ன முன்னேற்றம்(?!) வந்தாலும் அது நாத்தீகர்களின் வெற்றி, அறிவியலார்கள் எல்லோரும் நாத்தீகர்கள் என்றெல்லாம் இவர்கள் பித்தலாட்டம் செய்து வருகிறார்கள். இந்த மாதிரி அறை வேக்காடுகளுக்குத் தெரிந்தது ஐன்ஸ்டீன் அவர்களுக்கு தெரியாமல் தான் அவர் இறைவன் இருக்கிறான் என்று நம்பினாரா என்று இவர்கள் ஒருபோதும் யோசிப்பதில்லை. மேலும், இறை நம்பிக்கையாளர்களால் சமுதாய பிரச்சினை வந்ததால் இறை நம்பிக்கையே தேவையில்லை என்று சமுதாய அக்கறையுள்ள இவர்கள், இன்றைக்கு அறிவியலால் புவியில் உயிரிகள் அழிந்து போகும் என்ற நிலைமை வந்துள்ளதே, இதற்க்கு என்ன பதில் கூறுவார்கள்? இறை நம்பிக்கையைத் தவறாக பயன்படுத்தியவர்களால், மற்றவர்கள் ஏமாற்றப் பட்டிருக்கலாம், துன்புறுத்தப் பட்டிருக்கலாம், கொஞ்சம் அழிக்கப் பட்டும் இருக்கலாம், ஆனால் ஒரே அடியாக மொத்தத்தையும் அழிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தீமையைப் பார்த்தும் இவர்கள் அது குறித்து வாயையே திறக்காமல், கண்களையும் மூடிக் கொண்டிருப்பது ஏனோ? அதிச் சொன்னால், அறிவியல் தவறாகப் பயன்படுத்தப் பட்டது என்பார்கள், ஆனால், மதமும் தவறாகப் பயன்படுத்தப் பட்டது என்று இவர்கள் ஏன் நினைப்பதில்லை? அப்படியென்றால், நிஜத்தில் நன்மை தீமையைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. இறைவன் என்பவன் இருக்கக் கூடாது என்பது மட்டுமே இவர்களது அவா, அதற்காக எந்த பித்தலாட்டமும் செய்ய இவர்கள் ரெடி. இவர்கள் கவலைப் படுவது சமுதாயத்தை நினைத்து அல்ல, தனகளது கோணலான புத்தியின் கோரமான ஆசையை நினைத்து. இவர்கள் நடுவு நிலையைத் தவறியவர்கள் எதைச் சொல்லியும் திருந்தப் போவதில்லை.
@ ஜீவதர்ஷன்
பெருவெடிப்பு பற்றி விபரமாகத் தெரிந்துகொள்ள கண்டிப்பாக கீழ்க்காணும் காநோளிகளைப் பாருங்கள். நீங்கி இறை நம்பிக்கையாளர் ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனாலும் பெருவெடிப்பைப் பற்றி என்னதான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என்பது குறித்தும், அதில் என்னென்ன பித்தலாட்டம் உள்ளது என்றும் இதன் மூலம் நீங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம். [முதல் வீடியோவின் ஒன்பதாவது நிமிடத்தில் இருந்து பெருவெடிப்பு பற்றி பேசப் படுகிறது. முழுவதையும் பார்த்தாலும் நன்றுதான்!!]
http://www.youtube.com/watch?v=Msnt2XIP8oQ&feature=relmfu
http://www.youtube.com/watch?v=nJ9d5XbXOh0&feature=watch_response
http://www.youtube.com/watch?v=39Ym7LSv7ms&feature=relmfu
http://www.youtube.com/watch?v=eIb8fruRt0k&feature=relmfu
http://www.youtube.com/watch?v=Pa4rFKMMbn8&feature=watch_response
@பதிவர்,
//கடவுள் இருக்கிறர் என்பதற்கு ஆண்மிகத்திடமும்; கடவுள் இல்லை என்பதற்கு அறிவியலிடமும் போதுமான ஆதாரம் இல்லை; கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை;//
இது பன்ச் short and sweet... சுருக்கமாக எனது கருத்து: இரு கொள்கைகளிலும் மிக சிம்பிளான கொள்கையான கடவுள் இல்லாமலிருக்கலாம் எனும் அனுமானத்தை, இன்றுவரை எந்தவொரு அவதானிப்பும், தத்துவ விளக்கமும், சமன்பாட்டு முடிவும் இதுவரை override செய்யவில்லை என்பதால், அறிவியல் முறைப்படி கடவுள் இல்லை எனும் model ஐயே தற்போதைக்கு ஏற்றுக்கொள்கிறேன். என்றாவது ஒருநாள், கடவுள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அவதானிப்பையோ, சமன்பாட்டு முடிவையோ விளக்க முடியாமல் போனால், அறிவியல் 'கடவுள் இருக்கிறார்' எனும் complex model க்கு முன்னேறலாம். அன்று, நானும் கடவுளை நம்பத் தயாராக இருக்கிறேன்.
மற்றபடி நீங்கள் கடவுளை நம்பிவிட்டுப் போங்கள், நாங்கள் கடவுளை நம்பாமல் போகிறோம். ஆனால், இதுவரை அறிவியல் முயன்று ஸ்தாபித்த கொள்கைகளையும் கருத்துக்களையும், மதப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற அற்பக் கதைகளுக்காக மறுக்காதீர்கள், வெறுக்காதீர்கள், இனிவரும் தலைமுறைகளை வெறுக்க வைக்காதீர்கள். கடவுளை நம்பி, வாழ்வை இனிமையாக்குவதற்கு மட்டுமே மதங்கள் உதவி செய்யட்டும். மதங்களின் 'பெய'ரால் சண்டைகள் வேண்டாம். நான், கடவுளை வெறுத்ததில்லை. அறிவியலின் 'பெய'ரால் கத்தி தூக்குவதில்லை.
@Jayadev Das
உங்கள் விவாதம் முழுவதுமே, சிக்கலான இந்தப் பிரபஞ்சத்திற்கு டிசைனர் ஒரு இருந்தாகவேண்டும், ஜடப்பொருட்கள் எதுவுமே புறத்தாக்கங்கள் இல்லாமல் செயற்படா. எனும் இரண்டு கருத்துக்களில் மையம் கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
//ஒரு எலிப்புழுக்கை கூட வெற்றிடத்தில் இருந்து தோன்றியதாகத் தெரியவில்லை.// //\\Radioactive elements கூட ஜடப் பொருட்கள்தான். ஆனால் அவை புறத் தூண்டல்கள் எதுவுமில்லாமல் சிதைவது எப்படி? Also, what about quantum fluctuations?\\ இதை வச்சு கடவுள் இல்லைன்னு நிரூபிங்க பார்ப்போம்.//
எலிப்புழுக்கை தோன்றியதாகத் தெரியவில்லை. ஆனால் quantum fluctuation களின்போது நுண்ணிய துகள்கள் புறத் தாக்கங்கள் இல்லாமல் வெற்றிடத்திலிருந்து தோன்றிக்கொண்டும் மறைந்துகொண்டும் இருப்பதை சமன்பாடுகளில் காட்ட முடிகின்றது. இது வெற்றிடத்தின் குணமாகவும் கொள்ளப்படுகின்றது. இந்த தோற்றம் மறைவுகளின்போது மிக மிக மிக மிக அரிதாக பெருமளவு சக்தி உருவாக்கப்படலாம். பிரபஞ்சத்தின் பிறப்பில் இவை பெரும்பங்கு வகிக்கக்கூடும் எனவும் கருதப்படுகின்றது. அதுமட்டுமின்றி பிரபஞ்சத்தின் மொத்த சக்தி நிலை பூச்சியம் எனும் கருத்தும் (தேவையான அளவு காலம் - பல பில்லியன், ட்ரில்லியன் - வருடங்கள் இருந்தால்) ஒன்றுமில்லாததிலிருந்து எல்லாமும் உருவாயிருக்கலாம் எனும் கருத்துக்கு பலம் சேர்க்கின்றது.
ஜடப்பொருட்கள் புறத்தாக்கங்களின்றி செயற்படாது எனும் உங்கள் எடுகோளை radioactive decay மறுதலிக்கின்றதாக நான் கருதுகின்றேன்.
//எதற்க்கெடுத்தாலும் அறிவியலை நம்புவது மட்டுமே சிறந்தது என்று நீங்கள் சொல்ல முடியாது.//
அதைத்தவிர எதை நம்பலாம் என்பது உங்களுக்குத் தெரியாது.
//மனிதன் ஆயிரம் பேர் இருந்தா, அவன் ஆயிரம் விதமாக சிந்திப்பான், செயல்படுவான்.//
அப்படி சிந்தித்து செயல்படாவிட்டால் natural selection இல் உயிர்பிழைத்திருக்க முடியாது.
//அந்த அற்ப்புதமும், மனிதனின் உடலமைப்பு, இயற்கையின் தாவரங்கள், கடலில் உள்ள உயிரினகள் அற்புதமும் ஒன்றா?//
அரைநொடியில் கொட்டும் மண்ணின் தற்செயலே கணிதரீதியான ஒரு அற்புதத்தை உருவாக்கும் அரிய வாய்ப்பைக் கொண்டிருக்கும்போது, 13.7 பில்லியன் ஆண்டுகள் (பிரபஞ்சத்திற்கு முன்னும் பல ட்ரில்லியன் ஆண்டுகளாக வெட்டவெளி quantum fluctuations இற்கு உட்பட்டிருக்கலாம்) தொடர்ந்த தற்செயல்கள், இப்படியான ஒரு அற்புதத்தை chaos theoryயுடன் விடையாகத் தர முடியும். எவ்வளவு அரிய வாய்ப்பையும் நிஜமாக்கியிருக்க முடியும்.
//அப்படி ஒரு தேர்வு செவ்வாய் கிரகத்திலோ Pluto-விலோ நடந்திருக்கலாமே. முழு உயிர் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு ஒழுங்கான அமைவு நடந்திருக்கலாமே, அங்கேயெல்லாம் வெறும் மேடு பள்ளம் மட்டும் தானே இருக்கிறது?//
இதைக் கேட்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. அருண் சாரின் வலையிலும் சமுத்ரா சாரின் வலையிலும் பக்கம் பக்கமாக விளக்கப்பட்டிருக்கும் பதிலை வீணாக ரிபீட் செய்ய வைக்கிறீர்கள். உங்களது அறிவியல் சம்பந்தமான கேள்விகளுக்கு முதலில் இணையம், புத்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் பதில் தேடிப் பாருங்கள். அப்படியும் பதில் கிடைக்காத பில்லியன் டாலர் கேள்விகளை வைத்து அறிவியல் அபிமானிகளை அடிக்கலாம்.
//* வெறும் புள்ளியில் இந்த பேரண்டம் அடக்கி வைக்கப் பட்டிருந்தது என்று சொல்வீங்க. அந்த ஆற்றலின் மூலம் என்னன்னு உங்களால் சொல்ல முடியாது.
* இயற்கையில் உள்ள விசைகள் எதுக்கும் உங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது. வேற மாதிரி இருந்தாலும் இதே கேள்வியைத்தான் கேட்பீர்கள் அல்லது சரிவிகித நிகழ்தகவு, Quantum Fluctuations என்று சொல்லிட்டுப் போயிடுவீங்க.
* எத்தனை எலக்ட்ரான்கள் [புரோட்டங்கள், நியூட்ரான்கள், இன்னபிற அடிப்படைத் துகள்கள்] இந்த பேரண்டத்தில் இருந்தாலும் அவை அத்தனையும் ஒரே மாதிரி இருப்பது எப்படின்னு உங்களால் சொல்ல முடியாது. சரிவிகித நிகழ்தகவு என்றால் ஒன்னொன்னும் ஒரு சைசில் இருக்கலாமே அவ்வாழ்வு இல்லையே, ஏன்? உங்களால் சொல்ல முடியாது.
* இயற்க்கை விதிகள் எதற்கும் உங்களால் காரணம் சொல்ல முடியாது.
* Consciousness என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியாது.
* ஒரு குடும்பத்தை சமாளிக்கவே உசிரு போகுதே, இயற்கையில் எல்லோருக்கும் உணவு, காற்று, வெளிச்சம் நீர் எல்லாமும் உள்ளதே இது உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா என்று கேட்டால் உங்களிடம் பதில் இருக்காது.
* Entropy எப்போதும் அதிகரிக்கும், பேரண்டம் ஒழுங்கில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்குச் செல்கிறது என்றால், முதலில் ஒழுங்காக அதை வைத்தது யார் என்றால் உங்களிடம் பதில் இருக்காது.//
அறிவியலிடம் பதில் இருக்காது, தெரியாது, முடியாது எனும் குருட்டு நம்பிக்கையிலேயே, நீங்கள் உங்கள் கேள்விகளை உங்களுக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொண்டு கனா காண்கிறீர்கள் என நினைக்கிறேன்.
* பிரபஞ்சத்தின் மொத்த ஆற்றல் பூஜ்யம். இப்போது, மொத்த பிரபஞ்சமும் ஒன்றுமில்லாத வெளியுள்ளே அடங்கிவிடலாம்.
* //வேற மாதிரி இருந்தாலும் இதே கேள்வியைத்தான் கேட்பீர்கள் // எனக்குத் தெரிந்து இது சரியான பதில் தான்.
* மற்ற எல்லாமே வித்தியாசமாக இருப்பதற்கு காரணம், எங்களது electron, proton distribution வேறுபடுவதுதான். அடிப்படைத் துகள்களும் வேறு பட்டுக் காணப்பட்டால் அவற்றைவிட அடிப்படையான துகள் இருப்பதாக அர்த்தம். அடிப்படைத் துகள்கள் ஒருசில வகைகள் மட்டுமே இருக்கக் கூடும். இது தர்க்கரீதியான விளக்கம்.
* இயற்கையின் resources களுக்கும் அழகான தர்க்க, அறிவியல் ரீதியான விளக்கத்தை இயற்கைத் தேர்வு தருகின்றது. இந்த விளக்கம் அவதானிப்புக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
* பிரபஞ்சம் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தால், பூஜ்யத்தின் ஒழுங்கு தானாகவே அமைந்துவிடும்.
//இதில்லாம் அது அப்படித்தான் என்று சொல்லும் நீங்கள்// அப்படி நான் சொல்வதில்லை :p
//அறிவியல் நாத்தீகர்களின் சொத்து, அதில் என்ன முன்னேற்றம்(?!) வந்தாலும் அது நாத்தீகர்களின் வெற்றி, அறிவியலார்கள் எல்லோரும் நாத்தீகர்கள் என்றெல்லாம் இவர்கள் பித்தலாட்டம் செய்து வருகிறார்கள். //
அப்படி யாரும் சொன்னதில்லை. நாத்திகம் அறிவியலின் சொத்து அவ்வளவே... :)
//இந்த மாதிரி அறை வேக்காடுகளுக்குத் தெரிந்தது ஐன்ஸ்டீன்// ஐன்ஸ்டீனின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி உங்களுக்கும் விளக்கம் இல்லை என்பது புரிகின்றது. அது மட்டுமில்லாது, நாங்கள் பின்பற்றுவது அறிவியலை, அறிவியலாளர்களை அல்ல.
//இன்றைக்கு அறிவியலால் புவியில் உயிரிகள் அழிந்து போகும்//
அறிவியல், தொழில்நுட்பம் வேறு வேறு என்று சொல்லிவிட்டேன்...
//அதற்காக எந்த பித்தலாட்டமும் செய்ய இவர்கள் ரெடி. இவர்கள் கவலைப் படுவது சமுதாயத்தை நினைத்து அல்ல, தனகளது கோணலான புத்தியின் கோரமான ஆசையை நினைத்து. இவர்கள் நடுவு நிலையைத் தவறியவர்கள் எதைச் சொல்லியும் திருந்தப் போவதில்லை.//
இதைச் சொல்பவரை நினைத்தால் சிரிப்பாய் வருகின்றது... :))
இதுவரை நமது கருத்துப் பரிமாற்றங்களை வாசித்தவர்களுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்கலாம். எனக்கும் உங்களது ideas பற்றிய அபிப்பிராயம் ஒன்று உருவாகியிருக்கிறது.
நீங்கள் சொந்தமாக பின்பற்றும் ஒரு விளக்க முறை கிடையாது. உங்களது நம்பிக்கையை, நீங்கள் நம்புகின்றீர்கள் எனும் காரணத்தினால், சரியென்று நம்ப வைப்பதற்கு, அந்த நம்பிக்கையை தற்போது மறுதலிக்கும் ஒவ்வொரு விளக்க முறைகளையும் தவறென்று வாதிடுகின்றீர்கள். கேட்டால், எது சரியான விளக்க முறை என்று என்னையே கண்டுபிடிக்கச் சொல்கிறீர்கள்.
கடவுள் குறித்து உங்களுக்கு ஒரு ஸ்திரமான 'நம்பிக்கை' இருக்கின்றது. அதாவது, கடவுள் படைப்புக்கு அப்பாற்பட்ட சக்தி எனும் நம்பிக்கை இருக்கவேண்டும். ஏனெனில் படைப்புக்கு மட்டுமே கடவுளையும், பிறவற்றுக்கு அறிவியலையும், யதார்த்தத்தையும் நம்புபவர் அறிவியலையே உலகமாகக் கொண்ட ஒரு ஆத்திக அறிவியலாளராகவே இருப்பார் (உ+ம் : ஐன்ஸ்டீன்). உங்களது அறிவியல் முறை பற்றிய அறியாமையையும் அறிவியல் கருத்துக்கள் பற்றிய மிகவும் மேம்போக்கான எண்ணங்களையும், அந்த எண்ணங்கள் பற்றிய உங்கள் கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக்கொண்டு தெளிவுறும், அல்லது புதிய மேம்பட்ட கேள்விகளை உருவாக்கும் வழிகள் இணையத்திலேயே இருக்கும்போது, நீங்கள் உங்களது கேள்விகளை இன்னும் primitive ஆகவே வைத்துக்கொண்டு, என்னைப் போன்றவர்களிடம் வீசுவதையும் வைத்துப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் ஒரு தேர்ந்த அறிவியலாளராக இருக்க முடியாது. படைப்புக்கு மட்டுமே கடவுளை நம்பும் சாமானியருக்கு கடவுளை ஆதரித்து இவ்வளவு நேரவிரயம் செய்யும் உத்வேகம் இருக்காது. எனவே, படைப்புக்கு அப்பாலும் உங்கள் சொந்தக் காரணங்களின் உதவியுடன் நீங்கள் கடவுளை நம்புகின்றீர்கள். ஆனால், அந்தக் காரணங்களையோ, நம்பிக்கையோ இந்த விவாதக் களத்தில் முன்வைத்தால் Cause and effect, chaos theory என அவை அடிபட்டுப் போகும் அபாயம் இருப்பதால், விவாதத்துக்காக, அறிவியல் இன்னும் தொட்டுப் பார்க்காத பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணங்களில் கடவுளைப் பத்திரமாக உட்கார வைத்து விவாதிக்கிறீர்கள்.
உங்களுக்கு பக்கம் பக்கமாக எழுத நேரம் இருக்கின்றது, ஆனால் கருத்துக்கள் இல்லை. ஒரே கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லி வாசிப்பவர்களை convince செய்ய முயற்சிக்கிறீர்கள். இப்படியெல்லாம் நான் சொன்னால், இல்லையென்று வாதிடுவதற்கும் தயாராக இருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட ஒரு விவாதத்தில் வாரக்கணக்கில் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை. பிரபஞ்ச ஆரம்பம் குறித்த எனது கருத்துக்களை இங்கு முன்வைத்துவிட்டேன். "என்ன கையைப் புடிச்சு இழுத்தியா?" டைப் கேள்விகளுக்கு விதம் விதமாக பதில் சொல்லியும் பார்த்துவிட்டேன். எனவே இந்த முறையோடு எனது பதில்களை இங்கே முடித்துக் கொள்கிறேன். மன்னிக்கவும். உங்களுது தர்க்க(?!) ரீதியான, சிந்தனை(?!)ச் செறிவு மிக்க கேள்விகளுக்கு பதில் சொல்லப் பயந்து, ஒரு நாத்திக அறிவியல் மாணவன் ஓடிவிட்டான் என்று நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.
\\இரு கொள்கைகளிலும் மிக சிம்பிளான கொள்கையான கடவுள் இல்லாமலிருக்கலாம் எனும் அனுமானத்தை, இன்றுவரை எந்தவொரு அவதானிப்பும், தத்துவ விளக்கமும், சமன்பாட்டு முடிவும் இதுவரை override செய்யவில்லை என்பதால், அறிவியல் முறைப்படி கடவுள் இல்லை எனும் model ஐயே தற்போதைக்கு ஏற்றுக்கொள்கிறேன். என்றாவது ஒருநாள், கடவுள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அவதானிப்பையோ, சமன்பாட்டு முடிவையோ விளக்க முடியாமல் போனால், அறிவியல் 'கடவுள் இருக்கிறார்' எனும் complex model க்கு முன்னேறலாம். அன்று, நானும் கடவுளை நம்பத் தயாராக இருக்கிறேன்.\\
இது காமடியிலும் பெரிய காமடி. கடவுளின் இருப்புக்கு அறிவியலை கட்டிபிடித்துக் கொண்டு இவரு எதுக்கு மாரடிக்கிராருன்னே தெரியலை. என்னதான் நீங்கள் அடித்துக் கொண்டாலும், ஜடத்தொடு உங்கள் மாரடிப்பு நின்றுபோகும், அதற்கும் அப்பால் என்ன என்பது அவனவனது கற்பனை. அதற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை.
\\மற்றபடி நீங்கள் கடவுளை நம்பிவிட்டுப் போங்கள், நாங்கள் கடவுளை நம்பாமல் போகிறோம். ஆனால், இதுவரை அறிவியல் முயன்று ஸ்தாபித்த கொள்கைகளையும் கருத்துக்களையும், மதப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற அற்பக் கதைகளுக்காக மறுக்காதீர்கள், வெறுக்காதீர்கள், இனிவரும் தலைமுறைகளை வெறுக்க வைக்காதீர்கள். கடவுளை நம்பி, வாழ்வை இனிமையாக்குவதற்கு மட்டுமே மதங்கள் உதவி செய்யட்டும். மதங்களின் 'பெய'ரால் சண்டைகள் வேண்டாம். நான், கடவுளை வெறுத்ததில்லை. அறிவியலின் 'பெய'ரால் கத்தி தூக்குவதில்லை.\\ என்னது இனிவரும் தலைமுறையா? அது எங்கே இருக்கப் போவுது? இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மொத்தமா கதையை முடித்துவிடும் ஒன்றும் மிஞ்சாது. கத்தியை நீங்கள் தூக்கமாட்டீர்கள். உங்கள் வேலை கத்தியை தயாரித்துக் கொடுப்பது மட்டும் தான். அணுகுண்டை எப்படி செய்வது என்று மட்டும் தான் அறிவியல் சொல்லும், அதை தயார்செயதவன் அறிவியல் காரன் இல்லை. ஜப்பானில் செத்தவனுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை. உம்மால் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியவில்லை எனும் பட்சத்தில், அதை நம்பாதே, இதை நம்பாதே என்று போதிக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அவரவர் மனதிற்குப் பிடித்ததை செய்து விட்டுப் போகட்டுமே. அது நாத்தீகமாக இருக்கட்டும் ஆத்தீகமாகவும் இருக்கட்டும்.
\\ஆனால் quantum fluctuation களின்போது நுண்ணிய துகள்கள் புறத் தாக்கங்கள் இல்லாமல் வெற்றிடத்திலிருந்து தோன்றிக்கொண்டும் மறைந்துகொண்டும் இருப்பதை சமன்பாடுகளில் காட்ட முடிகின்றது. இது வெற்றிடத்தின் குணமாகவும் கொள்ளப்படுகின்றது. இந்த தோற்றம் மறைவுகளின்போது மிக மிக மிக மிக அரிதாக பெருமளவு சக்தி உருவாக்கப்படலாம். பிரபஞ்சத்தின் பிறப்பில் இவை பெரும்பங்கு வகிக்கக்கூடும் எனவும் கருதப்படுகின்றது. அதுமட்டுமின்றி பிரபஞ்சத்தின் மொத்த சக்தி நிலை பூச்சியம் எனும் கருத்தும் (தேவையான அளவு காலம் - பல பில்லியன், ட்ரில்லியன் - வருடங்கள் இருந்தால்) ஒன்றுமில்லாததிலிருந்து எல்லாமும் உருவாயிருக்கலாம் எனும் கருத்துக்கு பலம் சேர்க்கின்றது.\\ ஒரு சமன்பாடு எப்படி எழுதப் படுகிறது? அதற்க்கு முன்னர் அதன் பண்புகளை பார்த்த பின்னர் தானே? அப்படியானால் நீர் சமன்பாடு எழுதுவதற்கு முன்னரே அதன் பண்புகள் இருந்ததாகத் தானே அர்த்தம்? அப்படியானால் வெற்றிடத்துக்கு அந்த குணம் எப்படி ஐயா வந்தது? [கடவுள் எப்படி வந்தார் என்று பதில் கேள்வி கேட்டு நீர் புத்திசாலி என்று காட்டிக் கொள்ள வேண்டாம்?]
\\ஜடப்பொருட்கள் புறத்தாக்கங்களின்றி செயற்படாது எனும் உங்கள் எடுகோளை radioactive decay மறுதலிக்கின்றதாக நான் கருதுகின்றேன்.\\ இப்படி அரைவேக்காடாக இருந்து கொண்டு இருக்கும் நீர் அறிவியலுக்கு பல்லக்கி தூக்கி கொண்டு, அதை பற்றி இல்லாதை எல்லாம் கற்பனை செய்து கொண்டிருப்பதில் வியப்பே இல்லை. இந்த மாதிரி அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் ரேஞ்சுக்கு மாதிரி பீலா விடுவது எதற்கு? என்னமோ நாங்கள் இணையத்தைப் பார்க்க வேண்டும் அதைப் படிக்க வேண்டும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றெல்லாம் அறிவுரை கூறும் நீர் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்?
இந்தக் கேள்விக்கு உமக்கு ஆரம்பப் பள்ளி லெவலில் பாடமெடுக்க எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் நான் இதைச் சொல்லவில்லை என்றால் நீர் ஒரு அரைவேக்காடு என்பதும் தெரியாமலேயே போகும். அணுக்கருச் சிதைவு என்பது அதிலுள்ள புரோட்டங்களுக் கிடையேயான விளக்கு விசைக்கும் புரோட்டங்கள்+ நியூட்ரான்களுக்குமிடையேயான ஈர்ப்பு விசைக்கும் நடக்கும் Tug of War. பின்னது ஜெயிக்கும் வரை அணுக்கரு safe. முன்னது ஜெயித்தால் radio active decay. ஒவ்வொரு தனிப்பட்ட அணுவுக்கும் அது எப்போது நடக்கும் என்று யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. [அது ஏன் என்று எல்லாம் அறிந்த நீர்தான் சொல்ல வேண்டும்]. ஆனாலும் அதற்க்கான நிகழ்தகவைச் சொல்ல முடியும். ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால் அது பூவா, தலையா என்று சொல்ல முடியாது [ஆனாலும் அது காரணமேயில்லாமல் நடக்கிறது என்று அர்த்தமல்ல], ஆனால் நிறைய முறை சுண்டிவிட்டால் 50 % சம வாய்ப்பு Head, Tail இரண்டுக்குமே உள்ளது என்று சொல்வது போல.
தயவு செய்து கொஞ்சமாவது புரிந்து கொண்டு அறிவியலைப் படியும் அன்பரே, இந்த மாதிரி ஒன்னாம் கிளாஸ் ரெண்டாம் கிளாஸ் பாடமெல்லாம் என்னை எடுக்க வைக்காதீர்.
\\அதைத்தவிர எதை நம்பலாம் என்பது உங்களுக்குத் தெரியாது.\\ அதை ஆராய்ச்சி செய்து நீர் கண்டுபிடிக்கலாம் என்று முன்னரே சொன்னேன். தந்தை யார் என்று தெரியவில்லை என்பதற்காக உண்மையான தந்தை யார் என்று கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு எவனோ ஒருத்தனை தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இவன்தான் கிடைத்தான் என்று காரணம் காட்டி அதை நியாயப் படுத்தவும் முடியாது.
\\அப்படி சிந்தித்து செயல்படாவிட்டால் natural selection இல் உயிர்பிழைத்திருக்க முடியாது.\\ ரோபோட்டுகள் என்று நீர் சொன்னது முட்டாள்த் தனம் என்பதை மறைக்க இது திசை திருப்பும் வேலை. selection என்றால் யாரோ select செய்கிறார்கள் என்று அர்த்தம், அது யார்? Nature என்று சொல்கிறீரே அது என்ன, நீர் பார்த்திருக்கிறீரா?
\\ அருண் சாரின் வலையிலும் சமுத்ரா சாரின் வலையிலும் பக்கம் பக்கமாக விளக்கப்பட்டிருக்கும் பதிலை வீணாக ரிபீட் செய்ய வைக்கிறீர்கள்.\\ ஏதோ பதிவு போடுறோம்னு எங்கேயிருந்தோ பார்த்து போட்டுக்கிட்டு பிழைப்பை ஓட்டிகிட்டு இருக்காங்க. அவங்க போலப்பில் நீர் மண்ணை வாரிப் போட்டு அந்த மண்ணு விழுந்ததே அர்ப்புதம்னு புளகாங்கிதம் அடைய வேண்டாம் அன்பரே.
\\உங்களது அறிவியல் சம்பந்தமான கேள்விகளுக்கு முதலில் இணையம், புத்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் பதில் தேடிப் பாருங்கள்.\\ இதை முதலில் நீர் செய்து கொஞ்சமாவது அடிப்படையை கற்றுக் கொண்டு அப்புறம் வாருங்கள் அன்பரே.
\\//இதில்லாம் அது அப்படித்தான் என்று சொல்லும் நீங்கள்// அப்படி நான் சொல்வதில்லை :p\\// அப்போ அதுகெல்லாம் விளக்கம் தரலாம்.
\\அப்படி யாரும் சொன்னதில்லை. நாத்திகம் அறிவியலின் சொத்து அவ்வளவே... :)\\ இதைக் கேட்டு அறிவியல் கண்ணீர் விடும்.
\\ஐன்ஸ்டீனின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி உங்களுக்கும் விளக்கம் இல்லை என்பது புரிகின்றது. அது மட்டுமில்லாது, நாங்கள் பின்பற்றுவது அறிவியலை, அறிவியலாளர்களை அல்ல.\\ அப்படி ஒரு விளக்கம் இருந்தால் நீர் தரலாம். நீர் அறிவியலில் எதைப் பார்த்து இறைவன் இருக்க முடியாது என்று உணர்ந்தீர், அது அவருக்கு தெரியாமல் போனதா என்பதே கேள்வி. அதை நீர் எது என்று சொல்லலாம்.
\\அறிவியல், தொழில்நுட்பம் வேறு வேறு என்று சொல்லிவிட்டேன்.\\ Weapon supply செய்வது அறிவியல், வெட்டு குத்து செய்வது தொழில் நுட்பம். ரெண்டும் வேறு வேறுதான். சேர்ந்து செய்வது மட்டும் கொலை மில்லியன் கணக்கான உயிர்களை ஒரே நொடியில்.
\\நீங்கள் சொந்தமாக பின்பற்றும் ஒரு விளக்க முறை கிடையாது. உங்களது நம்பிக்கையை, நீங்கள் நம்புகின்றீர்கள் எனும் காரணத்தினால், சரியென்று நம்ப வைப்பதற்கு, அந்த நம்பிக்கையை தற்போது மறுதலிக்கும் ஒவ்வொரு விளக்க முறைகளையும் தவறென்று வாதிடுகின்றீர்கள். கேட்டால், எது சரியான விளக்க முறை என்று என்னையே கண்டுபிடிக்கச் சொல்கிறீர்கள்.\\ விளக்கமே கொடுக்காத அறிவியல் எல்லாத்தையும் விளக்கிட்டாதா சொல்லும் நீர் இதைச் சொல்வது தான் காமடி. நீர் எதற்கும் இதுவரை விளக்கம் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் அறிவியலே கொடுப்பதில்லை, அது கொடுப்பதாக நீர் பக்கத்தில் நின்று கொண்டு காமடி பண்ணிக் கொண்டிருக்கிரீர். இதை நீர் மருப்பதானால் நியூட்டனின் முதல் விதியைச் சொல்லி அது என் அப்படி என்று விளக்கலாம்.
\\என்னைப் போன்றவர்களிடம் வீசுவதையும் வைத்துப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் ஒரு தேர்ந்த அறிவியலாளராக இருக்க முடியாது.\\ நீர் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணராமல் உங்க லெவலுக்கு மேல் போய் அறிவியலைப் பற்றி போய்ப் பிரச்சாரம் செய்திருக்கக் கூடாது. நீர் இங்கே சொல்லியிருக்கும் எதையும் அறிவியல் சொல்லவில்லை. உமக்கு அறிவியல் மேல் காதல் என்றால் உட்கார்ந்து கொண்டு கவிதை எழுதலாம், அதை நீரே படிக்கலாம், மற்றவர்களை ஏமாற்றக் கூடாது. நான் தேர்ந்த அறிவியலாளராகஇருக்கவும் விரும்பவில்லை. நான் யோக்கியனாகவே இருக்க விரும்புகிறேன். [தேர்ந்த அறிவியலாளர்- இது உமது வாயில் இருந்து வருவது தான் காம்டியிலும் காமடி!!].
\\படைப்புக்கு மட்டுமே கடவுளை நம்பும் சாமானியருக்கு கடவுளை ஆதரித்து இவ்வளவு நேரவிரயம் செய்யும் உத்வேகம் இருக்காது. எனவே, படைப்புக்கு அப்பாலும் உங்கள் சொந்தக் காரணங்களின் உதவியுடன் நீங்கள் கடவுளை நம்புகின்றீர்கள். ஆனால், அந்தக் காரணங்களையோ, நம்பிக்கையோ இந்த விவாதக் களத்தில் முன்வைத்தால் Cause and effect, chaos theory என அவை அடிபட்டுப் போகும் அபாயம் இருப்பதால், விவாதத்துக்காக, அறிவியல் இன்னும் தொட்டுப் பார்க்காத பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணங்களில் கடவுளைப் பத்திரமாக உட்கார வைத்து விவாதிக்கிறீர்கள்.\\ அறிவியலுக்கும் சரி, உமது விவாதத்துக்கும் சரி எந்த அடிப்படையுமே கிடையாது. கூகுளில் தட்டினால் Cause and effect, chaos theory என்பதை விட இன்னும் கடினமான வார்த்தைகள் கூட கிடைக்கும். அது குறித்து உமக்கு என்ன தெரியும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அப்படி ஏதாவது தெரிந்தால் பதிவாகப் போடுங்கள் படித்து தெரிந்து கொள்கிறோம்.
\\உங்களுக்கு பக்கம் பக்கமாக எழுத நேரம் இருக்கின்றது, ஆனால் கருத்துக்கள் இல்லை. ஒரே கருத்தையே மீண்டும் மீண்டும் சொல்லி வாசிப்பவர்களை convince செய்ய முயற்சிக்கிறீர்கள். இப்படியெல்லாம் நான் சொன்னால், இல்லையென்று வாதிடுவதற்கும் தயாராக இருக்கிறீர்கள்.\\ எதையுமே கற்றுக் கொள்ளாமல், எதுவுமே தெரியாமல் இவ்வளவு தூரம் ஒப்பேத்தியிருக்கும் உமது திறமையை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். இத்தனை வாதங்களைப் பிளந்திருந்தாலும் நீர் சொன்னதில் substance எதுவும் இல்லை. புத்தியுள்ளவரை மட்டுமே convince செய்ய முடியும், உம்மையல்ல.
\\இப்படிப்பட்ட ஒரு விவாதத்தில் வாரக்கணக்கில் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை. பிரபஞ்ச ஆரம்பம் குறித்த எனது கருத்துக்களை இங்கு முன்வைத்துவிட்டேன். "என்ன கையைப் புடிச்சு இழுத்தியா?" டைப் கேள்விகளுக்கு விதம் விதமாக பதில் சொல்லியும் பார்த்துவிட்டேன். எனவே இந்த முறையோடு எனது பதில்களை இங்கே முடித்துக் கொள்கிறேன். மன்னிக்கவும். உங்களுது தர்க்க(?!) ரீதியான, சிந்தனை(?!)ச் செறிவு மிக்க கேள்விகளுக்கு பதில் சொல்லப் பயந்து, ஒரு நாத்திக அறிவியல் மாணவன் ஓடிவிட்டான் என்று நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.\\ வாழ்வில் கொஞ்சம் நேர்மையையும் வளர்த்துக் கொள்வது நல்லது. பொய், பித்தலாட்டமே செய்து எல்லோரையும் எல்லாக் காலமும் ஏய்க்க முடியாது. தர்க்கம், சிந்தனை, செறிவு இந்த வார்த்தைகள் உமது அகராதியிலேயே கிடையாது.
நான் முன்பே எழுதிய வருங்கால தொழில்நுட்ப உலகம் பற்றி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி நல்ல பதிலாக இருக்கும் அ+து:
6.00 தெய்வ நம்பிக்கை:
6.10. தெய்வ நம்பிக்கை எப்படித் தொடங்கியது?
பணடைக்காலத்தில், மனிதரால் பல இயற்கை விடயங்கள் பற்றி முழுமையாகச் சீரணிக்க முடியவில்லை. வானம், பூமி, சூரியன், சந்திரன், வெள்ளி, மழை, கடல், ஆறு, மின்னல், முழக்கம், நில அதிர்வு, சுனாமி, புயல், வெள்ளம், வரட்சி, எரிமலை என்ற பல வியங்கள் எப்படி உருவாகின்றன என்பது பெரும் புதிராகவே இருந்தது. திருப்தியான விடைகள் கிடைக்காதவிடத்தும், உண்மையான விளக்கங்களை அறியவோ, கிரகிக்கவோ கூடிய ஆற்றல் இல்லாத காரணத்தினாலும், தமக்கு மிகவும் சௌகரியமாக, இவற்றை எல்லாம் செய்பவர் கடவுள் என்று ஒருவரைச் சிருஷ்டித்தார்கள். காலம் காலமாக, தங்கள் தங்கள் தேவைகளுக்குச் சாதகமாகப் பல உப தெய்வங்களையும் உருவாக்கினார்கள்.
உலகிலே,மனிதர்களுக்குள் நடைபெறும் பலவிதமான சமூகக் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு இந்தத் தெய்வ நம்பிக்கை மிகவும் உதவியாக இருந்தது. அரசனால் முழுநேரமும் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போகவே, மக்களிடையே தெய்வபயத்தை உண்டாக்கி, அத்தெய்வம் 24 மணிநேரமும் மனிதர் எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் செய்யும் நல்ல, கெட்ட செயல்கள் யாவற்றையும் அவர் கணக்கெடுத்து, அதன்படி அவர்களை, அவர்கள் இறந்தபின் சொர்க்கலோக சௌகரியங்களையும் அல்லது நரகலோக சித்திரவதைகளையும் அழிப்பார் என்று நன்றாகவே மக்களை மூளைச்சலவை செய்து அதில் வெற்றியும் கண்டார்கள்.
ஆனால், காலம் போகப்போக, பல பல சமயங்களும், வேறு வேறு கடவுள்களும் உருவாக்கப்பட்டு, தத்தம் கடவுளர்தான் பெரியவர் என்ற சண்டைகளினால், நினைத்ததிலும் பார்க்க மோசமான விளைவுகள் உருவாகி வெடிக்கும் போர்களினால் பல்லாயிரக்கணக்கில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் விழைந்துகொண்டே இருக்கின்றன. அத்தோடு, மக்களின் குருட்டு நம்பிக்கைகளைப் பாவித்துப் பணம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகள் பல வேடங்களில் பெருகியும் விட்டனர்.
6.20. விழிப்புணர்வின் காரணிகள்:
-மனிதன் தன்னால் முடியாது என்று எண்ணியிருந்த பல விடயங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடித்தமை.
-மனிதனுக்கு வேண்டியனவை எல்லாம் கிடைத்து, இறைவனைக் கேட்டுப் பெற வேறு ஒன்றும் இல்லாதமை.
-கடவுளே எல்லாம் நடத்துபவர் என்றால் அவர்தானே கஷ்டங்களையும் கொடுப்பவர் என்பதை உணர்ந்தமை.
-கடவுள் எல்லாமே உணர்பவர் என்றால் எதற்காக கஷ்டங்கள், அழிவுகள், கொலைகள், கொடூரங்கள், அநியாயங்கள் பற்றி அவருக்குப் பல விதமான கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் ஏன் அறிவிக்க வேண்டும்?
-கடவுளைப் புகழ்ந்தால், போற்றினால், குஷிப்படித்தினால் கேட்டதைத் தருவார் என்றால் அவர் என்ன கடவுளா? மனிதனா?
-அவரே எல்லாம் இயக்குபவர் என்றால் நாம் செய்யும் நல்லவை, கேட்டவை எல்லாமே அவர் செயல் தானே?
-கடவுளின் பிள்ளைகள், அவதாரங்கள் என்று கூறிக்கொள்பவர்களே நோய்வாய்ப் படுவதும், கொலை செய்யப்படுவதும் எப்படி? இவர்கள் எப்படி தம் பக்தர்களைக் காப்பற்றுவார்கள்?
-அற்புதங்கள் செய்து காட்டும் இவர்கள், சிறு பொருட்கள் அல்லாது, நாடிவரும் அடியவர்கள் விரும்பும் குறிப்பிட்ட ஒரு பெரிய பொருளை உருவாக்கிக் காட்டினார்களா?
-கர்ம விதிப்படி எமது பாவம் யாருக்கோ மறுபிறப்பில் போய்ச் சேரும் என்றால் மனிதன் குற்றச் செயல்கள் செய்வது அதிகரிக்கும் என்பது உண்மை.
-பாவத்தைச் செய்த பின்னர் கடவுளை வேண்டினால் அவர் மன்னிப்பார் என்றால், அவர் யார் கடவுளா?
-எல்லாம் கடவுள் சித்தம் என்றால், எமக்கு என்ன, எப்ப, எவ்வளவு, எங்கே வேணும் என்று கடவுளுக்கே உத்தரவு போடும்,தெரியப்படுத்தும் அளவுக்கு நாம் என்ன கடவுளிலும் பெரியவர்களா?
இப்படிப் பலவிதமான புரிந்துனர்வுகளின் பின்னர் மனிதன் உருவாக்கிய கடவுளின் தேவை சிறிது சிறிதாக அரும்பத் தொடங்கியது.
6 .30. அந்த உலகில் 90 % மதநம்பிக்கை அற்றவர்களே
அடுத்த 500 வருடங்களில் படிப்படியான விழிப்புணர்வின் பின் மத நம்பிக்கையும், கடவுள் தேவையும் பின்வரும் காரணங்களினால் தேய்வடையும்.
-மதநம்பிக்கை இல்லாத நாட்டு மக்கள் எல்லாம் அதி உயர் செல்வச் செழிப்போடு சிறப்பான வாழ்க்கைத் தரத்தினைக் கொண்டிருந்தார்கள்.கல்வியில் உயர்மை கொண்டு பல புதிய நவீன சாதனங்களைக் கண்டு பிடித்தார்கள்.
-மதமே எல்லாம் என்று திரிந்த நாட்டு மக்கள் மிகவும் குறைந்த வாழ்க்கைத் தரம், கல்வியின்மை, பொருளாதார வீழ்ச்சி, பட்டினி, பஞ்சம் காரணமாகச் செழிப்பான நாடுகளைக் கையேந்தி நிற்க வேண்டி இருந்தது.இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்காது, சுலபமான வழியில் இறைவன் கொடுப்பார் என்று நம்பிக் கெட்டார்கள்.
-கடவுள்தான் செய்தார் என்று நம்பிய இயற்கை முதலிய பல விடயங்களை மனிதன் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தான்.
-கடவுள் என்று கூறப்பட்டவருக்கு பிற்கால முன்னேற்றங்கள் பற்றி ஒரு சிறிய அறிவுகூடி இல்லாது,அவர் கற்கால ஆயுதங்கள், வாழ், வில், அம்பு மற்றும் மாடு, ஆடு, குதிரை, ஒட்டகம், பண்டி, கழுதை, குரங்கு என்று சிறு வட்டத்தினுள் மட்டும் நின்றதை உணர்ந்தான்.
-கடவுள் எனப்படுபவர் தொடக்கம், முடிவு இல்லாத பல பரிமாணங்கள் உள்ளபவராக இருந்தால்தான் இவ்வளவு சிருஷ்டிகளையும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்டவரை நாலு பரிமாணத்தை மட்டுமே உணரக்கூடிய இந்த மனிதனால் உணரப்படுவது என்பது முடியாத காரியம்.
-மனிதன் இங்கு உள்ள சொர்க்கத்தை விட்டு, இன்னும் பேரவாக் கொண்டு ஏன்தான் கற்பனையில் சொல்லப்படும் சொர்க்கத்தை அடையவேண்டும் என்று பேராசை கொள்ள வேண்டும்?
-மதநம்பிக்கை, கடவுள் பயம் என்பன ஒருவரின் மன அழுத்தங்களையும், கவலைகளையும் குறைப்பதற்கான, ஆறுதல் தரும் மூளையைப் பதப்படுத்தும் முறையாகும். ஆனால், நவீன புத்திஜீவிகளுக்கு கடவுள் என்று ஓன்று தேவையில்லாது ஒரு வெறும் வெறுமையிலே தியானம் செய்து இதே பலனைப் பெறலாம். இவ்விதமாக மனத்தை ஒருநிலைப் படுத்த முடியாதவர்களுக்கு மாத்திரம் ஒரு உயரிய போலிஸ்,கடவுள் தேவையாய் இருக்கும். அத்தோடு, மூளை நரம்புச் சத்திர சிகிச்சை அல்லது ஓம் சிம்பு மூலமும் மனிதன் தனக்குத் தேவையான எப்பலனையும் வரச்செய்யலாம்.
இத்தகைய காரணங்களினால், பிற்கால மனிதன் கடவுளுக்கே ஒரு கும்புடு போட்டு விட்டான். கடவுள் இருக்கிறாரோ அல்லது இல்லாமல் போய்விட்டாரோ என்று பெரிதாய் அலட்டிக்கொள்ளத் தயாராய் இல்லை.
என்றாலும், ஒரு சில பழமைவாதிகள் உலகின் சில மூலைகளில் இருந்து, அவர்களினால் இன்னமும் விளங்காத சில விடயங்களைக் கடவுள்தான் செய்கிறார் என்று கூறிக்கொண்டு சொர்க்கத்துப் போவதற்காக இறைவனைத் தொடர்ந்து குஷிப்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.
@ Selva
சார் நீங்க சொல்றதுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? இப்ப கடவுள் வழிபாடு எப்படி தோன்றியது? இன்னும் 500 ஆண்டுகளில் கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் இங்கு யாரும் பேசலை!!! அவை எல்லாமே கற்பனை/அனுமானம் சார்ந்தது, உங்களுக்கு 500 ஆண்டுகளின் பின்னர் கடவுள் நம்பிக்கை அருகியிருக்கும் என்பது நம்பிக்கை என்பதுபோல இன்னொருவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கலாம்!!! என்னதான் அறிவும் ஆற்றலும் அதிகரித்தாலும், விஞ்ஞானியும், டாக்டரும் இன்னமும் கடவுளை அதிகளவு நம்புகின்றார்கள்!! ஏன் இன்னும் 500 ஆண்டுகளில் பூமி இல்லாமல் கூட போகலாமே!!! திடீரென்று பெருவெடிப்பில் பிரபஞ்சமே தோன்றும்போது திடீரென பூமி அழிந்து போகாதா என்ன!!!
இந்தப் பதிவின் நோக்கம்; கடவுள் இருக்கு, இல்லை இரண்டுக்கும் எந்தவித ஆதாரமும் நிரூபணமாக இல்லை!!! எனவே கடவுளை நம்புபவன் ஆத்திகன், நம்பாதவன் நாத்திகன்; நம்பாதவனுக்கு பகுத்தறிவாதி என்கிற சொல்லுக்கு தகுதி இல்லை!!! அடுத்து கடுவுள் வழிபாட்டால் நன்மை, தீமை இரண்டும் இருபினும் பொதுப்பார்வையில் நன்மை அதிகளவில் இருப்பதால் கடவுள் இருந்துவிட்டு போகட்டுமே எனதுதான்!!!
நண்பா! கடவுள் பற்றி விளங்குவதற்கு அது உருவாக்கப்பட்டதற்கான காரணிகளை முதலில் ஆராயவேண்டும் அந்தக் காரணங்கள் தேய்ந்துபோக நாளடைவில் கடவுள் தேவையும் இல்லாது போகும் என்பது வெளிச்சம். சரி, கடவுள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! ஆனால் கடவுள்மார், சுவாமிமார்களுக்குப் பின்னால் ஓயாமல் அலைந்து திரியும் பக்தி கூடி, உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதாகத் தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் அந்த முத்தியடைந்தவர்கள், மற்றயோர் எல்லாம் எதோ பாவிகள், ஞான சூனியங்கள், தங்கள் level க்கு உயர்வதற்கு அறிவு போதாதவர்கள் என்று ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். உண்மையில், அவர்கள்தான் பேராசை கொண்டு இரவும் பகலும் எதையோ தேடி அலைந்து திரிகிறார்கள் என்பது உண்மை. சமயத்தில் சொல்லப்படுவதுபோல ஆசையை அறுக்காமல் அதைக் கூட்டுபவர்கள் அவர்களே. அத்தோடு, முன்னோர்கள் சொன்னார்கள் என்பதாலோ, தற்போது பெரும்பாலானோர், படித்தோர் எல்லோரும் பின்பற்றுகிறார்கள் என்பதாலோ அது சரியென்று மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது. எதுவும் தற்கால அறிவுக்கிணைய நிறுவப்படல் வேண்டும்.
வணக்கம் ஜீவ்
இந்தப் பதிவை சூடாக படிக்காததையிட்டு மனவருத்தப்படுகிறேன்...
இங்கு அண்டப் பிறப்பாக்கத்திற்கு உருவாக்கலும் அழிதலும் தான் தோன்றித்தனமானவை என கணித வாய்ப்பாட்டுடன் ஒப்பிட்ட சகோதரத்திற்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..
கணித விஞ்ஞான ஆரம்ப வாய்ப்பாடான நியூட்டனின் விதியே இதற்கு முதல் சான்றாகும்.
ஃஃஃஃபுறவிசை தாக்காத போது நிறகும் பொருள் அசையவோ அசையும் பொருள நிற்கவோ முடியாதுஃஃஃஃ
மனிதன் குறிப்பிட்ட பெயர்களிலோ அல்லது உருவத்திலோ கடவுள் இல்லை என்பதே என் கருத்து... இருக்கிறது ஆனால் தற்போதைய இருப்பிலல்ல..
கடவுள் இல்லை என்பதற்கு எத்தனை ஆராய்ச்சிகள் மேற் கொண்டு இருக்கிறார்கள்?
அல்லது கடவுளை இருக்கிறார் என சொல்பவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளீர்கள்.
மற்ற மதங்களை நான் விமர்சிக்க வரவில்லை, அதே சமயம்...குர்-ஆனில் உள்ள அறிவியல் தொடர்பான விஷயங்களில் எத்தனை பிழை கண்டுள்ளீர்கள்.
-பஹ்ருத்தீன்
@ AshiQ
உங்க comment க்கும் இந்த பதிவுக்கு என்னய்யா சமபந்தம்!!! எதுக்கு இப்ப குர்ரானை இழுக்கிறீங்க!!!!
நீங்கள் கூறிய 3 வகையினரும் பொதுவாக பேசும் பொருள் கடவுள், எனவே இல்லாத ஒன்றை பற்றி யாரும் பேசபோவதில்லை. எனவே கடவுள் இருக்கிறார்.
கடவுள் ;- இயற்கையின் விளக்கம் (வள்ளலார்).
கடவுள், உயிர், பாசம் பற்றிய விளக்கத்தையும், சைவ சித்தாந்தம் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளது.
சித் = உயர்ந்த பொருள்.
அந்தம் = முடிவு.
மிகவும் உயரிய பொருளாகிய கடவுளை பற்றிய முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும். அதை படித்தால் கடவுள் பற்றிய தெளிவும், அறிவும் கிடைக்கும்.
----சிவாயநம.
eppudi sir ungal pathivu arumai!
matrum jaidevdas avargalin karuththukkalai naanum aamothikkiren.
nanri!
neengal solvathu unmaithan ethai nampuvathu ethai nampa vendam entru kulappamaga irukkirathu aanal intha samiyargal illamal irunthal intha ulagam athan pokkil nalla padiyaga sendrirukkum (kolga intha samiyargalai)
my email/veeracell@gmail.com
கடவுள் இருக்கிறார் என்றால், இல்லை என்று சொல்ல சிலர் ஓடி வர்றாங்க. இல்லைன்னு சொன்னா, பலர் ஓடி வர்றாங்க. ஆனாலும் இந்த உலகம் சுத்திகிட்டே இருக்கு அறிவியலையும் ஆன்மீகத்தையும் சுமந்து கொண்டு.
ஒரு பொருள் இல்லை என்றால் அது இல்லை என்று சொல்லுவதற்கு ஏன் இவ்வளவு கஷ்டம் ,குழப்பம்,
எனக்கு புரியவில்லை
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)