Friday, August 19, 2011

லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாததா?

எனக்கு இந்தியன் தாத்தாவை ரொம்ப பிடிக்கும், அதேபோல அந்நியனையும் ரொம்ப பிடிக்கும், ஏன்னா அந்த கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்தித்துவரும் பிரச்ச்சனைகளுக்கு நிழலிலே இறுதித் தீர்வை தந்தவை. நாம் கையாலாகாதவர்களாக வேடிக்கை பார்த்த, அனுபவித்த மோசமான சம்பவங்களுக்கு மரணம் என்னும் மிகவும் அதிகபட்ச தீர்வை குறிப்பிட்ட சினிமா கதாபாத்திரங்கள் வழங்கியபோதும் அதை நாம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோமென்றால் அதற்க்கு காரணம் அந்தளவிற்கு எமக்கிருந்த ஆற்றாமையும் கோபமும்தான். மேற்க்கத்தைய நாடுகளில் கடமையை செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்குவார்கள்;ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்த்தான் கடமையை செய்ய லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது பலரும் சொல்லும் பொதுவான, வேதனையான குற்றச்சாட்டு.

லஞ்சம் வாங்குவது எப்படி மிகவும் மோசமான செயலோ, அதேபோல லஞ்சம் கொடுப்பதும் மிகவும் தவறான செயல். "நீ கொடுத்ததால்தான் நான் வாங்கினேன்" என்கின்ற லஞ்சம் வாங்கும் விற்பன்னரின் அடாத்து கதைகளுக்கு லஞ்சம் கொடுப்பவரால் 100 சதவிகிதம் இதயசுத்தியுடன் முன்னின்று பதில் சொல்ல முடியாது. இந்தப் பதிவில் லஞ்சம் வாங்குபவர்களை பற்றி நான் எதுவுமே எழுதப் போவதில்லை; ஏனெனின் இதுவரை லஞ்சம் வாங்கிய அனுபவம் எனக்கில்லை, அதற்க்கு காரணம் லஞ்சம் வாங்குமளவிற்கு எந்த உத்தியோகத்திலும் நான் இதுவரை பணியாற்றி இருக்கவில்லை; ஒருவேளை அவ்வாறான இலாக்காக்களில் பணியாற்றியிருந்தால் இந்தப்பதிவை எழுதும் ஜோக்கியதை எனக்கிருந்திருக்குமோ தெரியாது? ஆகவே அனுபவ ரீதியாக எனக்குத் தெரியாத லஞ்சம் வாங்குபவர்களை பற்றி எழுதாமல்; நான் அனுபவரீதியாக உணர்ந்த, தெரிந்த, புரிந்த லஞ்சம் கொடுப்பவர்களை பற்றி எழுதலாமென்று நினைக்கின்றேன்.

லஞ்சம் கொடுப்பது தவறு என்று தெரிந்தும் இன்றுவரை லஞ்சமே கொடுத்ததில்லை என்று இதயசுத்தியுடன் சொல்பவர்கள் எத்தனைபேர்? பேச்சிற்க்கும், சினிமாவிற்கும், சட்டத்திற்கும், நியாயத்திற்கும் தப்பாக தோன்றும் லஞ்சம் கொடுக்கும் விடயம் அன்றாட நடைமுறை வாழ்வில் எத்தனை சதவிகிதம் சாத்தியமாக இருக்கும்? அடித்து சொல்வேன் என்னையும் சேர்த்து 99 சதவீதமானவர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்திலேனும் லஞ்சம் கொடுத்தவர்கள்தான். லஞ்சம் கொடுப்பது தவறென்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அதேபோல லஞ்சம் கொடுக்காமல் இன்று வாழ்க்கையை ஓட்டுவது சிரமமான விடயம் என்பதும் அத்தனை சதவீதம் உண்மை. இல்லை என்று வீரவசனம் பேசுபவர்களுக்கு என்னால் எந்த பதிலும் சொல்லமுடியாது; காரணம் வீரவசனம் வேறு, வாழ்க்கை வேறு.50+ கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஒரு தேவைக்கு அரசபேரூந்தில் நகரத்துக்கு வரும் நபரொருவர் ஒரு அலுவலகத்தில் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வருகிறார்; அங்கிருக்கும் அலுவலகப் பணியாளர் "ஐயா/அம்மா நீங்க சந்திக்க வேண்டிய அலுவலகர் இன்றைக்கு இந்த வேலையை பார்க்கும் நாள் அல்ல, நீங்க(ள்) நாளைக்கு வாங்க" என்கிறார். உடனே குறிப்பிட்ட நபர் "தம்பி நான் தூரத்தில இருந்து வாறன் இன்றைக்கே பல வேலைகளை வீடுவிட்டுத்தான் வந்தேன், போக்குவரத்து செலவும் அதிகம், நாளைக்கு வாறதென்றால் அலைக்கழிவு, ஏதும் செய்ய முடியாதா? ப்ளீஸ்" என்கிறார்; அதற்க்கு அந்த அலுவலகப் பணியாளர் "நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கிறேன், என்னை போகும்போது கவனிக்கணும் ஓகேவா?" என்கிறார்........

இதற்க்கு உங்களது பதில் என்னவாக இருக்கும் 1) சரி தம்பி அலுவலை முடித்து கொடுங்கள், உங்களை கவனிக்கிறேன் என்பதா? இல்லை 2) உன்னை எதுக்கு கவனிக்கணும் நான் போய்ட்டு நாளை வருகிறேன் என்பதா? என் பதில் நிச்சயமாக முதலாவதுதான், இதை நான் பெருமையாகவோ, கெட்டித்தனமாகவோ சொல்லவில்லை; அந்த இடத்தில் லஞ்சம் கொடுப்பது தவறென்கின்ற எண்ணத்தைவிட எமது வேலை அலைச்சல் இல்லாமல் முடியவேண்டும் என்கின்ற சராசரி மனித எண்ணம்தான் எம்மிடமிருக்கும். இதில் எதிர்க்கருத்துடையவர்களும் இருக்ககூடும்; அப்படியான எதிர்க்கருத்துடைய, அலைச்சல் ஏற்ப்பட்டாலும் பரவாயில்லை லஞ்சம் கொடுக்க மாட்டேன் என லஞ்சத்தை எதிர்க்கும் உண்மையான நேர்மையான மனிதர்களுக்கு சமூகம் கொடுக்கும் பெயர் முட்டாள், கஞ்சன், வாழத்தெரியாதவன்.மேலே குறிப்பிட்டது ஒரு சாதாரண சம்பவம், இதேபோல லஞ்சம் கொடுக்கும் இடங்கள் பற்பல. லஞ்சம் கொடுப்பதே தவறுதான் என்றாலும் ஜதார்த்த வாழ்வில் சில இடங்களில் லஞ்சம் தவிர்க்கமுடியாததாக இருக்கும். உதாரணமாக இன்னுமொரு சந்தர்ப்பத்தை கூறுவதானால்; ஒரு நிறுத்தற்தடை (No Parking) உள்ள இடத்தில் தவறுதலாகவோ, போலிசை அவ்விடத்தில் காணவில்லை என்பதாலோ வண்டியை நிறுத்தி விடுகின்றோம். திடீரென அங்கு வரும் போலிஸ் "No Parking கில் வண்டியை நிறுத்தியதற்கு குற்றம் எழுதினால் கோட்டுக்கு போய் 500 ரூபாய் தண்டப்பணம் கட்ட வேண்டும், தண்டப்பணம் காட்டுகிறாயா? இல்லை என்னை கவனிக்கிறாயா? " என கேட்குமிடத்தில் நீதிமன்றம் போய் அலைக்கழிந்து 500 ருபாய் தண்டப்பணம் கட்டுவதற்கு பதிலாக இவனுக்கு 200 ரூபாயை கொடுத்து விடலாமென்றுதான் தோன்றும்.

நீதிமன்று சென்று கட்டும் தண்டப்பணம் நாட்டுக்கானது, அதாவது எமக்கானது; ஆனால் போலீசிற்கு கொடுக்கும் பணம் போலிஸ் என்னும் தனி மனிதருக்கானது. இது எமது புத்திக்கு தெரிந்தாலும் 4 மணித்தியாலம் + 300 ரூபாயை நாட்டுக்காக இழப்பதைவிட, பொலிசிற்கு 200 ரூபாய் கொடுப்பதால் 4 மணித்தியாலம் + 300 ரூபாய் எமக்கு சேமிக்கப்படுகின்றது என்கின்ற யாதார்த்தம்தான் எம்மனதில் அக்கணம் தோன்றும்; அதனால்த்தான் அவ்விடத்தில் 200 ரூபாயை லஞ்சமாக கொடுத்துவிட்டு தப்பித்து விடுகின்றோம். இப்படியான சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுப்பது தவறு என்கின்ற உபதேசம் மண்டையில் ஏறவே ஏறாது!!!!! காரணம் உபதேசம் வேறு, வாழ்க்கை வேறு.

ஒரு உணவகத்தில் சாப்பாடு பரிமாறும் பையனுக்கு கொடுக்கும் டிப்ஸ் அவனது பரிமாறலுக்கான அன்பளிப்பு என்றே பொருள்பட்டாலும்; அவனுக்கு டிப்ஸ் கொடுத்ததால் அடுத்த தடவை அவன் எம்மை வந்தவுடன் கவனிப்பான் என்கின்ற எண்ணம் எம் மனதில் இல்லாமலா இருக்கும்? ஒருவகையில் அதுகூட லஞ்சம்தான்! உணவகம், மதுபானசாலை, திரையரங்கு என ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டிருக்கும்!அடிப்படையில் லஞ்சம் கொடுப்பதற்கான முக்கிய காரணிகளை நோக்கினால்; நேரமின்மை, அவசரத்தேவை, அலைச்சல், பணம் சேமிப்பு, பயம், தப்பித்துக்கொள்ளுதல் (தண்டனையில் இருந்து), சோம்பல், பணத்திமிர் என்பன முக்கியமானவை.இப்படியாக அவரவரின் தேவைக்கேற்ப லஞ்சம் கொடுக்கப்படுகிறது. எம் அன்றாட வாழ்வில் எம்மோடு பின்னிப் பிணைந்திருக்கும் லஞ்சம் கொடுத்தல் என்னும் நிகழ்வு இல்லாமல், அதாவது லஞ்சம் கொடுக்காமல் வாழ்க்கையை ஓட்டுவதென்பது சாதாரண விடயமல்ல. எம்மால் லஞ்சம் கொடுப்பதை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும் இயலுமானவரை லஞ்சம் கொடுப்பதை குறைக்க முயற்ச்சிக்கலாம்!!!

லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாததா? என்கின்ற கேள்விக்கு எனது பதில் "லஞ்சம் கொடுப்பது தப்புத்தான், ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வாழ்வது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது, எனவே லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாதது" என்பதுதான். இந்தியன் அல்லது அந்நியன் வந்து கேட்டாலும் என் பதில் இதுதான் :-)

Monday, August 15, 2011

சந்தானத்தின் கேள்வியும் பிரபலங்களின் பதில்களும்.

இந்திய சுதந்திர தினத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 'நாட்டிற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?' என்கின்ற கேள்வியை நகைச்சுவை நடிகர் சந்தானம் அவர்கள் சில முன்னணி சினிமா பிரபலங்களிடம் கேட்கின்றார், அதற்க்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்பதுதான் இப்பதிவு. இது முழுக்க முழுக்க கற்பனையே; யாரையும், எதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.......

கமல்ஹாசனிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

கமல் :- வெல், இதை கேள்விக்கு பதிலளிக்கணுமின்னா ....... சுதந்திர காலத்தில நம்ம முன்னோர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கிறாங்க எங்கிறத நாம நினச்சு பாக்கணும், அப்புறம் அமெரிக்கா எப்பிடி நல்ல வளத்தோட இருக்கிறாங்க எங்கிறத நாம தெரிஞ்சிக்கணும், நான் தசாவதாரம் பண்ணும்போது அமெரிக்காக்கு மூணு வாட்டி போயிருந்தன்,ஒவ்வொரு தடவையும் அமேரிக்கா பாக்கிறத்துக்கு புதுமையா இருக்கும், அந்த நேரங்களில் சின்ன வயசில எங்க தெருவில இருந்த....

சந்தானம் :- சார் கேள்விக்கு பதில் வரலையே....

கமல் :- நான் பதிலுக்குத்தான் வந்துகிட்டிருக்கிரன்......

சந்தானம் :- (உங்ககிட்டயிருந்து பதில் வாறதுக்குள்ள அடுத்த சுதந்திர தினம் வந்திருமே) பரவால்ல சார் நீங்க நின்னு நிதானமா ஜோசிச்சு பதில் சொல்லுங்க, இவரு நோட் பண்ணிக்குவாரு, டேய் தம்பி இங்கவா; சார் சொல்றதை நோட் பண்ணிக்கோ..... எனக்கு வயிறு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு, நான் கிளம்புறன், நீங்க இவர்கிட்ட தெளிவா பதிலை சொல்லுங்க...

நடிகர் விஜயிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

விஜய் :- இந்த குடியரசு தின நன்னாளிலே...

சந்தானம் :- சார் இது சுதந்திர தினம்!!!!

விஜய் :- இருக்கட்டுமே, அதனால என்ன? எல்லாம் நம்ம காந்தி தாத்தா வாங்கி குடுத்ததுதானே?????

சந்தானம் :- (சுத்தம்) சார் அதுவந்து.......

விஜய் :- இப்ப அதுவா முக்கியம்; மேட்டருக்கு வாங்க; நான் நாட்டுக்கு செய்த மிகப்பெரும் சேவையாக நினைப்பது இந்திய தேசத்திற்கு ஒரு டாக்டரை உருவாக்கியதுதான்.

சந்தானம் :- யாராவது பசங்களை படிக்க வச்சு டாக்டராக்கினீங்களா ??

விஜய் :- யோவ்; நான் என்னை சொன்னன், ஐ ஆம் டாக்டர் விஜய்...

சந்தானம் :- (ஏன் அதோட நிறுத்தீட்டா(ய்)? அப்பிடியே 'மொக்கை' 1 டெரா ஹேட்ஸ், 'பிளேட்' 1 ஜீடா பைட்ன்னும் சொல்லன்.. ) சரிசார்; நன்றி, நாங்க கிளம்பிறம்!!!!!!

இயக்குனர் விஜயிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

இயக்குனர் விஜய் :- அன்று வெள்ளையன் எம் மண்ணிலே எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல வளங்களை சுருட்டிக்கொண்டு சென்றான். அதற்க்கு பதிலடியாக நானும் என்சக சில இயக்குனர்களும் சேர்ந்து வெள்ளையனின் திரைப்படங்களை அவனுக்கு தெரியாமல் இங்கு ஆட்டையை போட்டுக் எம் மண்ணுக்கு கொண்டு வந்துள்ளோம், கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம், கொண்டு வருவோம்!!!!

சந்தானம் :- இப்பிடி ஒரு பதிலை சத்தியமா நான் எதிர்பாக்கல, எனி வே, மிக்க நன்றி.

'தமிழன்' சீமானிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

சீமான் :- என் நாடு ஈழத்திற்கு என்ன செய்தது? அங்கு வாழும் எம் இனத்தின் விடிவிற்கு ஒன்றுமே செய்யாத இத்தேசத்தின் இன்றைய அரசியல் சுயலாப சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவேன்...

சந்தானம் :- கோபப்படாதீங்க சார், நீங்க நாட்டிற்கு என்ன செய்தீங்கென்னுதானே கேட்டன்....

சீமான் :- எனக்கு ஈழத்திற்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு....

சந்தானம் :- (அதுக்கு நீ ஈழத்துக்குத்தான் போகணும் ) சாரிசார், தப்பான ஆள்கிட்ட கேள்வியை கேட்டிட்டன், நான் வாறன்சார்.

டீ.ராஜேந்தரிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

டீ.ராஜேந்தர் :- நான் என்ன செய்யலையின்னு கேளு!!!!

சந்தானம் :- சரிசார், நீங்க நாட்டுக்கு என்ன செய்யலை ?

டீ.ராஜேந்தர் :- டேய் நான் நாட்டுக்கு என்ன செய்தனின்னு கேளு!!!!

சந்தானம் :- (யார்ரா அவன்? என்னை இவன்கிட்ட கூட்டியாந்தது...) சரிசார் இப்ப என்னதான் சொல்லப்போறீங்க??

டீ.ராஜேந்தர் :- அப்பிடி கேளு; வெய்யிலுக்கு தேவை மோரு, என் பையனுக்கு தேவை பீரு(Beer), ஓட்டுறதுக்கு தேவை காரு (Car), கிரிக்கட்டுக்கு தேவை போரு (Four), ரோட்டுக்கு தேவை தாரு, வீட்டுக்கு தேவை டோரு (Door), நாட்டுக்கு தேவை பாரு (Bar)...

சந்தானம் :- (முதல்ல இந்த இடத்தைவிட்டு மாறு, இல்லை மூஞ்சீல விடுவன் சேறு) சூப்பரா சொன்னீங்க சார், இந்தமாதிரி பேச உங்க ஒருத்தராலதான் முடியும்.......

எஸ்.ஜே.சூர்யாவிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

எஸ்.ஜே.சூர்யா :- நான் நிறைய பொண்ணுங்களை....

சந்தானம் :- பொண்ணுங்களை!!!!!!

எஸ்.ஜே.சூர்யா :- யோவ், எதுக்கு இப்பிடி பறக்கிறா(ய்)? படிக்கவைக்கணுமின்னு இருக்கிறன் எண்டு சொல்லவந்தன்.

சந்தானம் :- சார் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, 'படி'க்கத்தானே!!!!!!

எஸ்.ஜே.சூர்யா :- ஆமாய்யா....

சந்தானம் :- நல்ல முயற்சி சார், பாராட்டுக்கள்.......

நமீதாவிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க? மேடம்

நமீதா :- ஹாய் மச்சான்..... எப்பிடி இருக்கிறது?

சந்தானம் :- (என் அப்பன்கூட உங்கம்மா பொறந்தாளா ? இல்லை என் அம்மாகூட உங்கப்பன் பொறந்தானா ? இல்லை உன் அக்கா தங்ககச்சியை நான் கட்டினனா? இல்லை என் அண்ணன் தம்பியை நீ கட்டினியா? இல்லை நானும் நீயும் தோஸ்தா? எதுக்கு இப்ப இந்த மச்சான்? ) நான் இப்பவரை நல்லாத்தான் இருக்கிறன், நீங்க பதில் சொல்லுங்க மேடம்....

நமீதா :- எனக்கு காந்தி தாத்தா பிடிக்கும்.

சந்தானம் :- கதர் சட்டை இல்லாம கலர் சட்டையா இருந்தாலும், காந்தித் தாத்தா வேட்டி சைசில ட்ரெஸ் பண்ணியிருக்கிறதை பாக்கிறப்பவே அது தெரியுது மேடம்...... நீங்க நாட்டுக்கு என்ன நல்லது பண்ணியிருக்கிறீங்க?

நமீதா :- நான் விஜயகாந்த் சார், அர்ஜுன் சார் கூட படத்தில நடிச்சிருக்கு....

சந்தானம் :- புரியல மேடம் !!!!

நமீதா :- விஜகாந்த் சார், அர்ஜுன் சார் படங்கள்ல நிறைய தீவிரவாதிகள் பிடிக்கும், அது நாட்டுக்கு செய்யும் சேவைதானே? அவங்க கூட நான் நடிச்சது ராமர் பாலம் கட்ட அணில் ஹெல்ப் செஞ்சது போலதானே?

சந்தானம் :- (வாட் எ கிரேசி லேடி..... ) ஓகே மேடம், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

சிம்புவிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

சிம்பு :- ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறேன்னா; எனக்கு சுதந்திர தினம்னா ஞாபகத்துக்கு வாறது என்கூட இருக்கிற பசங்க எல்லாம் என்னை பாடச்சொல்லி, என்னோட பாட்டுக்கு கிளாப் அடிச்சு ஜாலியா இருக்கிறதுதான். என்னாலையே நம்பமுடியாத சில விசயங்களை என்னையும் அறியாம நான் செய்யிறதை எனக்கே அப்ப நம்ப முடியாம இருக்கும்.

சந்தானம் :- நான், எனக்கு, என், என்னை, என்னோட, என்னாலையே, என்னையும், எனக்கே; இந்த சொல்லுகள் இல்லாம உங்களால பேச முடியாதா?

சிம்பு :- எனக்கு அப்பிடியெ பேசி பழகிடிச்சு, என்னாலையே உடனடியா அதை கன்ரோல் பண்ண முடியல, நான் நினைச்சா முடியும், ஆனா எனக்குத்தான் இதையெல்லாம் ஜோசிக்க நேரமில்லையே, ஏன்னா நான் ரொம்ப பிசி.

சந்தானம் :- சரி பதிலை சொல்லுங்க?

சிம்பு :- ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறன்னா.........

சந்தானம் :- ரொம்ப நன்றிசார் நான் கிளம்பிறன்.

கவுண்டமணியிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

கவுண்டமணி :- நீ என்ன பண்ணியிருக்கிறா(ய்)

சந்தானம் :- (என்ன பதில் சொன்னாலும் இந்தாளு நம்மள நாஸ்தியாக்காம விடமாட்டான்...) நான் எதுவும் பண்ணல சார்.

கவுண்டமணி :- அப்ப என்ன மயி...துக்கு மைக்கையும் கமராவையும் தூக்கிகிட்டு இங்க வந்தா(ய்)?

சந்தானம் :- (ஆகா சனியன் சடை போட ஆரம்பிச்சிடிச்சு, இனி பொட்டு வச்சு பூ வைக்காம போகாதே) இல்லைசார் பேட்டி எடுக்க சொன்னாங்க!!

கவுண்டமணி :- அவங்க ஆயிரம் சொல்லுவாங்க மான்(Man), நீ உடனே மைக்கை தூக்கீட்டு வந்திடுவியா? கன்றி புரூட்ஸ்; இந்தா 1 ரூபா, போ, போயி அந்த மூலைக் கடையில வாழைப்பழம் வாங்கீட்டுவா?

சந்தானம் :- (என்னது வாழைப்பழமா??? ) சார் நான் உங்களை பேட்டி எடுக்க வந்தவன் சார்!!!!

கவுண்டமணி :- ஆ..ஆ... இவரு பெரிய முதல்வன் அர்ஜுனு, நான் ரகுவரன், பேட்டி எடுக்க வந்திட்டாராம். என்னோட மாடுலேசனை கொப்பி அடிக்கிற நாய்க்கு பந்தாவை பாரு. போ, போயி பழம் வாங்கீட்டுவா!!!

சந்தானம் :- (சீனியர் ஆட்டிஸ்ட் கேக்கிறாரு, வாங்கித்தான் குடுப்பமே) இந்தாங்க சார் வாழைப்பழம், நீங்க இன்னும் பதில் சொல்லலையே!!!!

கவுண்டமணி :- இந்த மூஞ்சிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை.

சந்தானம் :- அதுக்காக நான் வேற மூஞ்சிய மாத்திக்கவா முடியும்?

கவுண்டமணி :- ஓ...., கவுண்டருக்கே கவுண்டரா? அம்புட்டு பெரிய பிஸ்தாவா நீ?

சந்தானம் :- அய்யய்யோ நீங்க எவளவு பெரிய அப்பாட்டக்கரு, உங்க முன்னாடி நானெல்லாம்....

கவுண்டமணி :- இப்ப எதுக்கு இப்பிடி பம்மிறா(ய் )? உனக்கு நான் பதில் சொல்லனுமின்னா நான் கேக்கிற 3 விசயத்தில ஒண்ணை கொண்டுவா?

1) கருங்கல்லு வேர்
2) கருவாட்டு இரத்தம்
3) கொக்கு மூத்திரம்

சந்தானம் :- (கவுண்டர் கவுண்டர்தான்) சரி அண்ணே நான் அப்புறமா உங்களை சந்திக்கிறன்.

கவுண்டமணி :- தம்பி பாத்துப்போ, தெருவில நாலஞ்சு சொறிநாய்கள் நிக்கும்,பாவம் அதுகள கடிச்சு வச்சிராத.....

சந்தானம் :- (தப்பிச்சன்டா சாமி) .............