Thursday, May 26, 2011

என்ஜோய் கண்ணா...........

சில மாதங்களுக்கு முன்னர் 'காமடிபீஸ்' ஒருவர் ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பை 'போலி' புரட்சியால் புறக்கணிக்க சொல்லி வேண்டினார், குய்யோ முறையோ என்று கத்தினார்; ஆனால் பாவம் அவரது கதறலை அவரது குடும்பமே செவி சாய்க்கல, ஏன் அவரே செவி சாய்க்கல; அந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பு மாபெரும் வெற்றி பெற்றது. அவருக்கு வயித்து கடுப்பு தாங்க முடியல; அதுக்கப்புறமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த எதிர்பார்பின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் வாந்தி வாந்தியாய் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். இருந்தாலும் வயித்து 'கடுப்பு' குறையவே இல்லை, தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

இப்போ அவருக்கு ஒரு சிறிய சந்தர்ப்பம் வாய்த்துள்ளது; அந்த எதிர்பார்ப்பின் 'ஆணிவேர்' இப்போது தற்காலிகமாக இயற்கையால் சற்று ஆட்டம் கண்டுள்ளதை தனது வயிற்று கடுப்புக்கு மருந்தாக நினைத்து ஆணிவேரினையும், ஆணிவேரை கொண்டாடியவர்களையும் குத்தி காட்டுகிறாராம்!!! பாவம் அவரும் என்ன செய்வது இப்படியான சந்தர்ப்பத்தில்தானே கொஞ்சமாவது மனதை தேற்றிக்கொள்ள முடியும், என்ஜோய் கண்ணா. தன்னையும், தன் குடும்பத்தையுமே தன் கருத்துக்களால கன்ரோல் பண்ண முடியாத இந்த போலி புரட்சிவாதி ஊரை திருத்த போறாராராராரா.........ம், நாராயணா இந்த புரட்சிகளின் கொசுத்தொல்லை தாங்க முடியல, யாராவது மருந்து அடிங்கப்பா!!!!!!!!!!!!

நான்கூட சின்ன 'பொடியன்' விட்டுடலாமின்னுதான் நினைச்சன், அனா பயபுள்ளை ரொம்ப ஓவராத்தான் போறார்..............

பிற்சேர்க்கை : அந்த மனிதரின் படங்களை, அவரின் புகழைப் பார்த்துதான் வயித்து கடுப்பில இருப்பாங்கன்னு நெனச்சன், இங்க என்னடான்னா ஒரு கேவலமான காரக்டர் sms ஜோக் பாத்தும் கடுப்பில இருந்திருக்கு, அது கூட இந்த சந்தர்ப்பத்த பயன்படுதிக்குது, எக்ஸ்பிரஸ் எண்டு பேர்ல இருக்கிறது இப்பிடி கேவலமா தன்ன எக்ஸ்பிரஸ் பண்ணிக்குது.அட ஞான சூனியங்களா

*..........................................*
* அப்புறம் நம்ம 'கனி' அக்காவை எந்த தப்புமே செய்யாம உள்ள போட்டதா நம்ம முத்தமிழை வித்தவர் சொன்னாரு. எங்களுக்கும் அதுதான் வேணும்; அவங்க 2G, ஸ்பெக்ரம் விசயத்தில தப்பு செய்திட்டு உள்ள போயிருந்தா அதில எங்களுக்கு என்ன லாபம் ? தப்பே செய்யாம உள்ள போயிருந்தாத்தானே ஏற்கனவே செய்த காலத்தால் மறக்கப்படாத, மன்னிக்கப்படாத தப்புக்கு உள்ள போனதா மனம் ஓரளவாவது சாந்தமடையும்.

* ஜோசியத்தில எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனா அண்மைக் காலமா ரொம்ப மோசமான காலமாக இருக்கு, இப்பதான் வியாழன் மாறினதா வேற சொல்றாங்க; எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு நேரம் சரியில்லாம இருக்கு; நம்ம கலைஞர், சூப்பர் ஸ்டார் உட்பட; ஒருவேளை ஜோசியத்தில ஏதாவது மேட்டர் இருக்குமோ!!!!!!!!! (ஜஸ்டு டவுட்டு)

Saturday, May 21, 2011

வடிவேலுவை புறக்கணிப்பது சரியான முடிவா?

தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று மே 13 வரை வடிவேலு கனவிலும் நினைத்திருக்க மாட்டார். மே 13 க்கு பின்னர் விஜய் ஜோக்கிற்கு நிகராக வடிவேலுவை வைத்து சமூகத் தளங்களில் வந்த ஜோக்குகள் தற்போது கனிமொழியால் சற்றே குறைந்திருந்தாலும் வடிவேலுவின் இமேஜ் டேமேஜ் செய்யப்பட்டுவிட்டது என்பதுதான் 100 % உண்மை. முன்பெல்லாம் நகைச்சுவை சானல்களில் வடிவேலுவை கண்டால் வேறு சானல்களுக்கு மாற மறுக்கும் ரிமோல்ட் கன்ரோல் (Remote control ) இப்போதெல்லாம் வடிவேலு முகத்தை கண்டதும் ஆட்டோமட்டிக்காக (Automatic) வேறு சானல்களுக்கு மாறுகிறது. இப்படியாக பெரும்பாலான ரசிகர்கள் வடிவேலுவை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளார்கள் என்பதுதான் நிஜம். ஆனால் எனக்கிருக்கும் ஒரே சந்தேகம் என்னவென்றால் நாம் புறக்கணிக்கும் அளவிற்கு வடிவேலு சுயபுத்தி உடையவரா ? என்பதுதான்.

வடிவேலு தேர்தல் பிரச்சாரங்களின்போது விஜயகாந்தை விமர்ச்சித்தது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம் என்பதில் எனக்கு துளியளவும் மாற்றுக் கருத்தில்லை. ஒருவேளை தி.மு.க ஜெயித்திருந்தாலும் வடிவேல் மீது இப்போதுள்ளது போன்ற கோபமான மனநிலைதான் அதிகமானவர்களுக்கு இருந்திருக்கும்; ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் அனைவரும் 'உரிய நேரம்' வரும்வரை இந்த விடயத்தை மனதிற்குள் வன்மமாக வைத்திருந்திருப்பார்கள். ஆனால் தற்போது விஜயகாந்தின் விஸ்வரூப வெற்றி வடிவேலுவின் மீதான ஆத்திரத்தை சமூகத்தளங்களில் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸாக போட்டுப் போட்டு ஓரளவேனும் தணிக்க உதவியுள்ளது. ஆனாலும் வடிவேலுவை ஏற்கும் மனநிலை அதிகமானவர்களுக்கு இன்னமும் ஏற்ப்படவில்லை என்பதுதான் நிஜம்.எதற்க்காக வடிவேலு மீது ஒட்டுமொத்த நடுநிலை சமூகமும் எதிர்ப்பலையை காட்டுகிறது? அத்தனை பேரும் விஜயகாந்த் ஆதரவாளர்களா? இல்லை அ.தி.மு.க ஆதரவாளர்களா? 'லியோனி' கூடத்தான் கிண்டல் பண்ணி பிரச்சாரம் செய்தார், எதற்காக வடிவேலுவை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள்? அதற்க்கு முக்கியமான இரண்டு காரணிகள் 1) தன் சொந்த பிரச்சினையை அரசியலாக்கியது 2) இதுவரை கேட்டிராத அளவிற்கு மிகவும் கேவலமான வார்த்தை பிரயோகங்கள் மூலம் பிரச்சாரம்(?) செய்ததது. இந்த செயற்பாடுகள் விஜயகாந்தை பிடிக்காதவர்களையும் ஆத்திரம் அடைய செய்ததது என்றால் அது மிகையில்லை. தன் துறையில் இருக்கும் மூத்த கலைஞனை, அதிலும் குறிப்பாக தன் ஆரம்பகால திரைவாழ்க்கையில் சந்தர்ப்பம் வழங்கிய ஒருவரை வடிவேலு விமர்சித்த முறை; எந்த நடுநிலையாளரும் ஏற்றுக்கொள்ள இயலாதது.

அப்படியானால் வடிவேலு புறக்கணிக்கப்பட வேண்டியவரா? இதற்க்கான எனது பதில் 'இல்லை' என்பதுதான். வடிவேலு செய்தது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாவிட்டாலும், இந்த விடயத்தில் வடிவேலு வெறும் அம்பாகத்தான் பயன் படுத்தப் பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. வடிவேலுவின் அறியாமை, சுயபுத்தியின்மை என்பவற்றை பயன்படுத்தி மு.க.அழகிரி என்கிற வில்வித்தைகாரன் வடிவேலுவை அம்பாக பயன்படுத்தியிருக்கிறார் (அந்த அம்பு பூமாராங் மாதிரி அழகிரியே திரும்பதாக்கியது வேறு கதை). வடிவேலு மேடையில் பேசும் வசனங்கள் நிச்சயமாக வடிவேலுவினுடைய சொந்த வசனங்கள் இல்லை என்பதை சிங்கமுத்து முதற்கொண்டு சினிமாவை உன்னிப்பாக அவதானிக்கும் சராசரி ரசிகர்கள் அனைவருமே அறிவார்கள். யாரோ எழுதிக் கொடுத்த வசனத்துக்கு பாடிலாங்வேஜ் (Body Language) கொடுத்தது மட்டும்தான் வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரம்.சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லாத வடிவேலுவை பணத்தாலும், அதிகாரத்தாலும், பசப்பு வார்த்தைகளாலும் மு.க.அழகிரி தன்வசப்படுத்தியதால் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை நிலைமை வடிவேலுவுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவிற்க்கும்தான். தமிழ் சினிமாவில் வடிவேலுவின் இடம் எப்போதும் யாராலும் நிரப்பப்பட முடியாத ஒன்று; தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் கலைஞர்களில் வடிவேலுவும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

டைமிங்(Timing), பாடிலாங்வேஜ்(Body Language), முகபாவம்(expression), சிறப்பு சத்தங்கள்(special sound) என நகைச்சுவை காட்சிகளில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கும் வடிவேலுவின் திரைப்பட வசனங்களை அண்டாட வாழ்க்கையில் பயன்படுத்தாத தமிழர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இதுவரை ஒரு தடவை கூட வடிவேலுவை திரையிலோ, சின்னத் திரையிலோ பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்ட வடிவேலுவை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்குவது என்பது சரியான விடயமாகப் படவில்லை.

வடிவேலுவிற்கு அவர் செய்த தவறை நிச்சயமாக உணர்த்தவேண்டும், அதற்காக அவரை திரைத்துறையில் இருந்தே ஒதுக்குவதென்பது மிகவும் கடினமான முடிவு. ஒரு நடிகனோ அல்லது இயக்குனரோ தம் திரைப்படங்களில் 'மல்லாக்க படுத்திருந்து எச்சிலை உமிழ்ந்த' வடிவேலுவிற்கு சந்தர்ப்பம் கொடுப்பது தம் துறையே தாமே அவமானப்படுத்துவது போன்றதுதான், இந்த விடயத்தில் 'ராணா'விலிருந்து வடிவேலுவை தூக்கியதற்கு ஒரு சபாஸ். அப்படியானால் வடிவேலு எப்படி தமிழ் திரையில் காலடி பதிப்பது? யெஸ், 1996 இல் மனோரமாவிற்கு ரஜினி புரியவைத்தைபோல இந்த தடவை வடிவேலுவிற்கு புரியவைக்கலாம், இது விஜகாந்தால் மட்டுமே சாத்தியம்.தன் துறையில் இருக்கும் நல்ல கலைஞனை இழந்து விடக்கூடாது என்பதையும், தனக்காக ஒரு கலைஞனை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் வெறுத்து ஒதுக்கியுள்ளார்கள் என்பதையும் கேப்டன் புரிந்துகொண்டால் நிச்சயம் வடிவேலுவை அழைத்து பேசலாம். பொறுப்பான பதவியில் இருக்கும் விஜயகாந்த் தனது ஆளுமையை, பக்குவத்தை இந்த விடயத்தில் வெளிக் கொண்டுவரலாம்; அடிக்கு அடிதான் என்றில்லாமல் 'மன்னித்தல்' என்னும் மிகப்பெரும் தண்டனையை வடிவேலுவிற்கு கேப்டன் கொடுக்கலாம்.

கேப்டன் வடிவேலுவை அழைத்துப் பேசி, வடிவேலுவிற்கு தமிழ் திரையுலகம் மறுபடியும் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால் அது தேர்தலில் கிடைத்த அடியிலும் 1000 மடங்கு அதிகமான வலியை வடிவேலுவிற்கு கொடுக்கும் (இதை உணரும் அளவிற்கு வடிவேலுக்கு புத்தி உள்ளதா என்றால் சந்தேகம்தான்), அதைவிடுத்து இனியும் வடிவேலுவுடன் மல்லுக்கட்டுவது கேப்டனுக்கு அழகல்ல, வடிவேலு என்னும் சிறந்த கலைஞனின் திரைவாழ்க்கை இப்போது கேப்டன் கைகளில்............

வடிவேலு நிஜ வாழ்விலும் தானொரு காமடியன் என்பதை நிரூபித்துள்ளார், கேப்டன் நிஜவாழ்விலும் தானொரு ஹீரோ என்பதை நிரூபிப்பாரா?

குறிப்பு:- 'ராணாவோ காணாவோ' விடயத்தில் வடிவேலுமீது கோபம் இருந்தாலும்; அந்த விடயத்தை சீடியஸ் ஆக்குவது என்பது வடிவேலுவை 'சீடியஸ் கேரக்டர்' போல் எண்ணுவது போலாகிவிடு மென்பதால் அதனை ஒரு பொருட்டாக கருதாமல், வடிவேலுவை நகைச்சுவை நடிகராக; பொதுவாழ்வில் சுயபுத்தி இல்லாத காமடிபீசாக எண்ணி விட்டுவிடலாம்.

Wednesday, May 18, 2011

தலைவா - நீங்க யானை இல்லை குதிரை.

தலைவா............

தங்களுக்கு எதுவும் நேராது என்பது புத்திக்கு தெரிந்தாலும் கடந்த ஒரு வாரமாக மனதில் ஒருவித பாரம் இல்லாமல் இல்லை. வேறு வேலைகளில் மூழ்கியிருந்தாலும் திடீரென தங்கள் ஞாபகம் வரும்போது மனதில் ஒரு கனம் ஏற்பட்டதை விபரிக்க முடியாது. தங்களுக்கு என்னதான் நோய் என்பதை தெரியாதவரை இருந்த கலக்கம் இப்போது இதுதான் பிரச்சனை என்று தெரிந்ததும்; அதிலும் குறிப்பாக மருத்துவத்தால் குணமாக்க கூடிய நோய்தான் என்று அறிந்ததும் இப்போது மனம் ஓரளவு அமைதி அடைந்துள்ளது.

எதுக்கு தலைவா தங்களுக்கு எடை குறைப்பு முயற்சி? தங்கள் தொழில் பக்திக்கு ஒரு ராயல் சலூட்; ஆனாலும் இப்படி உங்களை வருத்தி எங்களுக்கு படம் பண்ண வேண்டாமே!!!!!!!! நீங்க எங்க முன்னாடி திரையில வந்தாலே போதும்; எங்களுக்கு பாட்ஷா, அண்ணாமலை, சந்திரமுகி தந்தாலே போதும்; உங்களை வருத்தி இன்னுமொரு சிவாஜி, எந்திரன் வேண்டாம். தாங்கள் இதுவரை கொடுத்த 150 படங்களும் இந்த ஆயுளுக்கு எங்களுக்கு போதும், உங்க ஆயுள்தான் இப்ப எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதுக்காக உங்களை படம் பண்ண வேண்டாம் என்று அர்த்தமில்லை, பூரண ஓய்வுக்கப்புறம் 'ராணா'வைகுடுங்க; ஆனா தயவு செய்து இன்னுமொருதடவை உங்களை வருத்திக்காதிங்க.தாங்கள் "யானை இல்லை குதிரை" என்பது எங்களுக்கு தெரியாததல்ல, ஆனால் இங்கே சிலருக்கு தெரியவில்லை; அதனால்த்தான் ஒரு சிலர் அபாண்டங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள், இன்னும் சிலர் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள், ஒரு சிலர் 'ராணா' 'காணா'வாகிவிட்டதாக அகமகிழ்கிறார்கள். 30 வருடமாக தங்களை தோற்கடிக்க நினைத்து தோல்வியடைந்த 'பாசமிகு நெஞ்சங்களின்' ஏக்கம்தான் இந்த வெளிப்பாடு என்பது தங்களுக்கும்/எங்களுக்கும் தெரியாததல்ல. அதேபோல இந்த அபாண்டங்களும், நீலிக் கண்ணீர்களும், மகிழ்ச்சியும் 'நீர்க்குமிழி' என்பதை அந்த ' சிலர்' அறியாதவர்கள் என்பதை தாங்களும்/நாங்களும் அறியாதவர்கள் அல்ல.

படித்த மேதை ஒருவர் சமூகத்தளம் ஒன்றில் "அவரும் சாதாரணமான மனிதர்தானே எதற்காக அவருக்கு இவளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எதற்காக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு ஒன்று என்பதுபோல ரியாக்ட் செய்ய வேண்டும்" என்று கேட்கிறார். பத்துநாள் வளர்த்த பூனை குட்டியை காணவில்லை என்றாலே மனது பதைபதைக்கிறதே 25 வருடமாக தங்களோடு எமக்கிருக்கும் பந்தம் இந்த மேதைகளுக்கு புரியவா போகிறது? நாங்கள் தங்களை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக்கி 25 வருடங்கள் கடந்துவிட்டது என்பதை இவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.இன்பங்கள் மட்டுமே வாழ்க்கையின்னா வாழ்க்கை போராடிச்சு போயிடும், அப்பப்ப துன்பங்களும் வரணும், சோதனையை சந்திச்சாத்தாய்யா சாதனை வரும்; இது தாங்கள் சொல்லியதுதான், இதை நாங்கள் மறக்கவில்லை; 'ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்' என்பதையும் நாங்கள் மறக்கவில்லை. கல்லடி பட்டாலும் கண்ணடி(திருஷ்டி) படக்கூடாது என்பார்கள்; தங்களுக்கு பட்ட கண்ணடி(திருஷ்டி) கொஞ்சநெஞ்சமா என்ன? தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திசையிலும் இருந்தும் வந்த திருஷ்டி இப்போது கழிந்ததாகவே எடுத்துக்கொள்வோம்.

தற்போது தங்களுக்கு தேவை ஓய்வு, எங்களுக்கு (ரசிகர்களுக்கு) தேவை நம்பிக்கை, சரியான நேரம் வரும்போது 'ராணா' வரும், தமிழர்களுக்கு நல்ல காலம் வருமானால் ராட்ஜியமும் வரும் என்கின்ற நம்பிக்கையில்; ஒரு வாரமாக தவித்த மனநிலையில் இருந்து இப்போது தெளிந்த மனநிலையில், நம்பிக்கையுடன் தங்களுக்காகவும் 'ராணா'விற்காகவும் காத்திருக்கும்..........

சராசரி ரசிகன்.


*_*_*_*