Tuesday, November 30, 2010

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (30/11/10)

நந்தலாலா
ஞாயிற்றுக்கிழமை நந்தலாலா திரைப்படத்தை பார்த்துவிட்டேன், விமர்சனங்கள் போதும் போதுமென்கின்ற அளவிற்கு வந்துவிட்டதால் விமர்சனம் எழுதவில்லை. மிஸ்கினுக்காக பார்ப்பதில்லை என்ற முடிவில் இருந்தாலும் இளையராஜா அவர்களுடைய பின்னணி இசைக்காக பார்க்கலாமென்றுதான் திரையரங்கிற்கு சென்றேன். பலரும் விமர்சனத்தில் இளையராஜா அவர்களது இசையை உயர்த்தி கூறியிருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன், அங்கு எனக்கு நூற்றுக்கு இருநூறு வீதம் திருப்தியை இளையர்ராஜா அவர்களின் இசை வழங்கியது. 'ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் பாடல்' ஆரம்பிக்கும் போது உண்மையிலேயே சிலிர்த்துப்போனேன், இறுதியாக 'தாலாட்டு கேட்க நானும்' என்று ராஜாவின் குரல் ஒலிக்க ஆரம்பிக்க நிறைவான படம் பார்த்த திருப்தி அந்தக்கணமே ஏற்ப்பட்டது.ஜப்பானிய திரைப்படம் கிகுஜிரோவினுடைய தழுவல் என்று பலரும் கூறினாலும் அந்த திரைப்படத்தை பார்க்காத எனக்கு இது புது அனுபவம்தான், கிகுஜிரோவிலிருந்து கருவை அல்லது காட்சிகளை உண்மையிலேயே மிஸ்கின் திருடியிருந்தால் இந்த உண்மையை நமது ஓலகப்பட மேதாவிகள் எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற சின்ன லாஜிக்கூட வாய்கிழிய அடுத்தவனுக்கு அட்வயிஸ் பண்ணும் மிஸ்கினுக்கும் அவரது வக்காளத்து சாருவுக்கும் தெரியவில்லையா? இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தை தலைமாட்டில் வைத்துவிட்டு 25 ரூபாயில் வாங்கிய vcd யில் கதையை திருடிய மிஸ்கின் & சாரு தாங்கள் பார்த்த 'கிகுஜிரோ' vcd யை 'உடைத்து போட்டுவிட்டு' இனிமேல் ஒருவருமே கிகுஜிரோவை பார்க்க முடியாதென்று புத்திசாலித்தனமாக நினைத்திருப்பார்களோ என்னமோ!!!!!

ஆர்யாவும் தமிழ் சினிமாவும்
வாராவாரம் கொலிவூட்டில் புடுங்கு பாட்டுக்கு பஞ்சமிருக்காது, கடந்த வாரங்களில் மிஸ்கின் vs உதவி இயக்குனர்கள் இடையே இருந்த பிரச்சினை அடங்கும் நேரத்தில் புதிதாக அடுத்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்துள்ள பெருமை ஆரியாவையே சாரும். ஜெயராம் வரிசையில் மலையாளநிகழ்ச்சி ஒன்றில் அண்ணன் தமிழ் சினிமாவைப் பற்றியும், தமிழ் சினிமா ரசிகர்களை பற்றியும் மட்டமாக திருவாய் மலர்ந்தருளியதுதான் இந்தவார சலசலப்பு. அடுத்தவாரம் இன்னுமொரு சலசலப்பு வரும்போது இந்த சலசலப்பை சம்பந்தப்பட்டவர்களே மறந்து விடுவார்கள், இததான் நம்மாளுங்க வாராவாரம் செஞ்சிகிட்டு இருக்கிறாங்க.தனுஸ், சிம்பு, ரவி, விஷால், பரத், ஜீவா என இளவயது நடிகர்கள் எல்லாருமே ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோக்களாக தங்களை வெளிக்காட்டிக் காட்டிக்கொள்ளத்தான் முயற்சி செய்தார்கள். ஆனால் 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகி அதிலே ஜெயித்த ஆர்யாவிற்கு அடுத்ததாக பட்டியல் என்கின்ற ஆக்ஷன் திரைப்படம் வெற்றி பெற்றபோதும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு தன்னை மாஸ் ஹீரோவாக காண்பிக்க ஆக்ஷனை நாடாமல் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததால் ஆர்யாமீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, ஓரம்போ, வட்டாரம், நான் கடவுள், சர்வம், மதராசப் பட்டினம், பாஸ் (எ) பாஸ்கரன் என ஆர்யாவின் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவகை.இப்படி வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவரும் ஆர்யாவிற்கு அவருக்குரிய அங்கீகாரம் வணிகரீதியாக கிடைக்காதிருந்த நிலையில் 'பாஸ் (எ) பாஸ்கரன்' வணிகரீதியான அங்கீகாரத்தை ஆர்யாவிற்கு பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் ஆர்யாவினது தமிழர்களுக்கு எதிரான பேச்சு ஆர்யாவே தன் கையால் மண்ணை அள்ளி தன் தலையில் போட்டது போலாகிவிட்டது. இந்தவாரம் புதிதாக வரவிருக்கும் ஆர்யாவின் 'சிக்குபுக்கு' திரைப்படத்திற்கு ஆர்யாவின் 'திருவாய்' சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளதென்பதுதான் நிஜம்.

ரத்த சரித்திரம் & காவலன்
காவலன், ரத்தசரித்திரம் என இரண்டு திரைப்படங்களுமே அசின் மற்றும் விவேக் ஓபராய்க்காக புறக்கணிக்கப் படவேண்டுமென்று சில அமைப்புக்களால் நீண்ட நாட்களாக வலியுறுத்தப் பட்டுவந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இப்போது காவலனை மட்டும் புறக்கணிக்குமாறு வேண்டுகோள்கள் விடப்படுகிறது, ஆனால் தயாநிதி அழகிரி 'ரத்த சரித்திரத்தை' வாங்கிய பிற்ப்பாடு இந்தவாரம் 'ரத்த சரித்திரம்' வெளிவர இருக்கும் நிலையில் இதுவரை 'ரத்த சரித்திரத்திற்கு' எந்த புறக்கணிப்பு அழைப்பும் வரவில்லை. அதேபோல விஜய் ஆண்டனிக்காக வேட்டைக்காரனை புறக்கணித்தவர்கள் யாரும் அங்காடித்தெருவையோ இல்லை உத்தமபுத்திரனயோ புறக்கணிக்கவில்லை.இந்த புறக்கணிப்பாளர்கள் விஜயை மட்டும்தான் குறி வைக்கிறார்களா என்கிற சந்தேகம் இல்லாமல் இல்லை, அதேபோல கலைஞரின் வாரிசுகள் தயாரிப்பில் அல்லது விநியோகத்தில் சல்மான்கானே நேரடியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்தாலும் இந்த புறக்கணிப்பாளர்கள் புறக்கணிப்பார்களா என்றால் அதற்க்கு இல்லையென்பதே உண்மையான பதில். இப்படி சந்தர்ப்பவாத புறக்கணிப்பு எதற்கு? முடிந்தால் ரத்த சரித்திரத்தையும் காவலனையும் புறக்கணியுங்கள், இல்லாவிடால உங்கள் புறக்கணிப்புகள் பக்கச்சார்பானவையாகவும், யாரையோ திருப்திப்படுத்துவதற்கானதாகவும், விளம்பரத்தனமானகவும், எழுந்தமானவையாகவுமே பார்க்கப்படும்.

பாக்ஸ் ஆபிசில்(Box Office) மைனா
சிறந்த படமென்று அநேகரால் வரவேற்கப்படும் பிரபலமான நட்சத்திரங்கள் இல்லாத பல திரைப்படங்கள் வர்த்தகரீதியாக பெரிய வெற்றியை பெறுவதில்லை, சுப்ரமணியபுரம் போன்ற ஓரிரு திரைப்படங்கள் விதிவிலக்கு. அப்படி மிகவும் அரிதாக வெற்றிபெறும் திரைப்படங்களின் பட்டியலில் மைனாவும் இடம்பிடித்துள்ளது. சென்னை 'பாக்ஸ் ஆபிஸில்' கூடவந்த தனுசின் 'உத்தமபுத்திரனை' இரண்டாம் வாரத்தில் ஓவர்டேக் செய்த மைனா மூன்று வாரங்கள் முடிவிலும் 'வார இறுதி' வசூலில் முதலிடத்தில் இருக்கிறது, 65 % வரவேற்புடன் வாற இறுதிநாட்களில் 23,11,976 ரூபாவை வசூலித்த மைனாவின் மொத்த சென்னை வசூல் மாத்திரம் 2.37 கோடி ரூபா. அதற்கடுத்த இடத்தில் கடந்த வாரம் வெளியாகிய நந்தலாலா 68 % வரவேற்புடன் வாற இறுதிநாட்களில் 20,89,502 ரூபாவை வசூலித்துள்ளது.

(வசூல் நிலவரம் - நன்றி behindwoods .com)

Monday, November 29, 2010

------ என்கிற பொண்ணுகூட உஷாரா இருங்க.

சீடியஸா எதிர்பாத்திட்டு உள்ள காலை வைக்காதீங்க.....


ஒரு பெண் பல ஆண்களை பலநாட்களாக ஏமாற்ற சந்தர்ப்பம் உண்டென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் நம்ப முடியவில்லை, ஆனால் இந்த விடயத்தை ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எனக்கு இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட பெண்ணைப்பற்றிய சந்தேகத்தை நான் கூறுகிறேன், தீர்ப்பை நீங்கள் கூறுங்கள்.

என்னுடன் வேலைபார்க்கும் நண்பர்களில் சில நண்பர்கள் சில பெண்ணுடன் கையடக்க தொலைபேசியில் தினமும் 'அடிக்கடி' கொஞ்சிகொஞ்சி பேசுவது வழக்கம். அந்த சிலரில் குறிப்பிட்ட ஐந்து நண்பர்களுடன் ஒரே பெண்தான் பேசுகிறாரோ என்கிற சந்தேகம் ரொம்ப நாளாவே எனக்கு இருக்கு. ஆனால் அந்த நண்பர்களுக்கிடையில் இந்த சந்தேகம் இருக்கிறதா இல்லையா என்பது இதுவரை எனக்கு தெரியாது. சில காரணிகளை வைத்து பார்க்கும் போது எல்லோருடனும் பேசுவது ஒரே பெண்தான் என்பது எனது ஊகம்..

நண்பர்களுடன் பேசுவது ஒரே பெண்தான் என்று நான் எப்படி ஊகிக்கின்றேன் என்கிற சந்தேகம் உங்களுக்கு வரும், சொல்கிறேன். முதலில் ஒரு நண்பர் அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி கதைக்க ஆரம்பிக்கும்போது அவரது பெயரை சொல்லி அழைத்து கதைக்க ஆரம்பித்தார், அப்போது எனக்கு அது பெரிய விடயமாக தெரியவில்லை. பின்னர் இன்னுமொரு நண்பனும் அதே பேரை சொல்லி அழைத்து பேசும்போது சிறிது சந்தேகம் ஏற்ப்பட்டது. பின்னர் எனது நண்பர்களில் ஐந்துபேர் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சொல்லி அழைத்து பேசும்போது எனக்கு அதிர்ச்ச்யும் சந்தேகமும் ஏற்ப்பட்டது. ஆனாலும் சில நேரங்களில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட நண்பர்கள் ஒரே நேரத்தில் அந்த பெயரையுடைய பெண்ணுடன் பேசுவதுதான் எனது சந்தேகத்தின்மீதே சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது.சந்தேகத்தை நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்குள் பிரச்சினை வந்துவிடுமோ என்று இதுவரை கேட்கவில்லை, அழைப்பினை ஏற்ப்படுத்திய பின்னர் தனியாக சென்று அவர்கள் பேசிக்கொள்வதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று என்னால் சரியாக கேட்க முடியாது, அப்படி கேட்ப்பது முறையுமல்ல. இருந்தாலும் ஒரே பெண்தான் ஐந்து பேருடனும் பேசுகிறாரோ!!?? என்று நான் சந்தேகப்படுவதற்கான காரணங்கள்.

1) ஐந்து பேருமே அழைப்பது ஒரு பெயரை உடைய பெண்ணுக்குத்தான்.

2) ஐந்து பேருக்கும் எப்போதுமே 'மிஸ்ட் கால்' மட்டும்தான் வரும்.

3) பேச ஆரம்பிச்சா ஐந்து பேரும் தங்களையே மறந்து நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்துவார்கள்.

4) அவசர வேலையா கூப்பிட்டாலும் போனை கட் பண்ணுறதுக்கு பொண்ணுகிட்ட பிளீஸ் பண்ணி பெர்மிசன் கேட்பாங்க. (பத்தடி தூரத்தில இருந்து பக்கத்தில வரும்வரைக்கும் "பிளீஸ் அப்புறமா கால் பண்றன்" அப்பின்னு ஐந்து பேருமே கெஞ்சுவாங்க Sorry கொஞ்சுவாங்க)

5) ஐந்து பேருக்கும் பொண்ணுகிட்டயிருந்து வாறதென்னமோ 'மிஸ்டு கால்'தான், ஆனா இவங்க ஐந்து பேருமே பேசிற பொண்ணோட போனுக்கு அடிக்கடி 'டொப்பப்' பண்ணுவாங்க.

இப்படியாக இவங்க ஐந்து பேரும் பேசிறது ஒரே பொண்ணு கூடத்தானா என்கிற சந்தேகம் வலுவாக இருந்தாலும் அடுத்தவன் விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாதென்று ஆரம்பத்தில் விட்டுவிட்டேன். ஆனால் இது உண்மையானால் சமூகத்துக்கு கேடு என எனது 'புரட்சி மண்டை' எச்சரித்ததால் உங்களிடம் இந்த விடயத்தை இப்போது கூறியுள்ளேன், நாளை நண்பர்களையும் எச்சரிக்க போகிறேன். நண்பர்களுடன் பேசுவது ஒரே பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த ஐந்து நண்பர்களைவிட வேறு யாராவது உங்களுக்கு தெரிந்தவர்களுடனோ! அல்லது உங்களுடனோ!!! பேசிக்கொண்டிருக்க கூடிய சந்தர்ப்பமும் இருக்கிறது என்பதால் அவரது பெயரை தருவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். நான் மேற்குறிப்பிட்ட காரணிகளுடன் நான் சொல்லும்பெயரில் யாராவது பேசினால் உசாராகிவிடுங்கள் நண்பர்களே.நான் பாஞ்சாலியோ என சந்தேகிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் 'செல்லம்'. நம்ம ஐந்து பசங்களும் அந்த பொண்ணுக்கு அழைப்பை ஏற்ப்படுத்திவிட்டு "எப்பிடி இருக்கிறா(ய்) செல்லம்", "காப்பி சாப்பிட்டியா செல்லம்", "டிபன் சாப்பிட்டியா செல்லம்", " காலைல குளிச்சியா செல்லம்", "பல்லு தீட்டினியா செல்லம்" என்று 'செல்லம்' என்கிற பெயரை உச்சரித்தே குறிப்பிட்ட பெண்கூட பேசுவதால் நண்பர்களே 'செல்லம்' என்கிற பெயரை உடையவருடன் நீங்களோ or உங்களுக்கு தெரிந்தவர்களோ பேசினால் உசாராகி or உசாராக்கி விடுங்கள்.

நன்றி, இதுவொரு சமூக சீர்திருத்த பதிவு :-)

முக்கிய குறிப்பு

பதிவுலகில் புதிதாக ஒரு வலைப்பூ பதிவர் உருவாகியிருக்கிறார், அவரது புது முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அவர் மென்மேலும் பதுவுகளிட்டு சிறப்புடன் பெயர்பெற வாழ்த்துகிறேன், நீங்களும் வாழ்த்துங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவரது வலைப்பூவுக்கு சென்று படித்து ஓட்டுக்களும் பின்னூட்டமும் இட்டு அவரது வளர்ச்சிக்கு உதவுமாறு என்சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அவரது வலைப்பூ தமிழ் ரயில்.

பிற்சேர்க்கை

தனது பின்னூட்டத்தை பிரசுரிக்காமல் விட்டால் என்னை 'ஆம்பிளை' இல்லை என்றவர், தனக்கு வந்த 50 இக்கு மேற்ப்பட்ட பின்னூட்டங்களை எதற்க்காக அழித்தார் என்றுதான் புரியவில்லை, ஒருவேளை இவர் ..... இல்லையோ? சரி அத விடுங்க, நீங்க போடிற பின்னூட்டத்த அவர் அழிச்சா நீங்க என்ன பண்ணுவீங்க? பின்னூட்டம் பிடிக்காத அவருக்கு அட்லீஸ் ஓட்டாவது போட்டு அவரை பிரபல பதிவராக்கிவிடுங்கள்.

Saturday, November 27, 2010

ரஜினியின் பத்து கேரக்டர்கள்

ரஜினியின் 'பிடித்த பத்து படங்கள்' தொடர் பதிவிற்கு பாலாவின் பக்கங்கள் பாலா அவர்கள் அழைத்திருந்தார்கள், அன்பிற்கு மிக்க நன்றி பாலா. பதிவுலகின் பெரும்பான்மையானவர்கள் எழுதி காலாவதியாகிப்போன தொடர்பதிவென்றாலும் நண்பரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இந்த தொடர்பதிவை எழுதுகிறேன். ரஜினியின் பிடித்த பத்துப் படங்களில் முதன்மையான படங்கள் அனைத்தையும் பலரும் எழுதிய பின்னரும் நான் எனக்கு பிடித்த பத்து படங்களை எழுதினால் அதுவொரு 'ரிப்பீட்' பதிவாகத்தான் அமையும். இதனால் சிறு மாறுதலாக ரஜினி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பத்து கதாபாத்திரங்களை பற்றி எழுதுகிறேன்.

10)மாணிக் பாட்ஷா (பாட்ஷா)

கோட், ஷூட், தாடி, கண்ணாடி என தலைவர் 'டானாக' பட்டையை கிளப்பிய பாத்திரம். அதுவரை தமிழ் சினிமா பாத்திராத புதிய மானரிசம், ரஜினியிடம் யாருமே எதிர்பார்க்காத வசன உச்சரிப்பு, அவருக்கேயுரிய தனித்துவமான உடல்மொழி என 'மாணிக் பாட்ஷா' பாத்திரத்தில் ரஜினி அசாத்தியமாக நடித்திருப்பார். குகைக்குள் ஆண்டனியின் அடியாளிடம் உண்மையை வரவளைப்பதற்காக கண்களை அகலமாக்கி முகத்தில் அனல் பறக்கும் கோபத்தை வெளிக்காட்டி வசனம் பேசும் காட்சியில் ரஜினி பின்னியெடுத்திருப்பார். ரஜினி வழக்கத்திலும் பார்க்க மிகவும் அதிகவேகமான அசைவுகளையும் வசன உச்சரிப்பையும் மாணிக் பாட்ஷா பாத்திரத்திரத்தில் வெளிப்படுத்தியிருந்தது அந்த காதாப்பாத்திரத்தின் ஈர்ப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.9) வேட்டையன் (சந்திரமுகி)

சந்திரமுகி திரைப்படம் வெளியாவதற்கு முதல்நாள் இரவு படத்தை பார்த்த ஒரு கருப்பு ஆடு "இது ஒரு பேய்ப்படம், ரஜினியோட கதை அவளவுதான்" என்று திருவாய் மலர்ந்ததால் பதற்றத்துடனே படம்பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு பிடித்திருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்குமா? எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்கின்ற பயம் இருந்துகொண்டே இருந்தது; அது வேட்டையன் கேரக்டர் அறிமுகமாகும் வரைதான். வேட்டையனின் அந்த பத்து நிமிடங்கள் கடந்த பின்னர் சந்திரமுகி நிச்சயம் மிகப்பெரும் வெற்றி பெறுமென்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்ப்பட்டது. தோற்றத்திலே என்னவொரு மிரட்டல்? முகத்திலே என்னவொரு கொடூரம்? தலைமுடியை சுருட்டிய மேனரிசத்துடன் காலை சிம்மாசனத்தில் தூக்கிவைத்து லகலக... என்று நாக்கை சுழற்றும்போது திரையரங்கே சும்மா அதிர்ந்தது.8) ரஜினிகாந்த் (அன்புள்ள ரஜினிகாந்த்)

எனது மனதோடு பதிந்த சில படங்களில் முக்கியமான திரைப்படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தாகவே ரஜினி நடித்திருப்பார். ரஜினி வரும் காட்சிகள் அனைத்துமே எனக்கு மிகமிகப் பிடிக்கும், குட்டிப்பெண் மீனாவுக்காக ஆரம்பத்தில் ரஜினி மாஜிக் செய்யும் காட்சியும், இறுதியில் அதை செய்யமுடியாமல் போகும்போது ரஜினி காட்டும் உணர்வும், உடல் மொழியும் 'ரஜினி' ஒரு கிளாஸ் ஆக்டர் என்பதை சொல்லும் காட்சிகள்.7) அறிவுடை நம்பி கலிகைபெருமாள் சந்திரன் (தில்லு முல்லு)

வசன உச்சரிப்பு, டைமிங், உடல்மொழி, எக்ஸ்பிரஷன் என நகைச்சுவையின் அனைத்து பரிமாணங்களையும் ஒரு கேரக்டருக்குள் கொண்டுவந்த பாத்திரம்தான் 'அறிவுடை நம்பி கலிகைபெருமாள் சந்திரன்'. ரஜினிக்கு காமடி வருமா? என்கின்ற கேள்வியை ரஜினி மாதிரி யாருக்கும் காமடி வருமா? என மாற்றிக் கேட்கவைத்த கதாபாத்திரம். தேங்காய் சீனிவாசனுடன் நேர்முக காட்சியும், சௌகார் ஜானகியுடன் தேங்காய் சீனிவாசன் முன்னிலையில் தனது வீட்டில் சமாளிக்கும் காட்சியும் என்றுமே மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகள்.6) மாணிக்கம் (பாட்ஷா)

அண்ணன் ஆட்டோ ஸ்டாண்டில பட்டைய கிளப்பின பாத்திரம். ரசிகர்களுக்கு பிடிச்சமாதிரி அப்பாவித்தனமா நடிக்கிறதுக்கும், ஆக்கிரோஷமா நடிக்கிறதுக்கும் தலைவருக்கு சொல்லித்தரணுமா என்ன? அதிலும் மாணிக்கம் கேரக்டர்; ஆக்ரோஷமான மனுஷன் சில காரணங்களுக்காக அப்பாவித்தனாமா இருந்திட்டு பழையபடி ஆக்ரோஷமா மாற்ற கேரக்டர், விடுவாரா தலைவர்? தேவைக்கேற்ப உடல்மொழியை அப்பிடியே உல்டாவா மாற்றி ஒரு காட்டு காட்டியிருப்ப்பார். மாணிக்கம் கேரக்டரில் தலைவர் ஆட்டோவில் நக்மாவுடன் முதல்த்தடவை பேசும் காட்சி செம கலாட்டா. அப்புறம் அந்த கம்பத்து (இரண்டு) காட்சிகள், தங்கைக்கு பையன் கேட்கும் காட்சி, தங்கைக்கு காலேஜ் சீட்டு கேட்கும் காட்சி என ஒவ்வொரு காட்சிகளுமே மறக்கமுடியாதா நிறைவான காட்சிகள்.5 ) மொட்ட பாஸ் (சிவாஜி)


"பேர கேட்டாலே சும்மா அதிருதெல்ல", சிவாஜி திரைப்படம் வெளியான திரயங்குகள் மட்டும் இந்த வசனத்தை தலைவர் உச்சரிக்கும்போது அதிராமலா இருந்திருக்கும்!!!! தலைவர் 'பாஸாக' வரும் காட்சிகள் கலக்கல் என்றால் 'மொட்ட பாஸாக' வரும் காட்சிகள் மிரட்டல். ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி வரும்போது தலைவர் காட்டும் உடல்மொழி வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது. மேசையில் அமர்ந்து சுமன் அமர்ந்திருக்கும் நாற்காலியின் இரண்டு முனைகளிலும் காலை வைத்து நாற்காலியை முன்னும் பின்னுமாக இழுத்து உடலை சிலிர்த்து முகத்தில் எக்ஸ்பிரஷனை திடீரென மாற்றி " சிவாஜியும் நான்தான் எம்.ஜி.ஆரும் நான்தான்" என்று கர்ஜிக்கும் காட்சியில் ரஜினியின் மாஸ் & கிளாஸ் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.4) ஜானி (ஜானி)

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம், அதிலே ஜானியாக அதுவரை பார்த்திராத ஒரு ரஜினியை இயக்குனர் மகேந்திரன் காட்டியிருப்பார். மிகவும் மென்மையான ஜதார்த்தமான ஒரு ரஜினியை ஜானி கதாபாத்திரத்தில் பார்க்கலாம். ஜானி பாத்திரத்தில் இருந்த அழகான ரஜினியைபோல அதற்க்கு முன்னும், பின்னும் இதுவரை எந்த படத்திலும் நான் பார்த்ததில்லை. ஸ்டையிலான தலைமுடி, சூப்பரான காஸ்டியூம், வழக்கத்துக்கு மாறாக மென்மையான உடல்மொழி, சாந்தமான சிரிப்பு என ரஜினி அட்டகாசமாக இருப்பார். காதல்க்காட்சிகளில் தன்னால் மிகச்சிறப்பாக நடிக்க முடியுமென்பதை ஜானி பாத்திரத்தின் மூலம் ரஜினி இயக்குனர் துணையுடன் நிரூபித்திருப்பார். இப்படி ஒரு மென்மையான ரஜினியை மறுபடியும் திரையில் பார்க்கமாட்டோமா? என்கிற ஏக்கம் எப்போதுமே என் மனதில் உண்டு!!!!!!!!3)அலெக்ஸ் பாண்டியன் (மூன்று முகம்)

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக பழைய போலிஸ் காஸ்ட்யூமில் கலக்கியிருப்ப்பார். விறுவிறு நடை, உரக்கப் பேசும் வசன உச்சரிப்பு, முகத்தில் மானரிசம், அதுவரை பார்த்திராத கேர் ஸ்டையில் என அதுவரை வந்த போலிஸ் கதாபாத்திரங்கள் அனைத்திலுமிருந்தும் தன்னை வேறுபடுத்தி வெளிக்காட்டியிருப்பார். ஒரு சிங்கம் மாதிரி போலிசாக வலம்வரும் அலெக்ஸ் வீட்டிலேயே மனைவியிடம் "நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு" என கொஞ்சும்போது குழந்தைபோல மாறிவிடுவார். செந்தாமரையிடம் "இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர கேட்டா வயித்தில இருக்கிற குழந்தை அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்" என பேசும் வசனம் எந்த தலைமுறையினரையும் ரஜினிபால் ஈர்க்கும்.2) சிட்டி 'வேஷன் 2.0' (எந்திரன்)

"மம்மே...மம்மே.... வசி... ம்ம்மே"; இந்த ஒரு காட்சி போதும் சிட்டி கேரக்டர் பிடித்துப்போவதற்க்கு. என்னவொரு உடல்மொழி!!!! மிரட்டியிருக்கிறார் தலைவர். கிண்டலாக, கோபமாக, ரொமான்சாக, மகிழ்ச்சியாக, கர்வமாக என தான் இருக்கும் நிலைகளுக் கேற்றால்ப்போல் வசன உச்சரிப்பில் வேறுபாடுகாட்டி சிட்டி 'வேஷன் 2.0' வில் தனது முத்திரையை ரஜினி பதித்திருப்பார். ரோபோ காஸ்ட்யூமில் படபடவென நடக்கும்போது இருக்கும் கம்பீரம், காட்சிகளின் தேவைகளுக்கேற்ப முகத்திலே காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் என்பன 'இவ(ன்)ர் பெயரை சொன்னதும் கடலும் கைதட்டும்' வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.கொசிறு :-)-> சில பிரபல பதிவர்கள் எந்திரனால் ஏற்ப்பட்ட வயித்தெரிச்சலை படம் வெளியாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் வெளிக்காட்டி புலம்பிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களை பார்க்கும்போது நான் எந்திரனை கேட்பதெல்லாம் "இவர்களை இப்பிடி புலம்ப வச்சிட்டியேடா எந்திரா!!!!!"

1) காளி (முள்ளும் மலரும்)

பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர் இல்லாதவர்களுக்கும் பிடித்த திரைப்படம் என்றால் அது 'முள்ளும் மலரும்'தான், அந்த்த திரைப்படத்தில் ஒரு ஜதார்த்தமான அண்ணனாக ரஜினி வாழ்ந்த கதாபாத்திரம்தான் 'காளி'. முள்ளும் மலரும் திரைப்படத்தில் 'காளி'யாக ரஜினி நடித்த காட்சிகளில் முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சிவரைக்கும் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள்தான்; குறிப்பிட்டு சொல்வதென்றால் "ரெண்டு கையும் காலும் போனாக்கூட காளி எங்கிறவன் பொழச்சுக்குவான் சார்; கெட்டபய சார் அவன்" என்கின்ற வசனம் வரும் சரத்பாபுவுடனான காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, 'ராமன் ஆண்டாலும்' பாடல் காட்சி, 'நித்தம் நித்தம் நெல்லு சோறு' பாடல் காட்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி ஒரு கேரக்டர்ல தலைவர் வாழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.இவை எனக்கு பிடித்த ரஜினியின் மிகச்சிறந்த பத்து கதாபாத்திரங்கள், இந்த பாத்திரங்களில் ரஜினியை தவிர வேறு எந்த நடிகரையும் என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. இவை ரஜினிக்காகவே படைக்கப்பட்ட பாத்திரங்கள், ரஜினியால் மட்டுமே இந்த கதாபாத்திரங்களுக்கு முழுமையான உயிர் தந்திருக்கமுடியும்.

இந்த தொடர் பதிவை எழுத 'குடந்தையூர்' சரவணன் மற்றும் 'ஜோக்கிரி' R.Gopi யை அழைக்கிறேன். உங்களுக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்கள் என்றாலும் சரி பத்து கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, இரண்டில் ஏதாவதொன்றை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நீங்க எழுதினா மட்டும் போதும்.....

Monday, November 22, 2010

இந்தவார இருவர் (22/11/10)வித்யாசாகர் (இசையமைப்பாளர்)
இளையராஜாவுக்கு அடுத்து நான் அதிகம் ரசிக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வித்யாசாகர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தபோதும் 2001 ஆம் ஆண்டு 'தில்' திரைப்படத்துக்கு இசையமைத்த போதுதான் அவரது பெயர் எனக்கு அறிமுகமானது. 2001 இலிருந்து 2004 வரை தில், வேதம், பூவெல்லாம் உன்வாசம், தவசி, வில்லன், ரன், தூள், தித்திக்குதே, திருமலை , பார்த்தீபன் கனவு, அன்பே சிவம், இயற்க்கை என தொடர்ச்சியாக பாடல்களில் ஹிட்டுக்களை கொடுத்த வித்யாசாகருக்கு 'கில்லி' மிகப்பெரிய பெயரையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது.

அதுவரை காலமும் எனக்கு பிடித்த இசையமைப்பாளராக இருந்த வித்யாசாகர் 'சந்திரமுகி' திரைப்பட பாடல்களின் மூலம் எனக்கு 'மிகவும்' பிடித்த இசையமைப்பாளராக மாறினார். தலைவர் படம் என்பது ஒரு புறமிருக்க பாடல்களிலும் பின்னணி இசையுயளும் வித்யாசாகர் புகுந்து விளையாடியிருப்பார். அன்றிலிருந்து வித்யாசாகரது எந்த திரைப்பட பாடல்கள் வெளிவந்தாலும் உடனே வாங்கி/தரவிறக்கி கேட்பது இன்றுவரை தொடர்கிறது; இப்போது மகிழ்ச்சி, மற்றும் மந்திரப்புன்னகை பாடல்கள் உட்பட.

வித்யாசாகர் எனக்கு 'மிகவும்' பிடித்தவராகிப்போன பின்னர் அவர் இசையமைத்த பழைய (2001 க்கு முன்னர் ) திரைப்படங்களை தேடி கண்டுபிடித்து அவற்றிலுள்ள பாடல்களை கேட்டபோது அவற்றில் நான் மிகமிக ரசித்த பல பாடல்கள் இருந்தமை அவர் மீது இன்னும் அதிக பிடிப்ப்பு வர காரணமாயிற்று.அப்படியான பாடல்களில் 'மலரே மவுனமா, நூறாண்டுக்கு ஒருமுறை, நீ காற்று நான் மரம், பூவுக்கெலாம் சிறகு முளைத்தது, அன்பே அன்பே நீயென் பிள்ளை, ஒரு தேதி பார்த்தால், நிலவே நிலவே, ராதை மனதில்' போன்றவை குறிப்பிடத்தக்கவை.

2001 முதல் 2005 வரை தமிழ் சினிமாவின் No 1 இசையமைப்பாளராக இருந்த வித்யாசாகர் அக்காலப்பகுதியில் ரஜினி, கமல், விக்ரம், அஜித், விஜய், மாதவன், சிம்பு, தனுஸ் என முன்னணி நாயகர்களின் அனைவருக்கும் இசையமைத்திருந்தார். குறிப்பிட்ட (2001 - 2005 ) காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான கமர்சியல் வெற்றிகளுக்கு வித்யாசாகரது பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பங்காற்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை. 'சந்திரமுகி, கில்லி, தூள், தில், வில்லன், ரன், திருமலை, தவசி, கனாக்கண்டேன், பார்த்தீபன் கனவு' என்பன வித்யாசாகரது இசையில் வெளிவந்து வெற்றிபெற்ற முக்கியமான திரைப்படங்கள்.

 

வழக்கமாக எல்லோராலும் 'மெலடி கிங்' என்று புகழப்பட்டாலும் மெலடி, குத்துப்பாட்டு, கிளாசிக்கல், வெஸ்டன், நாட்டுப்புற பாடல்கள் என பாடல்களின் பரிமாணங்களை படத்தின் தேவைக்கேற்ப இயக்குனர்களுக்கு திருப்திதரும் வகையில் கொடுக்கும் வித்யாசாகரின் குத்துபாடல்களிலும் மெலடி இளையோடுவத்தான் வித்யாசாகரின் சிறப்பம்சம். தமிழில் பாலச்சந்தர், ரவிக்குமார், பி.வாசு, ப்ரியதர்ஷன், ஜெகநாதன், கரு பழனியப்பன், லிங்குசாமி, தரணி, சுந்தர் சி, தங்கர் பச்சான், சீமான், கே.வி.ஆனந்த், ராதாமோகன், போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள வித்யாசாகர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

2001 - 2005 வரை ஆதிக்கம் செலுத்திவந்த வித்யாசாகருக்கு 2006 ஆரம்பத்தில் சறுக்கல் ஆரம்பித்தது. பொங்கலுக்கு வெளியாகிய ஆதி, பரமசிவன், 'கலைஞரின்' பாசக்கிளிகள் என மூன்று திரைப்படங்களுமே வணிக ரீதியாக தோல்வியடைந்த நிலையில் ஹரிஸ் மற்றும் யுவனது இசைக்கு கிடைத்த வரவேற்ப்பும் வணிகரீதியான வெற்றியும் வித்யாசாகருக்கு பின்னடைவை ஏற்படுத்திற்று. அன்றிலிருந்து இன்றுவரை இருபதிற்கு மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தாலும் 'மொழி' , 'எம்டன் மகன்' மற்றும் 'தம்பி' திரைப்படங்கள் தவிர்ந்த வேறெந்த திரைப்படங்களும் வணிகரீதியான வெற்றிப் படங்களாக அமையவில்லை.

ஆனாலும் இக்காலப்பகுதிகளில் ஆதி, சிவப்பதிகாரம், ஜெயம் கொண்டான், ராமன் தேடிய சீதை, மஜா, அபியும் நானும், பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் தரமானவையாக இருந்தும் வணிக ரீதியான அந்தஸ்தை பெறாததால் பெரிதாக பேசப்படவில்லை. வித்யாசாகர் தனது பழைய ப்போமிற்கு திரும்புவாரா என்று கேட்பவர்களுக்கு நிச்சயமாக பொசிடிவான பதில் சொல்ல முடியாவிட்டாலும் அடுத்த விஜயின் 'காவலன்' மற்றும் கார்த்தியின் 'சிறுத்தை' திரைப்படங்கள் மிகப்பெரியளவில் வெற்றியடைந்து அதிலுள்ள பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்துபோகும் பட்சத்தில் மீண்டும் வித்யாசாகர் Come Back ஆகும் சந்தர்ப்பம் உள்ளது; வெற்றிக் குதிரை மீதுதானே யாரும் பந்தயம் கட்ட நினைப்பார்கள்.

அன்றைய வெற்றிப்பட இசையமைப்பாளராக இருக்கும்போதும்சரி இன்றைய தோல்விப்பட இசையமைப்பாளராக இருக்கும்போதும் சரி முடிந்தவரை சிறப்பான பாடல்களையே வித்யாசாகர் கொடுத்துள்ளார். ஒருவேளை அவர் மீண்டும் வணிகரீதியில் Come Back ஆக முடியாவிட்டாலும் அவரது ஆஸ்தான இயக்குனர்களான ராதா மோகன் மற்றும் கரு பழனியப்பன் போன்றவர்களது திரைப்படங்களில் நல்ல திரைப்பட பாடல்களை கொடுப்பார் என்று நம்பலாம்.

எனக்கு மிகவும் பிடித்த வித்யாசாகரது 10 மெலடி பாடல்கள்

1) காற்றின் மொழி (மொழி)

2) மலரே மவுனமா (கர்ணா)

3) நூறாண்டுக்கு ஒருமுறை (தாயின் மணிக்கொடி)

4) ஆசை ஆசை இப்பொழுது (தூள்)

5) நீ காற்று (நிலாவே வா)

6) கொஞ்சி கொஞ்சி (வேதம்)

7) டிங் டாங் கோவில் மணி (ஜி)

8) பூ வாசம் (அன்பே சிவம்)

9) தந்தன தந்தன தை மாசம் (தவசி)

10) அத்தி அத்திக்காய் (ஆதி)தியரி ஹென்றி (கால்ப்பந்தாட்ட வீரர்)
பிரான்ஸ் மற்றும் ஆர்சனலின் முன்னால் தலைவரும் சமகாலத்தின் உலகின் தலைசிறந்த முன்வரிசை (Forward) வீரர்களில் ஒருவருமான தியரி ஹென்றி (Thierry Henry) எனக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் பலருக்கும் கால்ப்பந்தாட்டத்தில் (Football) மிகவும் பிடித்த வீரர் ( All Time Favourite Player ). ஹென்றியை பிரான்சின் வீரராக பிடித்ததை விட ஆர்சனல் வீரர்ராகத்தான் எனக்கு மிகமிகப் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஹென்றியின் உடல் மொழி (Body language) மற்றும் அவரது ஸ்டையில் என்னை மட்டுமல்ல பார்க்கும் எல்லோரையும் வசீகரிக்குமாறு இருக்கும்.

ஆரம்பத்தில் இளவயதில் மொனாக்கோ அணிக்காக ஆடியபோது விங்க் (wing) பொசிஷனில் ஆடிய ஹென்றியை ஸ்ரைக்கராக (Striker) ஆக மாற்றி One Man Show நிகழ்த்து மளவிற்கு மாற்றியமைத்தவர் தற்போதைய ஆர்சனல் முகாமையாளர் அஸ்டின் வெங்கர் (Arsène Wenger). விங்க், ஸ்ரைக்கர் என இரண்டு பொசிஷனிலும் நேரத்திற்கேற்றால் போல் மாறிமாறி ஆடக்கூடிய ஹென்றியை எதிரணியினரின் தடுப்பாளர்கள் (Defenders) கட்டுப்படுத்துவது அவளவு சுலபமில்லை. இதனால் ஹென்றியின் காட்டில் ஒரே கோல் மழைதான்.

1999 - 2007 வரை ஹென்றி ஆர்சனலில் ஆடிய காலப்பகுதியில் ஹென்றி, அஸ்டின் வெங்கர் கூட்டணியில் ஆர்சனல் கலக்கியகாலம் ஆர்சனல் ரசிகர்களுக்கு என்றுமே மறக்கமுடியாத பொற்காலம், அந்த நாட்களை இன்றைக்கு நினைத்தாலும் மனதில் மகிழ்ச்சியும் ஏக்கமும் உண்டாகுவதை ஆர்சனல் ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் உணருவார்கள். இளமை துடிப்பு, வேகம், தொழில்நுட்ப ஆட்டத்திறன், கூல், சக வீரர்களிடம் கரிசனை, எதிரணி வீரர்களுடன் நட்பு (மைதானத்திலும்), தனி மனித சாகசம் என பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொண்ட ஹென்றி தான் விளையாடிய அணிகளின் அனைத்தின் வெறியிலும் மிகப்பெரும் பங்கு வகித்திருப்பார்.

மொனாகோ அணி 1997 ஆம் ஆண்டி லீக் போட்டிகளில் சாம்பியனானாகிய போது அந்த அணியில் ஆடிய ஹென்றி ஆர்சனல் அணிக்கு வந்த பின்னர் ஆர்சனல் மிரட்ட ஆரம்பித்தது. ஹென்றி ஆர்சனலில் விளையாடிய காலப்பகுதியில் பிரீமியர் லீக் போட்டிகளில் இரண்டு டைட்டில் (2001–02, 2003–04) மற்றும் நான்கு Runners-up (1999–2000, 2000–01, 2002–03, 2004–05), FA கிண்ணத்தில் மூன்று டைட்டில்கள் (2002, 2003, 2005) மற்றும் ஒரு Runners-up (2001), FA கம்யூனிட்டி ஷீல்டில் மூன்று டைட்டில் (1999, 2002, 2004) மற்றும் இரண்டு Runners-up (2003, 2005), அதுதவிர UEFA சாம்பியன் லீக் (2006) மற்றும் UEFA கப் (2000) இரண்டிலும் ஆர்சனலது வரலாற்றின் ஒரே தடவை Runners-up பட்டம் என ஹென்றியால் ஆர்சனலும் வெங்கரும், வெங்கரால் ஹென்றியும் ஆர்சனலும், ஆர்சனலால் ஹென்றியும் வெங்கரும் புகழும் பெருமையும் பெற்ற காலம்.ஆர்சனலில் இருந்து பார்சிலோனாவுக்கு மாறிய ஹென்றி முதல் வருடத்தில் பார்சிலோனா சார்பாக அதிக கோல்களை அடித்து தன்னை நிரூபித்தாலும் உபாதை, சக வீரர்களின் போட்டி , வயது போன்ற காரணங்களால் அடுத்த இடண்டு வருடமும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் ஹென்றி பார்சிலோனாவில் இருந்த மூன்று ஆண்டுகளில் 'ஸ்பானிஷ் லா லிகா'வில் இரு தடவைகள் சாம்பியனாகவும் (2008–09, 2009–10) ஒருதடவை Runners-up (2007 -2008) ஆகவும் வந்ததுடன் , 2008–09 இன் ஸ்பானிஷ் கிண்ணத்தையும் வென்றது. அதேபோல UEFA போட்டிகளில் ஆர்சனலிற்கு தலைமை தாங்கும்போது பர்சிலோனாவிடம் இறுதிப்போட்டியில் இழந்த கிண்ணத்தை 2008–09 பார்சிலோனா சாம்பியனாகியபோது பகிர்ந்துகொண்டார்.

இந்த ஆண்டு பார்சிலோனாவில் இருந்து விடைபெற்று அமெரிக்காவின் 'நியூயார்க் ரெட் புல்ஸ்' அணிக்காக ஆடிவரும் ஹென்றி இதுவரை பத்து போட்டிகளில் 2 கோல்களை மாத்திரமே அடித்துள்ளார். 33 வயதை தொட்ட ஹென்றி இனிவரும் காலங்களில் இளமையில் பிரகாசித்துபோல பிரகாசிப்பது இயலாத காரியம் எனினும் ஆர்சனலை விட்டு ஹென்றி போயிருக்காவிட்டால் ஒருவேளை இப்போதுள்ளதிலும் பார்க்க அவரும் ஆர்சனலும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும்.

பிரான்ஸ் தேசிய அணியில் அதிகூடிய போட்டிகளில் விளையாடியவர்களில் இரண்டாவதாக இருக்கும் ஹென்றி(123) பிரான்ஸ் சார்பாக அதிக கோள்கள் அடித்தவர் வரிசையில் முதலிடத்தில் (51) இருக்கிறாரர். பிரான்ஸ் 1998 ஆண்டு முதல் உலக கிண்ணத்தை வென்றபோது பிரான்ஸ் அணியின் சார்பாக அந்த தொடரில் மூன்று கோல்களை அடித்திருந்த ஹென்றி 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் Runners-up ஆக வந்தபோதும் அந்த தொடரில் மூன்று கோல்களை அடித்திருந்தார். அதேபோல பிரான்ஸ் தனது இரண்டாவது யூரோக் கிண்ண டைட்டிலை 2000 ஆம் ஆண்டு ஜெயித்தபோதும் ஹென்றி பிரான்ஸ் சார்பாக அந்த தொடரில் மூன்று கோல்களை அடித்திருந்தார்.

ஆர்சனல் சார்பாக 226 (Arsenal record) கோல்களையும், பிரான்ஸ் தேசிய அணி சார்பாக 51(France record) கோல்களையும், பார்சிலோனா சார்பாக 49 கோல்களையும், மொனாக்கோ சார்பாக 28 கோல்களையும், நியூயார்க் ரெட்புல்ஸ் சார்பாக 2 கோல்களையும் ஜுவன்டஸ் சார்பாக 2 கோல்களையும் அடித்துள்ள ஹென்றி என்கின்ற 'கோல் மெஷின்' இதுவரை மொத்தமாக 308 கோல்களை அடித்துள்ளது. ஆர்சனல் மற்றும் பிரான்ஸ் கால்ப்பந்தாட்ட அணிகளது வரலாற்றில் காலத்தால் என்றுமே அழியாத பெயராக தியரி ஹென்றியின் பெயர் நிலைத்திருக்கும்.

Thursday, November 18, 2010

தொண்டனதும் ரசிகனதும் எதிர்பார்ப்பு!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லமால் ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு ஒன்று இடம்பெறுகின்றது என்றால் அது விபத்து அல்லது தற்செயலாக நிகழ்ந்ததாகத்தான் இருக்க முடியும். அன்போ உதவியோ எதுவானாலும் ஏதோவொரு பிரதி எதிர்பார்ப்பில்லாமல் அல்லது சுய நன்மை இல்லாமல் யாராலும் கொடுக்க முடியாது, அப்படி கொடுக்க முடியுமென்று ஒருவர் சொன்னால் அவர் பொய் சொல்பவராக அல்லது உணர்ச்சி அற்றவராக இல்லை சுயநினைவு அற்றவராகத்தான் இருக்கமுடியும்.

எதிர்பார்ப்புக்களின் அளவு அதிகரிக்கும் போதுதான் பிரச்சனைகளும், முறிவுகளும், மனஸ்தாபங்களும் அதிகமாக ஏற்ப்படுகின்றன. அதற்க்கு முக்கிய காரணம் தாம் வழங்கும் அன்பிற்கு/உதவிக்கு உரிய பிரதி எதிர்பார்ப்பு குறைவாகவோ இல்லை கிடைக்காமலோ போவதுதான். இந்த எதிர்பார்ப்புக்கள் சிலருக்கு ஏமாற்றத்தையும் பலருக்கு கோபத்தையும் ஏற்ப்படுத்துவதாலேயே உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் விரிசல்வருவதற்கு காரணமாகிறது. இதை புரிதல் உள்ளவர்கள் சுலபமாக கையாளக் கூடிதாக இருப்பினும் எப்போதும் அது சாத்தியமாக இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகமே!

அதேபோல சிலர் ஏழைகளுக்கு தானம் செய்வதையோ இல்லை பிறருக்கு உதவி செய்வதையோ பிரதி உபகாரம் இல்லாமல் செய்வதாக நினைக்கலாம். ஆனால் இதில்தான் தானம்/உதவி செய்பவர்களுக்கு பெறுபவர்களைவிட அதிகமான பலன் கிடைக்கிறது. ஒருவருக்கு உதவும்போதும்சரி இல்லை தானம் கொடுக்கும்போதும்சரி கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு இணையாக எந்த பிரதி உபகாரமும் கிடைக்காது; அப்படியான சந்தர்ப்பங்களில் தாங்கள் உதவியதை நினைத்து மனதிற்குள் மகிச்சியும், நிறைவும் கொஞ்சம் கர்வமும் ஏற்ப்படுவதை யாராவது மறுக்க முடியுமா? ஆனாலும் இந்தவிதமான பிரதி எதிர்பார்ப்புகளோடு செய்யும் காரியங்கள் நன்மையானவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

இப்போது விடயத்துக்கு வருவோம், எதோ ஒன்றை எதிர்பார்த்து சிலர் செய்யும் செய்கைகைகள் பலருக்கும் பார்ப்பதற்கு முட்டாள்த்தனமாக தோன்றும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்களை திட்டுவதிலும் குறிப்பாக முட்டாளாக்குவதிலும்தான் பலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பார்களே அன்றி அவர்களிடத்திலிருந்து சிந்தித்துப்பார்க்க மாட்டார்கள்.அவர்களது இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர்களது நிலை புரியும். இப்படி அறிவு ஜீவிகளென்று தங்களை காட்டிக்கொள்ளும் பலராலும் முட்டாள், படிப்பறிவில்லாதவன், மெண்டல் என பட்டம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்தான்.தொண்டர்களில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள், இருவகையினருமே எதோ ஒரு எதிர்பார்ப்பிர்காகவே தலைவனை நாடினாலும் ஒரு பிரிவினர் தங்கள் தேவைகளுக் கேற்றால்போல தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதிக்காதவகையில் தொண்டனாக இருப்பார்கள். இந்த வகை தொண்டர்கள் காரியக்காரர்கள், இவர்களால் தலைவனுக்கும் தலைவனால் இவர்களுக்கும் நன்மை கிடைப்பதால் இருவருக்கும் ஒருவரிடத்தில் ஒருவர் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிடும். இவர்கள் பிழைக்கத்தெரிந்த தொண்டர்கள், இவர்களது எதிர்ப்பார்ப்பில் எந்த தப்பும் இல்லை.

இன்னொருவனை இவர்கள் நம்பித்தான் இவர்கள் வாழ வேண்டுமா என்று சிலர் கேட்கலாம், உண்மைதான்; ஆனால் கேட்பவர் அளவிற்கு சிந்திக்கும் திறன், பொருளாதாரவளம் அவர்களிடம் இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுயம் என்பதால் ஒவ்வொருவரதும் வாழ்க்கைமுறை வேறுபட்டது, அவர்களது நடைமுறை சிக்கல் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதால் எதையும் பொதுவில் வைத்து பேசமுடியாது. 'புரட்சி' பேசுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும், அனால் நடைமுறைக்கு ஒத்துவராது.

சமூக வளர்ச்சியில் எப்படி தனிமனிதர்கள் தங்கியிருக்கிறதோ அதேபோல சில தனி மனிதர்களது வளர்ச்சியில் சமூகமும் சமூகத்திலுள்ள வழர்ச்சியடைந்தவர்களும் தங்கியிருக்கிறார்கள். இவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு சமூகத்தை பொருளாதார கல்வி மற்றும் உலக அறிவில் முன்னேற்றினால் எதிர்காலத்தில் இவர்களுக்கு சிந்திக்கும் திறன் தானாகவே அதிகரிக்கும்., அப்போது இவர்கள் சுயமாக இயங்கும் காலம் வரும், அதுவரை அவர்கள் யாரையும் நாடி இருக்க கூடாதென்பது வார்த்தையில் வேண்டுமானால் நன்றாக இருக்கும், ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது.

அடுத்து இரண்டாவது வகையான தொண்டனை நோக்கினால்; அவன் தன் தலைவனிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பான், யாரவது தலைவனை பற்றி தப்பாக பேசினாலே உண்டு இல்லை என்றாக்கிவிடுவான், தன் குடும்பத்தையே மறந்து தலைவனுக்காக அல்லும் பகலும் படாத பாடுபடுவான். அவன் ஏதோவொரு எதிர்பார்ப்பில்த்தான் தலைவனுக்காக உழைக்கிறான் என்றாலும் அவன் எதிர்பார்க்கும் ஒன்றிற்காக நூறுமடங்கு அதிகமாக உழைக்கிறான் என்கின்ற உண்மை அவனுக்கு புரியாது. இதில் தொண்டன் செய்வது பொதுப்பார்வையில் தப்பாகத்தான் தெரியும். ஆனால் இதையே அவன் நிலையில், அவனது சிந்திக்கும் ஆற்றலோடு பார்த்தால்தான் அவனது நிலை புரியும்.

பெரும்பாலான தொண்டர்கள் தலைவனாக நினைப்பவனிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ தலைவனது நன்மைதிப்பைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நான்கு பேருக்கு முன்னிலையில் அந்த தொண்டனை பற்றி தலைவன் நாலு வார்த்தை பெருமையாக பேசினால் போதும், அவனுக்கு வானத்தில் ரெக்கை கட்டி பறக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்; அப்போது அவனுக்கு இருக்கும் மனநிலைக்கு இன்னும் நான்கு நாட்கள் தூக்கமில்லாமல் தலைவனுக்காக வேலை செய்ய காத்திருப்பான். இந்த விடயத்தில் தலைவன் அவனை தன் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறான் என்கின்ற உண்மையை அவனுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லி புரியவைக்க முடியாது.

இந்த இடத்தில் தங்களை புத்திசாலியாக காட்டிக்கொள்ளும்/ காட்டிக்கொள்ள ஆசைப்படும் பல அறிவுஜீவிகள் அந்த தொண்டனை முட்டாள் என்கிறார்கள். அவனது சிந்திக்கும் திறனது அளவைவிட்டு அவனால் வெளியில் வரமுடியாது அவனது குற்றமா? இல்லை அவனது குறைபாடா? அவனை முட்டாள் என்பவர்கள் தங்களது கப்பாசிட்டிக்கு (capacity) மேலாக சிந்திக்க முடியுமா என்பதை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அவன் இருக்கும் குடும்பப/சமூக சூழல், வசதிவாய்ப்பு, வெளிஉலக அறிவு, பொருளாதாரம் போன்ற அதே காரணிகளோடு அவர்களும் இருந்தால் அவன் செய்வதைத்தான் அவர்களும் செய்வார்கள் என்பதே உண்மை

அவனது சிந்திக்கும் திறன் குறைவு என்பதற்காக அவனை அப்படியே ஒதுக்கிவிட முடியாது, அவனும் எங்கள் சமூகத்தில் ஒருவன் என்கிற அக்கறை இருந்தால் அவனை முட்டாள், படிப்பறிவில்லாதவன் என்று தங்களிடமிருந்து அவனை வேறுபடுத்தி காட்டும் காரணிகளை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்காமல் முடிந்தவரை அவனது மூளையை நல்வளிக்கு சலவை செய்ய முயற்ச்சிக்கலாம்.

இந்த விடயத்தில் தலைவனை திட்டுவதாலோ தொண்டனை முட்டாள் என்பதாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. சமூக வளர்ச்சி, வெளியுலக அறிமுகம், பொருளாதார வளர்ச்சி, சிந்திக்கும் திறன் என்பன அதிகரிக்கும் பட்சத்தில் ஒருநாள் தொண்டன் தன்னை உணர்ந்து மாற்றிக்கொள்வான். அதுவரை அவனுக்கு பக்குவமாக மெல்ல மெல்ல எடுத்து சொல்வதுதான் ஒரேவழி. மாற்றம் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது, ஆனால் ஒருநாள் நிச்சயம் வரும்.அடுத்து ரசிகனை பார்ப்போமானால்; ஒரு ரசிகன் ஒரு நடிகனை கொண்டாடுகிறான் என்றால் அது குறிப்பிட்ட நடிகனுக்காக இல்லை, உண்மையில் அது அவனுக்காகத்தான். தனக்கு எதுவும் கிடைக்காமல் அவனால் எப்படி ஒருவனை கொண்டாடமுடியும்? நடிகனை பிடித்திருந்தால் மட்டும் யாரும் நடிகனை கொண்டாட மாட்டார்கள், அதையும்தாண்டி ஏதோ ஒரு வகையில் அவனுக்குள் ஒரு பொசிட்டிவான விடயம் நிச்சயமாக இருக்கும். அதேபோல ரசிகன் தனக்கு பிடித்த நடிகனை கொண்டாடுவதற்கு அளவுகோல் விதிக்க முடியாது, அது ஒவ்வொருவருக்குமிருக்கும் தனிப்பட்ட உணர்வு; ஆனால் அந்த உணர்வால் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ பாதிப்பு ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

தன்னையும், தன் குடும்பத்தையும் பாதிக்குமளவிற்கு ஒருவன் நடிகனை கொண்டாடுகிறான் என்றால் அதற்க்கு அந்த நடிகனை குற்றம் சொல்லுவதோ இல்லை குறிப்பிட்ட ரசிகனை முட்டாள் என்பதோ மேலே தொண்டனுக்கு குறிப்பிட்டது போல அது எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்திவிடாது, அவ்வாறு கூறுவதால் தங்களை பெருமைப்படுத்தலாமே தவிர வேறொன்றும் ஆகப்போவதில்லை. இப்படி பொறுப்பிலாமல் திரியும் ஒருசில ரசிகர்களுக்காக முடிந்தளவில் நல்லவிதமாக சொல்லி மூளைச்சலவை செய்வதுதான் சிறந்தவழி. சாதாரணமாக "இப்பிடி செய்யாதே" என்று அதட்டி கூறினால் அதை இன்னும் அதிகமாக செய்வதுதான் மனித இயல்பு, அதையே அன்பாக புரியும்படி கூறினால் மெதுமெதுவாக வென்றாலும் புரியவைக்கலாம்.

இது தொடர்பான இன்னுமொரு பதிவு சினிமா, விளையாட்டு, இறைநம்பிக்கை பற்றி ஒரு அடிமுட்டாள்...

Wednesday, November 17, 2010

ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் (17/11/10)

கடந்த சில தினங்களில் நடந்த சுவாரசியமான விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பாகவே இந்த பதிவு. தடுமாறும் பந்து வீச்சாளர்கள், டாமினேட் செய்ய முடியாமல் திணறும் இங்கிலாந்து கால்ப்பந்தாட்ட கழக அணிகள், 1000 மாஸ்டர் சீரிஸ், டிராமாவில் முடிவடையும் போர்முலா 1 ஓட்டப் பந்தயங்கள், அணிமாறும் மோட்டார்சைக்கிள் பந்தய முன்னணி வீரர்கள் பற்றிய தொகுப்புத்தான் இன்றைய ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலில் இடம்பெறும் விடயங்கள்.

கிரிக்கெட்
இலங்கை vs மேற்கிந்தியா, இந்தியா vs நியூசிலாந்து, தென்னாபிரிக்கா vs பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற/இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று போட்டிகளிலும் ஒரு விடயத்தை பொதுவாக அவதானிக்கலாம்; பாவப்பட்ட பந்து வீச்சாளர்கள் என்னதான் மாங்கு மாங்கென்று பந்து வீசினாலும் நம்ம துடுப்பாட்ட சிங்கங்களை ஒண்ணுமே செய்ய முடியவில்லை. ஹசிம் ஆம்லாவில இருந்து ஹர்பஜன் சிங் வரைக்கும் இஸ்டத்துக்கு போட்டுத்தாக்கிறாங்க.முக்கிய பந்து பந்துவீச்சாளர்களது ஒய்வு, சில பந்து வீச்சாளர்களது சர்ச்சை, சில பந்து வீச்சாளர்களது தொடர் உபாதை என்பவற்றால் மேலுள்ள இன்றைய அனைத்து டெஸ்ட் அணிகளதும் பந்துவீச்சின் பலம் அண்மைக்காலமாக மிகவும் பலவீனமடைந்து இருக்கும் நிலையில் ஆடுகளங்கள் வேறு மிச்சமீதியிருக்கும் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் மென்டிஸ், ஸ்ரீஷாந், அஜ்மல் போன்ற கடைநிலை வீரர்கள் இனிவரும் காலங்களில் இரட்டை சதமடித்தாலும் ஆச்சரியமில்லை.இந்த மூன்று போட்டிகளில் மட்டும் இதுவரை எட்டு சத்தங்கள், பதினேழு அரைச்சதங்கள் அவற்றில் ஒரு இரட்டைசதம், ஒரு முச்சதம். இன்னும் இலங்கை vs மேற்கிந்திய போட்டியில் சில சதங்களோ அரைச்சதங்களோ பெறப்படலாம். பின்வரிசை துடுப்ப்பாட்ட வீரர் ஹர்பஜன்சிங் இறுதி மூன்று இனிங்க்ஸ்களிலும் பெற்ற ஓட்டங்கள் முறையே 69,115,111* . இதே ஹர்பஜன்சிங்கின் அனுபவமற்ற நியூசிலாந்திற்கு எதிராக பந்து வீச்சு பெறுதி 1/112, 4/76, 1/117.

இந்த மூன்று போட்டிகளுமே ஆசிய ஆடுகளங்கள் என்பதால் ஆசிய ரசிகர்களை கவர்வதற்காக துடுப்பாட்டத்திற்கு சாதகமானதாக அமைக்கப்பட்டதாக இருந்தாலும் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைவது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல.இப்போதெல்லாம் ஆசிய ஆடுகளங்கள் மட்டுமென்றில்லை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்காவின் ஜெகனஸ்பெர்க்,டேர்பன் ஆஸ்திரேலியாவின் பேர்த், நியூசிலாந்தின் வெலிங்டன், இங்கிலாந்தின் லீட்ஸ், மேற்கிந்தியாவின் கிங்க்ஸ்டன் என அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆடுகளங்களும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சார்பாக மாறிவருவது இன்றைய ஸ்திரமற்ற பந்துவீச்சு வரிசையை மேலும் ஸ்திரமற்றதாக ஆக்கிவிடும்.

டெஸ்ட் போட்டிகளென்றாலே வேகப்பந்து வீச்சுத்தான் அழகு, ஒரு சில மைதானங்களில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பினும் பெரும்பாலான இன்றைய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்ர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. துடுப்பாட்டவீரர்கள் மட்டும் பிராகசிப்பதென்றால் அதற்குத்தான் 20/20 கேம்ஷோ இருக்கிறதே, அது போதாதா?டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆடுகளங்களை சரியானமுறையில் அனைத்து தரப்பும் பயன்படுத்துமாறு அமைக்காவிட்டால் (உ+ம் சிட்னி, லோட்ஸ், அஸ்கிரிய, ) எதிர்வரும் காலங்களில் டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் தனித்தன்மையை இழந்துபோகும் அபாயம் உள்ளது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகள் இதை உணருமா என்றால் சந்தேகமே!!!!

கால்ப்பந்தாட்டம்
இந்த ஆண்டிற்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் செல்சி, மன்செஸ்டர், ஆர்சனல் அணிகள் முதலிடத்திற்கு போட்டிபோட்டுக் கொண்டிருந்தாலும் மூன்று அணிகளுமே ஸ்திரமான அணிகளாக இம்முறை தெரியவில்லை, இம் மூன்று அணிகளும் எதிர்பாராத அணிகளிடம் சொதப்புகின்றன. ரூனி, ரொனால்டோ இல்லாத மன்செஸ்டர் இம்முறை சற்றே திணறி வருகிறது.

2003/2004 போட்டித்தொடரில் பட்டம் வென்றதன் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டம் வெல்லாத ஆர்சனல் இந்தாண்டு ஓரளவு ஸ்திரமாக ஆடிவந்தாலும் டீம் ஸ்பிரிட் இருக்குமளவிற்கு அனுபவமும் பெரிய தலைகளும் இல்லாதது குறையே. செல்சி அனுபவம், பலம், ஸ்திரம் எல்லாவற்றிலும் ஏனைய அணிகளைவிட வலுவாக இருந்தாலும் கடந்த போட்டியில் சந்தர்லண்டுடனான தோல்வி செல்சியில் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது.யாருமே எதிர்பாராதவகையில் ஆரம்பம் முதலே சொதப்பிவரும் லிவர்பூல் 17 ஆவது இடத்திலிருந்து டாப் 10 இற்குள் நுழையும் தறுவாயில் (11) தற்போது இருந்தாலும் டாப் 4 இற்குள் இடம்பிடித்து அடுத்தாண்டு UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு தகுதி பெறுமா என்றால் சந்தேகமே. 2008/2010 காலப்பகுதியில் இறுதி மூன்று இடங்களுக்குள் வந்ததால் 2009/2010 போட்டித்தொடரில் விளையாடும் தகுதியை இழந்த நியூகாஸ்டில் இந்தாண்டு சிறப்பாக ஆடி 8 ஆவது இடத்தில் தற்போதுள்ளது.

13 போட்டிகள் மாத்திரமே முடிவடைந்த நிலையில் மிகுதி 25 போட்டிகள் உள்ளநிலையில் யார் கிண்ணத்தை வெல்வார்கள் என்று ஆரூடம் கூற முடியாவிட்டாலும் செல்சி,ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டட் , மன்செஸ்டர் சிட்டி அணிகளுக்குள் கடுமையான போட்டி இருக்கமென்று நம்பலாம்.

டென்னிஸ்
இந்தாண்டுக்கான ATP World Tour Masters 1000 போட்டிகளின் ஒன்பது பட்டங்களில் மூன்று பட்டங்களை நடாலும், இரண்டு பட்டங்களை முரேயும் கைப்பற்ற; பெடரர், சொண்டர்லிங், ரோடிக், ல்யுபிசிக் ஆகியோர் தலா ஒரு பட்டத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதிகபட்சமாக பெடரர் 4 தடவைகள் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தார். புள்ளிகள் அடிப்படையில் நடால் முதலிடத்திலும் பெடரர், டியோகொவிக், முரே ஆகியோர் முறையே இரண்டு, மூன்று, நான்காம் இடங்களையும் பெற்றனர்.

இவர்களைவிட ரோடிக், பெரெர், பேடிச், சொண்டர்லிங் ஆகியோரும் 'டாப் 8 இல்' இடம் பிடித்து ஆண்டுத்த வாரம் ஆரம்பமாகவிருக்கும் ATP World Tour Finals இல் விளையாட தகுதி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற டேவிடன்கோ இம்முறை 'டாப் 8 இல்' தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இரண்டு ஆண்டுகளாக ATP World Tour Finals கிண்ணத்தை கோட்டைவிட்ட பெடரர் இம்முறை கைப்பற்றினால் சாம்பிராசின் 5 தடவை சாம்பியனான சாதனையை சமப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல இதுவரை ATP World Tour Finals பட்டம் ஒன்றையும் வெல்லாத நடாலுக்கும் இது முக்கியமான தொடர்; அண்மைக்காலமாக உபாதை காரணமாக போட்டிகளில் பங்கு பற்றாத நடாலின் போம் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் நடால், பெடரர், சொண்டர்லிங், டியோக்கோவிக் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

போர்முலா 1
போர்முலா 1 போட்டிகளின் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் யார் சாம்பியன் என்பதை தொடரின் இறுதிப் போட்டியே தீன்மானித்துள்ளது, அதிலும் இறுதி நிமிடங்கள் கொலிவூட் பட கிளைமாக்ஸ் ரேஞ்சிற்கு பரபரப்பாகித்தான் இறுதியாக ஒருவர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

2007 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஹமில்டனின் பெறவிருந்த சாம்பியன் பட்டத்தை சக வீரர் பிலிப்பே மாசாவின் துணையுடன் தட்டிப்பறித்து கிம்மி ரெயிக்கணன் சாம்பியனானார். ஒரு புள்ளியால் ஹமில்டனும் அலோன்சோவும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றனர்.அதேபோல 2008ஆம் ஆண்டு பிலிப்பே மாசா பெறவிருந்த சாம்பியன் பட்டத்தை க்ளோக் என்னும் வேற்று அணி வீரரின் இறுதிக் கணநேர உதவியால் ஹமில்டன் தட்டிப்பறித்தார், அந்தப்போட்டி முடிவு அந்த நேரத்தில் பல கேள்விகளை உருவாக்கினாலும் பின்னர் பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னரே ஜென்சன் புட்டன் பட்டத்தை வென்றதால் இறுதிப் போட்டியில் பரபரப்பு ஏற்ப்படவில்லை.ஆனால் இந்தாண்டு மீண்டும் இறுதிப்போட்டியில் பரபரப்பு உருவாக்கி எதிர்பாராத விதமாக விட்டல் சாம்பியனானார். வெப்பர் சாம்பியனாவதற்க்கு அவர் முதலிடத்திற்கு வரவேண்டும், இல்லாவிட்டால் அலோன்சோவைவிட 9 புள்ளிகள் அதிகமாக பெறவேண்டும். அதேபோல விட்டலைவிட ஏழு புள்ளிகளுக்கு அதிகமாக குறையாமல் பெறவேண்டும். அலோன்சோ வெற்றிபெற முதலாவதாக வரவேண்டும் இல்லாவிட்டால் இல்லாவிட்டால் வெப்பைரைவிட 8 புள்ளிகளுக்கும், விட்டலைவிட 15 புள்ளிகளுக்கும் அதிகமாக குறையாமல் பெறவேண்டும்.அலோன்சோவைவிட 15 புள்ளிகள் வித்தியாசத்தில் விட்டல் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் அலோன்சோ அல்லது வெப்பர்தான் சாம்பியன் என எதிர்பார்க்கப்பட்டது, அலோன்சோ முதல்நாள் போல் பொசிஷனில் வெப்பரை முந்தியவுடன் வெப்பரை விட ஆலோன்சோவிர்க்கு வெற்றிவாய்ப்பு சாதகமாக மாறியது.

விட்டல் முதலாவதாக ஆரம்பித்தாலும் மூன்றாவதாக ஆரம்பிக்கும் அலோன்சோ 5 ஆம் இடத்தில் முடித்தாலே அலோன்சோதான் சாம்பியன் என்பதால் அலோன்சோ எப்படியும் சாம்பியன் ஆகிவிடுவார் என்றிருக்க, பந்தயத்தின் இறுதியில் விட்டல் முதல்டத்தில் வர அலோன்சோவிற்கு கிடைத்தது 7 ஆவது இடமே. இம்முறையும் பரபரப்புடன் இடம்பெற்ற போட்டியில் இறுதியாக விட்டல் சாம்பியனானார்.

ஷூமேக்கரின் 7 தடவை உலக சாம்பியன் பட்டத்தை 2 தடவை பட்டம் வென்ற அலோன்சோ முறியடித்துவிடுவரோ என்கிற பயத்தில் இருந்த ஷூமியின் ரசிகர்களுக்கு ஷூமியின் சக நாட்டுக்காரான விட்டல் (ஜெர்மனி) வயிற்றிலே பாலை வார்த்துவிட்டார். (எனக்கும்தான் :-))

மோட்டோ ஜீபி
யமகாவின் லோறன்சோ அதிக புள்ளிகளை ஒரு தொடரில் பெற்ற சாதனையோடு இந்தாண்டு பெற்ற சாம்பியன் பட்டத்தை அடுத்தாண்டு 9 தடவைகள் சாம்பியன் பட்டத்தை வென்ற வாலன்சீனோ ரொசி மீண்டும் தனதாக்கிகொள்வாரா என்பதுதான் அடுத்தாண்டு மோட்டோ ஜீப்பியின் எதிர்பார்ப்பு.

யமகாவின் சகவீரர் லோரன்சொவினது போட்டியை அடுத்தாண்டு ரொசி எதிர்கொள்ளப்போவது யமகாவில் இல்லை; அதற்குப்பதில் டுக்காட்டியில், இத்தாலி இஞ்சினான டுக்காடிக்காக முதல்முறையாக அடுத்தாண்டு பந்தயத்தில் பங்குகொள்ள ரொசி தயாராகும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக டுக்காடிக்காக பந்தயங்களில் கலந்து வந்த முன்னால் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் ஸ்டோனர் அடுத்தாண்டு ஹோண்டா சார்பாக போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.ரொசி, ஸ்டோனர், லோரன்சோ மூவரும் வெவ்வேறு அணிகளுக்குள் இருப்பதால் அடுத்தாண்டு கடுமையான மும்முனைப் போட்டியாக மோட்டோ ஜீபி இருக்குமென்பதில் சந்தேகமில்லை, இவர்களைவிட பெட்ரோசா, ஹெய்டன் போன்றவர்களுக்கு நல்ல இஞ்சின் கிடைக்கும் பட்சத்தில் போட்டி இன்னமும் விறுவிறுப்பாக இருக்கும்.

Sunday, November 14, 2010

சாப்பிட்டுப்பாத்திட்டு சொல்லுங்க!!!!

மனுஷன் கண்டுபிடிச்சதிலேயே அற்புதமான ரெண்டே விசயம்தான்; ஒன்னு- விதவிதமா சமைப்பது, ரெண்டு- அதை வித விதமா சாப்பிடுவது. எனக்கு உலகத்திலேயே பிடித்த முதல்விடயம் சாப்பாடுதான்; அதுக்கப்புறம்தான் சினிமா, ஸ்போர்ட்ஸ் எதுவானாலும். சிலபேரு பசிக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு ருசிக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு பெருமைக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு வெறித்தனமா சாப்பிடுவாங்க; இதில நான் நான்காவது வகை. நாங்கெல்லாம் முடிவுபண்ணி களத்தில இறங்கினா நமக்கு சாப்பாடு வைக்கிறவங்க பாடு திண்டாட்டம்தான், இது அம்மாவில இருந்து பீஸாகட் சப்லேயர்வரை பொருந்தும். ஓகே ஓகே நீங்க திட்டிறது புரிது, மேட்டருக்கு வாறன். இதுவரை பலவிதமான பலநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டிருந்தாலும் என்னோட ஆல் டைமே பேவரிட் பழைய சாதம்தான் (பழஞ்சோறு).

சாதம் மிஞ்சினா அடுத்தநாள் கலையில சாப்பிடதுக்கு எதுக்கிந்த பில்டப்பின்னு நீங்க நினைக்கலாம், இதற்கான பதிலை பழைய சாதத்தை ரசிச்சு ருச்சிச்சு சாப்பிட்ட அனுபவமுள்ளவங்க சொல்லுவாங்க, அனுபவ ரீதியா தெரியாதவங்க கீழே உள்ளமாதிரி டிரைபண்ணி பாருங்க.

தேவையானபொருட்கள்


நாட்டரிசிச் சோறு (முதல் நாள்)நாட்டரிசியிலும் கைக்குத்தல் அரிசி என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும், அடுத்தநாள் காலையில் பழைய சாதம் சாப்பிடுவதென்றால் முதல்நாள் மதியம் சமைத்த சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் (பாத்திரத்தில் உள்ள சாதத்தின் மட்டம் வரைக்கும்). மறுநாள் காலையில் சுத்தமாக கையை கழுவிய பின்னர் நீரூற்றிய பழைய சாதத்திலிருந்து நீரை பிரித்து சாதத்தை மட்டும் வேறொரு பாத்திரத்தில் இடவேண்டும்.

உருளைகிழங்கு பிரட்டல் கறி (முதல் நாள்)ஏனைய மரக்கறிகளிலும் பார்க்க உருளைக்கிழங்கு சிறந்த தெரிவு, காரணம் முதல்நாள் மதியம் சமைப்பது மறுநாள் காலைவரை இருப்பதால் அதிலேற்படும் புளிப்புத்தன்மை நன்றாக இருக்கும், மீன்/கருவாட்டு குழம்பு தண்ணிப் பற்றாக இருக்குமென்பதால் உருளைக்கிழங்கை நன்றாக பால்/நீர் வற்றும்வரை பிரட்டி சமைப்பது நல்லது.

மீன்/கருவாட்டுக் குழம்பு (முதல் நாள்)எந்த மீன்/கருவாடு என்றதாலும் பரவாயில்லை, ஆனால் முள்ளு குறைவானதாக இருக்க வேண்டும். முதல்நாள் மதியம் நன்றாக தேங்காய்ப்பால் விட்டு உப்பு,புளி சற்று குறைவாக சமைக்கவேண்டும், அப்போதுதான் மறுநாள் காலையில் உப்பு,புளி நன்றாக சுவறியிருக்கும்.

மீன்/கருவாட்டு பொரியல் (முதல் நாள்)இதற்கும் எந்த மீன்/கருவாடு என்றாலும் பரவாயில்லை, ஆனால் முள்ளு குறைவாக இருக்கவேண்டும், முதல்நாள் பொரிப்பதால் மீனிற்கு உப்பு சற்று குறைவாக போடுதல்வேண்டும், இல்லாவிட்டால் மறுநாள் உப்பு கரிக்கும். முதல்நாள் பொரித்த மீனை மறுநாள் காலைவரை ஒரு பேப்பரில் சுற்றி கிண்ணமொன்றில் வைத்து மூடிவைக்கவேண்டும்.

மிளகாய் சம்பல்/ மாசிச் சம்பல் (அன்றையதினம்)செத்தல்மிளகாய், உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ, பழப்புளி சேர்த்து அம்மியில் அரைத்த சம்பல் மட்டும் பழைய சோற்றை உண்பதற்கு போதுமானது, இதில் கைப்பக்குவம் ரொம்ப ரொம்ப முக்கியம், வீட்டிலே வயது முதிர்ந்தவர்கள் அம்மியில் அரைக்கும் சம்பல் தனிச் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் மாசிக் கருவாடு, செத்தல்மிளகாய், வெங்காயம், தேங்காய்ப்பூ, உப்பு, தேசிக்காய் புளி போன்றவற்றை கொண்ட இடித்த சம்பலும் நன்றாக இருக்கும். இந்த சம்பல்களில் ஒன்றை பழைய சாதத்தை சாப்பிடுவதற்கு சற்று முன்னர் செய்தல் வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் (அன்றையதினம்)நன்றாக உரித்த வெங்காயம், காம்பு நீக்கிய பச்சை மிளகாய் என்பவற்றை சுத்தமான நீரில் கழுவி கடித்து சாப்பிடுவதற்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பு

முதல்நாள் சமைத்த எவற்றையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ அல்லது மறுநாள் சூடாக்குதலோ கூடாது.

செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அகற்றிய சோற்றை கொட்டி, அதில் மீன்/கருவாட்டு குழம்பை (முட்கள் சேராதவாறு) சேர்த்து, பின்னர் மீன்/கருவாட்டின் முள்ளை நீக்கி சிறுசிறு துண்டுகளாக கலந்து, இவற்றுடன் உருளைக்கிழங்கு பிரட்டலையும், மிளகாய்/மாசி சம்பலையும் சேர்த்து நன்றாக குழைக்க வேண்டும். அனைத்து கறிகளும் சோற்றுடன் சேரும்வண்ணம் நன்றாக குழைத்து அதை ஒரு பந்து வடிவிலே கொண்டுவரவேண்டும்.

சாப்பிடும்முறை


மேசை, கதிரையிலும் பார்க்க வெறும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதே சிறப்பாக இருக்கும். அதேபோல கூடவே மூன்று நான்கு பேராவது சேர்ந்து சாப்பிட வேண்டும். குழையலை ஒருவர் (துப்பரவானவர் என சாப்பிடும் எல்லோரும் மனதளவில் நம்புபவராக இருக்கவேண்டும், அம்மாவாக இருந்தால் மிகவும் சிறப்பு) குழைத்துக்கொடுக்க அதை வலது கையிலே வாங்கி, இடது கையிலே வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது பொரித்த மீன்/கருவாடு இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து கடித்துக்கொண்டே சோற்று உருண்டையை கவ்வி சாப்பிட வேண்டும்.சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சோற்றை பிழிந்த நீரிலே உப்பும், வெட்டிய வெங்காயமும், வெட்டிய பச்சைமிளகாயும் சேர்த்து குடித்தால் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். கோடைகாலங்களில் வெப்பத்தால் வரும் நோய்களுக்கு இது சிறந்த நிவாரணி.

குறிப்புகள்பழஞ்சோற்றிற்கு மேலுள்ள கறிகள்தான் வேண்டுமென்றில்லை, எந்த பழைய கறியாக இருந்தாலும் முதல்நாள் மிஞ்சும் சோற்றுடன் சேர்த்து உண்ணலாம், இதனால் இதை ஏழை பணக்காரன் என்று பாகுபாடின்றி யாரும் உண்ணலாம்.

அலுவலகங்களுக்கும், வெளியிடங்களுக்கும் வேலைக்கு போகிறவர்கள் விடுமுறை நாட்களில் உண்பது நல்லது; காரணம் பழக்கமில்லாதவர்களுக்கு வயிற்றில் பிரச்சினையை ஏற்ப்படுத்தலாம், முக்கியமாக நித்திரை தூக்கியடிக்கும்.ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறவுங்கள், மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகல்லால் சொல்லி விபரிக்க முடியாதவை.

ரொம்ப ஓவரு -முதல் மற்றும் கடைசி தவிந்த ஏனைய புகைப்படங்கள் பதிவு கொஞ்சம் லைவ்லியா இருக்கட்டுமேன்னு அம்மாகிட்ட திட்டு வாங்கி வாங்கி எடுத்த புகைப்படங்கள் :-)

Saturday, November 13, 2010

விடை தெரிஞ்சவங்க சொல்லலாம்!!!

1) குடும்ப ஆட்சியில் சிறந்து விளங்குவது ?

)இந்தியா )தமிழகம் )இலங்கை

2) இளைய தளபதி 'டாக்டர்' விஜய் அவர்களுக்கு நெக்ஸ்ட்டு (Next) பட்டத்துக்கு பின்னால் யார் பெயரை வழங்கினால் சிறப்பாக இருக்கும்?

)ரஜினி )விஜயகாந்த் )ரீ.ராஜேந்தர்

3) சிவகுமார் எந்த நெட்வேர்க் பாவிப்பார்?

)சூரியாவிற்க்காக Aircel )கார்த்திக்காக Airtel )இரண்டுபேருக்குமாக dual sim phone (Both)

4) 2015 இல் ரஜினியின் புதிய திரைப்படமொன்றிற்கு ரஜினியின் 'அம்மா' வேடத்திற்கு பொருத்தமான நடிகை?

)ஸ்ரேயா )நயன்தாரா )ஐஸ்வர்யா ராய்

5) இன்றைய பெரும்பாலான கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் எது?

)ஏகாதிபத்திய எதிர்ப்பு )முதலாளித்துவ எதிர்ப்பு )தொழிலாளர்களின் நலன்

6) எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும், எவளவு அடிச்சாலும் தாங்கும், மாசற்ற நல்ல உள்ளம் என்றால் அதுயார்?

)செல்வம் (திருமதி செல்வம்) )கங்கா (தங்கம்) )மகா (மகாராணி)

7) பாகிஸ்தான் விக்கட் காப்பாளர் Zulqarnain Haider இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருப்பதன் காரணம் ?

)சூதாட்டக்காரர்களின் மிரட்டல் )இங்கிலாந்து குடியுரிமை )பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மாஸ்டர் பிளான்

8) இன்றைய ஆஸ்திரேலியா கிரிக்கட் அணியைப் பார்த்தால்............?

)பாவமாக இருக்கிறது )கவலையாக இருக்கிறது )மகிழ்ச்சியாக இருக்கிறது

9) இலங்கையில் இடம்பெற்ற IIFa விழாவால் அதிக பப்ளிசிற்றி கிடைத்திருப்பது யாருக்கு/எதுக்கு ?

) இலங்கை அரசாங்கத்திற்கு )நடிகை அசினிற்கு )'ரத்தசரித்திரம்' திரைப்படத்திற்கு

10) பதிவுலகினால் அதிகமாக காமடிக்கு பயன்படுத்தப்பட்ட சினிமா பிரபலம் யார்?

)'இயக்குனர்' பேரரசு )'பல்முக கலைஞர்' ரீ.ராஜேந்தர் )'நடிகர்'---(அவரேதான்)