Sunday, October 17, 2010

பாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )நன்றி - சண் டிவி
எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே! இந்தபடத்தை மிஸ் பண்ணீட்டனே! என்று சகநடிகர்கள் நினைப்பது வழக்கம், அதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக கூறிய நடிகர்களும் உண்டு. அனால் யாருமே "இந்தப்படத்தில் நான் நடித்தால் எப்படியிருக்கும்?" என்று கற்பனைபண்ணிக்கூட பார்க்கமுடியாத படமென்றொன்று இருக்கிறதென்றால் அது பாட்ஷாதான். ரஜினியை தவிர வேறுயாரையும் பாட்ஷாவாகவோ மாணிக்கமாகவோ கற்பனைபண்ணிக்கூட பார்க்கமுடியாது. ஒருவேளை யாரவது பாட்ஷாவை ஏதாவதொரு காலகட்டத்தில் ரீமேக்செய்தால் அதுதான் ரஜினிபடங்களின் கடைசி ரீமேக்படமாக இருக்கும்.முன்பெல்லாம் ரஜினியின் நடிப்பிற்கு சான்றாக முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, நெற்றிக்கண், ஸ்ரீராகவேந்திரா, ஜானி, தளபதி போன்ற படங்களைத்தான் நினைத்திருந்தேன். ஆனால் இவை அனைத்திற்கும் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் ரஜினி பாட்ஷாவில் நடிப்பில் கலக்கியிருக்கிறார் என்பதை இன்றுதான் என்னால் உணரமுடிந்தது. ரஜினியின் தம்பிகேரக்டர் ரஜினியை போலிஸ் உயரதிகாரி பார்க்கவேண்டும் என்று கூறியதும் வரும் காட்சியில் ரஜினியின் performance; சான்சே இல்லை. அதேபோல தங்கையின் திருமணத்திற்காக மாப்பிளையின் அப்பாகேரக்டரிடம் பேசும் காட்சியும் A கிளாஸ். படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி ஆதிக்கம் செலுத்தியிருப்பார். மாணிக்கத்திற்கும் பாட்ஷாவிற்குமிடையில் வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும், மானரிசத்திலும் ரஜினி காட்டியிருக்கும் வேறுபாடு ரஜினி வெறும் மாஸ்ஹீரோ மட்டுமல்ல அவர் கிளாஸ்ஹீரோவும்தான் என்பதற்கு இன்னுமொரு சான்று, மனிதர் இரண்டு கேரக்டர்களுக்குமிடையில் அப்பிடியொரு அற்புதமான வேறுபாட்டை காட்டியிருப்பார்.நக்மா; அன்றைய இளைஞர்களின் கனவுநாயகி(அப்ப நாங்க குழந்தைகள்), இப்போ பாஷாவை பார்க்கும் இளைஞர்களுக்கும் கனவுநாயகிதான்:-) நடிப்பதற்கு பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்திருப்பார், ஆரம்பத்தில் ஆட்டோவில் ரஜினியுடன் பேசும்காட்சி செமதூள். ரஜினி நக்மா தவிர ரகுவரன், ஜனகராஜ், தங்கையாக யுவராணி, தந்தையாக விஜயகுமார், தாயாக சாரதாப்பிரியா, தாதாவாக ஆனந்தராஜ், அன்வராக சரண்ராஜ், தேவன் என பலகேரக்டர்கள் இருந்தும் அனைவரும் மனதில்பதிவது ஆச்சரியமான உண்மை.

ஜனகராஜ் ரஜினியுடன் இணையும் படங்களில் இருவருக்குமிடையில் நல்ல கெமிஸ்ரி எப்போதும் இருக்கும். படிக்காதவன், ராஜாதிராஜா, பணக்காரன், அண்ணாமலை, பாஷா, அருணாச்சலம் என ரஜினி,ஜனகராஜ் கூட்டணி எப்போதுமே ஜெயிக்கும் கூட்டணிதான். அடுத்த ரஜினி படத்தில் ஜனகராஜ் இருந்தால் மிகவும்சிறப்பாக இருக்கும், அதேபோல செந்திலும் ஓகே.ரகுவரன் பற்றி சொல்லனுமின்னா; ரஜினி தவிர வேறுயாராலும் எப்பிடி பாட்ஷா கேரக்டருக்கும் மாணிக்கம் கேரக்டருக்கும் உயிர்தந்திருக்க முடியாதோ, அதேபோல ரகுவரன்தவிர வேறுயாராலும் அன்டனிகேரக்டருக்கு உயிர் தந்திருக்கமுடியாது. அதுவும் இறுதிகாட்சிகளில் தேவன் வீட்டில் தாடியுடன் கழுத்தை சரித்து ஒரு பார்வை பார்ப்பாரே!!!!!!!!!!! ரகுவரன்சார் "உங்களை மிஞ்ச மறுபடியும் நீங்கதான்சார் பிறந்து வரணும்" ரஜினியை குழைந்தை, சின்னபொடியன் போன்ற வசனங்களால் அழைப்பது ரகுவரனால் மட்டும்தான் முடியும், அதுதான் ரகுவரனின் மாஸ். ரகுவரனின் இழப்பு ஈடு இணையில்லாதது என்பதை யாரும் மறுக்கமுடியாது.தேவாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பக்கபலம், படத்திற்கு ஏற்றமாதிரியான பாடல்களை வழங்கிய தேவாவின் பின்னணி இசை எங்கிருந்து எடுக்கப்பட்டாலும் படத்திற்கு மிகப்பெரும் பலம். அதேபோல ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை என அனைத்தும் படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவைக்கவில்லை. வைரமுத்து தன் பங்கிற்கு பாடல்வரிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். பாட்ஷாவின் வெற்றிக்கு காரணமான இன்னுமொரு முக்கியமான நபர் பாலகுமாரன்; வசனங்களைபற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை யென்றாலும் 'உன் வாழ்க்கை உன் கையில்' என்பதனால் கடவுள் நம்பிக்கை இல்லையா? என்பதற்கு பாலகுமாரன் தரும் பதில் அக்மார்க் பாலகுமாரன் டச். படம் முழுவதும் பாலகுமாரன் எம் கூடவே பயணிக்கிறார். பாட்ஷா 2 எடுக்கப்படுமானால் வசனத்திற்கு பாலகுமாரனை கவனத்தில் கொள்வது சிறப்பாக இருக்குமென்பது எனது தனிப்பட்டகருத்து.இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு ஒரு ராயல்சலூட், மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். இதற்கு முன்னர் இப்படியொரு திரைக்கதை தமிழ்சினிமாவில் வந்ததில்லை. மாணிக்கத்திற்கு பாட்ஷாவின் பிளாஷ்பாக், பின்னர் பாஷாவுக்கு அன்வரின் பிளாஷ்பாக் என பிளாஷ்பாக்கில் பிளாஷ்பாக்கை வைத்திருக்கும் சுரேஷ்கிருஷ்ணா திரைக்கதையில் எந்த இடத்திலும் தொய்வை ஏற்ப்படுத்தாதது ஆச்சரியம்! ஜனகராஜ், தளபதி தினேஷ், மகாநதி சங்கர் என மும்பாயில் இருந்த சகாக்களை சென்னையில் பயன்படுத்தியது, தேவனை மும்பையில் இருந்து சென்னைவரை கொண்டுவந்து இறுதிவரை அவர் கேரக்டரை மாற்றாமல் திரைக்கதையை பின்னியவிதம் அழகு.அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் மணிமகுடத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை கொடுத்த சுரேஷ்கிருஷ்ணாதானா ஆளவந்தான், பாபா, கஜேந்திரா, பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆறுமுகம் போன்ற படங்களை இயக்கினாரா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். உண்மையில் இவற்றில் பாபாவும் ஆளவந்தானும் ரஜினி, கமலின் கதைகளுக்கும் அவர்களின் தலையீடுகளுக்கும் மத்தியில் இயக்கப்பட்டது; அதேபோல கஜேந்திராவும் 'பரட்டை என்கிற அழகுசுந்தரமும்' ரீமேக் படங்கள், அவற்றை எந்த பெரிய இயக்குனரும் தமிழில் இயக்கியிருந்தால் இதேநிலைதான். இவற்றில் சுரேஷ்கிருஷ்ணாவின் தவறென்று சொன்னால் அது ஆறுமுகம் மட்டும்தான், நிச்சயமாக ஆறுமுகம் திரைப்படத்தில் சுரேஷ்கிருஷ்ணாவின் ஈடுபாடு 100% இருந்திருக்காதேன்றே தோன்றுகிறது.பாட்ஷாவிலும்சரி அண்ணாமலையிலும்சரி ரஜினியின் மாஸை 100% சரியாக பயன்படுத்திய சுரேஷ்கிருஷ்ணா இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றமாதிரியான திரைக்கதையை தொழில்நுட்பங்களோடு இணைத்து இயக்குவாறென்றால் பாஷா 2 விற்கு நிச்சயமாக சுரேஷ்கிருஷ்ணாற்கு சந்தர்ப்பம் கொடுக்கலாம். பூரண சுதந்திரம் வழங்கப்பட்டால் சுரேஷ்கிருஷ்ணாவால் நிச்சயமாக பாஷா 2 வை சிறப்பாக இயக்கமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு; இது இன்று பாட்ஷாவை முழுமையாக பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். புரியாதவர்கள் மீண்டுமொருதடவை பாட்ஷாவை பாருங்க.

மொத்தத்தில் பாட்ஷா - இன்றைக்கல்ல என்றைக்கும் தமிழ் சினிமாவின் உச்ச கமர்சியல் மாஸ் மசாலா.

24 வாசகர் எண்ணங்கள்:

erodethangadurai said...

அருமையான விமர்சனம். !
அதுசரி ஏன் இவ்வளவு லேட்டா ?

ம.தி.சுதா said...

/////நக்மா; அன்றைய இளைஞர்களின் கனவுநாயகி(அப்ப நாங்க குழந்தைகள்), இப்போ பாஷாவை பார்க்கும் இளைஞர்களுக்கும் கனவுநாயகிதான்:-)////
கலக்கீட்டிங்க ஜீவ்... இப்ப ஜோதிகா கூட கை நளுவிப் போயிட்டாரே... (அப்ப கங்கூலியும் பாட்ஷா பார்த்தாரோ..)

M.G.ரவிக்குமார்™..., said...

என்னது காந்தியைக் கொன்னுட்டாங்களா?......

எஸ்.கே said...

அழகான அலசல்!

எப்பூடி.. said...

ஈரோடு தங்கதுரை

//அருமையான விமர்சனம். !
அதுசரி ஏன் இவ்வளவு லேட்டா ?//

நன்றி, ப்ளாக் எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் இன்னைக்குத்தான் பாஷா (சண் டிவில) பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது, அதுவும் முழுவதும் பார்க்க கூடியளவுக்கு நேரமும் அமைந்தது.அதுதவிர எந்திரன் வெற்றிக்களிப்புவேறு :-) அப்புறம் பாஷா 2 பற்றிய பேச்சுக்கள். அதனால்தான் :-)

...................................

ம.தி.சுதா


//கலக்கீட்டிங்க ஜீவ்... இப்ப ஜோதிகா கூட கை நளுவிப் போயிட்டாரே... (அப்ப கங்கூலியும் பாட்ஷா பார்த்தாரோ..)//

கங்குலி பாஷாவை பாத்தாரோ இல்லையோ நக்மாவை சரியா பாக்கல என்கிறதுதான் உண்மை :-)

....................................

M.G.ரவிக்குமார்™...,

//என்னது காந்தியைக் கொன்னுட்டாங்களா?.....//

அமாங்க, உங்க தாய்மாமன் கோட்சே சுட்டிட்டதா பேசிக்கிறாங்க.

......................................

எஸ்.கே

//அழகான அலசல்!//

நன்றி

எல் கே said...

நேத்து சன் டிவி பார்த்த விளைவா

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீ கலக்கு வாத்த்யாரே..

சிங்கக்குட்டி said...

பாட்சா படமும் சரி அதை பற்றிய செய்தியும் சரி எப்போது படித்தாலும் சலிக்காது, அதன் வெற்றி விழாவில் ரஜினி பேசியது கூட.

பகிர்வுக்கு நன்றி !.

Chitra said...

மொத்தத்தில் பாட்ஷா - இன்றைக்கல்ல என்றைக்கும் தமிழ் சினிமாவின் உச்ச கமர்சியல் மாஸ் மசாலா.


.... Super! :-)

Kiruthigan said...

அடுத்து 16 வயதினிலே விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறோம்..

ராஜாதியேட்டர்ல கலக்கிறியளாம் கேள்விப்பட்டம்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

கிரி said...

பாஷா படம் பார்த்து தான் நான் ரஜினி ரசிகன் ஆனேன் :-) அதிக முறை பார்த்த படமும் இது தான்.

ரணகளமான படம். நான் இதை விமர்சனம் எழுதணும் என்று ரொம்ப நாளா நினைத்துட்டு இருக்கிறேன்..சரியான நேரம் வரும் போது எழுதுவேன்.

சுரேஷ் கிருஷ்ணா "ஆஹா" என்ற அற்புதமான படத்தையும் தந்து இருக்கிறார். எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.. எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும்.

Unknown said...

அப்பாடி

ம.தி.சுதா said...

என் தளத்தையும் ஒரு பொருட்டாகக் கருதி அதற்கு உங்ங விட்டில் இடம் கொடத்த என் சகோதரனுக்கு எப்படி நன்றி சொல்வேன்.... என் ஆரம்பப் பதிவில் இருந்தே ஒடோடி வந்து செல்லும் உனக்க எப்படி நன்றி சொல்வேன் சகோதரா...

priyamudanprabu said...

அதேபோல கஜேந்திராவும் 'பரட்டை என்கிற அழகுசுந்தரமும்' ரீமேக் படங்கள்
///////

BATSHA ALSO REMAKE FROM HINDI AMITHAPACHAN FLIM
RAJINI ACT AS HIS BROTHER IN THAT FLIM

r.v.saravanan said...

லேட்டா கொடுத்தாலும் நல்லா இருக்கு ஜீவதர்ஷன் விமர்சனம்

ROBOT said...

அருமையான விமர்சனம். பாஷா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு மெகா ஹிட் திரைப்படம். பாஷா 2 சுரேஷ் கிருஷ்ணா கூட நல்ல தேர்வு தான் . ரஜினியை ஒரு ரசிகனாக ரசித்து திரைக்கதை அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே .....
அவரிடம் எனக்கு ஒரே வருத்தம் அதே பாஷா கதையை பரத்துக்கு கொடுத்து கெடுத்தது தான் . அந்த நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

dondu(#11168674346665545885) said...

பாட்சாவின் மூலப்படமான ஹம்-மை மறந்து விட்டீர்களே? அதில் அமிதாப் பிச்சு உதறியிருப்பாரே?
ஹிந்தி வெர்ஷனில் ரஜனி தம்பியாக போலீஸ் அதிகாரி வேஷத்தில் வருகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எப்பூடி.. said...

LK

//நேத்து சன் டிவி பார்த்த விளைவா//

ஆமாங்க

.................................

வெறும்பய

//நீ கலக்கு வாத்த்யாரே..//

ரைட்டு

..................................

சிங்கக்குட்டி

//பாட்சா படமும் சரி அதை பற்றிய செய்தியும் சரி எப்போது படித்தாலும் சலிக்காது, அதன் வெற்றி விழாவில் ரஜினி பேசியது கூட.//

100 % உண்மை

...............................

Chitra


//.... Super! :-)//

thanks

..............................

Cool Boy கிருத்திகன்.

//அடுத்து 16 வயதினிலே விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறோம்..//

எனக்கு உங்க கிண்டல் புரியுதா ஆனா எனக்கு நேரம் கிடைக்கும்போது சண் டிவியில போட்டா நிச்சயம் எழுதுவேன்.

//ராஜாதியேட்டர்ல கலக்கிறியளாம் கேள்விப்பட்டம்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..//

எங்க ஏரியாவில நாம கலக்காம யாரு கலக்கிறது :-)


.................................

கிரி


//ரணகளமான படம். நான் இதை விமர்சனம் எழுதணும் என்று ரொம்ப நாளா நினைத்துட்டு இருக்கிறேன்..சரியான நேரம் வரும் போது எழுதுவேன்.//

உங்க விமர்சனத்துக்கு வெய்ட்டிங்

//சுரேஷ் கிருஷ்ணா "ஆஹா" என்ற அற்புதமான படத்தையும் தந்து இருக்கிறார். எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.. எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும்.//

ஆஹா எனக்கும் பிடித்தபடம், 'முதல் முதலில் பார்த்தேன்' ,'கோழிவந்ததா' பாடல்களும் அவை படமாக்கப்பட்டவிதமும் அருமை.

எப்பூடி.. said...

வாழ்க்கை வாழ்வதற்கே

//அப்பாடி//

சரி.

.......................

ம.தி.சுதா

//என் தளத்தையும் ஒரு பொருட்டாகக் கருதி அதற்கு உங்ங விட்டில் இடம் கொடத்த என் சகோதரனுக்கு எப்படி நன்றி சொல்வேன்.... என் ஆரம்பப் பதிவில் இருந்தே ஒடோடி வந்து செல்லும் உனக்க எப்படி நன்றி சொல்வேன் சகோதரா...//

இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி, நானென்ன என் சொத்தையா பிரிச்சு கொடுத்தேன் ? :-)

...............................

பிரியமுடன் பிரபு

//BATSHA ALSO REMAKE FROM HINDI AMITHAPACHAN FLIM RAJINI ACT AS HIS BROTHER IN THAT FLIM//

கஜேந்திராவும், பரட்டை என்கிற அழகுசுந்தரமும் அப்படியே மாற்றியமைக்கப்பட்ட படங்கள், அவை ரீமேக்படங்கள். ஆனால் ஹம் திரைப்படத்தின் சாயலில் வெளியானதிரைப்படம்தான் பாட்ஷா, அது ரீமேக் அல்ல. ஹும்மைவிட பாட்ஷா 10 மடங்கு சிறந்த திரைப்படம்.

.............................

r.v.saravanan

//லேட்டா கொடுத்தாலும் நல்லா இருக்கு ஜீவதர்ஷன் விமர்சனம்//

நன்றி சரவணன்

...............................

ROBOT

//அருமையான விமர்சனம். பாஷா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு மெகா ஹிட் திரைப்படம். பாஷா 2 சுரேஷ் கிருஷ்ணா கூட நல்ல தேர்வு தான் . ரஜினியை ஒரு ரசிகனாக ரசித்து திரைக்கதை அமைப்பதில் அவருக்கு நிகர் அவரே .....//

நிச்சயமாக.


//அவரிடம் எனக்கு ஒரே வருத்தம் அதே பாஷா கதையை பரத்துக்கு கொடுத்து கெடுத்தது தான் . அந்த நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.//

நீங்கள் கூறுவது நூத்துக்கு நூறு சரி.

................................

டோண்டு ராகவன்

//பாட்சாவின் மூலப்படமான ஹம்-மை மறந்து விட்டீர்களே? அதில் அமிதாப் பிச்சு உதறியிருப்பாரே?//

ஹும்மில் அமிதாப் பிச்சு உதறியதைவிட பாட்ஷாவில் ரஜினி இன்னும் சிறப்பாக பிச்சு உதறியிருப்பார், சுரேஷ் கிருஷ்ணா கூட பிச்சு உதறியிருப்பார்.

Prasanna said...

ரகுவரன மிஞ்சறதுக்கு ஆள் இல்லையா...!!! Ofcourse he is a legend. I accept. But, Boss, என்திரன் -ல தலைவர (CHITTI V2.0) பாத்ததுக்கு அப்பறமுமா இப்டி? Baasha & Antony meeting scene before India Gate... How it could be if Baasha and ChittiV2.0 meet???!!!

R.Gopi said...

அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு பாலசந்தர் அவர்களின் உதவி இயக்குநர் வசந்த் அவர்களிடமிருந்து சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வந்து, அவர் இயக்கி, மெகா ஹிட் ஆனதே, பாட்சா படத்தை இயக்கும் பொறுப்பை சுரேஷுக்கு பெற்று தந்தது...

எப்பூடி.. said...

Sultan

//ரகுவரன மிஞ்சறதுக்கு ஆள் இல்லையா...!!! Ofcourse he is a legend. I accept. But, Boss, என்திரன் -ல தலைவர (CHITTI V2.0) பாத்ததுக்கு அப்பறமுமா இப்டி? Baasha & Antony meeting scene before India Gate... How it could be if Baasha and ChittiV2.0 meet???!!!//

இதுகூட நல்லாத்தான் இருக்கு, எனக்கு தோணாம போச்சு, இருந்தாலும் ரகுவரனுக்கு ஓ போடுவதில் தவறில்லைதானே?

.............................

R.Gopi

//அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு பாலசந்தர் அவர்களின் உதவி இயக்குநர் வசந்த் அவர்களிடமிருந்து சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வந்து, அவர் இயக்கி, மெகா ஹிட் ஆனதே, பாட்சா படத்தை இயக்கும் பொறுப்பை சுரேஷுக்கு பெற்று தந்தது...//

நானும் அண்மையில்தான் கேள்விப்பட்டேன், தகவலுக்கு நன்றி, அது வசந்த் தப்பவிட்ட தருணம்.

ilayan said...

PINNANIremothirug@gmail.com said...

�� தலைவா என்னைக்குமே நீங்க தான் பெஸ்ட் ,

இந்த படத்தில் வேற யாரும் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு இரைந்திருக்காது தலைவா .....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)