Sunday, May 30, 2010

பேரரசுவின் ரசிகர்கள்......

இந்தவார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சண் தொலைக்காட்சியின் மாலை திரைப்படங்களாக இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'தருமபுரி', மற்றும் 'பழனி' திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமை தருமபுரி திரைப்படம் ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் கடந்த பின்னரே வீட்டிற்கு வந்தேன்,எனக்கு என்ன படம் ஒளிபரப்பப் படுகின்றதென்பது தெரியாது,சண் டிவியில் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.வந்ததும் அவசர அவசரமாக பிரெஞ்சு ஓபன் டெனிசை பார்ப்பதற்காக ரிமோட்டை எடுத்து மாத்தலாமென்று நினைத்தேன்.அப்போது டிவி பார்த்துக்கொண்டிருந்த அக்காவின் சிறிய பிள்ளைகளும் மெகாசீரியல் பார்த்து கண்ணீர்விடும் ஒரு பக்கத்துவீட்டு அம்மாவும் நல்லபடம் போகுது சானலை மாத்தாதீங்கோ.... என்றார்கள்.சரி என்னடா படமென்று பார்த்தால் விஜயகாந்தும் m .s பாஸ்கரும் எதோ காமடி பண்ணும் காட்சியுடன் மீண்டும் படம் ஆரம்பமானது.அவ்வப்போது டெனிசை பார்த்தாலும் படத்தை அவர்களுக்காக மாற்றி மாற்றி காண்பித்துக்கொண்டிருந்தேன்.சிறிது நேரத்தின் பின்னர் நடாலின் match ஐயும் மறந்து படத்துடன் நானும் ஐக்கியமாகிவிட்டேன்.டென்சனாகாதீங்க! நான் சொன்னது அந்தளவுக்கு பேரரசுவின் காமடி இயக்கத்தை பார்த்து என்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தேன் என்பதையே. கமன்ட் அடிப்பதற்கு கூட அருகில் யாருமில்லை. என்னைத்தவிர கூட இருந்து படம்பார்ப்பவர்கள் (இன்னும் ஒரு நடுத்தர வயதினரும் இணைந்திருந்தார், சமையல்கட்டிலிருந்து அம்மாவேறு அப்பப்போ வந்து பார்த்துக்கொண்டிருந்தார்)அனைவரும் படத்தை ரசித்தனர், அதுவும் விறுவிறுப்பாக.அனைவரும் 50 ஐத் தாண்டியவர்களாகவும் மெகாசீரியல் ரசிகைகளாகவும் குழந்தைகளாகவும் இருந்தாலும் அவர்கள் தர்மபுரியை ரசித்தபோதுதான் பேரரசுவின் குப்பைப்படங்களென நாம் விமர்சிக்கும் படங்கள் எப்படி முதலுக்கு மோசமில்லாமல் ஓடுகின்றன என்பது புரிந்தது.சனிக்கிழமை நடாலின் ஆட்டத்தை தவறவிட்ட நான் ஞாயிற்றுக்கிழமை பெடரரின் ஆட்டத்தை தவறவிடவில்லை, அப்படி என்றால் பழனி படத்தை அவர்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா? இல்லை தருமபுரி போலவே பழனியையும் ரசித்தார்கள், ஆனால் என்ன படம் முடிந்த பின்னர்தான் பெடரரின் போட்டி தொடங்கியது. அந்தவகையில் பெடரரின் நான்காம்சுற்று ஆட்டத்தை என்னால் ரசிக்கமுடிந்தது. என்னதான் தமிழ்சினிமா வளர்ந்தாலும் ரசிகர்களின் ரசனை மாறினாலும் பேரரசுவின்தரத்து படங்களும் ஒருதரப்பு மக்களால் ரசிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.குறிப்பாக மெகாசீரியல்கள் இருக்கும் வரை இதுதொடரும், ஏன் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

சீமானுக்கு ஒரு கடிதம்.....சீமான் அவர்களே.....

இன்றைய ஈழத்தமிழர்களின் இந்தியப் பிரதிநியாக உங்களை அதிகமான இலங்கை தமிழர்கள் பார்க்கிறார்கள்,உணர்கிறார்கள். வன்னி இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர்க்கு ஆதரவாக குரல்கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், இதற்காக நீங்கள் சிறையும் சென்றவர். உங்களது ஈழத்தமிழர் அக்கறையின் உண்மைத்தன்மையை நான் உணர்கிறேன், அதேவளை உங்களது செயற்பாடுகளில் எனக்கு வரவர நம்பிக்கை குறைவடைந்துகொண்டே வருகிறது. சில சமயங்களில் உங்களது செயற்பாடுகள் மேலோட்டமானவை போலத்தெரிகிறது.

இலங்கையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு நடிகர்கள் யாரும் வரக்கூடாதென்று நீங்கள் கூறுவதன் நியாயம் எனக்கு புரிகிறது. சர்வதேசத்திற்கு இந்திய கலைஞர்களின் நிலைப்பாட்டை உணர்த்துவதற்காக இலங்கைக்கு நடிகர்களை செல்லவேண்டாம் என்ற கோரிக்கையை வைத்த நீங்கள்போராட்டம் நடாத்தி (மிரட்டியும்) சிலரது வருகையை நிறுத்தியது நிச்சயம் அவசியம்தானா? அவர்கள் ஒரு உணர்வும் இல்லாமல் மிரட்டலுக்காக மட்டும் இலங்கைக்கு வராமல் இருப்பதுமொன்று இலங்கையில் விழாவில் கலந்துகொள்வதுமொன்று.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக விழாவை புறக்கணிக்குமாறு நீங்கள் கூறுகின்றீர்கள், இன்று சர்வதேசம் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு தயாராக இருக்கின்றபோதும் மறைமுகமாக அதனை எதிர்க்கும் இந்திய அரசை உங்களால் என்ன செய்யமுடிந்தது? சரி இந்திய அரசு எதிர்க்கவில்லையென்றே வைத்துக்கொள்வோம் இந்தியஅரசு விசாரணையை துரிதப்படுத்தச்சொல்லியாவது அழுத்தம்கொடுக்கலாமே. இதற்காக இந்தியஅரசை ஆட்சேபித்து , அதாவது சோனியாவையோ மன்மோகனையோ இந்த விடயத்தில் அக்கறையெடுக்குமாறு வேண்டி போராட்டம் செய்யலாமே? அமிதாப்பச்சனுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை விட சோனியாவையோ மன்மோகனையோ எதிர்த்து போராட்டம் செய்தால் மிகமிக கூடுதல் பலன் கிடைக்கும், அப்படி உங்களால் செய்யமுடியுமா சீமான் அவர்களே?1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழாராட்சி மாநாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் 14 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோனது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கின்றேன். ஏறத்தாழ ஒருவருடத்திற்குமுன்னர் வன்னியில் எத்தனை உயிர்கள் யுத்தத்தால் இழக்கப்பட்டன என்பதும் தங்களுக்கு தெரியாததல்ல. இந்தநிலையில் இன்று திரைப்படவிழா இலங்கையில் நடந்தாலே சர்வதேசம்  ஏமாந்துவிடும் என்று நம்பும் நீங்கள் உலக தமிழர்களின் சார்பாக தமிழாராட்சி மாநாடு கொண்டாடினால் இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் கவனம் குறைவடைந்துவிடும் என்பதை அறியவில்லையா? இதற்கெதிராக நீங்கள் ஏன் இன்னமும் கலைஞருக்கெதிராக போராட்டம் ஆரம்பிக்கவில்லை? உடனடியாக இந்த மாநாட்டை எதற்காக நிறுத்த முயற்ச்சிக்கவில்லை?

நீங்கள் திரைப்படவிழாவுக்கு செல்லவேண்டாம் என்று நடிகர்கள் வீட்டின் முன்னால் போராட்டம் செய்வதைவிட சோனியா,மன்மோகன், கருணாநிதி வீடுகளுக்கு முன் நடத்த வேண்டிய போராட்டங்கள்தான் அவசரமானவையும் அவசியமானவையும். இதை விடுத்து அமிதாப்வீட்டின் முன்பும் சல்மான்கான் வீட்டின் முன்பும் போராட்டம் நடாத்துவது பல்பிடுங்கிய பாம்பை கையில்பிடித்து வித்தைகாட்டுவது போன்றது.

இதற்கு உங்களின் பதில் என்ன?

Friday, May 28, 2010

என் ரசனையில் சிங்கம்தூத்துக்குடிக்கு பக்கத்திலிருக்கும் நல்லூரில் சப்இன்ஸ்பெக்டராக இருக்கும் துரைசிங்கம், அப்பாவின் ஆசைக்காக சொந்த ஊரிலேயே போலீசில் வேலை செய்கிறார். சென்னையையே ஆட்டிப்படைக்கும் மயில்வாகனமும் துரைசிங்கமும் ஒரு பிரச்சினையில் முண்டிக்கொள்ள இருவருக்குமிடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் சிங்கம்.

துரைசிங்கம் என்னும் சிங்கமாக சூர்யா.வழக்கமான மசாலாப்பட பில்டப் ஓபனிங் சீனுடன் அறிமுகமாகிறார்.ஜீப்பின் கதவு,கூரைகளைப் பிய்த்துக் கொண்டு அடியாட்கள் காற்றிலே டிராவல்ஆக நாயகன் அறிமுகம்.பின்னர் புட்பால் மச்சில் கோல் போட்டவுடன் ஓபனிங் சாங்.அனுஷ்காவின் காணாமல்போன சங்கிலியை "மூளையைக் கசக்கி"கண்டு பிடிக்கிறார்.பிரகாஷ்ராஜுடன் சவால்விடுகிறார்.நடிப்பின் பரிமாணங்களைக் காட்ட பெரிதாக வாய்ப்பில்லாத கதாபாத்திரம். காக்கி சட்டையில் கம்பீரத்தோற்றம்.ஆனாலும் என் பார்வையில் மசாலாப் பட போலிசுக்கு சூர்யா ஒட்டவில்லை.தங்கபதக்கம்,காக்ககாக்க,வேட்டையாடு விளையாடு போலிசுக்கு சூர்யா ஓகே.ஆனால் மூன்றுமுகம்,சாமி போலிசுக்கு பொருந்தவில்லை என்பது என்கருத்து.சிங்கம் இரண்டாம்ரகம்.


அனுஷ்கா மற்றைய படங்கள் போலன்றி அதிக காட்சிகளில் வந்திருக்கிறார்.டிபிகல் ஹரி படநாயகி.ஹீரோவுக்கு பக்க பலமாகவிருக்கும் துணிச்சலான பெண்.பாடல்களில் திறமை 'காட்டி' இருக்கிறார்.சூர்யா சிங்கம், இவர் புலி , காரணம் வெண்திரையில்.


பிரகாஷ்ராஜ் சென்னையே கலக்கும் டீசன்ட் ரௌடி மயில்வாகனம்.இவருக்கு பில்டப் பண்ணித்தான் படமே ஆரம்பம்.படம் முழுதும் பில்டப் மட்டுமே பண்ணுகிறார்கள்.இவரின் காரக்டரில் மட்டும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.சூர்யாவிடம் சவால் மட்டும் விட்டுக்கொண்டிருக்கிறார்.உருப்படியாக எதுவும் செய்யவில்லை.விவேக் ஒருசில காட்சிகளில் சிரிப்பு வெடி,பலகாட்சிகளில் கடி . நாசர்,ராதாரவி, விஜயகுமார்,நிழல்கள்ரவி,மனோரமா எல்லோரும் சில காட்சிகளில் வந்து செல்கிறார்கள். போஸ்வெங்கட் நேர்மையான போலிஸ் அதிகாரியாக வந்து ஹீரோ பக்கம் யாரவது கொல்லப்படவேண்டும் என்ற ஹரிபட நியதிக்கமைய பிரகாஷ்ராஜால் கொல்லப்படுகிறார்.

ஒளிப்பதிவு பிரியன், அனுஷ்காவை சூர்யாவுடன் பாலன்ஸ் செய்வதிலேயே அதிகம் சிரத்தைஎடுத்திருக்கிறார்.கிராமத்துகாட்சிகளில் மண்வாசனை.சென்னையில் அதிகம் மூவிங் காட்சிகள்.படத்தை சொதப்பாத ஒளிப்பதிவு.வி.ரி விஜயனின் கோர்ப்பில் காட்சிகளில் தொடர்ச்சி இல்லாதது போன்ற உணர்வு.காமடி,குடும்பம்,வில்லன் என்று தனிதனி எபிசோட்கள் பார்ப்பதுபோல இருந்தது. கடைசி மூன்று படங்களிலும் கை கொடுத்த ஹரிஸ் இல்லாத வெறுமை சூர்யாவுக்கு இந்தப் படத்தில் தெரிகிறது.பாடல்கள் சுமார்.படமாக்கிய விதத்திலும் அனுஷ்கா தவிர ரசிக்கும்படி
எதுவுமில்லை.பின்னணிஇசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை,விவேக்கின் பில்டப் சாங் தவிர்த்து.கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஹரி.டெம்ப்ளேட் கதை,திரைக்கதை.மொக்கை செண்டிமெண்ட்கள் உட்பட. ஆங்காங்கே அக்மார்க் ஹரி பன்ச்வசனங்கள்.வேகமான திரைக்கதைதான் ஹரியின் பலம்.முதல் பாதி ஓரளவு வேகமாக நகர்ந்தாலும் இரண்டாம்பாதி பல இடங்களில் நொண்டிஅடிக்கிறது.கதை தமிழ்நாடு தாண்டி நகரும்போது வேண்டாமென்று போகிறது.எங்கே சிறிது விட்டாலும் 'சாமி' பாதிப்பு வந்து விடுமோ என்று திரைக்கதை அமைக்கப்பட்டாலும் சுத்திசுத்தி சாமிக்கே வருகிறது.நிறைய இடங்களில் 'சாமி' பாதிப்பு. ஏகப்பட்ட லாஜிக்மீறல்கள்,மொக்கை செண்டிமெண்ட்கள்,திருப்பங்கள் என்ற பெயரில் சிறுபிள்ளைத்தனமான முன்னரே யூகிக்கக்கூடிய காட்சிகள்.ஹரி அவுட் ஒப் போர்ம்.

என் பார்வையில் சிங்கம் வேட்டையாடப்படப் போகிறது.

பார்த்தவர்கள் கமண்டியது, இடைவேளையின் போது சூர்யாவின் ரசிக நண்பன் சொன்னார் 'விஜய் படங்கள் அளவுக்கு மோசமா போகலை.ஓரளவு ஓகே '

பின்புற இருக்கை நண்பர் சொன்னார் 'எப்படித்தான் சண் பிக்சர்ஸ் அசராம இப்பிடிப் படங்களா பார்த்து வாங்கிறாங்க'.

Tuesday, May 25, 2010

திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் vs விஜய்

நண்பர்களுக்கு வணக்கம் , ஐம்பது நாட்களுக்கு பின்னர் மீண்டும் பதிவுலகத்தில்இணைகின்றேன். சில பல காரணங்களுக்காக (ரொம்ப சீடியசா ஒன்றுமில்லை ) கடந்த ஐம்பது நாட்களாக எழுதவில்லை.இன்றிலிருந்து மீண்டும் ஏதாவது கிறுக்கலாமென்று நினைக்கிறேன். மின்னஞ்சல் மூலமாகவும் பின்னூட்டல்மூலமாகவும் 'எப்பூடியை' விசாரித்த நண்பர்களுக்கு நன்றிகளும் உங்களுக்கானபதிலை தராததற்காக மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.

முதலாவது மேட்டரே தளபதியை பற்றித்தான் எழுதணும் என்கிறபோது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு, சரி இந்த வாட்டி விஜய் பக்கம் இருக்கிற நியாயத்தையும் கொஞ்சம் பார்க்கணும் என்கிற முடிவோட எழுத ஆரம்பிக்கிறேன்,ஆனால் கடைசியில் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாக மாறினால் நான் பொறுப்பில்லை.விஜய்க்கு ரெட்காட் போடுமளவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வந்துள்ள நிலையில் சங்கத்தின் தரப்பில் சிறிது நியாயம்கூட இருப்பதாக எனக்கு படவில்லை. விஜயின் இறுதி ஐந்து படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்திருப்பதால் நஷ்டஈடு கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அந்த ஐந்து படங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்திருந்தால் (இது முழுக்க முழுக்க கற்பனையே ) வந்த லாபத்தில் ஒரு பகுதியை விஜய்க்கு கொடுத்திருப்பார்களா? முதல்ப்படம் சரியாக போகாவிட்டால் எதற்காக இரண்டாவது படத்தை பெரியதொகை கொடுத்து வாங்கினார்கள்? சரி இரண்டாவதோடாவது நிறுத்தியிருக்கலாமே எதற்காக மூன்று, நான்கு,ஐந்து என்று தொடர்ந்தும் விஜயின் படங்களுக்கு பணத்தை போட்டார்கள்? ஏதாவதொருபடத்தில் போட்டதை பிடிக்கலாமென்றுதானே ? அவர்களுக்கு தாம் நொண்டிக்குதிரைக்குதான் பணத்தை கட்டினார்கள் என்று இப்போதுதான் தெரிந்ததா? அப்படி இருந்தாலும் தவறு குதிரைமீதா? பணத்தை கட்டியவன்மீதா?திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரே: கொஞ்சம் சிந்தித்து பாருங்க, "வேட்டைக்காரன் மாபெரும் வெற்றி வேணுமிண்ணா வினயோகஸ்தர்களை கேட்டுப்பாருங்க" என்று அழாக்குறையா சண் பிச்சர்சில ஒரு அண்ணாத்தை சொன்னாரே, அவரு மனசு எம்புட்டு பாடுபடும் என்பதை சிந்தித்துபார்த்தீர்களா? விஜய் படங்கள் வெற்றியடயாவிட்டாலும் வசூலுக்கு குறைச்சலில்லை என்று ஒப்புக்கு சப்பாணி பாடும் விஜய் ஆதரவு நண்பர்களை பற்றி ஓரளவேனும் சிந்தித்தீர்களா? பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பதுபோல 'ஆதி'யிலிருந்து 'சுறா'வரைக்கும் விஜயின் ஆறு தோல்விப்படங்களையும் மாபெரும் வெற்றிப்படங்கள் என்றுகூறி தன்னையும் சிறுபிள்ளைகளையும் ஏமாற்றி வந்தாரே எஸ்.எ.சி, அவரைப்பற்றியாவது சிந்தித்துப்பார்த்தீர்களா? இப்படி எதையுமே சிந்திக்காமல் தயவுசெய்து தன்னிச்சையாக முடிவெடுக்காதீர்கள்.விஜய் அவர்களே: நீங்கதான் ஒன்றுவிடாமல் ரஜினியை கொப்பிஅடிப்பவர் ஆயிற்றே, எதற்காக நஷ்டத்தை கொடுப்பதில் மட்டும் ரஜினியை கொப்பிஅடிக்காமல் உள்ளீர்கள் ? நஷ்டத்தை குடுத்தா அப்பா கோவிச்சுக்குவாரா? சரி அதவிடுங்க, இப்பிடி ஐந்து படம் தொடர்ந்து தோற்றதற்கே இன்றைய உங்களது ரசிகர்கள் நொந்து போயிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்களது வரலாறு தெரியாது என்றுதான் பொருள்.'பிரன்ஸ்' வெற்றியில் இருந்து 'திருமலை' வெற்றிவரைக்கும் இடைப்பட்ட இரண்டு வருடத்தில் பத்ரி,ஷாஜகான் , தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதியகீதை என்று ஏழு படங்கள் தங்கள் காலைவாரிய வரலாற்றை கூறி இப்பொது ஐந்து படங்கள்தானே காலைவாரின என்று ரசிகர்களை தைரியப்படுத்துங்கள். ஒருவேளை சங்கம் ரெட்காட் போட்டுவிட்டால் நடிக்காமல்மட்டும் விட்டுவிடாதீர்கள், திரையரங்கில்லை என்றாலென்ன திருட்டு vcd யில் உங்களது காவியங்களை பார்த்து ரூம்போட்டு சிரிக்கும் கோடானகோடி ரசிகர்களும், உங்களை காமடிபீசாக்கி தங்களது kits ஐ எகிரவைக்கும் எம்மைப்போன்ற பதிவர்களையும் ஏமாற்றிவிடாதீர்கள்.

விஜய் ரசிகர்களுக்கு: "உன்னையெல்லாம் எழுதென்று யார் வெத்திலை வச்சு கூப்பிட்டது" , "இதுக்கு நீ எழுதாமலே இருந்திருக்கலாம்" போன்ற வசனங்கள் வரவேற்கப்படுகிறது, கெட்டவர்த்தைகளும் வரவேற்க்கப்படுக்ன்றன , ஆனால் பிரசுரிக்கப்பட மாட்டாது. எதுதிட்டுவதாயிருந்தாலும் நேரடியாக திட்டலாம், குடும்பத்தினருக்கு வரும் திட்டுக்கள் அனைத்தும் உங்களது குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக மீண்டும் வழங்கப்படும்.

வாசகர்களுக்கு : இனி ஒரு மாதத்திக்கு விஜய்பற்றிய எந்த செய்திகளும் பிரசுரிக்கப்படமாட்டாது.