Wednesday, March 31, 2010

கூகுளில் இப்படி எல்லாம் ......


இன்று கூகுளை தேடற்பொறியை பயன்டுத்தமல் யாருமே இல்லை..தேடல் உலகில் superstar என்றே சொல்லலாம் .கூகுளை நாம் நாடாத நாளே இல்லை .இவர் அவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் ,ஏதோ  ஒரு காரணத்துகாக ஒவ்வொரு நாளும் தரிசிக்காமல் இருப்பதில்லை .நாம் நாளாந்த வாழ்வில் முக்கியமான பங்கு கூகுளுக்கு தான். ஆனால் சில கேள்விகள் ....
 [1] இவ்வாறு நாம் பயன்படுத்தும் கூகுளை முழுமையாக பயன்படுத்துகின்றோமா ? 
[2] கூகுளில் தேடுதலை மேம்படுத்த எத்தகைய சேவைகள் உள்ளன ? 
[3] அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் ? 

இவ்வாறன கேள்விகளுக்கு  கிழே உள்ள விடியோக்களில் விடையைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சில சேவைகளை பற்றிய விடியோக்களை   இணைத்து  உள்ளேன்.தெரிந்தவர்கள் விட்டுவிடுங்கள் தெரியாதவர்களுக்காக ..
எல்லாமே சிறிய  விடியோக்கள் (30s) தான்  .நான் சொன்னால் நம்பமாட்டிங்க (?!) கூகுளில் பணிபுரிபவர்களே சொன்னால் ....

[1] Wonder Wheel
[2] Locking Google Safe Search[3] Search Options Panel[4] Personalized Suggestions
[5] International Results[6] Maps in Search Results[7] Spelling Improvements[8] Google Squared
[9] Search Freshness
இவை எல்லாம் இவ்வளவு காலமாக நாம் பயன்படுத்திவந்த கூகுளில் தான் காணப்பட்டது. விடியோக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் English subtitle (!) காணப்படுகின்றது  ;-)

Monday, March 29, 2010

நுரையீரல்ப்பழம் T.R இற்கு நன்றிகள்.தமிழ் மக்களின் இதயக்கனி, அடடடா அது எம்.ஜி.ஆர் இல்ல , சரி தமிழ் மக்களின் நுரையீரல்ப்பழம் T.ராஜேந்தர் அய்யா அவர்களுக்கு நன்றிகள். எதற்கென்றெல்லாம் ஜோசிக்க தேவையில்லை, அவர் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமையை பெற்றுத்தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவே இந்த நன்றி. உங்களை போல மகான்கள் இல்லாவிட்டால் ஈழத்தவரின் நிலை அதோகதிதான்.

ஆனாலும் நீங்கள் எதற்காக இந்த திடீர் போராட்டத்தை நடத்தினீர்கள் என்று பலருக்கும் புரியவில்லை , ஏன் உங்களுக்கு கூட புரிந்திருக்காது , அதுதான் சார் நீங்க. இது போராட்டமா அல்லது முதல்நாள் அடித்த பீராட்டமா என்ற சந்தேகம் தேவையில்லை, இது நிச்சயம் போராட்டம்தான். அதை மாநில அரசிடம் ஜாடை மாடையாக செல்லமாக கோபப்பட்டமாதிரி கூறிவிட்டு உங்களையே யார் என்று தெரியாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தீர்களே நீங்கள் ஒரு லெஜன்ட் சார்.

ஆனால் சிலர் அரட்டை அரங்கம் போரடித்ததால் நீங்கள் இவ்வாறு வீதியில்இறங்கி பினாத்துவதாக கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இது உங்களது உலக அரசியலின் கன்னிப்பயணம் என்பது பலருக்கும் தெரியாது, அதாவது அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்கான முதல் முயற்சி என்று பொருள். 2011 இல் முதல்வராவீர்கள் என எண் ஜோதிடம் கூறியதால் உங்களது பெயரை விஜய T. ராஜேந்தர் என மாற்றிய நீங்கள் எங்களுக்காக ஈழத்தின் பெயரையும் கொஞ்சம் எண் ஜோதிட முறைப்படி மாத்திக்கொடுங்களேன் .


ரஜினி, விஜயகாந்த் ,ஜெயலலிதா போன்ற தமிழக (மாநில ) பிரபலங்களை விடுத்து இப்பொது மத்திய அரசை குறிவைத்த உங்களது வளர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது, எதற்கு மற்றவர்களிடம் கெஞ்சவேண்டும்? நீங்கள் 2011 இல் முதல்வராகும்போது எல்லா உரிமைகளையும் வாங்கிக்கொடுங்க, நாங்கள் உங்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். அப்புறம் உங்களை சிலர் கரடி என்கிறார்கள் , இது மிகவும் கேவலமான செயல் , ஆனால் இந்த நிலை சில காலங்களுக்குத்தான், நாளை கரடிகள் மான நஷ்ட வழக்கு போடும்போது உங்களை கரடி என அழைத்தவகள் தலைமறைவாகுவார்கள் என்பதுமட்டும் உறுதி

ஈழ மக்களின் துயர்துடைக்க வந்த அண்ணன் T.R அவர்களின் சின்னமான.......... அடடா நீங்கதான் இலங்கையில தேர்தல்ல போட்டியிடவே இல்லையே , இப்ப இந்தியாவில கூட தேர்தல் நேரமில்லை , அப்புறம் எதுக்கு இந்த திடீர் போராட்டம்?

எதாயிருந்தாலும் தலைவன் ஒரு தூர நோக்கமிலாமல் செய்யமாட்டான் என நம்மை நாமே தேற்ற வேண்டியதுதான்.

Saturday, March 27, 2010

பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்

இது நடந்தால் எப்படி இருக்குமென நாம் நினைக்கும் ஒரு விடயம் நம்மைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்.தனுஷுக்கு அது நடந்துள்ளது.தனுஷை மனதில் வைத்து ஒரு ஸ்க்ரிப்டை உருவாக்கிய இயக்குனர் இமயம் அதை தனுஷிடம் கூறியுள்ளாராம்.ஆனால் தனுஷ் அதை வாசிக்கக்கூட விரும்பவில்லையாம்.ஒப்பந்தமாகியுள்ள படங்கள் முடிந்தவுடன் கால்ஷீட் தருவதாகக் கூறியுள்ளாராம்.ஸ்டுடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்துக்குக் கூட்டிவந்த பாரதிராஜா தலைமுறை இடைவெளி காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளார்.இதற்குக் காரணம் முன்னணி நாயகர்கள் யாரும் அண்மைக்காலத்தில் இவருடன் கை கோர்க்கவில்லை.வளர்ந்துவரும் முன்னணி நாயகர்களுள் ஒருவரான தனுஷ் இம்முறை கை கோர்ப்பது பலமாக இருக்கும்.


பாரதிராஜாவின் இறுதிப்படமான 'பொம்மலாட்டம்' வர்த்தகரீதியாக பெரிதாக வெற்றியடையாவிடினும் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.ஆனாலும் பாரதிராஜாவின் முத்திரையான கிராமத்து வாசனை அவரது அண்மைக் காலப் படங்களில் மிஸ்ஸிங்.அறிமுக காலத்தில் இலக்கணங்களை உடைத்து வெற்றி நாயகனாக வலம் வந்த தனுஷுக்கு விழுந்த தொடர் அடிகளின் பின் 'திருவிளையாடல் ஆரம்பம்' படமே தனுஷுக்கு மறு வாழ்வுதந்தது.அதன் பின் 'பொல்லாதவன்' தவிர்த்து வித்யாசமான கதைக் களமேதிலும் தனுஷ் நடிக்கவில்லை.பாரதிராஜா கிராமத்து களமொன்றை கையில் எடுக்கும் பட்சத்தில் அதற்கு அப்படியே பொருந்திவரும் தனுஷின் தோற்றமும் நடிப்பும் நிச்சயம் ஒரு விருந்தாகவிருக்கும்.

ஏற்கனவே பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.படம் ஓரிரு நாட்களில் பெட்டிக்குள் சுருண்டாலும் தனுஷ் தனது காரியரைத் திரும்பிப் பார்க்கும் போது ஜாம்பவான்களோடு இணைந்து பணியாற்றியது பசுமையான நினைவுகளாகவிருக்கும். படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் ஏனையோர் பற்றி எந்த தகவலும் இல்லை.ஆனால் இளையராஜாவின் இசையில்லாத தனது படைப்புகளில் உயிரில்லையென பாரதிராஜாவே ஒரு விழாவில் கூறியிருந்தார்.இசை ராஜாவும் இயக்குனர் ராஜாவுமிணைந்து கிராமத்துக்கு நம்மை அழைத்து சென்றால் தனுஷின் வாழ்வில் மறக்க முடியாத படமா இது இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

Friday, March 26, 2010

கூகிள்- சீனா நட்பு ,Twitter ,YouTube


 கூகிள் தனது செயற்பாடுகளை சீனாவில் நிறுத்துவதற்கு முடிவு செய்தது நாம் அறிந்ததே ..  இந்த  விடயத்தில் எனது கருத்துகளை பதிவு செய்யலாம் என நினைகின்றேன். கருத்து மட்டுமே

கூகிள் - சீனா பிரச்சனை (முறுகல் ) முதல் இருந்து வந்தது தான் ஆனால் ஜனவரி  12  கூகிள் மீதான தாக்குதலுடன் பெரிய விடயமானது .மார்ச் 22  தொடக்கம் எந்த தணிக்கையும் இல்லாமல் தனக்கு வரும் தேடலுக்குகான தரவுகளை வெளியிட தொடங்கி உள்ளது . இதை   google.cn முடியாதலால்  google.com.hk (Hong Kong) கொண்டு தேடலுக்குகான தரவுகளை தருகின்றது, simplified Chinese,traditional Chinese  இரண்டு மொழிகளிலும் google.com.hk  தரவுகளைப் பெறலாம் . இதனால் கூகிள் சேவைகள் சீனாவுக்குள் தடைசெய்யப்  பட்டு வருகின்றன . சீனா அரசு   எந்த சேவைகளை  தடை செய்கின்றது என்று அதை கூகிள் இங்கே குறிப்பிடுகின்றது  21 / 3/10 தொடக்கம் ஒவ்வொரு நாளும் அதை  update செய்கின்றது  


இது தனியே கூகுளுக்கு எதிரான நடவடிக்கைய மட்டும் இருக்கமுடியாது பின்னால் பல ராஜதந்திரங்கள் உள்ளன


சீனா - அமெரிக்காவுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியே. சீனா அரசு வேறு  நாட்டின் கம்பனிகளை தனது நாட்டுக்குள் தவிர்த்து வந்தது, முக்கியமாக அமெரிக்கா. உதரணமாக ,ஹாலிவுட் படங்களை தடை செய்த வரலாறுகள் உள்ளன .காரணம் ..
இவற்றின் செயற்பாடுகள் சீனா அரசுக்கு எதிராக அமையும் என்பதால் தான். எவ்வாறு என்றால்  " சரி கூகிள் சீனாவில் செயற்படுகிறது என்றே வைத்து கொள்ளவோம் சீனாவில் இணையத்தை பயன்படுதுவோரினதும்  ,சீனாவில் இருந்து கூகுளின் சேவைகளை பயன்படுத்துவோரின்  அனைத்து நடவடிக்கைகளையும்  கண்காணிக்கவும் , விபரங்களையும் சேமிக்கவும் கூகிளினால் முடியும். உதரணமாக ஒரு அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தால் மக்களின் எதிர்ப்பு எந்தளவுக்கு  இருந்தது, உண்மையில் என்ன நடந்தது, மக்களின் கருத்து என்ன, யார் யார்  சம்மந்த பட்டுள்ளார்கள் ,  ஆதாரங்கள் (புகைப்படங்கள் ,வீடியோ  ) என்பன கூகுளின் கைகளுக்கு  செல்வதை தடுக்க முடியாது " இவற்றை யாரும் தமக்கு தேவையான போதும், தமது நடவடிக்கைகள் மாற்றவும் சிறப்பிபதற்க்கும் உதவும்.
சீனா எந்த காரணத்துக்ககவும் தனது குடும்பிய (தலை முடியை ) வேறு ஒருத்தனிடம் கொடுத்துவிடு சிரித்து கொண்டும் இருக்குமா என்ன ????

Hillary Clinton கூகிள்  மீதான தாக்குதலுக்கு  சீனாவிடம்  விளக்கம்  கேட்டது  போன்றன  இதற்க்கு  பின்னால்  அரசியல்  உண்டு   என்பதை  காட்டுகின்றதுஇதனால் தான் சீனா எப்படியாவது கூகிள் வெளியேற்றியே தீரனும் என்ற திட்டம் இப்போது நிறைவேறி உள்ளது. இதனால் தான் கூகுளுக்கு தெளிவான எந்த  பதிலையும் (தாக்குதல் தொடர்பான ) கொடுக்கவில்லை, சீனா அரசு தற்போது தனது திட்டத்தில்  சிறிதளவு வெற்றி பெற்றுள்ளது. நஷ்டம் கூகுளுக்கு தான் . ஆனாலும் கூகிள்  தனது செயற்பாடுகளை சீனாவில் முழுமையாக நிறுத்தவில்லை போல் தெரிகின்றது


இருவருமே   அமெரிக்கன்  ஹி ஹி ஹி .....

எந்த அரசும் தனக்கு எதிரான கம்பனிகளை தனது நாட்டில் செயற்பட விடாது இவ்வாறான  வேறு  பிரச்சனைகள் உள்ளன  Microsoft - Latin American நாடுகள் ,Internet explore - European  union என்று தொடர்கின்றது .

இப்போது கூகுளுக்கு காலம் சரியில்லை Germany, Apple Inc, china என்று எல்லாப் பக்கத்தாலும்  இடி  தான்

"ஆமா சீனாவில் இப்படி எல்லாம் தணிக்கைகள் உள்ளன என்று சீனாவுக்கு செல்ல முன்னே தெரியாத ? , இவ்வளவு நாளும்  நீங்களும்  சேர்ந்து தானே தணிக்கை செய்திங்க !!! இப்ப என்ன புதுசா திடீர் என்று  சீன மக்கள் மீது அக்கறை ... "


You Tube :  ஒரு  நிமிடத்துக்குள்   24 மணித்தியால  அளவுள்ள  வீடியோக்கள்  upload செய்யப்படுகின்றன. இந்த  மைல்கல்லை மார்ச் 17  அன்று youtube  எட்டியுள்ளது
 

click செய்து பெரிதாக்கலாம்
Twitter: தனது 4 வது பிறந்தநாளை மார்ச்  21 கொண்டாடியது   இது தான் முதலாவது  tweet

 Twitter co-founder Jack Dorsey

இன்று ஒருநாளைக்கு 50 million  tweetsssss     ம்ம்ம்ம்....


source: http://googleblog.blogspot.com/ 
            http://youtube-global.blogspot.com
           http://Mashable.com   

Thursday, March 25, 2010

வன்னியில் சுட்டவை


மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் தங்குமிடம் 


 

எரியுண்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள வாகனத்தொகுதியின் ஒரு பகுதி


 
இராணுவத்தால் ஆனையிறவில் அமைக்கப்பட்டுவரும் நினைவுச்சின்னம்


 

உலக உணவுத்திட்டத்தின் கூரையை காணோம்.


 

கிளிநொச்சியில் சாய்ந்துள்ள தண்ணீர்த்தாங்கியை பார்வையிடும் (?) சிங்களமக்கள்.


 

ஓரளவேனும் நல்ல நிலையில் இருக்கும் வீடு ஒன்று.


 

கிளிநொச்சியில் உருவாகியுள்ள புதிய பௌத்தவிகாரை


 

ஆனையிறவில் இராணுவத்தால் நினைவுச்சின்னமாக வைத்திருக்கும் டாங்கியை பார்வையிடும் சிங்கள மக்கள்


 

பளை பிரதேசத்தில் உள்ள இராணுவ உணவகங்கள்

 

கையை விட்டு போகும் வடிவேலுவின் காமடி

வடிவேலு நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு இருபத்து மூன்றுஅல்லது இருபத்தைந்து வேடங்களில் நடிக்கிறார், பத்து நாயகிகள் கூடவே நடிக்கிறார்கள் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. உலக சாதனைக்காக இந்தப்படம் தயாரிக்கப்பட போவதாக கூறியிருக்கும் அதேவேளை இந்தப்படத்தை ஆதம்பாவா இயக்குவார் என்று தெரிகிறது. இருந்தாலும் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் இன்னமும் வெளிவரவில்லை.

எதற்காக இந்த இருபத்து மூன்று வேடம் ? இது வடிவேலுக்கு தேவையா? இன்றும் நாம் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வடிவேலுதான். எங்காவது ஒரு லோ பட்ஜெற் படத்திலாவது வடிவேலுவின் ஏதாவதொரு காமடி கிளிக் ஆகினாலே அதை எத்தனை தடவையும் பார்த்துக்கொண்டிருக்கலாம். இப்போது வடிவேலு 175 நாட்கள் இந்த படத்துக்கு  கால்சீற் கொடுத்துள்ளதால் அடுத்த ஆறு மாதத்திற்கு லோ பட்ஜெற் படங்களில் கூட வடிவேலுவை காணமுடியாது. முன்னைய வடிவேலுவின் காமடிபோல இப்போது இல்லாவிட்டாலும் விவேக் , சந்தானத்தின் அலப்பறைக்கு(சந்தானம் ஒரிருபடங்கள் பரவாயில்லை ) இன்றைய வடிவேலு எவளவோ மேல்.வடிவேலுவிடமிருந்து அண்மைக்காலமாக கிடைக்கும் அதிகமான ஒரே மாதிரியான காமடிக்கு காரணமான சிங்கமுத்துவின் விலகலின் பின்னர் வடிவேலுவின் காமடிகளை புதிய கோணத்தில் எதிர்பார்த்தால் இப்போது வடிவேலு மீண்டும் ஒரு இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு தயாராகிவிட்டார்.


வடிவேலு மூன்று வேடத்தில் நடித்த அழகப்பனே பார்க்க முடியவில்லை, இருபத்து மூன்று வேடம் சாதனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம், வடிவேலுவிடம் காமடியை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்தியாக அமையுமென்று நான் நினைக்கவில்லை.இது வடிவேலு சிலருக்கு தன்னை நிரூபிப்பதற்காக எடுத்த முடிவாக கூட இருக்கலாம், படம் காமடியாக இருக்கும் என்று கூறினாலும் இத்தனை நாயகிகளை வைத்துக்கொண்டு இத்தனை வேடத்தில் காமடி சாத்தியமென்று தோன்றவில்லை.


வடிவேலு முதலில் எல்லோருடனும் பகைக்கும் குணத்தை நிறுத்தவேண்டும். சுந்தர்.C ,சுராஜ் போன்றவர்களுடனான பகையால் வடிவேலுவுக்கும் நஷ்டம், அவர்களுக்கும் நஷ்டம், நல்ல காமடிக்கும் பஞ்சம். வடிவேலு நாயகனாக நடிப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை, ஆனால் கலைவாணர், பாலையா, நாகேஷ், கவுண்டமணி  செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு என எப்போதும் நிறைவாக இருந்த தமிழ் சினிமாவின் காமடி டிராக்கிற்கு இப்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சந்தானம் அதை ஈடுசெய்வார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. விவேக் அவுட் , இப்போ காமடியின் ஒரே நம்பிக்கை வடிவேலுதான். வடிவேலுவும் ட்ராக் மாறிப்போனால் தமிழ் சினிமாவின் காமடி பஞ்சத்தை சமகாலத்தில் யாராலும் தீர்க்கமுடியாது. இப்போது எங்களுக்கு தேவை அழகப்பன் அல்ல வட்டசெயலாளர் வண்டுமுருகன்தான்.

பயபுள்ள ! . நம்மளுக்கு ஏதோ சொல்லுறானே ...  ம்ம்ம்ம் .....ம்ம்...

Wednesday, March 24, 2010

ஆடை மாற்றும் வலைப்பூக்கள்

Blogger Template மேலும் சிறப்பிபதற்கு   புதிய வசதிகள் தற்போது Blogger இல் அறிமுக படுத்தபட்டு உள்ளன  draft.blogger.com login (blogger username password தான்  )செய்து அங்கு layout குல் "Template Designer" என்ற  புதிய  tab காண  கூடியதாக   இருக்கும் அதை கிளிக் செய்யவும்

 இதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் உங்களுக்கு வேண்டிய முறையில் உங்கள் blog கை Design பண்ண தொடங்கலாம்

4  வகை  Default Template  உள்ளன

1 .Simple
2. Picture Window
3.Awesome Inc
4. Watermark 

என்ற வகைகளினுள்   15 Template காணப்படுகின்றன . இவற்றையே  பயன்படுத்தலாம் . இல்லாவிடின் நமது விருப்படி எடிட் பண்ணிக்கொள்ளலாம் . இதற்கு தேவையான அளவுக்கு வகை வகையாக  background images "Background " TAB பகுதிக்குள் காணப்படுகின்றன தேவையானவற்றை   பயன்படுத்திக் கொள்ளலாம்இதற்கு மேல்   layout மாற்றங்களை 3-column 2-column மாற்றிக் கொள்வதற்கும் side bar ,body அகலங்களை "layout" TAB பகுதிக்குள் மாறவும் முடியும்

"Advance" TAB பகுதி blog இன் எழுத்துக்கள், links, gadgets ,post  போன்றவற்றின் நிறங்களை மாற்ற உதவும்


தேவை ஏற்படின் CSS  பயன்படுத்திக்கொள்ள  வசதிகள் உண்டு 
இதற்கு   மேலாக  நீங்கள் செய்யும் ஒவ்வொரு மாற்றத்தையும் live வாக பார்த்துக்கொள்ள  முடியும்

இதற்கு மேல் என்ன வேண்டும் இனி ஒவ்வொரு நாளும் ஆடைகள் மாற்றுவது போல புதிய புதிய வடிவங்களில் உங்கள்  வலைப்பூக்கள் ..... அதிக நேரம் தேவைப்படாது என நினைகின்றேன்

இந்த வீடியோவை  பார்த்தல் மேலும் விளங்கிகொள்ளமுடியும்

சில வேளைகளில் நாளை நீங்கள் எப்பூடிக்கு வரும் போது வேறுமாதிரி (புதிய template ) இருந்தால் வேறு blog என்று  திரும்பிவிடதிர்கள் ... அது  எப்பூடி தான்  ;-)

source : http://bloggerindraft.blogspot.com/

Tuesday, March 23, 2010

வெற்றி நாயகன் சூரியா...தமிழ் சினிமாவின் இன்னுமொரு அந்தமாதிரி வெற்றிவிழா கொண்டாட்டம் இன்று 23 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின் மூவி தாயாரிக்க K.S .ரவிக்குமார் இயக்க சூர்யா , நயன்தாராவின் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்சின் இசையமைப்பில் வெளிவந்து சென்ற ஆண்டு தமிழ்சினிமாவையே புரட்டிப்ப்ட்ட 'ஆதவன்'தான் அந்தமாதிரி 100 ஆவது நாள் வெற்றிவிழாக்காணும் திரைப்படம். இதற்கு முன்னர் முதல்தடவையாக உதயநிதி இயக்கிய தென்னிந்தியாவின்.. ஏன் இந்தியாவின் மிகப்பெரும் காவியம் விஜயின் 'குருவிக்கு' கூட நூறாவது வெற்றிவிழா கொண்டாடியிருந்தார் உதயநிதி, இம்முறை வெற்றி நாயகன் சூர்யா.குருவி வெற்றிவிழாவில் பேசிய விஜயின் பிரச்சார பீரங்கி S.A.சந்திரசேகர் 'குருவி' தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்காடுகளையும் தகர்த்துவிட்டதாக கூறியிருந்தார், இம்முறை தயாரிப்பாளர் உதயநிதியே 'ஆதவன்' அனைத்து வசூல்களையும் புரட்டிப்போட்டு வசூலில் புதிய சரித்திரம் படைத்துவிட்டதாக கூறியுள்ளார்.நமீதா பாராட்டினாலே உச்சி குளிர்ந்து ஜொள்ளு வடிக்கும் கலைஞருக்கு பேரனாக பிறந்த உதயநிதி இப்படிப்பட்ட வரலாற்று காவியங்களுக்கு (வசூலில்) வெற்றிவிழா கொண்டாடுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. நிச்சயம் உதயநிதி ஒருகாலத்தில் பலதரப்பட்ட பாராட்டு விழாக்களை சந்திப்பார் என்பதில் ஐயமில்லை.

"வாழ்க தமிழகத்தின் மாபெரும் அரசியல் குடும்பம்"இப்படி ஒரு பேரன் வெற்றிவிழா கொண்டாட நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதா என்று கலாநிதிமாறனும் தான் வாங்கி வெளியிடும் படங்களுக்கும் வெற்றிவிழா கொண்டாட ஆரம்பித்தால் மாதம் ஒரு வெற்றிவிழா காணலாம், காய்ந்துபோய் கிடக்கும் ரசிகர்களுக்கு அப்பப்ப ரகசியா, தேஜாஸ்ரீ , லக்ஸ்மிராய் போன்றோரின் தரிசனமாவது கிடைக்கும். மாதமொரு படத்தை ரிலீஸ் செய்து விட்டு பின்னர் மாதம் ஒரு வெற்றிவிழா கொண்டாடி அதில் கலைநிகழ்ச்சிகளை வைத்து நடிகைகளின் நடனத்தை அரங்கேற்றினால் இந்த தள்ளாத வயதிலும் 'சியர் லீடேர்சின்' ஆட்டத்தை பார்க்க கலைஞர் ஐயா சேப்பாக்கம் போகவேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா? இதை உணர்ந்த உதயநிதியின் பொறுப்பு மற்றைய பேரன்களுக்கும் வரவேண்டும். அப்படியே தயாநிதி அழகிரியும் எதிர்வரும் காலங்களில் மாதமொரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு வெற்றி விழாக்களை கொண்டாடினால் மாதம் மூன்று பேரன்களாலும் முப்பெரும் களியாட்டத்தை காணும் வாய்ப்பை தாத்தா பெறுவாரல்லவா ? ஊரை கொள்ளையடித்து உங்களுக்காக சொத்துக்களை சேர்த்த தாத்தாவுக்காக இதாவது நீங்கள் செய்யக்கூடாதா?முக்கியமான விடயம் இந்த வெற்றிவிழாவின் பிரதம விருந்தினர் உதயநிதியின் அடுத்த படத்தின் நாயகன் கமலஹாசனாம் . கவலைப்படதேவை இல்லை எப்படியும் அடுத்த கமலின் படத்தின் ரிசெல்ட் எப்படி இருந்தாலும் ஒரு வெற்றிவிழா நிச்சயம் இருக்கு. இறுதியாக நூறாவது நாள் விழாக்காணும் ஆதவனுக்கும் பாராட்டுக்கள். வெற்றிவிழாக்களையே காமடியாகக்கி இறுதில் யாருமே (உண்மையான வெற்றியாக இருந்தால் கூட) வெற்றி விழாக்களே கொண்டாடாமல் போகுமளவிற்கு இதேபோல மேன்மேலும் அந்தமாதிரி வெற்றிவிழாக்கள் கொண்டாட உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.

Saturday, March 20, 2010

தம்பி 'சங்கா' நாங்க இன்னும் சிங்கங்கள்தான்"என்னை மீண்டும் அணியில் இணை" இது எச்சரிக்கை இல்லை கட்டளை என்பதை சங்காவுக்கு செய்முறையில் எடுத்து காட்டியுள்ளார் வாஸ். நீண்ட நாட்களுக்கு பின்னர் கிரிக்கெட்டில் ஒரு சந்தோசமான நாள், சங்ககாரவின் ஸ்டம்பை வாசின் இன்ஸ்விங் சிலோவ் டெலிவெரி(inswing slow cutters) பதம்பார்த்ததும் அதை தொடர்ந்து வாஸ் சிரித்த அந்த நக்கல் சிரிப்பும் ஆயிரம் அர்த்தங்களை சங்காவிற்கு சொல்லி இருக்கும். இதற்கு முன்னர் மஹாரூப்பும் சங்காவை வீழ்த்தியிருந்தாலும் இது என்னமோ அதைவிட விசேடமாக உள்ளது.IPL போட்டிகளின் முதல் மூன்று போட்டிகளிலும் எட்டு விக்கட்டுகளை கைப்பற்றி இருக்கும் வாஸ் தற்போது அதிக விக்கட்டுகள் பெற்றோரில் முதலிடத்தில் உள்ளார்.வயது ஒரு தடையல்ல என்பதை வாஸும் , முரளியும் இதுவரை நிரூபித்துள்ளதைபோல சனத்தும் நிச்சயம் எதிர்வரும் போட்டிகளில் நிரூபிப்பார். இன்றைக்கும் வாசின் இடத்தடோ, சனத், முரளியின் இடத்தையோ நிரப்ப யாரும் இல்லை. உடல் ஒத்துளைக்குமட்டும் விளையாட தகுதியுடைய இலங்கையின் மூன்று முக்கிய வீரர்களை இனியாவது அவமதிக்காமல் பயன்படுத்தினால் நல்லது. இல்லாவிட்டால் நஷ்டப்படபோவது இலங்கை அணியே. சங்ககார , மஹேலா துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் (அரசியல் வேலைகளை விடுத்து ) இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.இன்றைக்கும் கில்கிரிஸ்ரையோ , ஹெய்டனயோ மிஞ்சும் அளவிற்கு ஆரம்ப துடுப்பாட்டவீரர்கள் ஆஸ்திரேலியாவில் யாரும் இல்லை. எதற்காக இரண்டு சிங்கங்களும் ஒய்வு பெற்றனவோ தெரியவில்லை.அதிலும் கில்கிறிஸ்ட் ஒய்வு பெற்றதில்(2007) இருந்து மேலும் ஐந்து வருடம் ஒருநாள் போட்டிகளிலும் T/20 போட்டிகளிலும் மட்டுமாவது விளையாடி இருக்கமுடியும். மனிதர் அவ்வளவு உடற்தகுதியுடனும் சுறுசுறுப்புடனும் அதே பழைய போமுடனும்தான் இருக்கிறார். இப்போது கில்கிறிஸ்ட் நினைத்தாலும் மீண்டும் சர்வதேச போட்டிகளில் கலதுகொண்டு (ஒருநாள் போட்டிகளிலும் T/20 போட்டிகளிலும்) இன்னுமொரு ரவுண்டு கலக்கலாம், அப்படி நடந்தாலென்ன அடுத்த உலககிண்ணமும் ஆஸ்திரேலியாவுக்கே போய்விடும்.

T/20 போட்டிகள் கிரிக்கெட் போலல்லாது ரெஸ்லிங் போல இருந்தாலும் கிரிக்கற் சரியாக தெரியாத அம்மாக்களும் இதை ரசிப்பது T/20 யின் பலமே.முதல்வார IPL இல் (எனது பார்வையில்)

எதிர்பார்த்ததற்கேற்ப பிரகாசிக்கும் வீரர்- சேவாக்

எதிர்பாராதளவுக்கு பிரகாசிக்கும் வீரர் - ஜக் கலிஸ்

எதிர்பார்த்து சொதப்பிய வீரர் - டில்ஷான்

எதிர்பார்த்ததற்கேற்ப பிரகாசிக்கும் அணி - மும்பாய்

எதிர்பாராதளவுக்கு பிரகாசிக்கும் அணி - பெங்களூர்

எதிர்பார்த்து சொதப்பிய அணி - டெல்லி

இன்னமும் ஒவ்வொரு அணிக்கிடையில்    10 போட்டிகள் வரை உள்ளதால் நிச்சயம் இவற்றில் மாற்றம் ஏற்படும்

விஜயா சூர்யாவா?

வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சினிமா பதிவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இதற்கு காரணம் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் வெளிவர இருக்கும் சுறா திரைப்படம்தான். வரும் வெள்ளிக்கிழமை (26 ஆம் திகதி ) சுராவின் ஆடியோ ரிலீஸ் செய்யப்படுகின்றது. தொடர்ந்து சித்திரை பதின்நான்கு அன்று சுறா திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுகிறது. சித்திரை பதின்நான்கு புதுவருடப் பிறப்பில்லை என்று பாசாங்குத்தலைவன் அறிவித்தாலும் சித்திரை வருட திரைப்பட ரிலீச்கள் குறையவில்லை.முருகன் சினி ஆர்ட்ஸ் என்னும் பெயரில் சங்கிலி முருகன் தயாரிக்கும் சுறாவை ராஜ்குமார் இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க எம்.எஸ்.பிரபு மற்றும் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் சுறாவில் தமன்னா நாயகி என்பது தெரிந்ததே. அதைவிட சுறாவை கலைத்தாயின் 'செல்வப்'புதல்வன் சண் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுவதும் தெரிந்ததே. வழமையாக தனது முன்னைய x படங்களிலும் பார்க்க வித்தியாசமானதாக இருக்கும் என்று திருவாய் மலரும் விஜய் இந்தத்தடவை சுறா வேட்டைக்காரனைபோலதான் இருக்கும் என்று கூறியிருப்பது படத்தின் தன்மையை புரியவைத்துள்ளது. (x = அந்த நேரத்தில் விஜய் நடித்த அனைத்துப் படங்களின் எண்ணிக்கை )வழக்கமாக விஜய் படங்களின் படப்பிடிப்பு இடம்பெறும்போது அவ்வப்போது புகைப்படங்கள் தயாரிப்பாளர் தரப்பால் பத்திரிகைகளுக்கும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் வளங்கப்படுகின்றமை வழக்கம், ஆனால் சுறாவை பொறுத்தவரை போஸ்டர்கள் தவிர புகைப்படங்கள் எவையும் வெளியிடப்படவில்லை . புகைப்படங்கள் வெளிவராததை பார்க்கும்போது விஜய் மீனவனாக நடித்திருப்பதால் பட்டாப்பட்டிக்குமேல ஒரு லுங்கியை கட்டி புதிய கெட்டப்பில் அசத்தினாலும் ஆச்சரியமில்லை (ஆனால் மெலோடி சாங் பாரின்லதான்).இதேநேரம் அரிவாள் இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் சூர்யா தோன்றும் புதிய படமான சிங்கமும் சித்திரை பதின்நான்குதான் ரிலீசாம். இதன் மூலம் விஜயின் மாஸ் இடத்தை சூரியா தற்போது கைப்பற்றியுள்ளார் என்ற ஒரு பிரிவினரின் வாதம் உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடும். அயன் தவிர சன்னின் வேறெந்த படங்களும் வெற்றியடையாத நிலையில் சுறா சன்னுக்கு வெற்றியை கொடுக்குமா என்பது நிச்சயம் சன்னின் கையில் இல்லை, அது படத்தின் தரத்தை பொறுத்து மக்களின் கைகளில்தான் உள்ளது. எது எப்பிடியோ காட்டு ராஜாவும்(சிங்கம்) கடல் ராஜாவும் (சுறா) நேரடியாக மோதப்போகிறார்கள். வெற்றி யார்பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, March 19, 2010

கால்களுக்குள் மிதிபடும் வேட்பாளர்கள்
யாழ்நகரில் ஒவ்வொரு சந்திகளிலும் கறுப்புதார் வீதிகளில் வெள்ளை நிற பெயின்றால் கட்சிபேதமின்றி ஓவ்வொருவரு கட்சி வேட்பாளர்களும் கட்சி சின்னத்தையும் தங்களது விருப்பு வாக்கு இலக்கத்தையும் எழுதிவைத்துள்ளனர். இதில் பெரியகட்சி சின்னகட்சி என்ற பேதமெல்லாம் இல்லை. இவர்கள் அடித்த வெள்ளை பெயின்ரை வைத்து குறைந்தது ஒரு நூறு வீடுகளுக்காவது பெயின்ட் அடித்திருக்கலாம். சந்திகள் தவிர வீதி வீதியாக இதே திருக்கூத்துத்தான்.அதுதவிர புதிய வீடுகளின் சுவர்கள், தலைவர்களின் சிலைகள் முதல் உக்கிப்போன தகரங்கள் வரை இவர்களது போஸ்டர்கள்தான். கொஞ்சம் ஏமாந்தால் எமது நெற்றியிலும் முதுகிலும் கூட ஒட்டிவிடுவார்கள் போலுள்ளது. ஒரு விடயத்திலும் இல்லாத ஒற்றுமை இந்த விடயத்தில் நம்ம வேட்பாளர்களுக்கு உள்ளது. பாரபட்சமின்றி ஒருவர் போஸ்டருக்கு அரகில் வேறுகட்சியாளர்போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். மாடுகளுக்குதான் நல்ல தீவனம்.எந்தக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் இதனை பார்த்து தீர்மானிக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு தெரியும். ஆனால் விருப்புவாக்குகளை யாருக்கு போடுவது என்பதில் நிச்சயமற்ற மனநிலைதான் இருக்கும் இதனால் மனோவியல் ரீதியாக தங்களது வாக்காளிப்பு எண் நினைவில் இருக்கவும் தாங்களது எண்ணை தங்களுக்கு ஓட்டுப்போட நினைப்பவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவுமே இவ்வாறு செய்கிறார்கள். வீதிகளில் உள்ள இவர்களது பெயர்களிலும் விருப்புவாக்கு இலக்கங்களிலும் விலங்குகளின் எச்சங்களும் மனிதர்களின் வெற்றிலை துப்பல்களும் கிடப்பதன்றி போகவர மக்களின் செருப்பு கால்களாலும்மிதிக்கப்படுகின்றன.உதாரணமாக ஒருவர் கூட்டமிப்புக்கு வாக்களிக்க முடிவெடுத்திருந்தால் அவர் வீட்டு சின்னத்தில் தனது வாக்கை பதிவர், இது கட்சிக்கான வாக்கு . அதே வாக்கு சீட்டில் யாழில் உள்ள மொத்தம் 9 தொகுதிக்கும் போட்டியிடும் 12 வேட்பாளர்களினது இலக்கமும் இடம்பெற்றிருக்கும், மக்கள் அவற்றில் மூன்று இலக்கங்களுக்கு புள்ளடி இடலாம். இறுதியில் விருப்பு வாக்கு எண்ணப்படும்போது உதாரணமாக கூட்டணிக்கு 9 இடங்களில் 7 இடங்கள் கிடைத்தால் கூட்டணி வேட்பாளர்களின் விருப்பு வாக்கில் முதல் 7 இடங்களை பெற்றவர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். 12 பேரில் கட்சிக்கு கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையளவான வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதால் தேர்தலில் எதிரணியினரை அமாளிப்பதை விட தங்களுக்கான விருப்புவாக்கை அதிகரிக்க செய்யவே இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

இவர்களைபோலன்றி மேற்படி எந்தவித விளம்பரங்களும் இல்லாத சுய தம்பட்டமில்லாத தமது நிலைப்பாட்டை மட்டும் எடுத்து கூறும் படித்த வேட்பாளர்களும் ஓரிருவர் உள்ளனர்.எனது நண்பர் ஒருவரின் தந்தை ஒருவரும் இந்த லிஸ்டில் இடம்பெறுவார். முக்கிய கட்சியின் வேட்பாளரான இவரது விளம்பரமில்லா பிரச்சாரம் உண்மையில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.(பெயரை குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்காதென்பதால் குறிப்பிடவில்லை)நீங்கள் நம்பும் உங்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களியுங்கள் , வாக்களிக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்.

Thursday, March 18, 2010

இவனும் ஒரு ஒபாமா

இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஒவ்வொருவரும் தமது குடும்பஉறுப்பினர்களைத் தவிர்த்து ஓட்டுக்கள் பெறப்போவது பெரிய விடயம் .ஏனெனில் ஏறத்தாள வீட்டுக்கொரு வேட்பாளர் என்ற கணக்கில் வாக்காளரை விட வேட்பாளர் தொகை அதிகமாகவிருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.ஓட்டைப்பிரித்தல் என்னும் புதிய உத்தியின் பிரகாரம் ஏகப்பட்ட சுயேட்சைகள் களத்தில் குதித்திருக்கின்றது.கவுண்டமணி கூறியது போல "டெப்பாசிட் கட்ட காசு இருப்பவரெல்லாம் வேட்பாளர்".ஆனால் இந்த நோக்கமின்றி ஒரு லட்சியத்துடன் தமிழர்களினதும் இளைஞர்களினதும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு நண்பனைப் பற்றியதுதான் இந்தப் பதிவு.

நான் இங்கு அவனுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.அதை அவனும் விரும்பமாட்டான்.ஏனெனில் மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பெருமையாகக் கதைப்பது அவனுக்கு பிடிக்காது.யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்று இன்று சமூகத்தில் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற "அன்பே" உருவான அவன் அரசியலில் குதித்து பொது வாழ்வில் ஈடுபடுவானென நான் நினைக்கவே இல்லை.இன்று நான் காலரைத் தூக்கிக் கொள்கிறேன் அவனுடன் ஒன்றாகப் படித்ததற்காக.

பாடசாலைக் காலங்களிலேயே தலைமைத்துவம்,ஆளுமை,சமூகப் பொறுப்பு என்று அனைத்தையும் ஒருங்கே அவனிடம் கண்டிருக்கின்றேன்.படிப்பில் மட்டுமன்றி பல்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவன்.மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்பதற்காக இறுவட்டுகள் பலவற்றை இலவசமாக வழங்கிய பெருந்தகை என் நண்பன். குடிப்பழக்கமோ,புகைப் பிடித்தலோ எந்தக் கெட்ட பழக்கமும் கண்டதில்லை அவனிடம்.பெண்களை தாயாக மதிப்பான்.வீடு, சூரியன் என்று பழமையானவற்றை சின்னமாக வைத்திருப்போருக்கு மத்தியில் தொழில்நுட்ப ரீதியாக யோசித்து அவன் தேர்வு செய்த சின்னத்திலிருந்தே நான் முடிவு செய்து விட்டேன், நண்பா! தமிழரின் எதிர்காலம் உன் கைகளில்தானென்று.

தேர்தலிலிருந்து வாபஸ் பெறவேண்டுமென பல பேர் உன்னை மிரட்டியதாக அறிந்தேன்.சிலர் கோடிகளில் பேரம்கூட பேசியதாக கூறினான் நண்பன்.இண்டர்வெலுக்கு சோடா வாங்கித்தந்தால் லேட்டா வந்த மாணவனைக் கூட மன்னித்தருளும் மாணவத் தலைவனாகவிருந்த நீ இன்று இத்தனைக்கும் மசியவில்லை என்பதிலிருந்து உனது தொலைநோக்குப்பார்வை புரிகிறது.நீ தமிழரின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.ஒரு அரசியல்வாதிக்கான அனைத்துத் தகுதியும் உனக்கு உண்டு.

அதே நண்பன் கூற அறிந்தேன்.உனக்கும் உன்னுடன் சுயேட்சையில் நிற்கும் உன் தாத்தாவுக்கும் யாழில் வோட்டு இல்லையாமே.உனது அப்பா உனக்கு வோட்டு போட்டால் உனக்கு மரியாதை இல்லையென்பதால் உனக்கு வோட்டு போடாமாட்டாராமே.ஐயகோ அப்போ???

யாழ் சமுகமே,விழித்துக்கொள்,ஒரு தலைவன் உங்கள் முன் நிற்கிறான்,இவன் இன்னுமொரு ஒபாமா,அவனை பயன்படுத்திக்கொள்,ஒரு நண்பனுக்காக இந்த நண்பன் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன்.அவனுடன் பழகியதற்காகவாவது அவனுக்கு ஒரு நூறு விருப்பு வாக்குகள் ஆவது கிடைக்க பண்ணுங்கள்.நீங்கள் அவனுக்கு ஒட்டுப்போட்ட வாக்கு சீட்டை (பெட்டிக்குள் போடாமல் வெளியில் கொண்டுவந்து) அவனுக்கு காட்டினால் உங்களுக்கு ஒரு வாக்குக்கு ஒரு வாழைப்பழம் இலவசமாக தருவானாம். பார்த்து எதாவது செய்ங்கப்பா...

(கடைசி வரை அந்தப் பாடசாலை சென்ஜோன்ஸ் என்று நான் சொல்லவே இல்லை.அப்பாடா)

Wednesday, March 17, 2010

ரஜினி சொன்ன ( படித்து) இரண்டு பழைய கதைகள்

ரஜினியின் நண்பர் ஹரி அவர்கள் ஆனந்த விகடனுக்கு 2005 ஆம் ஆண்டு வழங்கிய செவ்வியில் ரஜினி சொன்னதாக (படித்ததை) கூறியிருந்த கதைகளில் இரண்டு கதைகள் இதோ உங்களுக்காக. தெரிந்தவர்கள் மீட்டுக்கொள்ளலாம், தெரியாதவர்கள் புரிந்து கொள்ளலாம்.
கதை -1ஒரு ஊருக்கு ஒரு சாமியார் (நித்தியானந்தர் மாதிரி அல்ல ) விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார், சாமியாரின் வருகை முற்கூட்டியே அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் சாமியாரின் போதனைகளை கேட்ப்பதற்கு ஆயத்தமாக இருந்தனர்.குறித்த நாளும் வந்தது , சாமியார் தனது சீடர்கள் சூழ அந்த ஊரை அடைந்தபோது அடைமழை பெய்துகொண்டிருந்தது. வெள்ளம் வழிந்தோடியது, ஒரே ஒருவனை தவிர வேறு யாரும் சாமியாரின் போதனைகளை கேட்க குறிப்பிட்ட இடத்தில் இருக்கவில்லை, இது சாமியாருக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்பி செல்லலாம் என்று நினைத்த சாமியார் அந்த ஒருவனை பார்த்து "இங்கு கடும் மழை பெய்வதால் யாரும் வரவில்லை என்று நினைக்கிறேன் அதனால் இன்னும் ஒருநாள் பிரசங்கத்தை வைத்து கொள்கிறேன்" என்றார்.

அதற்கு அவன் "சுவாமி நான் ஒரு குதிரை வியாபாரி என்னிடம் உள்ள குதிரைகளில் ஒன்றைதவிர மிகுதி அனைத்தும் மேய சென்றாலும் நான் அந்த ஒரு குதிரைக்கு உணவளிப்பேன் " என்றான். சாமியாருக்கு தூக்கு வாரிப்போட்டது. "சரி உனக்கு மட்டும் என்றாலும் நான் உபதேசம் செய்கின்றேன்" என்று கூறி பிரசங்கத்தை ஆரம்பித்தார் சாமியார். இம்மை மறுமை, புலன் அடக்கம், ஆசைதுறத்தல் என்று தான் உபதேசிக்க நினைத்த அனைத்தையும் ஒன்றும்விடாமல் அவனுக்கு உபதேசித்து விட்டு "இப்போது உனக்கு மகிழ்ச்சிதானே" என்று கேட்டார்.அதற்க்கு அவன் "சுவாமி நான் மற்ற குதிரைகள் மேயப்போனாலும் என்னிடம் நிற்கும் ஒரு குதிரைக்கு அனைத்து குதிரைகளுக்குமான உணவை போடுவதில்ல்லை, அதற்கு போதுமானதை மட்டுமே போடுவது வழக்கம் " என்றான்.

சுவாமிக்கு மட்டுமல்ல எனக்கும் இந்த கதையை கேட்டபிறகு நல்லதொரு விஷயம் புரிந்தது. இப்போது உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

கதை -2

ஒரு தாய் ஒட்டகத்தை பார்த்து குட்டி ஒட்டகம் "அம்மா எமக்கு அதற்காக நீண்ட கால்கள் உள்ளன " என்று கேட்டது. அதற்கு தாய் ஒட்டகம் " நாம் பாலைவனத்தில் மணல்களுக்குள் நடப்பதற்கு இலகுவாக கால்கள் நீளமாக படைக்கப்பட்டுள்ளது" என்று கூறியது. "சரி எதற்காக நமது உதடுகள் இவ்வளவு சொரசொரப்பாக உள்ளன " என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் வெப்பம் அதிகம் என்பதாலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவுகள் உலர்ந்ததாகவும் மெல்ல முடியாமலும் இருக்கும் என்பதாலும் அதற்கேற்றால் போல உதடுகள் படைக்கப்பட்டுள்ளது " என தாய் ஒட்டகம் கூறியது. "அப்படியானால் எதற்கு எமக்கு பெரிய கழுத்துக்கள் உள்ளது " என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் உணவு, நீர் என்பன கிடைப்பது அரிது என்பதால் கிடைக்கும் உணவு, நீர் என்பவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கவே பெரிய கழுத்துக்கள் படைக்கப்பட்டன" என தாய் ஒட்டகம் பதில் கூறியது.

"அதெல்லாம் சரி பின்னர் எதற்காக நாம் இருவரையும் இங்கு அடைத்து வைத்துள்ளனர்" என்று விலங்கு காட்சிசாலையில் இருந்த அந்த குட்டி ஒட்டகம் தன் தாயை பார்த்து கேட்டது.

இந்தக்கதையின் தாக்கம் என்மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது, உங்களுக்கும் இந்த கதை ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.

Monday, March 15, 2010

எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அப்புறம் இவர்தான்

இன்றைய தேதியில்அதிகமான சினிமா பார்க்கும் மக்கள் பயன்படுத்தப்படும் சினிமா வசனங்கள் வடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆர் பட வசனங்களையும் பின்னர் ரஜினி பட வசனங்களையும் (பஞ்ச்) அதிகமானவர்கள் பேச்சுக்களுக்கு நடுவே சாதரணாமாக உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் இன்றைய நிலையில் மூன்றுவயது குழந்தை முதல் எண்பது வயது கிழம் வரைக்கும், மூடை சுமக்கும் தொழிலாளியில் இருந்து முதலாளிகள் வரைக்கும், ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரைக்கும் எல்லோரும் பயன்படுத்தும் சினிமா வசனங்கள் அதிகமாக வடிவேலு பயன்படுத்தியதாகவே இருக்கின்றது, பதிவுலகமும் இதற்கு விதிவிலக்கல்ல.ஆரம்பகாலங்களில் கவுண்டரின் கால்களுக்குள் மிதிபடும் பாத்திரங்களை இருக்கும்போதும் சரி, பின்னர் குழுவாக காமடி பண்ணும்போதும் சரி, அதன் பின்னர் நாயகனின் நண்பனாக வரும்போதும் சரி வடிவேலு சிரிக்க வைத்தாலும் இப்படி சினிமா ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் இன்றைய வடிவேலுவின் தாக்கங்கள் 'வின்னரில்' இருந்துதான் ஏற்பட்டதென்று நினைக்கிறேன் வின்னருக்கு பின்னர் கிரி, தலைநகரம் , மருதமலை,இம்சை அரசன், போக்கிரி போன்ற படங்களே வடிவேலுவின் வசனங்களை அதிகமாக பலரும் பேசும்படி வைத்தது. ஆனால் வடிவேலுவின் சுந்தர்.c , சுறாச் போன்றோருடனான பகைமையால் மேற்குறிப்பிட்ட படங்களுக்கு பின்னர் முழுமயான நகைச்சுவை படம் எதுவும் வடிவேலுவுக்கு அமையாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவதொரு படத்தில் வடிவேல் பேசும் வசனம் பிரபால்யம் ஆகிவிடுகிறது. இவற்றையும் தாண்டி இப்போதெல்லாம் வடிவேலுவுடன் படத்தில் பேசும் சக நடிகர்களின் வசனங்களும் பிரபல்யமாகிவிடுகின்றன.இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள்தான், காமடிக்கென்று இரண்டு முக்கிய சானல்கள், பாட்டு சானல்களில் இரவு ஒன்பது மணிக்கப்புறம் காமடிக்காட்சிகள், இவற்றைதவிர ஏனைய தொலைக்காட்சிகளிலும் அவ்வப்போது காமடிக்காட்சிகள் ஒளிபரப்படுகின்றன. அதுவும் குறிப்பிட்ட படங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதால் அது தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் மனதில் தானாகவே பதிந்துவிடுகிறது . இதனால் பேச்சுக்களுக்கிடையில் காமடியாக இந்த வசனங்கள் ஒரு flow வில் தானாக வருகின்றன.. நேரடியாக பதில் கூற முடியாத விடயத்தை சமாளிக்கவும் இந்த வடிவேலு வசனங்கள் உதவுகின்றன. அதேபோல யாரவது கிண்டல் பண்ணும்போதும் அதிலிருந்து தப்பிக்கவும் பதிலுக்கு போட்டுத்தாக்கவும் வடிவேலு வசனங்கள் உதவுகின்றன, இது உண்மையில் ஒரு ஆரோக்கியமான விடயமாகவே தெரிகிறது.

அதிகமாகனவர்கள் பேசும் வடிவேலு, மற்றும் வடிவேலுவிடம் பேசுவோரின் வசனங்கள்"முடியல,"
"சப்பா இப்பவே கண்ணை கட்டுதே "
"என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?"
"நான்   அப்படியே ஷாக்  ஆயிட்டேன் !!"
"வடை போச்சே "
"தம்பி டீ இன்னும் வரல "
" நான்... என்னை சொன்னன் "
"வரும்.. ஆனா வராது "
"அவளவு சத்தமாவா..... கேக்குது "
"ஆஹா  ஒரு  குருப்ப  தான்ய  அலையுராங்காய  "
"ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசிறன் "
"நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது "
" மணிக் கொரு தடவை  மங்குனி அமைச்சர்  என்று   நிரூபிக்கீரீர்  !!! ."
என்  இனமடா நீ !!  "
"க க க போ......"
"ஆணியே  புடுங்க வேண்டாம் "
" பட் எனக்கு அந்த டீலிங் பிடிச்சிருந்துது  " (அதாங்க பட் எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கின்னு புதுசா வந்திருக்கு )
"எவ்ளவு அடிச்சாலும் தாங்கிரானே இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லீற்ராண்டா "
"மாப்பு வச்சிண்டான்ரா ஆப்பு " 
"அவ்வவ்வ்வ்வ்.... "
"என்னா வில்லத்தனம் "
"அது போன மாசம் "
"வேனாம் வலிக்குது "
"அத.. சிலவு பண்ன்ணீ ற்றன்..... "
"கிளம்பீட்டாங்கையா  கிளம்பீட்டான்   " 
"Building  storngku  basement weakku"
" why  blood ? same blood"
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் தவறவிட்டவற்றை (அதிகம் உள்ளது ) பின்னூட்டலில் கூறுங்கள்.

இதுதவிர வடிவேலின் சில பிரபல்யமான பாத்திரங்களின் பெயர்கள்

கைப்பிள்ளை, வருத்தப்படாத வாலிபர்சங்கம்(இது வடிவேல் சார்ந்த ஒரு குழுப்பெயர் ) , சினேக்பாபு , வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி(Body சோடா ).....   இவ்வளவு தான் உடன ஞாபகத்துக்கு வந்தித்து, உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டலில் சொல்லுங்க....

"கையோ!! கையோ !! முடியல.....  முட்டிகிட்டு   நிக்கிது "