Sunday, December 26, 2010

பதிவெழுதுவதற்கு GOOD BYEஇந்த பதிவு நண்பர்களுக்கு மட்டுமே, ஏனையவர்கள் வாசிப்பதால் ஏற்ப்படும் மனச் சுமைகளுக்கு நான் பொறுப்பல்ல.இதுவரை நாட்களாக எனது கிறுக்கல்களையும் ஒரு பொருட்டாக மதித்து வாசித்தும் வாசிக்காமலும் பின்னூட்டமிட்ட சக பதிவர்களுக்கும், ஏதாவது ஒரு பதிவையாவது வாசித்த வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கிட்டத்தட்ட 15 மாதங்களாக பதிவெழுதியுள்ளேன், இப்போது சில காரணங்களுக்காக இனிமேல் பதிவெளுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். நான் எழுதுவது பிடிக்காவிட்டால் நேரடியாக சொன்னால் நானாகவே எழுதுவதை நிறுத்தியிருப்பேனே!! எதற்கு இப்படி மனது புண்படுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டும்? இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.மனதுக்கு ஆறுதலாக இருந்த பதிவுலகம் எப்போது என் மனதிற்கு இடைஞ்சலாக மாறிவிட்டதோ இனிமேல் அது எனக்கு தேவையில்லை. நான் எழுதாததற்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும், இருந்தாலும் இதுவரை எனக்கு ஆதரவளித்த நெஞ்சங்களுக்காக இந்த விடயத்தை தெரியப்படுத்துகிறேன். யாராவது ஒருவருக்காவது நான் எழுதாதது வருத்தமாக இருக்குமானால் அதுவே எனது இந்த 15 மாத கால எழுத்துக்குமான வெற்றியாக கருதுவேன், அப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.பதிவுதான் எழுதமாட்டேன் என்று சொன்னேனே தவிர பின்னூட்டமிடமாட்டேன் என்று கூறவில்லை, நண்பர்களின் தளங்களுக்கு வருவேன், பின்னூட்டம் இடுவேன், ஓட்டு போடுவேன், அவளவுதான். பதிவுலகம் எனக்கு இதுவரை கொடுத்த நண்பர்கள் போதும், அவர்களில் யாரையும் நான் இழக்க விரும்பவில்லை. அடுத்தவருக்கு பிடிக்காத விடயத்தை எதற்கு செய்யவேண்டும்? தயவு செய்து யாரும் என்னை மறுபடியும் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இது எனது பணிவான வேண்டுகோள். எல்லோருக்கும் என் பணிவான நன்றிகளை மீண்டும் கூறிக்கொள்கிறேன்

GOOD BYE


நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில இந்தமாதிரி ஒரு சில பதிவுகளை படித்த ஞாபகம் இருக்கு, இப்ப யாருமே இப்பிடி பதிவு எழுதிறமாதிரி தெரியவில்லை, என்ன காரணமாக இருக்கும்? :-)))யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன் :-)))என்னிக்காவது இவன் இப்படி சொல்லுவான், இவன் டாச்சரில இருந்து தப்பிக்கலாம் என்று மட்டும் கனவிலையும் நினைக்காதீர்கள் மக்களே :-) , நீங்க திட்டினாலும் சரி, "போதும் டாச்சர் பண்ணாத விட்டிர்ரான்னு" கெஞ்சினாலும் சரி எழுதிறத நிறுத்திற மாதிரி ஐடியா இல்லை, உங்க தலையெழுத்தை யாராலையும் மாத்த முடியாது :-)))

இதி ஒரு BOXING DAY சிறப்பு மொக்கை பதிவு :-)))))))


சரி இப்ப திட்டுறவங்க பின்னூட்டத்தில தாராளமா திட்டலாம், பெர்மிஷன் கிராண்டட்......

Friday, December 24, 2010

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (24/12/10)விஜயும் சீமானும்
அண்ணன் சிவகுமாருக்காக தம்பி சூரியாவின் 'ரத்த சரித்திரத்தை' மன்னித்த 'ஒரே தமிழன்' சீமான் இப்போது "தம்பி விஜயை மீது ராகுலை சந்தித்த ஒரே காரணத்திற்காக அவருக்கு தமிழ் பற்றில்லை என்று சொல்லிவிட முடியாது" என்றும் "அவரும் உண்மையான தமிழன்தான்" என்றும் கூறியுள்ளார். ஆனால் இதை விஜய் ராகுலை சந்தித்து இத்தனை மாதம் கழித்து இப்போ எதுக்கு சொல்லுறார் என்றுதான் புரியல? அடடடா இதை சொல்ல மறந்திட்டன்; நம்ம விஜயின் அடுத்தபடத்தின் பெயர் 'கோபம்', இதை 'ஒரே தமிழன்' சீமான் இயக்குகிறார், விஜய் இலங்கை தமிழராக நடிக்கலாமென்று கூறுகிறார்கள்.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜயின் காவலனுக்கு முக்கிய திரையரங்குகளை பெறுவதில் ஆளும் கட்சியினரால் பிரச்சனை என்று கூறப்பட்டாலும் காவலன் விஜயின் வழக்கமான திரைப்படங்களின் பாணியிலிருந்து விலகியிருப்பது போன்றே ட்ரெயிலரை பார்க்கும்போது தோன்றுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் காவலன் விஜய்க்கு ஐந்தோடு ஆறாகாமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அடுத்து ராஜாவின் இயக்கத்தில் 'வேலாயுதம்' திரைப்படம் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடியாவிட்டாலும் விஜயும் சீமானும் இணையும் 'கோபம்' திரைப்படத்தில் கதை, திரைக்கதையை விட சீமானின் சொந்தக் கோபத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் சந்தர்ப்பம் உண்டு; இதுவும், இதைத்தவிர விஜய் அ.தி.மு.க ஆதரவாளர் என்பதும், சீமான் தி.மு.க. எதிர்ப்பாளர் என்பதும் அரசியல் ரீதியாக 'கோபம்' திரைப்படத்திற்கு பாதகமாக அமையலாம்; மு.க குடும்ம்பமின்னா சும்மாவா?

சூர்யாவும் மாற்றீடும்
யாராவது ஒரு பெரிய ஹீரோ ஒரு படத்தில இருந்து விலகினாலோ அல்லது தூக்கப்பட்டாலோ அவருக்குப்பதில் உடனடியாக சிபாரிசாகும் முதற் பெயர் 'சூர்யா'வினுடயதுதான். சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான மூன்று திரைப்படங்களான நேருக்கு நேர், நந்தா, கஜினி ஆகிய மூன்று திரைப்படங்களும் அஜித் நடிக்கவிருந்து சூர்யாவுக்கு கைமாறிய திரைப்படங்கள்தான். சில நாட்களுக்கு முன்னர் கூட அஜித் கவுதமுடன் இணையவிருந்த படத்தில் அஜித்திற்கு பதில் சூர்யா நடிப்பார் என்று உடனடியாக பேசப்பட்டாலும் பின்னர் அதில் சூர்யா நடிக்கவில்லை, இப்போது ஷங்கர் ரீமேக் செய்யும் '3 இடியட்ஸ்' திரைப்படத்தில் இருந்து நீங்கிய / நீக்கப்பட்ட விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பதாக பேச்சுக்கள் உள்ளன, ஆனாலும் இதுவரை இந்த செய்தி உறுதிப்படுத்தப் படவில்லை.

மணிரத்னம், பாலா, அமீர், ராம் கோபால் வர்மா, ரவிக்குமார், முருகதாஸ், கௌதம்மேனன், ஹரி என பல பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ள சூர்யா கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஷங்கருடன் இணையும் வாய்ப்பை பயன்படுத்துவார் என்றே தோன்றுகிறது. 'ரத்தசரித்திரம்' தோல்விச் சரித்திரம் ஆகிய நிலையில் 'எழாம் அறிவு' சூர்யாவுக்கு மிக முக்கியமான திரைப்படம். எழாம் அறிவிற்கு அடுத்து எந்த திரைப்படத்திலும் சூர்யா கமிட் ஆகாத்ததால் 3 இடியட்சில் நடிப்பதற்கு கால்சீட் பிரச்சினைகள் இடைஞ்சலாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் டெரர் டிரெயிலர்
ஏறுமுகத்தில் இருக்கும் கார்த்தி இதுவரை நடித்த நான்கு திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன் தவிர்த்து பருத்திவீரன், பையா, நான் மகானல்ல என ஏனைய மூன்றுமே சூப்பர் ஹிட்டானவை. பிரபல நாயகர்கள் வெற்றியை தேடிக்கொண்டிருக்க, தேடிவந்த வெற்றி மூலம் பிரபல கதாநாயகனாகிய கார்த்தியின் பொங்கல் வெளியீடான 'சிறுத்தை' அவருக்கு மிக முக்கியமான திரைப்படமாகும். இரட்டை வேடத்தில் முதல்முதலாக நடித்திருக்கும் கார்த்தியின் 'சிறுத்தை' திரைப்படத்தின் டிரெயிலர் பயங்கர டெரராக இருக்கிறது, ரொம்பவும் ஓவரான ஹீரோயிசமோ என்று என்ன தோன்றுகிறது.

எது எப்பிடியோ பையா, நான் மகான் இல்லை என இரு தொடர் வெற்றிகளுக்கு பின்னர் சிறுத்தை வெளியாகி வெற்றிபெறும் பட்சத்தில் அது கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும். கூடவே முன்னணி நாயகர்களில் ஒருவரான விஜயின் காவலனும் பொங்கல் வெளியீடாக வெளிவருவதனால் சிறுத்தை vs காவலன் போட்டியில் கார்த்தி ஜெயிக்கும் பட்சத்தில் கார்த்தியின் மாக்கெட்டும் மாஸ் அந்தஸ்தும் அதிகருக்கும் வாய்ப்பு உள்ளது. இரண்டுமே பக்கா கமர்சியல் படங்கள் என்பதால் விஜய்க்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தாலும் விஜய்க்கு எதிரான அரசியல் அலைகள் கார்த்திக்கு சாதகமாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை!!!!

ஒரு டவுட்டு..... சூரியா 'சிங்கம்', கார்த்தி 'சிறுத்தை', அப்ப(பா) சிவகுமார்? :-)

தனுஸின் ஆடுகளம்
யாரடி நீ மோகினி, பொல்லாதவன் என தொடர் வெற்றிகளை கொடுத்து மேலே சென்று கொண்டிருந்த தனுசிற்கு படிக்காதவன், குட்டி, உத்தம புத்திரன் என தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் கைகொடுக்காத நிலையில் வெற்றிமாறன், ஜீ.வி.பிராகாஷ் (பொல்லாதவன்) வெற்றிக்கூட்டணியில் தனுஸின் புதிய திரைப்படமான ஆடுகளம் பொங்கலுக்கு திரைகாண இருக்கின்றது. முதல்ப்படத்தில் எல்லோரையும் தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த வெற்றிமாறன் தனது அடுத்த திரைப்படமான ஆடுகளத்தில் என்ன செய்துள்ளார் என்கின்ற எதிர்பார்ப்பு படத்திற்கு பிளஸ், அதுதவிர பாடல்களும் நிச்சயம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும், அதைவிட மிகப் பெரும்பலம் சண் பிக்சர்ஸ் ஆடுகளத்தை வெளியிடுவதுதான். தொடர்ந்து இரு தடவைகளும் (ATM vs பொல்லாதவன், வில்லு vs படிக்காதவன்) விஜயுடனான போட்டியில் ஜெயித்த தனுஸின் புதிய திரைப்படமான 'ஆடுகளம்' மீண்டும் விஜய் படத்தை (காவலன்) நேரடியாக சந்திக்க உள்ள நிலையில் தனுஸ் விஜயுடனான போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா என்பதை பொங்கல்வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இளைஞனும் லட்டுக்களும்
காவலன், ஆடுகளம், சிறுத்தை என மூன்று முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு போட்டியாக கலைஞரின் கதை திரைக்கதையில் பா.விஜய் நடித்த 'இளைஞன்' திரைப்படமும் வெளிவரவிருக்கிறது. அதிகமான முன்னணி திரையரங்குகளை உதயநிதி வளைச்சு போட்டாலும் திரையரங்கிற்கு கூட்டம் நிச்சயம் வரப்போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். இதானால் கூட்டத்தை வரச்செய்வதர்க்காக முன்னர் கண்ணம்மா, மண்ணின் மைந்தன், பாசக்கிளிகள் திரைப்படங்களுக்கு கூட்டத்தை வரச் செய்வதற்காக இலவச டிக்கட்டுக்களுடன் லட்டுக்களையும் இலவசமாக வழங்கியதைப் போல இளைஞனுக்கும் டிக்கட்டுகளும் லட்டுக்களும் இலவசமாக வழங்கப்படலாம்!!! தேர்தல் வேறு நெருங்குவதால் பழக்க தோஷத்தில் இந்தத்தடவை குவாட்டரும் கோழிப்புரியாணியும் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. இவற்றைவிட 'இளைஞன்' வெளியாகி அடுத்தவாரம் கலைஞர் டிவியின் 'டாப் 10' திரைப்படங்களின் வரிசையில் முதலிடத்தில் 'இளைஞன்' திரைப்படம் பிடித்துக் கொண்டத்தையும், அதற்க்கான காரணத்தை பிரியதர்சனி விபரிக்கும்போது செம காமடியாக இருக்கும்.

மீண்டும் ஆரம்பித்திருக்கும் ' மங்காத்தா' நிலவரம், மன்மதன் அம்பு BOX OFFICE ரிப்போர்ட், பொங்கல் ரிலீஸ் படங்களின் பிந்திய நிலவரம், மற்றும் ஏனைய சூடான விடயங்கள் பற்றி அடுத்த 'கொலிவூட் ரவுண்ட் - அப்' பதிவில் அலசுவோம். (இது பதிவை முடிக்கிறதுக்கு ஜஸ்ட் ஒரு பினிஷிங் டச் :-) )

Wednesday, December 22, 2010

ஞாபகம் வரும் 50 ஜோடிக்களின் புகைப்படங்கள்

பிரபலமான ஒருவருடைய பெயரை சொல்லும்போது இன்னுமொரு பிரபலத்தின் பெயர் ஞாபகத்திற்கு வருவது வழமை; குறிப்பிட்ட பிரபலமும் அவர்பெயர் சொல்லும்போது ஞபாகம் வரும் பிரபலமும் நண்பர்களாகவோ, போட்டியாளர்களாகவோ, எதிரிகளாகவோ இருக்கலாம்; சிலநேரங்களில் வேறு வேறு துறையினராக கூட இருக்க்கலாம். அப்படியானவர்களில் 50 ஜோடிகள் தமது களங்களுக்கு அப்பால் ஒன்றாக, நட்பாக இருக்கும் புகைப்படங்களினை கூகிளின் உதவியுடன் தேடிப்பிடித்தி அதையே ஒரு பதிவாக இட்டுள்ளேன். இப்படியான ஜோடிகள் இன்னும் பலர் இருந்தாலும் அவர்களில் எனக்கு தெரிந்தவர்களது புகைப்படங்கள் சிக்கவில்லை என்பதால் இன்னும் சில முக்கிய ஜோடிகளை இணைக்க முடியவில்லை. உதாரணமாக எஸ்.பி.பி & ஜேசுதாஸ், எம்.எஸ்.வி & இளையராஜா, கண்ணதாசன் & வைரமுத்து, விக்ரம் & சூர்யா, ஜெயசூர்யா & களுவிதாரண, கலைஞர் & ஜெயலிதா, புரூஸ்லி & ஜாக்கிசான், ஒசாமா & புஷ் :-).....

காந்தி & சுபாஸ் சந்திர போஸ்


சேகுவரா & காஸ்ரோ


பெரியார் & ராஜாஜி


எம்.ஜி.ஆர் & கலைஞர்


மன்மோகன் & அத்வானி


மஹிந்த & பொன்சேகா


சிவாஜி & எம்.ஜி.ஆர்


அமிதாப் & ரஜினி


கமல் & ரஜினி


ஷாருக் & அமிதாப்


ஷாருக் & அமீர்


அஜித் & விஜய்


சிம்பு & தனுஸ்


கமரூன் & ஸ்பீல்பேர்க்


பாலச்சந்தர் & பாரதிராஜா


மணிரத்தினம் & ஷங்கர்


இளையராஜா & ரஹுமான்


வாலி & வைரமுத்து


வடிவேல் & விவேக்


வோன் & முரளி


சச்சின் & லாரா


வோல்ஸ் & அம்புரூஸ்


மக்ரா & வோன்


கங்குலி & சச்சின்


மஹேல & சங்கா


மக்ரா & பொலக்


ஸ்டீவ் & மார்க்


சச்சின் & ஷேவாக்


ஸ்ரீநாத் & கும்ளே


அர்ஜுன & அரவிந்த


வக்கார் & வசீம்


முரளி & வாஸ்


அண்டி & கிராண்ட் பிளவர்


பெடரர் & சாம்பிராஸ்


நடால் & பெடரர்


சாம்பிராஸ் & அகாசி


ஸ்டெபி கிராப் & நவரட்ணலோகா


செரீனா & வீனஸ்


கிளைச்டர்ஸ் & ஹெனின்


ரொனால்டீனியோ & ரொனால்டோ


ஹென்றி & ரொனால்டீனியோ


கிறிஸ்டியானோ & மெசி


ரொனால்டோ & சிடான்


கிறிஸ்டியானோ & ரூனி


ஓவன் & பெக்கம்


பொடோல்ஸ்கி & க்ளோஸ்


ரொசி & ஸ்டோனர்


ரொசி & ஷூமேக்கர்


ஷூமேக்கர் & அலோன்சோ


ஹமில்டன் & அலோன்சோ


ஒரு பதிவு போடுறதுக்கு எப்பிடி எல்லாம் ஜோசிக்க வேண்டி இருக்கு, சப்பப்பப்பா முடியல :-)

பின்னிணைப்பு (நன்றி karthik)


ஜெயலிதா & சசிகலா


பயஸ் & பூபதி