Saturday, October 31, 2009

"சனத் விலகிக்கிங்க" ஒரு ரசிகனின் அன்புமடல்

அன்புடன் சனத்திற்கு... எமக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து உங்க அளவுக்கு யாரையும் ரசிச்சதில்ல கிரிக்கெட் என்ற சொல் காதில் விழுந்தால் மனதில் பதியும் உருவம் நீங்கள் சனத்.அடுத்தவாரம் வரும் match க்கு முதல்வாரமே தயரகிவிடுவோம், அது ஒரு காலம் ! எல்லா நண்பர்களும் ஒன்றாக சேர்ந்தது ஒரே இடத்தில் tost போடுவதற்கு ஒரு மணி முன்னரே match பார்ப்பதற்கு தயாராகிவிடுவோம். உங்க wicket போனால் மயானஅமைதி போல இருக்கும் வீடு , அரை மணி நேரம் யாரும் யாருடனும் பேசமாட்டோம், பேயறைந்தது போலிருப்போம் அப்படி ஒரு விரக்தி எங்களுக்குள் இருக்கும்.படுத்தால்,சாப்பிட்டால் என சதா சனத் , ஸ்ரீலங்கா என்று திரிந்த காலங்கள் அவை.தற்போதும் match பார்ப்பது குறயாவிட்டாலும் சில பல காரணங்களுக்காக அந்தவெறித்தனம் குறைந்துவிட்டது.ஆனால் சனத் என்னும் சொல்லின் ஈர்ப்பு கடைசி வரை எம்மை விட்டு அகலாது. சனத் உங்களை மாதிரி ஒரு cricketer இனிமேல் சிறீலங்காவில் மட்டுமல்ல உலகத்திலேயே வரமாட்டான். 13000 runs 90 strike-rate இல் இனிமேல் எவன் அடிப்ப்பான்? அல்லது 13000 runs 320 wicket 100 catch தான் யாருக்கு வரும்.சனத் நீங்கள்தான் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றின் "best cricketer" என்பதை சவால் விட்டு கூறுவேன். ஓருவேளை நீங்கள் முதல் 100 match உம் ஏழாம் இலக்கத்திற்கு குறைவாக இறங்கி ஆடாமல் ஆரம்ப வீரராக ஆடியிருந்தால் யார்ர்கண்டது 18000 runs உடன் சச்சினின் one day batting record இலும் பார்க்க சிறந்த record உடன் வரலாற்றின் சிறந்த one day player ஆகக்கூட இருந்திருக்கலாம். இப்ப உங்களுக்கு வயசு நாற்பது , உங்க உடம்பு ஒத்துழைச்சாலும் மனம் முன்னர் போல திடகாத்திடமாக இல்லை.அதற்க்கு பல காரணங்கள் (சங்ககார , மகேல , சில பல தெரிவாளர்கள் ) நீங்கள் உங்களுடன் களமிறங்கும் சக ஆரம்பவீரர்களை விட அதிகம் ஆதிக்கம் செலுத்துபவர், ஆனால் சமீபகாலமாகவே நீங்கள் ஒருபுறம் நிற்க டில்ஷான் மறுபுறம் வேகமாக ஓட்டங்களை குவிப்பதுவும் அண்மைக்காலங்களில் உங்கள் wicket ஐ நீங்கள் பறிகொடுப்பதற்கு வழிகோலுகிறது.முக்கியமாக ஒவ்வொரு batsman க்கும் இருக்கும் அதிஷ்டம் உங்களை அண்மைக்காலமாக எட்டிக்கூடப்பார்ப்பதில்லை. 2005 ஆம் ஆண்டு நீங்கள் கட்டாயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென்று தெரிவாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டீர்கள் . அதே தெரிவாளர்கள் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்காக உங்களை மீண்டும் அழைத்தார்கள், அந்த போட்டித்தொடரின் one day series 5- 0 என இலங்கையால் வெல்லப்பட்டபோது , நீங்கள்தான் தொடர் நாயகன் (man of the series) . (இங்கிலாந்தில் உங்களை யாரும் விமானநிலையத்தில் வரவேற்கவராதது மறக்கமுடியாதது ).அங்கும் நீங்கள்தான் தேவைப்பட்டீர்கள். மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டவேளை ஜனாதிபதியின் சிபாரிசில் 2007 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தது .அந்த தொடரில் 450 ஓட்டங்களை குவித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை சென்ற அணிக்கு பக்கபலமாக இருந்தீர்கள். அதன்பின்னர் சிலதடவை rest என்ற பெயரில் நீங்கள் நிப்பாட்டப்பட்டாலும் நேரடியாக drop பண்ணப்படவில்லை. ஆனால் இப்போது தெளிவாகத்தெரிகிறது உங்களுக்கு வலைவீசிவிட்டர்கள் என்று. உங்களை middle order இக்கு மாற்றியது ஏன்என்று எமக்கு நன்றாகத்தெரியும் . ஒரேயடியாகத்தூக்கினால் வரும் சர்ச்சையை தவிப்பதர்க்ககவே இந்த காய்நகர்வு .இதுவரை நீங்கள் middle order இல் பலதடவை விளையாட முயற்சித்தபோதும் நன்றாக விளையாடியதில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் runs அடிக்கவேண்டிய சுழ்நிலை. இருப்பினும் இது உங்களுக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலை. runs அடித்தால் தொடர்ந்தும் middle order , இல்லையேல் ஒரேயடியாக ஆப்பு. சனத் நீங்கள் புதுப்பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விரட்டிவிரட்டி அடித்தவர்.களத்தில் நுழைந்தவுடன் பழையபந்தில் சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எவளவு கடினம் என்று எமக்குத்தெரியும்.ஆனால் உங்களால் முடயும், பல டெஸ்ட் innings களில் நீங்கள் middle order இல் சாதித்துள்ளீர்கள்.இந்த ஒருதொடரில் மட்டும் முளுக்கவனத்துடன் நிதானமாக நன்றாக ஆடுங்கள்.தொடர் முடிந்ததும் உடனடியாக முகத்திலடித்தமாதிரி உங்கள் ஓய்வை அறிவித்துவிடுங்கள். 10 வருடங்களுக்கு முன்பே சனத் இல்லாத இலங்கைஅணியை கற்பனைகூட செய்யமுடியவில்லை. சனத் ஒய்வு பெற்றால் நாம் எப்படி match பார்ப்பது என்று மோட்டுத்தனமாக யோசித்த காலங்கள் அவை. எங்கள் அளவிற்கு வேறு யாரும் உங்களுக்கு supporters இருக்கமாட்டர்கள் என்ற எண்ணமும் எங்களிடம் அதிகமாகவே இருந்தது.கொழும்பு சென்றால் சனத்துடன் புகைப்படம் எடுப்பது எம்மில் பலருக்கு கனவாக இருந்தது , சிலருக்கு நிறைவுமேறியது.இன்று நாங்களே சொல்கிறோம் போய்விடுங்கள் சனத், இல்லாவிட்டால் உங்களுக்கும் அரவிந்த,அர்ஜுன, இஜாஸ்,இன்சமாம்,கங்குலி,டிராவிட், என ஆசிய அணிகளின் வீரர்களுக்கு நடந்ததுதான் நடக்கும். நீங்கள் cooling glass அணிந்தோ அல்லது முகத்திற்கு பூச்சுக்கள் பூசியோ நாம் பார்த்ததில்லை, எதிரணி வீரரிடம் செய்கையாலோ வாய்ப்பேச்சாலோ மோதிப்பார்த்ததில்லை, நீங்கள் வேங்கை சனத், உங்களிடம் அடிவாங்கி படம் நடிக்க போன பந்துவீச்சாளரும் உண்டு, உங்க cut short உம் flick short உம் இனிமேல் எங்களால் பார்க்கமுடியாதுதான், என்ன செய்வது எல்லாவற்றுக்கும் முடிவென்று ஒன்று உள்ளதல்லவா. ஆனால் ஒன்று சனத் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அதேபோல் நீங்கள் இல்லாத இலங்கை அணி சூனியமானது.அந்த சூனியத்தை ரசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. உங்களை நாங்கள் அடிக்கடி பார்க்கணும் முடிஞ்சா வர்னணையாளராக வந்து சந்தோசப்படுத்துங்க.நீங்க உங்க குடும்பத்தோட சேர்ந்து மீதிக்காலங்களில் பூரண உடல்நலத்துடனும் பூரண ஆயுளுடனும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் . இப்படிக்கு என்றும் உங்கள் உண்மையான ரசிகன்

இந்திராகாந்தி அவர்களுக்கு அஞ்சலியுடன் ஒரு கேள்வி ?

இந்திராகாந்தி அவர்களின் 25 ஆவது நினைவு தினத்திலே அவரிடம் ஒரே ஒரு கேள்வி ! " நீங்கள் இருந்திருந்தாலும் உங்கள் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் போலத்தான் செய்திருப்பீர்களா? அல்லது பங்களாதேஷில்ப்போல் இலங்கையிலும் செய்திருப்பீர்களா? " நாயகன் ஸ்ரைலில் "தெரியலையே" என்று மட்டும் கூறாதீர்கள்.

Friday, October 30, 2009

நடிகர்களின் தயவை நாடும் கலைஞர்?

அண்மைக்காலமாகேவே கருணாநிதி அதிகமாக நடிகர்களையும் நடிகர் சங்கத்தினரையும் தன் பக்கம் சாய்ப்பதற்கு அதீத முயற்ச்சி எடுத்து வருகின்றார். நடிகைகளின் விபச்சார செய்திகளுக்காக பத்திரிகையாளரை கைது செய்தது முதல் இன்று சரத்குமாரின் பழஸிராஜா திரைப்பட சிறப்பு காட்சி பார்த்தது வரை நிறைய சம்பவங்கள்.இது அவர் தன்மீதும் தன்கட்சி மீதும் வைத்துள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. சிலகாலமாகவே சுப்பர் ஸ்டார் ரஜினியின் அருகிலேயே அனைத்து பொது நிகழ்வுகளிலும் காணப்படுகின்றார். ரஜினியைப்பற்றி புகழ்ந்து தள்ளுகின்றார். இதன்மூலம் ரஜினியை தன் அன்பு வலையில் விழவைத்து எதிகாலத்தில் அரசியலில் இறங்காமல் ஸ்டாலினை பாதுகாப்பதற்காகவோ? அல்லது அரசியல் ஒரு சாக்கடை தம்பி நீ இமயமலைக்கே போ என்று ரஜினிக்கு உணர்த்தவா? இப்ப கடைசியாக சரத்குமார்; முன்னாள் தி.மு.கா உறுப்பினரான இவர் கடந்த பொதுத்தேர்தலில் தனது மனைவி? ராதிகா சகிதம் ஜெயலலிதாவின் காலில் போய் விழுந்தவர். பின்னர் விஜயகாந்த்தை பார்த்து தனிக்கட்சி தொடக்கி பூசை போட்டுக்கொண்டவர். இவரைப்போய் எதற்கு கருணாநிதி வளைக்கணும்? ஆரம்பத்தில் நடிகர் சங்க சந்திப்பில் சரத்குமார் கருணாநிதியை சந்தித்தபோது சரத்குமார் தான் வலியப்போய் ஒட்டிக்கொள்ள பார்க்கிறாரோ என்று நினைத்தேன் ஆனால் இன்று முடியாத உடல் நிலையிலும் பழஸிராஜா திரைப்பட சிறப்பு காட்சி பார்த்து சரத்குமாரை பாராட்டியது கருணாநிதி சரத்குமாருக்கும் பயப்படுகின்றார் என்றே எண்ணத்தோன்றுகிறது. நடிகர்சங்கத்தை கையில் வைத்திருந்தால் கூப்பிட்டபோதெல்லாம் வந்து தன்னை துதி பாடுவார்கள் என்றோ என்னமோ அவர்கள் வைக்கும் எந்த கோரிக்கையையும் கலைஞர் தட்டுவதில்லை.இதற்காகவே சந்திரசேகரை தூதுவிட்டு ராதாரவியையும் நல்லவிலைக்கு வாங்கிவிட்டார். இதனால் இருவருக்கும் நன்மையே அண்றி மக்களுக்கு? இப்படியே போனால் இனி செந்தில் கோவைசரளா சிம்ரன் என அனைவரது காலிலும் விழுந்தாலும் விழுவார். இவருக்குத்தான் வெட்கம் மானம் என்பதே இல்லையே.இல்லாவிட்டல் எம். ஜி.ஆர் இடம் தொடர்ந்து 3 தடவை தோற்றபின்னரும் 5 முறை முதலமைச்சரகியத்தை பெருமையாய் கூறுவாரா?அந்த ஐந்து முறையில் ஒருமுறை அண்ணா காலமானபோதும் மறுமுறை எம்.ஜி.ஆரின் அதரவோடும் 96 இல் ரஜினியின் ஆதரவோடும் ஜெயித்ததை மறந்து விட்டார் போலும். தான் ஜெயித்த்து கூட ஜெயலலிதாவின் மீது மக்களுக்கிருந்த அதிர்ப்தியால் ஒழிய இவர் மீதிருந்த நம்பிகையாலல்ல. சரி ஏன் தான் இவருக்கு இந்த நடிகர்களின் செல்வாக்கு தேவைப்படுகிறது? தனது காலம் முடியப்போகிறது, தன்னால் இயன்றளவு குடும்பத்திற்கு சொத்து சேர்த்தாகிவிட்டது, பதவிகளும் கொடுத்தாச்சு. ஆனால் தான் இல்லாத காலத்தில் தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் அரசியல் வாழ்க்கையை எவனாவது ஒரு நடிகன் பறித்து விட்டால் என்ன செய்வது? அதுதான் ஒரு நடிகன் பறித்தால் இன்னொரு நடிகன் வாங்கி கொடுக்கமாட்டானா என்ற ஒரு நப்பாசைதான். கருணாநிதி சபாவில் நடத்திய நாடகங்களை விட அரசியலில் நடத்திய நாடகங்கள்தான் அதிகம், இன்று கடைசியாக முல்லைப் பெரியாறு அணை கண்டனக்கூட்டம் வரைக்கும்.ஆனால் சக்கைபோடு போட்டது என்னவோ யுத்தநிறுத்த உண்ணாவிரதமும் எம்.பிக்களின் இலங்கை விஜயமுமே , ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாடகங்கள். படிப்பறிவுள்ள மக்களுக்கு புரிந்த இந்த நாடகங்கள் வெகு சீக்கிரமே பாமர மக்களுக்கும் புரியும், இது கருணாநிதிக்கு விளங்கியிருக்கும் அதனால்த்தான் இந்த நடிகர்கள் சகவாசம்.போதாக்குறைக்கு உலகத்தமிழ் மகாநாடு...? என்னதான் நடிகர்களையும் நடிகர்சங்கத்தையும் கையில் வைத்திருந்தாலும் பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொன்னது போல் கலைஞர் அவர்களே.... '' தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கௌவும் தர்மம் மறு படியும் வெல்லும் " "கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் தர்மத்தை அப்போது வெல்லக் காண்பாய் "