Tuesday, September 29, 2009

மி(ச)னி வேர்ல்ட் கப்

பல பெரிய அணிகளுக்கு மினி வேர்ல்ட் கப் (பழைய பெயர் ) சனி வேர்ல்ட் கப் ஆகிவிட்டன. முக்கிய அணிகள் வெளியேற்றம் போட்டியின் சுவாரிசியத்தை குறைத்துள்ளது.கடந்தமுறை இந்தியாவிலும் இதேபோலவே ஆசிய அணிகள் நான்கும் அரைஇறுதிக்கு வராமல்போக அரைஇறுதி,இறுதி போட்டிகள் விறுவிறுப்பு இல்லாது போயின. இம்முறையும் சென்றமுறை போன்றே சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அரைஇறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் கப்பை வெல்லும் என்று எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா மற்றும் முதல் ஆட்டத்திலெயே தென் ஆபிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இலங்கை ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவும் வெளியேறும் நிலையில் உள்ளது , இங்கிலாந்து கழகங்களை விட மோசமான நிலையில் இருந்த நியூசிலாந்து,இங்கிலாந்து மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொற்ப ஆட்டங்களே ஆடிய பாகிஸ்தான் என எதிர்பார்க்காத அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன மீதமுள்ள அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் போதிலும் ஜெகனஸ்பெர்க் முதல் களதடுப்புக்கும் செஞ்சுரியன் முதல் துடுப்பாட்டத்தி்ற்கும் சாதகமாக உள்ளதால் மீண்டும் நாணய சுழற்சியே போட்டியை தீர்மானிக்க போகிறது பொறுத்திருந்து பார்ப்போம் இரண்டாம் முறையாக கிண்ணம் ஆஸ்திரேலியாவுக்கு அல்லது நியூசிலாந்துக்கா முதல் முறையாக இங்கிலாந்து அல்லது பாகிஸ்தானுக்கா என்று.

Wednesday, September 16, 2009

கோம்பாக் கப் ரவுண்ட் அப்

முரளிக்கேவா ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா, சனத்தை ட்ரொப் பண்ணி வாஸை ட்ரொப் பண்ணி,இப்ப முரளியுமா? என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு(!?) வழங்கியது வரை. முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான ?!! களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது. இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம். கப்டன் ஹோட் நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சு?டக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட கோவிச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க . மசாலா இல்லா மகேல மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான். சங்கிலி மன்னர்கள் அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர். இள ரத்தங்கள் மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று !!! குறிப்பு இந்த பதிவினை இட நான்கு நாட்கள் முயற்சி செய்தாலும்,வேலைப் பளு காரணமாக முடியவில்லை.சாம்பியன்ஸ் கிண்ணம் தொடங்க இரு நாட்கள் இருப்பதால் சரியான நேரத்தில் இப்பதிவு வருவதாக உணர்கிறேன்.

Saturday, September 12, 2009

ஒரு நாள் ஆட்டம்

நியூசிலாந்தை வென்றவுடன் இந்தியா நம்பர் 1 என்று பீத்திய இந்திய ஊடகங்கள்இனி வாயை பொத்த வேண்டியது தான். அதுவும் குறிப்பாக ஒரு ஆங்கில ஊடகம். இந்தியா இண்டைக்கு தோத்ததால இரண்டு பாயிண்ட் குறையும், இனி பைனல் வென்றாலும் ஒரு பாயிண்ட் தான் கூடும் ஆக இந்தியாவின் நம்பர் 1 கனவு வெறும் ஒரு நாள் தான். ஒருநாள் முதல்வர் ஹா ஹா .முடிஞ்சால் மினி வேர்ல்ட்கப்பில ட்ரை பண்ணுங்கப்பா. நாணயசுழற்சி போட்டி முடிவை மீண்டும் தீர்மானித்து விட்டது. சங்கா , தோனி கடவுளை கும்பிடுங்கோ டோஸ்ட் வெல்ல வேணும் எண்டு. இவனுகள் போடுற பிச் மாதிரித்தான் இரண்டு ரூபா குத்தியும் ,ஐந்து ரூபா குத்தியும் 90 % கெட் தான் விழும். அது பெரும்பாலும் எல்லா நாட்டு கப்டின் மாருக்கும் தெரியும், வேணுமெண்டால் அவதானிச்சு பாருங்கோ . நம்ம நாட்டில மேட்ச் நடக்கிறதால நம்ம சங்ககார தான் கொயின சுண்டோனும், தோனிக்கு நல்ல சான்ஸ் ஏன்னா இண்டைக்கு தவறின கெட் பைனல் மாட்ச்சும் தவறுமா என்ன? நம்ம நாணயம் எல்லாம் தான் கோடினதாச்சே தவறுமா.

Wednesday, September 9, 2009

வெற்றிக் கனி

கடைசியாக அனைத்து எதிரான விமர்சனங்களையும் தாண்டி கந்தசாமி வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் 4.5 கோடிக்கு விற்கப்பட்ட கந்தசாமி மூன்று வாரங்களில் 3.9 கோடிகளுக்கு வசூல் செய்துள்ளது வரும் வாரம் அளவில் போட்ட முதலை எடுக்கும் நிலையில் உள்ளது பின்னர் வரும் ஒவ்வொரு பைசாவும் லாபமே அந்த வகையில் சென்னையில் மட்டும் 1.3 கோடி - 1.5 கோடி வரை லாபம் கிடைக்கும் அப்படி என்றால் மொத்த தமிழ் நாட்டில் எவ்வளவு லாபம் வரும் என்று பார்க்கலாம் . வெளி நாடுகளில் குறிப்பாக இலங்கை இங்கிலாந்து நாடுகளில் இன்னமும் வசூல் வந்த வண்ணம் உள்ளது இருப்பினும் சில விஜய் அஜித் ஆதரவு இணையதளங்கள் படம் சராசரி என்று ஒப்புக்கு சப்பாணி வாசிக்கின்றன. இருப்பினும் உங்களுக்காக சென்னை பாக்ஸ் ஆபீஸ் இதோ.

000000

[][][][]

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14909140

00000

இப்ப எங்கடா கொண்டுபோய் உங்க மூஞ்சிகளை வைக்கபோறிங்க.

0000

[][][][]

Tuesday, September 8, 2009

எப்பவுமே இப்பிடித்தான்

கொழும்பில ஒரு மேட்ச் ஒழுங்காய் பாப்பமெண்டால் இந்த பிச் போடுற செம்மலி கூட்டம் விடாதுகள். இந்தியாவும் பாகிஸ்தானும் வரேக்க மட்டும் நல்ல பேட்டிங் பிச் போட்டு வாங்கி கட்டுறது பிறகு நியூசிலாந்து இங்கிலாந்து எண்டு வரேக்க சிலோ பிச் போட்டு கழுத்தறுக்கிறது இதே வேலையா போச்சு. இந்தியா பாகிஸ்தானில் எப்பயாவது சிலோ பிச் போட்டு பாத்து இருக்கிறீங்களா ? பிச்சை ஒழுங்க போடாம சனத் அடிக்கேல்லை வயசு போட்டுது எண்டு சும்மா சத்தம் போட கூடாது அடுத்த இந்தியா மாட்சிக்கு நல்ல பேட்டிங் பிட்ச் போட்டு வாங்கிகட்டுவினம், வேணுமெண்டால் இருந்து பாருங்கோ. எல்லாத்துக்கும்இந்தியாட்ட ஓடுற நீங்கள் இந்தா பிச் போடுறதுக்கும் இந்தியாட்ட போனால்player's க்கு நல்ல career உம் வரும் நாங்களும் நல்ல மேட்ச் பார்க்கலாமே.