Wednesday, December 12, 2012

ரஜினி ஒரு முன்னுதாரணம்...ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

ரஜினி வெறுமனே தமிழ் சினிமாவின் முதல்வன் மட்டுமல்ல, அவர்  பல ரசிகர்களுக்கு  வழிகாட்டி.  அந்தஸ்தில் மட்டும் ரஜினியின் இடத்திற்குவர ஆசைப்படும் இளம் நாயகர்கள் ரஜினியின் உயர்ந்த பண்புகளை பின்பற்றினாலே பாதி வெற்றியை பெற்றுவிடலாம்.

நேரம் தவறாமை, யாராக இருந்தாலும் எந்தவயதினராக இருந்தாலும் ரஜினி கொடுக்கும் மரியாதை, தொழில் பக்தி, வெளிப்படையானபேச்சு, விட்டுக்கொடுத்தல், நன்றி மறவாமை, நட்புக்கு மரியாதை என ரஜினியின் பண்புகள் பற்றி அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அவர் எப்படி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கிறார் என்பதற்கு சில சம்பவங்கள்.

சிவாஜி ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருந்த நேரம், சிவாஜி பற்றி பரபரப்பாக மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன, அந்தநேரத்தில் இந்தியளவில் ஒரு விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது, யார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்? ரஜினியா?, அமிதாப்பச்சனா ? என்பது தான் அது. CNN, NDTV போன்ற ஆங்கில ஊடகங்களால் நடாத்தப்பட்ட வாக்களிப்பில் உலகம் முழுவதுமுள்ள இந்தியர்கள் வாக்களித்தனர், அந்த வாக்களிப்பில் ரஜினி அமிதாப்பச்சனை விட கணிசமான வாக்குகள் அதிகமாக பெற்றதனால் ரஜினியை இந்திய சுப்பர் ஸ்டார் என அந்த ஊடகங்கள் அறிவித்தன.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில்  2000 பேரளவில் வாக்களிக்கும் ஒரு குறிப்பிட்ட கல்லூரி வாக்களிப்பில் ஓரிரு வாக்குகள் அதிகமாக அதிகமாக பெற்று, பழசை மறந்து  தங்களை தாங்களே விளம்பரப்படுத்தும் நடிகர்கள் மத்தியில்; வட இந்திய ஊடகங்கள் உலகம் முழுவதிலுமுள்ள இந்தியர்களினால் வழங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் வழகிய 'இந்தியன் சுப்பர் ஸ்டார்' பட்டத்தை ஏற்க மறுத்த ரஜினி "நான் வெறும் ராஜா தான், அமிதாப்பச்சன் தான் உண்மையான சக்கரவர்த்தி" எனு பகிரங்கமாக NDTV யில் தானே நேரடியாக கூறி அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாரென்றால் அது அமிதாப் மீது ரஜினி வைத்திரக்கும் மதிப்புத்தான் காரணம், அதுதான் ரஜினி.

 2003 ஆம் ஆண்டு சாமி வெற்றிவிழா மேடையில் பேசிய ரஜினி "சுப்பர்ஸ்டார் என்பது ஒரு நாற்காலி மாதிரி, யார் தொடர்ந்து ஹிட் கொடுக்கிறார்களோ அவர்கள் அதிலே உட்காரலாம், அப்படி என்று பார்த்தால் இன்று அடுத்தடுத்து 5 ஹிட்களை விக்ரம் கொடுத்துள்ளார், அப்படியென்றால் அவர்தான் சூப்பர் ஸ்டார்" என்று கூறினார். எப்பேற்பட்ட பட்டம் , நீயா நானா அடுத்தது என்று இன்றைய நடிகர்கள் குடுமிச்சண்டை போடும் பட்டம், அதை அவளவு சர்வசாதாரணமாக இன்னொருவருக்கு கொடுக்க முன்வந்தாரே!! யாருக்கு வரும் இந்த விட்டுக்கொடுக்கிற மனம்? அதனால்தான் ரஜினி இன்றும் சூப்பர் ஸ்டார், என்றும் சூப்பர் ஸ்டார்.

 ரஜினியின் சமயோசித புத்திக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு, 1992 ஆம் ஆண்டு அது ஜெயலலிதாவின் பாசிச ஆட்சிக்காலம், டாக்டர் இராதாகிருஸ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பொலிஸ்காரர்களால் நிறுத்தப்பட்டது, ரஜினியும் வாகனமும் அதில் ஒன்று. ஒரு போலீஸ்காரர் ரஜினியின் கார் கதவை தட்டி "சாரி சார் மேடம் இந்த வழியா போறதால ட்ராபிக்க நிறுத்தவேண்டி வந்தச்சு" என்று கூறினார். மேடம் எப்போ இந்த இடத்தை கடந்து போவாங்க என்ற கேள்விக்கு இன்னமும் அரைமணி நேரம் என பதில் கிடைத்தது. அதற்கு ரஜினி"அரைமணிநேரம் கடக்கிற அளவுக்கு பெரியாகார் இருக்கா என்ன?,அதுக்குள்ளே எங்கள விட்டா நாங்கள் போய்விடுவமே"எனேறு கூறினார். ஆனால் அந்த போலீஸ்காரர் சம்மதிக்கவில்லை.

ரஜினிக்கு கோபம்வந்தது என்ன செய்வதென்று ஜோசித்தார். தனது எதிர்ப்பை காட்ட நினைத்தவர் சட்டென்று காரில் இருந்து இறங்கி அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்று ஒரு சிகரட்டை வாங்கி அருகிலிருந்த கம்பத்தின் மீது சாய்ந்து ஜாலியாக புகைக்க ஆரம்பித்தார். மெல்லமெல்ல மக்களுக்கு அங்கு நிற்பது சூப்பர் ஸ்டார் என தெரியவந்தது; மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது, ராதாகிரிஸ்ணன் சாலையே ஸ்தம்பித்து போனது. ஆனால் இதையெல்லாம் பார்க்காதது போல ரஜினி பெட்டிக்கடைக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். போக்குவரத்து அதிகாரிக்கு கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை, ரஜினியிடம் வந்து மன்னிப்பு கேட்டார், ரஜினியை போகும் போடி கூறினார். அதற்கு ரஜினி"உங்கள் மேடம் போகட்டும் அப்புறமா போயிக்கிரன் எனக்கொண்ணும் அவசரமில்லை" என்றார், பதறிப்போன அதிகாரி ஒருவழியாக ரஜினியிடம் கெஞ்சி கூத்தாடி ரஜினியை அனுப்பிவைத்தார்.

 ரஜினிக்கு ஏன் இன்னமும் டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை என பலரும் நினைக்கலாம், ரஜினி ரசிகர்களுக்கு தெரிந்தது ஏனையவர்களுக்கும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த தகவல். ரஜினிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தது; ஆனால் அதை ஏற்க ரஜினி மறுத்துவிட்டார். பின்னர் அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவெடுத்து அதை பத்திரிகைச் செய்தியாகக் கொடுத்தது. விஷயம் அறிந்து, ரஜினியே இந்த முறையும் பட்டம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இறுதியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி ஷண்முகத்திடம் (ஓட்டல் பென்ஸ் பார்க்கில்), ஷங்கர், விஜய் போன்றவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்த போது, "ரஜினி போன்ற மிகப் பெரிய நடிகருக்கு டாக்டர் பட்டம் தராதது ஏன்?" என்று கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் சொன்னபதில் "ரஜினி சாருக்கு கொடுக்க நாங்கதயார்,  அவர் வாங்கிக்கணுமே...! அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவு செய்து, அவர்கிட்ட சம்மதம் கேட்டோம். அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்"  என்று கூறினார்; இதைக்கூறும் போது ஒரு ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது, இருக்காதாபின்ன? மற்றவர்களுக்கு பட்டம் கொடுத்தால் அது பட்டத்தை பெற்றவருக்கு பெருமை, ரஜினிக்கு கொடுத்தால்தானே அந்த பட்டத்துக்கே பெருமை. இந்தமூன்று சம்பவங்களையும் சந்தேகமிருந்தால் சம்பத்தப்பட்ட பல்கலைக்களகங்களை அணுகி நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம். விருதுகளே விலைபோகும் காலத்தில் விருதகளாலேயே வாங்கமுடியாத கலைஞன் ரஜினி.

 ரஜினி அண்மையில் கமலின் 50 ஆவது ஆண்டு விழாவில் தன்னை தாழ்த்தி கமலை புகழ்ந்து பேசியதற்கு கமல்ஹாசன் அவர்களே "எவன் பேசுவான் இப்படி " என்று கூறியது நினைவிருக்கலாம். இது அன்று மட்டும் நடந்ததல்ல, கமலைப்பற்றி ரஜினி எப்போதுமே உயர்வாகத்தான் பேசுவார், தனது சக போட்டியாளனை தன்னை தாழ்த்தி பாராட்டி புகழும் ஒரு நடிகரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இது தான் ரஜினி நட்புக்கு கொடுக்கும் மரியாதை. அது தவிர ஆரம்ப காலங்களில் தனக்கு உதவியாக சினிமா துறையை சேர்ந்த எட்டுப்பேரை தயாரிப்பாளர் ஆக்கி அருணாச்சலம் திரைப்படத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 1,000,000 வரை சம்பாதிக்க வழி செய்ததை என்னவென்று சொல்லுவது? அதே போல் தனது கல்லூரி நண்பர்களுக்காக 'வள்ளி' படத்தை தயாரித்து தனது கல்லூரி நண்பர்களுக்கு வாய்ப்பளித்தது அவரது நட்புக்கு மரியாதைக்கு எடுத்துக்க்காட்டு.

ரஜினி வீட்டுக்கு ரஜினியை சந்திக்கவரும் எவரையும் ரஜினி வாசல்வரை சென்று வரவேர்ப்பார், அவர்கள் செல்லும்போது வாசல்வரை சென்று வழியனுப்பி வைப்பார். எந்த வயதானவராக இருப்பினும் அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனிப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை!! தனது மனதுக்கு பிடித்திருந்தால் எந்த படமானாலும், யார் நடிகராக இருந்தாலும்  பாராட்டுவார்;   'பெரியார்' திரைப்பத்தைகூட  பாராட்டியிருந்தார்!  கடவுள் நம்பிக்கைக்கு எதிரான படத்தை ரஜினி பாராட்டியதை கேலி  பேசியவர்களுக்கு  கருணாநிதி முன்னிலையில் ரஜினி சொன்ன பதில்; "ஒரு விருந்தில் பத்து கறியில் ஒரு கறி  பிடிக்கவில்லை என்பதற்காக விருந்தை சரியில்லை என்று சொல்ல முடியுமா? அதேபோலத்தான் இதுவும்" என்றார்; தி.மு.க அரங்கமே அதிர்ந்தது!!

இவை தவிர ரஜினியின் நேரம் தவறாமை, குருபக்தி,  எந்தப்பெரிய விமர்சனத்தையும் புன்னகையால் தாங்கும் சக்தி,  சகநடிகர்களுக்கும் தனது படங்களில் தனக்கு இணையான வேடத்தை நடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் குணம்(இதற்கு அவரது தன்னம்பிக்கை ஒரு காரணம் ), ரசிகர்களிடமான ஆளுமை என ரஜினியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ரஜினியின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களுக்கு  ஒரு பாடம், அவை ரஜினியை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணம்....

16 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

எனக்கு ரஜினி இடம் பிடித்தது , அவருடைய simplicity தான் .

ரஜினி ஒரு பல்கலைகழகம், பல்கலைகலகதிட்கே பட்டம் கொடுக்கலாமா, எல்லோருக்கும் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது,

Chitra said...

You made my day..........! Rajini is Rajini - the BEST. Thank you for this nice blog.

Unknown said...

கலக்றீங்க போங்க..,

Kumar said...

boss, intha mathiri matter ellam enge pudikiringe!!!.. awesome... Keep it up..

baba said...

வணக்கம் நண்பரே

தலைவரை பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை.

தாயுக்கு தன் பிள்ளையை எவ்வளவு கொஞ்சினாலும் சலிக்காது.

அதுபோல நம் தலைவரை பற்றி எவ்வளவு படித்தாலும் சலிக்காது.

இன்னும் இதுபோல் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

தலைவா வாழ்க பல்லாண்டு.

என்றும் உனக்காக மட்டும்
ஆனந்த்.
பமாகோ,மாலி

அ.ஜீவதர்ஷன் said...

dialog said//எனக்கு ரஜினி இடம் பிடித்தது , அவருடைய simplicity தான் .

ரஜினி ஒரு பல்கலைகழகம், பல்கலைகலகதிட்கே பட்டம் கொடுக்கலாமா, எல்லோருக்கும் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது,//

சுப்பர் அப்பு

அ.ஜீவதர்ஷன் said...

Chitra

//You made my day..........! Rajini is Rajini - the BEST. Thank you for this nice blog.//

thanks four visit and comment

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//கலக்றீங்க போங்க..,//

நன்றி

அ.ஜீவதர்ஷன் said...

Kumar

//boss, intha mathiri matter ellam enge pudikiringe!!!.. awesome... Keep it up..//

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்

அ.ஜீவதர்ஷன் said...

baba

//தாயுக்கு தன் பிள்ளையை எவ்வளவு கொஞ்சினாலும் சலிக்காது.

அதுபோல நம் தலைவரை பற்றி எவ்வளவு படித்தாலும் சலிக்காது. //

100 % உண்மை

சிங்கக்குட்டி said...

அருமையான சம்பவங்களை சொல்லி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.

ரஜினியின் சமயோசித புத்திக்கு இது போல் அசியலிலும் பல சம்பவங்கள் உள்ளது.

வாழ்த்துக்கள்.

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

//அருமையான சம்பவங்களை சொல்லி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.

ரஜினியின் சமயோசித புத்திக்கு இது போல் அசியலிலும் பல சம்பவங்கள் உள்ளது.

வாழ்த்துக்கள்.//


நன்றி

கிரி said...

கலக்கிட்டீங்க போங்க! பல நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டி அசத்தீட்டீங்க!.. தலைவர் டாக்டர் பட்டம் வாங்காமல் இருப்பதாலே பெற்றதை விட அதிக மதிப்பில் இருக்கிறார்..தலைவர் என்றுமே டாக்டர் பட்டம் வாங்கக்கூடாது என்பது என் விருப்பம்.

// மற்றவர்களுக்கு பட்டம் கொடுத்தால் அது பட்டத்தை பெற்றவருக்கு பெருமை,ரஜினிக்கு கொடுத்தால் தானே அந்த பட்டத்துக்கே பெருமை. இந்தமூன்று சம்பவங்களையும் சந்தேகமிருந்தால் சம்பத்தப்பட்ட பல்கலைக்களகங்களை அணுகி நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம். விருதுகளே விலைபோகும் காலத்தில் விருதகளாலேயே வாங்கமுடியாத கலைஞன் ரஜினி//

அடி தூளு! :-)

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//கலக்கிட்டீங்க போங்க! பல நிகழ்ச்சிகளை தலைவர் டாக்டர் பட்டம் வாங்காமல் இருப்பதாலே பெற்றதை விட அதிக மதிப்பில் இருக்கிறார்..தலைவர் என்றுமே டாக்டர் பட்டம் வாங்கக்கூடாது என்பது என் விருப்பம்.//

பல்கலைக்களகத்திற்கு எங்காவது டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்களா?அல்லது டாக்டர் பட்டம் தான் வேண்டுமா?

r.v.saravanan said...

இப்படி ரஜினியின் ஒவ்வொரு அசைவும் ஒரு பாடம்,அவை அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்....

நான் என் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறேன்
எனக்கு ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான்

அ.ஜீவதர்ஷன் said...

r.v.saravanan குடந்தை

// இப்படி ரஜினியின் ஒவ்வொரு அசைவும் ஒரு பாடம்,அவை அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்....

நான் என் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறேன்
எனக்கு ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான்//


ரஜினியை புரிந்தவர்களுக்கு அவர் அட்சய பாத்திரம், புரியாதவர்களுக்கு என்றும் அவர் புதிர்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)