Wednesday, December 12, 2012

ரஜினியும் ஆன்மீகமும்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

ரஜினியின் திருமணத்திற்கு முந்தயவாரம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைத்திருந்த ரஜினி; தான் திருமணம் செய்யப்போகும்  தகவலை கூறிவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அந்தச் சந்திப்பில் தனது 'திருமண வரவேற்பிற்கு' பத்திரிகையாளர்களை  அழைத்த ரஜினி 'திருமணத்திற்கு' அழைக்கவில்லை, அப்போது ஒரு பத்திரிகையாளர் திருமணத்திற்கு அழைக்காததற்கு சற்று உயர்ந்ததொனியில் எதற்காக திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினி " மன்னிச்சிடுங்க எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் வருவார்கள், பத்திரிகையாளர்கள் திருமண வைபவத்திற்கு வருவதை விரும்பவில்லை" என்று கூறிவிட்டு, ஒரு கணம் ஜோசித்த ரஜினி  "உங்களை எச்சரிக்கிறேன், யாராவது கல்யாணத்துக்கு வந்தால்... நானே உதைப்பேன் " என தொடர்ந்து கூறினார். இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது!! அதையும்மீறி திருப்பதியில் திருமணத்திற்கு சென்று மறைவாக புகைப்படமெடுத்த பத்திரிகையாளர் ரஜினியால் நையப்புடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல  மனதில் குழப்பத்துடன் காணப்பட்ட ரஜினி திடீரென ஒருநாள்  தனது மனைவியிடம் தான் முழுநேர ஆன்மீகவாதியாகப் போகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த படத்துக்காக வாங்கிய அட்வான்சையும்  இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம்  திரும்ப கொடுத்துவிட்டு துறவறம் போகப்போவதாக புறப்பட்டுவிட்டார்; அதன்பின்னர் ரசிகர்களின் தற்கொலைமுயற்சி மற்றும் ரசிகர்களின் வேண்டுகொல்களாலும்,  நண்பர் கமலஹாசன் ரஜினியை சந்தித்து மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று வற்புறுத்தியதாலும் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார்!!

எதற்காக இந்த இரு சம்பவங்கழுமென்றால்; அன்றைய ரஜினி கோபத்தை அடக்கமுடியாத, முரட்டுத்தனமான, திடீரென்று உணர்ச்சிவசப்படக்கூடிய, திடீர் திடீரென முடிவெடுக்ககூடிய, குழப்பமான மனநிலையிலிருந்தார். இதற்கு ஓய்வில்லாத அவரது உழைப்பும், தன்னை யார்?  என்கின்ற அவரது தேடலும் முக்கியகாரணங்களாக இருந்தன. ஆனால் இன்றைய ரஜினி இந்தவிடயங்களில் அன்றைய ரஜினிக்கு எதிர்மாறாக மாறியுள்ளார் என்றால், அதற்க்கு என்னகாரணம்? அன்று சிறு கோபத்தை அடக்கமுடியாத ரஜினி இன்று எப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வரும் அபாண்ட குற்றச்சாட்டுக்களையும், உண்மையற்ற விமர்சனங்களையும், திரித்து கட்டப்பட்ட கதைகளையும் கேட்டுவிட்டும் மவுனமாக சிறுபுன்னகையுடன் தனதுவேலைகளில் மட்டும் சரியாக இருக்கிறார்? அன்று திடீரென முடிவெடுத்து முழுநேர ஆன்மீகவாதியாகப்போகிறேன் என்று புறப்பட்ட ரஜினி;  இன்று ரசிகர்கள், அரசியல்கட்சிகள் ஏன் பிரதமமந்திரி (நரசிம்ம ராவ்) அழைத்து கூட அரசியலுக்கு வருவதற்கான முடிவை இன்னமும் எடுக்காமல் எப்படி பொறுமையுடன் காத்திருக்கின்றார்?


இந்தக்கேள்விகள் அனைத்துக்கும் காரணம் அவரது ஆன்மீகவழிதான், அன்று தான் யாரென்று அலையவிட்ட மனதை கடுமையான தியானத்தின் மூலமும், ஆன்மீகநூல்கள்  மூலமும் இன்று தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மந்திரம்தான் இது. எதையுமே முழு ஈடுபாடுடன் செய்யும் ரஜினியின்  ஆன்மிகப்பயணம் அவர் மனதுக்கு நல்லதெளிவையும் உடலுக்கு நல்லதெம்பையும் கொடுத்ததென்றால் அது 100 % உண்மை. உண்மையை சொல்வதென்றால் சினிமாவில் வென்றதை விட  ரஜினி தன்னை வென்றதுதான் மிகப்பெரும் சாதனை.

பாமரமக்களில் அதிகமானவர்களுக்கு ஆன்மிகம் என்ற சொல்லும் பாபாஜி, ஸ்ரீ ராகவேந்தரா சுவாமிகள் போன்ற ஜோகிகளது பெயர்களும் ரஜினியால்தான் பரிச்சியமானது. இன்று ஸ்ரீ ராகவேந்திரருக்கு கோவில்கட்டி வணங்குமளவிற்கு மக்கள் ஸ்ரீ ராகவேந்திரரை பூஜித்தாலும் இன்றுவரை ரஜினி நேரடியாக ராகவேந்திரரையோ ,பாபாஜியையோ வணங்குமாறு ஒருதடவை கூட ரசிகர்களையோ மக்களையோ நிர்ப்பந்திக்கவில்லை; அதிகபட்சமாக அவர் கூறியது "தியானம் செய்யுங்கள்" என்று மட்டுமே. ரஜினியை மதவாதி என்று கூறுபவர்களும், ஆன்மீகவாதிக்கும் மதவாதிக்குமான வேறுபாடு தெரியாதவர்களும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்; ரஜினி இதுவரை எந்த மதங்களை பற்றியும் தவறாக ஒருவார்த்தைகூட கூறவில்லை, மாறாக "எந்தமதத்தவராக இருந்தாலும் தியானம் செய்யுங்கள், அது உங்கள் உடலையும் மனத்தையும் பலப்படுத்தும்" என்றே ஆரம்பம்முதல் கூறிவருகிறார். ரஜினி மதவாதி அல்ல, அவரொரு தெளிந்த ஆன்மீகவாதி.

ரஜினி இமயமலைக்கு போகும் செய்தியை எதோ சுற்றுலாவுக்கு போவதைப்போல் விமர்சனம்செய்த அனைவரும் விஜய் டிவியில் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் ரஜினியின் இமயமலைப்பயணம் (துரோணகிரிக்கு) ஒளிபரப்பான பின்னர் வாயடைத்துபோய்விட்டனர். என்ன இல்லை இந்த மனிதரிடம்? பணம்,புகழ்,செல்வாக்கு இத்தனையுமிருந்தும் ஏன் இந்த உயிரைப்பணயம் வைக்கும் இமயமலைப்பயணம்? ஏனெனில் அங்குதான் அவருக்கு வேண்டிய அமைதி, சாந்தம் கிடைக்கிறது. சுத்தமானகாற்று, தூயநீர், பச்சைப்பசேலென மனதைவருடும் மரங்கள் என அந்தச்சூழலே மிக ரம்மியமாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தை பார்க்குபோது எமக்கே தியானம் செய்யவேண்டும் போல் தோன்றும்போது, தன்னைத்தேடும் ஒரு ஆத்மாவுக்கு தியானிப்பதற்கு இதைவிட சிறந்தஇடம் வேறெங்கு இருக்கமுடியும் ?

கடவுள் இருக்கிறார், இல்லை என்கின்ற நேரத்தை வீணடிக்கும் விவாததைவிட்டு தியானம் என்னும் உயிரை நெற்றிப்பொட்டில் திரட்டும் உக்தியை இன்று பல இளைஞர்கள் ரஜினியை முன்னுதாரணமாக கொண்டு செய்கின்றார்களேயானால், அது தியானத்தின் வெற்றியா? இல்லை ரஜினியின் வெற்றியா? அவர் அமைதியை நாடினாலும், எமது சுயநலம் அவரை அரசியல் சாக்கடையில் தள்ளத்தான் நினைக்கிறது; இருந்தாலும் அதிலே ஒரு பொதுநலமும் இருக்கிறது. அவர் மட்டும்தான் அந்த சாக்கடையை சுத்தப்படுத்தமுடியுமென்ற ரசிகர்களின் நம்பிக்கைதான் அது. ஆனால் அவர் எந்தமுடிவெடுத்தாலும் அதை ரசிகர்கள் நிச்சயமாக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்த முடியு சரியாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையைவிட அவரது முடிவு அவரது சுயவிருப்பமும் கூட....


10 வாசகர் எண்ணங்கள்:

கிரி said...

ரஜினியின் தற்போதைய பொறுமை அளவுகடந்தது.

அனைவரும் கண்டபடி தூற்றினாலும் பொறுமையை கடைபிடிப்பது ..இன்று வரை எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயம்

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//ரஜினியின் தற்போதைய பொறுமை அளவுகடந்தது.

அனைவரும் கண்டபடி தூற்றினாலும் பொறுமையை கடைபிடிப்பது ..இன்று வரை எனக்கு ஆச்சர்யம் அளிக்கும் விஷயம்//

ஆச்சரியமான உண்மை , வீட்டில அம்மா திட்டினாலே நாம பதிலுக்கு ஏதாவது சொல்லுவோம், ஆனா தலைவர் விடலைப்பசங்களெல்லாம் விமர்சிக்கும்போது கூட எப்படி அமைதியாக இருக்கிறார் என்று பல நேரங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

Unknown said...

nice......
இன்னும் எதிர் பாக்குறோம்..,

Unknown said...

ரஜினி இன் பொறுமை இன்னும் கொஞ்ச காலம் தான் . தலைவர் ஒரு மனிதன் தான் . பொறுத்தது போதும் தலைவா .

அ.ஜீவதர்ஷன் said...

பேநா மூடி

//nice......
இன்னும் எதிர் பாக்குறோம்..,//

நன்றி, 12 ஆம் திகதிவரை தினமும் ஒரு பதிவு போடலாமென்று நினைத்துள்ளேன்,பார்க்கலாம் சாத்தியப்படுகிறதா என்று.

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//ரஜினி இன் பொறுமை இன்னும் கொஞ்ச காலம் தான் . தலைவர் ஒரு மனிதன் தான் . பொறுத்தது போதும் தலைவா .//

எல்லோரும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்ல பகிர்வு, வாழ்த்துக்கள்.

//"எந்தமதத்தவராக இருந்தாலும் தியானம் செய்யுங்கள்...என்றே ஆரம்பம்முதல் கூறிவருகிறார்//

உண்மை, அதில்தான் அவரின் உயந்த குணத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

//பொறுத்தது போதும் தலைவா//

இது வெறும் சந்திப்போ அல்லது அவர் கூட நின்று ஒரு படம் எடுக்கும் விசையம் இல்லங்க!, எவ்வளவு பெரிய பொறுப்பை எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் உணர்ந்து, நடைமுறையில் முதலில் அதை நாட்டுக்கு உணர்த்த வேண்டும்.

அதன் பின் இந்த வார்த்தையை சொல்வதில் தான் உண்மையான அர்த்தம் மற்றும் பலன் இருக்கும்.

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

//உண்மை, அதில்தான் அவரின் உயந்த குணத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.//


யார் மனசையும் அவர் நோகடிக்க மாட்டார், அதுதான் தலைவர்

Nathan SP (நாதன்) said...

மிகவும் அருமையான பதிவு நண்பரே. உங்களை போலவே நானும் தலைவரக்காக வாக்களிக்க தவம் கடக்கிறேன்.

நாதன்

எப்பூடி.. said...

arvind_cool21

//மிகவும் அருமையான பதிவு நண்பரே. உங்களை போலவே நானும் தலைவரக்காக வாக்களிக்க தவம் கடக்கிறேன்.//

நல்லதே நடக்கும்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)