Wednesday, December 12, 2012

ரஜினியும் சக நடிகர்களும் ....ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 


ரஜினி நடித்த திரைப்படங்களில் ரஜினி கூட நடித்த ஹீரோ, வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களையும் அவர்களது பங்களிப்புகளை பற்றியதுமான பார்வைதான் இந்தப்பதிவு. ரஜினியின் 155 திரைப்படங்களிலும் கூட நடித்த நடிகர்கள் பட்டியல் மிகப்பெரிதாக இருப்பினும் ஒவ்வொரு பிரிவிலும் முக்கியமான சிலரை நினைவு கூருவோம்.

தன்மீதிருக்கும் அதீத நம்பிக்கையினால் தனது திரைப்படங்களில் நடிக்கும் சக நடிகர் & நடிகர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பற்றி ரஜினி என்றைக்குமே கவலைப் பட்டதில்லை, இதை ரஜினியின்மீது 'மிகுந்த பாசம் கொண்ட' சக நடிகரான சத்தியராஜ் அவர்களே 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தை உதாரணம் காட்டி பல தடவைகள் கூறியிருக்கிறார். தனது பாத்திரத்தை நிறைவாக செய்யும் பட்சத்தில் தனது திரைப்படங்களில் நடிக்கும் மற்றைய நடிகர்கள் பற்றி ரஜினி என்றைக்கும் கவலைப் பட்டதில்லை, இது அன்றிலிருந்து இன்று வரை ரஜினியால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறந்த விடயம், ரஜினியின் தன்னம்பிக்கைக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.


சிவாஜி கணேஷன்
நடிப்புலகின் பிதாமகன் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனுடன் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் மொத்தமாக ஐந்து திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா போன்ற திரைப்படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்த நடிகர் திலகம்; தனது 47 வருட சினிமா வாழ்க்கையில் இறுதியாக நடித்த திரைப்படம் படையப்பா என்பது விஷேடம். இந்த ஐந்து திரைப்படங்களிலும் நடிகர் திலகம் ரஜினியின் மதிப்பிற்குரிய கதாபாத்திரங்களிலேயே நடித்திருப்பார்.

ஐந்து திரைப்படங்களிலும் 'படிக்காதவனில்' அண்ணன் தம்பியாக இருவரும் ஒன்றாக வரும் ஒவ்வொரு காட்சியும் அட்டகாசமாக இருக்கும்; அந்தக் காட்சிகளில் இருவரது கண்களும் கதைபேசும், கூடவே 'ஒரு கூட்டு கிளியாக' பாடலின் சரணத்தை பின்னணியில் இசைக்கவிட்டு இளையராஜாவும் அந்தக் காட்சிகளுக்கு மேலும் உயிர் சேர்த்திருப்பார். அதேபோல படையப்பாவில் வீட்டைவிட்டு வெளியேறும் காட்சியில் "போப்பா இனிமேல் நாங்க எல்லாருமே உன் பின்னாடிதான்" என சிவாஜி பேசும் வசனத்துக்கு "என்னைக்குமே எங்க எல்லாருக்கும் நீங்கதாப்பா முன்னோடி" என ரஜினி கூறும் பதில் வசனம் சிவாஜிமீது ரஜினி வைத்திருக்கும் மரியாதைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதே காட்சியில் தொடர்ந்து குடும்பமாக வீட்டைவிட்டு வெளியேறும் காட்சியும், வெளியே தூணை கட்டியபடியே 'நடிகர் திலகம்' இறக்கும் காட்சியும் மறக்க கூடியவையா?

கமல்ஹாசன்
ரஜினியின் சமகால போட்டியாளரான கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்தும் இனிமேல் தனித்தனியாக பிரிந்து நடிப்பதென்று முடிவெடுக்கும்வரை பல திரைப்படங்களில் ஒன்றாகவே நடித்திருப்பார்கள்; அல்லது வேறு சில நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பார்கள். இருவரும் தனித்தனியாக நடிப்பதென்று முடிவெடுத்த பிற்பாடு இருவருமே தத்தமது பாணியில் வளர்ந்து இன்று உச்சத்தில் இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே முத்துக்கள்.

இருவரும் ஒன்றாக நடித்த காலத்தில் இவ்விருவருக்கும் இருந்த காம்பிநேஷன் போல வேறொரு ஜோடி நடிகர்களுக்கும் இதுவரை இருந்ததில்லை. ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்த திரைப்படங்களில் இருவரும் 'ஒரே பிரேமில்' வரும் காட்சிகளில் இருவரும் எப்படி போட்டிபோட்டுக்கொண்டு தங்களை வெளிக்காட்டிக் கொள்வார்கள் என்பதை அந்த திரைப்படங்களை பார்த்ததால் புரியும். இருவரும் போட்டியாளர்களாயினும் தமக்கென தனித்தன்மை உடையவர்கள் என்பதால் இருவரும் தத்தமது பாணியில் திறமைகளை வெளிப்படுத்தி தமது முத்திரையை பதித்திருப்பார்கள்.


பாலச்சந்தர், ஸ்ரீதர், பாரதிராஜா. எஸ்.பி.முத்துராமன் என சிகரம் தொட்ட இயக்குனர்கள் ரஜினி,கமலை சரியாகப் பயன்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள், நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்று இந்த ஜோடி 17 திரைப்படங்களில் பட்டயை கிளப்பியிருக்கிறது. 'தில்லு முல்லு' திரைப்படத்தில் இறுதியாக சேர்ந்து நடித்த கமலும் ரஜினியும் மீண்டும் இணைந்து நடிப்பது வர்த்தகரீதியாக சாத்தியக் குறைவான விடயமே.
பிரபு
ரஜினியுடன் குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்திரமுகி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள பிரபு 'மன்னன்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்துபோவார். மன்னன், சந்திரமுகி என ரஜினியின் இரு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்ததும் பிரபுவின் குடும்ப 'பானரான' 'சிவாஜி பிலிம்ஸ்'தான். தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் ரஜினியும் பிரபுவும் பாசமிகு அண்ணன் தம்பியாக நடித்து அசத்தியிருப்பார்கள், குறிப்பாக 'தென்மதுரை வைகை நதி' பாடல்; காட்சியமைப்பிலும், இசையிலும், பாடல் வரிகளிலும் என்றுமே மறக்கமுடியாத பாடல். குருசிஷ்யனில் குருவாகவும், சிஷ்யனாகவும் படம் முழுவதும் அமர்க்களப் படுத்தியிருக்கும் ரஜினி, பிரபு ஜோடி காமடியிலும் புகுந்து விளையாடியிருப்பார்கள், அதிலும் வினுச்சக்கரவர்த்தி & மனோகரமாவுடனான காமடி காட்சிகள் தீபாவளிப் பட்டாசுதான். சந்திரமுகியில் ரஜினியின் நண்பனாக நடித்த பிரபுவுக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லையென்றாலும் அந்த சீடியசான 'ஒரு வசனம்' இன்றுவரை காமடியாக சொல்லப்படுவது பிரபுவே எதிர்பார்க்காதது :-) தளபதி- மம்முட்டி, நல்லவனுக்கு நல்லவன்- கார்த்திக், மிஸ்டர் பாரத்- சத்தியராஜ், அன்புள்ள ரஜினிகாந்த் & நான் சிவப்பு மனிதன்- பாக்கியராஜ், ராணுவவீரன்- சிரஞ்சீவி, படையப்பா - அப்பாஸ், ஸ்ரீ ராகவேந்திர- மோகன், சிவாஜி- சுமன் போன்றோர் ரஜினி படங்களில் ஏதாவதொரு வேடத்தில் நடித்த முன்னணி ஹீரோக்கள்.
ரகுவரன்
ரஜினியின் திரை வில்லன்களிலேயே 'மாஸ்' அந்தஸ்துள்ள வில்லன் என்றால் அது ரகுவரன்தான். கமர்சியலின் அளவுகோலான பாட்ஷா திரைப்படத்தில் ஆலாளப்பட்ட சூப்பர் ஸ்டாரையே 'கொழந்தை' என்று அழைக்கும் 'மாஸ்' ரகுவரனை தவிர வேறெந்த வில்லன் நடிகருக்காவது இருக்குமா? என்றால் சந்தேகமே!! பாட்ஷாவில் ரகுவரன் 'வில்லன்' என்பதைவிட இன்னுமொரு 'ஹீரோ' என்று சொன்னால் அது மிகையில்லை. 'சிவா' திரைப்படத்தில் ரஜினிக்கு சமமான வேடத்தில் ரகுவரன் நடித்திருப்பார், 80 களுக்கு பின்னர் எந்த ரஜினி படத்திலும் ரஜினிக்கு இணையான மாஸ் ரகுவரனுக்கு 'சிவா'வில் அமைந்ததுபோல் யாருக்கும் அமையவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. ராஜா சின்ன ரோஜா, குருசிஷ்யன், ஊர்க்காவலன், மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன், மனிதன் என ரகுவரன் & ரஜினி கூட்டணியில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. வில்லன் இல்லாவிட்டாலும் சிவாஜியில் ரஜினியை உயிர்ப்பிக்கும் முக்கியமான 'டாக்டர்' வேடத்தில் ரகுவரன் நடித்திருந்தமை அந்த 'டாக்டர்' கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்ததை யாரும் மறுக்கமுடியாது.
ஜெய்சங்கர்
நாயகனாக நடித்துக்கொண்டிருந்த ஜெய்சங்கரை 'முரட்டுக் காளை' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.பி.முத்துராமன் அழைத்தது அதற்கு சரியென்று சம்மதம் தெரிவித்தவர் ஜெயசங்கர். அதுவரை ஹீரோவாக நடித்த ஒருவர் தன் படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டதால் அவரை கெளரவப்படுத்த நினைத்த ரஜினி படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் தனக்கு இணையாக ஜெயசங்கரையும் விளம்பரப்படுத்தவேண்டும் என்று சொல்லியதனால் 'முரட்டுக்காளையில்' ரஜினிக்கு இணையாக ஜெயசங்கருக்கும் விளம்பரம் செய்யப்பட்டது. முரட்டுக்காளையில் வில்லன் என்றாலும் ஜெய்சங்கருக்கு பலமான வேடம் வழங்கப்பட்டது. முரட்டுக்களைக்கு பின்னர் படிக்காதவன், பாயும்புலி, தாய்வீடு, மாப்பிள்ளை, மாவீரன், அருணாச்சலம் என பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகனாகவும் ஜெயசங்கர் நடித்துள்ளார். ரகுவரன், ஜெயசங்கரை தவிர்த்து ராதாரவி, நாசர், செந்தாமரை, சத்தியராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், கபாலி, சுமன் போன்றோர் ரஜினி படங்களில் வில்லன் நடிகர்களாக சிறப்பான பங்காற்றியவர்களில் முக்கியமானவர்கள்.
ஜனகராஜ் & செந்தில்
ஜனகராஜ், செந்தில் இருவருமே ரஜினியின் மரியாதைக்குரிய நகைச்சுவை நடிகர்கள்; ரஜினி தனது திரைப்படங்களில் எத்தனை பெரிய வில்லன்களையும் அடித்து துவம்சம் செய்யும் கேரக்டரில் நடித்தாலும்; ஜனகராஜ்/செந்திலின் சொற்பெச்சு கேட்பவராகவும், அவர்களது அதட்டலுக்கு அடிபணிபவராகவும், அவர்களை மரியாதைக்குரிய (குருவே, அண்ணா, தலைவா) அடைமொழி வைத்து அழைப்பவராகவுமே அதிகமான திரைப்படங்களில் அவர்களுடன் நடித்திருப்பார். 'படிக்காதவன்' திரைப்படத்தில் "என் தங்கச்சியை நாய் கடிச்சிரிச்சிதப்பா" என புலம்பும்போது கிச்சுகிச்சுமூட்டிய ஜனகராஜ் 'ராஜாதிராஜா' திரைப்படத்தில் கொல்லப்படும்போது கண்களில் நீர்வர வைத்தவர். பாட்ஷாவில் ரஜினியின் வலக்கையாக படம் முழுவதும் பயணித்த ஜனகராஜ் பாட்ஷாவின் மாபெரும் வெற்றிக்கு பங்காற்றியவர்களில் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது. படிக்காதவன், பாட்ஷா, பணக்காரன், அண்ணாமலை, அருணாச்சலம், ராஜாதி ராஜா, கொடி பறக்குது, சிவா போன்ற திரைப்படங்களில் ரஜினியின் நண்பனாக கதையோடு காமடிக் காட்சிகளில் கலக்கிய ஜனகராஜ் 'வீரா'வில் ரஜினியின் மாமனாராக நடித்திருப்பார். செந்திலும் ரஜினியின் ராசியான ஒரு நடிகர் என்றே சொல்லலாம். தனியாக காமடி ட்ராக் என்றில்லாமல் படம் முழுவதும் ரஜினிகூடவே வருவது போன்றே செந்தில் அதிகமான ரஜினி படங்களில் நடித்திருப்பார். முத்து, அருணாச்சலம், வீரா, தர்மதுரை, மனிதன், எஜமான், வேலைக்காரன் என செந்தில் ரஜினி கூட்டணியில் அனைத்து திரைப்படங்களிலும் காமடிக்கு பஞ்சமிருக்காது. ஜனகாராஜ், செந்தில் தவிர்த்து கவுண்டமணியுடன் மன்னன், மிஸ்டர் பாரத், உழைப்பாளி,16 வயதினிலே, பாபா போன்ற திரைப்படங்களிலும்; விவேக்குடன் சிவாஜியிலும், வடிவேலுடன் சந்திரமுகியிலும் ரஜினி காமடியில் கலக்கியிருப்பார். இவர்களைத்தவிர Y.G.மகேந்திரன், சுருளி ராஜன், எஸ்.எஸ்.சந்திரன், மனோகரமா, வினுச்சக்கரவர்த்தி, கோவை சரளா, கருணாஸ் போன்றோர் ரஜினியுடன் நகைச்சுவை சரவெடி கொளுத்தியவர்களில் முக்கியமானவர்கள். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரஜினி படங்களில் எந்த நகைச்சுவை நடிகர் நடித்தாலும் அவர்கள்  கதையோடு பின்னிய, ரஜினிகூட  திரைக்கதையில் வரும் கதாபாத்திரமாகவே பெரும்பாலும் நடித்திருப்பார்கள்.
சரத்பாபு
ரஜினியின் 'ராசியான நடிகர்' என்று இவரை சொல்லலாம், இவர் ரஜினியுடன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிவிழாப்படங்களே. ரஜினிக்கு பெயர்வாங்கி கொடுத்த 'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் ரஜினியின் தங்கைக்கு ஜோடியாகவும் ரஜினியின் மேலதிகாரியாகவும் ரஜினிக்கு(காளிக்கு) பிடிக்காத கதாபாத்திரத்தில் நடித்த சரத்பாபு; 'வேலைக்காரனில்' முதலாளியாகவும், 'அண்ணாமலை'யில் ஆரம்பத்தில் நண்பனாகவும், 'முத்து'வில் எஜமானாகவும் நடித்திருப்பார். இவற்றில் வேலைக்காரன் 125 நாட்களுக்கதிகமாகவும், ஏனைய மூன்றும் 175 நாட்களுக்கதிகமாகவும் ஓடி சாதனைபடைத்த திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பாபு தவிர நாகேஷ், நம்பியார், மனோகரமா, வெண்ணிற ஆடைகள் மூர்த்தி, விசு, வினுச்சக்கரவர்த்தி, தேங்காய் சீனிவாசன், சுஜாதா, லட்சுமி, விஜயகுமார், நிழல்கள் ரவி, சௌகார் ஜானகி, வடிவுக்கரசி, மணிவண்ணன், பசுபதி போன்றோரும் ரஜினியின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்களில் முக்கியமானவர்கள். ரஜினியுடன் சேர்ந்து நடித்த நாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், வில்லன் நடிகர்கள், காமடி நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் போன்றோரில் மேலே பெயர்குறிப்பிட்ட அனைவருக்கும் பெயர் குறிப்பிடாமல் தவறவிட்ட ரஜினியுடன் நடித்த நடிகர்/நடிகைகள் அனைவருக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்....

13 வாசகர் எண்ணங்கள்:

KICHA said...

Kalakareenga ponga.

Sarathbabu - rajini koottani my favourite

Chitra said...

WOW!!! How iz it? Sooppar!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல அலசல் நண்பரே...

நல்ல பகிர்வு..

Mohamed Faaique said...

///தனது திரைப்படங்களில் எத்தனை பெரிய வில்லன்களையும் அடித்து துவம்சம் செய்யும் கேரக்டரில் நடித்தாலும்; ஜனகராஜ்/செந்திலின் சொற்பெச்சு கேட்பவராகவும், அவர்களது அதட்டலுக்கு அடிபணிபவராகவும், அவர்களை மரியாதைக்குரிய (குருவே, அண்ணா, தலைவா) அடைமொழி வைத்து அழைப்பவராகவுமே அதிகமான திரைப்படங்களில் அவர்களுடன் ////

R.Gopi said...

அன்புக்கு நான் அடிமை படத்தில் ஜெய்சங்கர் ரஜினியுடன் நடிக்கவில்லை... மாறாக விஜயன் நடித்திருப்பார்....

ரஜினியுடன் நடித்த காமெடி நடிகர்கள் என்று தனியாக ஒரு பதிவிட்டு இருக்க வேண்டும்... ஏனென்றால், ரஜினி காமெடிக்கு முக்கியத்துவம் தருபவராயிற்றே!!

sasibanuu said...

Very nice collection!!!

ஐயையோ நான் தமிழன் said...

சூப்பர் அண்ணா உண்மையிலேயே ரஜினிக்கான விலன்களில் என்றும் முதலிடம் பிடிப்பவர் ரகுவரன் மட்டும்தான்.

r.v.saravanan said...

நல்லாருக்கு பதிவுகள் ஒவ்வௌன்றும் கலக்குங்கள் நண்பா

மாணவன் said...

அருமை நண்பரே,

மிகச் சிறப்பாகவும் தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்...

தொடரட்டும் உங்கள் பணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல அலசல் நண்பரே...

நல்ல பகிர்வு..

MANO நாஞ்சில் மனோ said...

ரஜினியின் சரித்திரத்துக்கே இது டிரைலர்.......
சூப்பர்....!!!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ரஜினியுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த். நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்களில் நடித்த எங்கள் தலைவர் கே.பாக்யராஜைப் பற்றீ குறிப்பிடாத்தது வருத்தமான விஷயம்.

எப்பூடி.. said...

@ KICHA

@ Chitra

@ வெறும்பய

@ Mohamed Faaique

@ R.Gopi

@ sasibanuu

@ ஐயையோ நான் தமிழன்

@ r.v.saravanan

@ மாணவன்

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

@ நாஞ்சில் மனோ

@ எஸ்.எஸ்.பூங்கதிர்


உங்கள் அனைவரதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

.............................................

@ R.Gopi

//அன்புக்கு நான் அடிமை படத்தில் ஜெய்சங்கர் ரஜினியுடன் நடிக்கவில்லை... மாறாக விஜயன் நடித்திருப்பார்....//

நன்றி, ஜெய் சங்கரை மாற்றிவிட்டேன்.

..................................

@ எஸ்.எஸ்.பூங்கதிர்

//ரஜினியுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த். நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்களில் நடித்த எங்கள் தலைவர் கே.பாக்யராஜைப் பற்றீ குறிப்பிடாத்தது வருத்தமான விஷயம்.//

சரியாக பதிவை படியுங்கள் பாக்கியராஜ்சை குறிப்பிட்டுள்ளேனா இல்லையா என்பது தெரியும் :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)