Wednesday, December 12, 2012

ரஜினியின் உழைப்பும் நேர்மையும்...ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

இரண்டு வருடங்களுக்கு ஒருபடம் நடிக்கிறார், கஷ்டப்படாமல் கோடி கோடியாக சம்பாதிக்கிறார், இந்த மனுஷனுக்கு அதிஷ்டம்தான், இன்றைய நடிகர்கள் வருடத்துக்கு ஒருபடம் நடிப்பதே இவரைப் பார்த்துத்தான் என தமது வயித்தெரிச்சல்களையும் குற்றச்சாட்டுகளையும் ரஜினிமீது வெளிப்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு ரஜினியைப்பற்றி என்ன தெரியும்? அவரின் உழைப்பும், நேர்மையும் எப்பேற்பட்டதென்று தெரியாமல் நுனிப்புல் மேயும் இவர்களைப்பார்த்தால் புன்சிரிப்பு மட்டுமே இப்போதெல்லாம் உதிர்கின்றது!

1979 ஆம் ஆண்டு சிவாஜிகணேசனின் 200 ஆவது திரைப்பட விழாவிற்காக மதுரைக்குச்செல்ல புறப்பட்ட ரஜினி வழமைக்கு மாறாக அமைதியில்லாமல் கோபமான மனநிலையில் இருந்தார். விமான நிலையத்தில் தான்கேட்ட குளிர்பானம்  இல்லை என்று சொன்ன  பையனை அறைந்ததோடல்லாமல் அங்கு நியாயம்கேட்க வந்தவர்களையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை தனது பெலிற்ரை கழற்றி அடிக்க முற்பட்டார்;  அந்தசமயத்தில் அங்குவந்த  நடிகர் நம்பியார் ஒருவாறாக ரஜினியை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். பின்னர் விமானத்திலும் அங்கிமிங்குமாக நடந்துதிரிந்த ரஜினி அமைதியில்லாமலே இருந்தார், ரஜினியை உட்காரச்சொன்ன விமானப் பணிப்பெண்ணும் ரஜினியின் கோபத்திலிருந்து  தப்பவில்லை.

பின்னர் விமானத்திலிருந்து வெற்றிவிழாவிற்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டதால் ரஜினிக்கு சிறுநீர் கழிக்கவேண்டி இருந்தும் முடியாமல் போனது. போகும் வழியில் ரசிகர்கள் ஆரவாரம் எதுவும் அவருக்கு காதில் விழவில்லை;  மேடையிலும் குழம்பிய மனநிலையிலிருந்த ரஜினி அத்தனை கூட்டத்திற்கு முன்னால் திடீரென்று மேடையை விட்டு இறங்கி இருட்டில் மறைவான  இடம்பார்த்து தனது இயற்கை உபாதையை கழித்தார். பின்னர் மேடையில் பேச அழைக்கப்பட்ட ரஜினி கழுத்திலிருந்த மலையை பிய்த்துக்கொண்டு தனக்குத்தெரிந்த அனைத்து மொழிகளிலும் கலந்து ஏதேதோ பேசினார். பின்னர் மீண்டும் விமானநிலையத்தில் தகராறுசெய்த ரஜினி விமானத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் நடிகர்கள் நம்பியாரும், சிவகுமாரும் உத்தரவாதம் அளித்தபின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு தான் குடியிருந்த வீட்டு ஜன்னல்களை உடைத்ததால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி தொடர்கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ரஜினியை பரிசோதித்த மருத்துவர் செரியன் இன்னும் தாமதித்திருந்தால் இவரை மேலே போய்த்தான் பார்த்திருக்க வேண்டுமேன்று கடிந்துகொண்டார், மேலும் ரஜினிக்கு வந்திருப்பது ஒருவகையான நரம்புத்தளர்ச்சி என்றும் சரியான ஓய்வே அவருக்கு அவசியமென்றும் குறைந்தது 72 மணித்தியாலங்களாவது அவர் தூங்கவேண்டுமென்றும் வலியுறுத்தினார்; இந்தப்பாதிப்பிலிருந்து வெளிவர ரஜினி படாத பாடுபட்டார் .

உயிருக்கே ஆபத்து வருமளவிற்கு ரஜினி நரம்புத்தளர்ச்சியாலும், தானே யாரென்று தெரியாத மனநிலையிலும் இருந்தாரென்றால், என்ன காரணம்?  கடின உழைப்பும் அதனாலான நித்திரையின்மையுமே!! அப்போதெல்லாம் அவரால் தினமும் வெறும் 2 - 3 மணித்தியாலங்களே  நித்திரை கொள்ளமுடிந்தது. அப்படி ஓயாமல் உழைத்ததன் விளைவுதான் இந்தப்பாதிப்பு. 1977 முதல் 1979 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக 1980 ஆம் ஆண்டு 20 படங்கள் கதாநாயகனாக நடித்துள்ளார், அவற்றில் 90 வீதமானவை 100 நாட்கள் தண்டி ஓடிய படங்கள்(இறைய 100 நாள் ஒட்டப்படும் படங்களைப்போல் அல்ல)

அன்று தன் உணவு, உறக்கம் அனைத்தையும் துறந்து உழைத்த உழைப்பின் பலன்தான் இன்று  வரையான  உச்சநட்சத்திர அந்தஸ்து!! மற்றும்  ரஜினி இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து படங்களில் நடித்தாலும் மக்கள் கொடுக்கும் அமோக வரவேற்ப்பு.  இன்னமும் நடித்துத்தான் ரஜினி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, இருந்தாலும் சினிமா மீதுள்ள ஈடுபாடும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அவரை இந்த வயத்திலும் உழைக்க தூண்டுகின்றது!!

அது தவிர 60 வயதிற்கு பின்னரும் ரஜினியை வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்களில் நடிக்க சொல்வது நியாயமும் இல்லை!! ரஜினி தனக்காக முழுமையாக டூப்பை வைத்து சண்டைக்காட்சிகளையும், நடன காட்சிகளில் மென்மையான அசைவுகளையும் வையுங்கள் என்றால் இயக்குனர்கள் மறுக்கவா முடியும்? ஆனால் இன்றும் அவர் சண்டைக் காட்சிகளில் பெரும்பாலும் டூப் போடாமலும், நடன காட்சிகளில் வேகமான அசைவுகளையும் வெளிப்படுத்தி நடிப்பது அவரது சினிமா மீதான காதலுக்கும் உழைப்புக்கும் சான்று. 'மேக்கிங் ஒப் எந்திரன்' பார்த்து ரஜினியை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போகுமளவிற்க்கு அதில் ரஜினியின் உழைப்பு அபாரமாகவும் மெயகூச்செறியும்  வண்ணமும் இருந்தது!!

ஒரு தோட்டக்காரர் தனது தோப்பில் தென்னங்கன்றுகளை நட்டு, தினமும் நீரூற்றி, உரம் போட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். 10 வருடங்களில் அந்தமரங்கள் நன்றாக வளர்ந்து தேங்காய்களையும் இதர பலன்களையும் தருகின்றது. இப்போதெல்லாம் அந்த தோட்டக்காரர் வருடத்துக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே மரங்களுக்கு உரம் போட்டு வருகிறார், ஆனால் அந்த மரங்களால் எந்தவித குறைவுமில்லாமல் பலனை அனுபவிக்கின்றார். இதற்கு காரணம் முதல் பத்து ஆண்டுகளாக அவர் கொடுத்த உழைப்பு.

அதற்காக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னங்கன்றுகளை நட்டவர்கள் தாங்களும் ஆண்டுக்கு இரு தடவைகள்தான் தோப்பை பராமரிப்போமென்று கிளம்பினால் தோப்பு எப்படி உருப்படும்? இவர்களது தவறான அணுகுமுறைக்கு முன்னைய தோட்டக்காரன் எப்படி பொறுப்பாக முடியும்? அதே போலத்தான் 35 ஆண்டுகளாக உழைத்த உழைப்பின் பலனைத்தான் ரஜினி இன்று அனுபவிக்க்றார். இன்றைய இளம் நடிகர்கள் சிலரும்  தாங்களும் ரஜினியை போலத்தான் இருப்போமென்று தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டால் அதற்க்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்? முன்னர் போன்று ஆண்டுக்கு சிலபல  படங்கள் நடிப்பது  கடினம் என்றாலும், குறைந்த பட்சம் ஆண்டுக்கு இரு படங்களாவது நடிக்க முயற்சி செய்யலாம்!! இதை ஒப்பீட்டுக்காக சொல்லவில்லை, வீணாக காலத்தை வீனடிக்கின்றார்கள் என்கின்ற ஆதங்கத்தில் சொல்கின்றேன்!!

இன்றுவரை ரஜினியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் என்று யாரும் இல்லை!! ரஜினியின் சறுக்கல்களான பாபா, மாவீரன், வள்ளி என அதிகமானவை ரஜினியின் சொந்தப்படங்களே!! அது தவிர சறுக்கிய சில படங்களுக்காக மீண்டும் அந்த தயாரிப்பாளர் களுக்காக படம் நடித்து விட்டதை பிடிக்கவைத்தவர் ரஜினி. அதே போல் பாபாவிலும் ,குசேலனிலும் பேராசையால் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு படம் சரியாக போகவில்லை என்று ரஜினியிடம் முறையிட்ட வினயோகிஸ்தர்களுக்கு பணத்தை மீளக்கொடுத்து வினயோகிஸ்தர்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றினார். சிவாஜி திரைப்படம் திரையிடும் வரை ரஜினி வாங்கியது 100 ரூபா முற்பணம் மாத்திரமே.

37 வருட சினிமா வாழ்க்கையில் கால்சீட் சொதப்பல்கள், நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமை, இயக்குனரோ அல்லது வேறு சககலைஞருடனோ தகராறென ரஜினிபற்றி ஏதாவது முறைப்பாடு வந்ததுண்டா? தான் சார்ந்த துறையில் நேர்மையான, நம்பகமான, உழைப்பாளியை ரஜினிபோல் வேறு யாரையும் பார்க்கமுடியாது. அதனால்தான் அவர் இன்றும் தயாரிப்பாளர்களதும் இயக்குனர்களதும், ஏன் இன்றைய பெரும்பாலான இளம் கதானாயகிகளதும் முதல் தெரிவாக இருக்கின்றார்!!! இவையெல்லாம்தான் நேற்றும், இன்றையும், நாளையும், என்றும்  தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக  நிரந்தர சிம்மாசனம் போட்டு அமரவைத்துள்ளது......


33 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

உண்மைதான் , ரஜினி இடம் கற்று கொள்ள நிறைய இருக்கு , நாட் ஒன்லி போர் நடிகர், நமக்குமதான்

vichenou said...

முதல்ல Income tax உண்மையா கட்ட சொல்லுங்க... அதுதான் இந்த நாட்டிற்கான உண்மையான குடிமகனின் கடமை ......
அவர் அதில் என்ன தவறு செய்தற் என்பதை மிக விரிவாகவே என்னால் சொல்ல முடியும் .

கலையரசன் said...

நிறைவாவும், நினைக்கும்படியாவும் சொன்னீங்க தலைவா!!

சூஸ் எப்போதும் சூஸ்தான்!!

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//உண்மைதான் , ரஜினி இடம் கற்று கொள்ள நிறைய இருக்கு , நாட் ஒன்லி போர் நடிகர், நமக்குமதான்//

ரஜினி ஒரு பல்கலைக்கழகம்

அ.ஜீவதர்ஷன் said...

vichenou

//முதல்ல Income tax உண்மையா கட்ட சொல்லுங்க... அதுதான் இந்த நாட்டிற்கான உண்மையான குடிமகனின் கடமை ......
அவர் அதில் என்ன தவறு செய்தற் என்பதை மிக விரிவாகவே என்னால் சொல்ல முடியும் .//

வயித்தெரிச்சல் பாட்டியா நீங்க? எங்க அந்த காமடிய கொஞ்சம்சொல்லுங்க பாப்பம் ...

அ.ஜீவதர்ஷன் said...

கலையரசன்

//நிறைவாவும், நினைக்கும்படியாவும் சொன்னீங்க தலைவா!! //

நன்றி நன்றி...

Kumar said...

Thanks alot for sharing..

MUTHU said...

//முதல்ல Income tax உண்மையா கட்ட சொல்லுங்க... அதுதான் இந்த நாட்டிற்கான உண்மையான குடிமகனின் கடமை ......
அவர் அதில் என்ன தவறு செய்தற் என்பதை மிக விரிவாகவே என்னால் சொல்ல முடியும் .//

வயித்தெரிச்சல் பாட்டியா நீங்க? எங்க அந்த காமடிய கொஞ்சம்சொல்லுங்க பாப்பம் ...

சபாஷ் சரியான பதில்

கிரி said...

கலக்கல் இடுகையா போட்டுட்டு இருக்கீங்க! நீங்கள் மேற்கூறிய தகவல்கள் (சம்பவங்கள்) நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

ரஜினியின் நேரந்தவறாமை அனைவரும் கூறுவது.

Unknown said...

vichenou அண்ணே , அப்படி என்றால் வரி கட்டுற எல்லோரும் நல்லவர்களா .

இன்னும் ஒன்று , எந்த நடிகன் ஒழுங்காக டக்ஸ் கட்டுறான். சும்மா போங்க அண்ணே , சின்னபிள்ளை போல காமடி பண்ணுறீங்க.

நான் நினைக்றன் நீங்க ஒரு விஜய் /அஜித் விசிறி என்று . உண்மை சொல்லுங்க அண்ணே .

அ.ஜீவதர்ஷன் said...

Tamilmoviecenter

//சபாஷ் சரியான பதில்//

இவங்க எப்பவுமே இப்பிடித்தான் பாஸ் வயிறு எரிஞ்சுகிட்டே இருப்பாங்க, நமக்கு கூட ரஜினிய புடிக்கலன்னா வயிறு எரியத்தானே செய்யும்,விடுங்க பாஸ்.......

அ.ஜீவதர்ஷன் said...

Kumar

//Thanks alot for sharing..//

thanks for your visit & comment

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//ரஜினியின் நேரந்தவறாமை அனைவரும் கூறுவது.//


இன்றுவரை அதைக்கடைப்பிடிப்பது ஆச்சரியமான உண்மை.

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//இன்னும் ஒன்று , எந்த நடிகன் ஒழுங்காக டக்ஸ் கட்டுறான். சும்மா போங்க அண்ணே , சின்னபிள்ளை போல காமடி பண்ணுறீங்க. //

நீங்கள் சொல்வது ரஜினிக்கு பொருந்தாது, ரஜினி இரு பெரும்கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது எதிராக குரல்கொடுத்தவர்.எப்படி ரஜினியை மடக்கலாம் என எதிர்பாத்திருந்தவர்கள் ரஜினி வரி கட்டாவிட்டால் விட்டு வைத்திருப்பார்களா?

ஸ்ரீ.கிருஷ்ணா said...

kalakkal thala .... write more......

அ.ஜீவதர்ஷன் said...

ஸ்ரீ.கிருஷ்ணா

//kalakkal thala .... write more......//

thanks for your compliment

லிவிங்ஸ்டன் said...

thalivar thalivar than

அ.ஜீவதர்ஷன் said...

livingston baba

//thalivar thalivar than//

அதிலென்ன சந்தேகம்

Yoganathan.N said...

//அதற்காக ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னங்கன்றுகளை நட்டவர்கள் தாங்களும் ஆண்டுக்கு இரு தடவைகள்தான் தோப்பை பராமரிப்போமென்று கிளம்பினால் தோப்பு எப்படி உருப்படும்? இவர்களது தவறான அணுகுமுறைக்கு முன்னைய தோட்டக்காரன் எப்படி பொறுப்பாக முடியும்? அதே போலத்தான் 35 ஆண்டுகளாக உழைத்த உழைப்பின் பலனைத்தான் ரஜினி இன்று அனுபவிக்க்றார். இன்றைய இளம் நடிகர்கள் தாங்களும் ரஜினியை போலத்தான் இருப்போமென்று தங்கள் தலையில் தாங்களே மண்ணையள்ளிப்போட்டால் அதற்க்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்?//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என தெரிகிறது... நேராகவே விஷயதிர்க்கு வருகிறேன். ரஜினி, கமல் அவர்களுக்கு பிறகு, அடுத்த நான்கு பெரிய ஹீரோக்கள் ஒரு ஆண்டுக்கு குரைந்தபட்சம் 2 அல்லது 3 படங்களே கொடுக்க முடியும்.
தமிழ் சினிமா முன்பு போல் இல்லை. ஒரு படம் எடுக்கவே 4/5 மாதங்கள் ஆகிறது. இதில 'post production' வேலைகள் இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகிறது. தயாரிப்பாளர்களுக்கு பண சிகக்ல், court தடை, விழாக்களுக்கு மட்டுமே படம் வெளிவர வேண்டும் என்ற முட்டாள்தனமான சட்டம் - என இப்படி பல்வேரு இன்னல்களை சந்த்திக்கின்றனர். அந்த ஹீரோக்களுக்கு மட்டும் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் கொடுக்க ஆசை இருக்காதா என்ன...
எனது point - இந்த விஷயத்தில் ரஜினி சாரை பின்பற்றிதான் மற்றவர்களும் வருடத்திற்கு ஒரு படம் கொடுக்கிறார்கள் என்பது நியாயம் இல்லை. இதற factors-களயும் நாம் கருத்தில் கொல்ல வேண்டும் என்பது எனது கருத்து.

//நான் நினைக்றன் நீங்க ஒரு விஜய் /அஜித் விசிறி என்று . உண்மை சொல்லுங்க அண்ணே .//
அந்த நண்பர் கேட்ட 'வரி' கேல்விக்கும், அஜித்/விஜய்-கும் என்ன சம்பந்தம்??? வீணாக அவர்களை எதர்க்கு இதில் இழுக்குறிர்கள்???

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//அடுத்த நான்கு பெரிய ஹீரோக்கள் ஒரு ஆண்டுக்கு குரைந்தபட்சம் 2 அல்லது 3 படங்களே கொடுக்க முடியும்.//

இரண்டு மூன்றென்ராலாவது பராவாயில்லையே, இன்றைய காலகட்டத்தில் வருடத்திற்கு பத்து,இருபது படங்கள் நடிப்பது கடினம்தான், நீங்கள் சொல்வது போல் விஜயும் அஜித்தும் வருடத்திற்கு மூன்று படங்கள் நடித்துக்கொண்டுதான் வந்தனர், படங்கள் சரியாக போகாத காரணத்தாலேயே தற்போது இரண்டு வருடத்திற்கு அஜித் ஒரு படமும்,விஜய் ஒரு வருடத்திற்கு ஒரு படமும் நடிக்கின்றனர். விக்ரம் சூர்யா என்றாலாவது பறுவாயில்லை படத்துக்கு படம் கெட்டப் மாத்துவதனால் ஒரு படத்தை முடித்துதான் அடுத்த படத்திற்கு வரவேண்டும்.வீட்டில் நின்றபடி வந்து நடிக்கும் விஜய்க்கும்,அஜித்துக்கும் அந்தப் பிரச்சனை கூட இல்லை. இவர்களாவது பரவாயில்லை சிம்பு இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதை என்னவென்று சொல்வது? தனுசும் ரவியும் மட்டுமே அவ்வப்போது படங்களை வெளியிட்டு வெற்றியும் பெற்று வருகின்றனர்,அதனாலேயே அவர்களால் தொடர்ந்தும் அதிக படங்களை நடிக்கமுடிகிறது, இவர்கள் இருவரும்தான் அடுத்த தலைமுறை நாயகர்கள் என்று நினைக்கிறேன்.

Yoganathan.N said...

//படங்கள் சரியாக போகாத காரணத்தாலேயே//
இவர்கள் இருவருக்கும் உள்ள 'market value' படி பார்த்தால், இவர்களது முந்தைய படங்கள் (ஏகன் & வில்லு) சரியாக போகவில்லை தான்... அதற்காக, நீங்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. மஜா படத்திற்கு பிறகு விக்ரமுக்கு 3 ஆண்டுகள் படம் வரவில்லையே... அதற்கும் அதே காரணம் தானா... இருக்க முடியாது. நான் சொன்ன காரணங்கள் இவர்கள் அனைவருக்கும் பொருந்தும். அடுத்த வருடம் பாருங்கள், அஜித், விஜய் இருவருமே ஆளுக்கு 2 படங்கள் தருவர்கள்.

//இரண்டு வருடத்திற்கு அஜித் ஒரு படமும்//
உங்களுக்கு அவர் 'career' பத்தி ஒன்றும் தெரியாது என நினைக்கிறேன். இதுவரை படங்கள் வெளிவராத ஆண்டுகள் இரண்டே இரண்டு மட்டும் தான். 1990-களில் ஓர் ஆண்டு (நினைவில இல்லை). அப்புறம், இந்த 2009-ஆம் ஆண்டு. இந்த ஆண்டு ஏன் அவர் படம் வரவில்லை என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால், இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்...

//விக்ரம் சூர்யா என்றாலாவது பறுவாயில்லை படத்துக்கு படம் கெட்டப் மாத்துவதனால் ஒரு படத்தை முடித்துதான் அடுத்த படத்திற்கு வரவேண்டும்.வீட்டில் நின்றபடி வந்து நடிக்கும் விஜய்க்கும்,அஜித்துக்கும் அந்தப் பிரச்சனை கூட இல்லை.//
இந்த விஷயத்தில் விஜய்க்கு ஆதரவாக பேச என்னால் முடியாது. ஆனால், இதில் அஜித்தை எப்படி சேர்த்தீர்கள் என்பது புலப்படவில்லை. படத்திற்கு படம் கெட்-அப் மாற்றுவதில், மற்ற இருவரையும் விட அஜித் ஒரு படி மேல் தான். என்ன செய்வது, 'Blogger' மத்தியில் அஜித், விஜய் இருவரையுமே தாழ்த்திப் பேசுவது ஒரு 'fashion'-ஆகிப் போயிற்று.

//சிம்பு இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதை என்னவென்று சொல்வது?//
முதலில், நான் சிம்பு விசிரி அல்ல.
ஏற்கனவே, நான் சொன்ன காரணங்கள் இவருக்கு மிகவும் பொருந்தும். இரண்டு வருடங்களுக்கு ஒரு படமெ கொடுக்க இவருக்கும் பட்டும் என்ன ஆசையா??? இதை பற்றி இவரே, தனது அன்மைய பேட்டியில் சொல்லியிருந்தார். அடுத்த வருடம் 3 படங்கள் தருவதாகவும் சொன்னார். பார்ப்போம்...

P.S ஹிந்தி படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டா???

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//உங்களுக்கு அவர் 'career' பத்தி ஒன்றும் தெரியாது என நினைக்கிறேன். இதுவரை படங்கள் வெளிவராத ஆண்டுகள் இரண்டே இரண்டு மட்டும் தான். 1990-களில் ஓர் ஆண்டு (நினைவில இல்லை). அப்புறம், இந்த 2009-ஆம் ஆண்டு.இந்த ஆண்டு ஏன் அவர் படம் வரவில்லை என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால், இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்...//

2008 தீபாவளிக்கு பின்னர் அஜித் படம் எதுக்கும் வெளிவரவில்லை, பொங்கலுக்கும் அசல் இல்லையென்றால் ஒன்றரை வருடமாக படமில்லை,அது தவிர வருடத்திற்கு ஒருபடம் தான் இனிவரும் காலங்களில் நடிக்கபோவதாக அஜித்தே சொன்னது உங்களுக்கு தெரியாதென்று நினைக்கிறேன். விஜய்க்கு முன்னர் அஜித்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அறிக்கை விட்டு மூக்குடைந்த நடிகர் என்பதை மறவாதீர்கள். 2000 இக்கு முன்னர் விஜயும் அஜித்தும் வருடத்திற்கு மூன்று படங்களுக்கு மேல் நடித்தவர்கள்தான்,ஆனால் வருடத்திற்கு இரண்டுக்கு குறைவான படங்கள் நடிக்கும் கலாச்சாரம் உருவானதே 2005 க்கு பின்னர் தான். அதற்கு முன்னர் ரஜினி தவிர அனைவருமே வருடத்திற்கு மூன்று படங்களுக்கு மேல் நடித்தவர்கள்தான்.2005 ,2008 ஆம் ஆண்டுகளில் அஜித் நடித்தது ஒருபடம் மட்டுமே , 2009 ஒரு படமும் நடிக்கவில்லை. அசல் வெளிவராததது அஜித்தின் துரதிஸ்ரமென்றே வைத்துக்கொள்வோம் அப்படிஎன்றால் அஜித்தின் அடுத்த படம் என்ன?

.............................

//இதில் அஜித்தை எப்படி சேர்த்தீர்கள் என்பது புலப்படவில்லை. படத்திற்கு படம் கெட்-அப் மாற்றுவதில், மற்ற இருவரையும் விட அஜித் ஒரு படி மேல் தான். //காமடி 2009 இதுதானா? ஆழ்வார்,கிரீடம்,ஏகன்,பில்லா இவற்ரில் எந்தப்படத்திற்கு கெட்டப் மாத்தினார்? அதற்கு முன்னர் வரலாறு தவிர திருப்பதி,பரமசிவன்,ஜி,அட்டகாசம்,ஜனா,ஆஞ்சநேய படங்களில் எந்தப்படத்தில் கெட்டப் மாத்தினார்?
அதற்கும் முன்னர் வில்லனில் வித்தியாசமாக நடித்தாலும் எங்கே கெட்டப் மாத்தினார்? அதற்குமுன்னர் ராஜா , ரெட். பூவெல்லாம் உன்வாசம்....

சிட்டிசன்,வரலாறு தவிர அஜித் கெட்டப் மாதத்திய படம் ஒன்று சொல்லுங்க சார்? உங்களுக்கு அஜித்தை பற்றின் சரியாக தெரியாது என்று நினைக்கிறேன்.

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N


//முதலில், நான் சிம்பு விசிரி அல்ல.
ஏற்கனவே, நான் சொன்ன காரணங்கள் இவருக்கு மிகவும் பொருந்தும். இரண்டு வருடங்களுக்கு ஒரு படமெ கொடுக்க இவருக்கும் பட்டும் என்ன ஆசையா??? இதை பற்றி இவரே, தனது அன்மைய பேட்டியில் சொல்லியிருந்தார். அடுத்த வருடம் 3 படங்கள் தருவதாகவும் சொன்னார். பார்ப்போம்...//

சிம்புவையெல்லாமா நம்புகிறீர்கள்?

........................

//P.S ஹிந்தி படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டா???//

அதிகமாக பார்ப்பதில்லை,ஆனால் நீங்கள் ஹிந்தி சினிமா பற்றி விவாதிக்கலாம்.

Yoganathan.N said...

//2008 தீபாவளிக்கு பின்னர் அஜித் படம் எதுக்கும் வெளிவரவில்லை,//
இதயே தான் நானும் சொன்னேன். 2008 ஒரே படம். அசல் - 2008 தீபாவளிக்கு வரும் என்றார்கள். அப்புறம் 2009 பொங்கள் என்றார்கள். அப்புறம் 'Republic Day' என்றார்கள். Latest-Aga பிப்ரவரி 5 என்றார்கள். சிவாஜி தயாரிப்பாளர்களுக்கு கோடி நன்றிகள். இதற்க்கு fans-ஆகிய நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது...

//பொங்கலுக்கும் அசல் இல்லையென்றால் ஒன்றரை வருடமாக படமில்லை,//
ஆம்.

//அது தவிர வருடத்திற்கு ஒருபடம் தான் இனிவரும் காலங்களில் நடிக்கபோவதாக அஜித்தே சொன்னது உங்களுக்கு தெரியாதென்று நினைக்கிறேன். //
இல்லை. வருடத்திற்கு இரண்டு என்று சொன்னார் (பொங்கல் interview-வில்). Latest-Aga "I'm happy doing one movie per year" என்று சொன்னார். இதை நீங்கள் எப்படி வேனுமானாலும் எடுத்துக் கொல்லளாம்.

//விஜய்க்கு முன்னர் அஜித்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அறிக்கை விட்டு மூக்குடைந்த நடிகர் என்பதை மறவாதீர்கள்.//
எதை ஏற்றுக் கொண்டாலும் இதை ஒரு போதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்... உங்கள் மேல் தப்பில்லை. நிறய பேர் இப்படித் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 10 வருடத்திர்கு முன்னால் அவர் சொன்னது:
"I want to be like Rajini sir."
உங்களைப் போல எல்லாரும் இப்படி தான் நினைத்து அவரை தாழ்த்திப் பேசினார்கள். 2008 பொங்கல் interview-இல் மீடியா இதை மீண்டும் கிளறியது. அப்போது அவர் இதை தெலிவு படுத்தினார். அஜித் கூறியதாவது:
"If a child asked what he/she wants to become when they grow up - they would say I want to be like Abdul Kalam, I want to be a Doctor etc... For me, Rajini sir has been a great inspiration to every actors. I said I want To Be LIKE Rajini sir. People mistook me as if I wanted the Superstar crown..."
நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், அந்த interview link-ஐ தேடி பிடித்து தருகிறேன்.

//2000 இக்கு முன்னர் விஜயும் அஜித்தும் வருடத்திற்கு மூன்று படங்களுக்கு மேல் நடித்தவர்கள்தான்//
இதை நான் மறுக்க வில்லையே...

Regarding get-up:
இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். ஆதவன், அயன், வேல், சில்லுனு ஒரு காதல், ஜூன்.ஆர், ஆரு - இந்த படங்களில் சிவகுமாரின் புதல்வன் என்ன கெட்-அப் மாற்றினார், உங்களின் பட்டியலில் சேர்க்க???

//அசல் வெளிவராதது அஜித்தின் துரதிஸ்ரமென்றே வைத்துக்கொள்வோம் அப்படிஎன்றால் அஜித்தின் அடுத்த படம் என்ன? //
முதலில் 2 அல்லது 3 படங்கள் தரவில்லை என்றீர்கள். இப்பொழுது discussion-ஐ வேரு பக்கம் திருப்பி, அடுத்த படத்தை பற்றி கேட்கிறீர்கள்... உங்களது 'sarcasm' புரிகிறது. இருந்தாலும் பதில் சொல்கிறேன். அவர் அடுத்த படம் 50ஆவது படம் என்பதால், சற்று careful-ஆக அடி எடுத்து வைக்கிறார். கௌதம், வென்கட் பிரபு இருவரும் பரிசீலனயில் உள்ளனர். "அசல் படம் வெளிவந்த பிறகே" அடுத்த பட தகவல்கள் வெளிவரும் போலிருக்கிறது... இதுவும் ஒன்றும் புதிதில்லை. பொதுவாக, அவரது தற்போதய படம் இருதிக் கட்டத்தில் இருக்கும்போது அல்லது ரிலீசுக்கு பிறகே, அவர் அடுத்த படத்தைப் பற்றி அறிக்கை வெளியிடுவார்...

Yoganathan.N said...

//சிம்புவையெல்லாமா நம்புகிறீர்கள்?//
அவர் என்னை என்ன செய்தார்? பயனுக்கு திறமை இருக்கிறது. திமிரும் இருக்கிறது... Hehe...
உடனே, நான் சிம்பு-தனுஷ் fight-இல் சிம்பு பக்கம் என்று என்னிவிடாதீர்கள்... இருவர் படமும் பார்ப்பேன் (VCD-யில்)... :)

//அதிகமாக பார்ப்பதில்லை,ஆனால் நீங்கள் ஹிந்தி சினிமா பற்றி விவாதிக்கலாம்.//
வேரொண்ருமில்லை. அன்மையில் 'Paa' படத்தைப் பார்த்தேன். நீங்கள் பார்த்திருந்தால், உங்கள் கருத்தை கேட்க ஒரு ஆவல். இல்லயென்றால், உங்களுக்கு 'recommend' செய்வேன்... :)

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//உங்கள் மேல் தப்பில்லை. நிறய பேர் இப்படித் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 10 வருடத்திர்கு முன்னால் அவர் சொன்னது:
"I want to be like Rajini sir."//


அஜித் ஒரு பேட்டியில் மட்டும் அவ்வாறு கூறவில்லை, பலதடவை பலமாதிரி கூறியுள்ளார்,1999 - 2002 வரையான விகடன்,குமுதங்களை பாருங்கள் தெரியும் . இதில் யார் பக்கம் சரி பிழை என்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் அஜித்தை ரசிப்பவர் , அவரை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்

//முதலில் 2 அல்லது 3 படங்கள் தரவில்லை என்றீர்கள். இப்பொழுது discussion-ஐ வேரு பக்கம் திருப்பி, அடுத்த படத்தை பற்றி கேட்கிறீர்கள்... உங்களது 'sarcasm' புரிகிறது//

அடுத்த படம் என்ன என்று கேட்டதன் அர்த்தம் பேச்சை திசை திருப்ப இல்லை, அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கும் அஜித் மீண்டும் அடுத்த படத்தை வெளியிட அசலிலிருந்து ஓரிரு வடுடங்கள் ஆகும் என்பதற்காகவே, இதனால் 2010 இலும் அஜித்தின் ஒரு படமே வெளிவரும் என்பது அர்த்தம்,இதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை

............................

//இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். ஆதவன், அயன், வேல், சில்லுனு ஒரு காதல், ஜூன்.ஆர், ஆரு - இந்த படங்களில் சிவகுமாரின் புதல்வன் என்ன கெட்-அப் மாற்றினார், உங்களின் பட்டியலில் சேர்க்க???//

உண்மையை சொன்னால் எனக்கு அஜித்தை பிடிக்கும், விஜயையும் , சூர்யாவையும், சிம்புவையும்தான் எனக்கு பிடிக்காது. நீங்கள் ரஜினியின் கட்டுரையில் அஜித்தை ஒப்பிட்டதலே சற்று அதிகமாக அஜித்தை பற்றி குறைவாக விமர்சித்து விட்டேன்,இதற்கு முன்னைய பதிவுகளில் பாருங்கள் அஜித்தை பற்றி ஏதாவது குறையாக கூறியிருக்கிறேனா என்று (அதற்காக பேச்சை வேறுபக்கம் திருப்புகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள்,நான் சொன்ன கருத்தில் உறுதியாகத்தான் இருக்கிறேன் ,ஆனால் சில கடினமான வார்த்தைகளை பாவித்திருக்க கூடாது என்பதற்காகவே இதை சொல்கிறேன்). ஆனால் சூர்யா அஜித்தை விட அதிக கெட்டப்புகள் போட்டதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்(நந்தா,கஜினி,பேரழகன்,வாரணம் ஆயிரம்).

விக்ரமுடன் கெட்டப் விடயத்தில் அஜித்தை ஒப்பிடமுடியாது


.......................

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//வேரொண்ருமில்லை. அன்மையில் 'Paa' படத்தைப் பார்த்தேன். நீங்கள் பார்த்திருந்தால், உங்கள் கருத்தை கேட்க ஒரு ஆவல். இல்லயென்றால், உங்களுக்கு 'recommend' செய்வேன்... :)//

பா பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,பார்த்தால் நிச்சயம் பதிவு போடுவேன் அதேலே உங்கள் கருத்துக்களை பதிவு செயுங்கள்

Yoganathan.N said...

//நீங்கள் அஜித்தை ரசிப்பவர் , அவரை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்//
எந்த ரசிகர் தான் அப்படி இல்லை. இது எல்லாருக்கும் பொருந்தும் (உங்களயும் உட்பட)
என்னை பற்றி உங்களுக்கு தெரியாது... நீங்கள் என்னை 'blind fan' என்று நினைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன். திருப்பதி, ரெட், ஜனா போன்ற படங்களை முதலில் துப்பிய ரசிகன் நானாகத் தான் இருப்பேன்...

//அடுத்த படம் என்ன என்று கேட்டதன் அர்த்தம் பேச்சை திசை திருப்ப இல்லை, அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கும் அஜித் மீண்டும் அடுத்த படத்தை வெளியிட அசலிலிருந்து ஓரிரு வடுடங்கள் ஆகும் என்பதற்காகவே, இதனால் 2010 இலும் அஜித்தின் ஒரு படமே வெளிவரும் என்பது அர்த்தம்,இதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை//
இந்த கேல்வி கேட்பதற்கு முன்பு, இரண்டு வருடத்திற்கு அவர் ஒரு படம் மட்டுமே தருகிறார் என சொன்னீர்கள். இந்த கேல்வி கேட்டவுடன், அவருக்கு அடுத்த படம் முடிவாகவில்லை என கிண்டல் செய்வதாக தோனிற்று. அதான் அப்படி சொன்னேன். சரி விடுங்கள்.
சின்ன திருத்தம் - அடுத்த வருடம் பாருங்கள், கண்டிப்பாக இரண்டு படங்கள் வரும் (வேண்டுமென்றால் எழுதி வைத்துக் கொள்ளூங்கள்).

//உண்மையை சொன்னால் எனக்கு அஜித்தை பிடிக்கும், விஜயையும் , சூர்யாவையும், சிம்புவையும்தான் எனக்கு பிடிக்காது. நீங்கள் ரஜினியின் கட்டுரையில் அஜித்தை ஒப்பிட்டதலே சற்று அதிகமாக அஜித்தை பற்றி குறைவாக விமர்சித்து விட்டேன்,//
தவறாக புரிந்து கொண்டீர்கள் நண்பரே. என்னுடய பின்னூட்டங்களை இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள். கண்டிப்பாக ரஜினி, அஜித் என்ற ஒப்பிடுதலே இருந்திருக்காது... என்னுடய ஒப்பிடுதல்கள் அனைத்தும் அஜித், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா என்ற வட்டத்துக்குள்ளேயே இருக்கும்.
எனக்கு தெரிந்து சூர்யா பிடிக்காத முதல் 'blogger' நீங்கள் தான்...

//இதற்கு முன்னைய பதிவுகளில் பாருங்கள் அஜித்தை பற்றி ஏதாவது குறையாக கூறியிருக்கிறேனா என்று//
அவரை பற்றி குறையாக எழுதுவது உங்கள் விருப்பம், உங்கள் சுதந்திரம். அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது... ஆனால் பலர் உள்ளதை உள்ளபடி எழுத மறுக்கிறார்கள். இது அனைவருக்கும் பொருந்தும், உங்களை மட்டும் சொல்லவில்லை. :) எல்லாருக்கும் அஜித் கண்டிப்பாக பிடித்தாக வேண்டும் என்று நான் நினைத்தால், என்னை விட ஒரு பெரிய முட்டால் இருக்க மாட்டான். உங்களுக்கு அஜித் பிடிக்கும் என்றீர்கள். கேட்பதற்கு மன மகிழ்ச்சியாக இருக்கிறது.

//ஆனால் சூர்யா அஜித்தை விட அதிக கெட்டப்புகள் போட்டதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்(நந்தா,கஜினி,பேரழகன்,வாரணம் ஆயிரம்). //
கெட்டப்புகள் என்றால் இருக்கும் தோற்றத்திலிருந்து சற்று மாருபட்டு தெரிவது தானே... இதன் படி பார்த்தால் நந்தா, கஜினி சேர்த்துக் கொள்ளலாம். சிவாஜியில் மொட்டை போஸும் ஒரு கெட்டப் தானே (மன்னிகவும், ரஜினி சாரை வீனாக இதில் இழ்ஹுப்பதாக நினைக்க வேண்டாம். ஒரு உதாரனதிற்கே)... ஆகவே, ரெட் (bald), பில்லா (hairstyle & appearance) மற்றும் அசல் (sideburn, hairstyle & appearance) கண்டிப்பா வரும் (enbathu enathu karuththu)...

இருதியாக, ரஜினி சாரை நான் ஒப்பிட்டேன் என்று தெரிந்தோ தெரியாமலோ சொன்னீர்கள். எனவே, இதுவே நான் செய்யும் கடைசி பதிவு. இனிமேல் வருவேன், படிப்பேன் ஆனால் எதுவும் எழுத மாட்டேன்...
நன்றி.

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//இருதியாக, ரஜினி சாரை நான் ஒப்பிட்டேன் என்று தெரிந்தோ தெரியாமலோ சொன்னீர்கள். எனவே, இதுவே நான் செய்யும் கடைசி பதிவு. இனிமேல் வருவேன், படிப்பேன் ஆனால் எதுவும் எழுத மாட்டேன்...
நன்றி.//

பிழை என்மீது என்றால் சுட்டிக்காட்டுங்கள்,அதற்காக இனிமேல் எதுவும் எழுதமாட்டேன் என்பதெல்லாம் சற்று கடினமான முடிவு, நான்தான் நீங்கள் எழுதியதை பிழையாக விளங்கிவிட்டேன்.ஒரு வாசகர் குறைந்து விடுவார் என்பதற்காக சொல்லவில்லை, உங்கள் பின்னூட்டல்கள் வாழ்த்துக்கள் மட்டும் தருவதில்லை,உங்கள் சந்தேகங்கள் பதிவில் இல்லாத விடயங்களை மீண்டும் எழுத தூண்டுபவை. இது ஆரோக்கியமான விடயம்,இதில் எனது சுயநலமும் அடங்கியுள்ளது. உங்கள் முடிவை மீளாய்வு செய்யுங்கள் , உங்களிடமிருந்து அடுத்த பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

நன்றி

Yoganathan.N said...

நண்பரே... Past is past... மறப்போம், மன்னிப்போம்... உங்களுடைய email address கிடைக்குமா??? :)

அடிக்கடி 'கிரிக்கெட்' பற்றி மற்றும் எழுதுகிறிர்களே... என்னைப் போன்ற தீவிர காற்பந்து ரசிகர்களுக்கு எதுவும் தீனி இல்லையா??? :(
அடுத்த வருடம், World Cup வேர வரவுள்ளது... :)

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

நண்பரே... Past is past... மறப்போம், மன்னிப்போம்... உங்களுடைய email address கிடைக்குமா??? :)


அதே அதே , முடிஞ்சது முடிஞ்சு போச்சு,உங்கள் மீள்வருகைக்கு எனது நல்வரவுகள்.

ajeevatharshan@gmail.com(முடிந்தவரை தமிழில் எழுதுங்கள்,நான் ஆங்கிலத்தில் புலி.. hi hi )


//அடிக்கடி 'கிரிக்கெட்' பற்றி மற்றும் எழுதுகிறிர்களே... என்னைப் போன்ற தீவிர காற்பந்து ரசிகர்களுக்கு எதுவும் தீனி இல்லையா??? :(//


எனக்கும் FOOTBALL பற்றி எழுதவேண்டுமென்று விருப்பம்தான், ஆனால் எனக்குதெரிந்து விசேடமாக எதுக்கும் இடம்பெரவில்லை,அதனையும் மீறி எழுதுவது திணிப்பது போல் இருக்கும்,ஆனால் விரைவில் தொடர்ச்சியாக FOOTBALL பதிவுகளை எதிர்பாருங்கள்.

r.v.saravanan said...

இதன் மூலம் ரஜினியை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது பதிவிற்கு நன்றி எப்பூடி

உழைப்பால் உயர்ந்த சிகரம் ரஜினி

MoonramKonam Magazine Group said...

மிக நல்ல பதிவு !

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)