Wednesday, December 12, 2012

ரஜினியும் தமிழ்சினிமாவும்...
ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1950 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பன்னிரண்டாம் திகதி, மணி இரவு பதினொன்று ஐம்பத்தைந்து, பெங்களூரில் வாணி விலாஸ் பிரைமரி ஹெல்த் சென்டரில் வறுமையின் பிடியில் வாடிய பெற்றோருக்கு நான்காவதாக பிறந்த குழந்தைதான் இன்று அறுபத்து மூன்று  வருடங்கள் கழித்து இந்தியத்திரையுலகின் முடிசூடா மன்னன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (சிவாஜிராவ்).

தனது முன்னைய திரைப்படங்களின் வசூலை தனது அடுத்துவரும் திரைப்படங்களால் மாத்திரமே முறியடிக்க முடியும் என்பதற்கிணங்க பாட்சாவின் சாதனையை படையப்பாவும், படையப்பாவை சந்திரமுகியும், சந்திரமுகியை சிவாஜியும், சிவாஜியை எந்திரனும் முறியடித்து, எந்திரனின் சாதனை அடுத்த ரஜினி படத்தை எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்ளமைதான் ரஜினிகாந்தின்  ஸ்பெஷல்!!  இது சாதரணமாக கிடைத்த வெற்றியும், எட்டமுடியாத உயரமும் அல்ல; 37 வருடங்களில் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி!!

இந்த உயரத்தை ரஜினிகாந்த் அடைந்திருப்பதை அதிஷ்டமென்றும், கடவுளின் கிருபை என்றும் கூறுபவர்களும் உண்டு. சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டார் ஆனவர்தான் ரஜினிகாந்த் என்று சுலபமாக ஒரு வார்த்தையில் ரஜினியின் வளர்ச்சியை விபரிப்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த உச்சத்தை அடைய அவர் சந்தித்த சோதனைகள், வேதனைகள், அவமானங்கள், வறுமை என்பன தவிர அவரது விடாமுயற்சி, போராட்டகுணம், கடின உழைப்பு என்பனபற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

ரஜினிகாந்தின் இந்தப் பயணம் பூக்களின் மீது நடந்த சுகமான அனுபவமில்லை, மாறாக கற்களிலும் முட்களிலும் நிகழ்ந்த நெடுந்தூர பாதயாத்திரை. திரைப்பட கல்லூரியில் அவர் சேர்வதற்கு பட்டபாடுகளும் அங்கு வறுமையின் காரணமாக உணவுக்கும், உடைக்கும், தங்குமிடத்திற்கும் அவர் பட்டபாடுகளும் எத்தனை எத்தனை! ரோட்டோரங்களில் உறங்கியும், உணவகங்களில் அனைவரும் உண்டபின்னர் இருக்கும் மீதிகளை உண்டும், சில நண்பர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியும், தனது திரைப்படகல்லூரி வாழ்வை முடிக்கும்போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் ரஜினியினது ஆரம்பகால மற்றும் கல்லூரி நண்பர்களே. இன்றும் அவர்களுடன் நட்புவைத்திருக்கிறார் சூப்பர்ஸ்டார், அவரால் அந்த நாட்களை அவளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாது!! அத்தனை அடிகள், அத்தனை வலிகள் நிறைந்த அந்த வாழ்க்கையையும் ரசித்து அனுபவித்தவர்தான் ரஜினிகாந்த்.

நடிக்க வந்து வெறும் மூன்று ஆண்டுகளில் (1978 ஆம் ஆண்டு) சூப்பர்ஸ்டார் பட்டம் ரஜினிக்கு தானுவால் பைரவி விளம்பர பானர்களில் போடப்பட்டதை எவரும் மறுப்பு கூறாமல் ஏற்றுக்கொண்டனரென்றால் சும்மா இல்லை!! அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினி நடித்தது 26 திரைப்படங்கள், அவற்றில் ரஜினி பிரதான வேடமேற்ற திரைப்படங்களில் மிகப் பெரும்பான்மையானவை வெற்றிப்படங்கள். சூப்பர் ஸ்டார் டைட்டில் கொடுக்கப்பட்டது மிகச்சரியானது  என்பதை அடுத்த இரண்டு வருடங்களில் கிடைத்த மிகப்பெரும் வெற்றிகள்மூலம் நிரூபித்தார் ரஜினிகாந்த் (முள்ளும் மலரும், பிரியா, தர்ம யுத்தம் , ஆறிலிருந்து அறுபதுவரை, அன்னை ஓர் ஆலயம்).

அதன் பின்னர்  1980 ஆம் ஆண்டு ஹிந்தியில் அன்றைய இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த 'டொன்' திரைப்படத்தை தமிழில் 'பில்லா' என்னும் பெயரில் ரீமேக்செய்து நடித்த ரஜினி அந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் தன்னை தமிழ் சினிமாவின் மிகப்பெரும் மாஸ் ஹீரோவாக வெளிக்காட்டினார். அதன் பின்னர் ரஜினி நடித்த படங்களில் 90 % ஆனவை மிகப்பெரும் வெற்றியை பெற்றன. ஆனால் ரஜினிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம்  பாட்ஷா; அதன்பின்னர் தமிழகத்தின் அனைத்து தேர்தல்களிலும் ரஜினி அனைத்து தரப்பினராலும் நன்கு அவதானிக்கப்பட்டார். முத்து திரைப்படத்தின் மூலம் இந்தியர்கள் மிகமிக குறைவாக உள்ள ஜப்பானில் தனது சினிமா ஆதிக்கத்தை நிலைநாட்டினார், அது இன்றுவரை தொடர்கின்றது. பின்னர் சிவாஜி மூலம் உலக அரங்கில் தன்னை நிரூபித்த சூப்பர்ஸ்டார், உலகநாடுகளில் தமிழ் சினிமாவுக்கான வியாபாரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்; அது எந்திரனில் விஸ்வரூபமெடுத்தது தமிழ் சினிமாவின் வீச்சை அதிகப்படுத்தியது!!!

ரஜினியை ஸ்டைல் நடிகர் என்று மட்டும் கூறுபவர்களும், ரஜினி நடிப்பாற்றலுள்ள படங்களில் நடிக்கவில்லை என்று கூறுபவர்ளும், ரஜினியின் ஆரம்பகால படங்களான ஆறிலிருந்து அறுபதுவரை, நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரா, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஜானி, எங்கேயோ கேட்டகுரல் போன்ற திரைப்படங்களை பார்த்திருக்காதவர்களாகவே இருக்கமுடியும். "ரஜினிபோல் எந்த நடிகரும் இயல்பாக நடிக்கமாட்டார்கள்" என்று, இன்றைய  நாட்களிலும்  ரசிக்கக்கூடியளவிற்கு 70 களிலேயே சிறப்பான திரைப்படங்களை தந்த தமிழ்சினிமாவின் புதுமைதேடும் இயக்குனர்களின் வழிகாட்டி மகேந்திரன் கூறியதை இந்த இடத்தில் மீண்டும் நினைவுகூரலாம். ரஜினி போன்ற கவர்ச்சிகரமான, ஒருபார்வையிலேயே கவர்ந்திழுக்கும் காந்தசக்திகொண்ட நடிகர்கள் இந்தியாவிலேயே யாருமில்லை.

கரிய மேனி, குட்டிக் கண்கள், பறட்டைத்தலை, பெரிய மீசை என அதுவரை தமிழ் சினிமா கண்டிராத புறத் தோற்றமும்; வேகமான வசன உச்சரிப்பு,  துறுதுறுப்பான நடிப்பு, காந்தப்பார்வை, வித்தியாசமான நடன அசைவுகள், வித்தியாசமான சண்டைக்காட்சிகள் என புதுமையான வெளிப்பாடுகளும்; மற்றயவர்களிலிருந்து தன்னை  வேறுபடுத்தி ரஜினியால் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பதிக்க உதவியது!! பென்சிலால் வரைந்த மீசையுடனும், நாடக தன்மையான வசன உச்சரிப்புக்களுடனும், மா நிறத்துடனும் தான் அன்றைய நாயகர்கள் காணப்பட்டார்கள்!! ஜதார்த்தமான வசனஉச்சரிப்பு, தடித்த மீசை, கறுத்த மேனி எனமேற்சொன்ன விடயங்களில் புதிய பரிமாணத்தை  தமிழ் சினிமாவுக்கு முதல்முதலாக கொண்டுவந்த பெருமை ரஜினியையே சாரும்.

ரஜினி வர்த்தகரீதியான படங்களில் அண்மைக்காலங்களில் நடித்தாலும் பாபா தவிர மீதி அனைத்துப்படங்களிலும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு பாத்திரங்களில் நடித்திருப்பார் (பாட்ஷா, முத்து, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன்). ரஜினி வர்த்தகரீதியான படங்களில் நடிப்பதை விமர்சிப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்; ரஜினி படங்களால்த்தான் இன்னமும் தமிழ்சினிமா கஜானா அதிகமாக நிரம்புகிறது, வர்த்தகரீதியான படங்களினால்தான் புதிய முயற்சிகளுக்கு தயாரிப்பாளர்களுக்கு பணம்கிடைக்கிறது, ரஜினி வர்த்தகரீதியான படங்களில் நடிக்காமல் கலைப்படைப்புகளில் நடித்திருந்தால் அதிகமான தயாரிப்பாளர்கள் பெட்டியை கட்டிக்கொண்டு சகீலா பக்கம் கிளம்பியிருப்பார்கள். ஒரு ரஜினிபடம் வருவதால் எத்தனை சினிமாவை நம்பியிருக்கும் வீடுகளில் அடுப்பெரிகிறது !! திரையரங்க முதலாளிகள் முதல் சைக்கிள் பார்க், பீடா விற்கும் பையன் வரை  அனைத்து பிரிவினரும் பணம்பார்க்கும் படம் ரஜினிபடம்தான் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

ரஜினியின் அண்மைக்கால சரிவுகளான பாபாவும் ,குசேலனும் தோல்வியடைந்ததற்கு சிறப்பான தன்மைகள் மேற்சொன்ன திரைப்படங்களுக்கு இல்லாமல் இருந்தாலும் தமிழகஅரசியல் காரணிகளும் இவற்றின் சரிவில் முக்கிய பங்கு வகித்தத்தையும் மறுக்கமுடியாது!! ரஜினியின் தோல்வியடைந்த பாபாவின் வசூல் அன்றைய தேதியில் ஏனைய வெற்றித் திரைப்படங்களாக சொல்லப்பட்ட திரைப்படங்கள் கொடுக்காத வசூலிலும் அதிகம்; ரஜினி படங்களில்ன் சந்தைப்பெறுமதி உச்சத்தில் இருக்க இதுவே காரணம்!! பிரமாண்டமான ஒப்பினிங் , திரைப்படங்களின் வசூல், சம்பளம், விழாக்களில் முதல்மரியாதை என 347 ஆண்டுகளாகியும் ரஜினிதான் இன்னமும் தமிழ் சினிமாவின் முதல்வன். இனிவரும்காலங்களில் யாராவது  37 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் முதல்வனாக இருக்கமுடிமா என்றால், சச்சினின்  மொத்த ஓட்டங்களை வேறொருவர் தண்டுவாரா? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்தான் கிடைக்கும்.

இறுதியாக ரஜினி சிகரட்பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதால் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள் என  ரஜினியை பிடிக்காத பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால் ரஜினி ராகவேந்திரராக நடித்ததை பார்த்து எத்தனை இளைஞர்கள் சாமியார் ஆகினார்கள்?  திரைப்படங்களில் நாயகன் விஷம் குடித்தால் ரசிகனும் குடித்துவிடுவானா? ரஜினி சினிமாவுக்கு வரும் முன்னர் புகைப்பிடித்தல் பாவனை குறைவாகவா இருந்தது? "இதைவிட தமிழக இளைஞர்களின் சுயமரியாதையை யாரும் கேவலப்படுத்த முடியாது"!! ஆனாலும் இவர்களது கூச்சலுக்கு மதிப்பு கொடுத்து சந்திரமுகி முதல் இன்றுவரை எந்த  திரைப்படத்திலும் ரஜினி புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெறவில்லை!! தமிழ்சினிமா இருக்கும்வரை யாராலும் எட்டமுடியாத ரஜினியின் புகழும், சாதனைகளும் தொடரும்............

16 வாசகர் எண்ணங்கள்:

சிங்கக்குட்டி said...

கல கல கல கலக்கல் பதிவு போங்க, இதுக்குமேல என்ன சொல்றது :-)

சிங்கக்குட்டி said...

எப்படி இத்தனை நாள் என் கண்ணில் படாமல் இருந்தீர்கள்!!! இனி நாம் உங்கள் பதிவில் தொடர்ந்து சந்திப்போம் :-)

அ.ஜீவதர்ஷன் said...

சிங்கக்குட்டி

//கல கல கல கலக்கல் பதிவு போங்க, இதுக்குமேல என்ன சொல்றது :-)//

//எப்படி இத்தனை நாள் என் கண்ணில் படாமல் இருந்தீர்கள்!!! இனி நாம் உங்கள் பதிவில் தொடர்ந்து சந்திப்போம் :-)//

நன்றி

உங்கள் வருகையை இன்னமும் எதிர் பார்க்கிறேன்.

கிரி said...

//,குசேலனும் தமிழகஅரசியல் காரணிகளாலே சரிவுகாண வேண்டிவந்ததெனினும்//

குசேலன் தோல்விக்கு முக்கிய காரணமே சன் டிவி யும் ஊடகங்களும் தான்!

வாங்க! வாங்க! சிங்கக்குட்டி சொல்ற மாதிரி கோதாவுல இறங்குங்க! :-)

KASBABY said...

the simplicity of rajini makes him superstar.

அ.ஜீவதர்ஷன் said...

கிரி

//குசேலன் தோல்விக்கு முக்கிய காரணமே சன் டிவி யும் ஊடகங்களும் தான்!//

100 % சரியானது, ரஜினியால் தமது பிழைப்பை நடத்திவிட்டு பின்னர் தீட்டிய மரத்திலேயே கூர்பார்த்த நக்கீரன்,ஆனந்தவிகடன் என்பன என்றும் ரஜினி ரசிகர்களால் மறக்கவோ
மன்னிக்கப்படவோ மாட்டாது.

//வாங்க! வாங்க! சிங்கக்குட்டி சொல்ற மாதிரி கோதாவுல இறங்குங்க! :-)//


நன்றி

....................

kasbaby

//the simplicity of rajini makes him superstar.//

100 % correct

Yoganathan.N said...

நல்ல பதிவு... நீங்க்ள் யாருடைய ரசிகர் என்ற எனது நீண்ட நாள் கேல்விக்கு பதில் கிடைத்துவிட்டது. :)

இருப்பினும்,

//தனது முன்னைய திரைப்படங்களின் வசூலை தனது அடுத்துவரும் திரைப்படங்களால் மாத்திரமே முறியடிக்க முடியும் என்பதற்கிணங்க இறுதியாக இந்திய சினிமாவில் இமாலயசாதனை படைத்த சிவாஜியின் சாதனைகளினை முறியடிக்க தற்போது எந்திரனின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் சூப்பர்ஸ்டார்.//

தசாவதாரம் எனும் படம் வந்து சிவாஜி பட சாதனையை (பல இடங்களில்) முறியடித்து நினைவில் இல்லையா???

P.S நான் கமல் ரகிகன் அல்ல. எனக்கு ரஜினி, கமல் இருவரயுமே சம நிலையாக பிடிக்கும். :)

ரமேஷ் கார்த்திகேயன் said...

http://en.wikipedia.org/wiki/Popular_Tamil_films

Itha parunka sir

Unknown said...

if you dont talk too much unwanted things, you're the winner .

that is super star.

great achievement

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//தசாவதாரம் எனும் படம் வந்து சிவாஜி பட சாதனையை (பல இடங்களில்) முறியடித்து நினைவில் இல்லையா???//


சிவாஜியின் வசூலை தசாவதாரம் முறியடித்தது ,பின்னர் அயன் முறியடித்தது, அடுத்து கந்தசாமி முறியடித்தது,தற்போது ஆதவன் முறியடித்துள்ளது.இப்படி ஒவ்வொருவரும் சிவாஜியுடன் ஒப்பிட்டே தமது படங்களை விளம்பரப்படுத்துகின்றனர். சரி தசாவதாரம் சிவாஜியின் சாதனைகளை முரியடித்ததாகவே இருக்கட்டும்,பின்னர் ஏன் அடுத்துவந்த அயன்,கந்தசாமி,ஆதவன் எல்லாம் சிவாஜியின் வசூலை தாண்டிவிட்டதாக விளம்பரம் செய்யவேண்டும்? இதெல்லாம் ஒரு பிழைப்பு !

சிவாஜியின் வசூலை ஒவ்வொரு படங்களும் தாங்கள் முறியடித்ததாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு ஒரு ஆடியோ விழாவில் பதில் கூறிய தயாரிப்பாளர்சங்க தலைவர் G.சேகரன் கூறியதாவது"முதலில் சந்திரமுகியின் வசூலை தாண்டட்டும் பிறகு சிவாஜியை பார்த்துகொள்ளலாம்".

அவசரப்படாதீர்கள் அடுத்தடுத்த வாரங்களில் வேட்டிக்காரனும் சிவாஜியின் வசூலை தாண்டிவிட்டதாக ஒரு கதைவரும், இது எந்திரன் வரும்வரை தொடரும்,பின்னர் அடுத்து வரும் பெரிய கீரோக்களின் படங்கள் அனைத்தும் எந்திரனின் சாதனையை முறியடிக்கும்....அடுத்த ரஜினிபடம் வரும்வரை.... (இது நம்ம கலாச்சாரம்)

அ.ஜீவதர்ஷன் said...

dialog
//if you dont talk too much unwanted things, you're the winner .

that is super star.

great achievement//

nice comment

அ.ஜீவதர்ஷன் said...

ரமேஷ் கார்த்திகேயன்
//http://en.wikipedia.org/wiki/Popular_Tamil_films
Itha parunka sir//

உங்களுக்கு விக்கிபீடியாவை பற்றி சரியாக தெரியாதென்று நினைக்கிறான்,விக்கிபீடியாவில் நானும் எடிட்(edit) பண்ணலாம் நீங்களும் எடிட் (edit)பண்ணலாம்,ஒருதடவை முயற்சி செய்துபாருங்கள்....

Unknown said...

hiyo hiyo , Mr.Yoga still believe VETTAIKARAN, sinna pullai Pola Iruku.
I THINK MR.YOGA IS A VIJAY FAN.

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//hiyo hiyo , Mr.Yoga still believe VETTAIKARAN, sinna pullai Pola Iruku.
I THINK MR.YOGA IS A VIJAY FAN.//

you are misunderstanding he is ajith fan...

ஈ ரா said...

நல்ல ஆழமான பதிவு எப்பூடி....வாழ்த்துக்கள்...

நம் தளத்திற்கு வந்து கவிதையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி....

அ.ஜீவதர்ஷன் said...

//ஈ ரா said...
நல்ல ஆழமான பதிவு எப்பூடி....வாழ்த்துக்கள்...

நம் தளத்திற்கு வந்து கவிதையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி....//

நன்றி ஈ ரா.உங்கள் கவிதைகள் அற்புதம்.தலைவரிடமிருந்து வாழ்த்துக்கள் வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.ஆனால் தன்னை புகழ்ந்த கவிதை என்பதால் அவர் வாழ்த்தமாட்டார்.அவரின் சார்பாக கோடான கோடி ரசிகர்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு நிச்சயம் உண்டு

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)