Wednesday, December 12, 2012

ரஜினியும் ரசிகர்கள் & விமர்சகர்களும்....ரசிகர்கள்


ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 


சிவாஜிராவிலிருந்து 'இந்திய சூப்பர்ஸ்டார் ' ரஜினிகாந்தாக தன்னை மாற்றிக்கொண்ட நடிகரது மாபெரும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான சக்தி என்றால் அது அவரது ரசிகர்கள்தான். கோடானகோடி ரசிகர்களை தனது தனித்தன்மையான ஆற்றலால் தன்வசம் ஈர்த்த ரஜினிகாந்தின் ரசிகர்களின் எண்ணிக்கை 1975 முதல் இன்றுவரை ஆரோகணத்தில் செல்வதுதான் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை; இது ரஜினி இன்னமும் சினிமாவில் நடிக்கும் காலம்வரை தொடரப்போகும் விடயம்தான். ரஜினியின் வெற்றியை அன்றும், இன்றும், என்றும் கொண்டாடும் ரசிகர்களை பற்றி சொல்வது நாங்களே எங்களைப் பற்றி சொல்வது போலாகிவிடும்; இருப்பினும் சில விடயங்களை மட்டும் பகிர்கிறேன்.

ரஜினி என்கின்ற நடிகனை அதிகமானவர்களுக்கு பிடிப்பது அவர்களது முதற் பார்வையில்த்தான்!! முதல் முதலாக ரஜினியை திரைப்படத்தில் பார்க்கும்போதே பலரும் ரஜினி ரசிகர்கள் ஆகிவிடுகின்றனர்; அப்படி ரஜினியை பலருக்கும் பிடித்துப் போவதற்கு என்ன காரணமென்று சரியாக சொல்ல முடியாது, ஆனால் ஏதோ ஒருவித ஈர்ப்பு அவரிடம் உண்டென்று மட்டும் சொல்லலாம். 3 வயதில் ரஜினி என்கிற நடிகனது தோற்றம் மட்டும்தான் ஒரு குழந்தைக்கு தெரியும், அவரது திறமைகளை ஆராயுமளவிற்க்கு குழந்தைகளுக்கு திறன் இருப்பதில்லை. அப்படியிருக்க பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் ரஜினியை பிடித்துபோகிறது என்பதற்கான காரணத்தை என்னவென்று கூறுவது? அதைவிட ஆச்சரியமான விடயம் அந்த குழந்தைகளில் அதிகமானவை இறுதிவரை ரஜினியை ரசிப்பதுதான், அதுதான் ரஜினியின் பவர்.

அடுத்து ரஜினி ரசிகர்கள் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால்; ரஜினியை கண்மூடித்தனமாக ரசிக்கிறார்கள் என்பதுதான், இதில் தவறென்ன இருக்கிறது? ரஜினியை கொண்டாடும் யாருமே ரஜினிக்காக அவரையோ அவர் படங்களையோ கொண்டாடுவதில்லை, மாறாக தங்கள் மகிழ்ச்சிக்காகவும் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்காகவும்தான் கொண்டாடுகிறார்கள் & கொண்டாடுகின்றோம். எதுவுமே கிடைக்காமல் ஒருவரை & ஒன்றை யாருமே கொண்டாட மாட்டார்கள், அப்படி கொண்டாடவும் முடியாது, இதை புரிந்து கொள்ள முடியாதவர்களை ஒன்றும் செய்யமுடியாது. தங்களுக்கு மகிழ்ச்சி & ஆத்மதிருப்தி கிடைக்கும் பட்சத்தில் தங்களுக்கு பிடித்த யாரையும் கொண்டாடலாம், அதில் தப்பில்லை; ஆனால் அதனால் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.ரசிப்புத்தன்மை பலவிதம்; சில ரசிகர்கள் அமைதியாக ரசிப்பார்கள், சிலர் ஆர்ப்பாட்டமாக ரசிப்பார்கள். சிலர் ஆர்ப்பாட்டத்தின் உச்சமாக கட்டவுட்டுகள், பாலாபிசேகங்கள் என கொண்டாடுவார்கள்; இவை அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப வெளிப்படுத்தும் மகிழ்ச்சியின் அளவுகோல்கள், இது அவரவர் தனிப்பட்ட உணர்வு, இதில் என்ன தவறு இருக்கிறது? பணம் வீண்விரயம் என சப்பைக்கட்டு கட்டுபவர்கள் யாரேனும் இருப்பின் குடிவகைகள், புகைப்பொருட்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள், உல்லாச பயணம் என பணத்தை எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக உணவு , உடை , உறையுள், மருத்துவம் மற்றும் முக்கியமான அதியவாவசிய தேவைகளுக்கு மட்டும் பணத்தை செலவு செய்பவர்களாக இருக்கிறீர்களா என சுயபரிசோதனை செய்துவிட்டு இந்த விடயத்தைப் பற்றி பேசுங்கள்.

மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கேட்ட ஒருவர் புன்சிரிப்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார், இன்னொருவர் துள்ளிக்குதிப்பார், மற்றொருவர் கட்டியணைப்பார், இன்னுமொருவர் முத்தமிடுவார்; இது மனிதர்களுக்கு மனிதர் மாறுப்படும், ஒவ்வொருவரும் தமது உணர்ச்சிகளை ஒரேமாதிரி வெளிப்படுத்த முடியாது, அப்படி எதிர்பார்க்கவும் முடியாது. அதேபோலத்தான் ரசிப்புத்தன்மையும், அடுத்தவன் சுதந்திரத்தில் தலையிடாமல் தனக்கும் & அடுத்தவனுக்கும் பாதிப்பில்லாமல் எது செய்தாலும் அதில் தவறில்லை. அது அவரவர் தனிப்பட்ட விடயம், அதில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை.

அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும் "ரஜினியை ரசிப்போம், எதிரிகளை பார்த்து சிரிப்போம், குடும்பங்களை கவனிப்போம், வாழ்க்கையில் ஜெயிப்போம்".

விமர்சகர்கள்.
ரஜினியை எப்படி பலருக்கு பிடிக்கின்றதோ; அதேபோல சிலருக்கு பிடிக்காமலும் இல்லை, அப்படி ரஜினியை பிடிக்காதவர்களில் பலர் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதாவதொரு வகையில் ரஜினியை வம்புக்கு இழுத்து மோசமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டவர்கள்.

அப்படி ரஜினியை விமர்சிப்பவர்களை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்,

1)சிலருக்கு முதல்பார்வையிலேயே ரஜினியை பிடிக்காமல் போய்விடுகிறது. ரஜினியை முதல் பார்வையில் பலருக்கு பிடித்து போவதற்கு எப்படி காரணம் தெரியாமல் இருக்கின்றதோ; அதேபோல சிலருக்கு முதல் பார்வையிலேயே ரஜினியை பிடிக்காமல் போவதற்கும் காரணம் தேவையில்லை.

2) தங்களுக்கு பிடித்த நடிகர் ஒருவருக்கு போட்டியாக ரஜினியை நினைத்து தங்களது அபிமான நடிகரால் ரஜினியின் உச்சத்தை அடைய முடியவில்லையே என்கின்ற இயலாமையால் சிலரும், தங்களது அபிமான நடிகர் தொட்ட உச்சங்களை ரஜினி தொட்டுவிடுவாரோ என்கின்ற பயத்தில்(பழசுகளில்) சிலரும் ரஜினியை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள்.

3) பிரபலமான ஒருவரை விமர்சிக்கும்போது தங்களை இலகுவாக அதிகமானவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளலாம் என்கின்ற லாஜிக் அடிப்படையில் பிரபலங்கல் மீது எதிர் விமர்சனங்களை மட்டுமே வைக்கும் சில சுயதம்பட்ட 'அறிவு ஜீவிகள்' ரஜினியை விமர்சிப்பதற்கு வேறெந்த காரணமும் தேவையில்லை.

இந்த மூன்று பிரிவினரும் ரஜினியை வாழ்க்கையில் தவறே செய்யக்கூடாத 'அவதார புருஷர்' போன்று இருக்கவேண்டும் என்பது போன்றும், ரஜினியின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பது போன்றும் கருத்துக்களை அள்ளித் தெளிப்பவர்கள். ரஜினியின் ஒவ்வொரு செயற்ப்பாட்டிலும் குறை கண்டுபிடிக்கும் இவர்கள் ரஜினி ஒன்றை செய்தால் அதற்கு மாற்றீடாக இன்னொன்றை செய்திருக்கவேண்டும் என்றும்; அந்த மாற்றீட்டை ரஜினி செய்திருந்தால் அது தவறு முதலில் செய்ததை செய்திருக்க வேண்டுமென்றும் கூறுபவர்கள். இவர்களுக்கே தாங்கள் செய்வது சந்தர்ப்பவாத அரசியல் என்பது நன்கு தெரிந்திருந்தும் தங்களது இயலாமையை வெளிக்காட்டிக் கொள்வதற்காகவும் தங்களது பிரபலத்துக்காகவும் இவர்கள் இவற்றை நிறுத்தப் போவதில்லை.இவர்களில் ரஜினியை பிடிக்காதவர்களை எடுத்துக்கொண்டால்; ரஜினியின் புகைப்படங்களை பார்க்கும்போதும், ரஜினியின் பெயரை கேட்கும்போதும் ரசிகனுக்கு எப்படி உற்சாகம் ஏற்படுகிறதோ, அதேபோல இவர்களுக்கு எரிச்சலும் வெறுப்பும் உண்டாகும், இது சாதாரண மனித இயல்பு, அந்த மனித இயல்பின் வெளிப்பாடுதான் இவர்களது ரஜினிமீதான வலிந்த தாக்குதல்கள். இந்த 'சொற்' தாக்குதல்களால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதென்பது இவர்களுக்கு தெரிந்தாலும் குறைந்த பட்சம் ரசிகர்கள் மனதையாவது காயப்படுத்தலாமே என்கின்ற 'அற்ப' எண்ணந்தான் இவர்களது இயலாமைக்கு ஓரளவேனும் மருந்துபோடுகிறது.

ரஜினியை விமர்சிக்கும் மூன்று பிரிவினரையும் மேலும் ஐந்து வகையாக பிரிக்கலாம்

1) நேரடியாக ரஜினியை விமர்சிப்பவர்கள், இவர்கள் எந்த விடயமானாலும் நேரடியாக ரஜினியை குறை கூறுபவர்கள் அல்லது திட்டுபவர்கள். தாங்கள் சொல்லும் கருத்து விதண்டாவாதமாக இருப்பினும் நேரடியாக கருத்துக்ககளை கூறுபவர்கள். இவர்கள் நேரடியான எதிர்ப்பாளர்கள்.

2) கண் மூடித்தனமான எதிர்ப்பாளர்கள், இவர்களுக்கு ரஜினி பெயரை கேட்டாலே திட்டவேண்டும் போலிருக்கும். உதாரணமாக ரஜினியின் 60 ஆவது திருமணவிழா வாழ்த்தில் கூட "நாசமா போ" என வாழ்த்துமளவிற்கு இவர்களது இயலாமை அல்லது வெறுப்பு ரஜினிமீது இருக்கும், இவர்களை நினைத்து வருத்தப்பட மட்டும்தான் முடியும்.

3) இந்த பிரிவினர்தான் மிகவும் மோசமான பேர்வழிகள், இவர்கள் தங்களை ரஜினி ரசிகர்கள் என்கின்ற போர்வையில் வெளிக்காட்டிக்கொண்டு தங்களுக்கு 'ரஜினி', 'ரஜினி ரசிகன்' என தாங்களே பெயர் சூட்டிக்கொண்டு "நானும் ரஜினி ரசிகன்தான் ஆனால்....." என ஆரம்பித்து "தலைவர் மகள் கல்யாணத்துக்கு சாப்பாடு போடலையே என்று கஷ்டமா இருக்கு", "தலைவர் அரசியலுக்கு வர்றதா ஏமாத்திட்டு இருக்கிறாரு", "தலைவர் இந்த விடயத்தில் இப்பிடி செய்திருக்க கூடாது" என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள். இந்த 'கருப்பு ஆடுகள்' முதல் இரு பிரிவினரோடும் ஒப்பிடுகையில் முழுக் கோழைகள்.

4)நான்காவது பிரிவினர் ஆடு நனைகிறதென்று அழும் ஓநாய்கள், இவர்கள்தான் "என்னடா உங்க தலைவர் இப்பிடி செய்திட்டாரே", "அடடா உங்க தலைவருக்கு இப்படி ஆகிப்போச்சே" என்று ஆதரவாக பேசுபவர் போல் ஜாடை பேசுபவர்கள். தாங்கள் பேசுவது நியாயமில்லை என்று அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரியுமென்பது தெரிந்தாலும் ரசிகர்களுக்கு எரிச்சலையும், பொதுப்பார்வை உள்ளவர்களுக்கு குழப்பத்தையும் ஏற்ப்படுத்துவதே இவர்களின் நோக்கம், இவர்கள் புத்திசாலிகள்.

5) சமூகம், சீர்திருத்தம், தமிழ்நாடு, இந்தியா, உலகம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், கம்யூனிசம், ஏழைகள், சுரண்டல், ஒலக சினிமா, தரமான சினிமா என ஏதேதோ சொல்லி ரஜினியை விமர்சிக்கும் இவர்கள்; தங்களை 'அறிவு ஜீவிகள்' போல் காட்டிக்கொள்வதில் கில்லாடிகள். ரஜினியை பிடிக்காதவர்களும் இந்த லிஸ்டில் இருந்தாலும் தங்களது பிரபல்யத்திற்காக ரஜினியை விமர்சிப்பவர்களே இந்த பிரிவில் அதிகம். பீர் பாட்டில் உடைக்கும்போது பொங்கி எழுவதுபோல பொங்கும் இவர்களது சமூகஅக்கறை ரஜினிபடம் ரிலீசாகி 3 வாரத்தில் 4 பீர் அடிச்சவன் போல மட்டையாகிவிடும். வேறு எந்த நடிகரது திரைப்படம் வெளிவந்தாலும் மீண்டும் சமூகஅக்கறை பொங்காது, அடுத்த ரஜினி படத்திற்காக இவர்களது சமூகஅக்கறை காத்திருக்கும்.இவர்கள் அனைவரும் 'மாரித் தவளைகள்' போல் கத்திய பின்னர் இறுதியாக இயலாமையில் சொல்லும் ஒரு வீரவசனம் "முட்டாள் ரசிகர்கள்", உலகத்திலேயே எவன் அடுத்தவனை முட்டாளென்று சொல்கிறானோ அவனைவிட அடிமுட்டாள் யாராகவும் இருக்க முடியாதென்கிற உண்மை தெரிந்தும் அவர்கள் அந்த வசனத்தை சொல்கிறார்கள் என்றால் அவர்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை பாவப்படுவதா?

 ரஜினியை விமர்சிப்பது ரஜினியை பொறுத்தவரை பொசிடிவ்வான விடயம்; விமர்சனங்களால் தன்னை செப்பனிடத்தெரிந்த  ரஜினிக்கு, வேண்டாத வலிந்த விமர்சனங்களுக்கு புன்னகையையும் உதிர்க்கத் தெரியும்!! ஆனால் ரசிகர்களுக்குத்தான் ரஜினி அளவுக்கு பக்குவம் கொஞ்சமும் கிடையாது, வீண்  சொற்களை  ஏற்றுக்கொள்ள முடியாமல்  மனம் குமுறுவார்கள்!! ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருக்கும், ஆனால்  போகப்போக பழகி இறுதியில் அவர்களும் பக்குவப்பட்டு விடுவார்கள்!! விமர்சகர்களே ரஜினியை விமர்சிப்பது ரஜினிக்கு வீழ்ச்சி அல்ல எழுச்சி!!! சாதாரண நடிகனை சூப்பர் ஸ்டார் ஆக்கி, இந்திய சூப்பர் ஸ்டாராக அழகுபார்த்த விமர்சகர்களால் ரஜினியை இன்னமும் உயரத்திற்கு கொண்டு செல்லமுடியும்!! :-)
பிரியமான எதிர்மறையான விமர்சகர்களே "Better Luck In Future" but We Know It's Impossible.....

* இங்கு எதிர்மறையான விமர்சகர்களே  என குறிப்பிட்டுள்ளது எதிராக மட்டும் விமர்சிப்பவர்களை.....

27 வாசகர் எண்ணங்கள்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

:))

Philosophy Prabhakaran said...

அவசரப்பட்டு பாசிடிவ் ஓட்டு போட்டுவிட்டேனே...

Chitra said...

3 வயதில் ரஜினி என்கிற நடிகனது தோற்றம் மட்டும்தான் ஒரு குழந்தைக்கு தெரியும், அவரது திறமைகளை ஆராயுமளவிற்க்கு குழந்தைகளுக்கு திறன் இருப்பதில்லை. அப்படியிருக்க பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் ரஜினியை பிடித்துபோகிறது என்பதற்கான காரணத்தை என்னவென்று கூறுவது? அதைவிட ஆச்சரியமான விடயம் அந்த குழந்தைகளில் அதிகமானவை இறுதிவரை ரஜினியை ரசிப்பதுதான், அதுதான் ரஜினியின் பவர்.


...... Star Power! Superb!

ஈ ரா said...

அசத்தல் கட்டுரை... அதிலும் எதிர்ப்பாளர்களை பிரித்து வகைப்படுத்தி இருப்பதும், அந்த வயிறு எரியும் படமும் தூள் .. வாழ்த்துக்கள்

Unknown said...

ரஜினி எனும் நடிகரை பிடிக்கும் ரசிகர்களை விட ரஜினி எனும் மனிதரைப்பிடிக்கும் மக்கள் அதிகம். இவர்கள் அவருடைய பகட்டு இல்லாத மற்றும் தனிப்பட்ட குடும்ப வாழ்கையை எண்ணியே வியக்கின்றனர்.
ரஜினி எனும் மந்திரச் சொல்லுக்கு உள்ள பலம் வேறு எங்கு காண்பது. அறிவு ஜீவிகள் என்று நீங்கள் கூறுவோர் அவர்கள் ஆராதிக்கும் நடிகரைப்போலவே மனைவி இல்லமால் living to gather வாழ்கை வாழ வேண்டியது தானே!?

Unknown said...

தல பின்னீட்டிங்க போங்க, நான் என்ன நினைச்சனோ அதை எல்லாம் நீங்க சூப்பரா எழுதி இருக்கீங்க, //இவர்களது சமூகஅக்கறை ரஜினிபடம் ரிலீசாகி 3 வாரத்தில் 4 பீர் அடிச்சவன் போல மட்டையாகிவிடும். // அதுவும் இந்த பாயிண்ட் செம காமெடி.

R.Gopi said...

தலைவா....

நல்லா அடிச்சு ஆடறீங்க.... தொடர்ந்து கலக்குங்க...

r.v.saravanan said...

கட்டுரை தூள் வாழ்த்துக்கள் jeevadharshan

நித்ய அஜால் குஜாலானந்தா said...

இந்துமத நம்பிக்கைப் படி ஆலயங்களில் இறைவனின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்படுவதுண்டு. திருப்பதிக்கு மொட்டையடிப்பார்கள், பழனி முருகனுக்கு காவடி எடுப்பார்கள், எங்க ஊரு மாரியம்மனுக்கு அலகுகுத்துவார்கள். மார்கழியில் அதி காலையில் எழுந்து நீராடி பெருமாள் கோவிலுக்குப் போய் அங்க பிரதட்சணம் செய்வார்கள். இப்போ சில நடிகர்கள் படம் வெளியாகும்போது, நம்மாளுங்க விடிகாலை மூணு மணிக்கே எழுந்திருச்சு, நீராடி மொட்டையடிச்சுகிட்டு, காவடி தூக்கிகிட்டு, ரோட்டில் அங்க பிரதட்சிணம் பண்ணிக்கிட்டு, தியேட்டருக்கு வந்து அங்க இருக்கும் நடிகனின் கட்டவுடுக்கு பாலாபிஷேகம் பண்ணி பரவசத்துல மெய் சிலிர்த்துப் போயிடறாங்க. அதாவது திரையரங்கம் கோவில் மாதிரி, நடிகன் அங்கே இருக்கும் சுவாமி சிலை, ரசிகர்கள் எல்லாம் பஜனை பாடும் பக்தர்கள்!! கோவிலில் உள்ள சிலை வெறும் கற்சிற்ப்பம் அல்ல சாக்ஷாத் இறைவனே தான், பெருமாள் சிலைக்கு பாலாபிஷேகம் பண்ணுவதற்கும், வைகுண்டத்தில இருக்கும் பெருமாளுக்கு நேரடியாக பண்ணுவதற்கும் வேறுபாடில்லை என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அது போல இவர்கள் ஊற்றும் பால் நேராக அந்த நடிகருக்கே போய்ச் சேருமா? அல்லது அந்த பிளக்ஸ் போர்டுக்கு நம் மேல் பாலை ஊற்றுகிறார்கள் என்று அகமகிழ்ந்து போகுமா? இல்லை பிடித்தவர்கள் தலையில் பாலை ஊற்றுவது தமிழர்கள் தொன்று தொட்டு கடை பிடித்து வரும் மரபா? அப்போ ஒரு அறிவுப் பூர்வமான கேள்வி, "இதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சத்துள்ள சொல்லியிருக்கா?". சொல்லவில்லைதான். அப்படிப் பாத்தா இப்போ ஒரு நடிகை கூட கூத்தடிச்ச சாமியார் கூட எந்த இந்தியச் சட்டத்தையும் மீறவே இல்லை, [பெண் விருப்பப் பட்டு வந்தா அவ கூட சந்தோஷமாக இருப்பது சட்டப் படி தப்பில்லையாம்], மற்றவர்களுக்கு இடையூறாக பாதிக்கும் வகையில் எதையும் செய்து விடவில்லை, அதனால் அவரு செய்தது தவறேயில்லை தான். வாழ்க தமிழன் பண்பாடு.

நித்ய அஜால் குஜாலானந்தா said...

என் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். கண்ணாடியைப் பார்த்து பார்த்து விசனம் பிடித்து உட்கார்ந்திருப்பார்கள். காரணம் முடி கொட்டுகிறது, தலை வழுக்கையாகிறதே என்பது தான். ஆனால், ஒரு நடிகர் ஒரு புரட்சியைப் பண்ணியிருக்கிறார். தலையில் வழுக்கை விழுந்த மாதிரி இருபுறமும் ஷேவ் செய்து முடியை அகற்றுதல். சீக்கிரம் முடி கொட்டி எனக்கும் என் மனதைக் கொள்ளையடித்த நடிகனின் தல போல வழுக்கையாகாதா என்ற ஏக்கம் அவனுக்கு. இது இளைஞர்களின் கவலையைப் போக்கிய அருமையான மாற்றம் அல்லவா! [இது சில வருடங்களுக்கு முன்றைய நிலை. இன்றைக்கு முழு மொட்டைதான் போட வேண்டும்!]. அப்புறம் கல்லூரிக்கு போனால் அங்கங்கே ஆட்டோ டிரைவர்களாக கண்ணில் தென்படுகிறார்கள், என்னடா என்று பார்த்தால் தான் தெரிகிறது ஒரு நடிகர் ஆட்டோக் காரனாக நடித்த படம் வந்துள்ளது அதன் விளைவுதான் இது என்று. ஆஹா என்ன புரட்சி இது என்று மெய் சிலிர்த்துப் போனேன். நடிகனின் மீது அபிமானமெல்லாம் சரி, அதில் உள் நோக்கம் இல்லவே இல்லையா? நடிகனைப் பிடித்திருக்கிறது என்ற ஒரே நோக்கத்தில் தான் இத்தனைக் கொண்டாட்டங்களா? அப்படியென்றால் பரவாயில்லை, ஆனால் எல்லோரும் அப்படியிருக்கிறார்களா? அந்த நடிகன் அரசியலுக்கு வந்தால், நாமும் வட்டம், மாவட்டம் என்ற வகையில் தலைவனாகி சில ஆயிரம் கோடிகளை வெளிநாட்டு வங்கிகளில் போட்டு மக்களுக்குச் சேவை செய்யலாமே என்று நப்பாசையில் காத்திருக்கிறார்களா?

Unknown said...

ரஜினி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று என் பதிவுகளிலும் எழுதி உள்ளேன். ஆனால் ரசிகர்களை அவர் குழப்புவது, ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அடம் பிடிப்பது இன்னும் எதனை காலம் ரஜினி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று என் பதிவுகளிலும் எழுதி உள்ளேன். ஆனால் ரசிகர்களை அவர் குழப்புவது, ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அடம் பிடிப்பது இன்னும் எதனை காலம் ஜீவா? நீங்கள்தான் சொல்ல வேண்டும். நூறு சதவீதம் ரஜினி செய்வது சரி என மற்றவர்கள் சொல்வதை போலன்றி நடுநிலையுடன் சொல்லுங்கள்.

நித்ய அஜால் குஜாலானந்தா said...

பொதுவா பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தருவார்கள். [இந்தக் கால பெற்றோர்களை விடுங்க!!]. அதுல ஒன்னு சாப்பிடும்போது சற்று குனிந்து சாப்பிடு என்று. அதாவது, தட்டில் இருந்து வாய்க்கு உணவைக் கொண்டு செல்லும்போது உணவு கீழே சிந்தும், அதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக இல்லாமல் இருக்கலாம், இருந்தும் ஏன் குழந்தைகளுக்கு அப்படிச் சொல்கிறார்கள்? எவ்வளவோ செலவு செய்கிறோம், நீ கீழே சிந்தும் உணவால் நட்டம் ஆகி விடாது, வாய்க்குப் பாதி கீழே பாதி என்று சாப்பிடு என்று சொல்லலாமே? ஏன் அப்படிச் சொல்லாமல் ஒரு பருக்கை கூட சிந்தாத வண்ணம் சாப்பிட வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள்? சில சமயம் திருமண வீடுகளில், உணவு உண்பவர்கள் நிறைய இலையில் மிச்சம் வைத்து வீணடிப்பார்கள். அவ்வாறு செய்யக் கூடாது என்றும் வேண்டிய அளவு மட்டும் வாங்கி கொண்டு உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்களே? ஏன்? திருமணச் செலவில் எக்கச் சக்கமாக ஆடம்பரச் செலவு உள்ளது. [ஏன் கல்யாணமே தண்டம்! ] அத்தோடு இதுவும் போகட்டுமே? இதுக்கெல்லாம் பதில் தேடினா நிறைய கேள்விகளுக்கு பதில் தானாவே கிடைக்கும்.
கட்டவுட்டு மேல ஊற்றும் பால் நிச்சயம் நடிகரின் வயித்துக்கு போகாது, கட்டவுட்டுக்கு தன் மேல் பால் ஊற்றுவதே அறியாது. ஒருவேளை அந்தப் பாலில் டீ போட்டு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கொடுத்தால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது, நடிகனின் கட்டவுட்டு மேல ஊற்றும் பாலுக்கு ஆஸ்தீகனாகப் பாத்தாலும், பெரியார் சிந்தனையில் பகுத்தறிவு வாதியாகப் பாத்தாலும் அர்த்தமே இல்லை.எதுக்கு வீண் வேலை?

நித்ய அஜால் குஜாலானந்தா said...

எவ்வளவு தான் பெரிய நடிகனாலும் சரி, எவ்வளவு தான் ரசிகர்கள் இருந்தாலும் சரியே ஒரு படத்தை இவர்களே வெற்றிப் படமாக்கி விட முடியுமா? பதில் நான் சொல்ல வேண்டியதில்லை, எல்லோருக்குமே தெரியும்- முடியாது. படம் நன்றாக இருக்க வேண்டும், இல்லை என்றால் வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் போய் விடும். அப்படியானால், ஒரு நடிகனை கண்மூடித்தனமாக ரசிப்பவர்கள், தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொண்டு தங்கள் மகிழ்ச்சிக்காகவும் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்காகவும்தான் கொண்டாடுபவர்கள், ஆர்ப்பாட்டமாக ரசிப்பவர்கள், ஆர்ப்பாட்டத்தின் உச்சமாக கட்டவுட்டுகள், பாலாபிசேகங்கள் என கொண்டாடுபவர்கள், இன்னும் எத்தனை வகையறாக்கள் உள்ளார்களோ அத்தனை பேராலும், அந்த நடிகனுக்கு ஏதாவது பயன் உண்டா? உண்டு. எந்த மாதிரி படத்துக்கும் சுவரொட்டி ஒட்டுதல், திரையரங்கில் தோரணம் கட்டுதல், கட்டவுட்டு வைத்தல், கட்டவுட்டுக்கு பாலை ஊற்றி உணர்ச்சியை வெளிப்படுத்துதல் [நோபல் பரிசு பேரும் மாபெரும் சிந்தனையால் விளைந்த உத்தி இது] போன்ற சில அத்தியாவசிய விளம்பர வேலைகள் இருக்கும். அதைச் செய்ய மேற்சொன்ன ரசிகர்கள் உதவுவார்கள். அவர்களும் சும்மாவே எத்தனை நாளைக்குத்தான் செய்வார்கள்? அதற்க்கு நான் நடிப்பதை விட்டு விடுவேன், இமய மலைக்குப் போய் விடுவேன், அரசியலுக்கு வந்தாலும் வருவேன், வராமலும் இருப்பேன் என்று அவ்வப்போது கொஞ்சம் உதார் விடவும் குழப்பவும் வேண்டும். த்ரில்லர் மாதிரி அடுத்தது என்னடா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஐயா நீங்க அரசியலுக்கு வருவீங்கள இல்லையா என்று கேட்டா வானத்தைப் பாத்து விரலை நீட்ட வேண்டும். அங்க பாத்தா காக்க தான் பறந்துகிட்டு இருக்கும். [ ரொம்ப பாத்தா கக்கா தான் போடும்!!!]

நித்ய அஜால் குஜாலானந்தா said...

திருத்தம் : //"இதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சத்துள்ள சொல்லியிருக்கா?". //"இதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சட்டத்துல சொல்லியிருக்கா?"

உங்க பதிவுகளில் நீங்கள் சொல்லியுள்ள முள்ளும் மலரும், ஜானி, பாட்ஷா படங்களை டவுன் லோடு செய்து பார்த்து வருகிறேன். மற்ற படங்களையும் பார்க்க முயற்ச்சிக்கிறேன். தங்களது தகவல்களுக்கு நன்றி.

எப்பூடி.. said...

@ ம.தி.சுதா

@ philosophy prabhakaran

@ Chitra

@ ஈ ரா

@ விக்கி உலகம்

@ இரவு வானம்

@ R.கோபி

@ r.v.சரவணன்

@ Sivaji Rao Gaekwad

@ சிவகுமார்

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

எப்பூடி.. said...

@ Sivaji Rao Gaekwad

நீங்க யாரென்று புரிந்துகொள்ள முடிகிறது, முதலில் பக்கம் பக்ககமாக நியாயம் பிளப்பதற்கு முன்னர் சொந்தப் பெயரில் வரலாமே? எதற்கு தினமும் ஒரு பெயர்?

நான் பதிவிலே குறிப்பிட்ட 'ரஜினியை விமர்சிக்கும் மூன்று பிரிவினரையும் மேலும் ஐந்து வகையாக பிரிக்கலாம்' தலைப்பில் நீங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையை சேர்ந்தவர் என்பது உங்களது பின்னூட்டங்களிலிருந்து நன்றாக தெரிகிறது, நன்றி.

ஏதேதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறீர்கள், எனக்கு புரிந்தவரை விளக்கம் தருகிறேன்.

*கடவுளுக்கு பாலபிசேகம் செய்வதையும் நடிகனுக்கு பாலபிசேகம் செய்வதையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பாது உங்கள் முதிர்ச்சியின்மை. ஒரே மாலையைத்தான் சாமிக்கும் போடுகிறார்கள், திருமணத்திற்கும் போடுகிறார்கள், பிணத்திற்கும் போடுகிறார்கள், அப்படியானால் எல்லா மாலைகளுமே ஒன்றாகிவிடுமா? அது வேறு இதுவேறு, இதை புரிந்து கொள்ள நீங்க "இன்னும் வளரனும் தம்பி"

* கூத்தடிச்ச சாமியார் தப்பு பண்ணலையின்னா எதுக்கு சட்டம் அவரை கைது செய்தது?


* தமிழனின் பண்பாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் ஒரு குறியீடு, அவளவுதான்.

* ஒரு நடிகரை/விளையாட்டு வீரரை பார்த்து முடிவெட்டிக் கொள்வது உலகம் முழுக்க நடக்கும் ஒரு விடயம்தான், இதில் புரட்சிஎன்று சிலாகிக்க எதுவும் இல்லை, அன்று அப்பிடி முடி வெட்டியவன் அதுக்கப்புறம் 100 தடவை முடி வெட்டியிருப்பான், ஆனா நீங்க அதை நினைச்சு இன்னும் ஏங்கிகிட்டு இருக்கிறீங்க.

* நான் ரசிகர்கள் என்று குறிப்பிட்டது நீங்கள் சொல்லும் வட்டம், மாவட்டம் என எதிர்பார்க்கும் சுயநல காரர்கலயில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உண்மையான ரசிகன் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க மாட்டான்.

* கட்டவுட்டுக்கு ஊர்ரும்பால் நடிகனது வாய்க்கும் போகாது, கட்டவுட்டுக்கும் தெரியாது என்பது உங்களுக்கே (நோட் பண்ணிக்குங்க) தெரியும்போது ஊற்றுபவனுக்கு தெரியாதா? அங்கு கட்டவுட்டுக்கு ஊர்ரும்பால் அவர்களது மன மகிழ்ச்சிக்குதானே தவிர வேறெதற்கும் அல்ல. பண்டிகைக்கு பட்டாசு கொளுத்துவதால் என்ன கிடைக்குமோ அதுதான் கட்டவுட்டுக்கு பாலூர்ரும்போதும் கிடைக்கும், சிம்பிள்.

* கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவதை ஆத்திகராகவோ இல்லை பெரியார் வாதியாகவோ பார்ப்பது உங்களது மடமை, அதை ரசிகத் தன்மையுடன் பார்த்தால் எந்த குழப்பமுமில்லை.

* ரசிகர்களால் நடிகனுக்கு எப்படி பயன் உள்ளதோ அதேபோல ரசிகனுக்கும் நடிகனால் அதைவிட அதிக பயன் உண்டு. எந்த பயனும் இல்லாமல் யாருமே எந்த காரியத்தையும் செய்யமாட்டார்கள் கண்ணா.

* நான் அப்படிச்செய்வேன், இப்படிச்செய்வேன் என்று நடிகன் சொல்வதால்த்தான் ரசிகர்கள் நடிகனை கொண்டாடுகிறார்களென்று நீங்கள் நினைத்தால் உங்கள் சிறுமைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

* அரசியலுக்கு வருகிறார், வரவில்லை; மேலே கையை காட்டுகிறார், காட்டவில்லை; அது எங்க பிரச்சினை, அதில் உங்களுக்கு எங்கே சுடுகிறது? அவரது சைகையின் அர்த்தம் எங்களுக்கு புரியும், அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். எங்க வாயில காக்கா காக்க போடிறது இருக்கட்டும், நீங்க இப்பிடி போறவாற இடத்திலயும் வயித்து கடுப்பில கக்கா போடாம இருந்தா உங்களுக்கு நல்லது.


மீண்டும் மீண்டும் விவாதித்த விடயங்களை வேறு வேறு பெயர்களை பின்னூட்டமிடும் உங்கள் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படாவிட்டால் வருந்தாதீர்கள், உங்கள் சொந்த பெயரில் ஆரம்பத்தில் வந்ததை போன்றே வாருங்கள் 'பழனி'.

எப்பூடி.. said...

@ சிவகுமார்

ரஜினியின் அரசியல் விடயம்; அவரால் சரியான நேரத்திற்கான காத்திருப்புபோலவே எனக்கு படுகிறது, இருந்தாலும் உங்கள் பார்வை மாறுபட்டிருப்பதில் தவறில்லை. எல்லா விடயங்களிலும் யாரும் சரியாக இருந்துவிட முடியாது. சில விடயங்கள் சிலருக்கு சரியாகவும் அதே விடயங்கள் வேறு சிலருக்கு தப்பாகவும் இருக்கும். ரஜினியிடம் சில குறைகள் இருக்கலாம், அப்படி குறைகளே இலாதவர் யாராவது இருக்க முடியுமா? சமகாலத்தில் உள்ளவர்களில் ரஜினி நிறைகள் அதிகமுள்ள முன்னுதாரணமான மனிதர்களில் முக்கியமானவர், அதனால்த்தான் ரஜினி என்கிற நடிகனை தாண்டி ரஜினி என்கின்ற மனிதனுக்கு இத்தனை கூட்டம்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

koodalindia said...

மிகவும் அருமையான பதில் ஆசிரியர் அவர்களே தொடரட்டும் உங்கள் பணி சூப்பர் ஸ்டார்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ராஜேஷ்

கிரி said...

:-) நடத்துங்க!

Thameez said...

நல்ல பதிவு. ரஜினி ரசிகர்கள் பெருமை பட வைக்கும்.

எப்பூடி.. said...

@ koodalindia

@ கிரி

@ Thameez

உங்கள் வரவுக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Karthik said...

Mr. எப்பூடி, நீங்க ரஜினி ரசிகன் னு நினைக்கறேன், அதன் உங்க கிட்ட இருந்து இப்படி strong ஆ ரஜினி விமர்சிப்பவர்களை பற்றி எழுதி இருக்கீங்க.. ஒரு வகைல பாத்தா நீங்களும் ரஜினிஐ விமர்சிப்பவர்களை விமர்சித்துல்லிர்கள்.. then நீங்க சொன்ன எல்லா கருத்துக்களும் உங்களுக்கும் பொருந்தும்.. நீங்க எங்கள விமர்சிக்க விமர்சிக்க நாங்களும் வளந்துகிட்டு தான் போவோம்.. ரஜினி என்கிற சாதாரண மனிதனி சுற்றி ஒரு முட்டாள் கூட்டம் திரியறத பாத்தா சிரிப்பா தன் இருக்கு.. படத்த பாத்தோம விட்டோமா னு இல்லாம, அவர் ஏதோ பெருசா சாதிச்ச மாறி பேசறிங்க.. நிஜ வாழ்க்கைல சூப்பர் ஸ்டார் நிறைய பேரு இருக்காங்க.. கனவு உலகத்துல யார் வேணும் நாலும் சூப்பர் ஸ்டார் ஆகிடலாம்.. நிஜத்துக்கு வாங்க ரஜினி ரசிகர்களே..

எப்பூடி.. said...

KK

//ஒரு வகைல பாத்தா நீங்களும் ரஜினிஐ விமர்சிப்பவர்களை விமர்சித்துல்லிர்கள்..//

அண்ணாத்த நான் ரஜினியை எதிராக 'மட்டும்' விமர்சிப்பவர்களைத்தான் விமர்சித்துள்ளேன்

//then நீங்க சொன்ன எல்லா கருத்துக்களும் உங்களுக்கும் பொருந்தும்.. நீங்க எங்கள விமர்சிக்க விமர்சிக்க நாங்களும் வளந்துகிட்டு தான் போவோம்..//

நீங்க ரஜினியை எதிராக மட்டுமே விமர்சிக்கிறது உங்க வயித்தெரிச்சல் மற்றும் பிரபலத்திற்கு, நாங்க உங்களை விமர்சிக்கிறது(?) உங்க போலி முகத்திரையை கிழிக்கிறதுக்கு. வயித்தெரிச்சல் பிடிச்சவன் என்னதான் தலைகீழாக நின்றாலும் வளரமுடியாது. நீங்கள் ரஜினி என்கிற தனிமனிதனை 'மோசமாக மட்டும்' விமர்சிக்கிறீர்கள், அவர் வளர்ந்து கொண்டே போறார். நான் விமர்சித்திருப்பது பெயர் குறிப்பிடாத பொதுவான ஒரு வயித்தெரிச்சல் பிடிச்ச, பிரபலத்துக்காக அடுததவனை விமர்சிக்கிற ஒரு சைக்கோ கூட்டத்தை, நீங்களும் அதில் ஒருவரென நீங்களே ஒத்துக்கொண்டால், 'முடிந்தால்' வளர்ந்துகொண்டு போங்க, we don't care.


//ரஜினி என்கிற சாதாரண மனிதனி சுற்றி ஒரு முட்டாள் கூட்டம் திரியறத பாத்தா சிரிப்பா தன் இருக்கு..//

உலகத்தில எத்தனையோ சாதாரண மனிதர்கள் இருக்கும்போது எதுக்கு ரஜினி என்கின்ற சாதாரண மந்தனை சுற்றி ஒரு கூட்டம் திரியிது என்று சிந்திக்கிற பக்குவமே இல்லாத உங்களை நினைச்சா எனக்கும்தான் சிரிப்பா இருக்கு, யாருமே எதுவுமே கிடைக்காமல் யார் பின்னாலும் சுத்த மாட்டாங்க என்கிற சின்ன லாகிக் கூட தெயயல இதில அடுத்தவன முட்டாள் என்று சொல்றீங்க, கண்ணா அடுத்தவன முட்டாள் என்கிறதுக்கு முன்னாடி ஒருதரம் கண்ணாடியில உங்களை பாருங்க.

//படத்த பாத்தோம விட்டோமா னு இல்லாம, அவர் ஏதோ பெருசா சாதிச்ச மாறி பேசறிங்க.. //

கண்ணை மூடிற்று பால குடிச்சா யாருக்கும் எதுவுமே தெரியாதென்பது பூனையின் நினைப்பு, எதுவுமே சாதிக்காதவனை பற்றிதான் இந்திய பிரதமர் ஜப்பான் நாட்டு பிரதமர்கிட்ட இரண்டு நாடுகளுக்குமான உறவை பற்றி பேசும்போது பேசினாரா?

//நிஜ வாழ்க்கைல சூப்பர் ஸ்டார் நிறைய பேரு இருக்காங்க.. //

அடடா யாருக்குமே தெரியாத மேட்டராச்சே!!! செம கண்டு பிடிப்பு, தாமஸ் அல்வா எடிசன் தோத்தாருப்பா :-)

//கனவு உலகத்துல யார் வேணும் நாலும் சூப்பர் ஸ்டார் ஆகிடலாம்.. //

செம காமடி. நீங்க எங்கயோ போய்ட்டீங்க, போங்க போயி யாரையாவது சூப்பர் ஸ்டார் ஆக்குங்க. :-)

//நிஜத்துக்கு வாங்க ரஜினி ரசிகர்களே..//

நாங்க எப்பவோ நிஜத்துக்கு வந்தாச்சு, நீங்க முதல்ல அடுத்தவன முட்டாளா நினைச்சு உங்களை அறிவாளியா நினைக்கிற முட்டாள்கள் வட்டத்துக்க இருக்காம வெளியில வாங்க. அப்புறம் எல்லாமே நல்லா புரியும். இல்லாட்டி கடைசிவரைக்கும் நீங்க மாரி தவளைதான்.

Karthik said...

நீங்க மட்டும் இல்ல தம்பி, எனக்கு தெரிஞ்ச ரஜினி ரசிகர்கள் எல்லாமே இப்படி ஏட்டிக்கு போட்டிய தான் பேசறிங்க. இங்க(தமிழ் நாடு) மட்டும் தான் எதுவுமே பண்ணாம பெரிய ஆளாக முடியும். ரஜினி ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதன் .. அவளவு தான் அதா தண்டி அவன் எதுவும் பெருசா செய்யல.. இத அவரே ஒதுக்குவரு.. ஆனா அவர சுத்தி இருக்கற உங்கள மாறி ஆசாமிகள் தான் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு மார் தட்டி கொல்லறது.. தலைவன் னூ ஒரு பட்டத்த குடுத்து, ஓடத படைத்தும் ஓட்டிடுவிங்க. போற போக்க பாத்தா , ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம், விஜய் ரசிகர் மன்றம் னு சொல்லறது போய், ரஜினி ஜாதி , அஜித் ஜாதி, விஜய் ஜாதி னு மாறிடுமோ னு அச்சமா இருக்கு. ரஜினி படங்களை நானும் ரசிப்பவன் தான். ஆனா அதுக்காக crazy ஆ பால் அபிஷேகம் லாம் செய்ற அளவுக்கு முட்டாள் இல்ல. எந்த ஒரு பக்கமும் சாயம இருக்கும் எனக்கு அறியாமை னா சிந்திச்சி செயல் பட தெரியாத நீங்க ??
வயித்தெரிச்சல் ஆ யாருக்கு யார் மேல.. ஹி ஹி.. ரஜினி மீதோ, இல்ல உங்க மீதோ எதுக்கு நான் வைதேரிச்சல் படனும்.. நீங்க அப்படி நினசிங்க னா அது உங்களோட பிரதிபலிப்பே... உண்மையான திறமைக்கும், உண்மையான ரசிகனுக்கும் என்னிக்கும் விரல்ம்பரம் தேவை இல்ல. நீங்க விளம்பரத நிப்பாட்டுங்க.. நாங்க எங்க கருத்துக்கள சொல்லறத நிப்பட்டிகறோம்..

எப்பூடி.. said...

@ KK

//நீங்க மட்டும் இல்ல தம்பி, எனக்கு தெரிஞ்ச ரஜினி ரசிகர்கள் எல்லாமே இப்படி ஏட்டிக்கு போட்டிய தான் பேசறிங்க.//

உங்களைமாதிரி சின்னபுள்ளதனமா பேசிறவங்க கிட்ட அப்பிடிதான் பேசவேண்டியிருக்கு அனாத்தை, நாங்க என்ன பண்ணிறது? !!!!


//இங்க(தமிழ் நாடு) மட்டும் தான் எதுவுமே பண்ணாம பெரிய ஆளாக முடியும்.//

அப்டியா எங்க நீங்க கொஞ்சம் பெரியாளாகி காட்டுங்க பாப்பம் !!!!!!


//ரஜினி ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதன் .. அவளவு தான் அதா தண்டி அவன் எதுவும் பெருசா செய்யல..//

அந்த சிறந்த நடிகர், சிறந்த மனிதர் என்கிற விடயத்துக்காகத்தான் அவர 'பிடிச்ச்கவங்க' கொண்டாடுறாங்க, அவரு ஒரு ரூபாக்கு அரிசி போட்டாத்தான் கொண்டாடனுமேன்று இல்லை, எங்களுக்கு பிடிக்குது கொண்டாடுறம், That's all

//இத அவரே ஒதுக்குவரு.. //

அவர் உங்களையே அறிவாளின்னு ஒத்துக்குவரு, அவருக்கு பூப்போல மனசு :-)


//ஆனா அவர சுத்தி இருக்கற உங்கள மாறி ஆசாமிகள் தான் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு மார் தட்டி கொல்லறது..//

அப்டியா, உங்களுக்கு ஒண்ணுமே இல்லாம தெரியிற மாதிரி எங்களுக்கு நிறைய தெரியுது, உங்க பார்வாயில தெரியாதது எங்க பார்வையில தெரியுது, உங்களுக்கு தெரியிறதுதான் எங்களுக்கும் தெரிய வேண்டுமென்கிற அவசியமில்லை கண்ணா.


//தலைவன் னூ ஒரு பட்டத்த குடுத்து, ஓடத படைத்தும் ஓட்டிடுவிங்க.//

அப்டி எந்த படமும் ஓடினதா சரித்திரமில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லா நடிகர்களுக்கும் தோல்விப்படமும் உள்ளது.


//போற போக்க பாத்தா , ரஜினி ரசிகர் மன்றம், அஜித் ரசிகர் மன்றம், விஜய் ரசிகர் மன்றம் னு சொல்லறது போய், ரஜினி ஜாதி , அஜித் ஜாதி, விஜய் ஜாதி னு மாறிடுமோ னு அச்சமா இருக்கு.//

நாகேஷ் ஒரு படத்தில குத்துவிளக்க பார்த்ததும் மணவறை தீப்பற்றி அப்புறமா கல்யாண மனடபமே தீப்பிடிக்கிற மாதிரி கனவு கானுவாறு, அந்தமாதிரி காமடியா இருக்கு உங்க எதிர்பார்ப்பு. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடிகர்கள் பேர்ல ஜாதி ஆரம்பிக்கிறதெண்டா இப்ப எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்று பல ஜாதிகள் எப்போ ஆரம்பித்திருக்கும். நடிகர்களை இன்று கொண்டாடுவதைவிட 100 மடங்கு அதிகமாக கொண்டாடிய காலங்களிலேயே ஆரம்பிக்கல, இனிமேல் ஆரம்பிக்காது, பயப்பதீங்க.


//ரஜினி படங்களை நானும் ரசிப்பவன் தான். ஆனா அதுக்காக crazy ஆ பால் அபிஷேகம் லாம் செய்ற அளவுக்கு முட்டாள் இல்ல.//

கண்ணா நீங்க ரஜினி படத்தை ரசிப்பவர் பாலாபிசேகம் செய்வதில்லை அதனால் பாலாபிசேகம் செய்பவனை முட்டாள் என்கிறீர்கள், இன்னுமொருவர் ரஜினி படமே பார்க்கமாட்டார்; அவர் உங்களையும் முட்டாள் என்பார், ஒவருவரும் தமது நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அடுத்தவனை முட்டாள் என்பீர்களே ஒழிய அவனவன் இடத்தில் சிந்தித்து பார்க்கமாட்டீர்கள், உங்களுக்கு நீங்கள் செய்வது சரி, உங்களுக்கு பிடிக்காமல் இருக்கும் விடயத்தை யாராவது செய்தால் முட்டாள்த்தனம், இது ஒரு வித சைக்கோத்தனம்.


//எந்த ஒரு பக்கமும் சாயம இருக்கும் எனக்கு அறியாமை னா சிந்திச்சி செயல் பட தெரியாத நீங்க ?? //

நீங்க எந்த பக்கமும் சாயலயின்னா எல்லாம் அறிஞ்சவர் என்று அர்த்தமா? சிந்திச்சு செயல்ப்படுபவர் என்று நினைப்பா, ஒருத்தன் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை கொனாடாடமாட்டான் என்கிற சின்ன லாஜிக்கே தெரியல நீங்க எல்லாம் கருத்து கந்தசாமி ஆயிட்டீங்க, கொடுமை சரவணா!!!!!!

//வயித்தெரிச்சல் ஆ யாருக்கு யார் மேல.. ஹி ஹி.. ரஜினி மீதோ, இல்ல உங்க மீதோ எதுக்கு நான் வைதேரிச்சல் படனும்.. நீங்க அப்படி நினசிங்க னா அது உங்களோட பிரதிபலிப்பே... //

அப்புறம் ரஜினின்னதும் உங்களுக்கு எங்க சுடுகுது, சமூக உணர்வா? போங்க சார் காமடி பண்ணாதீங்க.

//உண்மையான திறமைக்கும், உண்மையான ரசிகனுக்கும் என்னிக்கும் விரல்ம்பரம் தேவை இல்ல//

அப்புறம் உண்மையான பல திறமை விளம்பரமில்லாத்தால காணாமல் போனது தமிழ் சினிமா வரலாறு தெரியாட்டி கேட்டுபாருங்க. ஆனா நாங்க இங்க யாருமே விளம்பரம் தேடல, அது எங்களுக்கு அவசிய மில்லாதது, பிடிக்குது எழுதிறம், உங்களுக்கு பிடிக்கல அதனால விமர்சிக்கிறீங்க, அப்பிடி பாத்தா நீங்களும் விளம்பரத்துக்கு அலையிரவரா?

// நீங்க விளம்பரத நிப்பாட்டுங்க.. நாங்க எங்க கருத்துக்கள சொல்லறத நிப்பட்டிகறோம்..//

நாங்க எப்பவுமே விளம்பர படுத்தல, பிடிக்குது எழுதுறம், நாங்க எழுதிறத நிப்பாட்ட போறதில்லை, குறிப்பா உங்களை மாதிரி ஆட்களை பற்றி எழுதிறத எப்பவுமே நிறுத்த போறதில்ல. முடிஞ்சா விமர்சிச்சு முன்னுக்கு(?) வாங்க !!!!!!!!!!!!

Rajeswaran said...

Jeevadharshan,
I was frequently visiting your page for any new posts.But all of a sudden this many posts on rajini's birthday comes us a surprise.It show the hardwork you have put in. Keep up the Good work!!

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)