Wednesday, December 12, 2012

ரஜினியும் தயாரிப்பாளர்களும்....



ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

யாரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை விநியோகிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை திரையிட விரும்புகிறீர்கள்? என்னும் கேள்வியை முறையே தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை கேட்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரதும் ஒருமித்த பதில் 'ரஜினிகாந்த்' என்பதாக மட்டும்தான் இருக்கும். யார் படம் பார்க்க பிடிக்கும் ? என்கிற கேள்விக்கான பெரும்பான்மை யானவர்களது பதிலாக 'ரஜினிகாந்த்' என்னும் விடை கிடைப்பதே முதலீட்டாளர்கள் ரஜினி என்னும் குதிரைமீது எவ்வளவு வேண்டுமென்றாலும் பந்தயம் கட்டலாம் என முடிவெடுப்பதற்கு முக்கிய காரணம். அது தவிர சில நேரங்களில், சில காரணங்களுக்காக போட்ட பணம் கிடைக்காதவிடத்து அதை ரஜினியிடம் திரும்ப பெற்றுவிடலாம் என்கின்ற அதீத நம்பிக்கையும் மற்றுமொரு காரணம்.

தனது அண்மைக்கால திரைப்படங்களின் தயாரிப்புக்களை தனது வளர்ச்சியில் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்தவர்களுக்கு கொடுத்து தனது நன்றியை வெளிக்காட்டிவருகிறார் ரஜினி. சிவாஜி திரைப்படத்தை ஏ.வி.எம்.சரவணன் மற்றும் பஞ்சு அருணாச்சலம் ஆகியோருக்கும், குசேலனை கே.பாலச்சந்தருக்கும், சந்திரமுகியை சிவாஜி குடும்பத்தினருக்கும் தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்த ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை "ரஜினிகாந்தால் நஷ்டப்பட்ட ஒரே தயாரிப்பாளர்" என ரஜினியால் குறிப்பிடப்பட்ட பாட்ஷா தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு கொடுப்பார் என நம்பப்படுகிறது.

எந்திரன் திரைப்படம்  மிகப்பெரும் பட்ஜெட் என்பதால் அவற்றால் ஒருவேளை நஷ்டம் ஏற்ப்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு 'சக்திமிக்க' தயாரிப்பாளராக அதன்  தயாரிப்பாளர் இருக்கவேண்டும் என்பதை மனதில்வைத்தே அந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ரஜினியை வைத்து பல தயாரிப்பாளர்கள் பல திரைப்படங்களை தயாரித்திருப்பினும் அதிகமான மற்றும் முக்கியமான ரஜினி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் சிலரை இந்தப்பதிவின்மூலம் நினைவு கூருவோம்.

கவிதாலயா




ரஜினியை திரையுலகிற்கு கரம்பிடித்து அழைத்துவந்த ரஜினியின் ஆசான் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் ரஜினியை வைத்து கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களை தயாரித்துள்ளது. நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீராகவேந்திரா, வேலைக்காரன், சிவா, முத்து, அண்ணாமலை, குசேலன் போன்ற திரைப்படங்கள் கவிதாலயா தயாரிப்பில் ரஜினி நடித்த முக்கியமான திரைப்படங்களாகும். இத்தனை திரைப்படங்களை ரஜினிக்காக கவிதாலயா தயாரித்தபோதும் இந்த திரைப்படங்களில் எந்த திரைப்படத்தையும் கே.பாலச்சந்தர் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

ரஜினிக்கான கவிதாலயாவின் அதிகமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்; இவர் நெற்றிக்கண், புதுக்கவிதை, நான் மகான் அல்ல, ஸ்ரீ ராகவேந்திரா, வேலைக்காரன் என ரஜினிக்கான கவிதாலயாவின் பாதிக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'அண்ணாமலை' திரைப்படத்தை முதலில் இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது, இறுதிநேரத்தில் வசந்த் விலகியதை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணாவின் கைகளுக்கு 'அண்ணாமலை' மாற்றப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் அண்ணாமலையின் மாபெரும் வெற்றி கவிதாலயாவிற்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. தொடர்ந்து முத்து திரைப்படமும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் அதிகமான வசூலை கவிதாலயாவிற்கு அள்ளிக்கொட்டிய மற்றுமொரு திரைப்படம்.

இறுதியாக கே.பாலச்சந்தருக்காக குசேலன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்து கொடுத்த போதும் பிரமிட் சமீராவின் தவறான விளம்பர உக்தியினாலும் சில முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் 'அரசியல்' நடவடிக்கைகளாலும் எதிர்பார்த்த வசூலை குசேலனால் வசூலிக்க முடியவில்லை. திரைப்படத்தின் தவறுகளுடன்; திரைப்படத்தில் தனது பங்கு 25 % தான் என்பதை ரஜினி மீண்டும் மீண்டும் கூறியும் 'பிரமிட் சமீரா' குசேலனை ரஜினி படம் என விளம்பரப்படுத்தி, அதிகவிலைக்கு விற்ற பேராசையே 'குசேலன்' சரியாக போகாததற்கு முக்கிய காரணம்.

.வி.எம்




ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கிய இடம் வகிக்கும் தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம்தான். வர்த்தக சினிமாவிற்குள் ரஜினி காலடி எடுத்துவைத்த முதல்  திரைப்படமான 'முரட்டுக்காளை' திரைப்படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம் ரஜினியை வைத்து தயாரித்த ஒன்பது திரைப்படங்களுமே வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்தான். முரட்டுக்காளை, போக்கிரிராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன், மிஸ்டர் பாரத், நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, எஜமான், சிவாஜி என ஏ.வி.எம்மின் ஒன்பதும் ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான திரைப்படங்கள். இவற்றில் சிவாஜி, எஜமான் தவிந்த ஏனைய எழு திரைப்படங்களையும் இயக்கியவர் ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

விளம்பரம் செய்வதில் ஏ.வி.எம்மை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை என்பார்கள், அதை உண்மை என்று நிரூபித்த திரைப்படம்தான் எஜமான். ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் எஜமானில் இல்லாததால் இரண்டாம் வாரம் படத்தின் வசூலில் சிறு தொய்வு ஏற்ப்பட்டது. உடனடியாக சுதாகரித்த ஏ.வி.எம் நிறுவனம் 'வானவராயன்' (ரஜினி) போன்ற மணமகன் வேண்டுமென பெண்களும் 'வைத்தீஸ்வரி' (மீனா) போன்ற மணமகள் வேண்டுமென ஆண்களும் வேண்டுவது போன்ற விளம்பரங்களை பத்திரிகைகளில் வரச்செய்து மக்களிடம் 'எஜமான்' திரைப்படத்தை எடுத்துச் சென்று 175 நாட்கள்வரை ஓடுமளவிற்கு செய்தது.

ஏ.வி.எம்மின் விளம்பர உக்திக்கு இப்போதுகூட உதாரணாமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'உறவுக்கு கை கொடுப்போம்' நெடுந்தொடரின் விளம்பரத்தை சொல்லலாம், மூன்று வயது சிறுமி கொஞ்சும் தமிழில் பேசும் விளம்பரத்தால் வீட்டில் எப்போதுமே 8 - 8.30 வரை சண் டிவியை விட்டு வேறெதையும் மாற்றாத ரிமோட் இப்போது 'திருமதி செல்வம்' மெகா தொடருக்கிடையில் அடிக்கடி கலைஞர் டிவி பக்கமும் தாவுகிறது, அதுதான் ஏ.வி.எம்.


சத்யா மூவிஸ்




ரஜினியின் திரை வாழ்க்கையின் மிகப்பெரும் திரைப்படமான பாட்ஷா திரைப்படத்தை தயாரித்த நிறுவனம்தான் சத்யா மூவிஸ். சத்யா மூவிஸும் தேசார் பில்ம்ஸ்சை போலவே ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படங்களை இயக்கி பின்னர் ரஜினியை வைத்து அதிகமான திரைப்படங்களை இயக்கிய நிறுவனம்தான். பாட்ஷா, பணக்காரன், ராணுவ வீரன், ஊர்க்காவலன், தங்க மகன், மூன்றுமுகம் போன்ற திரைப்படங்களை தயாரித்த சத்யா மூவிஸ் அடுத்ததாக ரஜினி நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று நம்பப்படும் நிறுவனங்களில் ஒன்று.

தேவர் பிலிம்ஸ்




ஆரம்பகாலங்களில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 'தேவர் பிலிம்ஸ்' எம்.ஜி.ஆர் காலத்தின் பின்னர் ரஜினியை தனது ஆஸ்தான நாயகனாக மாற்றிக்கொண்டது. பல திரைப்படங்களை ரஜினிக்காக தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தாலும் அன்புக்கு நான் அடிமை, அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு, ரங்கா என்பன முக்கியமானவை. வழக்கமாக தேவரது திரைப்படங்களில் மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே வழக்கம், அந்தவகையில் 'அன்னை ஓர் ஆலயம்' திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக 'யானைக்குட்டி' ஒன்று நடித்திருக்கும், அதேபோல 'தாய்வீடு' திரைப்படத்தில் நாய் ஒன்று ரஜினியுடன் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும்.

சுரேஷ் ஆட்ஸ்




கே.பலாஜின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் ஆட்ஸ் ரஜினிக்காக தயாரித்த மாப்பெரும் வெற்றித் திரைப்படம்தான் பில்லா. பாலாஜி தயாரிப்பில் எம்.எஸ்.வி இசையில் பி.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பில்லா திரைப்படம்தான் ரஜினியின் முதல் இரட்டைவேட திரைப்படம். பில்லாவாகவும் ராசப்பாவாகவும் ரஜினி ஒரு கலக்கு கலக்கிய திரைப்படத்தில் தயாரிப்பாளர் பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் ரஜினியை வைத்து தயாரித்த இன்னுமொரு திரைப்படம் 'தீ'. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை 'தீ' திரைப்படம் மறக்க முடியாததொரு திரைப்படம், 1981 இல் இந்தியாவில் 'தீ' திரைப்படம் வெளியாகியிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுதான் யாழ்ப்பாணத்தில் 'ராணி திரையரங்கில்' (இப்போது அந்த திரையரங்கே இல்லை) வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடியது. ராணி திரையரங்கில் 'தீ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த வேளையில்த்தான் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகவிருந்த 'யாழ் நூலகம்' சிங்கள காடையர்களால் 'தீ' வைக்கப்பட்ட வன்முறை சம்பவமும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான பிரபலங்கள் ரஜினியை வைத்து தயாரித்த திரைப்படங்கள் என்று பார்த்தால் இளையராஜா அவர்களின் 'பாவலர் கிரியேசன்' தயாரிப்பில் வெளிவந்த ராஜாதி ராஜா திரைப்படமும் பாரதிராஜாவின் 'மனோஜ் கிரியேசன்' தயாரிப்பில் வெளிவந்த கொடிபறக்குது திரைப்படமும் முக்கியமானவை. இதில் 'ராஜாதி ராஜா' திரைப்படத்தை ஆர்.சுந்தர்ராஜனும் 'கொடிபறக்குது' திரைப்படத்தை பாரதிராஜாவும் இயக்கியிருப்பார்கள். இவர்களைவிட நடிகர் திலகத்தின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான 'சிவாஜி புரொடக்சன்' மன்னன், சந்திரமுகி என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தது, அந்த இரண்டு திரைப்படங்களையும் பி.வாசு அவர்கள் இயக்கியிருப்பார். அதேபோல் ரஜினியின் அதிக திரைப்படங்களுக்கு 'வசனம் எழுதிய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் ஆறிலிருந்து அறுபது வரை, கழுகு, எங்கேயோ கேட்ட குரல் ,தம்பிக்கு எந்த ஊரு, குருசிஷ்யன், வீரா போன்ற திரைப்படங்களை தயாரித்திருப்பார்.



வள்ளி, அருணாச்சலம், படையப்பா, பாபா என தனது சில திரைப்படங்களை ரஜினி தானே தயாரித்தபோதும் 'பாபா'வில் அரசியல் சாக்கடைகள் சிலர் செய்த அட்டூழியத்தால் 'பாபா'விற்கு பின்னர் இன்றுவரை எந்த திரைப்படத்தையும் ரஜினி தயாரிக்கவில்லை!! இனிவரும் காலங்களிலும் தயாரிப்பார் என்று தோன்றவில்லை. கை கொடுக்கும் கை, மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ரஜினியே தயாரித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இது சரியான தகவலா? என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் உறுதிபடுத்துங்கள்.(மாவீரனில் ரஜினி இணை தயாரிப்பாளர் என்பதையும், 'கை கொடுக்கும் கை' தயாரிப்பாளர் விஜயகுமார் என்பதையும் பின்நூட்டல்மூலம் சில நண்பர்கள் சொல்லியுள்ளனர்)

சூப்பர் ஸ்டாரை வைத்து திரைப்படங்களை தயாரித்த மேலே பெயர் குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், பெயர் குறிப்பிடாத தயாரிப்பாளர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்......

20 வாசகர் எண்ணங்கள்:

Chitra said...

ரஜினியாலாஜியில் Ph.D. வாங்கிய டாக்டர் ஜீவதர்ஷன் வாழ்க!

denim said...

ரஜினி பற்றிய பதிவா போட்டு கலக்குரிங்களே

Sathish said...

நண்பரே, மாவீரன் தான் தலைவரின் முதல் தயாரிப்பு. RK (Rajini Kanth) Productions என்ற பெயரில்.

philosophy prabhakaran said...

// யாரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை விநியோகிக்க ஆசைப்படுகிறீர்கள்? யார் படத்தை திரையிட விரும்புகிறீர்கள்? என்னும் கேள்வியை முறையே தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை கேட்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரதும் ஒருமித்த பதில் 'ரஜினிகாந்த்' என்பதாக மட்டும்தான் இருக்கும். //
ஆனா படம் ஓடலைன்னா நஷ்ட ஈடு கேப்பாங்க...

// கை கொடுக்கும் கை, மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ரஜினியே தயாரித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இது சரியான தகவலா? என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் உறுதிபடுத்துங்கள். //
எனக்கும் தெரியவில்லை...

வெறும்பய said...

ரஜினி ரசிகன் என்பதை நிரூபித்து வருகிறீர்கள்..

R.Gopi said...

தேவர் ஃபிலிம்ஸ் ரஜினியை வைத்து “தர்மத்தின் தலைவன்” படம் தயாரித்தனர்...

//கை கொடுக்கும் கை, மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ரஜினியே தயாரித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இது சரியான தகவலா? என்பது தெரியவில்லை, //

கை கொடுக்கும் கை படத்தை தயாரித்தது நடிகர் விஜயகுமார்

மாவீரன் படத்தை தயாரித்தது தெலுங்கு நடிகர் கிருஷ்ணா என்று நினைக்கிறேன்...

ஐயையோ நான் தமிழன் said...

"ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை "ரஜினிகாந்தால் நஷ்டப்பட்ட ஒரே தயாரிப்பாளர்" என ரஜினியால் குறிப்பிடப்பட்ட பாட்ஷா தயாரிப்பாளர்"

இது எனக்கு குழப்பமாக இருக்கிறது......
கொஞ்சம் சரியாக விளக்குங்கள்.


"கை கொடுக்கும் கை" திரைப்படத்தை விஜயகுமார்தான் தயாரித்தார் என்று நானும் அறிந்தேன்.

தமிழ் ரயில் said...

ஜீவதர்ஷன், உனக்கு விழுந்த ஓட்டுக்கும், காமன்டுக்கும் இருக்கும் வித்தியாசமே போதும்டா நீ எழுதுற பதிவு எத்தன பேருக்கு புடிச்சி இருக்குனுரத காட்டுறதுக்கு.விழுந்து இருக்குற ஒட்டு பதிவு புடிச்சி போய் இல்ல நன்றி கடன் நீ அவுங்களுக்கு ஒட்டு போட்டு கமன்ட் பண்ணி இருப்ப அதுக்கு நன்றி கடன். இருக்குற கமன்ட் கூட பதிவு புடிச்சி போய் இல்ல நல்லா பார் நீ அவுங்க சைட்டுல கமன்ட் பண்ணி இருப்ப அதுக்கு பதில்தான் இது.

இப்பவாவது புரிஞ்சிக்கோ தம்பி.ரஜினி ஒரு பைத்தியக்காரன்னா அவனுக்கு ஒட்டு ஊதுற நீ ஒரு அர வேக்காடு.

Rajini said...

//இறுதியாக கே.பாலச்சந்தருக்காக குசேலன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்து கொடுத்த போதும் பிரமிட் சமீராவின் தவறான விளம்பர உக்தியினாலும் சில முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் 'அரசியல்' நடவடிக்கைகளாலும் எதிர்பார்த்த வசூலை குசேலனால் வசூலிக்க முடியவில்லை. திரைப்படத்தில் தனது பங்கு 25 % தான் என்பதை ரஜினி மீண்டும் மீண்டும் கூறியும் 'பிரமிட் சமீரா' குசேலனை ரஜினி படம் என விளம்பரப்படுத்தி, அதிகவிலைக்கு விற்ற பேராசையே 'குசேலன்' சரியாக போகாததற்கு முக்கிய காரணம். //இதெல்லாம் நம்பரா மாதிரி இல்லை. படம் பக்கப் போறவன் இது எல்லாத்தப் பத்தியும் படிச்சு தெரிஞ்சுகிட்டு, போகவேண்டாம்னு முடிவெடுப்பதில்லை. படம் பாக்குறதுக்கு நல்லா இல்லை அதனால ஓட வில்லை. மாவீரன் படம் ரஜினி எடுத்ததுதான். வருமான வரிக்கு நஷ்டக் கணக்கு காமிக்கிறதுக்காக எடுத்த படம் அது. அய்யய்யோ ரயில் வந்துடுச்சு, டமால், டுமீல்னு ஆரம்பிக்கப் போகுது, எஸ்கேப்........... [இந்த மாதிரி கமெண்டுகளையும் அனுமதிக்கிரதுக்கும் ஒரு பெரிய மனசு வேணுமப்பா!]

r.v.saravanan said...

உண்மையான ரஜினி ரசிகன் என்பதை நிரூபித்து வருகிறீர்கள் ஜீவதர்ஷன் வாழ்த்துக்கள் ரஜினி பற்றிய ஒவ்வொரு இடுகையும் கலக்கல்

R.Gopi said...

//ஐயையோ நான் தமிழன் said...
"ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை "ரஜினிகாந்தால் நஷ்டப்பட்ட ஒரே தயாரிப்பாளர்" என ரஜினியால் குறிப்பிடப்பட்ட பாட்ஷா தயாரிப்பாளர்"

இது எனக்கு குழப்பமாக இருக்கிறது......
கொஞ்சம் சரியாக விளக்குங்கள்.//

******

பாட்சா வெள்ளி விழாவில் ரஜினி அவர்கள் பேசியதற்கு பின் ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார் என்பதை தான் ரஜினி அவர்கள் அவ்வாறாக குறிப்பிட்டார்...

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்காக நான் எழுதிய சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துப்பா இதோ :

அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!! http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html

எப்பூடி.. said...

@ Chitra

@ denim

@ Sathish

@ philosophy prabhakaran

@ வெறும்பய

@ R.Gopi

@ ஐயையோ நான் தமிழன்

@ தமிழ் ரயில்

@ Rajini

@ r.v.saravanan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றி.

...........................................

@ philosophy prabhakaran

//ஆனா படம் ஓடலைன்னா நஷ்ட ஈடு கேப்பாங்க..//

அடுத்த லைன்ல அதையும் சொல்லியிருக்கிறேன்.

.............................................


@ ஐயையோ நான் தமிழன்

//இது எனக்கு குழப்பமாக இருக்கிறது......
கொஞ்சம் சரியாக விளக்குங்கள்.//

உங்களுக்கான விளக்கத்தை R.Gopi கொடுத்துள்ளார்.

..............................................


@ தமிழ் ரயில்

//ஜீவதர்ஷன், உனக்கு விழுந்த ஓட்டுக்கும், காமன்டுக்கும் இருக்கும் வித்தியாசமே போதும்டா நீ எழுதுற பதிவு எத்தன பேருக்கு புடிச்சி இருக்குனுரத காட்டுறதுக்கு.விழுந்து இருக்குற ஒட்டு பதிவு புடிச்சி போய் இல்ல நன்றி கடன் நீ அவுங்களுக்கு ஒட்டு போட்டு கமன்ட் பண்ணி இருப்ப அதுக்கு நன்றி கடன். இருக்குற கமன்ட் கூட பதிவு புடிச்சி போய் இல்ல நல்லா பார் நீ அவுங்க சைட்டுல கமன்ட் பண்ணி இருப்ப அதுக்கு பதில்தான் இது.

இப்பவாவது புரிஞ்சிக்கோ தம்பி.ரஜினி ஒரு பைத்தியக்காரன்னா அவனுக்கு ஒட்டு ஊதுற நீ ஒரு அர வேக்காடு.//

தகவலுக்கு நன்றி, உங்கள் நாகரீகமான வார்த்தைகள் புல்லரிக்க வைக்கிறது, கலக்குங்க :-)

..............................................


@ Rajini

//இதெல்லாம் நம்பரா மாதிரி இல்லை. படம் பக்கப் போறவன் இது எல்லாத்தப் பத்தியும் படிச்சு தெரிஞ்சுகிட்டு, போகவேண்டாம்னு முடிவெடுப்பதில்லை. படம் பாக்குறதுக்கு நல்லா இல்லை அதனால ஓட வில்லை.//

நான் பிரமிட் சமீரா மட்டும் காரணமென்று கூறவில்லை, பிரமிட் சமீராதான் முக்கிய காரணம் என்றுதான் கூறினேன், சில வேளைகளில் ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்யாமல் குறைந்த பணத்திற்கு குசேலனை விற்றிருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்.

//மாவீரன் படம் ரஜினி எடுத்ததுதான். வருமான வரிக்கு நஷ்டக் கணக்கு காமிக்கிறதுக்காக எடுத்த படம் அது. //

அட அட அட, என்ன ஒரு கண்டுபிடிப்பு, உங்கள் திறமையே தனி, நீங்க வேணுமின்னா பாருங்க நீங்க ஒரு இதுவா வருவீங்க, எதுங்கிறது சஸ்பென்ஸ்....

//அய்யய்யோ ரயில் வந்துடுச்சு, டமால், டுமீல்னு ஆரம்பிக்கப் போகுது, எஸ்கேப்...........//

இந்த சுய விளம்பரம் தேவையா?

// [இந்த மாதிரி கமெண்டுகளையும் அனுமதிக்கிரதுக்கும் ஒரு பெரிய மனசு வேணுமப்பா!]//

இதில எனக்கொரு நஷ்டமுமில்லை :-)

R.Gopi said...

இந்த தயாரிப்பாளர் லிஸ்டில் மிக முக்கியமான பஞ்சு அருணாசலம் மிஸ்ஸிங்....

எப்பூடி.. said...

@ R.Gopi

//இந்த தயாரிப்பாளர் லிஸ்டில் மிக முக்கியமான பஞ்சு அருணாசலம் மிஸ்ஸிங்....//


'வீரா' திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்ததை குறிப்பிட்டுள்ளேன், ஏனைய திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள், இணைத்து விடுகிறேன்.

உங்கள் மேலதிக தகவல்கள் பதிவுகளை பூரணப்படுத்த உதவுகிறது, மிக்க நன்றி.

R.Gopi said...

இந்த திரைப்படங்கள் எல்லாம் ரஜினியை வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்தது...

1979 – Aarilirundhu Arupathu varai
1981 - Kazhugu ( Tamil )
1982 - Enkeyo Ketta Kural ( Tamil )
1984 - Thambikku Entha Ooru ( Tamil )
1988 – Guru Sishyan
1994 – Veera

எப்பூடி.. said...

R.Gopi

//இந்த திரைப்படங்கள் எல்லாம் ரஜினியை வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்தது...//

இணைத்துள்ளேன், நன்றி.

Mahesh said...

Maaveran (1986) movie is a joint production of Padmalaya Pictures and RK productions. Padmalaya Pictures is one of the biggest banners in Telugu owned by Telugu actor superstar Krishna (actor Mahesh Babu's father). Thalaivar produced the movie with some share along with Padmalaya.

Mahesh said...

Although the below people did not produce too many movies.. The following were some Prestigious banners in which Rajini acted.

Uzhaippali (1993)- Vijaya Productions - one of the oldest production houses in the country.
Thanikattu Raja (1982)- Suresh Productions, owned by D.Ramanaidu, who holds the record of producing the highest number of films in the world.(over 120 films so far). He is Telugu actor Venkatesh's father.

Naan Sigappu Manithan & Athisaya Piravi - A. Poorna Chandra Rao well Bollywood producer in the 1980s. He is the one who introduced Rajini to Bollywood and produced some 3 more bollywood films with Rajini

Mappillai(1989)- Produced by Geetha Arts, owned by Allu Aravind(actor Allu Arjun's dad and Chiranjeevi's brother-in-law).

Padikkathavan & Nattukoru Nalalavan- Produced by Eeswari production of actor Ravichandran.

Thameez said...

நல்ல பதிவு. தீ படம் வரும்போது தான் பல தீ விபத்து நடந்தது. அதில் குறிப்பாக " மூர் மார்க்கெட்" தீக்கு இரையானது. ( இலங்கை பத்தி மட்டும் யோசிக்காதீங்க, நம்ம வீட்டுலே நடந்ததையும் சொல்லுங்க

எப்பூடி.. said...

@ Mahesh

உங்கள் தரவுகளுக்கு மிகமிக நன்றி.

.........................................

@ Thameez

அண்ணே நான் இலங்கை என்பதால் மூர் மாக்கட் தீ பற்றி தெரியாது :-)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)