Wednesday, December 12, 2012

ரஜினியும் அரசியலும்...ஒருசில  திருத்தங்களுடன் மீள் பதிவு..... 

1) எப்ப வருவார்?

2) வருவாரா மாட்டாரா?

இந்த இரண்டு கேள்விகளும் ரஜினி ரசிகர்களதும் தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்பும் சில மக்களினதும் ஏக்கம்; ரஜினி ஒருவேளை அரசியலுக்கு வந்தால் தங்களது  அரசியல் வாழ்வு போய்விடுமோ  என என்னும் அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் கவலை; நல்லதோ கெட்டதோ எதோ ஒன்றை எழுதி காசு பார்த்துவிடலாம் என நினைக்கும் பத்திரிகைகளுக்கு எதிர்பார்ப்பு. முடிவை சொல்லாமல் குழப்புகிறார் என  ரஜினியை விமர்சித்து மனம் குளிரலாம் என நினைக்கும் ரஜினியை பிடிக்காதவர்களுக்கு மகிழ்ச்சி!!

ரஜினி வருகிறார், வராமல்போகிறார் அது அவரது சொந்தவிருப்பம், அதில் யாரும் தலையிடமுடியாது. 96 இல் ரஜினிக்கு முதல்வராகும் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் அன்று அதனை தட்டிக்களித்தவர் ரஜினி என்பது ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் தெரியும். ஆனால் கடவுள் இருந்தால் எங்கே காட்டுபார்க்கலாம்? என்பவர்களிடம் இதனை கூறி எப்படி புரியவைக்கமுடியும்!!  திரைப்படங்களில் நடித்தாலே CM ஆகிவிடலாம் என்கின்ற சித்தானத்தில் அரசியலை எட்டிப்பார்க்கும் நடிகர்கள் மத்தியில்,   மூப்பனார் முதல்வர் பதவியை கொடுக்க முன்வந்தபோதும்,  தனக்கு வேண்டாம் என அரசியலின் பக்கமிருந்து  விட்டொதுங்கிய ரஜினியை, அன்றிலிருந்து  ரசிகர்கள்  "வா வா" என அழைத்தும் இதுவரை ரஜினியின் பதில் அரசியலுக்கு சஸ்பென்ஸ்தான்!!

யதார்த்தமாக நோக்கினால்; ரஜினி அரசியலில் காலடி எடுத்துவைத்து புதுக்கட்சி தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இதனால் தமிழக அரசியலில் அவர் பல எதிர்ப்புக்களையும், சில ஆதரவுகளையும், சில அமைதிகளையும் தமிழக கட்சிகளிடமும் அரசியல்தளைவர்களிடமும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதேநேரம் தேசியக்கட்சிகளில் பாரதிய ஜனதா நிச்சயம் ரஜினியை வரவேற்க தயாராக இருக்கும், காங்கிரஸ் இரண்டும் கெட்டான் நிலையிலிருந்தாலும் பெரிதாக எதிர்க்கும் சாத்தியம் குறைவே; இதற்கு முக்கியகாரணம் சிலநேரங்களில் எதிர்காலங்களில் மத்தியில் ஆட்சியமைக்க  ரஜினியின் ஆதரவு தேவைப்படலாம் என்கின்ற சாத்தியம் உள்ளதனால்!!

அடுத்து ம.தி.மு.க.வை பொறுத்தவரை வைக்கோ ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப்பற்றி பெரிதாக விமர்சனம் செய்யாத தலைவர்களில் ஒருவர், மற்றும் வைக்கோ  இருகட்சிகளுடனும் கூட்டணிவைப்பது சாத்தியகுரைவானது, அத்துடன் தனித்து ஜெயிப்பதும் சாத்தியமற்றது!! இதனால் வைக்கோவின் ஆதரவு  சில நேரங்களில்  ரஜினிக்கு ஆதரவாக  கிடைக்கும் வாய்ப்புள்ளது. விஜயகாந்தை பொறுத்தவரை அவரும் தி.மு.க, அ.தி.மு.க போன்று   நிச்சயம் ரஜினியை வரவேற்கமாட்டார்; காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி!!

 தி.மு.க  மற்றும் அ.தி.மு.க  தமது ஆட்சிபலம் தவிர்த்து பத்திரிகை தொலைக்காட்சிகள் மூலமாக மிகப்பெரும் ரஜினி எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும்!! இதற்க்கு பல சினிமா பிரபலங்கள் விலைபோகும் சந்தர்ப்பமும் உண்டு!!   ரஜினியை எப்போதும் எதிரியாக நடத்தும் ஜெயலிதாவைவிட,  ரஜினியை   தன்னருகிலேயே ஏணியாக மட்டும் வைத்திருக்க நினைக்கும் கலைஞரால்தான் அதிகளவில் ரஜினி எதிர்ப்பு பிரச்சாரம் ஊடகம் மற்றும் கூட்டணி கட்சிகல்மூலம் அதிகளவில் நிகழ்த்தப்படும் சாத்தியம் உண்டு!!

இருபெரும் கட்சிகளும் ரஜினியை எதிர்க்க  ராமதாஸுடன் கூட்டணி அமைக்க முண்டியடிக்கும்  சாத்தியம் அதிகம்!! இவர்களனைவரும்  ரஜினியின் சிறு அசைவுகளில்கூட குற்றம் கண்டுபிடித்து ஊதி பெரிதாக்குவார். சத்தியராஜ், T.ராஜேந்தர், பாரதிராஜா போன்ற ரஜினிமீது வெறுப்புள்ள சினிமாக்காரர்களது   உதவிகளும்  பெரும்கட்சிகளுக்கு துணைபோனாலும்  ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆட்சியும், பணமும், ஊடகமும்  கையிலிருக்கும் நிலையில் எவளவு முடியுமோ அவளவுதூரம் கேவலமான அரசியல் செயற்பாடுகளை இவர்கள் புரிவார்கள்.

அடுத்து ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில்  நிச்சயமாக இன்றைய தமிழக அரசியல்வாதிகள் போன்று  மற்றவர்களை நாகரீகமற்று மோசமாக விமர்சிக்கமாட்டர்!!  தனது பக்க  நிலைப்பாட்டை  நாகரீகமாக எடுத்துக்கூறுவாரேயன்றி, மூன்றாம்தர கேவல அரசியல் செய்யும் சாத்தியம் குறைவு என்றே தோன்றுகிறது. அதுதவிர இன்றைய அரசியலின் அத்தியாவசிய தேவையான இலவச பொருட்கள் வழங்குதல், வாக்குக்காக குவாட்டரும் கோழிப்புரியாணியும் கொடுத்தல்,  ரௌடிசம், வீடுவீடாகச்சென்று வாக்கு பிச்சைகேட்டல் போன்ற அரசியல் பாணியை ரஜினியால் பின்பற்றமுடியாது; இவை இல்லாமல் இன்று ஜெயிக்கவும் முடியாது!!

ஒருவேளை ரஜினி  அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவரது ஆட்சியில் லஞ்சம், ரௌடி கலாச்சாரம், குற்றசெயல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், குடும்ப அரசியல்  என்பன  அழியும் என்று சொல்லமுடியாவிட்டாலும் நிச்சயம் மிகப்பெரிதளவில் குறையும் சாத்தியம் உண்டு!! நதிநீர்இணைப்பு, அண்டை மாநிலங்களுடன் சுமூகமான உறவு போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் ரஜினியால் வழங்கப்படும் சாத்தியமும் உண்டு!! சொல்லப்போனால் இன்றைய கட்சிகளைவிட  ரஜினி நேர்மையான ஆட்சியை வழங்குவார்

ஆனால் இவை எல்லாம் ரஜினி வருவார் என்கின்ற பட்சத்தில்தான், ஆனால் அவரது செயற்பாடுகளை பார்த்தால் வருவார் என்று தோன்றவில்லை!! அவருக்கு தெரியும் இன்றைய அரசியலில் காமராஜர் மீண்டும் வந்தாலும் ஜெயிக்க முடியாதென்று!! தெரிந்தே தோல்வியை ஏற்றக்கொள்ள ரஜினி முட்டாள் அல்ல!! ஆனாலும் சிலநேரங்களில் சரியான தருணம் வரலாம் என்கின்ற எண்ணம் ரஜினி மனதில் இருப்பதனாலோ என்னமோ அரசியலுக்கான  பதிலை சஸ்பென்சாகவே வைத்திருக்கின்றார்!!  ரஜினி தனது படம் ஓடுவதற்காக அரசியலை சஸ்பென்சாக வைத்திருப்பதாக சில ரஜினியை வேண்டாதவர்கள் சொல்வது நகைபிற்கிடமானது; ஏனெனில்  ரஜினி படத்தை கிட்டத்தட்ட தமிழர்களில் சினிமா பார்க்கும் பெரும்பான்மையானவர்கள் பார்க்கின்றார்கள்; ரஜினியை பிடித்தோ, பிடிக்காமலோ!! அரசியலைப்பற்றி சிந்திக்காமல்......

ரஜினியை ரசிகர்களையும் தாண்டி மக்களும் அரசியலுக்குள் எதிர்பார்க்க முக்கிய  காரணம், இன்றைய இருபெரும்கட்சிகளையும் ஓரம்கட்டும் சக்தி ரஜினியைதவிர வேறு யாருக்கும் தமிழகத்தில் இல்லை என்பதுதான்!! எல்லோரையும் அனுசரித்துப்போகும் சுபாவம், எதிரியையும் வன்மையாக கண்டிக்காத குணம், பழகியவர்களை முறிக்கத் தெரியாத சுபாவம் போன்றன ரஜினிக்கு  இன்றைய அரசியல் சரியாகுமா என்கின்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்தாமல் இல்லை!! இதற்குமேல் காலத்தின் கைகளில்தான் மிகுதி.....

21 வாசகர் எண்ணங்கள்:

Vicky said...

Nice article.. seems like real Tamil nadu people's heart speaking!!..
Thalaiva neenga arasiyalukku varanum :-)

எப்பூடி ... said...

Vicky

//Nice article.. seems like real Tamil nadu people's heart speaking!!..
Thalaiva neenga arasiyalukku varanum :-)//


nichchayam varuvaar enre ulmanam solkirathu...

wait and see

கிரி said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க! ரஜினி (ஒருவேளை) அரசியலுக்கு வந்தாலும் அப்படியே தமிழகத்தை தூக்கி நிறுத்தி விடுவார் என்று கூற முடியாவிட்டாலும் கண்டிப்பாக இவர்களை போல கேவலமான அரசியல் செய்ய மாட்டார் என்பது உறுதி.

ரஜினியின் பெரிய பிரச்சனை யாரும் இல்லை ...ஒரே ஒரு பிரச்சனை ஊடகங்கள் தான்..இல்லாதையும் பொல்லாதையும் கூறிகொண்டே இருப்பார்கள். ரஜினிக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் சமீபமாக செய்வதை போல இவரது பெயரை இழுத்துக்கொண்டே இருப்பார்கள்.

குசேலன் சமயத்தில் அவர் மன்னிப்பு கேட்டார் என்று பெரிய பிரச்சனை ஆக்கி சன் டிவி குசேலன் படத்தை காலி செய்தது போல தேர்தல் சமயத்தில் இதை போல ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பினால் ரொம்ப சிரமம்..ஒட்டு மொத்த மக்களும் எதிராகி விடுவார்கள்.

ரஜினி (ஒருவேளை) வந்துவிட்டால் அதன் பிறகு ஊடகங்களால் ஒன்றுமே செய்ய முடியாது.. ஆனால் இவர்கள் தொடர்ந்து இதை போல கிளப்பி விடுவதால் அதை எல்லாம் ரசிகர்கள் தான் ஆராய்ந்து பார்ப்பார்களே தவிர பொதுமக்கள் அல்ல..அது அவர்கள் வேலையும் அல்ல.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.. ரஜினியை பற்றி கண்டதையும் கூறும் இவர்களுக்கு ரஜினி மீது என்ன காண்டோ எனக்கு ஒன்றும் பறியவில்லை.

எப்பூடி ... said...

கிரி

//ரஜினியை பற்றி கண்டதையும் கூறும் இவர்களுக்கு ரஜினி மீது என்ன காண்டோ எனக்கு ஒன்றும் பறியவில்லை//

தமிழகத்தின் 80% ஆன ஊடகங்கள் ஒன்று தி.மு.க விற்கோ அல்லது அ.தி.மு.க விற்கோ சார்பானவை ,அவர்கள் எப்படி ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புவார்கள்?

பேநா மூடி said...

ஆட்சிக்கு தேவையான முடிவு எடுக்கும் குணம் ரஜினியிடம் இல்லை ... நானும் ரஜினி ரசிகன் தான் என்றாலும் அவர் திரையில் வரும் போது மட்டுமே விசில்அடிப்பவன்..,

அன்புடன்-மணிகண்டன் said...

//ஆட்சிக்கு தேவையான முடிவு எடுக்கும் குணம் ரஜினியிடம் இல்லை... //
பேநா மூடி சார்... வேற யாருக்குத்தான் நல்ல முடிவு எடுக்கும் குணம் இருக்கிறது??
ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப் படாமலேயே நாமாக அவரின் தகுதியை குறைத்து மதிப்பட வேண்டாமே??

எப்பூடி ... said...

பேநா மூடி


//ஆட்சிக்கு தேவையான முடிவு எடுக்கும் குணம் ரஜினியிடம் இல்லை ... நானும் ரஜினி ரசிகன் தான் என்றாலும் அவர் திரையில் வரும் போது மட்டுமே விசில்அடிப்பவன்..,//

எவனுக்கு என்னகுணம் எவனுக்கு என்னபலம் கண்டதில்லை ஒருவருமே, ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண்விழிக்கும் அதுவரை பொறுமனமே.இது நான் சொல்லல,வைரமுத்து சொன்னது

எப்பூடி ... said...

அன்புடன்-மணிகண்டன்

//ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப் படாமலேயே நாமாக அவரின் தகுதியை குறைத்து மதிப்பட வேண்டாமே??//


சினிமாவில் ரஜினி எடுத்த சிறந்த முடிவுகள்தான் அவரது இன்றைய உச்சநட்சத்திர அந்தஸ்து , அரசியலிலும் நிச்சயம் அவரால் சரியான முடிவுகளை எடுக்கமுடியும் , சந்தர்ப்பம் அமையும்போது அவர் அதை நிரூபிப்பார்.

dialog said...

RAJANIKU ARASIAL IPPA VENDAM, KALAM KEDDU KIDAKUTHU. IPPA KUDUMPA ARASIYAL MADDUMTHAN VELAI SEIYUM .

EVEN IN SRI LANKA.

எப்பூடி ... said...

dialog

//RAJANIKU ARASIAL IPPA VENDAM, KALAM KEDDU KIDAKUTHU. IPPA KUDUMPA ARASIYAL MADDUMTHAN VELAI SEIYUM .

EVEN IN SRI LANKA.//

ellaame oru naal mariththaan aakanum, Even Srilanka.

சிங்கக்குட்டி said...

அருமையான பதிவு, நிலையான ஒரு அலசல்.

நிச்சியம் ரஜினியால் மொத்த அரசியலையும் சந்தனமாக்க முடியாது.
ஆனால், மிக எளிதாக அதை இப்போது இருப்பது போல் சாக்கடையாக இல்லாமல், மொத்த தமிழ்நாடும் ஒரே குடும்பத்தில் கையில் இல்லாமல், கழுவி சுத்தம் பண்ண அவரால் முடியும். அதன் மூலம் வரும் காலத்தை பொற்காலமாக மாற்ற முடியும்.

இதில் பிரச்னை என்னவென்றால், கிரி சொன்னது போல் வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி முடிவெடுக்கும் மக்கள் ஒரு பக்கம், இவர் அரசியலுக்கு வந்தால் பணம் பார்க்க துடிக்கும் கூட்டம் ஒரு பக்கம், என்று நிலையில்லாத இந்த சூழ்நிலையில் அமைதியாக இருப்பது அவரின் புத்திசாலிதனத்தையே காட்டுகிறது.

ரசிகர்களும் மக்களும் பக்குவப்பட்டு ஒன்று சேரட்டும் அதற்காகத்தான் இந்த அமைதி.

இதன் நடுவில் சில "தலை"கள் சாயட்டும், அதன் பின் பாருங்கள் கண்டிப்பாக விஸ்வரூபம் எடுக்கும் நம்ம "தல".

எப்பூடி ... said...

சிங்கக்குட்டி

//ரசிகர்களும் மக்களும் பக்குவப்பட்டு ஒன்று சேரட்டும் அதற்காகத்தான் இந்த அமைதி.

இதன் நடுவில் சில "தலை"கள் சாயட்டும், அதன் பின் பாருங்கள் கண்டிப்பாக விஸ்வரூபம் எடுக்கும் நம்ம "தல".//

நீங்கள் சொல்வது சரி , ஒருநாள் இல்லை ஒருநாள் எல்லாமே மாறும் , பொறுத்திருப்போம் பூமி ஆள்வோம்.

ROBOT said...

//சத்தியராஜ்,T.ராஜேந்தர் போன்ற ரஜினிமீது வயித்தெரிச்சலில் உள்ள நடிகர்களின் //

உண்மையில் இவர்களுக்கு ரஜினியுடன் என்ன பிரச்சனை என்று விளக்கியதற்கு முதல் நன்றி. கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் ரஜினி வந்தால் இவர்கள் செய்யும் திருட்டு வேலைகளை செய்ய மாட்டார். அடுத்தவர்களை பற்றி தவறாக விமர்சிக்க மாட்டார் . முடிந்த வரை அடுத்தவர்களுக்கு ஏன் எதிரிகளுக்கு கூட கெடுதல் நினைக்க மாட்டார் என்பது உறுதி . ஆனால் அவர் நிம்மதியை விரும்பினால் ஒதுங்கி இருப்பது நல்லது என்பது என் கருத்து . அவர் வராவிட்டால் அவருக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை தமிழ் நாடு தான் நல்ல ஒரு அரசியல்வாதியை இழக்கும்.
நல்ல ஆழ்ந்த அலசல் .

அன்புடன்-மணிகண்டன் said...

//அரசியலிலும் நிச்சயம் அவரால் சரியான முடிவுகளை எடுக்கமுடியும் , சந்தர்ப்பம் அமையும்போது அவர் அதை நிரூபிப்பார்//

அந்த நாளை எதிர்பார்க்கும் கோடிக்கணக்கான இதயங்களில் நானும் உண்டு தல...

எப்பூடி ... said...

அன்புடன்-மணிகண்டன்

//அந்த நாளை எதிர்பார்க்கும் கோடிக்கணக்கான இதயங்களில் நானும் உண்டு தல...//


அது....

எப்பூடி ... said...

ROBOT

//ஆனால் அவர் நிம்மதியை விரும்பினால் ஒதுங்கி இருப்பது நல்லது என்பது என் கருத்து . //

தலைவரின் எம்முடிவும் எமக்கு சம்மதமே ...

r.v.saravanan kudandhai said...

வித்தியாசமான பதிவு எப்பூடி

ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்தால் ரஜினி அவர்கள் ஆட்சி ஒரு முன்னுதாரனமாக (இருக்க வேண்டும்) இருக்கும் அதற்கு ரசிகர்களாகிய நாம் அவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்

r.v.saravanan kudandhai said...

ரஜினியின் பெரிய பிரச்சனை யாரும் இல்லை ...ஒரே ஒரு பிரச்சனை ஊடகங்கள் தான்..இல்லாதையும் பொல்லாதையும் கூறிகொண்டே இருப்பார்கள்.


கிரி சொல்வது சரியான வரிகள்

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

எப்பூடி ... said...

r.v.saravanan kudandhai

//அதற்கு ரசிகர்களாகிய நாம் அவருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்//


ரஜினி அரசியலுக்க வந்தால் முக்கியமாக ரசிகர்கள் பதவிகளுக்கோ, வேலைவாய்ப்புக்களுக்கோ ரஜினிரசிகர் என்னும் முகத்திரையை அணியக்கூடாது, ரஜினியை நிர்ப்பந்திக்க கூடாது, அப்படி செய்தால் விஜயகாந்துக்கும் தலைவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.//ரஜினியின் பெரிய பிரச்சனை யாரும் இல்லை ...ஒரே ஒரு பிரச்சனை ஊடகங்கள் தான்..இல்லாதையும் பொல்லாதையும் கூறிகொண்டே இருப்பார்கள். //


என்னை பொறுத்தவரை கட்சி சார்புள்ள எந்த ஊடகமும் ரஜினியை ஆதரிக்காது.

r.v.saravanan kudandhai said...

ரஜினி அரசியலுக்க வந்தால் முக்கியமாக ரசிகர்கள் பதவிகளுக்கோ, வேலைவாய்ப்புக்களுக்கோ ரஜினிரசிகர் என்னும் முகத்திரையை அணியக்கூடாது, ரஜினியை நிர்ப்பந்திக்க கூடாது, அப்படி செய்தால் விஜயகாந்துக்கும் தலைவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.


நானும் சொல்வது இது தான் ரசிகர்கள் யாரும் எந்த பொறுப்பும் வகிக்காமல்
ரஜினியின் ஆட்சிக்கும் தமிழகத்திற்கும் சேவை செய்ய வேண்டும்

அப்பொழுது தான் ரஜினி அவர்கள் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த
முடியும்

எப்பூடி ... said...

r.v.saravanan kudandhai


//நானும் சொல்வது இது தான் ரசிகர்கள் யாரும் எந்த பொறுப்பும் வகிக்காமல்
ரஜினியின் ஆட்சிக்கும் தமிழகத்திற்கும் சேவை செய்ய வேண்டும்

அப்பொழுது தான் ரஜினி அவர்கள் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த
முடியும்//

நிச்சயமாக

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)