Tuesday, July 31, 2012

ரஜினி, கமல், அஜித், விஜய் பேசுவதானால் நிபந்தனைகள்...இது முழுக்க முழுக்க கற்பனை, யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல


தமிழகத்தின் பிரபல சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒரு முக்கியமான விழாவுக்கு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு அழைப்பிதழ்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது; அவற்றில் முக்கியமாக அவர்கள் நிகழ்ச்சியில் எதை பேசக்கூடாது என குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது; அந்த லிஸ்ட் இதோ!!!!

ரஜினிகாந்த் அவர்களுக்கு - > "காலைல மொட்டை மாடில நின்னுகிட்டிருந்தன், இன்னார் கிட்ட இருந்து கால் வந்திச்சு, அடடா இதுக்கு நாம கண்டிப்பா போக வேண்டிய நிகழ்ச்சியாசே அப்டின்னு நினைச்சன், இப்ப இங்க நிக்கிறன்" இந்த மாதிரி டயலாக் பேசக்கூடாது!!! அப்புறம் உங்க பேச்சுக்களில் கடவுள், ஆண்டவன் போன்ற சொற்களுக்கும் தடை விதிக்காப்பட்டுள்ளது!! "நான் ஒண்ணுமே இல்லை, எல்லாமே இயக்குனர்கள்தான்" என்கின்ற தன்னடக்க விளையாட்டுகளுக்கு முழுக்க முழுக்க தடை!! குறிப்பாக குட்டிக்கதைக்கு இடமே இல்லை!!!

கமல்ஹாசன் அவர்களுக்கு -> 1 + 1 = 2 என்கிறதை (37-36) + (24/6-3) = 2 என சொல்ற வேலை வேண்டவே வேணாம்!! என்ன சொல்ல வாறீங்களோ அதை குறைந்த பட்சம் உங்களுக்காவது புரியும் படி சொல்லுங்க!!! அப்புறம் யாராவது ஒருவரை பற்றி பேசணும்னா அவரை பற்றி பேசுங்க, அவரும் நீங்களும் சேர்ந்து புடுங்கிய ஆணிக்கணக்குகள் வேண்டவே வேண்டாம்; நீங்க பேசும்போது எப்டியாவது உங்களை நாத்திகர் என்று காமிக்க ட்ரை பண்ணுவீங்க, அது வேண்டாம் நாமே அறிவிக்கும்போது 'நாத்திகர்' கமல்ஹாசன் என அறிவித்து விடுகின்றோம்!!!!

அஜித் அவர்களுக்கு -> இந்தா பாருங்க அஜித் வாறதுக்கு முழுசா சம்மதமின்னா வாங்க, நாங்க சும்மா ஜாலியாத்தான் கூப்பிடுறம், அப்புறம் அங்க வந்து நின்னு ஐயா கட்டாயப்படுத்திறாங்க, ஐயா மிரட்டிராங்கன்னு LKG பசங்க மாதிரி கம்ப்ளைன் பண்ணிகிட்டு இருக்க கூடாது!! அப்புறம் வாய்ல நுழையாத தமிழை வலுக்கடாயப்படுத்தி; எழுதிக்கிட்டு வந்ததை ஏத்த இறக்கமில்லாம வாசிச்சிக்கிட்டிருக்காமல் மனசில தோன்றினதை அப்டியே அடிச்சு விடுங்க!!!

விஜய் அவர்களுக்கு -> நீங்க எது பேசினாலும் கொஞ்சம் சத்தமா பேசுங்க சார்; விக்கல் வந்தவன் தண்ணி குடிக்கிறாப்போல விழுங்கி விழுங்கி முகத்தில அசடு வழிய பேசாதீங்க!! நீங்க பேசிறது விளங்காம கூட்டத்தில வச்சு தன்னைத்தான் கிண்டல் பண்றீங்களோன்னு சந்தேகத்தில சங்கீதா மேடம் வழமைபோல மூஞ்சியை 'குர்'ன்னு வச்சிருக்கப்போறாங்க; அவங்க முகத்தில ஒரு சிரிப்பை நாங்களும் பாக்கணுமா இல்லையா!!! அப்புறம் தயவு செய்து விழாவுக்கு வரும்போது ஏதாவதொரு சோப் போட்டு முகம் கழுவீட்டு வாங்க!!!

சூர்யா அவர்களுக்கு - > உங்க குடும்பத்துக்கே ஞாபக சக்தி கொஞ்சம் அதிகம்தான்; அதனால இந்த பூக்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகள்; அப்புறம் கார்த்தி, ஜோதிகா, அப்பா என குடும்ப பில்டப் பேசிக்காம ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க!!! அப்புறம் முன்னாடி நான் நடிச்ச படங்களை பார்த்தா எனக்கே சிரிப்புவரும், பாலா சார் இல்லையின்னா.... போன்ற அடக்க டயலாக்குகள் வேண்டாம்!!! அதிலும் இன்னும் பால்மணம் மாறாத பச்சை பிள்ளை மாதிரி, அப்பாவித்தனமா மூஞ்சியை வச்சுகிட்டு குடும்ப பொம்பிளைங்க செண்டிமெண்டை குறிவைக்க கூடாது!!!

சிம்பு அவர்களுக்கு -> நல்லதோ கெட்டதோ நீங்க முன்னிலை, படர்க்கை பற்றி எது வேணும்னாலும் பேசுங்க, ஆனால் எக்காரணம் கொண்டும் உங்களுக்கு தன்மை பற்றி பேச அனுமதி இல்லை!!! அக்ஷுவலி, பேஸிக்கலி என்கின்ற சொற்களுக்கும் தடை!!

தனுஷ் அவர்களுக்கு -> நீங்க அவைக்கு அடங்கி பம்புற வேலையை வேணும்னாலும் நாங்க ஒத்துக்குவம், ஆனா மைக்கை கைல பிடிச்சுகிட்டு "வை திஸ்கொலைவெறி" ன்னு மட்டும் ஆரம்பிச்சிடாதீங்க!!! இதுக்கு மேலயும் அதை தாங்கிற சக்தி மக்களுக்கில்லை!!!

பிரகாஸ்ராஜ் அவர்களுக்கு -> நாலு கெட்ட வார்த்தை வேணும்னாலும் பேசிக்கோங்க சார்; ஆனால் தயவு செய்து " ஐ லவ் யூ செல்லம்"ன்னு மட்டும் சொல்லி மக்களை சாவடிக்காதீங்க!!!

விஜயகாந்த் அவர்களுக்கு -> இங்கு அரசியல் பேச தடை; ஆமா சார் உங்களுக்கு இங்க பேசத்தடை என்கிறதை மறைமுகமா சொல்லியிருகிறாங்க!!!

டீ.ராஜேந்தர் அவர்களுக்கு -> நீங்க மைக்கை பிடிட்சுகிட்டு ஒரு இரண்டு நிமிடம் எதுவும் பேசாம மௌனமா இருந்தாலே போதும்!!

பவர் ஸ்டார் -> நீங்கதான் சார் நிறைய பேசணும், இப்பெலாம் உங்க பேச்சுக்கள்தான் சார் பல சமூக தளங்களில் பலரை வாழ வைக்கிறது!!! டீ.ஆருக்கு மாற்றீடு இருக்காதின்னு பேசிக்கிட்டவங்க வாய்ல மண்ணை தூவீட்டு இன்னைக்கு you Tube ல TR ஐயே ஓவர் டேக் பண்ணீட்டீங்களே; நீங்க என்ன வேணும்னாலும், எவ்ளோ வேணும்னாலும் பேசிக்கலாம்!!!

பீட்டர் விடாத விக்ரம், மச்சான் போடாத நமீதா, மணிரத்தினம் பெயரை யூஸ் பண்ணாத சுகாசினி, ரஜினி, கமல் பற்றி பேசாத பாலச்சந்தர், கலைஞர் பெயர் சொல்லாத வைரமுத்து, இக்கால இசையை குத்திக்காட்டாத இசைஞானி, இறைவனில் பாரத்தை போடாத A.R.ரகுமான், சர்ச்சையை உண்டாக்காத சத்யராஜ் & பாரதிராஜா, பாட்டுப்படிக்காத சரத்குமார் & நெப்போலியன் என நிகழ்ச்சி நிர்வாகம் இக் கலைஞர்களுக்கு நிபந்தனையோடு கூடிய அழைப்பை விடுத்துள்ளது!!!

11 வாசகர் எண்ணங்கள்:

ஹாரி R. said...

Rompa soopar.. Ipidi adikadi eluthunga nanpaa..

N.H. Narasimma Prasad said...

நல்ல கற்பனை. அருமை. பகிர்வுக்கு நன்றி.

பாலா said...

நல்ல கற்பனை தலைவரே. ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா?

Anonymous said...

அப்புறம், சிங்கப்பூர்ல ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போன்னு ஆரம்பிச்சி பேசுறது, தமிழ் நாட்டு மக்களுக்கு நானு ரொம்பவே கடன்பட்டுருக்கேன், எப்புடி திருப்பி கொடுப்பேன்னுதெரியாதுன்னு சொல்றது, எல்லாத்தையும் தலைவர் பேசகூடாது...
அப்புடியே கடன கிடன திரும்ப குடுக்கனும்னா அவருகிட்ட இருக்குற 500கோடி ஓவாய 8 கோடி பேருக்கும் பிரிச்சி குடுத்துற சொல்லுவோம்...

Jayadev Das said...

\\விஜய் அவர்களுக்கு -> நீங்க எது பேசினாலும் கொஞ்சம் சத்தமா பேசுங்க சார்; விக்கல் வந்தவன் தண்ணி குடிக்கிறாப்போல விழுங்கி விழுங்கி முகத்தில அசடு வழிய பேசாதீங்க!! ...........அப்புறம் தயவு செய்து விழாவுக்கு வரும்போது ஏதாவதொரு சோப் போட்டு முகம் கழுவீட்டு வாங்க!!!\\ நண்பன் படத்தில் இவர் நட்டித்ததைப் பற்றிய விமர்சனம் போல இருக்கே!!

Jayadev Das said...

\\கமல்ஹாசன் அவர்களுக்கு -> அப்புறம் யாராவது ஒருவரை பற்றி பேசணும்னா அவரை பற்றி பேசுங்க, அவரும் நீங்களும் சேர்ந்து புடுங்கிய ஆணிக்கணக்குகள் வேண்டவே வேண்டாம்;\\ ஹா.......ஹா.........ஹா..........

எப்பூடி.. said...

@ மொக்கராசு மாமா

அவர் சொல்ற கடன், அவர் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது அவருக்காக வேண்டிக்கிட்ட, ஏங்கிய உள்ளங்களுக்கானதின்னு நினைக்கிறன்; அதுக்கு கைமாறு பணமா இருக்கிறது நல்லதல்ல :p அத்தோட அவரோட 500 கோடியும் மக்கள் சும்மா அவர்க்கு கொடுத்ததில்லை; அவர் படங்களை விரும்பி பார்த்ததற்கு கொடுத்த கூலி!! அதில பங்கு கேக்கிறது நியாயமும் இல்லை!!! அப்டின்னா மக்கள் வரிப்பனத்தில சம்பளம் வாங்கிறவங்க, மக்களை நம்பி தொழில் புரிந்து லாபமீடுபவர்கள் எல்லோரிடமும் கடன் கேக்கணும் :p

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிந்தனை...

Anonymous said...

//@ மொக்கராசு மாமா

அவர் சொல்ற கடன், அவர் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது அவருக்காக வேண்டிக்கிட்ட, ஏங்கிய உள்ளங்களுக்கானதின்னு நினைக்கிறன்; அதுக்கு கைமாறு பணமா இருக்கிறது நல்லதல்ல :p அத்தோட அவரோட 500 கோடியும் மக்கள் சும்மா அவர்க்கு கொடுத்ததில்லை; அவர் படங்களை விரும்பி பார்த்ததற்கு கொடுத்த கூலி!! அதில பங்கு கேக்கிறது நியாயமும் இல்லை!!! அப்டின்னா மக்கள் வரிப்பனத்தில சம்பளம் வாங்கிறவங்க, மக்களை நம்பி தொழில் புரிந்து லாபமீடுபவர்கள் எல்லோரிடமும் கடன் கேக்கணும் :p///


பாஸ், என்ன பாஸ் காண்டாகிட்டீங்க... நீங்க எழுதுன மாதிரியே நானும் சும்ம்மா ஒரு பேச்சுக்கு தலைவர பத்தி சொன்னேன்... அப்பால இன்னொன்னு, நானு உங்க வீட்டு எங்க வீட்டு இல்ல, ங்கொக்காமக்கா தலிவர் ரசிகன்.... இத எல்லாம் சும்ம்ம்மா, ஹீ ஹீ

Ashokar said...

unmaiya comedya sonathuku shabaash! shabaash!! shabaash!!!

Anonymous said...

////நீங்க மைக்கை பிடிட்சுகிட்டு ஒரு இரண்டு நிமிடம் எதுவும் பேசாம மௌனமா இருந்தாலே போதும்!!//////

ஹா ஹா

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)