Tuesday, April 24, 2012

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தமிழ் திரைப்படங்கள் - எனது விருப்பத்தில்....


அடுத்து வரவிருக்கும் திரைப்படங்களில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நான் எதிர்பார்த்திருக்கும் பத்து திரைப்படங்களை பட்டியல் இடுகின்றேன். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்!! இதை தொடர் பதிவாக எண்ணி தொடர விரும்புபவர்கள் தொடரலாம்....

10 ) பரதேசி


இயக்குனர் பாலாவின் புதிய திரைப்படம்; அதர்வா நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். 'நான் கடவுள்' பலருக்கும் பிடிக்கவில்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்(ரசனைகள் மாறுபட்டவை) எப்படி அத்தனை பேரையும்(Physical Challenges) வைத்து வேலை வாங்கினார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பாலா மீது மரியாதை கூடுகின்றது!!! அதனை தொடர்ந்து மிகவும் எதிர்பார்த்த 'அவன் இவன்' பெரிய ஏமாற்றம், ஆனால் இம்முறை பாலா ஏமாற்றமாட்டார் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது.

மலையாள நாவலான 'எரியும் தணல்' நாவலை தழுவியே இந்த திரைப்படம் உருவாக்கபடுவதாக சொல்கின்றார்கள், அதனால்தான் முதலில் 'எரியும் தணல்' என திரைப்படத்திற்கு பெயரிட்டிருந்தனர். இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா தவிர்த்து முதல்முறை பலா படத்திற்கு வேறொரு இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கிறார்; ஜீ.வி.பிரகாஷின் அண்மைக்காலத்து அல்பங்கள் அனைத்துமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளமைதான் பாலாவின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்!!!

எனக்கு பிடித்தமான பாலா, அதர்வா(காரணம் முரளி), ஜீ.வி என பல விடயங்கள் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கின்றது; பாலா படங்களின் நிறம் எப்படி இருக்கும் என்பது முன்னமே தெரிந்தாலும் இம்முறை சற்றேனும் புதிய களத்தில் பாலா இயக்கினால் சிறப்பாக இருக்கும்!!! 'அவன் இவனில்' இழந்த தனது கிளாசை பாலா 'பரதேசி'யில் மீட்டெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!!

9 ) மனம் கொத்திப் பறவை


சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம்; விஜய் டிவி பார்வையாளர்களில் சிவகார்த்திகேயனை ரசிக்காதவர்கள் ஒருசிலராவது இருப்பார்களா என்பது சந்தேகமே!! அதிகமானவர்கள் சிவகார்த்திகேயனை வீட்டில்/எம்மில் ஒருவர்போல பார்க்கின்றார்கள். இதுதான் சிவாவின் மிகப்பெரும் பலம். '3' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு கவுண்டருக்கும் திரையரங்கு கொடுத்த உற்ச்சாகம் அதை உணர்த்தியது. விமர்சகர்களால் மோசமான திரைக்கதை என்று முத்திரை குத்தப்பட்ட 'மெரினா' திரைப்படம் வெற்றிபெற முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் மீதான எதிர்பார்ப்புத்தான்!!

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் இரண்டாவது நாயகன் அவதாரம்தான் 'மனம் கொத்திப் பறவை' இயக்குனர் எழில் இயக்குகின்றார். 'துள்ளாதமனமும் துள்ளும்' கொடுத்த வெற்றியால் தமிழ் சினிமா இண்டஸ்ரியில் அப்பப்போ ஏதாவதொரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டு 'நானும் இயக்குனர்தான்' என அப்பப்போ ஞாபகப்படுத்தும் தோல்விப்பட இயக்குனர்தான் எழில் என்றாலும் எழிலின் திரைப்படங்கள் மோசமானதாக இருந்ததில்லை!!! பூவெல்லாம் உன்வாசம், தீபாவளி போன்றவை வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை ரக திரைப்படங்கள்!!

'மனம் கொத்திப் பறவை' டிரெயிலரை பார்க்கும்போது இதில் காமடிக்கு பஞ்சமிருக்காது என்கிறது புரிகிறது!! அதேநேரம் பல குடும்பங்களும் காட்டப்படுவதால் குடும்ப சென்டிமென்ட்டிற்க்கும் பஞ்சமிருக்காது :p எழில் திரைப்படங்களில் காதல் காட்சிகள் இயல்பாகவே சிறப்பாக இருக்கும்; இந்த திரைப்படத்தின் போஸ்டர்களில் பார்க்கும்போது அது நன்றாகவே புரியும்; மொத்தத்தில் காதல், காமடி,சென்டிமென்ட் என வழமையான மசாலாவை சிவகார்த்திகேயன் என்னும் குதிரையை நம்பி அரைக்க போகின்றார்கள்; இப்படித்தான் திரைப்படம் இருக்கும் என்று தெரிந்தாலும், ஆவலாய் காத்திருக்கின்றேன்!!!

8 ) கலகலப்பு


விமல், சந்தானம், சிவா என ஒரு பிளேட் பாக்ரியையே வைத்து சுந்தர்.C இயக்கும் புதிய திரைப்படம்தான் 'கலகலப்பு'; 'மசாலா கபே' என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் தற்போது கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யின் பின்னர் சந்தானத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள்; சிவா, விமல் இரண்டு பேருமே நக்கல் நாயகர்கள்; இயக்குனர் சுந்தர் .C; இதைவிட இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு வேணுமா என்ன!!

அஞ்சலி, ஓவியா கதாநாயகிகள்; ட்ரெயிலரில் அஞ்சலி கேரக்டர் வழமைபோல லொடலொடதான் என்பது புரிகிறது; ஆனாலும் ரசிக்க வைக்கும் என்றே தோன்றுகின்றது!!! சிவா வழமைபோல வசன உச்சரிப்புக்களில் அசத்துகிறார். சுந்தர்.C க்கு காமடி திரைப்படம் எடுப்பது அல்வா சாப்பிடிறமாதிரி, தயாரிப்பு செலவுவேற பொண்டாட்டி காசு என்பதால் சொதப்ப மாட்டார் என்று நம்பலாம் :-)

7 ) ஆதி பகவன்


எந்த தயாரிப்பாளரும் பணம் போட விரும்பாத வெற்றிப்பட இயக்குனர் அமீர் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடிக்கும் திரைப்படம்தான் 'ஆதி பகவன்'. அமீர் திரைப்படங்கள் திரையரங்கிற்கும், வினியோகிஸ்தர்களுக்கும் லாபம் கொடுப்பவைதான், ஆனால் ஒரு தயாரிப்பாளரின் பணத்தை எத்தனை மாதங்கள்தான் முடக்குவது!!! அமீரை நம்பிய பாவத்திற்கு 'ஜெயம்' ரவி வருடக்கணக்காக வேறுபடங்கள் இல்லாமல் 'ஆதி பகவன்' கெட்டப்பில் தாடியுடன் அலைகின்றார். தயாரிப்பாளர் அன்பழகன் பணத்திற்கு வட்டிக் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்; எமக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை, நான் எதிர்பார்ப்பது அமீரின் கிளாசை மாத்திரமே!!!

பருத்திவீரனை பார்த்து அசந்துபோன தமிழ் ரசிகர்களுக்கு 'ஆதி பகவன்' மிகுந்த எதிர்பார்ப்புள்ள திரைப்படம்தான், பருத்திவீரனுக்கு பின்னர் அமீரின் இயக்கத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு 5 வருடங்கள் ஆகின்றது!! ஒரே பாணியில் நடித்துக் கொண்டிருந்த 'ஜெயம்' ரவியை எப்படி அமீர் மாற்றியமைக்கப் போகிறார் என்பதுவும் சுவாரசியமான எதிர்பார்ப்புத்தான். அமீர், யுவனின் கூட்டணியும் எதிராபார்ப்பை கூட்டுகின்றது. 2010 இல் பேசத்தொடங்கிய திரைப்படம் 2012 கடைசிக்குள்ளாவது வந்திவிடும் என்கின்ற நம்பிக்கை உள்ளது, மிகுதி அமீர் கைகளில்.


6 ) இரண்டாம் உலகம்


6 வருடங்களுக்கு முன்னாலேயே செல்வராகவனால் திட்டமிட்ட திரைப்படமிது!!! 2006 இல் 'மாலை நேரத்து மயக்கம்' என்னும் பெயரில் கார்த்தி, சந்தியா நடிப்பதாக இருந்தது!! பின்னர் 2008 இல் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்தது! இதற்கிடையில் செல்வராகவனது 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ஆர்யா, அனுஷ்காவை வைத்து 'இரண்டாம் உலகம்' என்னும் பெயரில் செல்வராகவன் இப்போது ஆரம்பித்திருக்கின்றார். First look மிரட்டலாக உள்ளது, அதுவே படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அளவிற்கு உள்ளது!!

செல்வராகவன் படங்கள் எல்லோருக்கும் பிடிப்பதில்லை, ஆனால் அதை ரசிப்பவர்களுக்கு தெரியும் அவற்றின் பெறுமதி; 'மயக்கம் என்ன'வின் தாக்கம் அகலவே ஒரு வாரம் ஆயிற்று!! செல்வராகவன் தவிர்த்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஆர்யா, அனுஷ்கா என எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இணைந்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இசை மட்டும்தான் ஒரே ஒரு குறை!! யுவன், ஜீ.வி.பிரகாஷ் அளவிற்கு ஹாரிஸ் ஜெயராஜ்சால் உணர்வுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!!!


5 ) கடல்


மணிரத்னம் படம்; அது ஒன்றுபோதும்!!! காப்பி அடிக்கிறாரோ, டிபன் அடிக்கிறாரோ! இதுவரை 'கன்னத்தில் முத்தமிட்டால்' தவிர்த்து எந்த மணி படமும் என்னை ஏமாற்றியதில்லை!!! தளபதி, நாயகன், மௌனராகம், இதயத்தை திருடாதே, குரு எல்லாம் எனக்குள் சினிமாவின் மீதான பிடிப்பை அதிகப்படுத்திய திரைப்படங்கள். அந்த வரிசையில் 'கடல்' திரைப்படமும் அமையும் என்கின்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உண்டு!!! நாயகனாக நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் அறிமுகமாகிறார், நாயகியாக இன்றைய எனது பேவரிட் சமந்தா :-)

அது என்ன ராசியோ முரளி பையனுக்கும், கார்த்தி பையனுக்கும் முதல்ப்படமே சமந்தா ஜோடி!!! கார்த்திக் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர், அவர் பையன் என்பதால் கௌதம் மீதும் எதிர்பார்ப்பு உண்டு; First Look ஐ ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கௌதம், சமந்தா தவிர்த்து நீண்ட நாட்களின் பின்னர் அரவிந்தசாமி, மணிரத்னம் படத்தில் முதல்முறையாக அர்ஜுன் என பல சுவாரசியங்கள் உண்டு. இவர்களைத்தவிர ஜெயகாந்தன் எழுத்து, ஏ.ஆர்.ரஹுமான் இசை, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள்!!


4 ) தாண்டவம்


'தில்' திரைப்படம் பார்த்ததில் இருந்து விக்ரமின் ஒவ்வொரு திரைப்படமும் எனக்கு எதிர்பார்ப்பில் உள்ளவைதான்!!! சந்தர்ப்பம் அமையும் அத்தனை தடவையும் முதல்நாள் காட்சிகளை தவறவிட்டதில்லை!!! அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வதிருமகள், ராஜபாட்டை என அதிகமான திரைப்படங்கள் முதல்நாள் திரையரங்குகளில் பார்த்தவைதான். அந்தவகையில் 'தாண்டவம்' திரைப்படமும் முதல்நாள் முதல் காட்சிக்கான எதிர்பார்ப்பில்!! பல தடவைகள் விக்ரம் திரைப்படங்கள் என்னை ஏமாற்றி இருந்தாலும் ஒருபோதும் விக்ரமின் Screen Present என்னை ஏமாற்றியதில்லை!

'தாண்டவம்' போஸ்டர்களை பார்க்கும்போது "மறுபடியும் கந்தசாமியா!!!" என்கின்ற சந்தேகம் இல்லாமல் இல்லை; இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கை, அது இயக்குனர் எல்.விஜய் மீதானதாகக் கூட இருக்கலாம். அண்டர்சன் கடை இட்லியை சுவையான அன்னபூர்ணா கடை உப்புமாவாக மாற்றிக் கொடுப்பதில் கில்லாடியான விஜய் இம்முறையும் கனகச்சிதமாக மாற்றிக் கொடுப்பார் என நம்பலாம்!!! கூடவே பீட்டர்சன் கடை நூடில்சை சுவையான பாப்பையா கடை 'இடியப்ப'புரியாணியாக மாற்றிக்கொடுக்கும் ஜீ.வி.பிரகாஷ் வேறு இருக்கிறார்:-)

அப்புறம் அனுஷ்கா, எமி ஜாக்சன், லக்ஸ்மி ராய் என ஒன்னுக்கு மூணு லட்டுக்கள் :-)) நீரவ்ஷா ஒளிப்பதிவு, அன்டனி எடிட்டிங் என்று ஒரு பிரம்மாண்டத்திற்கு ஏற்ற கூட்டணி. ஆனால் உலகம் முழுக்க படப்பிடிப்பு என்று சொல்வதை வைத்து பார்த்தால் 2012 ற்குள் முடித்து விடுவார்களா என்பது சந்தேகம்தான்!!! விக்ரமிற்கு வேறு வயது 50 ஐ நெருங்குகின்றது, ஒவ்வொரு திரைப்படமும் 2 வருடங்களை தின்பது ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை! விக்ரம், விஜய் கூட்டணியில் மற்றொரு திரை விருந்தாக 'தாண்டவம்' அமையலாம், அமையவேண்டும்!!

3 ) பில்லா II


ஒவ்வொரு மனிதனுக்கும் கடந்தகாலம் இருக்கு, ஒவ்வொரு 'Don' ம் ஒரு வரலாறு; Don 'பில்லா'வின் வரலாறுதான் 'பில்லா II' என்னும் பெயரில் அஜித் நடிக்கும் 'பில்லா'வின் முதற்பாகமாக வெளிவர உள்ளது!!! தமிழ் சினிமாவிற்கு இது புதிய முயற்சி!! அஜித்தின் இறுதி மூன்று நான்கு திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கவில்லை, பில்லா, மங்காத்தா கூட திரையரங்கில் பார்க்கவில்லை!! ஆனால் இம்முறை முடிந்தவரை முதல்நாள், முதல் ஷோ பார்ப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றேன்; காரணம் படத்தின் மிரட்டல் டிரெயிலர்!! ஆர்.டி.ராஜசேகரின் கேமராவில் யுவனின் பின்னணியில் ஸ்டயிலிஷான அஜித்தை கற்பனை பண்ணும்போதே பிரம்மிப்பாக இருக்கின்றது!!

இயக்குனர்மீது சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதிர்பார்ப்பெல்லாம் இல்லை!! காரணம் அவரது 'உன்னைப்போல் ஒருவன்' கமல் படம், நிச்சயம் கமல் தலையீடு இருந்திருக்கும்!! ஆனால் இம்முறை இயக்குனர் முழுக்க முழுக்க தன் சுதந்திரத்தை திரைக்கதையில் கொண்டுவந்திருப்பார் என நம்பலாம். இந்த திரைப்படம்தான் இயக்குனரின் திறமையை முழுமையாய் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம், டிரெயிலர் பார்க்கும்போது மனிதர் கலக்கியிருப்பார் என்றே தோன்றுகின்றது. 'பில்லா II' விற்கு மிகப்பெரிய ஓப்பினிங் காத்திருக்கின்றது, படம் கலக்கலாக வந்தால் 'பில்லா II' அஜித்தின் கேரியரில் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புண்டு, பொறுத்திருந்து பார்ப்போம்......


2 ) நீதானே என் பொன் வசந்தம்


இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ - இசைஞானி இல்லாவிட்டால் இந்த திரைப்படத்தின் மீது எனக்கு எதிர்பார்ப்பு சிறிதளவாவது இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்!! நான் திரையரங்கில் பார்க்க இருக்கும் முதல் 'கௌதம் மேனன்' திரைப்படம் இதுதான்; ஜீவாவை எனக்கு பிடிக்கும் என்றாலும் இதுவரை திரையரங்கில் எந்த ஜீவா திரைப்படமும் பார்த்ததில்லை, அந்த வகையில் நான் முதல்முதலாக திரையரங்கில் பார்க்கப்போகும் ஜீவாவின் திரைப்படமும் இதுதான்!!! இதுவரை எனக்கு பிடிக்காத கௌதம் மேனனை இப்போது பிடிக்கிறது!!!

சமந்தா - 'பாணா காத்தாடி'ல அழகாக இருந்தாலும் பெரிதாக கவரவில்லை!! ஆனால் 'நீதானே என் பொன் வசந்தம்' ட்ரெயிலரில் 30 செக்கனில் நான் காலி :-) சந்தேகமே இல்லாமல் சமந்தாவுக்காகவும் 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!!! இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்தது போல் வேறெந்த திரைப்படத்தின் ட்ரெயிலரையும் இத்தனை தடவை பார்த்ததில்லை!! 100 தடவைக்குமேல் இரு மொழிகளிலும் பார்த்துவிட்டேன், இன்னமும் சலிக்கவில்லை; காரணம் 'இளையராஜா'. எனக்கிருக்கும் ஒரே சந்தேகம் நம்ம யாழ்ப்பாண தியேட்டர் அண்ணாச்சிங்க இந்த படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுவாங்களா என்பதுதான், படத்தின் எதிர்பார்ப்பைவிட இதுவேறு கூடுதல் எதிர்பார்ப்பு !!


1 ) கோச்சடையன்


இரத்தமும் சதையுமாக ரஜினி இதில் நடிக்கப்போவதில்லை என்பதால் வழமையான ரஜினி பட எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லை!! படம் எப்படி வரும் என்பது யாருக்குமே தெரியாத புதிர்!! ஆனாலும் எனக்கு எதிர்பார்ப்பில் கோச்சடையன்தான் உச்சம்!! காரணம் ரஜினி... ரஜினி.... ரஜினி.... இந்த மந்திர சொல்லை அடுத்தவர் படங்களில் சொல்லும்போதே மனதில் சிறகடிக்கும் எமக்கு ரஜினியின் விம்பத்தை முன்னிறுத்தி முழுதாய் ஒரு திரைப்படம் வருகிறதென்றால் எதிர்பார்ப்பு இல்லாமலா இருக்கும்!!!

மோஷன் கிராபிக்ஸ் என்கின்றார்கள், 'அவதார்' பாணி என்கின்றார்கள், 'படையப்பா'போல பக்கா கமர்சியல் என்கின்றார்கள், அரச வம்சத்து கதை என்கின்றார்கள், 'ராணா' திரைப்படம்தான் இதென்கின்றார்கள், 'ராணா' திரைப்படத்திற்க்கான முதல் பாகம் என்கின்றார்கள், மறைந்த நடிகர் நாகேஷை நடிக்க வைக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள், இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்கின்றார்கள். இவர்கள் சொல்வதில் சிலது புரிகிறது, சிலது புரியவே இல்லை!! ரசிகர்களை தாண்டி மக்களிடம் இந்த திரைப்படம் எடுபடுமா? சௌந்தர்யா இயக்குனராக சிறந்த திரைப்படத்தை கொடுப்பாரா? இந்த முயற்சி வெற்றியடையுமா? என பல கேள்விகளும், சந்தேகங்களும் நிறைந்திருந்தாலும் கோச்சடையன் ஒரு ரஜினி படம், அந்த வகையில் கோச்சடையன் எப்படியான திரைப்படமாக இருந்தாலும் அதை வரவேற்க காத்திருக்கின்றோம்!!!

சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, நாசர் என நட்சத்திரங்களும், ஏ.ஆர்.ரஹுமான், ராஜீவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் என முன்னணி தொழில்நுட்ப வல்லுனர்களும் கோச்சடையனில் வேலைசெய்கின்றார்கள். எல்லா கேரக்டர்களுமே கிராபிக்ஸா? இல்லை ரஜினி கேரக்டர் மட்டும் கிராபிக்ஸா? என்பதுவும் குழப்பமான சந்தேகமாக உள்ளது!!! ஒரு திரைப்படம் வெற்றிபெற அவசியமானது திரைக்கதை. கமர்சியலாய் சிறந்த திரைக்கதை அமைப்பதில் கெட்டிக்காரரான கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த திரைக்கதையை அமைக்கும் பட்சத்தில் 'கோச்சடையன்' சிறப்பாக வரவும் சாத்தியம் உண்டு; ஆனாலும் ரஜினியின் பெயரை சொல்லி தயாரிப்பாளர் + விநியோகிஸ்தர்கள் செய்யப்போகும் வியாபாரம் கோச்சடையனை குதறாமல் இருக்கவேண்டும்!!! எது எப்படியோ தலைவர் படத்திற்கு மிகுந்த  எதிர்பார்ப்புடன்   வெய்ட்டிங்........

* விஸ்வரூபம், மாற்றான் மற்றும் துப்பாக்கி திரைப்படங்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள்; எனக்கு பிடித்தவை லிஸ்ட் என்பதால் அவற்றை சேர்க்கவில்லை!!!

*--------*

14 வாசகர் எண்ணங்கள்:

முத்தரசு said...

//சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம்;//

இவரின் முதல் படம் எது?

உண்மையிலேயே அதில் இவுரு ஹீரோவா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க

முத்தரசு said...

10படம் சர்தான்... மைல்டா டவுட்டு வந்துச்சு ஒண்ணாம் இடத்து பட பெயர் பார்த்ததும் கிளியர் ஆயிடுச்சுங்க..

Unknown said...

நல்ல அலசல்!

Unknown said...

தல மேல நீங்க சொன்ன பத்து படங்களும் பெரும்பாலும் எல்லோரும் எதிர்பார்க்குற படமாத்தான் இருக்கும், எனினும் நம்மளுக்கு ஸ்பெசல் எப்பவுமே தலைவர் படம்தானே, உங்க முந்தைய பதிவ முழுசா படிக்கல, அதனால கமெண்டும் போடல, தமிழ்மணம் நட்சத்திர பதிவரானதுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் :-)

முன்பனிக்காலம் said...

உங்களுடைய பதிவு எவ்வளவு நீளமாக இருந்தாலும் ரசித்து வசிக்க முடிகிறது, அலுப்பு தட்டுவதில்லை. முதல் பதிவு ' ஒப்பினிங்' உம் அப்படி தான். நீளமான பதிவு என்றாலே ஸ்க்ரோல் செய்து கொண்டு போய்விட தோன்றும். உங்களுடைய எழுத்து நடை சுவாரசியமாக இருப்பதால் கட்டிப் போட்டு விடுகிறது.. :)

கார்த்தி said...

எனக்கு வேதிகாவையும் நல்லா பிடிக்கும் என்ர தரவரிசையில் 5வதாக இருக்கா. சிவகார்த்திகேயன் என்னவோ ஒரு நிகழ்ச்சியில ஒருக்கா பாடேக்க(?) குசினில இருந்தா அம்மாவுக்கு கேட்டுட்டுது. யார் பாடுறது எண்டு கேட்டா. சிவகார்த்திகேயன் எண்டு சொல்ல அப்பிடிண்ட அது நல்லாதான் இருக்கும் எண்டு சொல்ற அளவுக்கு அவர் மீதான அபிமானம் தமிழர்களிடையே வந்திட்டுது.

இத வாசிச்சு எனக்கும் எதிர்பார்ப்பு வராத படங்களில எதிர்பார்ப்பு வந்திருக்கு

ராஜ் said...

ரொம்ப நல்ல தொகுப்பு... நிறைய புது தகவல்கள்....Good One...
என்னோட எதிர்பார்ப்பு "கோச்சடையன்"...

கிரி said...

எனக்கு ஆதிபகவன் இரண்டாம் உலகம் கடல் பில்லா நீதானே என் பொன் வசந்தம் துப்பாக்கி விஸ்வரூபம் மாற்றான் மற்றும் தலைவர் படங்கள் மீது எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். கோச்சடையான் மற்ற ரஜினி படங்களை ஒப்பிடும் போது குறைவு தான்.

தாண்டவம் அடுத்த காபி என்று தோன்றுவதால் ஆர்வமில்லை

r.v.saravanan said...

எனது எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் கொச்சடையான் ,கடல், பில்லா ,நீ தானே என் பொன் வசந்தம்,

Mathuran said...

நல்ல தொகுப்பு
நான் விஜய் ரசிகன் என்கிறதால முதல் எதிர்பார்ப்பு துப்பாக்கி தான், அடுத்தது பில்லா 2 அட்டகாசமான ட்ரெயிலர் எதிர்பார்ப்பை கூட்டிவிட்டது, மற்றது அஜித்தின் ஸ்டைல்,

அடுத்தது மனங்கொத்தி பறவை சிவாவுக்காக, கலகலப்பு இவ்வளவும்தான் என்னோட எதிர்பார்ப்பு

Jayadev Das said...

\\ ஜீ.வி.பிரகாஷின் அண்மைக்காலத்து அல்பங்கள் அனைத்துமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளமைதான் பாலாவின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்!!!\\ ஆல் பழுத்தா அங்கே கிளி, அரசு பழுத்தா இங்கே கிளி.

Jayadev Das said...

\\6 வருடங்களுக்கு முன்னாலேயே செல்வராகவனால் திட்டமிட்ட திரைப்படமிது!!! \\ ஐயோ...சாமி நான் எஸ்கேப்......

Jayadev Das said...

\\1 ) கோச்சடையன் \\ தமிழில் பெண்கள் டைரக்ஷன் செய்யும் படங்கள் ஏன் பாஸ் ஓடவே மாட்டேங்குது? [சாந்தி முகூர்த்தம், இந்திரா, 3, .......]

Mafas Dx said...

soooper post, but......... துப்பாக்கி , மாற்றான், saguni missing............!!!

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)