Wednesday, April 4, 2012

மானுஷ புத்திரனுக்கு ஒரு மடல்...... 
மானுஷ புத்திரன் அவர்களுக்கு......

எழுத்தாளர்/கவிஞர் என்று தங்களை அடைமொழி வைத்துக் கூப்பிட எனக்கு சம்மதமில்லை, ஒரு சாதாரண எள்ளலையே தாங்கிக்கொள்ள முடியாமல் உறவை துண்டிப்பவரை எப்படி எழுத்தாளன் என்று என்னால் குறிப்பிட முடியும்!! நீங்கள் மட்டுமல்ல தம்மை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இதே செய்கையைத்தான் செய்கின்றார்கள் என்பதுதான் வருத்தமான விடயம். எப்பேற்ப்பட்ட மன்னனையும் தன் கவி வல்லமையால் கட்டிப்போட்ட வரலாறு தமிழ்க் கவிகளுக்கு உண்டு. பரமசிவனைப் பார்த்தே "நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று சொன்னான் நக்கீரன். அப்பேர்ப்பட்ட தமிழ்க் கவிகளின் வழியில் இன்றைய தமிழ்க் கவிகளையும் எண்ணிப் பார்க்கிறேன், நகைப்புத்தான் மிஞ்சுகின்றது!!!!

நான் ஒன்றும் தமிழ் அறிஞனோ எழுத்தாளனோ அல்ல, உண்மையை சொல்லப்போனால் நான் ஒரு சிறந்த வாசகனும் இல்லை, ஆங்காங்கே கிடப்பதை எடுத்துப் படிப்பதுதான் என்னுடைய அதிகபட்ச வாசிப்பு! சினிமா கவிஞர்கள் தவிர்த்து இன்றைய எந்த எழுத்தாளனையும் துளியளவும் வாசித்தது கிடையாது; இதை பெருமையாக சொல்லவில்லை, எனக்கு ஏனோ நாட்டம் வரவில்லை. அதனால் தங்களையும் தங்கள் எழுத்தையும் அறிந்திருக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தங்கள் அமைப்பு எடுத்த பாராட்டு விழாவிலே ரஜினிகாந்த் பங்கேற்ற போதுதான் தங்களது பெயரை முதல் முதல் அறிந்துகொண்டேன்.

முகப்புத்தகத்தில் தங்களது ஒரு கருத்திற்கு என் நண்பர்களில் யாரோ ஒருவர் இட்ட பதில் கருத்துத்தான் எனக்கு தங்களை அறிமுகப்படுத்தியது. விழா ஏற்பாட்டாளர் என்பதால் ரஜினிகாந்த் பற்றிய தகவல்களை சுடச்சுட பெறலாம் என்றுதான் தங்களிடம் நண்பர் ஆவதற்கான வேண்டுகோளை முகப்புத்தகத்தில் விடுத்தேன்; அது முழுக்க முழுக்க ஒரு அடித்தட்டு ரசிகனின் மனநிலையில் அனுப்பப்பட்டது. தாங்களும் எனது கோரிக்கையை ஏற்று என்னை தங்கள் நண்பர் பட்டியலில் இணைத்தீர்கள். ரஜினியின் ரசிகனாக ராமகிருஷ்ணன் விழாச் செய்திகளை படிக்க உங்களிடம் தொடர்பை ஏற்ப்படுத்திய எனக்கு தங்களது பொதுவான கருத்துக்களும், கிண்டல்களும் பிடித்துப்போகவே தொடர்ந்து உங்கள் கருத்துக்களை ரசித்து படித்து வந்தேன்; நன்றாக ரசித்தால் Like குறியீட்டை அழுத்தியும் இருக்கின்றேன்.

இன்று(3//2012) மும்பாய் அணி, சச்சின், ஹர்பஜன், தலைமைத்துவம் பற்றிய செய்தியையும் அதற்க்கு தங்களது எள்ளலையும் கலந்து ஒரு நையாண்டி கருத்தாக முகப்புத்தகத்தில் இட்டிருந்தீர்கள். தங்களது அந்தக் கருத்திற்கு "சும்மா இருந்துகொண்டு அடுத்தவனை விமர்சிப்பதில்த்தான் எத்தனை சுகம்; தொடரட்டும் தங்கள் பொன்னான பணி:p" என்று பதில் கருத்திட்டேன்; தங்கள் நண்பர்களில் இருவர் அடுத்த நிமிடமே அதனை Like செய்திருந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எனது நண்பர் ஒருவர் "நீங்கள் இட்ட கருத்தை மானுஷ புத்திரன் பக்கத்தில் காணவில்லை" என்று சொன்னார். நண்பருக்கோ நான் இட்ட கருத்துத்தான் காணாமல் போனது, ஆனால் எனக்கோ தாங்களே காணாமல் போயிருந்தீர்கள்!!! ஆமாம் சார் என்னை தாங்கள் முகப்புத்தகத்தில் தங்களுடனான தொடர்பில் இருந்து மறைத்துவிட்டீர்கள்!!(U Blocked Me)

இப்படியொரு செய்கையை தங்களிடமிருந்து நான் கொஞ்சமும் எதிர்பாக்கவில்லை; "காலையில்த்தான் விவாதம் முடித்துவிட்டு வருகின்றேன்", "நாளைக்கு ஒரு விவாதம் இருக்கின்றது" போன்ற சொல்லாடல்களை தங்கள் முகப்புத்தகத்தில் பார்த்துப் பார்த்து தங்களை ஒரு விவாத கவிஞனாக உணர்ந்த எனக்கு; இந்த சிறு எள்ளல் தங்களை கோழையாக உணரும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று நான் சிறிதும் எண்ணவில்லை!! இதற்கு முன்னர் ஒரேயொரு தடவைதான் தங்களுக்கு பதில்க் கருத்து சொல்லியிருக்கிறேன், அது தங்களுக்கு பாதிப்பில்லாமல் சொன்ன கருத்து; ஆனால் இன்றைய எனது கருத்து தங்களை மிகவும் பாதித்துவிட்டது, மன்னிக்கவும்!!!


எனது கருத்தில் தங்களுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அதற்க்கான பதிலை நேரடியாகவோ அல்லது சிலேடயாகவோ, கிண்டலாகவோ கொடுத்திருக்கலாம்; அதைவிடுத்து தங்களிடமிருந்து என்னை துண்டித்திருக்கிண்றீர்கள் என்றால் நான் என்ன வக்கிரமான, ஆபாசமான, வன்முறையான, இனவெறியான, உணர்வுகளை காயப்படுத்தும் சொற்களையா பயன்படுத்தி இருக்கிறேன்!!! உங்கள் முகப்புத்தகம்; தாங்கள் ஒருவரை அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும், இடையிலேயே விலக்குவதற்கும் தங்களுக்கு முழு உரிமை இருக்கின்றது; ஆனால் ஒரு தமிழ்க் கவிஞனாக எழுத்தாளனாக இந்த சிறு எள்ளலை தாங்கிக்கொள்ள முடியாமல் என்னை மறுத்ததுதான் வேதனையானவிடயம்!!!

தங்களுக்காக ஒரு ஒரு வரலாற்று சம்பவம்

சிலம்பி என்னும் பெண்ணிற்கு பாட்டெழுதிய விடயத்தில் ஒளவையாருக்கும் கம்பருக்கும் ஒரு சிறு கருத்துவேறுபாடு; ஒளவையார் மீது கம்பர் கோபத்தில் இருந்தாலும் அதை நேரடியாக வெளிக்காட்ட முடியவில்லை. ஒருநாள் ஒளவையார் வயல் வரப்பிலே காற்று வாங்க நடந்துகொண்டிருந்தார்; அப்படி அவர் செல்லும் வழியில் கம்பரை சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கம்பர் ஆரை கீரை ஒன்றை கையால் கிள்ளியபடி கீரைக்கு சொல்வதுபோல ஔவைக்கு சிலேடையாக முடிவிலே 'டீ' வரும்படி "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ" என படித்தார். பாடலைக்கேட்ட ஔவைக்கு கோபம் வந்தாலும் அதை நேரடியாக வெளிக்காட்டவில்லை; தமிழமுதம் குடித்த தமிழ்க்கிழவி பதிலுக்கு.....

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேற்க் கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே, ஆரையடா சொன்னாயது."
எனப் படித்தார்.

தமிழில் ஒவ்வொரு எழுத்திற்கும் மாத்திரை அளவு உள்ளது; (அ - 8, வ -1/4) எட்டேகால் லட்சணமே = அவலட்சணமே, எமனேறும் பரியே = எருமையே; மட்டில் பெரியம்மை வாகனமே = மூதேவியின் வாகனமான கழுதையே, முட்டமேற்க் கூரையில்லா வீடே = குட்டிச்சுவரே, குலராமன் தூதுவனே = குரங்கே; என சிலேடை பேசிய ஔவை இறுதியில் ஆரையடா சொன்னாயது என்பதில் "யாரைப்பார்த்து சொன்னாய்" எனவும் "நீ சொன்னதன் பொருள் ஆரைக் கீரை" எனவும் இருபொருள்பட 'அடா' வை அடைமொழியாக வைத்து கம்பருக்கு பதிலடி கொடுத்தார்.

இது தங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இருந்தும் ஏன் சொல்கின்றேன் என்றால் அதிலுள்ள தமிழின் திமிரையும், கர்வத்தையும் ஞாபகப்படுத்தத்தான். உங்களிடமிருந்தும் இதைத்தான் தங்களை தொடரும், பின்பற்றும் வாசகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னை தாங்கள் தங்கள் முகப்புத்தகத்தில் இருந்து தடுத்திருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் "இப்படியான செய்கைகளை நாம் செய்வதை யார் அவதானிக்கப் போகின்றார்கள், இது எப்படி மற்றவர்களுக்கு தெரியப்போகின்றது" என்கின்ற அசட்டையீனத்தில் ஒருவேளை இதை தாங்கள் செய்திருந்தால் இந்தப்பதிவு தங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி, மற்றும் எதிர்வரும் காலங்களில் என்னைப்போல ஒருவரை தூக்கி ஏறிய தாங்கள் சற்றேனும் சிந்திப்பீர்கள், அந்தவகையில் இதை ஒரு பாடமாக கூட எடுத்துக்கொள்ளலாம்!!

உங்கள் தமிழ் அறிவுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒன்றுமே இல்லை, ஆனாலும் ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு, அதனால இதை உங்ககிட்ட சொல்லிக்கிறன், தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க. இப்படிக்கு -: இனியோருதடவை நீங்களாகவே நடப்புக்கு விண்ணப்பம் கோரினாலும் அதை 100 சதவிகிதம் நிராகரிக்கும், தங்கள் முன்னாள் முகப்புத்தக நண்பர்களில் ஒருவன், Arulanantham Jeevatharshan...


17 வாசகர் எண்ணங்கள்:

சூனிய விகடன் said...

இதெல்லாம் தங்களை மனிதர்களாக உணர்ந்து நடந்து கொள்ளுபவர்களுக்கு புரியும் நண்பரே.....தங்களைத் தெய்வங்களாகவும் தேவர்களாகவும் கருதிக்கொண்டு, தொப்புளே இல்லாமல் பிறந்த கர்வத்தில் திரிபவர்களுக்கு இதெல்லாம் புரியாது. என்னைப்பொறுத்தவரை இவரையெல்லாம் சும்மா காட்சி இன்பத்துக்காகக்கூட பார்ப்பதோ..ரசிப்பதோ கிடையாது

Unknown said...

இது பலருக்கு நடந்திருக்கிறது நான் அறிந்து,.,
அத்துடன் இவர் மட்டுமல்ல,பல இழுக்கியவாதிகள் இவ்வாறு தான் நடந்துகொள்கின்றனர் .வெளியில் தான் தாங்கள் எதோ பெரிய அப்படாக்கர்னு காட்டிக்கிறது..ஆனால் ஒரு சிறிய விமர்சனத்தை கூட எதிர்கொள்ள தகுதியில்லாத கொலைகள் தான் இவர்கள்!!

Jayadev Das said...

இவரை நான் நீயா நானா [விஜய் தொலைக் காட்சி] நிகழ்சிகளில் பார்த்திருக்கிறேன். இவர் எழுத்துக்களை படித்ததில்லை. [நாம் பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிப்பதே இல்லை என்பது வேறு விஷயம்... !!!]. உங்களுக்கு மனக் கஷ்டம் கொடுத்துவிட்டார்..... என்ன செய்வது...?? போவுது கழுதை .....டேக் இட் ஈசி பாஸ்.

கிஷோகர் said...

நண்பா! எனக்கு மானுஷ புத்திரன் எண்டால் யார் என்றே தெரியாது, உங்கலுக்கிடையிலான பிரச்சினை தெரியது. ஆனால் நான் பின்னூட்டம் இடும் நோக்கம் என்னவென்றால் அவ்வாறான ஒரு செய்கை அந்த நபரிடம் இருந்து உங்களுக்கு நடந்திருக்கும் பட்சத்தில் அதன் பதிலாய் நீங்கள் எழுதியிருக்கின்ற இந்த பதிவு அபாரம்.

ஒரு கண்டன பதிவு அல்லது ஒரு பாடம் புகட்டும் பதிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.நன்றி , வருகிறேன்!

KARMA said...

இலக்கியவாதி போர்வையில் மறைந்திருக்கும் அற்ப ஜந்துக்கள் வெளிவரட்டும்.

இன்னொன்று ....!!! இவர்களும் மனிதர்கள் தாமே, ஆனால் கூச்சமில்லாமல் தங்களை மகாத்மா ரேஞ்சுக்கு நேர்காணலிலும், புத்தக வெளியிடுகளிலும் வெளிப்படுத்துவது தான் சகிக்கமுடியவில்லை.

நண்பர் ஒருவர் ராமகிருஷ்ணனிடம் இது போன்று உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் உங்களுக்காக உருவாக்கி வைத்துள்ள வலை பதிவிலோ, முகப்பக்கத்திலோ முகம் தெரியாத ஒருவர் வந்து கலாய்தால் அதற்கு பதில் எழுதி encourage / continue செய்விர்களா ? அதற்கு பதில் நீக்கிவிடுதல் சுலபம் அல்லவா ?

Eagle's Pick of the day said...

நண்பா! உன் "மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு மடல்" படித்து ரொம்ப பாதிக்க பட்டு இதுக்காகவே அவன invite பண்ணி உன் லிங்க கமெண்ட் கொடுத்தேன் "உங்கள் பார்வைக்கு மற்றும் ஆவலுடன் உங்கள் பதிலுக்காய்"னு. அதையும் 5mins ல தூக்கிட்டா நண்பா !!
நான் கொடுக்கற negative கமெண்ட் எல்லாம் காணாம போய்டுது நீ 100 % ரைட் நண்பா!!!

வவ்வால் said...

உண்மையை சொன்னால் வருத்தப்பட மாட்டீர்கள் என நினைக்கிறேன், நீங்கள் முகநூலில் இட்ட பதில் கருத்தும் ,இந்தப்பதிவும் சிறுப்பிள்ளைத்தனமானது.

கிரிக்கெட் குறித்த அவரது கருத்துக்கு நீங்கள் சொன்னது மிக கேவலமான ஒரு கருத்து, முதலில் அது கருத்தேயல்ல தனி மனித தாக்குதல் அதுவும் ஒருவது இயலாமையை சுட்டிக்காட்டி பேசுவது எப்படி பதில் கருத்தாகும், இதில் என்னமோ நீங்கள் மனக்காயம்ப்பட்டால் போல ஒப்பாரி வைத்து பதிவுப்போட்டுக்கொண்டு.

திரைப்படத்தினை விமர்சனம் செய்பவரை படம் எடுக்க தெரியுமா என கேட்டால் லேசாக எரிச்சல் வரத்தான் செய்யும்,அப்படி இருக்கும் போது விளையாட்டைப்பற்றி அவர் சொன்னால் அதற்கு அவரது குறைப்பாட்டை சுட்டிக்காட்டி பேசுவது எந்த விதத்திலும் சரியல்ல.இதில் பாடமாக இருக்கட்டும்னு ஒரு வீர வசனம் வேறு :-))

அவ்வையாரும் கம்பரும் பேசிக்கொண்டார்களாம் ,பாட்டுக்கு பாட்டு பாடிக்கொண்டார்கள் அது வரலாற்று சம்பவமாம் கேட்கிறவன் கேணையனா இருந்தா கேமராவைக்கண்டு பிடிச்சது கேப்டன் விஜயகாந்துனு சொல்வீங்க போல :-))

எப்பூடி.. said...

@வவ்வால்

//சும்மா இருந்துகொண்டு அடுத்தவனை விமர்சிப்பதில்த்தான் எத்தனை சுகம்; தொடரட்டும் தங்கள் பொன்னான பணி:p" //

இதில் அவரின் குறைபாட்டை எந்த இடத்தில் கிண்டல் செய்துள்ளேன் என்று சொல்ல முடியுமா? 'சும்மா இருந்துகொண்டு' என்பதை நீங்கள் குறைபாட்டை கிண்டல் செய்ததாக நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, இப்போது நீங்கள் சொல்லிய பின்னர்தான் என்னாலேயே அதனை நீங்கள் சொல்லியதுடன் தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது!!!

எடுத்ததையும் விமர்சனம் செய்பவர்களை சொல்லும் அடை மொழியாகத்தான் "சும்மா இருந்துகொண்டு" என்னும் சொல் பயன்படுப்த்தப்படுவது வழமை; அதற்க்கு நீங்கள் வேறு அர்த்தம் கற்பித்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல!!

நீங்கள் அவரோட பரம ரசிகராக இருக்கலாம் அதற்காக ஒருத்தன் செய்யும் தவறை மறைக்க உதவாதீர்கள்!!!

krishy said...

நண்பரே,

உங்களது இந்த நல்ல பதிவை
எங்களது செய்தி தாள் வடிவமைப்பில் ஆன தமிழ்.DailyLib இணைத்து உள்ளேன்

பார்க்க
தமிழ்.DailyLib

Hope we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ்.DailyLib

வவ்வால் said...

ஜீவ தர்ஷன்,

//எடுத்ததையும் விமர்சனம் செய்பவர்களை சொல்லும் அடை மொழியாகத்தான் "சும்மா இருந்துகொண்டு" என்னும் சொல் பயன்படுப்த்தப்படுவது வழமை; அதற்க்கு நீங்கள் வேறு அர்த்தம் கற்பித்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல!!//

உங்களுக்கு தமிழில் ஏகப்பிரச்சினைகள் இருக்கும் போல , விளக்கி சொல்ல என்னாலும் முடியாது.

வழக்கமா சொல்றத எல்லாரிடமும் சொல்வது வேறு குறையுள்ள ஒருவரிடம் விளையாட்டுப்பற்றி பேசும் போது அப்படி சொன்னால் அதன் பொருள் வேறாகிவிடும் என்ற புரிதல் கூட இல்லையே, இதில் என்னை அவரின் ரசிகன் என ஒரு சாயம் வேறு பூசிக்கொண்டு நானா போய் அவர் முகநூலில் சேர்ந்தேன்.

திரைப்பட நடிகர்களின் நடிப்பை உண்மையென நம்பி விசிலடித்து ஆராதிக்கும் ஒருவருக்கு இதெல்லாம் புரியாது, வழக்கம் போல அபிமான நடிகருக்கு இணையத்தில் தொண்டு செய்து காலத்தை ஓட்டுங்க :-))

அப்படி ஒரு அர்த்தம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல என்றால் அவர் நீக்கினால் என்ன வைத்திருந்தால் என்னனு இல்லாமல் ஏன் இந்த புலம்பல் பதிவு? கூலாக போகல்லாமே? இதில் அவர் செய்த தப்பை மறைக்க என்ன இருக்கு, இப்படி ஒரு வாய்ப்பு இருக்கு என தெரியாமல் கருத்து சொன்னது உங்க தப்பு அதை சொன்னா எனக்கு ஒரு பட்டம் :-))

எப்பூடி.. said...

@ வவ்வால்

எனக்கு தமிழில்தான் பிரச்சனை, உங்களுக்கு விளக்கத்தில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்குமென்று நினைக்கிறேன்!!!

அந்த சொல் நாம் வழக்கத்தில் பயன்படுத்தும் சொல்; அதற்க்கு நீங்கள் சொல்வதுபோல அவரது குறைதான் அர்த்தம் என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல; அதை எழுதும்போது (எப்போதுமே) அவரது குறையை நான் நினைத்துகூட பார்த்ததில்லை; நீங்கள்தான் வரிக்குவரி அதனை குறை என்கின்றீர்கள்!!!

திரைப்பட நடிகனின் நடிப்பை நம்பித்தான் ஒருவன் விசிலடிக்கிறான் என நீங்கள் நினைத்தால் உங்களை நினைத்து சிரிக்கத்தான் முடியும்!!

எனக்கு யாருக்கு தொண்டு செய்யணும், செய்யக்கூடாதென்று நீங்கள் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு நான் இல்லை நண்பரே; சொல்ல வந்த கருத்தை மட்டும் சொன்னால் போதும்!!!

இது புலம்பல் பதிவல்ல, ஒரு கோளை எழுத்தாளனின் முகத்திரையை கிழக்கும் பதிவு; தனக்கு வந்த ஒரு சாதாரண எதிர்வினையே தாங்கிக் கொள்ளாமல் புரட்சி பேசும் ஒரு எழுத்தாளனின் அசல் முகத்திரையை காட்டும் பதிவு!!!

அவருக்காக கஷ்டப்பட்டு குறை தேடும் உங்களுக்கு (இந்தக் குறையும் அவருடன் சம்பந்தப்படுத்தி விடாதீர்கள், தமிழ்;இல் குறைக்கு குற்றம் என்றும் பொருள் உண்டு) அந்த பட்டம் சாலவே பொருந்தும் என நினைக்கிறேன்!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கிண்டல் கேலிகளை எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் இருப்பதில்லை. எழுத்தாளர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

வவ்வால் said...

ம்ம் அடுத்ததா நான் ஒரு பின்னூட்டம் போட்டேன் அதை காணோம் :-))

நல்லா இருக்குபா உங்க நியாயம், வாழ்க வளமுடன்!

எப்பூடி.. said...

வவ்வால்

எனக்கு எந்த பின்னூட்டலும் உங்களிடமிருந்து வரவில்லை; நீங்கள் என்ன பின்னூட்டிநீர்களோ அதை மீண்டும் பின்னூட்டுங்கள், நான் நிச்சயம் பிரசுரிப்பேன்; என்னை பற்றி திட்டி கேவலமாக வந்த அனைத்து பின்நூட்டல்களையும் இதுவரை பிரசுரித்துள்ளேன்; இது என்னை வாசித்தவர்களுக்கு தெரியும்; உங்கள் ஆள் போல கோளை என்று நினைத்து விட்டீர்களோ!!! (முதல் பின்னூட்டத்தை பிரசுரிக்காமல் மறைத்திருந்தால் இந்த பின்னூட்டத்தையும் பிரசுரிக்க வேண்டிய எந்த தேவையும் எனக்கில்லை!!! )

வவ்வால் said...

ஜீவதர்ஷன்,

// உங்கள் ஆள் போல கோளை என்று நினைத்து விட்டீர்களோ!!! //

உங்களை எல்லாம் என்ன செய்வது ... நீங்களா போய் ஒருத்தர் கூட முக நூலில் ஒட்டிப்பீங்க அப்புறம் ஏதோ ஒன்னு சொல்லி வெட்டிப்பீங்க, அதுக்கு சொல்கிற காரணத்தில் இருக்கும் பிழையை சொன்னால் நீ அவன் ஆள் சொல்வீங்க, எனக்கு இன்றுவரை மனுஷ்ய புத்திரன் முகநூல் முகவரியோ அல்லது வலைப்பதிவோ தெரியாது , கூடவே சேர்ந்து குலாவிட்டு இப்போ எனக்கு அந்த பட்டத்தை கொடுக்குறிங்க என்ன கொடுமை சார் இது!

முன்னர் சொல்ல வந்தது இது தான் ஒரு நடிகர் நடிப்பை பார்த்து விசிலப்பேன் என நினைதீர்களா கேட்டிங்க ,அப்புறம் எதைப்பார்த்தால் விசிலடிப்பீங்க.

மனுஷ்ய புத்திரன் யாருனே தெரியாது அவர் நடத்தும் விழாவில் ரஜினி கலந்துக்கொள்வார் என்பதால் அவரது முக நூலில் இணைந்தேன் சொன்னதும் நீங்க ,ஒரு நடிகர் ஒரே ஒரு முறை தான் மனுஷ்ய புத்திரன் நடத்தும் விழாவில் கலந்துக்க போகிறார் அவர் யார் என்ன என்றே தெரியாமல் அந்த நடிகருக்காக போய் ஒட்டிப்பீங்க :-))

அப்புறம் ஒரு கமெண்ட் போடுவிங்க அதில் இருக்கும் அனர்த்தம் உங்களுக்கு புரியாது , ஆனால் அவர் அதனை அப்படி புரிந்து கொண்டால் உங்களுக்கு பத்திக்கும் அது வழமை தானே என சமாளிப்பீர்கள் , கூடவே தவறினை சுட்டிக்காட்டினால் சாயம் பூச வருவீர்கள் :-))

நான் சொல்ல வந்தது இது தான் "சாதாரண உதாரணம் என்றாலும் அவரைப்பொறுத்த வரை அது "offencive language" காரணம் அவரது நிலை. இதெல்லாம் காமென் சென்ஸ் கொண்டு புரிந்துக்கொள்ளவேண்டும் :-))

சினிமாவ தாண்டி எதாவது யோசிங்க,படிங்க அப்போ தான் கொஞ்சமாவது விளங்கும் :-))

எப்பூடி.. said...

@ வவ்வால்

கையை பிடிச்சு இழுத்தியா?
"என்ன கையை பிடிச்சு இழுத்தியா?"
அந்த பொண்ணு கையை பிடிச்சு இழுத்தியா?
"எந்த பொண்ணு கையை பிடிச்சு இழுத்தியா?"

இப்டித்தான் உங்க வாதம் போகின்றது; நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்றால் எதுவும் செய்ய முடியாது!! "சும்மா இருந்துகொண்டு அடுத்தவை விமர்சிப்பது" என்பது குறைபாட்டைத்தான் குத்திக் காட்டியது என நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, படிப்பபர்கள் யார் சரி, பிழை என்பதை முடிவெடுக்கட்டும்!!!

நடிகனின் தீவிர ரசிகனாக இருப்பவர்கள் நடிகன் செய்வதை உண்மையென்று நம்புபவர்களா? செம காமடி பாஸ்!!! இதுபற்றி உங்களுடன் மேலும் விவாதிக்க விரும்பவில்லை (போதும் போதும் என்றளவிற்கு விவாதித்தாகிவிட்டது)

http://eppoodi.blogspot.com/2010/11/blog-post_18.html

http://eppoodi.blogspot.com/2010/07/blog-post_20.html

//சினிமாவ தாண்டி எதாவது யோசிங்க,படிங்க அப்போ தான் கொஞ்சமாவது விளங்கும்//

என்னைப்பற்றி உங்களுக்கு அவ்ளோ நன்றாக தெரியுமா!! ஆச்சரியம்!!! ரொம்ப நன்றிங்க!! முயற்சி பண்றன்... முடிஞ்சா விளக்கம் அதிகரிக்க ஏதாவது மருந்து இருக்கும்னா அதை நீங்க யூஸ் பண்ணுங்க!!!

Eagle's Pick of the day said...

இந்த வௌவால் வேற யாரும் இல்ல அதே மனுஷ்ய புத்திரன் தான். உலகத்தில அவர பத்தி உயர்வா அவரு மட்டும் தான் சொல்லிகுவரு

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)