Monday, February 20, 2012

தலைப்பு வைக்க தெரியலைங்க....

தனிநபர், குழு, சமூகத்தின்/குறிப்பிட்ட பிரிவின் சிறுபான்மையினர் அல்லது பெரும்பான்மையினர் புரியும் நல்லவை, கெட்டவை இரண்டிற்கும் அந்த சமூகத்தை/குறிப்பிட்ட பிரிவினரை ஒட்டுமொத்தமாக உள்ளடக்குவதுபோல ஊடகங்களில், சமூகத்தளங்களில், குழு விவாதங்களில் அணுகுவது சரியான விடயமா? எனக்கு இந்த விசயத்தை எப்படி எழுத்தில் கொண்டுவருவது என்று சரியாக எந்த ஐடியாவும் வரல; அதனால பேச்சு வழக்கில இருக்கிற சில சொல்லாடல்களை குறிப்பிட்டு விட்டு சொல்ல வந்த விடயத்துக்கு செல்கிறேன்....

*இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
*யாழ்ப்பாணத்தானுங்க திருந்த மாட்டானுக
*குட்டையா இருக்கிறவனை நம்பாத
*தன் ஜாதிப் புத்தியை காட்டீட்டான்
*சினிமாக்காரங்கன்னாலே ஒரு மாதிரியான ஆளுகதான்
*இந்தக்கால பிள்ளைகளின்ட பழக்க வழக்கம் உதவாது
*ஜெர்மானியர்கள் சோம்பேறிகள்
*மோட்டு சிங்களவங்கள்..
*தீவாற்ற(தீவு) குணம் இதுதானே!!!


இப்படியாக பொதுப்படையாக பேசுவது எம்மவர்களில் சிலருக்கு வழக்கமான ஒரு விடயம். ஒரு/சில/பல பெண்ணின்/ஆணின் மீது விமர்சனம்/கோபம் இருக்கும் பட்சத்தில் அதனை பேச்சிலோ, எழுத்திலோ பொதுவில் ஒட்டுமொத்த ஆண்/பெண் இனை முன்னிறுத்தித்தான் அதிகமானவர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் சூழல் இன்று நிலவுகின்றது!!! இதனை குறிப்பாக சமூகத்தளங்களில் அதிகமாக அவதானிக்கலாம்!!! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயம் இருக்கும்போது எப்படி ஒருவரது/சிலரது/பலரது கேரக்டர்களை ஒட்டு மொத்தமாக அவர்கள் சார்ந்த பாலினத்தவருடன் ஒப்பிடலாம்?

இப்படியாக பொதுப்படையாக பேசுவது எம்மவர்களில் சிலருக்கு வழக்கமான ஒரு விடயம். ஒரு/சில/பல பெண்ணின்/ஆணின் மீது விமர்சனம்/கோபம் இருக்கும் பட்சத்தில் அதனை பேச்சிலோ, எழுத்திலோ பொதுவில் ஒட்டுமொத்த ஆண்/பெண் இனை முன்னிறுத்தித்தான் அதிகமானவர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் சூழல் இன்று நிலவுகின்றது!!! இதனை குறிப்பாக சமூகத்தளங்களில் அதிகமாக அவதானிக்கலாம்!!! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயம் இருக்கும்போது எப்படி ஒருவரது/சிலரது/பலரது கேரக்டர்களை ஒட்டு மொத்தமாக அவர்கள் சார்ந்த பாலினத்தவருடன் ஒப்பிடலாம்?இதை ஊக்குவிக்கும் முக்கிய ஊடக நிகழ்ச்சிகளில் விஜய் டிவியின் 'நீயா நானா' முக்கியமானது!! பெண்களா? ஆண்களா? என்கின்ற தலைப்பில் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைப்புக்களில் இதுவரை பல விவாதங்கள் இடம்பெற்றுவிட்டன!!! இரு பிரிவிலும் தலா 25 ஆண்/பெண் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பெண்/ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் போல் பேசுவது மகா கொடுமையாக இருக்கும்!!! அதிகமாவனர்கள் தமது பார்வையிலுள்ள ஆண்/பெண் பற்றிய அபிப்பிராயத்தை பொதுவில் வைத்து பேசுவதும், அதற்க்கு அங்கு நடுநிலைமை வகிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் முகத்திலே ஆயிரம் எக்ஸ்பிரஷன் கொடுத்து அதை உள்வாங்குவதும் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது.

இந்த விவாதம் ஆண் vs பெண் விவாதங்களில் மட்டுமல்ல, பெண் vs பெண் விவாதங்களிலும் பொதுவில் வைத்தே விவாதிக்கப் படுகின்றது. உதாரணமாக கிராமத்து பெண்களா? நகரத்து பெண்களா? என்கின்ற தலைப்பில்; தலைப்பே மிகப்பெரிய அபத்தம்!!! ஒருவருடைய கேரக்டர் ஒரு இடத்தையும், ஒரு இடம் ஒருவருடைய கேரக்டரையும் எப்படி முடிவுசெய்ய முடியும்!!

சமீபத்தில் பெண் ஒருவரால் வெளிநாட்டு இளைஞா ஒருவன் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்றிற்கு நண்பர் ஒருவரால் இடப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? "தமிழ் பெண்களின் புது பிசினஸ்" ஒரு பெண் தவறு செய்தால் அந்த தவறுக்கு ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் பொதுவில் விழிப்பது எவ்வளவு பெரிய அபத்தம்?? இது ஒரு சிறு உதாரணம்; இதைபோலவே எங்காவது இடம்பெறும் ஒன்றிரண்டு தகாத செயல்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் தரக்குறைவாக மதித்து செய்திகளை போடுவது இன்று சாதரணமாகிவிட்டது!! சில புத்திசாலிகள் "இனிமேல் வடலி வளர்த்துத்தான் கள்ளுக் குடிக்கணும்" என்கிற டயலாக்கை இன்றைய பெண்களின் நம்பகத்தன்மை குறித்து சிலேடையாக சொல்கின்றமையையும் ஆங்காங்கே அவதானிக்கலாம்!!

பெருமையான விடயங்களை பொதுவில் கூறும்போது அதனால் ஏற்ப்படும் விளைவுகள் சாதகமானவை; அவற்றால் பாதிப்புக்கள் இல்லை. அதே நேரம் மோசமான விடயங்களை பொதுவில் வைத்து கூறும்போது அது அந்த சமூகத்தின் மீதான மதிப்பையும் எண்ணங்களையும் சிதைக்கப்படுகின்றன என்பது எவ்வளவு பாதகமான விடயம். இச்செயலை தெரியாமல் செய்பவர்களுக்கு எடுத்துக் கூறலாம், புரியவைக்கலாம்; ஆனால் திட்டமிட்டு தன் இனத்தின் மீதே இச்செயலை செய்பவர்களை என்ன செய்யலாம்? இவர்களை மல்லாக்க படுத்து எச்சிலை உமிழும் அற்பபிறவிகள் என்று திட்டுவதை தவிர எம்மால் என்னதான் செய்யமுடியும்!!?

ஒரு இனத்தை, மதத்தை, நாட்டை, பிரதேசத்தை, சமூகத்தை, தோற்றத்தை, தொழிலை முன்னிறுத்தி பொதுவிலே பேச்சு வழக்கில் பல ஏளனமான சொல்லாடல்கள் மேற்குறிப்பிட்டவைபோல சொல்லப்படுவதுண்டு. இவ்வாறான வசனங்கள் கோபமான, ஆத்திரமான மன நிலையில்த்தான் அதிகமானவர்களிடம் இருந்து வெளிப்படுகின்றது; அதாவது ஒருவர்/சிலர்/பலர் மீதிருக்கும் கோபம் வன்மமாகி ஒட்டு மொத்த குழுமத்தின் மீதும் வசைபாடலாக மாறிவிடுகின்றது. கோபம்/ஆத்திரம் தவிர்த்து பெருமைக்காகவும், அகங்காரத்திலும், துவேசத்திலும், வெறுப்பிலும், தோல்விகளாலும் கூட இவ்வாறான பொதுவில் விழித்தல் வெளிப்படுகின்றது!! இவ்வாறான சந்தர்ப்பங்களில் 'சில/சிலர்', 'பல/பலர்' போன்ற சொற்களை சேர்த்து கூறினால்க்கூட ஓரளவிற்கு தாக்கம் குறைவாக இருக்கும்; ஆனால் ஒருவனை திட்டுவதற்க்கே அவன் குடும்பத்தின் மூன்று தலைமுறையை தோண்டி எடுத்து திட்டும் சில எம்மவர்களுக்கு இதெல்லாம் சிந்திக்க அவகாசமிருக்குமா!!!

8 வாசகர் எண்ணங்கள்:

இராஜராஜேஸ்வரி said...

சில/சிலர்', 'பல/பலர்' போன்ற சொற்களை சேர்த்து கூறினால்க்கூட ஓரளவிற்கு தாக்கம் குறைவாக இருக்கும்;

உண்மைதான்.. நிதர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

யோசிக்க வைக்கிறீர்கள்...

கிரி said...

நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் இது அனைத்து நாடுகளிலும் உள்ளது என்றே நினைக்கிறேன்... நம்மவர்களிடம் கூடுதலாக உள்ளது காரணம் அடுத்தவர்கள் விசயத்தில் அதிக ஆர்வம் காட்டுவதே!

இது என்றுமே மாறாது.

Jayadev Das said...

மனித மனத்தின் இயல்பு இது என நினைக்கிறேன். முதலில் சில நிகழ்வுகளைப் பார்த்த பின்னர் நம் மனதில் சில இம்பிரஷன்ஸ் பதிவாக அது எதிர்காலத்தில் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் பீகாரைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் வேலை தேடி வந்தவர்கள் உள்ளார்கள், குறைந்த கூலிக்கும் வேலை செய்கிறார்கள். ஆனால், அப்படியே திருட்டு தொழிலையும் ஆரம்பித்து விட்டார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களிடம் நகை பறிப்பு, வீடு புகுந்து திருடுதல்கள் எல்லாம் அதிகரித்து விட்டன. இதை பீகாரில் இருந்து வருபவர்கள் தான் செய்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. தற்போது அவர்களில் யாரப் பார்த்தாலும் இந்த திருட்டு ஞாபகத்துக்கு வருகிறது, அதனால் அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களும் திருடர்களாகவே நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள், என்ன செய்ய?

Unknown said...

இந்த பிரச்சனை இந்தியாவுல குறிப்பா தமிழ்நாட்டுலயும், சுத்தி இருக்குற மாநிலங்கள்லயும் அதிகமாவே இருக்கு தல, மத்த நாட்டுக்காரங்கள கிண்டல் பண்றது போயி இப்ப நம்மளுக்குள்ளயே மாத்தி மாத்தி காறி துப்பிக்கிறோம், நீங்க சொன்ன மாதிரி சிலர்/பலர்னு போட்டா கூட தாக்கம் கம்மியா இருக்கும்னுதான் நானும் நினைக்கிறேன்

கார்த்தி said...

நல்ல யோசிக்கவேண்டிய விடயம்!!! நானும் பல இடங்களில் பிழை விடுவது போல கிடக்கு! மற்றது நீயா நானா? ரீஆர்பி றேரிங்குங்கு மட்டும்தான் நடாத்தப்படுகிறது. நீங்கள் சொல்வது போல இவங்களும் பல நீறு பூத்த பிரச்சனையை எரிக்க வைக்கிறாங்கதான்...

Vetirmagal said...

ஸ்டீரியொடைபிங் என்பது தானா?
காதலில் தோல்வி அடைந்ததால் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் மோசம் என்று கூறி, வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்தார் என் உறவினர்.

அந்தம்மாவோ, திருமணம் ஆன பிறகு, வேலைக்கு போவேன் என்று ஒரே அடம். மோதலில் நிற்கிறது.

டீ.வீ காட்சிகள், அநாவசியமாக மக்கள் மனதை குழப்பும் போது, மக்கள் அதனை புகார் செய்ய வழிகள் இல்லையா, தெரியவில்லை.

நல்ல பதிவிற்கு நன்றி.

thalarajesh said...

அருமையான பதிவு ஜீவதர்ஷன் .....you have written very well. i liked it.

rajesh. v

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)