2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 இல் தமிழ் சினிமா வணிகரீதியாகவும், தரமான படைப்புக்களை கொடுத்த வகையிலும் சற்றே பின்தங்கி இருந்தாலும் 2011 இலும் பல தரமான மற்றும் வணிகரீதியான வெற்றிகள் தமிழ் சினிமாவில் கிடைக்கப் பெற்றதை மறுக்க முடியாது. 2012 இல் காலடி எடுத்துவைக்கும் இந்த நேரத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள் பற்றிய ஒரு சிறு அலசல்தான் இப்பதிவு........
* 2010 ஆம் ஆண்டிற்காக இவ்வாண்டின் ஆரம்பத்தில் 13 தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது மிகப்பெரும் சாதனை; இந்த சாதனை எதிர்காலத்திலும் தொடரும் என நம்பலாம்!!!
திரைப்படங்கள்
* 2011ஆம் ஆண்டு தை 1 முதல் தற்போதுவரை (மார்கழி 25 வரை) மொத்தமாக 126 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக ஆவணி மாதத்தில் 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக கார்த்திகை மாதம் 8 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தை, சித்திரை, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தலா ஒரு கிழமை தவிர்த்து மிகுதி அனைத்து கிழமைகளிலும் குறைந்தது ஒரு திரைப்படமேனும் வெளிவந்தது.
* இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'; வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 'மங்காத்தா' 2011 இல் வணிகரீதியில் வெற்றிபெற்ற முதன்மையான திரைப்படம். அதேபோல கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகப்படியான லாபம் கொடுத்த மற்றுமொரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படம். இவற்றுடன் கார்த்தியின் 'சிறுத்தை', லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' இரண்டும் வணிகரீதியில் மிகச்சிறந்த வரவேற்ப்பை பெற்ற மற்றைய திரைப்படங்கள். இவை தவிர விமர்சன ரீதியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுக்கொண்ட 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வணிகரீதியில் மிகச்சிறந்த வசூலை அள்ளிய முக்கிய திரைப்படம்.
* சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜயின் 'வேலாயுதம்' திரைப்படங்கள் விமர்சனரீதியிலும், வணிக ரீதியிலும் மிக்ஸ் ரிப்போட்டை கொடுத்தாலும் அந்ததந்த தரப்புக்களால் மட்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட திரைப்படங்கள்; இவை இரண்டும் குறைந்தபட்சம் போட்ட பணத்தையும், விநியோகிஸ்தர்களது பணத்தையும் மீட்டுக்கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.
* இவை தவிர விமர்சனரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களான ஆடுகளம், தெய்வத்திருமகள், காவலன், வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம், யுத்தம் செய் போன்றவையும் அதிக லாபத்தை கொடுக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்ற திரைப்படங்கள். மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பு பெற்ற 'ஆரண்ய காண்டம்', 'வாகை சூடவா' திரைப்படங்கள் வணிகரீதியில் வரவேற்ப்பை பெறாத திரைப்படங்கள்...
* நடுநிசி நாய்கள், அவன் இவன், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய முக்கிய திரைப்படங்கள். (ராஜபாட்டை, ஒஸ்தி இரண்டும் தற்போது ஓட்டிக்கொண்டிருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை வைத்தே இரண்டும் வணிக ரீதியில் ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது)
நடிகர்கள்
* இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் உச்சங்களான ரஜினி, கமல் இருவரது திரைப்படங்களும் வெளிவரவில்லை; 1975 இல் இருந்து ரஜினி, கமல் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரது திரைப்படமேனும் வெளிவராத ஆண்டாக 2011 அமைந்துவிட்டது.
* 2011 ஐ பொறுத்தவரை அஜித்திற்கு இது ஒரு கனவு ஆண்டு; 2007 பில்லாவிற்கு பின்னர் ஸ்திரமான வெற்றியை தேடிக்கொண்டிருந்த அஜித்திற்கும், அவர் ரசிகர்களுக்கும் 'மங்காத்தா' மிகத்திருப்தியான திரைப்படமாக அமைந்ததுடன் மிகச்சிறப்பான வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது.
* விஜயை பொறுத்தவரை இதற்கு முன்னைய 3 ஆண்டுகளைவிட 2011 சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது; காவலன் திரைப்படம் வழமைக்கு மாறான விஜய் திரைப்படமாக வெளிவந்து சுமாரான வசூலை பெற்றது; அடுத்து தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம் மிக்ஸ் ரிப்போட்டை பெற்றாலும் முதலுக்கும், விநியோகிச்தர்களுக்கும் மோசம் செய்திருக்காது என்று நம்பலாம் !!
* சூர்யாவிற்கு 7ஆம் அறிவு மட்டும்தான் 2011 இல் வெளிவந்த ஒரே திரைப்படம்; ஈழத்தமிழர் விடயத்தை கையிலெடுத்த விவகாரத்தால் சர்ச்சைகளும், மிக்ஸ் ரிப்போட் விமர்சனங்களும் 7ஆம் அறிவிற்கு எதிராக இருந்தாலும்; 7ஆம் அறிவு கணிசமான வசூலை வசூலித்தது; அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் முதலை மீட்க்கும் அளவிற்கு வசூல் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான்!! ஆனாலும் சென்னை பாக்ஸ் ஆபீசில் எந்திரன், சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து 9 கோடி இலக்கை தாண்டிய நான்காவது திரைப்படமாக 7ஆம் அறிவு தன்னை முன்னிறுத்தியுள்ளது.
* விக்ரமிற்கு அந்நியனுக்கு பின்னர் இன்னமும் ஒரு பெரிய ஹிட் கிடைத்தபாடில்லை; இருந்தாலும் விக்ரமிற்கு இந்தாண்டு ஓரளவு ஆறுதலாக 'தெய்வத்திருமகள்' மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதோடு கணிசமான வசூலையும் குவித்தது. ஆனாலும் தற்போது வெளியாகி இருக்கும் 'ராஜபாட்டை' வெற்றி பெறவோ, கணிசமான வசூலை குவிக்கவோ சாத்தியம் மிகமிக குறைவே!!!!
* தனுசிற்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டு; ஆடுகளத்திற்கு தேசியவிருது (2010) கிடைத்தது ஒரு சிறப்பென்றால்; தனுஸ் எழுதிப் படிய 'கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் ரீச் ஆகி இந்தியா இதுவரை காணாத வெற்றியை பெற்றது மிகப்பெரும் சாதனை. கூடவே 'மயக்கம் என்ன' திரைப்படத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிறப்பான நடிப்பும் தனுசிற்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் வேங்கை, மாப்பிள்ளை என இரண்டு கமர்சியல் திரைப்படங்களும் தனுசிற்கு தோல்வியையே கொடுத்தன.
* 'கோ' என்னும் மிகப்பெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த 'ஜீவா' இந்தாண்டு சிங்கம்புலி, வந்தான் வென்றான், ரௌத்திரம் என மூன்று தோல்விகளையும் கொடுத்துள்ளார்.
* 'வானம்' திரைப்படத்தில் கிடைத்த பெயரை 'ஒஸ்தி' திரைப்படத்தில் சிம்பு கோட்டைவிட்டிருந்தார்.
* 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தாண்டு பிரஷாந்த் நடித்த 'பொன்னர் ஷங்கர்' மற்றும் 'மம்பட்டியான்' என இரு திரைப்படங்களும் ஓரளவு பெரும் பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டது; பொன்னர் ஷங்கர் புஸ்வானமாக போனாலும் மம்பட்டியான ஓரளவு சுமாராக போகின்றது......
* விஷாலுக்கு அவன் இவன், வெடி என நடித்த இரு திரைப்படங்களும் காலை வாரினாலும், அவன் இவனில் விஷாலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
* ஆரியா, ஜெயம்ரவி, பரத், விமல் போன்றோருக்கு 2011 கைகொடுக்கவில்லை; 2010 இல் அதிக திரைப்படங்களில் சொதப்பிய ஜெய் 2011 இல் நடித்த ஒரே திரைப்படமான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரையும் வசூலையும் கொடுத்தது.
* விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்ற மூத்த நடிகர்களது திரைப்படங்கள் எவையும் (கதாநாயகர்களாக) வெளியாகவில்லை; நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்தீபன் நடித்த 'வித்தகன்' அவருக்கு கை கொடுக்கவில்லை.
நடிகைகள்
* திரிஷாக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணென்று 2011 இல் 'மங்காத்தா'மட்டும்தான்; படத்தில் திரிஷாவிற்கு அதிகம் வேலையில்லாவிட்டாலும் கிடைத்ததை நிறைவாக செய்திருந்தார்.
* அசின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் காவலனில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியிருப்பார்; ஆனாலும் அவரது முகத்தில் முதுமை இழையோடியது அதிகமானவர்கள் குறிப்பிட்ட விடயம்.
* அனுஷ்கா இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது; 'வானம்' மற்றும் 'தெய்வதிருமகள்' திரைப்படங்கள்தான் அந்த இரு திரைப்படங்களும்.
* தமன்னாக்கு இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களில் சிறுத்தை ஹிட்டாகவும் வேங்கை பிளப்பாகவும் அமைந்தாலும் இரண்டிலும் அவருக்கு முக்கியத்துவம் குறைவே!!
* மூன்று நான்கு படங்களில் அஞ்சலி நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' இந்தாண்டின் சிறந்த நடிகைக்கான விருதை 'அஞ்சலிக்கு' ஆங்காங்கே பெற்றுக் கொடுக்கலாம்!!!
* 2011 இல் அதிகமான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாயகி பேபி 'சாரா', தெய்வதிருமகளில் நிலாவாக ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும் பித்துப் பிடிக்கவைத்த 'சாரா' இந்த ஆண்டுக்கான தேசியவிருதுப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார்.
* ஹன்சிகா இந்தாண்டு அறிமுகமாகி 'அழகால்' மட்டும் இளசுகளை கொள்ளை கொண்டு உச்சத்தை அடைந்தவர்; எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா அடுத்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடிகர்களால் ரெக்கமன்ட் செய்யப்படலாம் :-))
* இவர் தவிர 'மயக்கமென்ன' வில் கலக்கிய ரிச்சா, 'வாகைசூடவா' இனியா, '7 ஆம் அறிவு' ஸ்ருதிஹாசன், 'கோ' கார்த்திகா, ஆடுகளம் 'தப்சி' என இந்தாண்டு இளசுகளை கொள்ளைகொண்ட புதிய அறிமுகங்கள் அதிகம்.
இயக்குனர்கள்
* 2011 இல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணிரத்தினம், ஷங்கர் படங்கள் எவையும் வெளிவரவில்லை.
* இவர்களுக்கு அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்ட இயக்குனர் பாலாவின் 'அவன் இவன்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகினாலும் சரியாக போகாவில்லை.
* மற்றுமொரு முன்னணி இயக்குனர் A. R.முருகதாஸ் '7 ஆம் அறிவு' திரைப்படத்தை இயக்கியிருந்தார்; நிச்சயமாக அவர் எதிர்பார்ப்பை பூர்த்துசெயயவில்லை ஆயினும் திரைப்படம் தப்பித்துக்கொண்டது.
* ஆயிரத்தில் ஒருவன் சறுக்கலுக்கு பின்னர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன மிக்ஸ் ரிப்போட்டை விமர்சன ரீதியாக எதிர்கொண்டாலும் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்றது; வசூலிலும் பரவாயில்லை ரகம்.
* வெங்கட்பிரபு, வெற்றிமாறன், கே.வி.ஆனந்த், லாரன்ஸ் நால்வரும் இந்தாண்டு முத்திரையை பதித்த முக்கிய இயக்குனர்கள்.
* இந்தாண்டு புதிய இயக்குனர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை எனினும் 'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குனர் M.சரவணன் மிகச்சிறந்த புதிய இயக்குனராக அறியப்பட்டுள்ளார். தெலுங்கில் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் முதல்முதலாக 'வானம்' திரைப்படத்தை இயக்கிய கிரிஷும் கவனிக்கத்தக்கவர்.
* சித்திக், ராதாமோகன், மிஸ்க்கின் ஆகியோர் தமக்கே யுரிய பாணியில் சிறப்பாக இயக்கியிருந்த அதே நேரம்; பழமையான இயக்குனர்களான எஸ்.எ.சந்திரசேகர், P.வாசு இருவரும் இயக்கத்தில் சொதப்பியிருந்தனர்.
* கமர்சியல் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான தரணி, ஹரி போன்றோருக்கு இந்தாண்டு சரியாக அமையவில்லை.
* அதேபோல இந்தாண்டின் மிகப்பெரும் சொதப்பல்கள் சுசீந்திரன் (ராஜபாட்டை) & கௌதம் மேனன் (நடுநிசி நாய்கள்)
* கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படங்கள் எவையும் வெளிவரவில்லை; 1990 இல் இயக்குனராக அறிமுகமாகியது தொடக்கம் 2011, 2007, 2005 ஆம் ஆண்டுகளில் மட்டும்தான் ரவிக்குமார் படங்கள் வெளிவரவில்லை.
* பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல், வெடி இரு திரைப்படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவிய திரைப்படங்கள்
* அதிகம் விமர்சனத்தை சந்தித்த இயக்குனர் விஜய்; தெய்வத்திருமகனை I AM SAM திரைப்படத்தில் இருந்து ஆட்டையை போட்டதாக இவர்மீது சரமாரி தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிட்டது.
இசையமைப்பாளர்கள்
* A.R.ரஹுமான் இசையில் எந்த திரைப்படங்களும் இவ்வாண்டு வெளிவரவில்லை.
* இந்தாண்டின் இசையமைப்பாளர்களில் அதிகம் பிரகாசித்தவர் ஜீ.வி.பிராகாஷ்குமார்; 'ஆடுகளம்', 'தெய்வதிருமகள்', 'மயக்கம் என்ன' என இசையமைத்த மூன்று திரைப்படங்களிலும் பாடல்க்களும் சரி பின்னணி இசையும் சரி குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு மிகப்பெரும் பலம் சேர்த்தது.
* ஹாரிஸ் ஜெயராஜ் 'எங்கேயும் காதல்', 'கோ', '7 ஆம் அறிவு' என மூன்று திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்; இவற்றில் அதிகமான பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டவை; கோ திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னமோ ஏதோ' இவ்வாண்டில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று.
* யுவன்ஷங்கர் ராஜா வானம், அவன் இவன், மங்காத்தா, ஆரண்ய காண்டம், ராஜபாட்டை என ஐந்து திரைப்படங்களுக்கு 2011 இல் இசையமைத்திருந்தாலும் வழமையான யுவன் 2011 இல் மிஸ்ஸிங்.
* காவலன், சிறுத்தை, இளைஞன், சதுரங்கம் திரைப்படங்களுக்கு இச்யமைத்த வித்யாசாகர் இன்னமும் அவுட் ஒப் போம்தான்; இவற்றில் சதுரங்கம் பாடல்கள் 2006 இல் நல்ல வரவேற்ப்பை பெற்றபோதும் படம் வெளியாகியபோது கண்டுகொள்ளப்படவில்லை.
* வேலாயுதம் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு ஹிட் பாடல்களை கொடுத்தாலும் யுவன்யுவதி, சட்டப்படி குற்றம் திரைப்படங்கள் கண்டுகொள்ளப்படவில்லை
* புதிய அறிமுகங்களான 'எங்கேயும் எப்போதும்' சத்யா, 'வாகை சூடவா' முகமட் கிப்ரான் இருவரும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தனர்.
'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்திற்கு இசையமைத்த V.செல்வகணேஷ் 'குள்ளநரிக்கூட்டம்' திரைப்படத்திற்கும் சிறப்பான இசையை வழங்கியிருந்தார்
* மணிஷர்மா, தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, தினா, சுந்தர்.C .பாபு என பலரும் இந்தாண்டு இசையமைத்திருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை.
2011 இன் கௌரவம்
சிறந்த நடிகர்- தனுஷ் (ஆடுகளம் & மயக்கம் என்ன)
சிறப்பு பரிசு - ஜீவா (கோ)
சிறந்த நடிகை - சாரா (தெய்வத்திருமகள்)
சிறப்பு பரிசு - அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறப்பு பரிசு - ராதாமோகன் (பயணம்)
சிறந்த திரைப்படம் - எங்கேயும் எப்போதும் ( M.சரவணன்)
சிறப்பு பரிசு - வாகை சூடவா (A.சற்குணம்)
சிறந்த தயாரிப்பாளர் - A.R.முருகதாஸ் (எங்கேயும் எப்போதும்)
சிறப்பு பரிசு - எஸ்.பி.சரண் (ஆரண்யகாண்டம் )
சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிராகாஷ் (மயக்கம் என்ன)
சிறப்பு பரிசு - எங்கேயும் எப்போதும் (C.சத்யா)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ஓம் பிரகாஷ் (வாகை சூடவா)
சிறப்பு பரிசு - ராம்ஜி (மயக்கம் என்ன)
சிறந்த பட தொகுப்பு - அந்தோணி கொன்சால்வேஸ் (வானம்)
சிறப்பு பரிசு - கிஷோர் (எங்கேயும் எப்போதும், ஆடுகளம் & பயணம் )
சிறந்த திரைக்கதை - கே.வி.ஆனந்த் (கோ)
சிறப்பு பரிசு - தியாகராஜன் குமாரராஜா (ஆரண்யகாண்டம் )
சிறந்த வசன கர்த்தா - ராதாமோகன் (பயணம்)
சிறப்பு பரிசு - எங்கேயும் எப்போதும் ( M.சரவணன்)
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் ( ஆரிரோ ஆராரிரோ, தெய்வத்திருமகள்)
சிறப்பு பரிசு - சினேகன் (யாத்தே யாத்தே, ஆடுகளம்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (தெய்வதிருமகள், வானம்)
சிறப்பு பரிசு - சாம் (பயணம்)
சிறந்த வில்லன் நடிகர் - Johnny Tri Nguyen (7 ஆம் அறிவு )
சிறப்பு பரிசு - அஜ்மல் (கோ)
சிறந்த குணச்சித்திர நடிகர் - V. I. S. ஜெயபாலன் (ஆடுகளம்)
சிறப்பு பரிசு - கோவை சரளா (காஞ்சனா)
சிறந்த சண்டை பயிற்சியாளர் - பீட்டர் ஹெயின் (7 ஆம் அறிவு)
சிறப்பு பரிசு - சூப்பர் சுப்பிராயன் (அவன் இவன்)
சிறந்த பாடகர் - கார்த்திக் (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரி கூட்டம்)
சிறப்பு பரிசு - M.L.R.கார்த்திகேயன் (கன்னித்தீவு பெண்ணா, யுத்தம் செய்)
சிறந்த பாடகி- சின்மயி (சர சர சாரகாத்து, வாகை சூடவா)
சிறப்பு பரிசு- சைந்தவி (பிறை தேடும், மயக்கம் என்ன)
* சென்ற ஆண்டு எழுதிய 2010 க்கான அதே டெம்லேட்டை மாற்றி எழுதியதால் ஐந்து மணி நேரத்தில் எழுதி முடித்திட்டேன் :p
பிற்ச்சேர்க்கை
ஆண்டின் இறுதியில் வெளியாகிய 'மௌனகுரு' திரைப்படம் சிறந்த வரவேற்ப்பை பெற்று; விமர்சன ரீதியிலும் வணிகரீதியிலும் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது.....
19 பின்னூட்டல்கள்:
hey....... sirantha villan AJITH sir ellaiyaa?
// சிறந்த நடிகை - சாரா (தெய்வத்திருமகள்)//
ஜீவதர்ஷன் சிறந்த நடிகையா குழந்தை நட்சத்திரமா!
விரிவான ரிப்போர்ட்டா கொடுத்து இருக்கீங்க :-) 7 ஆம் அறிவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அந்த அளவு வரவில்லை என்பது எனக்கு ஏமாற்றம் தான். இசை கூட சரியில்லை வழக்கமான ஹாரிஸ் இசையாக இல்லை. அவன் இவன் கூட ஏமாற்றம் தான்.
இந்த ஆண்டில் எனக்கு ரொம்பப் பிடித்த படம் ஆடுகளம் அதன் பின் இங்கேயும் எப்போதும். இந்த ஆண்டில் பல படங்கள் அனைத்துப் பாடல்களுமே ஹிட் ஆகி இருக்கிறது.. கோ ஆடுகளம் எங்கேயும் எப்போதும் எங்கேயும் காதல் வேலாயுதம் மயக்கம் என்ன வானம் மங்காத்தா இதில் சிறப்பு அனைத்துப் பாடல்களுமே ஹிட் என்பது தான்.
அனைத்து தகவல்களையும் உறுதி செய்து விட்டு தரவும். நம்பலாம், எதிர்பார்க்கலாம் போன்றவற்றை தவிர்க்கவும். வேலாயுதம் போட்ட முதலீட்டைவிட இருமடங்கு இலாபம் ஈட்டியுள்ளது. தகவலை திருத்தி கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.
நல்ல அலசல் மாப்ள!
இளசுகளை கொள்ளை கொண்ட கொள்ளை கொண்ட எண்டு சொன்னீங்களே அது என்னை தானே'?
:)
ஜெயா டிவி பிலிம் அவார்ட்ஸ் இல் வேலாயுதம் ப்ரொடியூசர் ஆஸ்கார் ரவிக்கு சிறந்த தயாரிப்பாளர் விருது கொடுக்கும் போது எனக்கு ஞாபகம் வந்து போனது எங்கேயும் எப்போதும் முருகதாஸ் தான்..
தம்மன்னாவை விட ரிச்சா ஹன்சிகாவுக்கு அடுத்த ஆண்டு நல்லா இருக்கும்னு தோணுது...காஜல் அகர்வாலும் கூட.
சண்டை பயிற்சியாளர் சிறப்பு பரிசாவது வேலாயுதத்துக்கு போயிருக்க வேண்டும்!
சிறப்பான பார்வை..வாழ்த்துக்கள் !
AJITH ONLY SUPER HERO IN 2011
If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.
\\2010 ஆம் ஆண்டிற்காக இவ்வாண்டின் ஆரம்பத்தில் 13 தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது மிகப்பெரும் சாதனை\\ வாவ்!!
\\ இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா';\\ ??????? "மங்காத்த படம் பெரிய எதிர்பார்ப்புகளோட வந்துச்சு, ஆனா அது வந்த இடமும் தெரியலை, போன இடமும் தெரியலை"-லண்டன் BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.
[கீழே உள்ள லிங்கில் செவ்வி (Interview) உள்ளது, எட்டாவது நிமிடத்தில் அவர் மங்காத்தா பற்றி பேசுகிறார்!!
http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2011/11/111124_kolaveri.shtml
\\2011 இல் அதிகமான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாயகி பேபி 'சாரா', தெய்வதிருமகளில் நிலாவாக ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும் பித்துப் பிடிக்கவைத்த 'சாரா' இந்த ஆண்டுக்கான தேசியவிருதுப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார். \\ இந்தப் படத்தின் கதை திருடப்பட்டது என்று தெரிய வந்த பின்னர், மனதுக்கு இந்தப் படத்தின் பிளஸ்கள் எல்லாம் மைனஸ்களாக ஆகிவிட்டது. எதையுமே ரசிக்க முடியவில்லை. இந்த மாதிரி பேர்வழிகளுக்கு விருது கொடுப்பது திருடனுக்கு தங்க மெடல் கொடுத்த மாதிரி, விருதுக்கான மரியாதையே இல்லாது போகும்.
\\2011 இன் கௌரவம்\\ இவை எந்த விருதுகள்?
நம்மிருவர் ரசனைகளும் பெருமளவு ஒத்துப் போகிறது. எனது வரிசையை நான் விரைவில் போடுகிறேன். எந்த இடங்களில் மாறுகிறோம் எனப் பார்க்கலாம்.
@ Krish
அஜித் செய்தது நெகடிவ் ரோல், வில்லன் கேரக்டர் என்றால் ஹீரோன்னு யாரவது அந்த படத்தில இருக்கணும், அதனாலதான் அஜித் பெயரை சேர்க்கவில்லை.
..................................
@ கிரி
ராரா சமீம்பரில் அந்த சின்னப்பையனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கொடுத்தபோது; சிறந்த நடிகர் விருது தரவில்லை என்று அவன் கோபித்துக் கொண்டதுபோல, நாளை சாரா கோபித்துக் கொள்ளக் கூடாதில்ல :-)) அதுதவிர அந்த திரைப்படத்தின் நாயகியும் அவர்தானே !!!
.....................
@ Lollu Guru
எனக்குமட்டும் உறுதியான தகவல்களை வழங்க விருப்பம் இல்லையா என்ன? விஜய் படங்களுக்கு அது சாத்தியமான்னு எனக்கு தெரியல!!!! மீடியாவே தோல்வின்னு சொன்ன 'சச்சின்' திரைப்படத்திற்கு 200 நாள் போஸ்டர் அடிச்சாங்க; உலகத்திற்கே ரிசல்ட் தெரிஞ்ச 'குருவி' திரைப்படத்திற்கு 150 நாள் விழா கொண்டாடினாங்க; வேட்டைக்காரன் திரைப்படம் வெளியாகி மறுநாளே பிரஸ்மீட் வச்சு வெற்றியாக்கியவங்களுக்கு நன்றி என்றாங்க; இப்ப வேலாயுதம் திரைப்படத்திற்கு மூன்றாம் நாளே வெற்றிவிழா கொண்டாடுறாங்க!!!!
இப்படி நிறைய முரண்பாடுகளை உண்டாக்குவது நாங்களல்ல, விஜய் மற்றும் அவர் சார்ந்த படக்குளுவினர்தான்!!! வேலாயுதம் மற்றும் 7 ஆம் அறிவிற்கு சம்பந்தப்பட்ட படக்குழுவினர் மாத்திரம் 80 கோடி, 90 கோடி வசூல் என்கிறார்களே தவிர யார் அதை உறுதிப்படுத்தினார்கள்?? மீடியாவில் வசூலிற்கு இன்னமும் மிக்ஸ் ரிப்போட் தான் கிடைக்கிறது. போக்கிரி, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, திருமலை திரைப்படங்களை ஒட்டுமொத்த மீடியாவும் வெற்றியாக ஏற்றுக்கொண்டன; ஆனால் வேலாயுதம் அப்படியா???
சென்னை மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் தவிர்த்து வேறு இடங்களில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவருவதில்லை, சென்னையில் வேலாயுதம் 8 கோடிகளையே இன்னமும் தாண்டவில்லை!!!!
40 கோடியில் ஒரு திரைப்படம் தயாரானால் அது 80 கோடி வசூலித்தால் இருமடங்கு லாபமா? 40 கோடி தயாரித்த திரைப்படம் விநியோகிஸ்தர்களுக்கு ஒரு தொகைக்கு விற்கப்படும் Or பங்கு லாபத்திற்கு விநியோகிக்கப்படும்; அதன் பின்னர் விநியோகிஸ்தர்களால் திரையரங்கிற்கு விற்பனை Or பங்கு Or வாடகைக்கு கொடுக்கப்படும்; அதன் பின்னர் திரையரங்க செலவுகள் போக வருவதுதான் லாபம். 40 கோடி பட்ஜெட் 80 கோடிக்கு ஓடினால் (உண்மையில் ஓடியிருந்தால்) அது இரட்டிப்பு லாபம் என்பது உங்கள் அறியாமை!!!
..............................
@ விக்கியுலகம்
நன்றிப்பா :p
..............................
@ மைந்தன் சிவா
ஹன்சிகா உண்காளுதாங்கிறதை இந்த வருசமாவது அந்தப் பொண்ணுகிட்ட சொல்லுங்க!!!! அப்புறம் ஜெயா டிவி விருதிற்கும் மத்த விருதுகளுக்கும் எப்பவுமே சம்மந்தம் இருந்ததில்லை!! இன்னும் நிறைய விருது நிகழ்ச்சிகள் இருக்கு அதில ஆஸ்காரை யாரும் கூப்பிடுவாங்க என்கிற நம்பிக்கை இல்லை :p 'அவன் இவன்' சண்டைக்காட்சிகள் பிரமாதமாக அமைந்திருந்தது அதனால்த்தான் வேலாயுதம் & மங்காத்தா மிஸ்ஸிங்!!
.............................
@ kathir
உண்மைதாங்க...
.............................
@ Jayadev தாஸ்
மங்காத்தா இவ்வாண்டின் blockbuster என்பதில் எந்த தமிழ், ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களும் சந்தேகம்கூட ஏற்ப்படுத்தவில்லை; தாங்கள் சொல்லிய வீடியோவில் அவர் சொல்வது நகைப்பிற்கிடமானது; ஏதோ தனிப்பட்ட பகைமையில் சொல்வதுபோன்றே தோன்றுகின்றது!!!! வந்தது போனது தெரியாத திரைப்படமா சென்னையில் 8.5 கோடிகளை வசூலித்தது !!!!! ஆண்டின் இறுதியில் மங்காத்தா வெற்றியை தாங்கள் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
கதை திருட்டிற்க்கு அந்த குழந்தையின் நடிப்பிற்கும் முடிச்சுப் போடாதீர்கள்!!!! அப்படி பார்த்தால் 'நாயகன்' திரைப்படத்தின் தேசிய விருதுகள் மீளப்பெறப்பட வேண்டியவையே!!!! அந்த குழந்தை I Am Sam ஒரிஜினலைகூட இம்மிட்டே செய்யவில்லை என்பதையும் மறக்க கூடாது!!!
அவனவன் விருது குடுக்கிறான் என்கிறதால இது 'இவன்' (அதுதாங்க நான்:p) கொடுத்த கௌரவம் (Not விருதுகள்) :p
...............
@ தர்ஷன்
நிச்சயமாக; நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
விமல் நடிச்ச தூங்காநகரமும் பறுவாயி்லாது வசுலை பெற்றது.
// வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்திற்கு இசையமைத்த V.செல்வநாயகம்
அவரின் பெயர் செல்வகணேஷ் சிறு தவறு விட்டுடீங்க.
ஒஸ்தி பறுவாயில்லை ரீதியாக வசுலை கொடுக்குறதெண்டு நினைச்சன்.
// புதிய அறிமுகங்களான 'எங்கேயும் எப்போதும்' சத்யா, 'வாகை சூடவா' முகமட் கிப்ரான் இருவரும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தனர்.
நானும் இருவரையும் ரசிச்சன்.
உங்க விருதுகளுடன் எனக்கு பூரண உடன்பாடு. 5மணிநேரத்திலயா. பாராட்டுக்கள். நான் கடந்த ராஜாபாட்டை பதிவை முதன்முதலில் 45நிமிடத்தில் எழுதினேன். :P
@ கார்த்தி
செல்வநாயகம் தற்போது செல்வகணேஷ் ஆக மாற்றப்பட்டுள்ளார்; சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
அருமையான அலசல் ... ஒரே ஒரு குறை மட்டுமே காஞ்சனாவில் பட்டைய கிளப்பிய கோவைசரளாவுக்கு சிறந்த நகைசுவை நடிகை என்று ஒரு கவுரவம் அளித்திருக்கலாம்...
\\அப்படி பார்த்தால் 'நாயகன்' திரைப்படத்தின் தேசிய விருதுகள் மீளப்பெறப்பட வேண்டியவையே!!!!\\ இவனுங்களுக்கு விருது கொடுத்ததே தண்டம் பாஸ்.
http://www.karundhel.com/2010/09/blog-post.html
http://www.karundhel.com/2010/10/blog-post_28.html
அழகிய தொகுப்பு ஜீவா. வானம், யுத்தம் செய் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியும் காண இயலவில்லை.
@ "ராஜா"
கோவை சரலாக்கு குணச்சித்திர நடிகை வழங்கப்படுள்ளது; மற்றும் பயணம் சாமை கௌரவிக்கனுமின்னு தோணிச்சு :p
..........................
@ Jayadev Das
செம காமடிப்பா :-)))
..........................
@ ! சிவகுமார் !
வனம் பாருங்க பிடிக்கும்....
Post a Comment
"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."
*******************
வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)