Wednesday, December 28, 2011

2011 இல் எனக்குப் பிடித்த திரைப்படங்கள் & திரையிசைப் பாடல்கள்

இந்தாண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். வசூல், படத்தின் தரம் இவை எதையும் கவனத்தில் கொண்டு இந்த வரிசைப்படுத்தல் இடம்பெறவில்லை; முழுக்க முழுக்க எனக்கு பிடித்த திரைப்படங்களின் வரிசைதான் இது. அதேபோல இந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் என்னை அதிகம் ஈர்த்த பாடல்களில் பத்து பாடல்களை பகிர்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ரசனை மாறுபடலாம்; உங்கள் இரசனைகளை பகிர நினைப்பவர்கள் கீழுள்ள கமன்ட் பெட்டியில் தங்களுக்கு பிடித்த வரிசையை பகிர்ந்து கொள்ளுங்கள் :p

2011 இல் பிடித்த 10 திரைப்படங்கள்


(10) டூ
இதுவொரு லோ பட்ஜெட் திரைப்படம்; 'பொட்டலம்' கார்த்தி சொல்லியிருக்காவிட்டால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டேன். DVD இல்த்தான் பார்த்தேன், பெரிதாக புதுமை என்றெல்லாம் ஒன்றுமில்லை, வழமையான கதைதான்; ஆனால் சுவாரசியமான திரைக்கதை, அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு, மிகச்சிறப்பான வசனங்கள் என நிறைவான திரைப்படம், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் பார்க்க நினைப்பவர்களுக்கு 'டூ' திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.....

(9) குள்ளநரிக் கூட்டம்
'விழிகளிலே விழிகளிலே' பாடலுக்காக பார்த்த திரைப்படம், முதல்ப்பாதி விறுவிறுப்பு, இரண்டாம்பாது சுமாராக இருந்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தவில்லை. விஸ்ணு மற்றும் ரம்யாவின் காதல்க் காட்சிகள் யாதார்த்தம் கலந்த கவிதை. அன்றாட வாழ்வின் நாம் சந்திக்கும் சில விடயங்களை சுவாரசியமாக திரைக்கதையில் நுளைத்திருப்பார் அறிமுக இயக்குனர் ஸ்ரீபால்ராஜ்.....

(8) காவலன்
2005 க்கு அப்புறம் எனக்கு எப்படி ஒரு விஜய் படம் பிடித்தது என்பது சத்தியமாக தெரியாது:p கிளைமாக்ஸ் தவிர்த்து மிகுதி எல்லாமே மிகவும் பிடித்திருந்தது. விஜயக்குள் இருக்கும் நடிகனை யாராவது எப்போதாவதுதான் தட்டி எழுப்புவார்கள் (விஜய்க்கு நடிக்கத் தெரியாது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்) இந்தத்தடவை சித்திக்கின் முறை, விஜயை சரியாக பயன்படுத்தியிருந்தார். வடிவேல் - விஜய் காமடி பட்டாசு; அசினின் முகம் முதுமையினை தொட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி நன்றாக தெரிந்தது; விஜயை பிடிக்காதவர்களுக்கும் காவலன் நிச்சயம் பிடிக்கும்!!

(7) மங்காத்தா
'தலை' ஆடிய மங்காத்தா, 'தலை'யால் மட்டுமே ஆடக்கூடிய மங்காத்தா பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்; மங்காத்தா - முழுக்க முழுக்க அஜித் ஆடிய 'ONE MAN SHOW'. நெகட்டிவ் ரோலுக்கு ரஜினிக்கு அப்புறம் அஜித்தான் என்பதை மீண்டுமொருதடவை மங்காத்தா உணர்த்தியது. லாஜிக் மறந்து பார்த்தால் மங்காத்தா ஒரு பக்கா கமர்சியல் விருந்து........

(6) கோ
கம்யூனிசம், ஈரவெங்காயம் என்று வெறுவாய் மெல்பவர்களை தவிர்த்து இந்தப்படம் யாருக்காவது பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்!! மிகமிக நேர்த்தியான திரைக்கதை, ஜீவாவின் சிறந்த on Screen Present, பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த திரைப்படம். கே.வி.ஆனந்த் தன்னை ஒரு சிறந்த கமர்சியல் இயக்குனராக இரண்டாவது தடவையாக நிரூபித்திருக்கின்றார்......

(5) வானம்
விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவைவிட வானம் சிம்பு என்னை அதிகமாக ஈர்த்துள்ளார்; ஐந்து கதைகளை குழப்பமில்லாமல் நேர்த்தியான திரைக்கதைமூலம் ஒன்று சேர்த்த இயக்குனர் க்ரிஷ் அடுத்த திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார். சந்தானம் அப்பாவித்தன கேரக்டரில் சிம்புவுடன் சேர்ந்து காமடியில் கலக்கியிருப்பார்; சிம்புவிற்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் பாஸினிற்கு கொடுக்கப்பட்ட குரலில் வசன உச்சரிப்பு நன்றாக இருக்கும்.....

(4) பயணம்
ராதாமோகன்; எனக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். விமர்சனங்கள் நேர்மறையாக வந்ததால் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி 'பயணம்' திரைப்படத்தை பார்த்தேன்; மிகவும் பிடித்துப்போனது. தன் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தீனி போடுவதில் ராதாமோகனை அடிச்சிக்க முடியாது; பயணத்திலும் அதை நீங்கள் உணரலாம், வழமைபோலவே ஷார்ப்பான வசனங்கள், கதையுடன் இழையோடும் நகைச்சுவை என 'பயணம்' ஒரு வித்தியாசமான அனுபவம்......

(3) தெய்வத்திருமகள்
தெய்வதிருமகள் I Am Sam திரைப்படத்தின் copy என்பது எனக்கு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதெல்லாம் தெரியாது; ஒரு நாவலை சுவாரசியமாக படித்த திருப்தியை கொடுத்த தெய்வத்திருமகள் COPY ஆக இருந்தாலும் இப்போதும் எனக்கு பிடித்த திரைப்படம்தான். விக்ரம் ஒரிஜினலை இமிடேட் செய்ததாக கூறினார்கள்; எனக்கு விக்ரம் நடிப்பு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது; சந்தானத்தின் காமடியும் செம டைமிங்; அப்புறம் 'நிலா'வாக பேபி சாரா, 'நிலா' கொள்ளை கொள்ளாத மனமேது? கிளைமாக்ஸ்சில் விக்ரம், சாராவின் எக்ஸ்பிறசனும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தாதவை......

(2) மயக்கம் என்ன
மயக்கம் என்ன; பக்கா செல்வராகவன் திரைப்படம், படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு முழுத் திருப்தியோடு வீடு திரும்பிய திரைப்படம். செல்வராகவன்மீது எனக்கு மிக அதிக எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும், அதை செல்வா 'மயக்கம் என்ன'வில் முழுமையாக நிவர்த்தி செய்திருந்தார். தனுஷ், ரிச்சா இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடிப்பில் திறமையை வெளிக்காடினார்கள் என்றால்; ஜி.வி.பிரகாஷும் ராம்ஜியும் இசையிலும் ஒளிப்பதிவிலும் மிகச்சிறந்த உழைப்பை கொட்டியிருந்தார்கள். வழமையான செல்வா படங்களைப்போல எதிர்மறை முடிவில்லாமல் நேர்மறை கிளைமாக்ஸ் இருந்தமை 'மயக்கம் என்ன'வின் சிறப்பு......

(1) ஆடுகளம்
ராதாமோகன் வரிசையில் எனக்கு பிடித்த மற்றுமொரு இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ஆடுகளம்' முழுத் திருப்தியை கொடுத்தது. தேசிய விருதுகளை அள்ளிக்கொட்டிய 'ஆடுகளம்'; விருதிற்கு முழுத் தகுதியானதே!!! படம் முழுவதும் வெற்றிமாறன் டச்; தனுஷ் - ஆண்டுக்கு ஆண்டு நடிப்பில் ஏற்ப்படும் வளர்ச்சி Power Play யில் ஷேவாக் அடிக்கும்போது இருக்கும் Run Rate Graph போன்றது, அசுர வளர்ச்சி!!! பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அமர்க்களப்படுத்திய ஆடுகளத்தின் Interval Blog படு பிரமாதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்த ஆடுகளத்தால் தமிழ் சினிமாவிற்கு பெருமை என்பது மகிழ்ச்சியே.

*---------------------*


2011 இல் பிடித்த பத்து பாடல்கள்


10) கன்னித்தீவு பொண்ணா
மிஸ்கின் திரைப்படங்களில் ஒரு பாட்டு (ஒரே பாணியில்த்தான்) எப்பவுமே அமர்க்களமாக நடன வடிவமைப்பு செய்யப்படுவது வழக்கம்; இம்முறையும் 'கன்னித்தீவு பொண்ணா' பாடலுக்கு அருமையான நடன வடிமைப்பை கொடுத்திருக்கிறார்கள்; இசையமைப்பாளர் யாரென்று தேடினால் வெறும் கே(K) என்றுதான் வருகிறது; பல குறும்படங்கள், டாக்குமெண்டரிகளுக்கு இசையமைத்தவராம், அவரது பெப்பியான இசையும் M.L.R.கார்த்த்கேயனின் குரலும் இந்த பாடலை முதல்த்தடவை கேட்டதுமுதல் முனுமுனுக்க வைத்தது......

(9) நங்காய் நிலாவின் தங்காய்
இந்த பாடலில் இசையையும் தாண்டி வெளிநாட்டு நடன கலைஞர்களின் நடனம் அட போட வைத்தது; இரண்டாவது சரணத்திற்கு ஜெயம் ரவி நடனமாடாமல் அதற்கும் வெளிநாட்டு கலைஞர்கள் ஆடியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்; அப்புறம் ஹென்சிகா........

(8) என்னமோ ஏதோ
ஹாரிஸின் அட்டகாசமான மெலடி; ஜீவா, கார்த்திகா, ஒளிப்பதிவு, சிம்பிளான நடன அசைவு என இந்தப் பாடல் பிடித்ததற்கு பல காரணங்கள்.....

(7) ஆரிரோ ஆராரிரோ
சுமாரான பாடலையும் தன குரலால் சூப்பராக மாற்றும் தந்திரம் தெரிந்த பாடகர் வரிசையில் ஹரிச்சரனுக்கும் இடமுண்டு; இந்த பாடலின் மெட்டு அருமை, அதை தன குரலால் ஹரிச்சரண் இன்னமும் சிறப்பாகியிருக்கிறார். ஹரிச்சரனின் குரல், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள், ஜி,வி.பிரகாஷ்குமாரின் இசை, விக்ரம் மற்றும் சாராவின் பெர்போமன்ஸ் போன்ற காரணங்களால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

(6) பிறை தேடும் இரவிலே
ஜி.வி.பிரகாஷ்குமாரின் கரியரில் மிகச்சிறந்த படல்களின் வரிசையில் இந்தப்பாடல் எப்போது இடம்பெற்றிருக்கும்; அருமையான மெட்டுக்கு சைந்தவியின் குரல் பலாச்சுளை மேல் தேனிட்டது போல தித்திப்பாக இருக்கும். காட்சிகளின் பின்னணியில் இசைக்கும் இந்தப்பாடலுக்கு; தகுந்த காட்சிகளை சரியான முறையில் தேர்ந்து கோர்த்திருப்பார்கள்......

(5) உன் பெயரே தெரியாது
இந்த பாடலில் மதுசிறியின் குரல் சிறப்பாக இருக்கும்; எனக்கு மதுசிறியை பிடிக்கா விட்டாலும் (காரணம் சாதனா குரலை இமிட்டேட் செய்வதால்) இந்த பாடலில் அவர் குரலில் தோ ஒரு கிறக்கம் ஏற்ப்பட்டத்தை தவிர்க்க முடியவில்லை. அனன்யாவும், பின்னணியில் இசைத்த பாடலுக்கு அமைக்கப்பட்ட காட்சி அமைப்பும் இந்த பாடலுக்கு கூடுதல் பலம்.

(4) ஹையையோ நெஞ்சு....
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை; எத்தனை பாடகர்கள் வந்தாலும் எஸ்.பி.பி எஸ்.பி.பிதான். தன் மகன் சரணுடன் இணைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடலின் பலமே அவரது கொஞ்சலான குரல்தான். இந்த பாடல் ஆரம்பிக்குமுன் வரும் இசை பிரமாதம்; கட்டிப்போடும் இசை, மயக்கும் குரல் என தித்திப்பாட பாடலை வழங்கிய ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு Hats Off.......

(3) யாத்தே யாத்தே
ஆடுகளத்தில் இருந்து இரண்டாவது தெரிவிது; "உன்னை வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா? இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா" வரிகளால் ஏற்ப்பட்ட ஈர்ப்பு, திரும்ப திரும்ப கேட்க்க கேட்க்க இசைமீதும் பிடிப்பை ஏற்ப்படுத்தியது; திரைப்படம் வந்த பின்னர் காட்சியமைப்பு பாடலுக்கு மேலும் பலத்தை உண்டாக்கியது; தனுசின் பெர்போமான்ஸ், வேல்றாஜ்சின் ஒளிப்பதிவு, அழகுப்பதுமையாய் தப்சி என இந்த பாடல் விஷுவலாகவும் கொள்ளை கொண்டது.......

(2) விழிகளிலே விழிகளிலே
'விழிகளிலே விழிகளிலே' பாடல் குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று; கார்த்திக், சின்மயி குரல்களில் V.செல்வகணேஷ் இசையில் சிறப்பான மெலடியாக 2011 இல் எனக்கு மிகவும் பிடித்த பாடலிதுதான். நாயகன் விஷ்ணு மற்றும் நாயகி ரம்யா இருவரின் பங்களிப்பில் விஷுவல் கூட யதார்த்தமாக இயல்பாக அமைந்திருக்கும்.

(1) சர சர சாரகாத்து


ஒரு பாடலை அதிகதடவை you tube இல் பார்த்திருப்பேன் என்றால் அது நிச்சயம் 'சரசர' பாடல்தான். கரணம் ஒளிப்பதவு, இசை, குரல், செட் (கலை), காஸ்டியூம், லொகேஷன் மற்றும் இனியா; இனியா கண்களால் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்..... சான்சே இல்லை, இன்றைய தேதியில் என்னோட பேவரிட் ஹீரோயின் "சர சர" பாடல் காட்சி 'இனியா'தான். சின்மயியின் குரலும் கேட்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்....(1*) கொலைவெறி


இந்தப் பாடலுக்குரிய திரைப்படம் இந்தாண்டு வெளிவரவில்லை, ஆனால் படக்குழுவினர் பாடலை உருவாக்குவது போன்று வெளியிடப்பட்ட இந்த பாடலின் வீடியோ உலகம் முழுவதும் அடைந்த பிரபலமும்; YouTube இல் பெற்ற நினைத்திக்கூட பார்க்கமுடியாத 'ஹிட்சும்', இந்த பாடலை தழுவி YouTube இல் வெளிவந்த ஏராளமான வேஷன்களும் அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றியால் தனுஷ் ரத்தன் டாடா, அமிதாப் வீடுகளில் விருந்திற்கு அழைக்கப்பட்டதும்; ஹிர்த்திக், அபிஷேக்கிற்கு கதை சொன்னதாகவும் கூறப்பட்டதும், இப்போது பிரதமர் வீட்டிலேயே விருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தியும் இந்தப்பாடலால் தனுசிற்கு கிடைத்த மிகப்பெரிய லாட்ரி என்றே சொல்லலாம் :-))

பாடல் வரிகள், தனுசின் குரல் என்பவற்றையும் தாண்டி Making Of The Song - Video உண்மையிலேயே ரசிக்கும்படியாக உள்ளது; அனைத்தையும் தாண்டி இசையும் சிறப்பாக அமைந்தது இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் (விதிவிலக்குகளைவிட) பிடித்த 'கொலைவெறி' எனக்கு பிடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை :p14 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

அது பொட்டலம் கார்த்திகன் இல்லை கார்த்தி :ப
தனுஷ் தான் ஆக்கிரமித்திருக்கிறார் முழுமையாய்.
ரெண்டு ஐட்டம் சாங் பிடிச்சிருக்கு..
வானம்-என்ன இருக்கோ தெரியல...
பயணம் உண்மையில் நல்ல படம்!!
தெய்வதிருமகள் ஏனோ பார்க்க பிடிக்கவில்லை..
சர சர பாட்டு புதுசு...
ம்ம்ம்

எப்பூடி.. said...

@ மைந்தன் சிவா

//அது பொட்டலம் கார்த்திகன் இல்லை கார்த்தி :ப//

பூவை பூவின்னும் சொல்லலாம், புஸ்பமின்னும் சொல்லலாம், புய்ப்பமின்னும் சொல்லலாம்; இருந்தாலும் அவர் பெயரில் இருந்து 'கன்' நீக்கப்பட்டுள்ளது:p

Unknown said...

நல்ல காலம்..இல்லாவிடில் "மின்னல்' வேகத்தில இவர் தான் ஆள்னு கண்டுபிடிச்சிருப்பாணுக :ப

என்னுடைய வரிசையில கோ'க்கு கட்டாயமாய் மூணாவது இடமாவது கொடுத்திருப்பேன்
ஆமா எங்கேயும் எப்போதும் பார்க்கவில்லையா இல்லை பிடிக்கவில்லையா?
அந்தப்படமும் எனது டாப் ஐந்தில் !!

எப்பூடி.. said...

@ மைந்தன் சிவா

//ஆமா எங்கேயும் எப்போதும் பார்க்கவில்லையா இல்லை பிடிக்கவில்லையா?//

நான் பார்த்துவிட்டேன், அது மிகச்சிறந்த திரைப்படம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை; ஆனால் காதல் காட்சிகளை ரசித்த அளவிற்கு விபத்தை ரசிக்க இயலவில்லை; படம் பார்த்த இரவு முழுவதும் ஏன் பார்த்தோம் என்றிருந்தது.......

தர்ஷன் said...

தங்கள் விருது பட்டியலுடன் எவ்வளவு ஒற்றுமைகள் இருந்ததோ அந்தளவுக்கு பிடித்த படங்கள் வரிசையில் வித்தியாசங்கள். இருக்கட்டும்

Unknown said...

நீங்கள் குறிப்பிட்ட டூ, குள்ளநரிக்கூட்டம், வானம் பார்க்கல! பார்க்க வேண்டும்!
முதலாமிடம் - ஆடுகளம்! இங்கதான் நிக்கிறீங்க பாஸ்! நம்மாளுங்க நிறையப்பேருக்கு அது புரியவே மாட்டேங்குது! நானும் சொல்லி டயர்ட் ஆகிட்டேன்! அதுக்கு தேசிய விருதான்னு இன்னும் புலம்பிற பயலுகள் இருக்கானுகள்! இந்த வருஷம் அல்ல! எப்போதுமே தமிழ் சினிமாவின் சிறந்த படமாக ஆடுகளம் இருக்கும்!

Unknown said...

தல உங்க வரிசைல டோட்டலா எல்லாமுமே பிடிச்சிருந்தது, ஆனா ஆரண்யகாண்டம் படம் ஏன் மிஸ்ஸாச்சின்னு தெரியல, அப்புறம் காவலன் படம் நல்லா இருக்குதுன்னு நான் விமர்சனம் எழுதுனப்ப நீங்க விஜய் படமே பார்க்க மாட்டேன்னு சொன்னீங்க, ஆனா மறுபடியும் பார்த்து உங்களுக்கும் அந்த படம் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோசம், அப்புறம் பிறை தேடும் நிலவிலே பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும், மயக்கம் என்ன படம் வொண்டர்புல் மீவி, ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது, ஆனா விமர்சனம் எழுதி நல்ல படத்த கெடுக்க வேணாம்னு விட்டுட்டேன்,

உங்களுக்கு ரொம்ப நாள் முன்னமே மெயில் அனுப்பினேன் பார்த்தீங்களா இல்லையான்னு தெரியல, எனவே அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்.
- சுரேஷ்

Unknown said...

குள்ள நரிக்கூட்டம் சுவாரஸ்யமான படம். போலீஸ் தேர்வு குறித்த காட்சிகளை நன்றாக படமாக்கி இருப்பார்கள். ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகாமல் போனது குறையே. ஹாரிஸ், யுவன் இருவரும் 2012 இல் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

எப்பூடி.. said...

@ தர்ஷன்

உங்களது பதிவை எதிர்பார்த்திருக்கிறேன் :p

...........................

@ ஜீ...

இரண்டையும் பாருங்க :p ஆடுகளம் எம்மவர்களில் பலருக்கும் புரியவில்லை :-(((

..........................

@ இரவு வானம்

மன்னிச்சிக்கோங்க தங்களது மெயிலை நான் பார்க்கவில்லை, உங்கள்ளுக்கு எனது நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்.

ஆரணியகாண்டம் நல்ல cd யில் பார்க்காததால் மனதில் ஒட்டவில்லை ( நல்ல திரைப்படம்தான்)


......................

@ ! சிவகுமார் !

ம்ம் ஆனாலும் எனக்கு இப்பெல்லாம் ஜி.வி.பிரகாஷ் மீது ஏனோ ஈடுபாடு அதிகம் :p

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

கார்த்தி said...

சார் எனக்கும் இப்பிடி படம் பாட்டு ஒட்டுமொத்தபாடல் அலபம் எண்டு வகைப்படுத்த ஆசைதான் ஆனா ஒழுங்க நேரம் எடுத்து பதியேலாம இருக்கு பாப்பம்!!
// வசூல், படத்தின் தரம் இவை எதையும் கவனத்தில் கொண்டு இந்த வரிசைப்படுத்தல் இடம்பெறவில்லை
இதுதான் தேவை..

எனக்கு காவலனில் நல்லா பிடிச்சதே கிளைமாக்ஸ்தான். ராதாமோகன் சொல்லிவேலையில்லை சார். எனக்கு ஆடுகளம் முதல் போட்டதில் சின்ன உறுத்தல் சுப்பர் படமெண்டாலும் எனக்கு முதல்இடம் கோதான் வரும். மற்றது குள்ளநரிக்கூட்டம் என்ர அப்பாவுக்கு நல்ல பிடிச்ச படம். அவருக்கு விஷ்ணுவின் நடிப்பு நல்லா பிடிச்சிருந்திச்சு

கார்த்தி said...

யுத்தம் செய் எங்க சார்? படலிஸ்டில வரலேயே....
உங்களுக்கும் ஹன்சிகா பிடிக்குதா??? பாடல் தெரிவுகள் எல்லாம் நல்லம்

எப்பூடி.. said...

@ கார்த்தி

யுத்தம் செய் பிடித்தது, ஆனால் top 10 இல் பத்து திரைப்படங்கள் மட்டுமே உள்ளடக்கலாம் :p

ஹன்சிகா......... புடிக்கும் ஆனா புடிக்காது :p

Harish said...

கொலைவெறி புடிக்குது... பாட்டும் பிடிக்குது.. இத படிக்கும் போதும் பிடிக்குது.. வரிசைகள் சூப்பர்...

மொபைல் போன் வைரஸ்..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)