Wednesday, September 21, 2011

ரா-ஒன்னில் ரஜினி நடிக்க வேண்டாமே!!!!!!

ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக ஒரு செய்தி உலாவி வருவது எல்லோரும் அறிந்தது. குறிப்பிட்ட திரைப்படத்தில் ஆபத்தில் இருக்கும் ஷாருக்கை ரஜினி காப்பாற்றுவது போல் ஒரு சிறு வேடத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவே அந்த செய்தி. இந்த செய்தி உண்மையாகும் சந்தர்ப்பம் உண்டெனின் படத்தின் மிகப்பெரும் மாஸ் ரஜினி அன்றி ஷாருக் அல்லவே; இதனால் இப்படியொரு காட்சியில் ரஜினி நடிப்பதை ஷாருக்கான் விரும்புவாரா என்பது மிகப்பெரும் சந்தேகமே. ஷாருக் விரும்புவது இருக்கட்டும் இந்த திரைப்படத்தில் நடிக்க ரஜினி ஒத்துக்கொள்வாரா? ரஜினி ரசிகர்கள் ரா-ஒன்னில் ரஜினி நடிப்பதை விரும்புவார்களா?

NDTV யின் INDIAN OF THE YEAR விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டபோது ஷாருக்கான் முகம் வாடி இருந்ததையும்; அங்கு பேசிய ரஜினி "அமிதாப் Emperor, நானும் ஷாருக்கும் king" என்று கூறிய சிறிது நேரத்தில் ரஜினியிடம் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் அமையவே "Empherer ஆகுவதற்கு என்ன செய்யவேண்டும்" என்று கேட்டதனையும் பார்த்தவர்களுக்கு ஷாருக் எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருக்கும். ரஜினிமீது பெரிதாக அபிப்பிராயம் கொண்டிராத ஷாருக் இறங்கி வருகிறார் என்றால் நிச்சயம் இதுவொரு ஷாருக்கானின் வியாபாரத்தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எந்திரன் ஆடியோ ரிலீசில் இருந்து பிரீமியர் ஷோ வரைக்கும் எதனையுமே கண்டுகொள்ளாத ஷாருக் இப்போது ரா-ஒன் மூலம் ரஜினியை கௌரவிக்கிறேன் என்று கூறுவது நம்பத் தகுந்தாற்போல் இல்லை!!!!ரஜினி நடிக்க மாட்டார் என்கின்ற நம்பிக்கையிலோ!! அல்லது ரஜினி நடித்தாற்கூட பரவாயில்லை படம் வசூலை அள்ளிக்கொட்டும் என்கின்ற திருப்தியுடனோ ஷாருக்கின் ஒப்புதலை வாங்கிய ரா-ஒன் படக்குழுவினர் ரஜினியை ரா-ஒன்னில் நடிக்கவைக்க அணுகியுள்ளனர். ரா-ஒன்னில் ரஜினி நடிக்காவிட்டாலும் இந்த செய்தி ஒன்றே ரா-ஒன் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்கு போதும், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் ரா-ஒன்ற்கு இதுவொரு மிகப்பெரும் ப்ரொமோஷன். சக் டே இந்தியா, ஓம் சாந்தி ஓம் திரைப்படங்களை ஓட்டவைக்க ஷாருக் இந்திய கிரிக்கட் அணிகூட சுற்றித்திரிந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது நினைவிருக்கலாம். ஷாருக் மட்டுமல்ல பல ஹிந்தி நடிகர்கள் தங்கள் படங்களை ப்ரோமோ பண்ணுவதற்கு கிரிக்கட்டை பயன்படுத்துவது ILP பார்த்தால் நன்றாக புரியும்.

ரா-ஒன்னில் ரஜினி நடித்தால் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு அது மாபெரும் கொண்டாட்டம்தான், அதேநேரம் ரா-ஒன்னின் வசூலுக்கும் மிகப்பெரும் பலம் (இதை வட இந்திய ஊடகங்களே குறிப்பிட்டுள்ளது). உடல்நலம் திரும்பிய ரஜினியை திரையில்க்காண எந்த ரஜினி ரசிகனுக்கு கசக்கும்? ஒவ்வொரு ரஜினி ரசிகனும் ரஜினியை காண (தரிசிக்க) ரா-ஒன் திரையிடப்படும் திரையரங்கிற்கு ஒரு தடவையேனும் நிச்சயம் செல்வான். தெற்கிலே மிகப்பெரும் வசூலை பெற்றால் ரா-ஒன்னால் இந்திய சினிமாவின் இன்றைய சாதனையான எந்திரனின் வசூலினை முறியடிக்கவும் வாய்ப்புண்டு; ரஜினியை வைத்தே ரஜினி படத்தின் வசூலை முறியடிக்க திட்டமிட்டிருக்கும் ரா-ஒன் படக்குழுவினரின் மிகப்பெரும் வியாபாரதந்திரமிது. இதனால்த்தான் தன் இமேஜையும் விட்டுக்கொடுக்க ஷாருக் சம்மதித்திருப்பார், இப்போது ரஜினி நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அது ரா-ஒன்னிக்கு பலம்தான்.ரஜினியை ஒவ்வொரு படத்திலும் புதுமையாய் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு; இப்போது உடல்நலக் குறைவிலிருந்து மறுபிறவி எடுத்திருக்கும் ரஜினியை பார்ப்பதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்? அந்த ஆர்வத்தை ஏன் இன்னொருவர் படத்திலே, அதிலும் சிறு வேடத்திற்கு வீணடிக்கவேண்டும்? எதற்கு ஷாருக்கிற்கு மாபெரும் ஓப்பினிங்கை ஏற்ப்படுத்திக் கொடுக்க வேண்டும்? முதல்முதலில் ராணாவில் ரஜினி திரையில் தோன்றினால் எத்தனை பெரிய ஓப்பினிங் கிடைக்கும்? படம் முழுவதும் எவ்வளவு பரவசம் கிடைக்கும்? ஷாருக் போன்ற ஒருவரின் சுயநலத்திற்காக ஏன் ரஜினி தனது விம்பத்தின் பெறுமதியை கொடுக்க வேண்டும்? என்னைக் கேட்டால் ரஜினி ஒருபோதும் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது, "ஏணியை நானிருந்து ஏமாற மாட்டேன்" என்கின்ற பாடல்வரியை தலைவர் பொய்யாக்கமாட்டார் என்றே நினைக்கின்றேன்; எனது விருப்பம்கூட அதுதான்.

ராணா இருக்க ரா-ஒன் எதற்கு ?


16 வாசகர் எண்ணங்கள்:

deen_uk said...

நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது..ஒரு உண்மையான ரஜினி ரசிகனின் மனநிலை வெளிப் படுத்தி இருக்கீங்க....நீங்க சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மையும் கூட..
என்னுடைய கருத்துப்படி தலைவர் இதில் நடிக்க மாட்டார் என நினைக்கிறேன்.இந்த படத்தின் விளம்பரத்துக்காக தலைவர் பெயர் பயன்படுத்தபட்டுள்ளது.அவர்கள் நினைத்த மார்க்கெட்டிங் நடந்தும் விட்டது! தலைவர் பெயர் பயன்படுத்தி இப்படத்தின் பெயர் பட்டிதொட்டியெல்லாம் பரவி விட்டது.! இந்த படம் பற்றி கேள்விப்பட்டு இல்லாதவர்களுக்கு கூட இந்த படம் பற்றி தெரிந்து விட்டது..காரணம் ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்..கண்டிப்பா படம் ஹிட் தான்..நம் ரசிகர்கள் யாரும் தலைவர் இதில் நடிப்பார் என எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்...ஒருவேளை தலைவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தாலும்,ஒரு ரஜினி ரசிகனாக எனக்கு அதில் விருப்பம் இல்லை..காரணம் தலைவர் இதில் நடித்தால்,ரோபோவை விட ஹிட் ஆகி விடும்.பலன் அனுபவிப்பர் தலைவர் அல்ல,,எஸ்.ஆர்..கே ..தான்.அது கூடாது.

Unknown said...

எதற்கு??

saro said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Press Meet Gallery

IlayaDhasan said...

எல்லாம் அவன் செயல்.

முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா

Thameez said...

இது அதிகார பூர்வமான அறிவிப்பு தான். ஆம் தலைவர் இதில் நடிக்கிறார்.

கிரி said...

தலைவர் நடிக்க மாட்டார். உடல் அளவில் இன்னும் தயாராகவில்லை என்று நினைக்கிறேன்.

பாலா said...

ரானாவே போதும் ரா ஒன் தேவை இல்லை என்பதே என் கருத்தும்.

N.H. Narasimma Prasad said...

சரியாக சொன்னீர்கள்.

முன்பனிக்காலம் said...

எந்திரன் மாதிரி ரயில் பைட் சீன் எல்லாம் இருக்காமே? ( ஷங்கர் கதை சொன்ன போது உருவின சீன் )

Unknown said...

உங்களது விருப்பம்தான் என்னுடையதும், ஆனாலும் தீங்கு செய்பவர்களுக்கு நன்மையே செய்யும் குணம்தான் தலைவருடையது, அதனால் உதவி செய்தாலும் செய்வார் என்று நினைக்கிறேன், எது எப்படி இருந்தாலும் தலைவரின் முடிவை ஏற்றுக் கொள்வோம்.

சீனுவாசன்.கு said...

கரெக்ட் தாம்பா நீ சொல்றது!

Philosophy Prabhakaran said...

ஷாருக் போதைக்கு ரஜினியை ஊறுகாயாக பயன்படுத்துகிறார்... இது தெரியாமல் இது ரஜினிக்கு கிடைத்த மரியாதைன்னு சிலர் நினைக்கிறார்கள்...

மனசாலி said...

\\\ரஜினியை ஒவ்வொரு படத்திலும் புதுமையாய் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு///

சும்மா காமெடி பண்ணாதீங்க.

எந்திரனின் வெற்றியை பிரமாண்டமான வெற்றியாக மாற்றியது . சன் டி வீ யும் கழக ஆட்சியுமே. அதற்காக அவர்கள் செய்த தில்லாலங்கடி வேலையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

ரஜினி நடித்தால் படம் உறுதியாக வெற்றி பெரும் என்ற கருத்தை பாபா, குசேலன் தோல்விக்கு பிறகும் மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.

எப்பூடி.. said...

@ MANASAALI

ரஜினிக்கு எந்திரன் முதல் வெற்றியல்ல, ரஜினியின் 150 திரைப்படங்களுடனும் சண்டிவியும் கழக ஆட்சியும் கூட இல்லை.

ரஜினி நடித்தால் படம் உறுதியாக ஓடுமென்று யாரும் சொல்லவில்லை, மாறாக ரஜினி நடித்தால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். படத்தின் ஓப்பினிங் பிரமாதமாக இருக்கும். நீங்கள் சொல்லும் பாபாவின் வசூலை அடுத்த தலைமுறை நடிகர்களது மாபெரும் வெற்றிப்படங்கள் கூட சந்திரமுகி வரும்வரை கடக்கவில்லை.

குசேலனின் ஓப்பினிங் சிவாஜி, தசாவதாராத்திற்க்கு அடுத்து மூன்றாவது இடத்தில்.

ரஜினி நடித்தால் படம் நிச்சயமாக வெற்றி பெறுமென்றில்லை, ஆனால் பிரம்மாண்டமான ஓப்பினிங் கிடைக்கும், குறிப்பிட்ட தொகைக்கு மினிமம் கரண்டி வசூல் கிடைக்கும். நீங்கள் குறிப்பிட்ட தோல்விப்படமான பாபா மற்றும் குசேலன் இதற்க்கு உதாரணம்.

எனக்கு ஒரு சந்தேகமென்னன்னா; இந்த பாபா, குசெலான் இல்லாவிட்டால் உங்கள் நிலைதான் என்ன??????

மனசாலி said...

நான் எழுதியதை நன்றாக கவனியுங்கள் நண்பரே.
\\\எந்திரனின் வெற்றியை பிரமாண்டமான வெற்றியாக மாற்றியது . சன் டி வீ யும் கழக ஆட்சியுமே///
சன் டி வி யும் கழக ஆட்சியும் இல்லாதிருந்தால். எந்திரன் வெற்றி அடைந்திருக்கும் "ரஜினியின் பிற படங்களைப் போல" ஆனால் பிரமாண்டமான வெற்றி நிச்சயம் கிடைத்திருக்காது.
எந்திரன் படம் திரையிடுவதற்காக மீறப்பட்ட விதிகள் மொத்தம் எத்தனை என்று தெரியுமா உங்களுக்கு? திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் கேளுங்கள். அவர்கள் வண்டி வண்டியாக சொல்லுவார்கள்.
அதை சன் நெட்வொர்க்கின் வியாபார தந்திரம் என்று நீங்க சொல்ல நினைத்தால். நான் உங்களை பற்றி வேறு விதமாக தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அல்லது ரஜினிக்காக சப்பை கட்டுகிறீர்கள்.

\\\குறிப்பிட்ட தொகைக்கு மினிமம் கரண்டி வசூல் கிடைக்கும். நீங்கள் குறிப்பிட்ட தோல்விப்படமான பாபா மற்றும் குசேலன் இதற்க்கு உதாரணம்///

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் குசலேன் படம் வெளியிட்டதால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை திருப்பிக் கொடுங்கள் என்று விநியோகம் செய்தவர்கள் ஏன் கே.பி வீட்டின் முன் நின்றார்கள்.

எப்பூடி.. said...

@ MANASAALI

மாறன் பிரதேஸ் தில்லுமுல்லு செய்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, எந்திரனின் பிரம்மாண்ட வெற்றியில் சன் நெட் வேர்க்கின் பங்கு உள்ளதை மறுக்கவில்லை, அதே நேரம் இதே சன் நெட்வேர்க் ரஜினி இல்லாமல் வேறு ஒரு ஹீரோவை நீங்கள் சொல்லும் விதி மீறல்களை செய்து இந்திய வசூலின் சாதனையை பாதியாவது தொட்டிருக்க முடியுமா?

சன் விநியோகிக்கும் அனைத்து படங்களுக்கு இதுவரை சன் விதி முறைகளை மீறித்தான் இருக்கிறது, அவற்றில் ஒன்று கூட எந்திரனின் பத்தில் ஒன்று கூட இல்லையே அது ஏன்? காரணம் ரஜினி. சன் இல்லாவிட்டால் எந்திரன் வசூலின் அளவு குறைந்திருக்கலாம், ஆனால் அது கணிசமான அளவே.

ஒவ்வொரு தடவையும் தமிழ் சினிமாவின் உச்ச வசூல் சாதனையான ரஜினி பட வசூலை அடுத்தடுத்ததாக வரும் ஒவ்வொரு ரஜினி படமும் முடியடித்துக்கொண்டுதான் வந்தன, சிவாஜி இந்தியாவின் அனைத்து திரைப்படங்களின் வசூலை தகர்த்த போது சன் கூட இல்லை, கழக ஆட்சி கூட இல்லை. இதையும் உங்களுக்கு தெரிந்த சினிமா வட்டாரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

குசேலன் திரைப்படம் கவிதாலயாவின் பேராசையால் அளவுக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டதன் விளைவுதான் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய நிலை. 25 % காட்சிகளில் ரஜினி நடித்த திரைப்படத்தை முழுமையான ரஜினி படமாக விளம்பரம் செய்த பிரமிட் சமீரா எப்படி போட்ட காசை எடுக்க முடியும்? அப்படி இருந்தும் பணத்தை திருப்பி கொடுத்தது ரஜினியின் பெருந்தன்மை.

அதேநேரம் குசேலனின் ஆரம்ப வசூல் (ஓப்பினிங்) அன்றைய தேதியில் சிவாஜி, தசாவதாரத்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தில், அதுதான் ரஜினி ஸ்பெஷல்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)