Thursday, September 15, 2011

சந்தானம் கைகளில் தமிழ்சினிமாவின் நகைச்சுவை....

தமிழ் சினிமாவிடமிருந்து பிரிக்கமுடியாத, பிரித்துப்பார்க்க முடியாத, எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கியமான அம்சம் நகைச்சுவை. என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம், சந்திரபாபு, பாலையா, நாகேஷ், தங்கவேலு, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், எஸ்.எஸ்.சந்திரன், வை.ஜி.மகேந்திரன், கோவை சரளா, சார்லி, வடிவேலு, விவேக், கருணாஸ், கஞ்சாகருப்பு, சந்தானம் போன்ற நகைச்சுவையில் தனிப்பெரும் பெயர்பெற்ற நகைச்சுவையாளர்களும் மேலே பெயர் குறிப்பிடாத குறைவான பாத்திரங்களில் நிறைவாக நகைச்சுவையை அள்ளித்தந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், எஸ்.வி .சேகர், தியாகு, பாண்டு, சின்னி ஜெயந்த், தாமு, வையாபுரி போன்றோரும் இத்தனை நாட்களாக தமிழ் சினிமாவை தாங்கிப்பிடித்த நகைச்சுவை தூண்கள் என்றால் அது மிகையான வார்த்தைகள் இல்லை.

எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்றைய தனுஸ் காலம்வரை தன்கூட ஒரு நகைச்சுவை நடிகரை துணை கொள்ளாத ஒரு பிரபல நடிகரை காட்ட முடியுமா? தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக திரைப்படங்களாக காலத்தால்மறக்க முடியாத எங்க வீட்டுப்பிள்ளையின் வெற்றிக்கு நாகேஷும், தில்லானா மோகனம்பாள் வெற்றிக்கு பாலையாவும், சந்திரமுகியின் வெற்றிக்கு வடிவேலுவும் முக்கியமான காரணகர்த்தாக்கள் என்பதை எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ, ரஜினியோ மறுக்கமுடியுமா? இத்தனைக்கும் மேலாக ஜனரஞ்சக சினிமாவின் அடையாளமாக வர்ணிக்கப்படும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் பிரபல நட்சத்திர பட்டாளமில்லாமல் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்; இதன் மாபெரும் வெற்றியின் மூலகர்த்தாக்கள் யார்? நாகேஷும் பாலையாவும்தான் என்பதை மறுக்கமுடியுமா?நடிகர்களை விடுத்து இயக்குனர்களை நோக்கினால்; ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுபட்ட இயக்குனர்களின் எண்ணங்களுக்கேற்ப நகைச்சுவை நடிகர்களும், நகைச்சுவையின் வடிவமும் மாறிக்கொண்டு போனதேயன்றி நகைச்சுவை நடிகர்களின் தேவை இல்லாது போகவில்லை. ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்தினம், ஷங்கர், பாலா, அமீர், சசிக்குமார் என தமிழ் சினிமாவில் புதுமைகளை நிகழ்த்திய அத்தனை இயக்குனர்களும் நம்பிய பொதுவான ஆயுதம் நகைச்சுவை/நகைச்சுவை நடிகர்கள். மேற்ப்படி இயக்குனர்களின் திரைவடிவம் அந்தந்த காலங்களில் புதுமையை ஏற்ப்படுத்தியது எவ்வளவு உண்மையோ; அவ்வளவுக் கவ்வளவு தமது படைப்புக்களை வெற்றியாக்க அவர்களுக்கு ஒரு நகைச்சுவை நடிகர் தேவைப்பட்டார் என்பதும் உண்மை.

60/70 களில் படத்தின் டைட்டில் போடப்படும்போது நாயகன், நாயகியின் பெயருக்கு அடுத்து 'சராசரி' சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெயர் நாகேஷ்; அதேபோலவே 80/90 களில் கவுண்டமணி செந்திலின் பெயர்களையும், 90 களின் பிற்பகுதிமுதல் கடந்த ஆண்டுவரை விவேக் அல்லது வடிவேல் பெயரையும், இப்போது சந்தானத்தின் பெயரையுமே 'சராசரி' சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். தனது திரைநாயகனுக்கு பாலாபிசேகம் செய்யும் ரசிகனும் தன் நாயகன் படத்தில் நகைச்சுவையை எதிர்பார்க்காமல் இருக்கமாட்டான்; ஒரு நகைச்சுவை நடிகன் தன் தலைவனுக்கு துணையாக திரைப்படத்தில் வேண்டும் என்பது அவனையும் அறியாமல் அவனுக்குள் இருக்கும் உணர்வு.ஒரு மாஸ் ஹீரோ என்பவனது பாத்திர விரிவாக்கம் என்ன? யாரும் செய்யாததை, எவரும் செய்ய முடியாததை செய்து முடிக்கும் அசகாய சூரன் என்று சொல்லலாமா? அந்த நாயகன் எது செய்தாலும் எதை பேசினாலும் அது வரவேற்ப்பை பெறும் என்று சொல்லலாமா? ஆமென்றால், குறிப்பிட்ட மாஸ் ஹீரோ என்கின்ற பட்டியலில் உச்சத்தில்ருக்கும் எம்.ஜி.ஆர், ரஜினி பெயருக்கு பக்கத்தில் கவுண்டமணியின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்; இப்படி சொல்வதால் எம்.ஜி.ஆர், ரஜினியை தரம் குறைப்பதாக என்ன வேண்டாம், இது கவுண்டருக்கு கொடுக்கும் உயர்ந்த அங்கீகாரம். இப்போது கவுண்டர் இண்டஸ்ரியில் இல்லை, அவரது form இல்லாமல்போய் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் மனிதர் தமிழ் சினிமா ரசிகர்களுடைய இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றார்.

இன்று ஒருவரை திட்ட வேண்டுமானால் கூட கவுண்டர் பின்னால் பதுங்கியிருந்து திட்டலாம், ஏனென்றால் கவுண்டர் திட்டினால் தப்பில்லை என்கின்ற அளவிற்கு கவுண்டருக்கு கிடைத்த அங்கீகாரம். கவுண்டரிடம் திட்டு அல்லது நக்கல் வாங்காத கவுண்டர் கூட நடித்த ஒரு நடிகரை சொல்ல முடியுமா? ரஜினி, கமல், மனோரமா, சிவகுமார், விஜயகுமார் போன்ற மூத்த நடிகர்களே கவுண்டருக்கு விதிவிலக்காக இல்லாதபோது ஏனையவர்களை சும்மாவா விட்டு வைத்திருப்பார் கவுண்டர்!!!! அடுத்தவங்களை அடித்தும் உதைத்தும் சிரிக்கவைத்தவர் கவுண்டர் என்றால்; அடுத்தவர்களிடம் அடி உதை வாங்கி சிரிக்கவைத்தவர் வடிவேல். கவுண்டரை எப்படி இளைஞர்களுக்கும் பெரியோவர்களுக்கும் பிடிக்குமோ அதேபோல வடிவேலை பிடிக்காத குழந்தைகளையும் வயதானவர்களையும் காண்பதரிது.இவர்கள் இருவரையும் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அதனை மறுப்பதற்கில்லை அதற்க்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம்; கவுண்டர் எல்லோரையும் அடிக்கிறார், வடிவேல் எல்லோரிடமும் அடிவாங்குகிறார் என்பதுதான். இவர்களை பிடிக்காததால் அவர்களுக்கு நகைச்சுவை பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை; அவர்களுக்கான வேறுபட்ட நகைச்சுவை தெரிவுகளாகத்தான் ஜனகராஜ், விவேக்...... வரிசையில் சக நகைச்சுவை நடிகர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் நாகேஷின் காலத்தின் பின்னர் கவுண்டமணி செந்திலும், அதன் பின்னர் வடிவேலுவும் ஆட்சி செய்ததுபோல வேறெந்த நகைச்சுவை நடிகரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை மறுக்க முடியாது.

இதுநாள்வரை நகைச்சுவைக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே பஞ்சம் ஏற்ப்படவில்லை என்பது ஆரோக்கியமான விடயமே; ஆனால் இது இனிவரும் காலங்களில் தொடருமா என்பதை மிகப்பெரும் சந்தேகமாகவே நோக்கவேண்டியுள்ளது!!! காரணம் வடிவேலுவினுடைய வாய்ப்புகள் அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் வீச்சு மிகப்பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. சந்தானம் தவிர வேறெந்த நகைச்சுவை நடிகரும் போமில் இல்லை; அதேநேரம் சந்தானம் தவிர வேறு யாரும் இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பிரிவை கொண்டுசெல்லும் நிலையிலும் இல்லை!!!!!!அதேநேரம் சந்தானத்தால் எதிர்காலங்களில் தமிழம் சினிமாவின் நகைச்சுவையை முழுமையாக திருப்திப்படுத்த முடியுமா? என்றால் அது சந்தேகம்தான். வளர்ந்துவரும் ஒரு நடிகரை அதைரியப்படுத்துவதாக எண்ணவேண்டாம். சந்தானத்தின் டைமிங் நகைச்சுவைகள் அபாரமானவை, அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் அனைத்துமே பிரமாதம்தான்; லொள்ளுசபாவின் அனுபவத்தையும் கவுண்டமணியில் பாதியையும் தன்னக்கத்தே கொண்டிருந்தாலும் சந்தானத்தின் நகைச்சுவைகள் 'அட' போட வைப்பவைதான். ஆனால் இளைஞர்களை தவிர சந்தானத்தின் நகைச்சுவைகளை புரிந்துகொள்ளும் தன்மை ஏனைய மட்டத்தினருக்கு இல்லை என்பதனையும் மறுக்க இயலாது.

எனக்கு புரிந்த, புரிகின்ற சந்தானத்தின் நகைச்சுவைகள் என் அம்மாவிற்கும், என் பாட்டிக்கும், சிறுவர்களுக்கும் புரியுமா என்றால் சந்தேகம்தான்!!!! இதனைத்தான் சந்தானத்திற்கும் கவுண்டமணி, வடிவேல் போன்றவர்களுக்குமிடையில் உள்ள வித்தியாசமாக குறிப்பிடவேண்டியுள்ளது. இதன்மூலம் சந்தானதினால் எல்லா மட்டத்தினரையும் திருப்திப்படுத்த முடியாது என்று சொல்லவரவில்லை; இனிவரும்காலங்களில் சந்தானம் எல்லா மட்டத்தினரையும் திருப்திப்படுத்த முயற்ச்சிக்கவேண்டும் என்பதற்காகவே இதை சொல்லவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் சிறுசுகளும் பெருசுகளும் வடிவேலு நகைச்சுவையினை சிரிப்பொலியில் பார்த்து ரசிக்கவேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் உருவாகும்.வடிவேல் இல்லாத தமிழ் சினிமாவில் இன்மேல் சிரிப்பு சரவெடியை கொளுத்தவேண்டிய பொறுப்பு சந்தானம் கைகளில் மட்டும்தான் இப்போதைக்கு உள்ளது, அடுத்த ஒருவரினை தமிழ்சினிமா நகைச்சுவைக்கென அடையாளம் காணும்வரை வரை தமிழ் சினிமாவின் நகைச்சுவையை தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு சந்தானத்திடமே. உதாரணமாக சொல்வதானால் ஒரு தொடர் ஓட்டப் போட்டியினை குறிப்பிடலாம்; அதாவது நாகேஷ் கவுண்டமணியிடம் கொடுத்த நகைச்சுவை என்னும் குச்சியை கவுண்டமணி வடிவேலிடம் கொடுத்தார், இப்போது வடிவேலு அதனை இப்போது சந்தானத்திடம் கொடுத்துள்ளார், அந்த குச்சியை இன்னொருவர் கைகளில் ஒப்படைக்கும்வரை அது சந்தானத்தின் கைகளில்த்தான் இருக்கப்போகின்றது!!!

அடுத்தவர் கைகளுக்கு குச்சி போகும்வரை அந்த குச்சியை பாதுகாப்பது சந்தானத்தின் கடமை, அதனை அவர் திறம்பட செய்வார் என்றே நம்புவோம்; அதற்காக அவர் இனிமேல் சில புதுமைகளை செய்யவேண்டியிருக்கும், அதனையும் அவர் செய்வார் என்றே நம்புவோம். 80 வருடங்களாக தமிழ் சினிமாவுடன் பின்னப்பட்டு கூடவே வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை என்கின்ற சிரிப்பு மந்திரம் இன்னும் 600 ஆண்டுகள் ஆனபின்னரும் தொடரவேண்டும். அதற்க்கு இன்னுமின்னும் புதிய இழந்த்தலைமுறை நகைச்சுவையாளர்கள் உருவாக/உருவாக்கப்பட வேண்டும்; நிச்சயமாக தமிழ் சினிமாவின் இன்றைய, நாளைய இயக்குனர்கள் இதனை செய்வார்கள் என்கின்ற நம்பிக்கை தமிழ்சினிமாவில் நகைச்சுவையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

13 வாசகர் எண்ணங்கள்:

M (Real Santhanam Fanz) said...

நெறயப்படங்கள் தலைவர நம்பித்தான்,

//சந்தானம் கைகளில் தமிழ்சினிமாவின் நகைச்சுவை.... //

தலைப்பே சும்மா அதிருதில்ல, இந்த ஒரு மேட்டருக்காகவே நாங்களும் உங்கள பின்தொடர்றோம்,
வாழ்த்துக்கள் சார், தலைவர் வாழ்க.

கேரளாக்காரன் said...

Mayilsamy missing kandain kadhalai movie comedy ellarum rasithanar

M (Real Santhanam Fanz) said...

//இளைஞர்களை தவிர சந்தானத்தின் நகைச்சுவைகளை புரிந்துகொள்ளும் தன்மை ஏனைய மட்டத்தினருக்கு இல்லை என்பதனையும் மறுக்க இயலாது. ///

அப்டின்னா ஒன்னு அடி வாங்கனும் இல்ல அடி கொடுக்கணும், ரெண்டையுமே பண்ணியாச்சு, இப்ப என்னதான் புதுசா பண்றது?

Unknown said...

ungalai vita, vera yaarum intha alavukku
sathagam,bathagam eduthu koora muyaathu.santhaanam ithai sariyaaga payan patuthinaal namakku nagaisuvai unarvai earpatuththalaam.pathivukku nandri & voteum.
malaithural.blogspot.comungalai vita, vera yaarum intha alavukku
sathagam,bathagam eduthu koora muyaathu.santhaanam ithai sariyaaga payan patuthinaal namakku nagaisuvai unarvai earpatuththalaam.pathivukku nandri & voteum.
malaithural.blogspot.com

Nirosh said...

வாங்க பாஸ்.... எப்படி அடிக்கடி வந்து போங்க.... நல்லதொரு அலசல் பதிவு.
வாழ்த்துக்கள்.!
தமிழ்மணம் 2

IlayaDhasan said...

சந்தானம் கூட தன்னை பத்தி இப்படி ஒரு சுய ஆராய்ச்சி பன்னிருப்பரன்னு தெரியல , அவ்வோல்வ் ஒரு டீப் போங்க

இத பாத்தீங்களா : சூர்யா படத்தில் விஜய் வில்லன்

அமுதா கிருஷ்ணா said...

நல்ல அலசல்.கரெக்டா சொன்னீங்க இப்ப டீனேஜில் உள்ளவர்களுக்கு தான் அவர் நகைச்சுவை புரிகிறது.

r.v.saravanan said...

அதாவது நாகேஷ் கவுண்டமணியிடம் கொடுத்த நகைச்சுவை என்னும் குச்சியை கவுண்டமணி வடிவேலிடம் கொடுத்தார், இப்போது வடிவேலு அதனை இப்போது சந்தானத்திடம் கொடுத்துள்ளார், அந்த குச்சியை இன்னொருவர் கைகளில் ஒப்படைக்கும்வரை அது சந்தானத்தின் கைகளில்த்தான் இருக்கப்போகின்றது!!!

அடுத்தவர் கைகளுக்கு குச்சி போகும்வரை அந்த குச்சியை பாதுகாப்பது சந்தானத்தின் கடமை,

நல்லா சொன்னீங்க நண்பா

N.H. Narasimma Prasad said...

ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

Jayadev Das said...

\\கவுண்டரிடம் திட்டு அல்லது நக்கல் வாங்காத கவுண்டர் கூட நடித்த ஒரு நடிகரை சொல்ல முடியுமா?\\ சொல்லலாமே!! ரஜினி... [இவரை எப்போதாவது கவுண்டர் திட்டியதாகவோ, நக்கல் செய்ததாகவோ நான் கேள்விப் பட்டவரை இல்லை இருந்தால் நீங்கள் சொல்லலாம்... . என் அனுபவமும் திரையுலகத் தொடர்புகளும் சொல்லிக்கொள்ளுமாறு எதுவுமில்லை என்ற உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்....!!]

Jayadev Das said...

\\வடிவேல் இல்லாத தமிழ் சினிமாவில் இன்மேல் சிரிப்பு சரவெடியை கொளுத்தவேண்டிய பொறுப்பு சந்தானம் கைகளில் மட்டும்தான் இப்போதைக்கு உள்ளது,\\ அடப் பாவிங்களா, முடிவே பண்ணிட்டீங்களா!! பாவமையா அவரு யார் யாரையோ கையைக் காலைப் பிடிச்சு திரும்ப நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு. புது படங்கள் வாய்ப்பைத் தான் கெடுத்துகிட்டாரே ஒழிய மார்கெட் டவுனாகி நடிப்பை குறைக்க வில்லை!!

Jayadev Das said...

கவுண்டமணி, விவேக்குக்கு அப்புறம் எனக்குப் பிடிச்ச காமெடி நடிகர் சந்தானம் தான். நகைச் சுவைத் திறன் நிறைய இருக்கு. உங்க எதிர்ப் பார்ப்பை பூர்த்தி செய்வாருன்னு நம்புவோம்!!

எப்பூடி.. said...

@ Jayadev Das

//இவரை எப்போதாவது கவுண்டர் திட்டியதாகவோ, நக்கல் செய்ததாகவோ நான் கேள்விப் பட்டவரை இல்லை இருந்தால் நீங்கள் சொல்லலாம்//

மன்னன், பாபா, உழைப்பாளி திரைப்படங்களில் கவுண்டர் ரஜினியை பல இடங்களில் கலாய்த்திருப்பார். நீ, நான் என்றுதான் ரஜினியை ஏக வசனத்தில் அழைத்திருப்பார்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)