Wednesday, September 14, 2011

எனக்குப் பிடித்த விஜய் தொலைக்காட்சி

"I Am Back" அப்டின்னு நான் சொன்னாக்கா; "கொய்யால இதையே எத்தனை தடவடா சொல்லுவா(ய்)" என்பதுதான் உங்க உடனடி ரியாக்ஷனா இருக்கும் என்கிறது எனக்கு நல்லாவே புரியுது. ஆனா இந்த வாட்டி ஒண்ணு ரெண்டு பதிவோட எஸ் ஆகாம வாரம் இரண்டு மூணு பதிவாவது எழுதணும் என்கிறது எண்ணம். அதனால ஏற்க்கனவே எழுதிய இந்தவார இருவர், ஹோலிவூட் ரவுண்டப், ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் போன்ற டெம்ளேட் பதிவுகளை வாராவாரம் எழுதலாமென்று நினைத்துள்ளேன்.

நேரம் போதாது என்பது ஒரு பிரச்சனை இல்லாவிட்டாலும்; தினமும் மாலையில் கிரிக்கட் விளையாடுவதால் உண்டாகும் உடற்க்களை மற்றும் பஞ்சி(சோம்பல்) பதிவெழுதும் ஆர்வத்தை இத்தனை நாளும் ஏற்ப்படுத்தவில்லை. ஆயினும் ஒரு சில நண்பர்களது பாசமான வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பதிவுகளை எழுதலாமென்று எண்ணியுள்ளேன்; என்னை மீண்டும் ஒருதடவை "I Am Back" சொல்ல வைக்காமல் எனது சோம்பேறித்தனம் எனக்கு ஒத்துழைக்கும் என்கின்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்........................you know i don't watch any Tamil channels; i watch only Discovery, national geography, Animal planet, BBC, CNN, MTV, ...... & sports channels அப்டிங்கிறவங்க அப்டியே அப்பீற்றாகிக்கோங்க, இந்த பதிவு தமிழ் சானல் பார்க்கும் என்னை மாதிரி ஆளுங்களுக்கானது.........

விளையாட்டு அலைவரிசைகள் மற்றும் பாடல் அலைவரிசைகள் தவிர்த்து நான் அதிகமாக பார்க்கும் தொலைக்காட்சி அலைவரிசை 'விஜய் தொலைக்காட்சி' எனப்படும் STAR VIJAY தொலைக்காட்சிதான்; விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல வேறெந்த தமிழ் அலைவரிசையிலும் வேறெந்த நிகழ்ச்சியையும் நான் இதுவரை ரசித்து பார்த்ததில்லை. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, சுப்பர் சிங்கர், ஜோடி NO 1 (சீசன் 1 & 2), லொள்ளு சபா, கனாக்காணும் காலங்கள், Coffee With Anu, கலக்கப் போவது யாரு, நீயா நானா, ரீல் பாதி ரியல் பாதி, அது இது எது என பல நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் நான் மிகவும் ரசித்து பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்.

இவற்றில் சில ரியாலிட்டி ஷோக்களின் நடவில் வரும் நாடகத்தன்மையான சர்ச்சைகள் (நடுவர்கள் vs போட்டியாளர்கள், போட்டியாளர்கள் vs போட்டியாளர்கள், நடுவர்கள் vs நடுவர்கள்) மற்றும் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க SMS அனுப்பச்சொல்லி மக்களை ஏமாற்றும் தில்லாலங்கடி வேலைகள் என்பன வெறுப்பை உண்டாக்கினாலும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் நன்கு ரசித்திருக்கின்றேன், இப்போதும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.இவற்றைவிட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் கூட நான் ரசித்து பார்த்திருக்கின்றேன். மெகா சீரியல் என்றாலே கிலியை ஏற்ப்படுத்திய காலப்பகுதியில் மதுரை, காதலிக்க நேரமில்லை என இரு தொடர்களை புதிய பரிமாணத்தில் மெகா சீரியலின் இலக்கணங்களை தகர்த்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகியது, ஆனால் காலப்போக்கில் மெகா சீரியலின் அடிப்படை குணாதிசயங்கள் உட்புகவே அந்த சீரியல்களின் தனித்தன்மை இல்லாது போய் அவையும் பத்தோடு பதினொன்றாகின.

அதன் பின்னரும் ஒரு நான்கைந்து சீரியல்கள் ஆரம்பத்தில் புதுமையாகவும் போகப்போக வளமான சீரியல்கல்போல வெறுமையாகவும் மாறின. இப்போதுகூட 'சரவணன் மீனாட்சி' என்கின்ற புதிய தொடர் ஒளிபரப்பாகின்றது, ஆரம்பம் அதகளமாகத்தான் இருக்கின்றது, ஆனால் போகப்போக 'வரவர மாமியார் கழுதைபோல' கதைபோலத்தான் இருக்கும் என்கின்றது எனது நம்பிக்கை. (விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களிலேயே மிகக் கேவலமான ஒன்று இப்போது ஒளிபரப்பப்பட்டுவரும் 'மகாராணி' தொடர்)

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், சீரியல்கள் போன்றவை பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பார்க்கப்பட்ட, பார்க்கப் படுகின்ற போதிலும் அவற்றில் வரும் சில மனிதர்கள் (போட்டியாளர்கள், கேரக்டர்கள், தொகுப்பாளர்கள்) மனதோடு ஒன்றித்து விடுகிறார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அல்லது சீரியல்கள் முடிவடைந்து சில ஆண்டுகள் கழித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் எமக்கு அன்று பிடித்த மனிதர்களை பார்க்கும் போது ஒரு புரியாத மகிழ்ச்சி ஏற்ப்படுகின்றது.இத்தனைக்கும் அவர்களை வெறித்தனாமாக நேசித்ததில்லை, ஆனால் நம் குடும்பத்தில் உள்ள ஒருவரை நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்தது போன்ற உணர்வு!!!! இது சரியா தவறா ? ஏன் எதற்கு? எப்படி? எதனால்? என்கின்ற கேள்விகளுக்கு பதிலை இதுவரை ஆராய்ந்ததில்லை, ஆராயவேண்டிய தேவையும் ஏற்ப்படவில்லை; காரணம் அந்த உணர்வு பிடித்திருந்தது, அவளவுதான்.

லொள்ளுசபா- ஜீவா, சுவாமிநாதன், மனோகர்
கலக்கப்போவது யாரு- சிவகார்த்திகேயன், கோகுல்நாத், உமா(கட்டதுரை சம்சாரம்:-))
ரீல் பாதி ரியல் பாதி- ஜெகன்
கனாக்காணும் காலங்கள்- பாண்டி, பச்சை, பாலா,ஜோ, வினித், ராகவி, சங்கவி
சூப்பர் சிங்கர்- விக்னேஷ், கிருஷ்ணமூர்த்தி, சாய் சரண், ராகினி ஸ்ரீ, பிரசன்னா, ஸ்ரீகாந்த், நித்ய ஸ்ரீ, பிரியங்கா, அல்கா, ஸ்ரீ நிஷா, பூஜா, சந்தோஷ்
ஜோடி NO 1- பிரேம், பூஜா;
இப்போதைய கனாக்காணும் காலங்களில் - பலர் (கிட்டத்தட்ட எல்லோருமே)
மதுரை(சீரியல்)- சரவணன், மீனாட்சி
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - விஜயன்

இப்படியாக பலரை விஜய் தொலைக்காட்சி ரசிக்க வைத்துள்ளது, இவர்களில் அதிகமானவர்களது விம்பம் நெடுநாட்கள் என்னுடன் பயணிக்கும் என்று எண்ணுகின்றேன். சினிமா நட்ச்சத்திரங்கள், விளையாட்டுவீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலருமறிந்த பிரபலங்களின் ஞாபகங்களுடன் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில், சீரியல்களில் தோன்றியவர்களது ஞாபகங்களும் சேர்ந்து வருவதென்பது அந்த நபர்களது வெற்றி என்பதையும் தாண்டி இது விஜய் தொலைக்காட்சியின் வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை. பல இளம் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் விஜய் தொலைக்காட்சிக்கு நிகராக வேறெந்த தமிழ் தொலைக்காட்சியுமில்லை என்று அடித்துக் கூறலாம்.தமிழ்த் திரைப்படங்களை பொறுத்தவரை மகா மொக்கையான திரைப்படங்களை அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பினாலும் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில மற்றும் சீனத் திரைப்படங்களை ஒளிபரப்பி அப்பப்போ ஒலக சினிமாவை பார்க்கும் வசதியையும் விஜய் தொலைக்காட்சி ஏற்ப்படுத்திக் கொடுத்ததுள்ளது. ஜாக்கிசான், புரூஸ்லி போன்றோரை போட்டோவில் மட்டுமே பார்த்திருந்த என்னை ஜாக்கிச்சான், புரூஸ்லி நடித்த படங்களில் பெரும்பாலான திரைப்படங்களை பார்க்கவைத்தது விஜய் தொலைக்காட்சிதான். விஜயில் எனக்கு பிடித்த இன்னுமொரு நிகழ்ச்சி 'நீயா நானா'; கோபிநாத்தை சில இடங்களில் பிடிக்காமல்போனாலும் அங்கு வரும் பலதரப்பட்ட மக்களின் பலவிதமான எண்ணங்களும், உணர்வுகளும் நடைமுறை வாழ்வின் ஜதார்த்தங்க்களை நிறையவே கற்றுக்கொடுக்கும்.

பலவிதமான நேர்மறையான விடயங்கள் விஜய் தொலைக்காட்சியில் எனக்கு பிடித்திருந்தாலும் ஒருசில எதிர்மறையான விடயங்களும் உள்ளதை மறுக்கவில்லை. அவற்றில் முக்கியமானது ஏற்க்கனவே ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள், திரைப்படங்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கழுத்தறுப்பது; சில திரைப்படங்கள் திரையரங்கில் ஓடியதிலும் பார்க்க விஜய் தொலைக்காட்சியில் அதிகநாட்கள் ஒளிபரப்பாகியுள்ளது. அடுத்து கலையரங்கிற்க்கு வரும் டம்மி பீசுகளையும் சூப்பர் ஸ்டார் ரேஞ்சிற்கு பில்டப் கொடுப்பது; ஒரு நடிகரை பற்றி நிகழ்ச்சி செய்வதென்றால் நிமிடத்திற்க்கொரு தடவை குறிப்பிட்ட நடிகரைப்பற்றி ஓவர் பில்டப் செய்து எரிச்சலை உண்டாக்குவது என சிலநேரங்களில் விஜய் தொலைக்காட்சி கடுப்பையும் ஏற்ப்படுத்துவதுண்டு. திரையிசைப் பாடல்கள், காமடி சீன்கள், சினிமா காட்சிகள் போன்றவற்றை விஜய் தொலைக்காட்சியில் காண்பது அரிதிலும் அரிது.

ஒருசில விடயங்கள் பிடிக்காவிட்டாலும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏனைய தமிழ் தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் பலபடி மேலே உள்ளது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை, சிலருக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். இப்போது சூப்பர் சிங்கர், கனாக்காணும் காலங்கள், அது இது எது என மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே விஜயில் என்னுடைய பேவரிட்; முன்புடன் ஒப்பிடும்போது இப்போது விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் தரமும், புதுமையும் குறைவடைந்து கொண்டு செல்வது மறுக்க முடியாதது. ஆனாலும் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு பிடித்தமான புதுமைகளை விஜய் தொலைக்காட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்கு சந்தோஷ் தெரிவாகிய மகிழ்ச்சியுடன் எழுதிய பதிவுதான் இது :-) , சந்தோஷ் இறுதிப் போட்டியில் ஜெயிக்காவிட்டாலும் அவரது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக அவரை இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்ததை எடுத்துக் கொள்ளலாம். யார் ஜெயித்தாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கு பிடித்த பெண் குரல் - பூஜா, ஆண் குரல் - சந்தோஷ்; இருவரும் இணைந்து மெலடி பாடினால் நன்றாக இருக்கும். இயக்குனர் பாலா மிகப்பெரிய 'சூப்பர் சிங்கர்' ரசிகர் என்பதால் அவரது அடுத்த திரைப்படத்தில் இந்த 'சூப்பர் சிங்கர்'களின் ஏதாவதொரு குரலையாவது எதிர்பார்க்கலாம்!!!!!

12 வாசகர் எண்ணங்கள்:

saro said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Press Meet Gallery

ம.தி.சுதா said...

ஃஃஃஃவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல வேறெந்த தமிழ் அலைவரிசையிலும் வேறெந்த நிகழ்ச்சியையும் நான் இதுவரை ரசித்து பார்த்ததில்லை.ஃஃஃஃ

இது உண்மை தான் காரணம் நீண்ட காலமாக நிகழ்ச்சித் தரத்தை தக்க வைத்துள்ள ஒரு தொலைக்காட்சியாகும் எமது பழைய ஊரில் மொழிமாற்றப்பட்த்திற்காக இதை ஆர்வத்தோடு பார்ப்பேன்..

பிரசன்னா கண்ணன் said...
This comment has been removed by the author.
Ramesh said...

// இந்த வாட்டி ஒண்ணு ரெண்டு பதிவோட எஸ் ஆகாம வாரம் இரண்டு மூணு பதிவாவது எழுதணும் என்கிறது எண்ணம். //

பாஸ் நீங்க எழுதணும் அது தான் எங்களுக்கு வேணும். :)

GANESH said...

நான் நினைப்பதும் இதுதான்.
நன்றி........

r.v.saravanan said...

ஒரு சில நண்பர்களது பாசமான வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பதிவுகளை எழுதலாமென்று எண்ணியுள்ளேன்

அந்த நண்பர்களில் நானும் ஒருவன்

r.v.saravanan said...

நானும் ஜாக்கி சான் படங்களை விஜய் தொலைகாட்சியில் தொடர்ந்து பார்ப்பேன்

Samantha said...

லொல்லு சபா போச்ச்ச்ச்ச்ச்சே :(

Jayadev Das said...

\\தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, சுப்பர் சிங்கர், ஜோடி NO 1 (சீசன் 1 & 2), லொள்ளு சபா, கனாக்காணும் காலங்கள், Coffee With Anu, கலக்கப் போவது யாரு, நீயா நானா, ரீல் பாதி ரியல் பாதி, அது இது எது என பல நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் நான் மிகவும் ரசித்து பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள். \\இந்த நிகழ்சிகளில் பெரும்பாலானவற்றை காப்பியடிப்பதற்க்கென்றே KD பிரதர்ஸ் தொலைகாட்சி இருக்கிறது, லவட்டிவிட்டு நாங்கதான் ஒரிஜினல் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிகொள்ளவும் செய்வார்கள்.

கார்த்தி said...

எனக்கும் மிகவும் பிடித்த தமிழ் தொலைக்காட்சி இதுதான்!! இவர்களின் பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிகளால் கொப்பி அடிக்கப்பட்டாலும் இவர்களின் தரம் என்றும் அசைக்கமுடியாதது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரவணன் மீனாட்சி இப்போ நல்லா இருக்கு :)

மனசாலி said...

எல்லாம் சரி. இப்போ கோபியை விட்ட வேற ஆளே இல்லையா? எல்லா நிகழ்ச்சியிலும் உள்ளே வர்றாரே. கமல் பரவாயில்லை போல.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)