Friday, July 15, 2011

ரஜினிகாந்திடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் சமயத்தில் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளும் அதற்க்கு ரஜினிகாந்த் கொடுக்கும் பதில்களும் என் கற்பனையில். (ரஜினியை பிடிக்காதவங்க தயவு செய்து இப்பவே எஸ் ஆயிடுங்க, அப்புறம் உங்க வயிறு மற்றும் 'பிற' பாகங்களில் ஏற்ப்படும் எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல)

ரஜினி இரு கைகளையும் தலைமேல் கூப்பி வணங்கியபடி உள்ளே வருகிறார், ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கிறார்கள், (சில நிமிடங்களில் அமைதி)

ரஜினி : எப்டி இருக்கிறீங்க ராஜாக்களா?

ரசிகன் : நீங்க எங்க முன்னாடி நேர்ல நிக்கிறதை பாக்கிறப்போ எங்களது இப்போதைய மனநிலை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது, இப்ப உங்க உடல்நிலை எப்படி இருக்கு ?

ரஜினி : உங்க வேண்டுதலாலும், மருத்துவர்களின் அக்கறையாலும், குடும்பத்தவர்களின் அரவணைப்பினாலும், அந்த ஆண்டவனோட ஆசியினாலும் ரொம்ப நல்லாயிருக்கேன்.

ரசிகன் : சிங்கப்பூர்ல ஓய்வெடுத்ததையும், இப்போ சென்னைக்கு திரும்பியதையும் எப்பிடி பீல் பண்ணிறீங்க?

ரஜினி : ம்ம்ம்.. சிங்கப்பூர்ல ரெஸ்ட் (Rest) எடுத்தது அழகிய பூங்காவில ஓய்வெடுத்த மாதிரியும், இப்ப சென்னையில வந்திறங்கியது அம்மா மடியில தலைவைச்சு படுத்திருக்கிற மாதிரியும் தோணுது.

ரசிகன் : உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போகுமின்னு எந்த ரசிகனுமே எதிர்பார்க்கல, எல்லோருமே உங்களை ஒரு Magic Man ஆகவே பார்க்கிறார்கள், யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போனதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

ரஜினி : ஹ.... ஹஹா...... இதுக்கு எப்டி பதில் சொல்றது, யெஸ்; இப்படி உடம்புக்கு முடியாம போகுமின்னு நான் நினைக்கல, பட் எது வந்தாலும் அதை தைரியமா பேஸ் பண்ணித்தானே ஆகணும் ஹ...ஹஹா....

ரசிகன் : சிங்கப்பூருக்கு போறதுக்கு முன்னாடி உங்க வாய்ஸை எங்களுக்காக ஆடியோவா கொடுத்தீங்க, அந்த வாய்ஸை கேட்டு கலங்காத எந்த ரசிகனுமே இருக்க மாட்டான்; அந்த நிலையிலயும் "பணம் வாங்கறேன் ஆக்ட் பண்றேன், அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கனா!!!!! உங்களுக்கு நான் என்னத்த கொடுக்கிறது" என்று சொன்னீங்களே சார், உங்களை மாதிரி ஒரு மனிதனுக்கு ரசிகனா இருக்க நாங்கதான் குடுத்துவைத்தவர்கள், நாங்க உங்க கிட்ட எதையுமே எதிர்பார்க்கல, நீங்க நல்லாயிருந்தா அதுவே போதும்.

ரஜினி : நோ.... நோ .... ஒரு வருசமா? இரண்டு வருசமா? 35 வருசமா என் கூடவே இருக்கிறீங்க, என் மேல நீங்க பிரியமா இருக்கிறது எனக்கு தெரிஞ்சதுதான், ஆனா எனக்கு உடம்புக்கு முடியாம போனப்போ நீங்க பட்ட அவஸ்தையை அறிந்தபோது என் மனதில தோன்றியதைத்தான் நான் சொன்னன். நிச்சயமா என் ரசிகர்கள் பெருமைப்படுறமாதிரி நான் நடந்துப்பேன்; கொஞ்சம் வெயிற் பண்ணுங்க ராஜாக்களா.

ரசிகன் : எங்களுக்கு எப்பவுமே உங்க ரசிகர்கள் என்கிறதில பெருமைதான், அதிலும் நாங்க உங்க கிட்ட வியந்து நோக்கும் ஒரு விடயம், உங்களை வலிந்து சிலர் சீண்டும்போதும் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் புன்னகைதான்!!!!!!!!!!!, எப்டி தலைவா உங்களால மட்டும் முடியிது ?

ரஜினி : ஹ.... ஹஹா..

ரசிகன் : நீங்க நோயில் இருந்து மீண்டதற்கு ரசிகர்களின் பிரார்த்தனைதான் முக்கிய காரணம் என்று கூறியதற்கு சில நாஸ்திகர்கள் அப்புறம் எதுக்கு மருத்துவமனைக்கு சென்றீர்கள் என்கிறார்கள்; அதற்க்கு உங்களுடைய பதில்தான் என்ன?

ரஜினி : ஒரு குட்டிக்கதை; ஒரு ஊர்ல ஒருத்தனுக்கு கடவுள் பேர்ல ரொம்ப பக்தி, எல்லாமே கடவுள் பாத்துக்குவாரெங்கிறது அவன் வாதம். ஒருநாள் மிகப்பெரிய வெள்ளம் ஊருக்க வந்திச்சு; ஊர்ல எல்லோருமே குடி பெயர்ந்தாங்க, இவன் மட்டும் கடவுள் காப்பாத்துவார் என்று சொல்லி அங்கேயே இருந்தான். அவன் காலளவில் வெள்ளம் வரும்போதும், இடுப்பளவில் வெள்ளம் வரும்போதும், கழுத்தளவில் வெள்ளம் வரும்போதும் பலபேர் அவனை தங்க கூட தப்பிச்சு வருமாறு கேட்டும் அவன் அசையவே இல்லை "என்னை கடவுள் காப்பாத்துவாரு" என்று சொல்லி சொல்லி கடைசியில இறந்தே போனான்.

இறந்தவன் நேரா கடவுள் கிட்ட போயி "உன்னை எவளவு நம்பினன் என்னை எமாத்தீட்டியே" என்று கேட்கிறான். அதுக்கு கடவுள் சொல்றாரு, பூமியில உள்ள எல்லாருக்குமே நான் நேரில் சென்று உதவுவது சாத்தியமா? உனது வேண்டுதலை ஏற்று உன்னை காப்பாற்றுவதற்காக நான் அனுப்பிய கருவிகள்தான் உன்னை காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு வெள்ளத்தில் மீட்க்கவந்த மனிதர்கள். நீ அவர்களை ஏற்றுக்கொள்ளாதது உன் தவறன்றி எனதல்ல என்றார்.

அதேபோலத்தான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் அனுப்பிய கருவிகள்தான் மருத்துவமனையும், டாக்டர்களும். உங்களது பிரார்த்தனை மட்டுமே என்னை காப்பாற்றும் என்று நான் வீட்டிலே இருப்பது வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனது செயலை போலல்லவா ஆகிவிடும்!!!!!!!!

ரசிகன் : ராணா?

ரஜினி : கண்டிப்பா ராணா வருவான், கொஞ்சம் லேட்டாகினாலும் லேட்டஸ்டா வருவான், ஹ.... ஹஹா......

ரசிகன் : அதிமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் எங்களுக்காக நீங்க சிரமப்படவேண்டாம், நீங்க ஸ்கிரீன்ல வந்தாலே போதும், உங்க உடல்நிலை எங்களுக்கு 'ராணா'விற் பெரிது.

ரசிகன் : நீங்கள் எங்களிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?

ரஜினி : கேள்வியல்ல ஒரு ஆச்சரியம்தான்; ஹ.... ஹஹா...... இவளவு கேள்வி கேட்டீங்க, அரசியலை பற்றி எதுவுமே கேட்கல; அதுதான் ஆச்சரியம்!!!!! ஹ.... ஹஹா.....

ரசிகன் : எங்களுக்கு இப்ப முக்கியம் உங்க உடல்நிலைதான், அரசியலுக்கு வருவது என்பது சாதாரண விடயமல்ல என்பது எமக்கு நன்கு தெரியும். எல்லாத்திற்க்குமே ஒரு நேரம் வரவேண்டும், நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான்.

ரசிகன் : இறுதியாக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ரஜினி : உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று தெரியல, ஆனா டெபினட்டா (Definite) நான் ஏற்க்கனவே சொன்ன மாதிரி நம்ம பான்ஸ் (Fans) எல்லோருமே தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி ஏதாவது பண்ணுவன். எல்லாருமே பெஸ்ட்டு (First) உங்கள கவனியுங்க, அப்புறம் உங்க குடும்பத்தை கவனியுங்க, நல்லதே நினைங்க, நல்லதே செய்யுங்க எல்லாமே நல்லதா அமையும், ஆண்டவன் இருக்கான், God bless You.

(ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டி அடிக்கிறார்கள்)


18 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

மாப்ள சந்தோஷ கொண்டாட்டத்தின் ஊடே உங்கள் பதிவு அருமை நன்றி!

Unknown said...

தலைவரு பதில்கள்" ஹஹஹா " கலக்கல்!!

ரா: அரசகுமாரன் said...

அருமையான பதிவு... இதையும் படிக்கவும் http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html

MANO நாஞ்சில் மனோ said...

ரஜினி : கண்டிப்பா ராணா வருவான், கொஞ்சம் லேட்டாகினாலும் லேட்டஸ்டா வருவான், ஹ.... ஹஹா...... //

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....

பாலா said...

கற்பனை என்று நம்ப முடியவில்லை... அருமை.

//எங்களுக்கு இப்ப முக்கியம் உங்க உடல்நிலைதான், அரசியலுக்கு வருவது என்பது சாதாரண விடயமல்ல என்பது எமக்கு நன்கு தெரியும். எல்லாத்திற்க்குமே ஒரு நேரம் வரவேண்டும், நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான்.

உண்மையான ரசிகன் ஒவ்வொருவரின் என்ன ஓட்டமும் இதுதான். இதேங்கே மற்றவர்களுக்கு தெரியபோகுது?

ADMIN said...

நல்ல பதிவு..ரஜினி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய வகையில் அமைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..!

ADMIN said...

அப்படியே இங்கனயும் வந்துப்போங்க..

தலைப்பு: கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப்படிகள்

இணைப்பு:

1. http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html

2. http://thangampalani.blogspot.com/2011/07/blog-post_4968.html (ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை)

Unknown said...

தல சூப்பர், ஒரிஜினல் பேட்டி மாதிரியே இருந்தது, தலைவர் வந்ததே போதும், அரசியல் எல்லாம் வேணாம்

K.s.s.Rajh said...

ரஜினி என்ற மனிதர் மீதான ரசிகர்களின் அன்பு என்றும் மாறப்போவது இல்லை.

@பாலா said...
//கற்பனை என்று நம்ப முடியவில்லை... அருமை//

பாலா அண்ணா சொன்ன மாதிரி கற்பனை என்று நம்பமுடியவில்லை...
அருமையான பதிவு.

Unknown said...

மறை கழன்ற மாதிரி உள்ளது

Anonymous said...

காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான். /////

இவன் தான் உண்மையான ரஜினி ரசிகன்

Anonymous said...

கற்பனை பதிவு மாதிரி தெரியலை... அவ்வளவு அருமை..

அதும் இந்த வார்த்தை...

///நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான். /////

இவன் தான் உண்மையான ரஜினி ரசிகன்

கார்த்தி said...

இப்ப நல்ல மகிழ்ச்சிதானே? ராணாவை எதிர்பாக்கிறன். தீபிகா அக்காவும் நடிக்கிறாவாம்!!

Napoo Sounthar said...

கலக்கல்..

deen_uk said...

கலக்கிட்டீங்க ஜீவதர்சன்!
இதில் அப்படியே தலைவர் ஸ்டைலில் குட்டி கதை வேறு! ம்ம்ம் கலக்குங்க கலக்குங்க!
தலைவரை பற்றி ஒவ்வொரு தலைவர் ரசிகனும் அணு அணுவாக புரிந்து வைத்து இருப்பதற்கு இந்த பதிவே சாட்சி!

Vaanathin Keezhe... said...

அந்தக் கதை அருமை தம்பி ஜீவன்!
-வினோ

r.v.saravanan said...

நண்பா தூள் கிளப்பிட்டீங்க எந்த இடத்திலும் இடறாமல் நிஜ உரையாடல் போலவே இருந்தது அதிலும் குட்டி கதை மூலம் ஒரு பதில் அது நச்

r.v.saravanan said...

அதே போல் அரசியல் பற்றிய கேள்விக்கு ரசிகன் சொல்வதாய் அமைந்த பதில் சூப்பர்

ஆம் நாம் அனைவரும் 1975 லிருந்தே தலைவர் ரசிகர்கள் அல்லவா

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)