Thursday, June 2, 2011

இளையராஜா இசையில் பிரபல நடிகர்கள்...........

தமிழிசை சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழிசை ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடுத்த பிறவியிலும் மானிடனாக பிறக்கவே ஆசைப்படுகிறேன், அதிலும் தமிழனாக, காரணம்; ' 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்த பிறவியில் உனது இசையை ரசித்து முடிக்க நாட்கள் போதாது'. "இருட்டினிலே நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு பிரிந்துவிடும்" என்றார் நா.முத்துகுமார்; என் 'நிழல்' என்னை விட்டு பிரிந்தாலும் உன் 'குழல்' என்னை விட்டு எப்போதும் பிரியாது.

இசைஞானி பிரபல நடிகர்களுக்கு இசையமைத்த திரைப்படங்களில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒவ்வொரு பாடலை இணைத்துள்ளேன், இந்த பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்களின் தெரிவு, ஒவ்வொருத்தருக்கும் பிடித்தமான பாடல் வேறுபடலாம். மகிழ்ச்சியான நாளில் சோகமான பாடல்கள் வேண்டாமே என்கின்ற நோக்கில் தெரிவு செய்த பாடல்களை மெலடிகளாக தேர்ந்தெடுத்துள்ளேன். பிடித்தவர்கள் கேட்டும் பார்த்தும் ரசிக்கலாம்.

இளையராஜா VS சிவாஜி கணேஷன்
திரைப்படம் - ரிஷிமூலம்
இளையராஜா VS ரஜினிகாந்த்
திரைப்படம் - தளபதி
இளையராஜா VS கமல்ஹாசன்
திரைப்படம் - உன்னால் முடியும் தம்பி
இளையராஜா VS விஜயகாந்த்
திரைப்படம் - அம்மன் கோவில் கிழக்காலே
இளையராஜா VS பிரபு
திரைப்படம் - சின்னத்தம்பி
இளையராஜா VS கார்த்திக்
திரைப்படம் - நந்தவனதேரு
இளையராஜா VS மோகன்
திரைப்படம் - தென்றலே என்னைத்தொடு
இளையராஜா VS சத்யராஜ்
திரைப்படம் - கடலோரக் கவிதைகள்
இளையராஜா VS முரளி
திரைப்படம் - பகல் நிலவு
இளையராஜா VS சிவகுமார்
திரைப்படம் - உனக்காகவே வாழ்கிறேன்
இளையராஜா VS ராஜ்கிரண்
திரைப்படம் - என் ராசாவின் மனசிலே
இளையராஜா VS பிரதாப்
திரைப்படம் - மூடுபனி
இளையராஜா VS மம்முட்டி
திரைப்படம் - மௌனம் சம்மதம்
இளையராஜா VS பார்த்தீபன்
திரைப்படம் - அழகி
இளையராஜா VS ராமராஜன்
திரைப்படம் - ஏங்க ஊரு பாட்டுக்காரன்
இளையராஜா VS பிரசாந்த்
திரைப்படம் - வண்ண வண்ண பூக்கள்
இளையராஜா VS வினித்
திரைப்படம் - ஆவாரம் பூ
இளையராஜா VS பிரபுதேவா
திரைப்படம் - ராசையா
இளையராஜா VS விக்ரம் & சூர்யா
திரைப்படம் - பிதாமகன்
இளையராஜா VS விஜய்
திரைப்படம் - காதலுக்கு மரியாதை
இளையராஜா VS ஸ்ரீகாந்த்
திரைப்படம் - மனசெல்லாம்
18 வாசகர் எண்ணங்கள்:

கார்த்தி said...

உண்மையில நாளைக்குதானே இவரது பிறந்ததினம். ஆனா பிறந்தநாளாக இன்று அறிவிக்கபடுகின்றமைக்கு கலைஞரின் பிறந்ததினம் நாளையாக இருப்பதுதானே காரணம்????

கார்த்தி said...

இதில் எனக்கு மிகவும் பிடித்தவை.... சுந்தரி கண்ணால் ஒரு சேதியும் இளங்காற்று வீசுதேயும்...

மாணவன் said...

இன்று இசைக்கு பிறந்தநாள்...

வாழ்த்தி வணங்குகிறேன் இசையின் கடவுளை...

ஷர்புதீன் said...

ilayaraaja, enakku cinemaavil pidiththa one of the TOP -5 personality.

hearty birthday wishes

மாணவன் said...

ராகதேவனின் பாடல்களை சிறப்பாக பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே :)

நிரூபன் said...

இளையாராஜாவின் பிறந்த நாளினை வரவேற்கும் வகையில் அவரது இசையில் அமைந்த பாடல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள், நன்றிகள் சகோ.

ஜில்தண்ணி said...

இசைக் கடவுளை ஆராதிக்கிறேன்

வீடியோக்கள் எல்லாம் செம செம :)

r.v.saravanan said...

நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாடல்கள் பகிர்வுக்கு நன்றி ஜீவதர்ஷன்

மதுரன் said...

இளையராஜா அருமையானதொரு பாடல் தொகுப்பு...
அனைத்து பாடல்களுமே சூப்பர்

Ashwin-WIN said...

அருமையான தொகுப்பு.. ராசையா, காதலுக்கு மரியாதை ரெண்டுக்கும் இசையமைத்தது ராஜா தான் எண்டது இண்டைக்குதான்யா தெரியும்.. எல்லா தெரிவும் கலக்கல்.
Ashwin Win
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?

இரவு வானம் said...

அனைத்தும் அருமையான பாடல்கள் தல, மேஸ்ட்ரோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

மைந்தன் சிவா said...

அருமையான பிறந்த நாள் தொகுப்பு...வாழ்த்துக்கள் பாஸ்..

♔ம.தி.சுதா♔ said...

ஜீவ் அருமையான ரசனை உங்களது... எனக்கு தளபதில அந்த அம்மாப் பாட்டுத் தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்பா...

அப்படியே இந்த வார இருவரது பகுதியையும் தொடரலாமே ஜீவ்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றி

பதிவுலகில் பாபு said...

தொகுப்பு சூப்பர்..

nellai ram said...

nice!

அசால்ட் ஆறுமுகம் said...

இளையராஜா VS சத்யராஜ்
திரைப்படம் - அலைகள் ஓய்வதில்லை

கடலோரக்கவிதைகள் என வரவேண்டும் என்று நினைக்கிறேன்

எப்பூடி.. said...

@ அசால்ட் ஆறுமுகம்

தவறுக்கு மன்னிக்கவும், சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி, இப்போது மாற்றியாகிவிட்டது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)