Thursday, May 26, 2011

என்ஜோய் கண்ணா...........





சில மாதங்களுக்கு முன்னர் 'காமடிபீஸ்' ஒருவர் ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பை 'போலி' புரட்சியால் புறக்கணிக்க சொல்லி வேண்டினார், குய்யோ முறையோ என்று கத்தினார்; ஆனால் பாவம் அவரது கதறலை அவரது குடும்பமே செவி சாய்க்கல, ஏன் அவரே செவி சாய்க்கல; அந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பு மாபெரும் வெற்றி பெற்றது. அவருக்கு வயித்து கடுப்பு தாங்க முடியல; அதுக்கப்புறமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த எதிர்பார்பின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் வாந்தி வாந்தியாய் எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். இருந்தாலும் வயித்து 'கடுப்பு' குறையவே இல்லை, தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

இப்போ அவருக்கு ஒரு சிறிய சந்தர்ப்பம் வாய்த்துள்ளது; அந்த எதிர்பார்ப்பின் 'ஆணிவேர்' இப்போது தற்காலிகமாக இயற்கையால் சற்று ஆட்டம் கண்டுள்ளதை தனது வயிற்று கடுப்புக்கு மருந்தாக நினைத்து ஆணிவேரினையும், ஆணிவேரை கொண்டாடியவர்களையும் குத்தி காட்டுகிறாராம்!!! பாவம் அவரும் என்ன செய்வது இப்படியான சந்தர்ப்பத்தில்தானே கொஞ்சமாவது மனதை தேற்றிக்கொள்ள முடியும், என்ஜோய் கண்ணா. தன்னையும், தன் குடும்பத்தையுமே தன் கருத்துக்களால கன்ரோல் பண்ண முடியாத இந்த போலி புரட்சிவாதி ஊரை திருத்த போறாராராராரா.........ம், நாராயணா இந்த புரட்சிகளின் கொசுத்தொல்லை தாங்க முடியல, யாராவது மருந்து அடிங்கப்பா!!!!!!!!!!!!

நான்கூட சின்ன 'பொடியன்' விட்டுடலாமின்னுதான் நினைச்சன், அனா பயபுள்ளை ரொம்ப ஓவராத்தான் போறார்..............

பிற்சேர்க்கை : அந்த மனிதரின் படங்களை, அவரின் புகழைப் பார்த்துதான் வயித்து கடுப்பில இருப்பாங்கன்னு நெனச்சன், இங்க என்னடான்னா ஒரு கேவலமான காரக்டர் sms ஜோக் பாத்தும் கடுப்பில இருந்திருக்கு, அது கூட இந்த சந்தர்ப்பத்த பயன்படுதிக்குது, எக்ஸ்பிரஸ் எண்டு பேர்ல இருக்கிறது இப்பிடி கேவலமா தன்ன எக்ஸ்பிரஸ் பண்ணிக்குது.அட ஞான சூனியங்களா

*..........................................*




* அப்புறம் நம்ம 'கனி' அக்காவை எந்த தப்புமே செய்யாம உள்ள போட்டதா நம்ம முத்தமிழை வித்தவர் சொன்னாரு. எங்களுக்கும் அதுதான் வேணும்; அவங்க 2G, ஸ்பெக்ரம் விசயத்தில தப்பு செய்திட்டு உள்ள போயிருந்தா அதில எங்களுக்கு என்ன லாபம் ? தப்பே செய்யாம உள்ள போயிருந்தாத்தானே ஏற்கனவே செய்த காலத்தால் மறக்கப்படாத, மன்னிக்கப்படாத தப்புக்கு உள்ள போனதா மனம் ஓரளவாவது சாந்தமடையும்.

* ஜோசியத்தில எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனா அண்மைக் காலமா ரொம்ப மோசமான காலமாக இருக்கு, இப்பதான் வியாழன் மாறினதா வேற சொல்றாங்க; எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு நேரம் சரியில்லாம இருக்கு; நம்ம கலைஞர், சூப்பர் ஸ்டார் உட்பட; ஒருவேளை ஜோசியத்தில ஏதாவது மேட்டர் இருக்குமோ!!!!!!!!! (ஜஸ்டு டவுட்டு)

14 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

மாப்ள நடத்துய்யா ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விடுங்க பாவம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதியில் இன்று ரஜினி செய்தி

Unknown said...

அக்காவுக்கு ஓய்வு தேவை. பாவம் விட்டுடுங்க

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப ரோசனை பண்ணாதீகப்பு ஹி ஹி...

Unknown said...

//அவங்க 2G, ஸ்பெக்ரம் விசயத்தில தப்பு செய்திட்டு உள்ள போயிருந்தா அதில எங்களுக்கு என்ன லாபம் ? தப்பே செய்யாம உள்ள போயிருந்தாத்தானே ஏற்கனவே செய்த காலத்தால் மறக்கப்படாத, மன்னிக்கப்படாத தப்புக்கு உள்ள போனதா மனம் ஓரளவாவது சாந்தமடையும்//
இது புதுசா இருக்கே! ம்ம்...நல்லாத்தான் இருக்கு! :-)

Unknown said...

ஆமாங்க எனக்கும் வியாழ மாற்றம் .மிச்சம் நல்லா நடக்குது

கார்த்தி said...

அய்யோ சார் முதலாமவர் யார்??? ஒண்ணுமே விளங்கல!

Unknown said...

தல நீங்க யார சொல்றீங்கன்னு தெரியல, இருந்தாலும் வயித்தெரிச்சல் பார்டிகள கண்டுக்காதீங்க, நாளைக்கு அவங்களுக்கும் வியாழன் மாறாமலா போகும்

Unknown said...

ஆமா முதலாவது யாரு??கொஞ்சம் கூட பிடிமானம் தரவில்லையே பாஸ்...
ஐயோ பாவம் கார்த்தியே கொன்பியூஸ் ஆகிட்டாரு!!

Unknown said...

ரைட்டு புரிஞ்சிரிச்சு...
புரியாதவங்க எனக்கு கோல் பண்ணி கேளுங்க..
தீர்த்துவைக்கப்படும்..
ஹிஹி ஏன்'நா இந்த உலகத்திலேயே ரொம்ப அறிவான ஜீவன் நான் மட்டும் தான் ஹிஹி

ம.தி.சுதா said...

ஜீவ் எப்படி இருக்கிங்க உங்க வீட்டுக்குள்ள வந்த கன நாளாயிடுச்சு நேரப் பிரச்சனை தான் ஜீவ்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃ! (ஜஸ்டு டவுட்டு) ஃஃஃஃ

எனக்கு பல நல்லது நடக்குது அப்ப உண்மை தானோ ஹ..ஹ..

Unknown said...

"மாட்டிகிட்டேன், இனி தப்பவா முடியும்" இது நீங்க சொன்ன காமெடி பீசு படத்தில பேசுனது

அப்புறம் எனக்கும் ஒரு டவுட் எல்லோரையும் சும்மா கைது பண்ண முடியுன்னா, தலைவர ஏன் கைது பண்ணலே?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)