Saturday, May 21, 2011

வடிவேலுவை புறக்கணிப்பது சரியான முடிவா?

தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று மே 13 வரை வடிவேலு கனவிலும் நினைத்திருக்க மாட்டார். மே 13 க்கு பின்னர் விஜய் ஜோக்கிற்கு நிகராக வடிவேலுவை வைத்து சமூகத் தளங்களில் வந்த ஜோக்குகள் தற்போது கனிமொழியால் சற்றே குறைந்திருந்தாலும் வடிவேலுவின் இமேஜ் டேமேஜ் செய்யப்பட்டுவிட்டது என்பதுதான் 100 % உண்மை. முன்பெல்லாம் நகைச்சுவை சானல்களில் வடிவேலுவை கண்டால் வேறு சானல்களுக்கு மாற மறுக்கும் ரிமோல்ட் கன்ரோல் (Remote control ) இப்போதெல்லாம் வடிவேலு முகத்தை கண்டதும் ஆட்டோமட்டிக்காக (Automatic) வேறு சானல்களுக்கு மாறுகிறது. இப்படியாக பெரும்பாலான ரசிகர்கள் வடிவேலுவை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளார்கள் என்பதுதான் நிஜம். ஆனால் எனக்கிருக்கும் ஒரே சந்தேகம் என்னவென்றால் நாம் புறக்கணிக்கும் அளவிற்கு வடிவேலு சுயபுத்தி உடையவரா ? என்பதுதான்.

வடிவேலு தேர்தல் பிரச்சாரங்களின்போது விஜயகாந்தை விமர்ச்சித்தது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம் என்பதில் எனக்கு துளியளவும் மாற்றுக் கருத்தில்லை. ஒருவேளை தி.மு.க ஜெயித்திருந்தாலும் வடிவேல் மீது இப்போதுள்ளது போன்ற கோபமான மனநிலைதான் அதிகமானவர்களுக்கு இருந்திருக்கும்; ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் அனைவரும் 'உரிய நேரம்' வரும்வரை இந்த விடயத்தை மனதிற்குள் வன்மமாக வைத்திருந்திருப்பார்கள். ஆனால் தற்போது விஜயகாந்தின் விஸ்வரூப வெற்றி வடிவேலுவின் மீதான ஆத்திரத்தை சமூகத்தளங்களில் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸாக போட்டுப் போட்டு ஓரளவேனும் தணிக்க உதவியுள்ளது. ஆனாலும் வடிவேலுவை ஏற்கும் மனநிலை அதிகமானவர்களுக்கு இன்னமும் ஏற்ப்படவில்லை என்பதுதான் நிஜம்.எதற்க்காக வடிவேலு மீது ஒட்டுமொத்த நடுநிலை சமூகமும் எதிர்ப்பலையை காட்டுகிறது? அத்தனை பேரும் விஜயகாந்த் ஆதரவாளர்களா? இல்லை அ.தி.மு.க ஆதரவாளர்களா? 'லியோனி' கூடத்தான் கிண்டல் பண்ணி பிரச்சாரம் செய்தார், எதற்காக வடிவேலுவை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள்? அதற்க்கு முக்கியமான இரண்டு காரணிகள் 1) தன் சொந்த பிரச்சினையை அரசியலாக்கியது 2) இதுவரை கேட்டிராத அளவிற்கு மிகவும் கேவலமான வார்த்தை பிரயோகங்கள் மூலம் பிரச்சாரம்(?) செய்ததது. இந்த செயற்பாடுகள் விஜயகாந்தை பிடிக்காதவர்களையும் ஆத்திரம் அடைய செய்ததது என்றால் அது மிகையில்லை. தன் துறையில் இருக்கும் மூத்த கலைஞனை, அதிலும் குறிப்பாக தன் ஆரம்பகால திரைவாழ்க்கையில் சந்தர்ப்பம் வழங்கிய ஒருவரை வடிவேலு விமர்சித்த முறை; எந்த நடுநிலையாளரும் ஏற்றுக்கொள்ள இயலாதது.

அப்படியானால் வடிவேலு புறக்கணிக்கப்பட வேண்டியவரா? இதற்க்கான எனது பதில் 'இல்லை' என்பதுதான். வடிவேலு செய்தது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாவிட்டாலும், இந்த விடயத்தில் வடிவேலு வெறும் அம்பாகத்தான் பயன் படுத்தப் பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. வடிவேலுவின் அறியாமை, சுயபுத்தியின்மை என்பவற்றை பயன்படுத்தி மு.க.அழகிரி என்கிற வில்வித்தைகாரன் வடிவேலுவை அம்பாக பயன்படுத்தியிருக்கிறார் (அந்த அம்பு பூமாராங் மாதிரி அழகிரியே திரும்பதாக்கியது வேறு கதை). வடிவேலு மேடையில் பேசும் வசனங்கள் நிச்சயமாக வடிவேலுவினுடைய சொந்த வசனங்கள் இல்லை என்பதை சிங்கமுத்து முதற்கொண்டு சினிமாவை உன்னிப்பாக அவதானிக்கும் சராசரி ரசிகர்கள் அனைவருமே அறிவார்கள். யாரோ எழுதிக் கொடுத்த வசனத்துக்கு பாடிலாங்வேஜ் (Body Language) கொடுத்தது மட்டும்தான் வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரம்.சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லாத வடிவேலுவை பணத்தாலும், அதிகாரத்தாலும், பசப்பு வார்த்தைகளாலும் மு.க.அழகிரி தன்வசப்படுத்தியதால் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை நிலைமை வடிவேலுவுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவிற்க்கும்தான். தமிழ் சினிமாவில் வடிவேலுவின் இடம் எப்போதும் யாராலும் நிரப்பப்பட முடியாத ஒன்று; தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் கலைஞர்களில் வடிவேலுவும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

டைமிங்(Timing), பாடிலாங்வேஜ்(Body Language), முகபாவம்(expression), சிறப்பு சத்தங்கள்(special sound) என நகைச்சுவை காட்சிகளில் தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கும் வடிவேலுவின் திரைப்பட வசனங்களை அண்டாட வாழ்க்கையில் பயன்படுத்தாத தமிழர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இதுவரை ஒரு தடவை கூட வடிவேலுவை திரையிலோ, சின்னத் திரையிலோ பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்ட வடிவேலுவை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்குவது என்பது சரியான விடயமாகப் படவில்லை.

வடிவேலுவிற்கு அவர் செய்த தவறை நிச்சயமாக உணர்த்தவேண்டும், அதற்காக அவரை திரைத்துறையில் இருந்தே ஒதுக்குவதென்பது மிகவும் கடினமான முடிவு. ஒரு நடிகனோ அல்லது இயக்குனரோ தம் திரைப்படங்களில் 'மல்லாக்க படுத்திருந்து எச்சிலை உமிழ்ந்த' வடிவேலுவிற்கு சந்தர்ப்பம் கொடுப்பது தம் துறையே தாமே அவமானப்படுத்துவது போன்றதுதான், இந்த விடயத்தில் 'ராணா'விலிருந்து வடிவேலுவை தூக்கியதற்கு ஒரு சபாஸ். அப்படியானால் வடிவேலு எப்படி தமிழ் திரையில் காலடி பதிப்பது? யெஸ், 1996 இல் மனோரமாவிற்கு ரஜினி புரியவைத்தைபோல இந்த தடவை வடிவேலுவிற்கு புரியவைக்கலாம், இது விஜகாந்தால் மட்டுமே சாத்தியம்.தன் துறையில் இருக்கும் நல்ல கலைஞனை இழந்து விடக்கூடாது என்பதையும், தனக்காக ஒரு கலைஞனை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் வெறுத்து ஒதுக்கியுள்ளார்கள் என்பதையும் கேப்டன் புரிந்துகொண்டால் நிச்சயம் வடிவேலுவை அழைத்து பேசலாம். பொறுப்பான பதவியில் இருக்கும் விஜயகாந்த் தனது ஆளுமையை, பக்குவத்தை இந்த விடயத்தில் வெளிக் கொண்டுவரலாம்; அடிக்கு அடிதான் என்றில்லாமல் 'மன்னித்தல்' என்னும் மிகப்பெரும் தண்டனையை வடிவேலுவிற்கு கேப்டன் கொடுக்கலாம்.

கேப்டன் வடிவேலுவை அழைத்துப் பேசி, வடிவேலுவிற்கு தமிழ் திரையுலகம் மறுபடியும் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால் அது தேர்தலில் கிடைத்த அடியிலும் 1000 மடங்கு அதிகமான வலியை வடிவேலுவிற்கு கொடுக்கும் (இதை உணரும் அளவிற்கு வடிவேலுக்கு புத்தி உள்ளதா என்றால் சந்தேகம்தான்), அதைவிடுத்து இனியும் வடிவேலுவுடன் மல்லுக்கட்டுவது கேப்டனுக்கு அழகல்ல, வடிவேலு என்னும் சிறந்த கலைஞனின் திரைவாழ்க்கை இப்போது கேப்டன் கைகளில்............

வடிவேலு நிஜ வாழ்விலும் தானொரு காமடியன் என்பதை நிரூபித்துள்ளார், கேப்டன் நிஜவாழ்விலும் தானொரு ஹீரோ என்பதை நிரூபிப்பாரா?

குறிப்பு:- 'ராணாவோ காணாவோ' விடயத்தில் வடிவேலுமீது கோபம் இருந்தாலும்; அந்த விடயத்தை சீடியஸ் ஆக்குவது என்பது வடிவேலுவை 'சீடியஸ் கேரக்டர்' போல் எண்ணுவது போலாகிவிடு மென்பதால் அதனை ஒரு பொருட்டாக கருதாமல், வடிவேலுவை நகைச்சுவை நடிகராக; பொதுவாழ்வில் சுயபுத்தி இல்லாத காமடிபீசாக எண்ணி விட்டுவிடலாம்.

31 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

// 1) தன் சொந்த பிரச்சினையை அரசியலாக்கியது 2) இதுவரை கேட்டிராத அளவிற்கு மிகவும் கேவலமான வார்த்தை பிரயோகங்கள் மூலம் பிரச்சாரம்(?) செய்ததது. இந்த செயற்பாடுகள் விஜயகாந்தை பிடிக்காதவர்களையும் ஆத்திரம் அடைய செய்ததது என்றால் அது மிகையில்லை. //
மெத்தச்சரி!!!

Unknown said...

சரியான வாதம்!!!
I accept with u!!!

கவி அழகன் said...

nalla arokiyamana pathivi

Unknown said...

அதென்ன jeevatharshan A T??
கௌரிபாகனின் தாக்கமோ?ஹிஹி

Anonymous said...

வடிவேலுவின் சொந்த பிரச்சனையை தான் அரசியல் மேடையில் கொண்டுவந்தார். இதற்கு உதாரணம் அவர் மேடையில் ஜெயாவை தாக்கி பேசவில்லை... பாவம் வடிவேலு திமுக மண் கவ்வுமென்று கனவிலும் எண்ணியிருக்கார்...

Unknown said...

//யாதவன் said...
nalla arokiyamana பதிவி//

ஆமா அவரு பூஸ்ட் போன்விட்டா சாப்பிட்டிட்டு தான் பதிவு எழுதினவராம்..ஹிஹி

சும்மா லு லு லு

எப்பூடி.. said...

மைந்தன் சிவா

//அதென்ன jeevatharshan A T??//

Not 'A T', 'at 2:08 PM'

Unknown said...

அட பாவிகளா..அது டயிமா?
அப்பிடி சொல்லுறது!!

பாலா said...

நீங்க என்னதான் சொன்னாலும் வடிவேலுவை பார்க்கும்போதெல்லாம் "ராணாவோ காணாவோ" கண்முன் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை. இது போலத்தான் சில காலத்துக்கு முன் மனோரமாவின் "தலைவர்ர்ர்‌ர்" கண்முன் நிழலாடியது. காலப்போக்கில் இது மாறலாம். அதுவரை வடிவேலு மீது வெறுப்புதான் வருகிறது.

Unknown said...

தல சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா விஜயகாந்த் மன்னிச்சுருவாரா இல்லை மன்னிப்பு தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தைன்னு சொல்லுவாரான்னு தெரியல, ஆனா தலைவர் கண்டிப்பா மன்னிச்சிருவார், அடுத்த படத்துல சான்ஸ் கொடுப்ப்பார் பாருங்க

கார்த்தி said...

வடிவேலுக்கு தனது பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியாம வடிகேலு என்று எழுதியதாக சிங்கமுத்து கூறியதிலிருந்தும், சிங்கமுத்து இடம் விக்கிறதெண்டு வடிவேலுவை ஏமாற்றிய சம்பவங்களிலிருந்தும் வடிவேலுக்கு சுயபுத்தி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது!

M.G.ரவிக்குமார்™..., said...

முடிவுகள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாள் கூட ராணா பற்றிக் கேட்ட போது கூட ராணாவாவது காணாவாவது என்றவர் இவர்!....இவரை மன்னிக்கலாம் ஆனால் இவர் தன் தவறை உணர்ந்து வருந்தினால் மட்டும்!.....

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்கள் கருத்துதான் என் கருத்தும்....நடுநிலையுடன் நச்சென்று எழுதப்பட்ட பதிவு

கிரி said...

//ஒருவேளை தி.மு.க ஜெயித்திருந்தாலும் வடிவேல் மீது இப்போதுள்ளது போன்ற கோபமான மனநிலைதான் அதிகமானவர்களுக்கு இருந்திருக்கும்; ஆனால் அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் அனைவரும் 'உரிய நேரம்' வரும்வரை இந்த விடயத்தை மனதிற்குள் வன்மமாக வைத்திருந்திருப்பார்கள். //

மிகச் சரியா சொன்னீங்க!

//வடிவேலு செய்தது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாவிட்டாலும், இந்த விடயத்தில் வடிவேலு வெறும் அம்பாகத்தான் பயன் படுத்தப் பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. //

ஜீவதர்ஷன் நீங்கள் கூறுவது ஓரளவு உண்மை.. அவர்கள் எப்படி வடிவேலை பயன்படுத்திக்கொண்டார்களோ அதேபோல இந்த வாய்ப்பை வடிவேலுவும் கேப்டனை திட்ட நன்கு பயன்படுத்திக்கொண்டார். இவர் செய்த ஒரே தவறு அதை பயன்படுத்திய விதம்.

இவர் தெரியாமல் செய்து இருந்தால் இந்நேரம் அடங்கி இருப்பார் வேறு மாதிரி நடந்து கொண்டு இதை மேலும் பெரிதாக்காமல் விட்டு இருப்பார் ஆனால் இவர் மீண்டும் கேப்டனை உசுப்பேற்றும் விதமாக இந்த வெற்றி கேப்டனால் கிடைத்தது இல்லை அதிமுக தான் காரணம் என்று அவரது தொண்டர்களை உசுபேத்திக்கொண்டே இருக்கிறார் அதாவது இவரே பிரச்னையை மேலும் வளர்த்துக்கொண்டே இருக்கிறார்.

பாலா சொன்னது போல இப்போதைக்கு வடிவேலை என்னால இயல்பா ஏற்றுக்கொள்ள முடியவில்லை காலப்போக்கில் மாறலாம்.

சிநேகிதன் அக்பர் said...

சரியான பார்வை. பெரும்பாலோரின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும்.

குணசேகரன்... said...

நீங்க சொன்னது சரி..மனிதன் மாறிவிட்டான்....(பாட்டுங்க)

Unknown said...

மாப்ள......எந்த விஷயத்துல மன்னிக்கலாம்.......இதே ஆட்சி மாறி அய்யாவே வந்து இருந்தா.......இவருடைய நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும்........அரசியலில் தனி மனித தாக்குததலை எவன் செஞ்சாலும் அவன் சாய்க்கப்பட வேண்டியவனே........இப்ப இவருக்கு இருக்க பயம்......பீல்ட பத்தி இல்ல உசுர பத்தி.......அதான் இப்படி பம்முராறு....மன்னிப்புங்கற விஷயம் மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும்....பணத்துக்காக அடிமையா போன மிருகத்துக்கு எதுக்கு மாப்ள!

Kevin Matthews said...

விஜயகாந்த் இப்பொழுது “நான் மன்னித்துவிட்டேன்” என்று சொண்னால், வடிவேல் “உன் மன்னிப்பு யாருக்கு வேணும்” என்று திமிராக பதிலலிப்பார். விடுங்க சிலதுக, பட்டால்தான் திருந்தும்.

தாமிரபரணி said...

/*வடிவேலு தேர்தல் பிரச்சாரங்களின்போது விஜயகாந்தை விமர்ச்சித்தது ஏற்றுக் கொள்ளமுடியாத விடயம் என்பதில் எனக்கு துளியளவும் மாற்றுக்
கருத்தில்லை. வடிவேலுவை ஏற்கும் மனநிலை அதிகமானவர்களுக்கு இன்னமும் ஏற்ப்படவில்லை என்பதுதான் நிஜம்.
பெரும்பாலான ரசிகர்கள் வடிவேலுவை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளார்கள் என்பதுதான் நிஜம்*/
இதுவெல்லாம் கொஞ்சம் அதிகமா இல்ல. ஒ இதான் புரட்டு/புரளியோ(humbug/rumour)
வடிவேல், நான் கடவுள் என்று சொல்லிகொண்டு எல்லோரையும் தன்னை வணங்க சொன்னாரா,
இல்ல மத கலவரத்தை துண்டிவிட்டாரா, இல்ல சாதி பெயரை சொல்லிகொண்டு சாதிகலவரம் செய்தாரா, இல்ல
கள்ளசாராயம் காய்ச்சி பல குடும்பத்தை சீர்அழித்தவரா இல்ல கோடிகணக்கில் ஊழல் செய்தாரா.
வடிவேலு விமர்சனம் செய்தது விசயகாந்தைதானே என்னமோ அன்னை தெரசா, காமராசர், அண்ணா துரை, பெரியாரை பற்றி விமர்சித்தமாதிரி
பேசுறிங்க, அடபோங்க பாஸ்
/*வடிவேலுவின் மீதான ஆத்திரத்தை சமூகத்தளங்களில் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸாக போட்டுப் போட்டு ஓரளவேனும் தணிக்க உதவியுள்ளது.*/
தமிழ் மீனவர்கள், அப்பாவி இலங்கை தமிழர்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவித்த இராசபக்சேமீது தமிழக மக்களுக்கு
யாருக்கும் வெறுப்பு கிடையாதாம் அவர் இந்தியாவுக்கு புதுமாபிள்ளை மாதிரி வந்துட்டுபோவாரு
அவருக்கு விளக்கு பிடிப்பதுபோல் இந்தியா கோடிகணக்கான(தமிழர்களின் வரிபணம்) பணத்தை இலங்கைக்கு வாரி வழங்கியது, ஆகா என்ன ஒரு
தேசிய இறையாண்மை,ஈன இந்தியா மீதும் யாருக்கும் வெறுப்பு கிடையாதா? என்ன கொடுமைடா

தாமிரபரணி said...

/*தன் துறையில் இருக்கும் மூத்த கலைஞனை, அதிலும் குறிப்பாக தன் ஆரம்பகால திரைவாழ்க்கையில் சந்தர்ப்பம் வழங்கிய ஒருவரை வடிவேலு விமர்சித்த முறை; எந்த நடுநிலையாளரும் ஏற்றுக்கொள்ள இயலாதது */
விசயகாந்த் கட்சி கூட்டத்திலும்,கேப்டன் டிவியிலும் அவர் கலைஞரை பற்றி எவ்வளவு இழிவாக பேசுகிறார் தெரியுமா.
கலைஞர் அரசியலில் மட்டும் அல்ல, திரைதுறையிலும் மூத்த கலைஞன் என்பதை விசயகாந்த் மறந்தார்போல. அதுசரி இவரு மறக்கலாம் ஆனா வடிவேலு மறக்ககூடாது, என்ன ஒரு முரண்பாடு. நான் கலைஞரின் ஆதரவாளன் அல்ல அண்ணா பாடுபட்டு கட்டிய கட்சியை குடும்ப
அரசியலாக்கியதிற்கு, ஈழ மக்களுக்கு துரோகம் விழைவித்ததுக்கு என மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள்.
/*சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லாத வடிவேலுவை*/
அது என்ன காமெடி நடிகனா அவ்வளவு இளக்காரமா?
ஒரு சில படங்களை தவிர,
ஏனைய படங்களில் பறந்து பறந்து அடிப்பது, லாஜிக் இல்லாத சண்டை காட்சிகள் என கோமாளித்தனம் செய்யும் ஒரு நடிகனை விமர்சனம்
செய்வதில் எந்த தவறும் கிடையாது, சொந்த சிந்தனை இல்லாதது வடிவேல் அல்ல விசயகாந்த் போன்ற நடிகர்கள்தான்

தாமிரபரணி said...

/* தமிழ் சினிமாவில் வடிவேலுவின் இடம் எப்போதும் யாராலும் நிரப்பப்பட முடியாத ஒன்று; தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் கலைஞர்களில் வடிவேலுவும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். */
மிக சரியாக சொன்னிர்கள்
தல கவுண்டமணிக்கு அப்பறம் வடிவேலுதான்
வடிவேலுக்கு நிகர் வடிவேலுதான்

/* வடிவேலு என்னும் சிறந்த கலைஞனின் திரைவாழ்க்கை இப்போது கேப்டன் கைகளில்............ */
அதுசரி தமிழ் சினிமா என்ன விசயகாந்தின் சொத்தா, தமிழக மக்களுக்கு தண்ணர் தர மறுக்கும் ஈன நாய்ங்க மலையாளத்தானுங்க தமிழ் நாட்டில்
வந்து பிழப்பு நடத்தலாம், தமிழ் சினிமாவுல கோலோச்சலாம், கன்னடகாரனுங்க நம் தமிழ் சினிமால வாழலாம், தமிழ மக்களின் பிரச்சனைக்கு
எங்களை இழுக்காதீர்கள் ஒரு ஈன பிறவி சொல்கிறான் அவன் மீது யாருக்கும் வெறுப்பு கிடையாதாம் அவன் தமிழ் சினிமாவில் நடிக்கலாம், சம்பாதிக்கலாம், ஆனால் வடிவேலு கூடாது, வடிவேலு தன்னை ஒரு தேவரோ, நாடாரோ, தாழ்ந்த சாதிகாரனாக அடையாளம் காட்டியிருந்தால் அவர்
விட்டில் விழுந்த கல் அந்த நடிகரின் வீட்டை தரமட்டமாக ஆகியிருக்கும்.
இப்ப விளங்குகிறது ஏன் சாதியை மக்கள் சார்ந்துயிருக்குறார்கள என!!
விடுறா சுனா பானா
இதுவெல்லாம் நமக்கு சர்வ சாதரணம்.

தாமிரபரணி said...

அப்படி என்ன வடிவேலு பேசிடாருனு பார்போம்
1. குடிகாரன் என்று விமர்சித்துள்ளார்
இல்லை என்று மறுப்பாரா.
இல்ல நான் குடிப்பது என் தனிபட்ட விசயம்னு சொல்வாராயின்
அவர் அரசியல் பொதுவாழ்வுக்கு வராமல் இருந்திருக்க வேண்டும்.
2. கட்சிகாரனை அடிக்கிறார் என்று விமர்சித்துள்ளார்
தன் கட்சிகாரன் என்றாலும் தனிமனிதன் ஒருவனை அதுவும் பொதுவாழ்வில் இருக்கும் ஒருவனை அடிப்பது என்பது எந்தவிதத்திலும் நாகரிகமான செயலாகாது.
3. அப்பறம் சாலை விரிவாக்கத்துக்காக விசயகாந்தோட திருமண மண்டபம் இடிக்கபட்டது
அதை அவர் பொதுமக்கள் பிரச்சனையாக்கி பேசியதை விமர்சித்துள்ளார்
4. அப்பறம் தி.மு.காவை குடும்ப அரசியல்னு விமர்சிக்கும் விசயாகந்தின் குடும்ப அரசியலை விமர்சித்துள்ளார்.
இல்லை என்று மறுப்பாரா.

Mohamed Faaique said...

கடுப்பத்தான் இருக்கு.. பழைய வடிவேலு காமெடிகலை பார்க்கும் போது, இனிமேல் கிடையாதோ’னு ஒரு கவலை வருகிறது..

நிரூபன் said...

இந்த விடயத்தில் வடிவேலு வெறும் அம்பாகத்தான் பயன் படுத்தப் பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. வடிவேலுவின் அறியாமை, சுயபுத்தியின்மை என்பவற்றை பயன்படுத்தி மு.க.அழகிரி என்கிற வில்வித்தைகாரன் வடிவேலுவை அம்பாக பயன்படுத்தியிருக்கிறார் //

இப்போது வடிவேலுவின் கதை இளநீர் குடித்தவன் தப்பி ஓட, கோம்பை வளித்தவன் மாட்டியது போலாகி விட்டது சகோ.

நடு நிலையான, அதுவும் மனிதர்களுக்கு இருக்கும் உயரிய பண்பான மன்னித்தல் பற்றிப் புரிய வைக்கும் பதிவு சகோ.

Samy said...

Vadivelu is a good comedian everyone likes him very much. Karu took advantage of his past. That's all. samy

ஜேஸன் said...

ஆங்க். .. மன்னிப்பா? தமிழ்ல, தெலுங்குல, மலையாளத்துல, கன்னடத்துல, இந்தில... ஏன் C, C++, ஜாவா இப்படி எல்லா மொழிலயும் எனக்கு புடிக்காத ஒரே வார்த்த "மன்னிப்பு" . ஆங்க் ... இந்த பூ ஊட்டிலேயே இல்லையாம், எப்பூடி ...

Unknown said...

வடிவேலு குறித்து நீங்கள் சொன்னதெல்லாம் சரிதான்! தமிழ்சினிமாவில் மட்டுமன்றித் தமிழர்கள் எல்லோரது அன்றாட வாழ்விலும், பேச்சிலும் கலந்துவிட்ட அற்புதமான நடிகர். அவரை ஒரு நல்ல காமெடி நடிகராக மட்டும் எண்ணி மன்னித்துவிடலாம்!

அனால் ஒரு நடிகனை வெறும் நடிகனாக மட்டும் பாராமல், அறிவுரைஞர், வழிகாட்டி, தத்துவஞாநியாகப் பார்க்கும் சமூகத்தில் பார்க்கும் சமூகத்தில் இது எந்தளவு சாத்தியமோ!

ரஜினி செய்ததுபோல் விஜயகாந்த்? இது நடக்குமா...விஜயகாந்தின் நடவடிக்கைகளை நீங்கள் பார்த்திருப்பீர்களே! தன் கட்சி வேட்பாளருக்கே அந்த அடின்னா..வடிவேலு சிக்கினா?

உண்மையில் விஜயகாந்த் நீங்கள் சொன்னதுபோல் நடந்துகொண்டால் நிஜ வாழ்விலும் ஹீரோவாகலாம்! அதுவே வடிவேலுக்கு மிகப்பெரிய தண்டனையாகவும் இருக்கும்!

jo said...

நீங்கள் என்ன சொன்னாலும் முன்போல் வடிவேலுமீது மனம் ஒட்டவில்லை...அவரை டிவியில் பார்தாலே வேறு சானலுக்கு கை அனிச்சையாக மாரிவிடுகிறது...
நான் எந்த கட்சியை சார்தவரும் இல்லை...மொத்தில் அவர் பேச்சு ரசிக்கவில்லை.....இத்ற்க்கு முன்பு கூட பல நடிகர்கள் இந்த் நிலைக்கு தள்ளபட்டனர்...இதை வைத்து இனிவருபவர்கள் பாடம் படிக்கட்டும்.....

Admin said...

உண்மையில் விஜயகாந்த் நீங்கள் சொன்னதுபோல் நடந்துகொண்டால் நிஜ வாழ்விலும் ஹீரோவாகலாம்! அதுவே வடிவேலுக்கு மிகப்பெரிய தண்டனையாகவும் இருக்கும்!

தாமிரபரணி said...

@Kevin Matthews
/* விஜயகாந்த் இப்பொழுது “நான் மன்னித்துவிட்டேன்” என்று சொண்னால், வடிவேல் “உன் மன்னிப்பு யாருக்கு வேணும்” என்று திமிராக பதிலலிப்பார். விடுங்க சிலதுக, பட்டால்தான் திருந்தும். */
நான் மன்னித்துவிட்டேன் என்று விசயகாந்த் சொன்னாரா,
அதற்கு 'உன் மன்னிப்பு யாருக்கு வேணும்' என்று வடிவேலு சொன்னாரா ஏன் இப்படி நிங்கலா நடக்காத விசயத்த நடந்த மாதிரி பேசுறிங்க, அதுவும் ஒரே நேரத்ல விசயகாந்துக்கும், வடிவேலுக்கும் மவுத் பீசா வேலை செய்றிங்க. அப்பறம் சிலதுகனு அஃறினையில் ஒருத்தர திட்டுறிங்க இது எவ்வளவு பெரிய அநாகரிகமான செயல், அல்ல தெரியாம கேட்கிறேன் விசயகாந்த்
என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா, அவரின் படங்களையும், கோமாளிதனமான நடிப்பையும் தரமட்டமாக எத்தனைபேர் கிண்டல் செய்கிறார்கள். வடிவேலு அவரைபத்தி பேசுனா மட்டும் தெஞ்சி போய்ட்டாராருக்கும், என்னங்கடா கதையா இருக்கு.
என்ன கேட்டா இன்றைய அரசியல் நாகரிகம் உள்ளவர் க.அன்பழகன் மட்டுமே

காதர் அலி said...

உண்மையில் விஜயகாந்த் நீங்கள் சொன்னதுபோல் நடந்துகொண்டால் நிஜ வாழ்விலும் ஹீரோவாகலாம்! அதுவே வடிவேலுக்கு மிகப்பெரிய தண்டனையாகவும் இருக்கும்!

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)