Saturday, April 16, 2011

'டெம்ளேட்' பின்னூட்டம் வேண்டாமே!!!!!!!!!

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு பதிவு எழுதுகிறேன், ஆனால் இதுவும் பதிவல்ல! எனது சில நிலைப்பாடுகளை சொல்லிக்கொள்ளவே இந்த பதிவை எழுதிக்கொள்கிறேன். இது யார் மனதையும் புண்படுத்தவோ, அடுத்தவர்களை குறை சொல்லவோ, விமர்சிக்கவோ அல்ல; எனது எண்ணங்களும் எனது முடிவுக்களும்தான் இந்தப்பதிவு.

உலகக்கோப்பை போட்டிகள் முடிந்து சில நாட்கள் கடந்த பின்பும் பதிவெழுத ஏனோ பிடிக்கவில்லை, அதற்க்கு சில பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான காரணம் 'டெம்பிளேட் பின்னூட்டம்' போடும் கலாச்சாரம்தான். ஆரம்ப காலங்களில் (முதல் ஒரு வருடமாக) இயலுமானவரை 'டெம்ளேட்' பின்னூட்ட வட்டத்தில் சிக்காமல் இருக்க எத்தணித்தாலும் எனது எண்ணம் தோல்வியிலேயே முடிவடைந்தது.

'டெம்ளேட் பின்னூட்டம்' பதிவுலகில் நட்பு வட்டத்தை பெருக்குவதற்கும் அதனை தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கும் பேருதவி புரியும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அதே நேரம் இதனால் எழுதும் பதிவுகளுக்கு உரிய அங்கீகாரமோ, விமர்சனமோ, சுட்டிக்காட்டல்களோ தற்போது குறைவடைந்து போய்க்கொண்டிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

இதற்கு முக்கிய காரணம் பதிவுகளை 'வாசிக்காமல்' இடும் 'டெம்ளேட்' பின்னூட்டல்கள்தான். 'சூப்பர்' என்று ஒரு பின்னூட்டம் வரும்போது அந்த பின்னூட்டம் எழுதிய பதிவு நன்றாக இருப்பதால் வருகிறதா?(சூப்பர் என்று சொல்லுறமாதிரி நீ எப்ப எழுதினாய் என்கிற சந்தேகம் வேண்டாம், பொதுவா சொன்னன்) இல்லை பதிவை வாசிக்காத 'டெம்ளேட் பின்னூட்டமா' என்பது புரியாத புதிர்தான். பதிவெளுதுவதற்கே பலருக்கும் நேரம் இல்லாதபோது சக பதிவர்கள் (நட்பு பதிவர்கள்) அத்தனை பேரினதும் (குறைந்தது 10) பதிவுகளையும் முழுமையாக வாசித்து பின்னூட்டம் இடுவதென்பது மிகவும் கடினமான விடயம், இந்த இடத்தில்தான் 'டெம்ளேட் பின்னூட்டம்' தலை எடுக்கிறது, அது வடையில் ஆரம்பித்து இப்போது எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.

எனக்கு இப்படியான 'டெம்ளேட் பின்னூட்டங்கள்' இனிமேல் சம்மதமில்லை; இனிவரும் காலங்களில் நண்பர்களினதோ, சக பதிவர்களினதோ பதிவுகளை நேரம் கிடைக்கும் நேரங்களில் வாசித்து அவற்றிற்கு கருத்தோ, விமர்சனமோ, பாராட்டோ, கண்டனமோ கூறவேண்டி இருந்தால் மட்டும்தான் பின்னூட்டம் இடுவதாக எண்ணியுள்ளேன். அதேபோலவே நான் எழுதும் பதிவுகளுக்கும் கருத்தோ, விமர்சனமோ, பாராட்டோ, கண்டனமோ கூறவேண்டி இருந்தால் மட்டுமே பின்னூட்டம் இடும்படி நண்பர்களை 'அன்புடன்' கேட்டுக் கொள்கிறேன். ஒரு பின்னூட்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

மேலே நான் குறிப்பிட்ட விடயங்களில் பலருக்கும் சம்மதம் இல்லாமல் இருக்கலாம், பலருக்கு என்மேல் வருத்தமாக கூட இருக்கலாம். தினமும் சங்கடத்துடன் 'டெம்ளேட் பின்னூட்டங்களை பெற்றும், இட்டும் மனதிற்க்கு பிடிக்காத விடயத்தை ஏற்பதைவிட அதற்கொரு முடிவை ஏற்ப்படுத்துவது சால சிறந்ததாக தோன்றியது; அதான்ல்த்தான் எனது எண்ணங்களை இந்த பதிவில் இறக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் நண்பர்களின் தளங்களுக்கு நேரேம் கிடைக்கும் போது நிச்சயம் வருவேன், பதிவு பிடித்திருந்தால் நிச்சயம் முழுமையாக படிப்பேன், தேவைக்கேற்ப பின்னூட்டமிடுவேன், நிச்சயமாக 'டெம்ளேட் பின்னூட்டம்' அல்ல.

29 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

முதலில் மீண்டும் உங்களை பதிவுலகிற்கு வாருங்கள் வாருங்கள் என சொல்லி கொள்கிறேன், உங்களுடைய டெம்ப்ளேட் பின்னூட்டம் பற்றீய கருத்துடன் முழுவதுமாக ஒத்து போகிறேன் தல, நான் இப்பொழுது பெரும்பாலும் டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதை தவிர்க்கிறேன், இருந்தாலும் பதிவுலகில் மொய்க்கு மொய் சிஸ்டம் அமலில் உள்ளதால்தான் இப்படி நடக்கிறது என நினைக்கிறேன், எது எப்படியோ நீங்க மறுபடியும் வந்ததுல சந்தோசம்

Philosophy Prabhakaran said...

சூப்பர்...

Philosophy Prabhakaran said...

சும்மா தமாஷ்... இடுகையில் சொன்ன அன்பான விதிமுறைகளை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்... அதே சமயம் உங்களுடைய, என்னுடைய, நம்முடைய பதிவுகளையெல்லாம் ஓட்டு, பின்னூட்டம் இவற்றையெல்லாம் தாண்டி பலர் சத்தமே இல்லாமல் படிக்கிறார்கள்... எனவே டெம்ப்ளேட் பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் அலட்டிக்கொள்ள வேண்டாம்...

Speed Master said...

சூப்பர்

பதிவ முழுசா படிச்சுட்டுதான் சொல்றேன்

பாலா said...

வாங்க தலைவரே. மறுபடியும் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்க நிபந்தனைகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு சில நல்ல பதிவுகளை படிக்கும்போது சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் இருக்காது. அப்போது இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் இடுகிறார்கள். நீங்க நல்ல படியா எழுதுங்க. படிச்சுட்டு மாற்று கருத்து இருந்தா தயங்காம சொல்றோம்...

ஹா ஹா... உங்க பிரேடிக்சன் தப்பாயிடுச்சே... ஆஸ்திரேலியா காலிறுதியிலேயே வெளியேறிடுச்சே..

மாணவன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவுலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி நண்பரே...உங்கள் எண்ணங்களை பதிவு செய்துள்ளிர்கள்...டெம்ப்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் நண்பர்கள் முடிந்தளவு பதிவை முழுவதும் படித்துவிட்டு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.... மிகவும் நாகரீகமான முறையில் சுட்டிகாட்டியுள்ளிர்கள்.... மீண்டும் உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
:))

பொன் மாலை பொழுது said...

எங்கய்யா காணாம பூட்டீறு?

நிரூபன் said...

சகோதரம், நலமா?
நீண்ட இடை வேளைக்குப் பின்னர் உலகக் கிண்ட துடுப்பாட்டப் போட்டியில் பங்கு பற்றி, sorry உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி, Sorry, உலகக் கிண்ணப் போட்டியினை நேரடியாகப் பார்த்து முடித்து, மீண்டும் பதிவெழுத வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

நிரூபன் said...

உங்களுடைய கொள்கையும் என் கொள்கையும் நிச்சயமாக ஒன்றே என்று நினைக்கிறேன், காரணம் நானும் இந்த டெம்பிளேட் பின்னூட்டம் போடுவதை என்னால் முடிந்தளவில் தவிர்த்தே வருகிறேன். உங்கள் கருத்துக்களிற்கு வரவேற்பளிக்கும் அதே வேளை, இப் பதிவு தொடர்பாக ஒரு சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

பதிவின் தரத்தினை விட, பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை நம்பும் பதிவர்களே இந்த மாதிரியான டெம்பிளேட் கமெண்டுகளை அதிகம் விரும்புகிறார்கள், இது என் அனுபவமும் கூட.

ஒரு சில பதிவர்கள் ஏனோ தானோ என்று, எது சரியோ பிழையோ என்று உய்தறிய முடியாதவர்களாய் டெம்பிளேட் பின்னூட்டம் கிடைப்பதால் தங்கள் பதிவுகள் மேன்மையடைவதாயும் நினைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

Vengatesh TR said...

.naanum thangal karuthai varaverkiraen, thozharae.....

.pathivai pathi, pesaamaal/vivathikaaamal, veru ethetheto ulari kondirkkirathu, inda tamil pathivulagam, pinnoothathil..(mannikavum, thavaru irupin)

Vengatesh TR said...

.athae pol, ivvaru comment direct ah, publish seiyaamal, "after approval" murai yai um, naan ethirkiraen... (ie, no filter should be done on comments)


.itharuku thangal karuthu ena, enpathai, ethirpakuraen..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதே குறைபாடுடன்தான் நானும் சங்கடத்தில் வாழ்கிறேன்...
பதிவுலக அரசியல் என்பது இதுதான் பதிவை எத்தனை பேர் படித்தார்கள் என்பதை விட எத்தனை பின்னுட்டங்க வந்துள்ளது.. எத்தனை ஓட்டுகள் வாங்கியுள்ளது என்பதே முன்னிருத்தப் படுகிறது...

சில பதிவர்கள் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 50 பதிகளுக்கு பின்னுட்டம் இடுகிறார்கள் கண்டிப்பாக பதிவை படித்தால் இது சாத்தியம் இல்லை...

பதிவை படிக்க நேர்ந்தால் குறைந்தது 10 15 பதிவுகளை மட்டுமே சந்திக்க நேரும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னுடைய கருத்து....

டெம்லெட் பின்னுட்டம் வாங்கி..மற்றும் ஓட்டு வாங்கி...

அந்த பதிவு பிரபலம் அடைய செய்து அதன்பிறகு உண்மையான வாசகர்கள் அதிகம்பேர் படிக்க வாய்ப்பு கிடைக்கும்...

அதனால்தான் இந்த டெம்லெட் சூழலில் நான் உள்பட பலபதிவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்...

அதற்காக பதிவை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.. விரிவான கருத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் போகிறது....

தங்களின் ஆதங்கத்திற்து நான் தலை வணங்குகிறேன்...

நிரூபன் said...

பதிவெழுதுவன் நோக்கம் என்ன? எங்கள் கருத்துக்கள் மற்றையவர்களைச் சென்று சேர வேண்டும் என்பது தானே. அப்படியாயின் இனிமேல் இந்த் டெம்பிளேட் பின்னூட்டங்களைத் தவிர்த்து, தமது பதிவோடு தொடர்புடைய கருத்துக்களை எல்லோரும் எதிர்பார்த்தால் பதிவுகளின் காத்திரத் தன்மை அதிகரித்து, நல்ல தரமான பதிவுகள் உருவாகும் என்பது என் கருத்து.

நிரூபன் said...

சகோ, இந்த டெம்பிளேட் பின்னூட்டங்கள் தொடர்பாக நான் எழுதிய ஒரு சில விடயங்களை உங்கள் பதிவிலும் பகிரலாம் என்று நினைக்கிறேன்.


*பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எத்தனை பேர்
ஓடோடி வந்து பதிவினைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டு, பதிவிற்கு வாக்கும் போட்டு விட்டுப் போகிறார்கள் எனும் எண்ணிக்கையின் அடிப்படையில் தானே பதிவுலகம் இருக்கிறது.

Unknown said...

இதை பற்றி நானும் ஒரு பதிவு இட்டேன்..
பதிவுலகில் மறுபடி மீள் பிரவேசம்...
தொடருமா..இல்லை இன்னுமொரு மீள் பிரவசத்துக்கு காத்திருக்க வேண்டுமா??

Mohamed Faaique said...

உங்களுக்கு இந்த பதிவு சரி தல.. எங்களுக்கு அப்பிடியாலும் 4 கொமண்ட்ஸ் கிடைக்கிறதே பெரிய மேட்டர்..

எப்பூடி.. said...

@ சிகப்பு மனிதன்

//.athae pol, ivvaru comment direct ah, publish seiyaamal, "after approval" murai yai um, naan ethirkiraen... (ie, no filter should be done on comments)//


எனக்கு நேரடியாக பின்னூட்டங்களை பிரசுரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை; ஆனால் சில சர்ச்சைக்குரிய பதிவுகளிற்கு வரும் சில பின்னூட்டல்கள் மூன்றாந்தரமானவையாக (பச்சை பச்சையாய்) இருப்பதால் வாசிக்கும் பலருக்கும் அது தர்ம சங்கடத்தை ஏற்ப்படுத்தும். ஆரம்பத்தில் நானும் பின்னூட்டல்களை நேரடியாகத்தான் பிரசுரித்தேன்; அதன் பின்னர் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்தான் இந்த கட்டுப்பாடு.


மோசமாக மூன்றாம்தர வார்த்தைகளை கொண்டு வரும் பின்னூட்டங்களை தவிர வேறெந்த பின்னூட்டங்களையும் நான் பிரசுரிக்க தவறியதில்லை. என்னை மிகவும் மோசமாக திட்டி வந்த எந்த பின்னூட்டங்களையும் நான் பிரசுரிக்க தவறியதில்லை என்பதை எனது முன்னைய பதிவுகளை பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

எப்பூடி.. said...

@ பாலா

//ஹா ஹா... உங்க பிரேடிக்சன் தப்பாயிடுச்சே... ஆஸ்திரேலியா காலிறுதியிலேயே வெளியேறிடுச்சே..//

அவுஸ்திரேலியா கிண்ணம் வெல்லும் என்று நான் கூறவில்லை, கிண்ணம் வெல்ல தகுதியான அணி என்றுதான் கூறியிருந்தேன், அத்துடன் 'நாக் அவுட்டில்' எதுவும் நடக்கலாம் என்பதை ஆணித்தரமாக முன்னரே கூறியிருந்தேன். பரவாயில்லை இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

..............................

@ மைந்தன் சிவா

//தொடருமா..இல்லை இன்னுமொரு மீள் பிரவசத்துக்கு காத்திருக்க வேண்டுமா??//

முன்னர்போல தொடர்ந்து பதிவிட முடியாவிட்டாலும் இனிவரும் காலங்களில் வாரம் இரண்டு or மூன்று பதிவிடலாமென நினைக்கின்றேன்.

Vengatesh TR said...

.hmm, i accept your words too..(about filterations)..


// அவுஸ்திரேலியா கிண்ணம் வெல்லும் என்று நான் கூறவில்லை, கிண்ணம் வெல்ல தகுதியான அணி என்றுதான் கூறியிருந்தேன், அத்துடன் 'நாக் அவுட்டில்' எதுவும் நடக்கலாம் என்பதை ஆணித்தரமாக முன்னரே கூறியிருந்தேன். -> by reading this your comment, in my mind, kamal's dialogue on Dasavatharam film, kicks out..

"கடவுள் இல்லைனு சொல்லல, இருந்தா நல்ல இருக்கும்னு தான், சொல்றேன் ..."


.now not had time to read all your posts, but sure, i will read and comment, on getting free time la..

Vengatesh TR said...

"நல்லதோ கெட்டதோ ஏதாச்சும் சொல்லுங்கப்பா :-)".sure, from now..

.i may be late to read, but wont miss your postings and comment on need..

டக்கால்டி said...

Philosophy sonnathai vazhimozhigiren

r.v.saravanan said...

வாருங்கள் ஜீவதர்ஷன் உங்களின் ஆதங்கம் சரியானது தான் பதிவுகளை தொடருங்கள்

haris sachin said...

gud

ம.தி.சுதா said...

நீங்கள் எழுத வந்ததே காணும் ஜீவ்... ரெண்டு பேரும் ஒரு சந்தோசத்தை பகிர முடியாமல் போய்விட்டதே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..

இராஜராஜேஸ்வரி said...

ஒரு பின்னூட்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
ஆரோக்கியமான கருத்துக்களை அருமையாக அளித்தமைக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

வாய்யா மாப்ள திரும்ப வந்தது மகிழ்ச்சி

DR said...

நாம எங்கயும் போயிட்டு வான்டட்-ஆ பின்னூட்டம் எல்லாம் போடுறது கெடையாது சாமி... வெறும் ஒட்டு மட்டும் தான் போடுவோம்... பதிவு ரொம்ப பிடிச்சிருந்தாலொழிய பின்னூட்டம் இடுவது இல்லை.

குணசேகரன்... said...

உங்கள் பதிவை படிச்சுட்டுத்தான் comments எழுதறேன்...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)