Tuesday, February 1, 2011

விஜயுடன் ஒரு கெமிஸ்ரி

இதை மீள் பதிவேன்றும் வைத்துக் கொள்ளலாம், இல்லை எனது சுய தம்பட்டம் என்றும் வைத்துக் கொள்ளலாம் :-) இதர்த்க்கு முன்னர் விஜய் படங்கள் வெளிவருவதற்கு முன்னர் நான் எழுதிய தீர்க்கதரிசன (நோ சீடியஸ்) பதிவுகள் அனைத்துமே அப்படியே நடந்துள்ளதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த சுயதம்பட்ட/மீள் பதிவு.......

12/10/2009 அன்று எழுதிய பதிவில் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவராததால் ஏற்ப்படும் விளைவுகளில்....

இரட்டை தீபாவளி

படம் ரிலீசான அடுத்தநாளே தியேட்டர் தியேட்டராக சென்று படத்தை மாபெரும் வெற்றியாக்கிய ரசிகளுக்கு நன்றி என விஜய் கூறும் பச்சை பொய்கள் மிஸ்ஸிங் மற்றும் பசுதானம், இரத்ததானம், ஓட்டோ அன்பளிப்பு என அனைத்து 'சுய' பொது நலன்களும் இரத்து

&

இப்படியாக பல இழப்புக்களை இந்தியாவும் தமிழகமும் சந்தித்தாலும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு கொடிய நரகாசூரனிடம் இருந்து தப்பித்ததால் இரட்டை தீபாவளி கொண்டாடுகிறார்களாம்.

*.................................................*


9/2/2009 எழுதிய பதிவில் 'சுறா' படப்பிடிப்பு ஆரம்பித்திருந்த நிலையில் காவலன் திரைப்படத்தை பற்றி எழுதும்போது சுறாவை குறிப்பிட்டு எழுதியது......

விஜயின் வெயிட்டும் ரைட்டும்.

"நாலு சண்டை, ஐந்து பாட்டு , மூன்று வில்லன் பார்சல்" என விஜய் ஓடர் குடுக்காதவரை இந்தப்படம் விஜயை பொறுத்தவரை வித்தியாசமான படமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. திரைக்கதை ஓட்டையாக இருந்தாலும் சித்திக் அதை காமடியால் அடித்துவிடுவார், இந்தப்படத்தில் விஜய் நடித்தால் ஒருவேளை அவர் தனது அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் ஒரு வெற்றியை பெறும் சந்தர்ப்பம் உள்ளது.

*.................................................*


27/10/2010 அன்று எழுதிய பதிவில் காவலன் பற்றி எழுதியது

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (27/10/10)

இப்போதெல்லாம் விஜயை வைத்து facebook, blog, sms போன்றவற்றில் காமடிபண்ணி பிழைப்பு நடத்துபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள் (நான் இதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு, காரணம்; அண்ணனை வைத்து காமடிபண்ணி எழுதி அலுத்துப்போச்சு :-) ) இதற்கு காரணம். விஜயோட அரசியல் பிரவேசம், டாக்டர் பட்டம், தொடர் தோல்விகள், விஜயைப்பற்றிய எஸ்.ஏ.சியின் தம்பட்டம், அந்த சைலன்ஸ்ஸ்..., லொயாலோ வாக்கெடுப்பு, நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார் அலப்பறை என பல விடயங்கள். ஒரு காலத்தில் விஜய்படங்களில் நடித்து தன்னை வெளிக்கொணர்ந்த சூரியா இன்று விஜயைவிட முன்னணியில் இருப்பது நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். 2007 தைமாதம் முதல் (போக்கிரி) 2010 டிசம்பர்வரை (காவலன் வெளியிட திட்டமிட்டிருக்கும் மாதம்) கிட்டத்தட்ட 4 வருடங்களில் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என நடித்த அனைத்துமே விஜயை ஏமாற்றிய நிலையில் காவலன் விஜய்க்கு கைகொடுக்குமா?

காவலனில் காமடி நிச்சயம் நன்றாக இருக்கும், சித்திக்கை இந்தவிடயத்தில் நம்பலாம். 'பிரெண்ட்ஸ்' மட்டுமல்ல 'எங்கள் அண்ணா', 'சாது மிரண்டால்' திரைப்படத்திலும் சித்திக் புகுந்து விளையாடியிருப்பார். ஆனால் படத்தில் விஜயின் வழமையான ஆக்ஷன், பஞ்சு டயலாக் போன்ற விஜய் ரசிகர்களை மட்டும் கவரக்கூடிய சமாச்சாரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் பொதுவான ரசிகர்கள் விஜயிடம் எதிர்பார்ப்பது இம்மாதிரியான படங்களைத்தான். அதுதவிர விஜயின் தொடர்தோல்விகளால் காவலன் மீதான எதிர்பார்ப்பு ஏனைய விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைவிட குறைவாக இருப்பது படத்திற்கு மேலும் பலம். ஏனெனில் படம் ஓரளவு நன்றாக வந்தாலே எல்லோரும் "இதைவிட எவளவோ பரவாயில்லை" என விஜயின் முன்னைய படங்களுடன் ஒப்பிட்டு word of mouth மூலம் படத்திற்கு மிகப்பெரும் பலம் சேர்ப்பார்கள். அதுதவிர எப்படியும் அசினுக்கெதிராக தமிழ் உணர்வாளர்கள் (ஹி ஹி) போராட்டம் செய்யத்தான் போகிறார்கள், இம்முறை அது படத்திற்கு பாதகமில்லாமல் சாதகமாக ஒருவித சாப்ட்கானரை நிச்சயம் உருவாக்கும், இதுகூட படத்திற்கு பக்கபலம்தான்.

ஆனால் விஜய் எப்பவாவது இருந்திட்டு வித்தியாசமா எல்லோரும் ரசிக்ககூடியமாதிரி படத்தில நடிச்சா அந்தப்படத்தை தோல்வியாக்கிறதில விஜய் ரசிகர்களை அடிச்சிக்கவே முடியாது. உதாரணமாக வசீகரா மற்றும் சச்சினை சொல்லலாம். இந்தத்தடவை காவலன் என்னைபொருத்தவரை வசீகரா சச்சினை போல விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு பிடிக்கும் படமாக அமையுமென்று நினைக்கிறேன். இந்ததடவை விஜய் ரசிகர்கள் சொதப்பாதவிடத்து விஜய்க்கு காவலன் நீண்ட நாட்களுக்குபின்னர் ஒரு வெற்றிப்படமாக அமையுமென்று நம்பலாம். அப்படி காவலன் வெற்றிபெற்றால் எஸ்.ஏ.சி பண்ணும் அலப்பறை அடுத்த விஜய்படத்துக்கு ஆப்பாக மட்டுமன்றி காமடி பிரியர்களுக்கு ஆட்டுக்கால் சூப்பாகவும் அமையும் என்பதுதான் உண்மை.

*.................................................*


எனக்கு விஜயை பிடிக்காதுதான், ஒத்துகிறன்; ஆனால் விஜயையும், அவர் தந்தையையும், அவர் திரைப்படங்களையும், அவர்தம் ரசிகர்களையும் ஓரளவாவது புரிந்து வைத்திருக்கிறேன் என்று நம்பலாமா? :-)) (நோ சீடியஸ்)

எப்பூடி....


தொடர்ந்து கிரிக்கட் பதிவென்பதால் காண்டாகிவர்களுக்காவே இந்த பதிவு(?), அடுத்த பதிவில் 'உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை' தொடரின் இறுதிப்பாகத்தை எழுதுகிறேன்.

17 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

உங்க கெமிஸ்ட்ரி நல்ல இருக்கு. சரி இது அந்த மாதிரி பதிவு? காமெடியா சீரியஸா?

Chitra said...

அடுத்த பதிவில் 'உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை' தொடரின் இறுதிப்பாகத்தை எழுதுகிறேன்......அதுவே நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு... விரைவில் எழுதுங்க...

Philosophy Prabhakaran said...

// காவலன் வெற்றிபெற்றால் எஸ்.ஏ.சி பண்ணும் அலப்பறை அடுத்த விஜய்படத்துக்கு ஆப்பாக மட்டுமன்றி காமடி பிரியர்களுக்கு ஆட்டுக்கால் சூப்பாகவும் அமையும் என்பதுதான் உண்மை //

இதை ஏற்கனவே உங்கள் பதிவில் படித்து ரசித்திருக்கிறேன்... மீண்டும் ரசிக்க வைத்தது...

Philosophy Prabhakaran said...

// அடுத்த பதிவில் 'உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை' தொடரின் இறுதிப்பாகத்தை எழுதுகிறேன். //

அதுக்கு தான் வெயிட்டிங்...

Speed Master said...

அருமை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்லாத்தான் யூகிச்சு எழுதி எழுதியிருக்கீங்க! இந்த பழைய பதிவுகள போட்டுட்டு, எங்களப் பாத்து ' எப்புடீ? " னு கேக்குற மாதிரி இருக்கு!

Madurai pandi said...

உங்களுக்கு ஜோசியம் நல்ல வரும் போல!! நீங்க ஒரு அதிசய பிறவி தெய்வமே!!! எப்பூடி !!!

எப்பூடி.. said...

SRI said


டேய் ***** உன் முஞ்சிய கண்ணாடில பாரு 4 நாள் சோறு இறங்காது நீயெல்லாம் பேச வந்துட்ட. இத எப்புடியும் PUBLISH பண்ண மாட்டன்னு தெரியும் பரவில்ல நீயாவது படி. வரட்டுமாடா வேலங்கா மூஞ்சிப் ****

Madurai pandi said...

//SRI said
***********
அண்ணே!! ஏன் இந்த மாதிரி கீழ்த்தரமான கமேன்ட்லாம் PUBLISH பண்றீங்க?

Madurai pandi said...

நான் comment க்கு subscribe பண்ணி இருந்தேன்..

Unknown said...

என்னப்பு இப்படி பின்றீங்களே...........என்னதான் சொல்லுங்க ஊரு உலகத்த தன் காமடி மூலம் வாழ வச்சுட்டு இருக்க இவரு மாதிரி யாராவது உண்டா! யாருப்பா அது குயந்த ஒன்னு கல்லு எடுக்குது!!!!

கார்த்தி said...

ஆனா எங்கடபயபுள்ளகள் காவலனை வைச்சும் காமடி பண்ணுறாங்களே!!

நிரூபன் said...

தங்களின் பதிவினைப் படித்தது முதல் சிரிப்பை அடக்க முடியவில்லை சகோதரா, விஜய் பாவம்.. இப்போ காமெடி கதாநாயகனாகி விட்டார்.

Unknown said...

வந்து கொஞ்சம் பாக்குறது நம்ம கடைய!! புது கைமா வந்து கீது!!

r.v.saravanan said...

அருமை jeevadharshan

r.v.saravanan said...

எனக்கு விஜயை பிடிக்காதுதான், ஒத்துகிறன்; ஆனால் விஜயையும், அவர் தந்தையையும், அவர் திரைப்படங்களையும், அவர்தம் ரசிகர்களையும் ஓரளவாவது புரிந்து வைத்திருக்கிறேன் என்று நம்பலாமா?

நம்பலாம்

எப்பூடி.. said...

@ பாலா

@ Chitra

@ Philosophy Prabhakaran

@ Speed Master

@ மாத்தி யோசி

@ Madurai pandi

@ SRI

@ விக்கி உலகம்

@ கார்த்தி

@ நிரூபன்

@ r.v.saravanan

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் மிக்க நன்றிகள்.

........................................................

@ பாலா

//உங்க கெமிஸ்ட்ரி நல்ல இருக்கு. சரி இது அந்த மாதிரி பதிவு? காமெடியா சீரியஸா?//

நோ சீடியஸ், பட் காமடியான்னு சொல்ல தெரியல, கமல் மாதிரி குழப்பிறனா? :-))

............................................................

@ SRI

//டேய் ***** உன் முஞ்சிய கண்ணாடில பாரு 4 நாள் சோறு இறங்காது நீயெல்லாம் பேச வந்துட்ட. இத எப்புடியும் PUBLISH பண்ண மாட்டன்னு தெரியும் பரவில்ல நீயாவது படி. வரட்டுமாடா வேலங்கா மூஞ்சிப் ****//

உங்க வார்த்தை பிரயோகம் அற்புதம், நீர் ஒரு தமிழ் பண்டிதர் ஐயா. அப்புறம் சொல்ல மறந்திட்டன்; உங்க ரெண்டாவது கமண்டு ஒற்றை சொல்லு அதிலும் 'மற்ற' சொல்லு என்கிறதால பிரசுரிக்கல.

...........................................................

Madurai pandi

//அண்ணே!! ஏன் இந்த மாதிரி கீழ்த்தரமான கமேன்ட்லாம் PUBLISH பண்றீங்க?//

விடுங்க பாஸ், இதால எனக்கு அந்த நஷ்டமும் இல்லை, அவருக்கு ஒரு அற்ப சந்தோசமாவது கிட்டட்டுமே :-))

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)